பார்வையில் முரடனாய்...

அன்பிலே காதலனாய்....

நித்தமும் இம்சிக்கிறேன்....

உன்னைக் கண்டு வியக்கிறேன்...

பெண்ணே என் கரம் பற்று எனது சகியாய்...

உன் தாயுனமானவன்...

விக்ரமின் செயலில் அவள் ஸ்தம்பித்துப் போனாள்... அடுத்து என்ன செய்வது என்பதை யோசிக்க கூட முடியாமல் ஆணி அடித்தார் போல் மகிழ மரத்தோடு ஒட்டி நின்றாள்...

விக்ரம் தன் பார்வையிலிருந்து மறையும் வரை அவன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தவளின் விழிகள் குளமாகியது...

பூமி யாருக்கும் நிற்காமல் சுழன்றுக் கொண்டிருக்க நாட்கள் அதன் போக்கில் கடந்து போனது...

மித்ராவின் நினைவில் விக்ரம் மட்டும் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டு அவளை இம்சித்தான்...

அவளைப் பெண்ணாய் உணர வைத்த முதல் ஆடவன்... வலுக்கட்டாயமாக அவன் நினைவுகளை அவளுக்குள் புகுத்தி சென்றவன்...

எங்கிருந்து வந்தான்...

எப்படி அவளுள் நுழைந்தான்... அதன்பின் விலகிச் சென்றான்...

மித்ரா குழம்பித் தவித்தாள்...

அவன் செயல்களை மீண்டும் மீண்டும் தன் மனக் கண்ணில் கொண்டு வந்து விக்ரமின் மீது அவளிக்கிருந்த வெறுப்பை??? வளர்த்துக் கொண்டாள்...

இனி அவனை எப்போதுமே சந்திக்க கூடாது என்ற உறுதியோடு தன் நாட்களைக் கடத்தினாள்...

விக்ரமிற்கு அவளோடு ஆடும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ரொம்ப பிடித்துப் போனது...

மித்ராவை நெருங்காமலே அவள் நினைவில் தன்னை பதித்து வைக்க வேண்டுமென்று வைராக்கியம் கொண்டவனாய் மித்ராவை நெருங்காமல் தள்ளி நின்று இரசித்தான்...

கண்ணில் படாதது கருத்தில் பதியாது எனும் இலக்கணம் மற்ற விஷயத்திற்கு பொருந்தினாலும் காதலுக்குப் பொருந்தாத போலும்...

விக்ரம் அவளை விட்டு விலக விலக தான் மித்ரா அவனை அதிகமாக நினைக்க தொடங்கினாள்...

அவனை ஏன் நான் நினைக்க வேண்டும்... அவனைத் தான் எனக்குப் பிடிக்காதே என்று தன்னைத் தானே கேட்டு நொந்தாள்...

இப்படியாக இரண்டாண்டு காலம் கடந்து மித்ரா மருத்துவ படிப்பை முடித்து தன் சொந்த ஊருக்கே சென்றாள்...

தன் கல்லூரி நினைவுகளோடு விக்ரமின் மீதுள்ள வெறுப்பையும் சுமந்து சென்றாள்...

மித்ரா தனக்கென ஒரு மருத்துவமனையும் அதனோடு அன்பு இல்லத்தையும் ஒன்றென தொடங்கி நடத்திக் கொண்டிருந்தாள்...

பிறருக்கு சேவை செய்வதிலே அவளது கவனம் அதிகமாய் இருந்தததால் தனக்கென ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று அவளுக்குத் தோன்றாமல் போனது...

எல்லாமிருந்தும் ஏதோ இல்லாதது போலொரு வெறுமை அவளைத் தாக்கும் சமயங்களில் தனிமையை விரும்பத் தொடங்கினாள்...

ஆகாஷிற்கு அவளது மாற்றம் பெரிதாய் தெரியவில்லை...

தாய் தந்தை இல்லையென்றானதும் தனக்கென வாழ தொடங்கியவள் பொறுப்பான அக்காவாய் விளங்கியதாலோ என்னமோ மித்ரா செய்வதனைத்தும் ஆகாஷிற்கு சரியாகவே தோன்றும்...

மித்ராவின் பயணம் இப்படியிருக்க விக்ரமின் வாழ்வில் அவனே எதிர்பாரா பல திருப்பங்கள் நடந்தேறியது...

தெரிந்தோ தெரியாமலோ விக்ரம் ஒரு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்குண்டான்...

அந்த சம்பவம் அவனது வாழ்க்கையையே புரட்டி போட்டதோடு நில்லாமல் அவனை அவனது குடும்பத்தைவிட்டு பிரித்தது...

கல்லூரியில் பயிலும் ஏழை மாணவர்களை ஒன்று திரட்டி அவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களைப் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்குவதோடு வெளிநாட்டுக்கு அவர்கள் மூலமாகவே போதைப் பொருளை கடத்தவும் செய்தது ஒரு கும்பல்...

பணபலம் அரசியல் பலமென சிம்மசொப்பனமாய் விளங்கிய அவர்களை நெருங்கவே முடியாமல் தடுமாறினர் காவல் துறை அதிகாரிகள்...

அந்த கும்பலால் விக்ரமின் நெருங்கிய நண்பன் சேகரும் பாதிக்கப்பட்டான்...

அவனது மாற்றம் விக்ரமிற்கு சந்தேகத்தை விழைவிக்க அவனையே பின்தொடர ஆரம்பித்தான்...

சிறு வயது முதலே விக்ரமிற்கு இருந்த துப்பறியும் குணம் அவனை மரணத்தின் விளிம்பின் வரை நடத்திச் சென்றது....

சேகர் அந்த போதைப் பொருள் கடத்தல் கும்பலோடு போதைப் பொருளைக் கைமாற்றும் பொழுது விக்ரம் அந்த நிகழ்ச்சியை தன் கேமராவில் பதிவு செய்தான்...

அந்த தருணம் முதல் விக்ரம் கத்தியின் மேல் நடக்க தொடங்கினான்... கொஞ்சம் கவனம் தப்பினாலும் மரணம் எனும் சூழல் உருவாக இதை எப்படி களைவது என சிந்திக்க தொடங்கினான்...

அப்பாவை மட்டுமில்லாமல் அவனுக்குத் தோழனாகவும் விளங்கிய ருத்ரனிடம் ஆலோசனைக் கேட்க...

"அப்பா என்ன பண்றதுனே தெரிலப்பா... ஒரே குழப்பமா இருக்கு... சுத்தி நடக்குறது எல்லாம் தப்புனு தெரியுது பட் எப்படி அத தடுக்கறதுனு தெரியல... அடுத்து நான் என்னபா பண்றது...", அதரவற்ற சிறுவனாய் தன் மடியில் தலைச் சாய்த்திருந்தவனைக் கண்ட ருத்ரனின் முகத்தில் சிறு புன்னகை கீற்று உதயமானது...

தன் வளர்ப்பு என்றுமே பொய்த்து போகாது என்ற அசைக்க முடியா நம்பிக்கை அவருக்கு இருந்தது...

அதை மெய்பிப்பதைப் போலவே விக்ரமும் பிரச்சனை என்று வந்தவுடன் தனக்கென்னவென்று ஒதுங்கி போகாமல் அதற்கு தீர்வு காண முயல்வது அவனது ஆண்மையையும் வீரத்தையும் பறைசாற்றியது...

தனது மறுப்பதிப்பாய் இருக்கும் விக்ரமின் வீரம் அவனோடே தேங்கி விடக் கூடாது என்ற தோன்றவே தன் உயிர்த் தோழனைத் தொடர்பு கொண்டார்...

விஷ்வநாதன்...

காவல்துறையில் உயர்பதவியிலிருந்தவர்...

தன் கடமையை சரிவர செய்து பணி ஓய்வு பெற்றவர்...

இன்று...

அன்டி கிரைம் அசோசியேஷன் என்ற இரகசிய துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர்...

அந்த நிறுவனத்தின் செயல்பாட்டை அறிந்தவர் மிக சிலரே...

இவர்களின் பங்களிப்பால் பல கடத்தல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது...

அந்த துப்பறியும் குடும்பத்தில் விக்ரம் தன்னையும் இணைத்துக் கொண்டான்...

ஆறு மாதக் கடும் பயிற்சியில் விக்ரமின் வீரமும் விவேகமும் இன்னும் மெருகேற்றப்பட்டது...

அவனின் இந்த முடிவு தன் தாய் தங்கையிடமிருந்து கூட மறைக்கப்பட்டது...

தன் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்காகவும், அவன் பங்கெடுக்கப்போகும் முதல் பணி இளைய தலைமுறையினரை உட்படுத்தியதாலும் இதன் மூலம் நம் சமுதாயமே பல பிரச்சனைகளை எதிர்நோக்க கூடும் என்ற காரணத்தாலும் எல்லா தகவலும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது...

விக்ரம் தனக்களிக்கப்பட்ட பணியைத் தொடங்கும் காலமும் கணிந்தது...

தன் விசாரணையை ஆஸ்திரேலியாவில் தொடங்க அவன் திட்டமிட்டிருந்தான்...

விஷ்வநாதனும் அவனுக்குத் துணை நின்றார்... ஐந்து பேரை உள்ளடக்கிய குழு போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராய் செயல்பட ஆயத்தமாகியது...

விக்ரமிற்கு மித்ராவை பார்க்க வேண்டுமென்று தோன்றியது...

அவளைத் தனியே விட்டுச் செல்ல வேண்டுமென்ற எண்ணம் அவனை வாட்டி வதைத்தாலும் கடமைக்கு முன் காதல் பின்னுக்குத் தள்ளப்பட்டது...

மித்ரா இவனில்லாமல் இருந்தாளும் பத்திரமாய்தான் இருப்பாளென அவன் அறிந்திருந்தான்...

மித்ரா சம்மதமான அனைத்து தகவலையும் விரல் நுனியில் வைத்திருந்தவன் அன்று அவளைக் காண சென்றான்...

பிப்ரவரி 14....

உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து காதலர் தினத்தை கொண்டாடும் நாள்...

விக்ரம் மித்ராவைக் காண சென்றான்.

இந்த சந்திப்பு அவர்களது இறுதி சந்திப்பாய் கூட அமையலாம்...

ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும் வேங்கை அவனது வாழ்வும் சாவும் நிலையில்லாத ஒன்றாய் கூட அமையலாம்...

பல குழப்பங்களோடு மித்ராவின் கிராமத்திற்கு சென்றவனை அங்குள்ள இயற்கை அழகு வரவேற்றது...

கண்களைப் பறிக்கும் அழகில் ஒன்றி இருப்பதால்தான் என்னவளும் மலர் சோலையாய் காணப்படுகிறாளோ... என்றென்னியவன் மித்ராவின் அன்பு இல்லத்திற்குச் சென்றான்...

அங்குள்ள சூழல் அந்த முதியவர்களை மித்ரா கவனித்துக் கொள்ளும் விதம் அனைத்தும் விக்ரமிற்கு அவளின் மீது தனி மதிப்பை வழங்கியது...

தன் மனம் தவறான ஒருவளின் பின் போகவில்லை என்று ஆனந்த கூத்தாடியது அவனின் மனம்...

(எப்டி ஜீ காதலிய பார்த்தோன கவித அருவியா கொட்டுது இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கிருக்கே ஒரு ஷாக்கு)

அந்த இல்லத்தை நெருங்காமல் எட்டி நின்று மித்ராவின் வருகைக்காக காத்திருந்தான் அந்த காதலன்...

பல மாதங்கள் கழித்து அவளைக் காணப் போகும் ஆர்வம் அவனுக்கு நொடிக்கு நொடி அதிகரித்தது...

தன் கனவில் மூழ்கியிருந்தவனை தட்டி எழுப்பியது மித்ராவினுடைய குரலும் அவளது முத்துச் சிரிப்பும்...

மித்ராவைக் காதலாய் நோக்கியவனின் கண் இப்பொழுது பொறாமைத் தீயில் சூழ்ந்தது...

மித்ரா யாரோ ஒரு ஆடவனிடம் சிரித்துப் பேசி கொண்டிருந்த காட்சி விக்ரமின் மனதை கொதிக்க வைத்தது...

அவன் மற்ற அனைத்து விஷயங்களிலும் நிறுத்தி நிதானித்துச் செயல்பட்டாலும் மித்ரா என்று வரும் பொழுது அவனது பொறுமை காணாமல் போய்விடுகிறது...

(ரொம்ப நல்லவன்டா நீ எரும மாடு மாதிரி வளர்ந்துருக்கியே கொஞ்சமாவது மூள வேணாம் அவ யாருக்கிட்ட பேசிட்டு இருக்கானு முன்னாடி போய் பாருடா சங்கி மங்கி)

ஆகாஷை வழியனுப்பி விட்டு திரும்பியவளின் பார்வை வட்டத்தில் விக்ரம் விழுந்தான்...

இருவரின் பார்வையும் ஒன்றுக்கொன்று கவ்விக் கொள்ள சத்தமின்றி பல யுத்தம் நடந்து முடிந்தது அந்த நொடி...

விக்ரமை மித்ரா அந்த நிகழ்ச்சிக்குப் பின் இன்றுதான் மீண்டும் காண்கிறாள்...

இரண்டு வருட காலம் அவனை வெகுவாக மாற்றியிருந்தது...

இமைக்காது அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை விக்ரம் நிதான நடையில் நெருங்கினான்...

மித்ராவின் புலங்கள் யாவும் செயலிழந்து போக கண்கள் குளமானது...

ஏன் அழுகிறோம்...

எதற்காக அழுகிறோம் என்பதே தெரியாமல் அதை தெரிந்து கொள்ளவும் முயலாம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்...

எங்கே கண்ணிமைத்தாள் அவன் மறைந்து விடுவானோ என்ற பயம் வேறு அவளை ஆட்கொள்ள மித்ராவின் மொத்த சக்தியும் வடிந்து மண்ணில் சரிந்தாள்...

"ஏய்...", என்ற கூவலோடு அவளை நெருங்கியவன் மித்ராவைத் தன் மீது சாய்த்துக் கொண்டான்...

இருவரையும் மௌனம் ஆட்சி செய்ய அங்கு மித்ராவின் விசும்பல் மட்டுமே கேட்டது...

"ஏய் எதுக்கு அழற... சொல்லிட்டு அழுடி... உன்ன நான் தான் எதுவோ செஞ்சிட்டன்னு பார்க்குறவங்க நினைக்க போறாங்க...", என்றான் கிண்டலாக...

மித்ராவிடம் வார்த்தையின்றி மௌனமே மட்டுமே பதிலாக...

"சரி வா போலாம்...", என்றவன் மித்ராவிற்கு யோசிக்க அவகாசம் கொடுக்காமல் அவளை இழுத்துக் கொண்டு சென்றான்...

அவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் இசைந்து கொடுத்தவள் சுயநினைவை அடைந்த பொழுது இருவரும் அந்த ஊர் மலைக் கோவிலில் இருந்தனர்...

மித்ரா அவனை பார்த்து மலங்க மலங்க விழிக்க...

"என்ன லுக்கு... கூகிள் கடவுள் எதுக்கு இருக்காருனு நினைச்ச...", என்று கண்சிமிட்டியவன்

"சரி எதுக்கு என்னைப் பார்த்தோன அழுதன்னு சொல்லு...", என்றான் அழுத்தமாக...

"எனக்குத் தெரியாது.. ", என்றவளின் கண்கள் மீண்டும் பனித்தது...

"ஏய் லூசு ஏன் திரும்பவும் வாட்டர் டேங்க ஓபன் பன்ற... ", என்றவாறே அவள் கண்ணீரைத் துடைக்க நெருங்கினான்...

தாய்மை மிளிரும்...

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 21
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.