தாயுமானவன் 22

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பெண்ணே...
உன் சிரிப்பினை நீ என் மனதில் விதைத்தாயடி...
உன்னை கண்ட நொடி நான் மீண்டும் பூமியில் பிறந்தேனடி...
கோபத்தை,வெறுமையை, அலட்சியத்தை மட்டுமே பிரதிபலித்த
என் விழிகள் இரண்டும் இன்று உன்னிடம் காதலை யாசிக்கிறது...
நீயே என் உயிராய் மாறியதால்...
உன் தாயுமானவன்
...💞💞


"விக்கி கிட்ட வராத... எனக்கு உன்னைப் பிடிக்கல... ப்லீஸ் என்ன விட்று...",என்றாள் கரகரத்த குரலில்...

(ஹேய் மித்து சுத்த லூசு கத்திரிக்காவா இருக்க😂😂😂 புடிக்காதவ தான் அவனுக்கு செல்லப் பேர் வெச்சி கூப்புடுவாளா😉😉😉)

சற்று நேரம் அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன்...

"சரி விட்டுறன்... பட் அதுக்கு முன்னாடி நீ என்ன லவ் பண்ணல... உன் மனசுல நான் இல்லனு என் மேல சத்தியம் பண்ணு... நீதான் உண்மைய தவிர வேற எதையும் பேசாதவளாச்சே... இப்போ என் முகத்துக்கு நேரா இதை சொல்லிரு நான் உன்னை விட்டுத் தூரமா போயிடுறன்... நீயே கூப்டாலூம் திரும்பி வர மாட்டன்...", என்றான் நேரன பார்வையுடன்...

மித்ராவின் இதயத்துடிப்பு தாருமாறாய் எகுற விக்ரமையே திக்பிரம்மைப் பிடித்தது போல பார்த்தாள்...

'ஏன்டா என்னைக் கொல்லாம கொல்ற...' என்று அவளின் பார்வை அவனிடம் இறைஞ்சுவது போல் தோன்றியது அவனுக்கு...

"சீக்கிரம் சொல்லு... நான் போயிடுறன்...", என்றான் விடாக்கண்டனாய்...

"நான் எதுக்கு உன் கிட்ட சொல்லனும்... சொல்ல முடியாது போ...", என்றாள் கோபமாக...

"அப்போ உன்னால சொல்ல முடியாது அப்டிதான... ஸோ நீயும் என்ன லவ் பண்ற...", விக்ரமின் குரல் மித்ராவின் கோபத்தைத் தூண்டியது...

"இல்லை நான் உன்ன லவ்
பண்ணல... "
மித்ரா கோபமாக பதிலளித்தாள்...

"நீ லவ் பண்ற..." என்றான் விக்ரம் திமிராக...

"இல்லை... இல்லை... இல்லை.. நான் உன்ன லவ் பண்ணல... லவ் பண்ணவும் மாட்டன்..." மித்ராவின் குரல் நடுங்கியது...

"சரி லவ் பண்ண வேணாம்... பட் என்னை கல்யாணம் பண்ணிக்கோ... அப்புறமா லவ் தன்னால வந்துடும்...", என்றவன் மித்ரா சுதாரிக்கும் முன்னே அம்மன் கழுத்திலிருந்த திருமாங்கல்யத்தை எடுத்து மித்ராவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்...

மித்ராவின் உலகமே ஒரு நிமிடம் நின்றுவிட... கழுத்தில் தொங்கிய திருமாங்கல்யத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்...

இன்றும் அதே மலைக் கோவில்...

அதே சூழ்நிலை...

அதே விக்ரம்...

"என்ன முழிச்சி முழிச்சி பார்க்குற... உனக்கு பிடிக்காத கல்யாணம்... நீ வெறுக்குற நான்... கழுத்துல பாரமா அந்த தாலி... அத யான் இன்னும் சுமந்துட்டு இருக்க... வேணாம்னு முடிவு பண்ணிட்டல... அப்புறம் ஏன் வெய்ட் பண்ற... அது நான் கட்டுன எனக்குச் சொந்தமான தாலி... கலட்டி கொடுத்துட்டுப் போய்கிட்டே இரு...", விக்ரம் பேசி முடிப்பதற்கும் மித்ரா அவனை அறைவதற்கும் நேரம் சரியாய் இருந்தது...

மித்ரா கோபத்தின் உச்சியிலிருந்தால்...

'அவன் பாட்டுக்கு வருவான்... லவ் பண்றன்னு சொல்லுவான்... திருட்டு தனமா தாலியும் கட்டுவான்... இப்ப என்னனா ரொம்ப உத்தமன் மாதிரி தாலிய கலட்டி குடுக்க சொல்றான்...' மித்ராவின் மனம் அனலாய் கொதிக்க தொடங்கியது...

(விக்ரம் ஜீ😎😎😎 முடிஞ்சா எஸ் ஆயிடு😂😂😂 மித்து அங்கிரி பெர்ட்டா மாறிட்டா😌😌😌 சேதாரம் ரொம்பவே பயங்கறமா இருக்கும் சொல்லிட்டன் 😜😜😜)

தன் கன்னத்தைப் ஒற்றைக் கையில் பிடித்துக் கொண்டவன் மற்றொரு கையால் மித்ராவின் இடையை வளைத்தான்...

"இதை தான் எதிர் பார்த்தேன்... தாலிய கலட்ட சொன்னோன கோவம் வருதுல... இப்போதாவது ஒத்துக்கோ... நீயும் என்னை லவ் பண்ற... பேசாம இருந்தே கொஞ்சம் கொஞ்சமா சாவடிக்குறடி... நான் அப்டி என்ன தப்பு பண்ணிட்டன் சொல்லு... உன்னை லவ் பண்ணன் அதுதான் தப்பா... சொல்லுடி சொல்லு... உன்னை லவ்
பண்ணதுதான் தப்பா..."
மித்ரா காதலைச் சொல்லாமல் மறைப்பது விக்ரமின் மனதைக் கொன்றது...

"எனக்குத் தெரியாது... என்னை விடு...", அவனைத் தன்னிடமிருந்து உதறித்த தள்ளினாள்...

"தெரியாது... தெரியாது... தெரியாது... இப்போ தெரியாம வேற எப்போ தெரியும்... ஒரு நாள் நானே இல்லாம போயிடுவன் அப்ப தெரியுமா????

இனி நீயா என்கிட்ட உன்னோட காதல வெளிபடுத்தாம நான் உன் கிட்ட நெருங்க மாட்டன்... இது என்னோட காதல் மேல சத்தியம்டி....",
புயலென மொழிந்தவன் அவளை அங்கேயே விட்டுச் சென்றான்...

மித்ரா அந்த அம்மன் சந்நிதானத்திலையே அழுது கறைந்தாள்..

யார் மீது குற்றமென்று உன்னையே நீ காயப்படுத்திக் கொள்கிறாய் மித்ரா...
தன்னைத் தானே கேட்டுக் கொண்டாலும் பதில் தானில்லை...

விக்ரமின் மனது மித்ராவினால் மிகவும் காயப்பட்டுப் போனது...

அவளின் சம்மதமின்றி அவளை நான் எனது மனைவியாய் மாற்றியது தவறுதான்...

ஆனால் நான் அவள் மீது கொண்ட காதல் நிஜமல்லவா...

இரகசியமாய் தொடங்கப்பட்ட தன் பணியில் வந்த அனைத்து இன்னலையும் தாண்டி வெற்றி பெற்றது இவளுக்காக தானே...

எப்பொழுதுதான் என் மனதைப் புரிந்துக் கொள்வாள்...

காதல் செய்வது சுகமான சுமையென்றல்லவா நினைத்தேன்...

நித்தமும் என் விழிகளில் விழுந்து என் மனதை கொல்கிறாளே இராட்சசி...

விக்ரமின் மனம் தன் பாட்டிற்கு புலம்பிக் கொண்டிருக்க அவனின் வாகனமோ சீறிப்பாய்ந்தது...

வேங்கையாய் சதீஸின் கோட்டையை நோக்கி சென்றது...

தன் பெற்றோரின் மரணத்தைப் பற்றி அவன் அறிந்தே இருந்தான்...

குணசீலனைக் கொல்ல வேண்டுமென்ற வெறியில் தான் அவனது முதல் பணியை எந்தவித தடங்கலுமின்றி முடித்துக் கொடுத்தான்...

விக்ரம் மற்றும் அவனது குழுவினரினரின் உதவியால் அந்த கடத்தல் கும்பல் சுற்றி வளைக்கப்பட்டனர்...

பெற்றோரின் இழப்பு...

தங்கை எங்கிருக்கிறாள் என்று தெரியாத நிலை...

தனக்கு ஆதரவாய் இருப்பாளென நினைத்தவளின் நிராகரிப்பு...

விக்ரம் மொத்தமாய் உருகுழைந்து போனான்...

விக்ரம் சதீஸின் இல்லத்தை அடைந்ததும் அவன் பார்வையில் முதலில் விழுந்தது நிம்மி தான்...

மயூவைப் போலவே இவளும் எனக்கொரு தங்கைதானே...

குடும்ப பகை...

சகோதர வேற்றுமையென பெரியவர்களின் கருத்து வேறுப்பாட்டால் இளைய சன்னதியினரான நாம் பிரிந்து வெவ்வேரு துருவங்களாய் வாழ்ந்திருக்கிறோம்...

விக்ரமின் மனம் மௌனமாய் அழுதது...

பிறந்தது முதலே சொந்தங்களுக்காக ஏங்கினர் விக்ரமும் மயூவும்...

அன்பை வாரி வழங்கும் தாய் தந்தை உடனிருந்தாலும் பாட்டி... தாத்தா... அத்தை... மாமா... பெரியப்பா... சித்தப்பா... என பல சொந்தங்களுக்கு மத்தியில் வாழ வேண்டுமென்று அவன் பல நாள் கனவு கண்டதுண்டு...

மதிப்பிற்குரிய ஜமீன் பாரம்பரியம்... அந்த குடும்பத்திற்கே சொந்தமான ரிஷிபுறம் என அனைத்தும் உடனிருந்தும்... இல்லாமல் மாறியதுதன் விந்தையோ என்னவோ...

இருளில் நின்றுக் கொண்டு நிழலைத் தேடுவதைப் போலல்லவா வாழ்ந்துள்ளோம்...

"ஹலோ மிஸ்டர்... நான் கேட்டுடே இருக்கன்... நீங்க என்னனா என் மூஞ்சிய பார்த்து கனவு கண்டுடு இருக்கிங்க... யாரு நீங்க... எதுக்கு வந்துருக்கிங்க...", நிம்மி விக்ரமிடம் தன் விசாரணையைத் தொடங்க

கையை ஆட்டி ஆட்டி பாவணையாய் அவள் பேசிய விதம் விக்ரமைக் கவர்ந்து அவன் இதழில் சிறு புன்னகையைத் தோற்றுவித்தது...

சற்றே பூசினார் போலிருந்தவளின் கொழு கொழு கன்னத்தைக் கிள்ளி வைத்தவன் அவளுக்கு ஒரு கொட்டையும் பரிசாக கொடுத்தான் ....

(ஹீ😂 ஹீ😂 ஹீ😂 நானே அவளுக்கு ரெண்டு கொடுக்கனும்னு நினைச்சன் மச்சி😆😆😆 என்னோட குட்டி ஆசையை நிறைவேற்றிய விக்ரமே நீ வாழ்க😘😘😘 உந்தன் குலம் வாழ்க😘😘😘😘 நிம்மி செல்லம்😈😈😈அவிச்ச தக்காளி எப்படி இருக்க செல்லம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சி☺️☺️☺️)

"ஏய்... ஏய்... மிஸ்டர் என்ன நீ அடிக்குற... நான் சின்ன பிள்ளைத் தெரியுமா... நில்லு என் அண்ணன்கிட்ட போட்டுக் கொடுக்குறன்...",
நிம்மி அவனின் செயலில் பயந்தவளாய் ஏதேதோ உளற விக்ரம் சத்தமாய் சிரிக்க தொடங்கினான்...

ஆகாஷுடனான சந்திப்பிற்குப் பின் வீடு திரும்பிய சதீஸ்க்கு தலை தெறித்துவிடும் போல் வலித்தது...

ஒன்றன் பின் ஒன்றாக சந்திக்கும் பிரச்சனைகள் அவனை மிகவும் கலவரப்படுத்தியது...

நிம்மி வேறு அவனைப் படுத்தி எடுத்தாள்...

"அண்ணா... எனக்கு நீ என்ன பண்ணுவன்னு தெரியாது... ஆகாஷ் எனக்கு வேணும்... நான் அவன லவ் பண்றன்... வேற யாருக்கும் அவன விட்டுக் கொடுக்க மாட்டன்... அவன் இல்லனா என்னை நீ உயிரோடவே பார்க்க முடியாது...",

(அதானே பார்த்தன்🙄🙄🙄 என்னடா இந்த கொசு கம்முனு இருக்குனு😏😏😏 உனக்கு ஆகாஷ் வேணுமா பக்கி🤔🤔🤔 சட்னில பூச்சி மருந்து வெச்சி கொடுக்குறன் இரு😋😋😋)


நிம்மி இரண்டு நாட்களுக்கு முன் அவனிடம் கூறியதை அசைப்போட்டுக் கொண்டிருந்தவனின் கவனத்தை ஈர்த்தது அந்த சிரிப்பொலி...

பல நாளை அவன் கேட்க ஏங்கிய கம்பீர குரல்... சலங்கை ஒலியாய் பிறரை ஈர்க்கும் குழந்தை சிரிப்பு...

'இது அவன்தானா...
அவன் திரும்பி வந்துட்டானா...
நான் அவன திரும்பி பார்க்க போறனா???',
பல கேள்விகள் ஒரே நேரத்தில் சதீஸைத் தீண்டிச் செல்ல... அவன் மெய்சிலிர்த்துப் போனான்...

நட்பும் ஒரு வகை காதல் தான் போலும்...

பல நாள் காணாத நண்பனை மீண்டும் காணும்போது உள்ளுக்குள் ஏற்படும் பரவசம் எந்த காதலிலும் கிடைக்காது என இறுமாந்தவன்...

தடதடவென மடிப்படியில் இறங்கி வர..
நிம்மியை வம்பிழுத்துக் கொண்டிருந்த அந்த உருவத்தைப் பார்த்ததும் அவனின் நடை தடைப்பட்டது...

விக்ரம்...

அவனது தமையன்...

உற்ற தோழன்...

சட்டென்று மாயமாய் மறைந்தவன் இன்று மீண்டும் தன் முன்னே...

சதீஸிற்கு மகிழ்ச்சியில் பேச நா எழவில்லை...

மௌனமாய் அவர்களை நெருங்கியவன் விக்ரமை இறுக அணைத்துக் கொண்டான்...

விக்ரமையும் சதீஸையும் மாறி மாறி பார்த்தவள்...

"டேய் அண்ணா அவனா நீ...", என்றாள் கலவரக்குரலில்...

(ஆமா🙄 ஆமா🙄 சதீஸ் அவனா நீ😑😑😑 வெள்ளை குரங்கு நீ அவளா நீ🤣🤣🤣)

"அடிங்க... அப்படியே ரெண்டு வெச்சனா தெரிய போது உனக்கு... பெரியவங்க கிட்ட இப்டிதான் பேசுவியா நீ...",
என்று நிம்மி எச்சரித்தவன் விக்ரமை பார்த்து இளித்து வைக்க...

அவர்களுக்கு நடுவே மாட்டிக் கொண்ட விக்ரம் கொலை வெறியாகி போனான்...

சதீஸைத் தன்னிடமிருந்து பிரித்தெடுத்தவனின் கை எதிரே இருந்தவனின் கன்னத்தைப் பதம் பார்த்தது...

நிம்மி "டேய் எரும என் அண்ணன யான்டா அடிக்குற...", என்று கத்தி கூச்சலிட...

சதீஸ் முதலில் மலங்க மலங்க விழித்தவன் "டேய் நான் உன்னோட அண்ணன்டா...", என்றான் பாவமாக...

"டேய் வளந்து கெட்டவனா வாய்ல நல்லா வந்துர போது... அண்ணன் வெண்ணனு இப்பதான் தெரியுதா...
நம்ம குடும்பத்துல ஒருத்தனா வந்தப்ப கூட உண்மைய சொல்லனும்னு தோனலல உனக்கு... பேசாதடா...",
என்றான் கடுப்பாக...

"சாரிடா... எங்க உண்மைய சொன்னா இருக்குற சந்தோஷமும் இல்லாம போயிடும்னுதான் உண்மைய சொல்லல... ப்லீஸ்டா... ஐம் ரியலி சாரி...", என்று வருத்தமான குரலில் கூறியவனைக் கண்டும் விக்ரமின் கோபம் மட்டுபடாமல் போக... சதீஸை கீழே தள்ளினான்..

இருவரும் உருண்டு புரண்டு சண்டையிட்டுக் கொள்ள நிம்மி செய்வதறியாது நின்றாள்...தாய்மை மிளிரும்...💜💚💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 22
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN