தாயுமானவன் 28

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கனவிலே உன்னோடு வாழ்ந்து பழகியவன் நான்...
என்றெனும் ஒரு நாள் நீ நிஜத்திலும் என் வாழ்வில்
பிரவேசித்தால் நான் என்னாவேன்...
உன் தாயுமானவன்...
விக்ரம் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட மித்ரா பிரமை பிடித்தவள் போல் அசையாது அமர்ந்திருந்தாள்...

அவளது மனம் மட்டும் விக்கி... விக்கி... என விடாமல் கூக்குரலிட்டது...

இதுநாள் வரை எங்கே அவன் பால் சாய்ந்துவிடுமோ என அஞ்சி அவள் கடிவாளமிட்ட மனம் இன்று சிறகு விரித்த பறவையாய் அவனின் மீது இவளுக்கிருந்த காதலை வெளிச்சம் போட்டுக் காட்ட மித்ரா ஸ்தம்பித்துப் போனாள்...

'அவன் மீது எனக்கு இவ்வளவு காதலா??? அவனைத் தான் எனக்குப் பிடிக்காதே... பின் ஏன்???' என்ற அவளின் கேள்விக்கு மித்ராவின் மனமே நிதிபதியாக மாறி விக்ரமின் மீது அவளுக்கிருந்த காதலை நிலைநாட்ட போராடியது...

'அடி முட்டாள் பெண்ணே... அவன் மீது காதலில்லாமலா அவன் கட்டிய தாலியை இன்னும் சுமக்கிறாய்....

ஆதரவைத் தேடி அவன் தோளில் சாய்ந்தழுதாயே அது காதலின்றி வெறெது...

ஒவ்வொரு கணமும் அவனை வெறுப்பதாய் சொல்லி அவனது நினைவுகளை அழியாப் பொக்கிஷமாய் உன்னுள்ளே சேமித்தாயே அது காதலின்றி வேறெது...

அவன் உன்னைவிட்டு நான்காண்டு காலம் பிரிந்திருந்தாலும் அவன் மீண்டும் வருவானென காத்திருந்தாயே அது காதலின்றி வேறெது....

அவனது அணைப்பிலிருக்கும் பொழுது கருவறைச் சுகத்தைக் கண்டாயே அது காதலின்றி வேறெது...

இப்பொழுது கூட உயிர்க்குப் போராடிக் கொண்டிருக்கும் அவனுக்காக கண்ணீர் சிந்துகிறாயே... உன் அழுகுரலின் பின்னே ஒளிந்திருப்பது காதலின்றி வேறெது...

அவனிருந்த இடத்தில் மற்றொருவனை நினைத்துப் பார்க்க முடியுமா உன்னால்...',
மனம் சரமாரியாக கேள்விகளைத் தொடுக்க

"முடியாது முடியாது எனக்கு விக்கி வேணும்... அவன்... அவன்... என்னை விட்டுட்டு போக மாட்டான்... எனக்கு ப்ரோமிஸ் பண்ணிருக்கான்... அவனால என்னை விட்டுட்டு போக முடியாது...", மித்ரா பித்து பிடித்தவளைப் போல ஓலமிட தொடங்கினாள்...

விக்ரமின் மீது அவளுக்கிருந்த மலையளவு காதல் கொஞ்சம் கொஞ்சமாய் மித்ரா எழுப்பியிருந்த தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு தென்றலாய் அவளது ஜீவனை வருடிச் செல்ல மித்ரா மொத்தமாய் உடைந்து போனாள்...

என் மீது அளவில்லா காதலைக் கொண்டுள்ளதாக கூறினாய் அன்பே... அன்பிற்கு பரிசாய் எனதன்பை உன் பாதச்சுவிடல் சமர்ப்பிக்க ஏங்குகிறேன் அன்பே...

விக்ரம் அடிப்பட்டு சரிந்த காட்சியைக் கண்டதும் அவளது இதயக்கூடு வெறுமையாய் மாறியதை உணர்ந்தாள்...

மித்ராவை சாலையின் நடுவே கண்டவனுக்கு மற்றவை அனைத்தும் மறைந்து போக அவளைக் காக்க வேண்டுமென்ற ஒன்றே அவன் மனதில் ஆழப்பதிந்தது...

அதன் விளைவு மித்ராவைக் காப்பாற்றிய அடுத்த நொடி...
விக்ரமை அடித்து தூக்கி மித்ராவின் அருகிலையே எறிந்தது கனவுந்து...

அதுவரை தன் சிந்தனையில் இருந்தவள் உறைந்து போனாள்...

கண் முன்னே தன் முழுக் காதலையும் ஒருங்கே பெற்ற கணவன் அடிப்பட்டு இரத்த வெள்ளத்தில் மிதந்த காட்சி அவளது மனதை கத்தியின்றி இரத்தமின்றி காயப்படுத்திச் சென்றது...

அவனில்லாது தனக்கேது வாழ்வு என்கின்ற நிதர்சனம் உறைக்க இத்தனை நாளாய் அவனைத் தள்ளி வைத்து துன்பப்படுத்திய தன் மீதே அவளுக்கு வெறுப்பாய் இருந்தது...

மித்ரா எந்தவித உணர்ச்சியையும் காட்டாது அமர்ந்திருந்த நிலை அவளைச் சுற்றியிருந்தவரை கலவரப்படுத்தியது...

விக்ரம் விபத்தில் சிக்கியதை ஆகாஷிற்கு தெரிவித்தவள் அதன் பின் ஒற்றை வார்த்தையைக் கூட தன் வாய் மொழி உதிர்க்கவில்லை...

கோபம்... வேதனை... துக்கம்... மகிழ்ச்சி என எந்தவித உணர்வையும் வெளிப்படுத்தாமல் ஜடமாய் அமர்ந்திருந்தவளைக் கண்டவர்களின் மனமும் உருகிப் போனது...

விக்ரமிற்கு சிகிச்சை அளிக்கும் தலைமை மருத்துவர் 'இப்பொழுது சொல்வதற்கு ஒன்றுமில்லை எதற்கும் சிறிது நேரம் காத்திருங்கள்...', என்று சொல்லிச் சென்றப்பின் அந்த ICU அறையின் முன் அமர்ந்தவள் தான் அப்படியே உறைந்து போனாள்...

தன்னைச் சுற்றி தன் குடும்பம் நண்பர்களென அனைவரும் சூழ்ந்திருக்க மித்ரா மட்டும் தன் வாழ்வு யாருமற்ற சூன்யமாய் மாறியதை உணர்ந்தாள்...

நேரம் இப்படியே கடந்து கொண்டிருக்க சட்டென்று ஒரு செவிழியர் பெண் தலைமை மருத்துவர் அறைக்குள் ஓடி மறைந்தார்...

அங்கிருந்த அனைவரையும் பதட்டம் தொற்றிக் கொள்ள மித்ராவே உயிரையே தன் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்...
'நீ திரும்ப வரலனா என்னை யாரும் உயிரோடவே பார்க்க முடியாது விக்கி...', என்று மனதோடு தன் மணவாளனிடம் சண்டையிட்டவளின் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்தது...

வெடித்து அழுதவளை தன்னோடு அணைத்துக் கொண்ட மயூவின் முகம் அவள் கண்ணில் பதிந்தாலும் கருத்தில் பதிய மறுத்தது... ஒரு புறம் மயூ அவளைத் தாங்கி கொள்ள மறுபுறம் ஆகாஷ் அவளின் தலையை வருடிக் கொடுத்தான்...

"அக்கா விக்ரம்க்கு ஒன்னும் ஆகாது பயப்படாத... நீ இப்பதான் தைரியமா இருக்கனும்...", என்றவனின் முகத்திலும் கண்ணீரின் சாயல்...

"அவன்... அவன்... விக்கி... என்னோட... என்னோட...", வார்த்தைகள் வெளிவராமல் தத்தளித்தவளின் கைகளின் மீது தன் கைகளை வைத்து தைரியம் கூறினான் ஆகாஷ்...

"எங்களுக்கு எல்லாம் தெரியும் கா... விக்ரம் தான் உன்னோட ஹஸ்பண்ட் அப்டிங்குறது வரைக்கும்... ப்லீஸ் கா நிதானமா இரு... விக்ரம்க்கு நீ இப்படி உடைஞ்சி போன புடிக்குமா... அவன் கண்டிப்பா உனக்காக திரும்பி வருவான்கா...", என்னதான் மித்ராவிற்கு ஆறுதல் கூறினாலும் விக்ரம் இந்த ஆபத்திலிருந்து நல்லபடியாக மீண்டு வர வேண்டும் என்ற எண்ணமே அவனை சூழ்ந்திருந்தது...

சத்தமின்றி என் இதயத்தைத் திருடிச் சென்றவனே...
தனிமையை மட்டுமே அலங்காரமாய் கொண்ட பேதையின் மனதில் காதலெனும் முத்தை விதைத்தது ஏனோ???
யாரைக் கண்டும் சலனம் கொள்ளாமல் இருந்த அவள் வாழ்வில் தாயுமானவனாய் நீ நுழைந்தது ஏனோ???
யாதுமாய் அவளுக்கு இருக்க வேண்டிய நீயே இன்று அவளை தவிக்க விட்டதேனோ???
உன் அன்புக்குரியவள்...


மித்ராவின் மனம் பலவற்றை எண்ணி கலங்கியது... விக்ரமை நினைத்து ஏங்கியது...

தலைமை மருத்தவர் விக்ரமிருந்த அறைக்குள் நுழைந்து பல மணித்துளிகள் கடந்திருந்த...
எந்தவித சலனமும் இன்றி அந்த இடமே வெறுமையாய் இருந்தது...

'என்ன... என்ன...', என்ற கேள்வி அனைவரின் மனதில் தோன்றினாலும் அதற்கு விடைதான் இல்லை...

அழுது அழுது மித்ராவின் கண்ணீர் வற்றிவிட்டது...

உயிரைப் பிடித்துக் கொண்டு அனைவரும் காத்திருக்க அந்த அறையை விட்டு வெளியே வந்தார் தலைமை மருத்துவர்...

அவரை உடனே அவர்கள் முற்றுகையிட்டுக் கொள்ள மித்ரா தான் திக்கி திணறி கேட்டாள்...

"டாக்டர் என்னோட ஹஸ்பண்ட்கு ஒன்னும் இல்லதான... அவர் குணமாகிடுவாருல..." நம்பிக்கையைத் தேக்கி கேட்ட அவள் முகத்தை காண சங்கடபட்டவறாய்...

"அவருக்கு தலைல பலமா அடி பட்டுருக்குமா... ஹெவி ப்ளட் லோஸ்... கொஞ்ச கொஞ்சமா கோமாவுக்கு போயிட்டு இருக்கார்... எங்களால முடிஞ்சத செஞ்சிருக்கோம்...
நம்பிக்கையோட இருங்கமா...
அவரு உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை... பட் எப்போ நினைவு திரும்பும்னு சொல்ல
முடியாது... "
என்று விட்டுச் சென்றார்...

மித்ரா அப்படியே மடங்கி தரையில் அமர்ந்தாள்... சுற்றியிருந்தோர் அனைவரும் கண்ணிலும் கருத்திலும் பதியாமல் போக அவளை முழுதுமாக ஆக்ரமித்திருந்தது விக்ரமின் நினைவுகள் மட்டுமே...

அவளது விக்கி மட்டுமே....

அவன் இவளை சுற்றி சுற்றி வந்து காதல் சொன்ன நினைவுகள் வந்து போக மீண்டும் அவன் அதோ போல் தன்னிடம் அவனின் காதலைச் சொல்ல மாட்டானா... அதிரடியாய் அவளைச் சீண்டிப் பார்க்க மாட்டானா... அணைத்து ஆறுதல் கூற மாட்டான என அவளின் மனம் ஏங்கிற்று....

மித்ராவின் மனமே இப்பொழுதுதான் அவளுக்குத் தெள்ள தெளிவாய் புரிந்தது...

விக்ரமை முதன் முதலில் சந்தித்தது முதல் இன்று வரை அவன் அவள் மனதில் வாழ்ந்திருக்கிறான்...

அவளுக்கு இப்பொழுது அதிரடியாய் காதலைச் சென்ன விக்கி கண்முன்னே தெரிந்தான்...

வலுக்கட்டாயமாக அவளுக்குத் தாலி கட்டிய விக்கி தெரிந்தான்...

நித்தமும் அவள் பின்னே சுற்றி வந்து முத்தமிட்ட விக்கி தெரிந்தான்...

ஆனால் இந்த நிதர்சனத்தைப் புரிந்து கொள்ள இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருந்திருக்கலாம்...

ஏனெனில் அவளது காதல் கணவன் உயிருக்குப் போராடிக் கொண்டல்லவா இருக்கிறான்...

என்னதான் டாக்டர் அவன் உயிருக்கு ஆபத்தில்லை என கூறியிருந்தாலும் விக்கி மீண்டும் கண்முழித்தால் தான் அவளது மனம் நிம்மதியுறும்...

"ஆகாஷ் அக்கா யான் இப்டி இருக்காங்க... ஆகாஷ் அக்கா... விக்ரம் அண்ணா...", விக்கி விக்கி அழும் தன்னில் சரிபாதியைத் தேற்றுவதா இல்லை தன் உடன் பிறந்தவளைத் தேற்றுவதா...

இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தவனை சதீஸ்தான் சமாதனப்படுத்தினான்...

"மச்சி நீ தங்கச்சிய கூட்டிட்டு கிளம்புடா... நான் இங்க இருந்து மித்ராவ பார்த்துக்குறன்... அதான் நிம்மியும் ஜானகியும் இருக்காங்கல... இங்க எந்த பிரச்சனையும் வராது... புள்ளதாச்சி பொண்ணுடா... அதுக்கு ரொம்ப அலச்சல் குடுக்காத...", அண்ணனாய் அனைத்துப் பொறுப்புகளையும் தன் கையில் எடுத்துக் கொண்டாலும் அவன் மனதிலிருக்கும் இரணத்தை அறிந்தவர் அங்கு உண்டு...

ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு விக்ரம் மட்டும் ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்...

இப்படியாக மூன்று நாட்கள் எந்தவித மாற்றமும் இல்லாமல் கழிந்தது...

மித்ரா அந்த மூன்று நாட்களை எப்படி கழித்தாள் என கேட்டாள் எந்தவித பதிலும் அவளிடமில்லை... அவள் ஒரு ஜடமாகவே மாறியிருந்தாள்... சுவாசமிருந்தும் பிணமாய்...
காதல் ஒருவரை இந்தளவுக்கு மாற்றும் என்பதையே அவள் இப்பொழுதுதான் அறிந்தாள்...

இப்படியாக அனைவரையும் கண்ணீரில் மிதக்கவிட்ட விக்ரமிற்கு மெல்ல மெல்ல சுயநினைவு திரும்பிக் கொண்டிருந்தது...

சிரமப்பட்டு கண் விழித்தவளின் செவியில் 'விக்கி... விக்கி...', என்ற கதறலே இடைவிடாது கேட்டது...

பார்வையை அந்த அறை முழுதும் சுழலவிட தான் மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்து கொண்டான்...

உடலில் இருக்கும் அத்தனை அனுவும் ஒன்றே சேர்ந்து அவனை பலவீனப்படுத்தியது...

அப்பொழுதுதான் வலது கையின் மீதே பாரத்தை உணர்ந்தான்...

என்னென்று குனிந்து பார்த்தவன் இனிமையாக அதிர்ந்தான்...

மித்ரா அவனது கையை இறுக்கமாக பற்றி தன் நெஞ்சோடு பொதித்தவாறு அவனருகே அமர்ந்த வாக்கில் தலை சாய்த்து உறங்கி கொண்டிருந்தாள்...

அவள் அழுததற்கான சுவடு காற்றிலே கறைந்து போயிருந்த கண்ணீர் துளியின் தடம் அவனுக்கு உணர்த்தியது...

'உன்னை காலம் முழுமைக்கும் கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன் பெண்ணே... ஆனால் இன்று உனது கண்ணீருக்கு நானே காரணமாகி விட்டேனே பெண்ணே...', மனதினுல் புலம்பியவன் இமைக்காது அவளையே நோக்கினான்...

அந்நேரம் அவனை பரிசோதிக்க வந்த மருத்துவர் அவனிடமிருந்த மாற்றத்தையும் அவன் சுயநினைவுக்கு திரும்பியதை உணர்ந்தவராக அடுத்தடுத்த சிகிச்சைக்கு துரிதப்படுத்த அந்த சத்தத்தில் கண்விழித்தவள் விக்ரமை மலங்க மலங்க பார்த்தாள்...

அவன் சுயநினைவுக்குத் திரும்பியதை மூளை உறுதி செய்தாளும் மனம் அதை ஏற்க மறுக்க நின்ற இடத்திலேயே உறைந்திருந்தாள்...

அவளை முற்றிலும் உணர்ந்தவளான அவள் கைகளுக்கு அழுத்தம் கொடுத்து தன்னை அவளுக்கு உணர்த்தியவன் சிறு புன்னகையோடு மீண்டும் மயக்க நிலைக்குப் போனான்...

தாய்மை மிளிரும்...💜💚💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 28
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN