தாயுமானவன் 27

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கண்ணீரைத் துடைத்தவளே...
மனதினை வென்றவளே... தனிமையைப் போக்கி...
துணையென நின்றவளே...
என் சேய்க்குத் தாயுமானவளே...
இப்புவியில் உனைக் காண
நான் என்ன தவம் செய்தேனோ...
உன் தாயுமானவன்...அனைவரும் ஒன்று சேர்ந்து அன்பு இல்லத்திற்குச் சென்றனர்...

மயூ தன் முதிய தோழி தோழர்களைக் காண செல்ல சதீஸ் ஜானகியிடம் தன் மனதை வெளிபடுத்த எண்ணினான்...

தனது விருப்பத்தை நிம்மி கூறிய பொழுது மித்ராவின் முகத்திலிருந்த யோசனை ஏதோவென்றை அவனுக்கு விளக்கினாலும் அதை ஜானகியிடமே அறிந்து கொள்ள விரும்பினான்...

ஜானகி அவளது அறையில் மருத்துவ கோப்புகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்க சதீஸ் அவள் முன்னே சத்தமின்றி சென்று அமர்ந்தான்...

தன் முன்னே நிழலாட தலை நிமிர்த்தி பார்த்தவள் சதீஸைக் கண்டு திகைத்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்...
"சொல்லுங்க சார்... என்ன வேணும்...", என்றாள் அமைதியாக...

"ஜானு இந்த சார் மோர் எல்லாம் வேணாம்... நான் ஒன்னும் உனக்கு அந்நியன் இல்ல... பழசெல்லாம் மறந்துருச்சா... இல்லை திரும்ப நியாபக படுத்தனுமா...", என்றான் அவள் கண்களை ஆழமாக நோக்கியபடி...

(ஹீ😂 ஹீ😂 ஹீ😂 அது என்ன கதைனா😅😅😅 விக்ரம் நம்ம மித்ராக்கு நூல் விடும் போது சதீஸ் அவளோட கிளாஸ்மேட் ஜானகிக்கு நூல் விட்டான்🤣🤣🤣)

"ஒரு ஆணியும் வேணா... சொல்லு இப்போ எதுக்கு வந்துருக்க...",
என்றாள் சுற்றி வளைக்காமல்...

"அது என்னனா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிருக்கன்... நீ என்ன சொல்ற..." என்றான் நேரிடையாக

"வாட்???" ஜானகியின் முகம் கோபத்தில் சிவந்து போனது...

"வாத்து கோழி இல்லமா... கல்யாணம்... உனக்கும் எனக்கும்...", என்றான் அசராமல்...

"உனக்கென்னா பையித்தியமா???" ஜானகி பற்களுக்கிடையே வார்த்தைகளைக் கடித்து துப்பினாள்...

"முன்னலாம் நார்மலாதான் இருந்தன்... உன்னைப் பார்த்தோனதான் பையித்தியம் பிடிச்சிருச்சி காதல் பையித்தியம்...", சதீஸ் கண்சிமிட்டி சொல்ல ஜானகிக்கு எரிச்சலாக இருந்தது...

"இங்க பாருங்க மிஸ்டர்..."

"நோ மிஸ்டர்... சதீஸ்... உனக்கு இஸ்டம்னா டார்லிங் செல்லம்னு எத வேணாலும் அட் பண்ணிக்கலாம்...",
என்றான் குறும்பாக...

'லூசாப்பா நீ...', என்ற பாவணையில் அவனை பார்த்தவளை கண்டு அவன் இளித்து வைக்க...

"இங்க பாருங்க மிஸ்டர் சதீஸ்... நான் இப்போ தனி மனுஷி இல்லை... என்னை நம்பி ரெண்டு குழந்தைகள் இருக்காங்க... என்னோட ஒரே அக்கா இறந்து போயிட்டதுனால அவங்களோட ரெண்டு குழந்தைகளையும் நான் தான் பார்த்துக்குறன்... எனக்கு அவங்க தான் முக்கியம்... காதல் கல்யாணம் இதெலாம் எனக்கு தேவை இல்ல... ஸோ உங்க மனச மாத்திட்டு வேற ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க... என்ன விட்றுங்க...", உணர்ச்சியின்றி கூறியவள் தன்னை நிலைபடுத்திக் கொள்ள இரண்டு நிமிடம் கண் மூடி மௌனிக்க...

சதீஸ் தன் சிந்தனையில் சுழன்றான்...
ஒரு முடிவுக்கு வந்தவனாய் ஜானகியை பார்க்க இருவரின் பார்வையும் ஒரு வினாடி நேர்கோட்டில் பயணித்து விலகியது...

"இட்ஸ் ஓகே... நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்குறன்... அதோட உன் அக்கா குழந்தகள என்னோட குழந்தைகளா தத்தெடுத்துக்குறன்...", என்றான் நிதானமாக...

இவனின் பதிலில் ஜானகி திகைத்துதான் போனாள்...
'என்னடா இவன்... உண்மை தெரிஞ்சோன ஓடிருவான்னு பார்த்தா... இது என்ன புது குழப்பம்...', என்று மனதில் நினைத்ததை அவள் முகம் அப்பட்டமாக வெளிக்காட்டியது...

ஜானகியும் சதீஸூம் இங்கு சண்டையிட்டு கொண்டிருக்க மற்றவர்கள் அன்பு இல்லத்திற்கு சென்றிருந்தனர்...

"ஹாய் பாட்டிமாஸ் அன்ட் மை ஹீரோஸ்... எல்லாம் எப்படி இருக்கிங்க...", மயூவின் அதிரடியான நலம் விசாரிப்பில் அன்பு இல்லத்தில் இருந்தவர்களின் முகத்தில் புன்னகை விரிந்தது...

"வாடிமா என் இராசாத்தி... உனக்கு இப்பதான் இந்த கிழவிய பார்க்க நேரம் கிடைச்சிசா..."

"போ பா நீ ஒன்னும் போச வேணாம்... இவ்வளவு நாளா எங்கள பார்க்க வரலைல நீ..."

"குழந்த இது எத்தனாவது மாசம்மா... ஆணா பொண்ணா..."


இப்படி பல நல விசாரிப்புகள்... சில பல சீண்டல்கள் என மயூ அவர்களோட ஒன்றிப்போக ஆகாஷ், நிம்மி.மற்றும் விக்ரம் அவளை புன்னகையோடு கவனித்துக் கொண்டிருந்தனர்...

அப்பொழுது ஆகாஷிற்கு ஒரு எண்ணம் உதிக்க அவன் மெல்ல அதை விக்ரமின் காதில் ஓதினான்... அவனும் ஆகாஷின் கூற்றை ஏற்பதாய் தலையசைத்து நிம்மியிடம் அந்த விஷயத்தைக் கூறினான்...

"ஏய் அண்ணா உண்மையாவா...", துள்ளி குதித்தவள்... அதை அங்கிருந்த பெரியவர்களிடம் கூறினாள்...
அனைவரும் ஏக மனதாய் சரியென தலையசைக்க... மயூ இவர்களின் செயலுக்கு பொருள் விளங்காமல் விழித்தாள்...

"என்ன அல்லிராணி... முட்டகண்ண வெச்சிட்டு இப்படி முழிச்சி முழிச்சி பார்க்குற...", என்று மயூவைக் கேலி செய்தவாறே அவளை நெருங்கி நின்றான் ஆகாஷ்...

"இல்லை... இங்க என்ன நடக்குது...", மயூ கேள்வியாய் வினவ

"ஒன்னும் நடக்கலையே..." ஆகாஷ் குறும்பாக பதில் அளித்தான்...

"பொய் சொல்லாதடா... எனக்குத் தெரியாம என்ன பிளன் பண்றிங்க எல்லாம் சேர்ந்து...", மயூ தன் கண்ணை உருட்டி அவளை மிரட்ட...

"ஐயோ பேய்..." என்றான் விளையாட்டாய்... இதை கண்டு கோபம் கொண்டவளாய் மயூ அவன் கையில் வலிக்கும்படி கிள்ளி வைத்தாள்...

"ஏய் பிசாசு... ஏன்டி கிள்ளுன..." ஆகாஷ் பாவமாக கேட்டான்...

"என் இஸ்டம் நான் கிள்ளுவன்...அதுல உனக்கென்ன கஷ்டம்..." மயூ அவனுக்கு அடாவடியாக பதில் கொடுக்க ஆகாஷின் முகத்தில் புன்னகை விரிந்தது... தன்னிடமிருந்த சற்று தள்ளி நின்றவளைத் தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன்

"உனக்கு எதுவேனாலும் இஸ்டமா இருக்கட்டும்... எனக்கு இப்ப உனக்கு வளகாப்பு செஞ்சி பார்க்கனும்னுதான் இஸ்டம்...", என்றான் மென்னகையோடு...

"ஆகாஷ்...", என்றவளுக்கு அதன் மேல் பேச நா எழவில்லை... கண்கள் பனிக்க அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்...

"என்னடி..."

"ஒன்னுமில்ல... ரொம்ப தேங்க்ஸ்டா..."

"லூசு...",
என்றவன் அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்..

மயூவின் வளைகாப்பு விழாவிற்காக அனைவரும் மகிழ்ச்சியில் பம்பரமாய் சுழன்றனர்...

அவளைத் தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஏற்பாட்டை கவனிக்க விக்ரம் திக்குமுக்காடி போனான்...

கள்ளங்கபடமில்லா அன்பினை அவன் இந்த அன்பு இல்லத்தில்தான் உணர்ந்து கொண்டான்..

சதீஸ் ஜானகியின் பின்னே என்னேரமும் அலைந்து திரிந்து அவளது வாய் மொழியில் உதிர்க்கப்போகும் சம்மதம் என்ற ஒற்றைச் சொல்லிற்காக தவமாய் தவமிருந்தான்...

மயூ ஆகாஷைத் தன் அருகிலேயே இருத்திக் கொண்டாள்...
என்னென்று தெரியாத ஒரு பயம் அவளைச் சூழ்ந்து கொண்டது...
இது முதல் குழந்தையாதலால் பிரசவ சமயத்தில் தனக்கேதும் நிகழ்ந்து விடுமோ என்று அஞ்சினாள்...

அன்பு இல்லத்தில் வேறு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை சொல்லி அவளது பயத்தை இன்னும் அதிகரிக்க வைத்திருந்தனர்...

பொதுவாகவே கற்ப காலத்தில் பெண்ணின் மனம் தாயின் மடியைத் தான் தேடும்... அது இல்லாத பட்சத்தில் கணவனே அவளுக்கு பக்க துணையாய் விளங்குவான்...

மயூவின் மனம் தன் தாயின் அரவணைப்பிற்காக மிகவும் ஏங்கியது... அவரின் மடியில் துயில் கொண்டது... பல கதை பேசி அவரை சிரிக்க வைத்தது என அனைத்தையும் நினைவுபடுத்தி ஏங்கினாள்...

மயூவின் ஒவ்வொரு அசைவையும் துள்ளியமாக கணிப்பவன் அல்லவா ஆகாஷ்...

அவளது ஏக்கத்தைப் போக்கவே மயூவோடு தன் நேரத்தை அதிகமாக செலவழித்தன்... தன் அலுவலக பொறுப்புகள் அனைத்தையும் வீட்டிலிருந்தவாரே கவனித்துக் கொண்டவன் மயூவை கண்ணுக்குள் வைத்து தாங்கினான்...

'டேய் ஆகாஷ் நீ கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்டாட்டி தாசன் ஆயிட்டடா...', எனும் கேலி கிண்டலுக்கும் அவன் செவி சாய்ப்பதாய் இல்லை...

(இந்த ஹிட்லர் மயூவோட அமூல் பேபியா மாறுனாலும் மாறினான்🙄🙄🙄 இவனோட அலும்பு தாங்க மூடிலடா😂😂😂 பட் இது கூட நல்லாதான் இருக்கு🤗🤗🤗)

இன்னொரு பக்கம் விக்ரம் மித்ராவின் பின் சுற்றிக் கொண்டிருந்தான்...

(அவள சுத்தறதுக்கு நீ கோவில்ல நாளு சுத்து சுத்திருந்தன😉😉😉உனக்குனு காமாட்சியோ மீனாட்சியோ கிடச்சிருப்பாங்க🤣🤣🤣)

இன்னும் மூன்று நாட்களில் மயூவின் வளைகாப்பு சடங்கு நடப்பதாய் இருந்தது...

விக்ரம் மித்ராவைக் காண சென்றான்...

அன்று அவள் பிரசவம் பார்த்த குழந்தை இறந்தே பிறந்தது...
அழகிய தேவதையாய் சின்ன சின்ன கை காலோட பிறந்த அந்த சிசு அன்னையின் முகத்தைப் பார்த்து ஒற்றைப் புன்னகையை உதிர்க்கும் முன்னே இவ்வுலகைவிட்டுச் சென்றிருந்தது...

என்னதான் மித்ராவின் மருத்துவ வாழ்க்கையில் இது சகஜமான ஒன்றாய் இருந்தாலும் அவள் மனம் மிகவும் துவண்டு போயிருந்தது...

கடவுளுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை.. அந்த பிஞ்சின் உயிரையா பறிக்க வேண்டுமென்று கவலைக் கொண்டாள்...

விட்டத்தை வெறித்தவாரு அமர்ந்திருந்தவளைக் கண்டதும் விக்ரமின் முகம் யோசனையில் சுறுங்கியது...

'எப்போதும் இவதான் மத்தவங்கள விட்டத்த பார்த்து யோசிக்க வைப்பா... இன்னிக்கு என்ன இவ யோசிட்டு இருக்க... யோசிக்கலாம் மூள வேணுமே... அது இவகிட்ட இல்லாத ஒன்னாச்சே... என்னவா இருக்கும்...', மௌனமாய் அவளை நெருங்கி அவள் முன்னே சொடக்கிட்டான்...

மித்ரா எந்தவித உணர்ச்சியும் காட்டாது அதே நிலையில் இருந்தாள்...
விக்ரம் அவளது தோளைத் தொட்டு உலுக்க சுயநினைவு வந்தவளாய் மலங்க மலங்க விழித்தாள்...
விக்ரமின் முகத்தையே இமைக்காது நோக்கினாள்...

அவன் என்ன என்பதுபோல் ஒற்றை புருவத்தை உயற்ற...
மித்ராவின் கண்களிலிருந்து மடைத் திறந்த வெள்ளமாய் கண்ணீர் பெருகியது...

'ஐய்யயோ... திரும்ப அழுவறாளே... நான் இவள ஒன்னுமே பண்ணலையே... கட்டிபுடிச்சி ஆறுதல் சொல்லலாம்னு பார்த்தா அடிப்பாளே கிராதகி...', விக்ரம் பாவமாய் அவள் முகத்தைப் பார்க்க.. மித்ரா யோசிக்காமல் அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டு அழத் தொடங்கினாள்...

'இவளாவே கட்டிப்புடிக்குறாளே.. பேய் பிசாசு எதும் இவள அடிச்சிருச்சா...' விக்ரமை பல விதமாக யோசிக்க வைத்தது மித்ராவின் செயல்...

"அந்த பேபி... சின்ன பேபி விக்கி... பெறந்தோனயே இறந்துடுச்சி... குட்டி கை காலுனு தேவத மாதிரி இருந்தாடா... அந்த பேபி... அந்த பேபி... கடவுள் ரொம்ப கெட்டவருடா...", அழுகையில் விக்கி விக்கி பேசியவளை அணைத்து ஆறுதல் படுத்தியவன்...

பிறந்த வீட்டு சீதனமாய் மயூவிற்கு வளைகாப்பு சீர்வரிசைகளை மித்ராதான் தாய் முறையிலிருந்து செய்ய வேண்டுமென்று விக்ரம் சொல்ல...

மித்ரா அவனை முறைத்துப் பார்த்தாள்.....

"ப்லீஸ்... ப்லீஸ்... ப்லீஸ்... மிது.. மயூக்கு அண்ணியா அம்மாவா நீ தான் இதுலாம் செய்யனும்...", விக்ரம் உருக்கமாய் கேட்க அதை மறுக்க மனமில்லாதவளாய் சரியென்று தலையசைத்தாலும் மித்ரா தனது யோசனையிலே சுழன்று கொண்டிருந்தாள்...

விக்ரம் தேர்ந்தெடுத்த அனைத்திற்கும் சரி சரியென தலையசைத்தவள்...
கனவில் நடப்பது போலவே அவனைப் பின் தொடர்ந்தாள்...

மித்ராவின் மனதில் அந்த இறந்துபோன குழந்தையின் பிம்பமே வந்து போக சாலையைக் கடக்கும் பொழுது அவளது கவனம் சிதறியது...

விக்ரம் அவளை விட்டு சாலையைக் கடந்துவிட மித்ரா ஏதோ ஒரு யோசனையில் அப்படியே நின்றிருந்தாள்... அவளை நோக்கி அசுர வேகத்தில் லாரி ஒன்று நெருங்கி கொண்டிருந்தது...

மித்ரா என்ன ஏது என உணரும் முன்னே அவள் கீழே தள்ளப்பட்டிருந்தாள்...

விக்ரம் நடு சாலையில் இரத்த வெள்ளத்தில் "மிது..." என்ற கூவலோடு மயங்கி சரிந்தான்...
தாய்மை மிளிரும்... 💜💚💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 27
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN