தாயுமானவன் 23

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யாரென்று தெரியாமல் எவரென்று புரியாமல் உன் மீது காதல் கொண்டேன்....
உன்னோட வாழ நித்தமும் சின்ன சின்ன கனவுகளைக் கண்டேன்...
இருந்தாலும் நீ என்னைவிட்டு விலகிச் செல்கிறாய் பெண்ணே..
உன் பின்னே என்னை அலைய விட்டு என் மனதைக் கொய்கிறாய் கண்ணே...

உன் தாயுமானவன்...💞💞


விக்ரம் அவளைத் தனியே விட்டுச் சென்றதும் மித்ரா கண்ணீரில் கறைந்தாள்.. .

'நீ ஏன் என் வாழ்வில் நுழைந்தாய் விக்ரம்... எதற்கு என் உள்ளத்தைக் கொய்து சென்றாய்... தினம் தினம் உன் நினைவினால் என்னைக் கொன்றாய்... இந்த நான்காண்டுகளில் உன்னைச் சந்திக்காமல் அமைதியாய் (வெறுமையாய்) கழிந்த என் வாழ்வை மீண்டும் ஏன் குழப்பிச் சென்றாய்... இன்று மீண்டும் தனியே விட்டுச் சென்றுவிட்டாய்...', மித்ராவின் மனம் கேள்வியும் நானே பதிலும் நானே என்ற தோரணையில் மாறி மாறி அவளைக் குழப்பிக் கொண்டிருந்தது...

'எனக்கு அவன் வேணா... நான் அவன மறக்கனும்...' அவள் மிகச் சரியாக தவறான முடிவென்றை எடுத்தாள்...

(மித்து அக்கா சுத்த போண்டா வடையா இருக்கியே நீ🙄🙄🙄 இத்தன வருஷம் மறக்காம இருந்தவன இதுக்கு மேலதான் மறக்க போறிய😏😏😏 ஆயா வட சுட்டுச்சாம் 🍩🍩🍩 காக்கா அத திருட்டிட்டு போச்சாம்🕊️🕊️🕊️ அப்டிங்குற மாதிரி சின்ன புள்ள தனமால இருக்கு நீ யோசிக்குறது அச்சோ😝😝😝 அச்சோ😝😝😝)

மித்ரா தன் மனதை நன்றாக ஆராய்ந்திருந்தால் அவளை கொள்ளைக் கொண்ட கள்வனவனை அறிந்திருப்பாள்...

எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் இன்னல்களும் இல்லாமல் போயிருக்கும்...

நாளை நடப்பதை இன்றே தெரிந்துக் கொள்ள முடியுமானால் நன்றாகதான் இருக்கும் போலும்...

விதியை அறிந்தவன் நம்மிலில்லையே...

(இவங்களாம் ரொம்ப சோக கீதம் வாசிக்குறாங்க😢😢😢 யாருலாம் என்கூட வரிங்க நான் அமுல் பேபிய பார்க்க போறன்😊😊😊)

மயூவை இழுத்தணைத்தவன்
அவளுக்கு தன் அணைப்பிலிருந்து விடுதலைக் கொடுக்க விருப்பமில்லை என்பதுபோல் அவளை அணைத்துக் கொண்டே நின்றிருந்தான்...

மயூவும் அவன் அணைப்பிலிருந்து விலக விரும்பமில்லாதவள் போல் அவன் நெஞ்சில் முகம் புதைத்திருந்தாள்...

ஆகாஷ் தன் அருகிலிருக்கும் சமயம் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தாள் மயூ...

அவன் அணைப்பிலோ தாயின் கருவறை சுகத்தைக் கண்டாள்...

காமமில்லாத காதல் என்று கூட அவனது அணைப்பை வகைப் பிரிக்க முடியவில்லை...

அதையும் தாண்டி...

அவன் அன்பில் தாய்மை வெளிப்பட்டது...

ஒரு தாய் தன் குழந்தையை எப்படி பார்த்துக் கொள்வாளோ அதேப் போல் அல்லவா உள்ளது இவனது பாசம் என்று மயூ பலமுறை குழம்பியது உண்டு...

இவன் மீது நான் கொண்டுள்ளது ஒரு காதலி காதலனிடம் கொண்டுள்ள உணர்வா???

ஒரு குழந்தை தாயிடம் கொண்டுள்ள உரிமையா???

ஒரு தோழி தோழனிடம் கொண்டுள்ள தோழமையா???

அது எதுவாயினும் இந்த ஜென்மத்திற்கு இதுவே போதும் என்றிருந்தது மயூவிற்கு...

எண்ணம் அதன் போக்கில் பயணித்துக் கொண்டிருக்க மயூ தன்னுள் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள்...

வயிற்றில் மெல்லியதாய் உதித்த ஒரு வலி மயூவை கலவரப்படுத்தியது...

முதலில் சாதாரணமாய் நினைத்தவள் வினாடிக்கு வினாடி வலி அதிகரிக்க மயூவின் முகத்தில் வேர்வை பூவாய் பூத்தது....

அவளிடம் மாற்றத்தை உணர்ந்து கொண்டவனாய்...

"ஹேய்... என்னாச்சுடி.. மயூ என்னைச் செய்யுதுனு சொல்லு...", என்றவனையும் பதட்டம் தொற்றிக் கொண்டது....

"வலிக்குது ஆகாஷ்...", என்று வயிற்றைச் சுட்டிக் காட்டியவளைத் தன் மீது சாய்த்துக் கொண்டவன் அவளது ஒவ்வொரு அடிக்கும் துணை நின்று நடத்திச் சென்றான்...

ஆகாஷின் வாகனம் மித்ராவின் மருத்துவமனைக்குச் சீறி பாய மயூ துவண்டு போனவளாய் பின் இருக்கையில் சுருண்டருந்தாள்...

விட்டு விட்டு உண்டான வலியில் அவள் மனம் ஆட்டம் கண்டது...

மனதுக்குள் குழந்தைக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்ற எண்ணம் தோன்றி வதைத்தது...

அடிவயிற்றிலிருந்து எழுந்த கோவலை தொண்டைக்குழியில் அடக்கியவள்...

தன் குழந்தைக்கு எதுவும் அசம்பசாவிதம் ஏற்பட்டு விடக்கூடாது என ஜபம் போல் சொல்லிக் கொண்டே வந்தாள்...

மருத்துவமனையில் டாக்டர் ஜானகிக்காக காத்திருந்த ஒவ்வொரு கணமும் மயூவிற்கு வெகு துக்கமாய் இருந்தது...

பிறக்காத தன் குழந்தையின் மீது எங்கிருந்துதான் இத்துனை பாசம் வந்ததென்று தெரியாவிடிலும் தன் உதிரத்தில் ஒன்றென கலந்து கருவறையில் ஜனித்த தன் குழந்தையை இழந்துவிட அவள் விரும்பவில்லை...

முதலில் இந்த கர்பத்தை விளையாட்டாய் எடுத்துக் கொண்டவளுக்கு இன்றுதான் தாய்மையின் மகத்துவம் புரிந்தது...

கஷ்டப்பட்டு தன்னை ஈன்றெடுத்த துளசியின் நிலையும் இன்றுதான் தெளிவாய் விளங்கிற்று...

தலையை கைகளில் தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு யார் தோளிலாவது சாய்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது...

வெகு நாட்களுக்குப் பின் தன் தாய் தன்னுடன் இல்லையே என்ற ஏக்கம் அவள் மனதை இரணமாய் கொன்றது...

'என்னை இப்படி தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டியே அம்மா...', என்று மயூவின் மனம் ஊமையாய் கதறி அழுதது...

"ரொம்ப வலிக்குதாடா...", என்ற ஆகாஷின் குரலில் நிமிர்ந்தவள் அவன் இடையைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள்...

"குழந்தைக்கு எதாவது ஆகிருமோனு", அவளுக்கு வார்த்தைகள் வெளிவற மறுத்தது..

"ஒன்னும் ஆகாதுடா...", என்று மென்மையாய் மொழிந்தவன் மயூவைத் தோளில் சாய்த்துக் கொண்டான்...

மயூவைச் சோதனைக்காக ஜானகி அழைத்துச் சென்றப்பின் ஆகாஷைப் பதட்டம் தொற்றி கொண்டது...

பயத்திலிருந்தவளை மேலும் கலவறப்படுத்த விருப்பமில்லாமல் தான் மயூவிற்கு தைரியம் சொன்னான்...

இப்போது அவளுக்கும் குழந்தைக்கும் எதுவும் ஆகிவிடக்கூடாதென அவன் மனம் மௌனமாய் இறைவனை இறைஞ்சிற்று...

திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதுதான் அவன் நினைவில் நின்றது...

கண்மூடி இருக்கையில் சாய்ந்திருந்தவனுக்கு மித்ராவின் ஞாபகம் இப்பொழுதுதான் வந்தது...

'அச்சச்சோ.. அக்காவ எப்படி மறந்தன்... ரெண்டு நாளா நான் அவங்கள பார்க்கவே இல்லை...', தன்னையே நொந்தவனாக மித்ராவின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டான்...

ஒரு சில நிமிடங்களுக்கு பின் மித்ரா அழைப்பை ஏற்க...

"ஹலோ அக்கா... எங்க போனிங்க... ரெண்டு நாளா உங்கள பார்க்கவே முடில... என்னாச்சிகா... எங்க இருக்கிங்க... நான் மயூவ கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் வந்துருக்கன்... அவளுக்கு திடீர்னு பெய்ன் வந்துருச்சிகா... எனக்கு என்ன பன்றதுனே தெரில... ஜானகி அக்காதான் இப்ப அவள பார்த்துட்டு இருக்காங்க... நீ சீக்கிரம் வாக்கா...
ப்லீஸ் கா...",
ஆகாஷ் அழுகுறலில் பேச மித்ரா தன் கனவிலிருந்து இப்பொழுதுதான் தெளிந்தாள்..

"ஏய்... ஆகாஷ் அவளுக்கு ஒன்னும் இருக்காது... நீ ஒன்னும் குழப்பிக்காத... நான் இன்னும் ஓன் ஹவர்ல அங்க இருப்பன்...", என்றதோடு அழைப்பு துண்டிக்கப்பட்டது...

ஆகாஷ் கைப்பேசியை அணைத்துவிட்டு நிமிர்வதற்கும் ஜானகி அவளது அறையிலிருந்து வெளிவரவும் சரியாய் இருந்தது...

"ஜானு அக்கா... மயூக்கு ஒன்னும் இல்லதான... அவ யான் வலிக்குதுனு சொன்னா... சீக்கிரம் சொல்லுங்க...", ஆகாஷ் பொறுமை இல்லாதவனாய் ஜானகியைப் போட்டு உலுக்க...

"டேய்... டேய்... என்னை மொதல்ல விடுடா... ஆளு வளந்த அளவுக்கு கொஞ்சமாவது அறிவு வளந்துருக்கா... புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் இதுவே வேலையா போச்சி...", என்று சலித்தவளைப் பார்த்து இளித்து வைத்தான்...

"ஹீ..ஹீ..ஹீ.. அக்கா எங்கள பத்தி உங்களுக்கு எப்டி தெரியும்...", என்றான் விஷம சிரிப்புடன்...

"டேய் சின்ன பையா... உங்க உறவுக்கும்... இந்த பேபிக்கும் அறிச்சுவடு எழுதி தொடங்கி வெச்சதே நான் தான்டா... அப்போ ரொம்ப பீல் பண்ணன்... என்னோட தப்பால ஒரு சின்ன பொண்ணோட வாழ்க்கைய வீணாக்கிட்டனோனு... பட் இன்னிக்கு உங்க ரெண்டு பேரையும் ஒன்னா பார்க்க சந்தோஷமா இருக்குடா... மயூ எனக்கும் தங்கச்சி மாதிரி தான்... அவ கிட்ட எதாவது வாலாட்டுன அப்புறம் பார்த்துக்குறன்... மங்கிக்கு போடுற இன்ஜெக்ஷன உனக்கு போட்டு விட்றுவன்... ஆன்", என்றாள் சீரியஸாக...

"ஐயோ சிஸ்... ஐம் சின்ன பேபி... நோ கோவம்... ஐம் பாவம்...", என்றான் பாவமான பாவணையோடு...

"பார்ரா... ஒரு பேபிக்கே அப்பா ஆயிட்டாராம்... இதுல நோ கோவம்... ஐம் பாவம்னு வசனம் வேற..." கேலியாக கூறியவளை முறைத்தவன்

"லூசா ஜானு நீ... உள்ள என்னோட செல்லம் எப்படி இருக்கானு சொல்ல சொன்னா... என்னைக் கலாச்சிட்டு இருக்க...", என்றான் கோவமாக..

(தோடா🙄🙄 இவ்வளா நேரம் மொக்க போடுறப்ப தெரிலையாம் இது😏😏😏 மிஸ்டர் அமூல் பேபி😡😡😡பாவம் மை மயூ டார்லிங்🤕🤕🤕 போய் அவள மொதல்ல பாரு😩😩😩)

"டேய் அடங்குடா... மயூக்கு ஒன்னும் இல்ல... வா அவள பார்க்கலாம்..."
ஜானகியை மௌனமாக பின் தொடர்ந்தான் ஆகாஷ்...

"அக்கா ஒன்னும் இல்லனு சொன்ன... அப்புறம் யான் அவள இதுல படுக்க வெச்சிருக்க...", என்றவன் ஜானகியைப் பார்த்து முறைத்து வைக்க...

"ஐய்யோ... இவனலாம் பெத்தாங்கலா இல்ல செஞ்சாங்கலான்னு தெரிலையே... கொரங்கு பையளே... அங்க பாரு...", என்று அவள் கைக்காட்டிய திசையில் அவர்களின் குழந்தையின் இதயத்துடிப்பு திரையில் விரிந்திருந்தது...

மயூவின் தலைமாட்டில் பெரிதாக்கப்பட்டிருந்த திரையில் குழந்தையின் உருவமமும் இதயத்துடிப்பும் துள்ளியமாய் தெரிய ஆகாஷின் கண்கள் பனித்தது...

என்னென்று வர்ணிக்க முடியாதா ஒரு பரவச நிலைக்குத் தள்ளப்பட்டான்..

அது தன் உயிர்...

தனக்கு சொந்தமானவளின் உயிரில் கலந்தது...

என்கின்ற நிதர்சனம் அவனை பலமாக தாக்கியது...

மயூவின் கைவிரலோடு தன் விரல்களைக் கோர்த்தவன் அவளது நெற்றியில் அழுத்த முத்தமிட்டான்...

மயூவிற்கு அவனது அருகாமை இதமாய் இருந்தது... இந்த பகிர்தல் அவள் மனதை நிம்மதி அடையச் செய்தது... அவனது துணையை அவள் மனம் விரும்பி ஏற்றுக் கொண்டது...

"ஹலோ லவ் பெர்ட்ஸ்... உங்க ரோமென்ஸ வீட்ல போய் வெச்சிக்கோங்க... இங்க ஒரு சின்ன பிள்ள இருக்கன்ற நினைப்பு கொஞ்சமாவது இருக்கா உங்களுக்கு.. ஸோ பேட்...", ஜானகி குறும்பாக கூறினாள்...

(நீ மட்டும் சின்ன பிள்ள இல்ல ஜானு டார்லிங்😜😜😜 நானும் தான்😫😫😫 பட் சொன்னா யாரும் நம்ப மாட்டேன்றாங்களே😒😒😒)

"பார்ரா... சின்ன பிள்ளைக்கு இங்க என்ன லுக்கு... கண்ணை மூடிக்க வேண்டிதானே ஜானு செல்லம்...",
என்று காலை வாரினான் ஆகாஷ்...

"டேய்... டேய் நான் உன் அக்காடா... கொஞ்சமாவது கருணை காட்ட கூடாதா...", என்றாள் வரவழைத்த அழுகுரலில்...

"ஹீ... ஹீ... ஹீ... அக்கான்றனால தப்பிச்ச சிஸ் நீ... சரி இப்ப மயூக்கு என்னாச்சினு சொல்லு அவ யான் பெய்ன்ல துடிச்சா... எனி ப்ராப்ளம்...", என்றான் பொருப்பானவனாக..

"அதுலாம் ஒன்னும் இல்ல ஆகாஷ்... அது சாதாரண பெய்ன் தான்... அவ ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காம பார்த்துக்கோ... அன்ட் டைம் டு டைம் ரைட்டா சாப்பிட சொல்லு... அவளோதான்...", ஜானகி

"இதுலாம் ஜூஜூபி மேட்டர்... நான் அவள நல்லா பார்த்துக்குறன்.. இப்ப நாங்க வீட்டுக்கு கிளம்புறோம்.. பாய்... பாய்... டாடா...", ஆகாஷ் கிளம்ப தயாராக...

"டேய் லூசு அவ இன்னும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்டா... லைட்டா மயக்கமா இருக்குனு சொன்னா... எப்டிடா நடப்பா...", என்றாள் அதட்டலாக...

"இப்போ யாரு அவள நடக்க வெச்சி கூட்டிடு போக போறா... நான் என் செல்லத்த தூக்கிட்டு போக போறன்..." ஜானகியிடம் கிண்டலாக மொழிந்தவன் மயூவைப் பார்த்துக் கண்ணடிக்க அவளை வெக்கம் சூழ்ந்தது கொண்டது...

ஆகாஷ் மயூவை தன் கைகளில் ஏந்திக் கொள்ள மயூ அவன் நெஞ்சில் தன்னைப் புதைத்துக் கொண்டாள்...
அவளைப் பார்த்து சிரித்தவன்...

"ஐ லவ் யூ டி... பொண்டாட்டி...", என்றான்...




தாய்மை மிளிரும்...💜💚💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 23
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN