தாயுமானவன் 30

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நேற்று வரை நீ யாரென்று நான் அறியவில்லை...
இன்று உனையன்றி நான் நினைத்து ஏங்க வேறோர் பெண்ணில்லை...
என் வாழ்வில் நீ நுழைந்தாய் புயலென...
என் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள...
உன் தாயுமானவன்...



"ஏன் ஆகாஷ் மித்து அக்காவையும் அந்த தடியனையும் அங்க தனியா விட்டுட்டு என்னை இங்க கூட்டிட்டு வந்துட்ட... டேய் சதீஸ் அண்ணா உனக்காச்சும் அறிவு இருக்கா... இவன் பண்றதுக்கு எல்லாம் தலைய ஆட்டிட்டு இருக்க... நல்லா சேர்ந்திங்க போ கூட்டு... சங்கி மங்கி மாதிரி...", மயூ உச்சஷ்தொனியில் கத்தி கொண்டிருக்க ஆகாஷூம் சதீஸூம் அவள் முன்னே தோப்புகரணம் போட்டுக் கொண்டிருந்தனர்...

நிம்மி இவர்களது நிலையைக் கண்டு வராதா கண்ணீரைத் துடைத்து விட்டு பழிப்புக் காட்ட 'உன்னை அப்புறமா பார்த்துக்குறன் இரு...', என்பதாய் சதீஸ் அவளை மிரட்டினான்...

"மயூ அந்த தடியன் என்னை மிரட்டுறான் பாரு...", என்று நிம்மி மயூவிடம் சிணுங்க...

"டேய் அண்ணா... உன் கிட்ட நான் என்ன சொன்னேன்... நீ என்ன செய்ற... இன்னும் 100 தோப்புகரணம் போடுடா...", மயூ அவனைக்குத் தண்டனையைப் பரந்த மனதாக கொடுக்க ஆகாஷ் தப்பித்ததாய் பெருமூச்சிட்டான்...

( கூட்டு சேர்ந்து திட்டமா போடுறிங்க😏😏😏 வெச்சளே செல்லக்குட்டி ஆப்பு😂😂😂)

"மயூ உன்னோட அத்தான் தப்பிச்சி ஓடுறான் பாரு...",
நிம்மி அவனை மாட்டிவிட... மயூவின் பார்வை இப்பொழுது ஆகாஷிடம் திரும்பியது...

'ஐயோ சும்மாவே ஓட்டு ஓட்டுனு ஓட்டுவா... இதுல இந்த அரைச்ச மாவு வேற போட்டு கொடுக்குறாளே... இன்னிக்கு நீ செத்தனு நினைச்சிக்க வேண்டிதான்...' ஆகாஷ் மயூவைப் பாவமாக பார்க்க...

அவள் பீரிட்டு வந்த சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டாள்...

'என்ன லுக்கு...' என்பதாய்
ஒற்றைப் புருவத்தை தூக்கியவளின் தோரணையில் சொக்கியவன் அவளுக்குப் பறக்கும் முத்தத்தைப் பரிசளிக்க...

"ஹலோ காதல் பறவைகளே நானும் இங்கதான் இருக்கன் மறந்துறாதிங்க...", நிம்மி அவர்களை கேலி செய்ய...

மயூவின் கன்னம் தன்னாலே சிவந்தது...

"என்னப்பா நடக்குது இங்க...", என்ற கேள்வியோடு அவர்களுடன் இணைந்து கொண்டாள் ஜானகி...

அவளோடு தன் இரு பிள்ளைகளையும் உடன் அழைத்து வந்திருந்தாள்...

குண்டு கன்னத்தோடு மருண்ட பார்வையோடு ஜானகியின் பின்னே ஒழிந்து கொண்ட அந்த இரு சிறுமிகளைக் காணும் பொழுது சதீஸின் முகத்தில் சிறிதாய் ஒரு புன்னகை கசிந்தது...

இனி அவர்களும் அவன் வாழ்வில் ஒரு அங்கம் தானே... அவர்களைக் காணும் பொழுது சிறு வயதில் நிம்மி இருந்ததைப் போல்தான் அவனுக்கு தோன்றியது...

அன்று நிம்மிக்கு தந்தையாய் விளங்கியவன்... இன்று இரு சின்னஞ்சிறு சிட்டுக் குருவிகளுக்குத் தந்தையாகவே மாறப் போகிறான்...

"ஐ அண்ணி நீங்க இங்க... வாவ் யாரு இந்த குட்டிஸ்??? ரொம்ப கியூட்டா இருக்காங்க... ", நிம்மி குதுகலிக்க

"என்னது அண்ணியா...", மயூ சத்தமாய் அலரினாள்...

"ஏய் பேபி கூல் டவுன்... ஏன் டென்ஷன்... குட்டிஸ் பயந்துற போறாங்க...", மயூவை அதட்டியவனாய் ஜானகி சதீஸிற்கு தனிமை கொடுத்து அவர்களை விட்டு விலகி சென்றான் ஆகாஷ்...

அவன் பின்னே மயூவும் நிம்மி அகன்றுவிட அந்த வரவேற்பறையில் சதீஸ் ஜானகியோடு தனித்து விடப்பட்டான்...

ஐந்து நிமிடம் மௌனமாக கழிந்தது...

சதீஸ் அந்த இரு சிறுமிகளையுன் அருகே அழைக்க ஒருவித தயக்கத்தோடே அவனருகே சென்றனர்... அவர்களின் முன்னே மண்டியிட்டு அமர்ந்தான்...

"ஹாய் குட்டிஸ்... எப்படி இருக்கிங்க... பார்க்க லட்டு மாதிரி இருக்கிங்க டா... உங்கள இவ்வளோ நாளா உங்க மம்மி மறைச்சி வெச்சிருந்தாங்களே...", பேச்சி குழந்தைகளிடம் இருந்தாலும் பார்வை என்னமோ ஜானகியைத் தான் மெய்த்தது...

"என்னடா ஒன்னுமே பேச மாட்றிங்க... என்னைப் பார்க்க அவ்வளோ பயமாவா இருக்கு..." சதீஸ் சிறு குழந்தையாய் சிணுங்க...

அங்கிருந்த மூன்று பெண்களின் முகத்திலும் புன்னகை ஒருங்கே எட்டிப் பார்த்தது...

"ஹாய் அங்கிள்... நான் சுஜா இது என்னோட தங்கச்சி சுபா... உங்கள பார்க்க பயமாலாம் இல்லை... ", என்றாள் மூத்தவளான குழந்தை சுஜா...

"பார்ரா... இந்த சின்ன பாப்பாக்குப் பேச கூட தெரியுமா... அப்புறம் சொல்லுங்க பேபிஸ்... இந்த அங்கிள பிடிச்சிருக்கா...", என்றான் குறும்பாக...

"சுஜா, சுபாவ கூட்டிப் போய் மயூ அக்கா கூட இருடா... மம்மி கொஞ்ச நேரத்துல வந்துருவன்...", என்றவள் ஜானகி அவசரமாக...

"சரிமா...", சமத்தாய் தலையசைத்த குழந்தைகள் மயூவைத் தேடிச் சென்றனர்..

"ஹேய் இது சீட்டிங்... பேபிஸ் என்னைப் பிடிச்சிருக்குனு சொல்லிருவாங்கனு உனக்கு பயம்...", சதீஸ் ஜானகியை நெருங்க அவள் ஒவ்வொரு அடியாக பின்னே சென்றாள்...

"அட போமா நான் என்னமோ வில்லன் மாதிரியும் நீ அவன்கிட்ட மாட்டிகிட்ட ஹீரோயின் மாதிரியும்ல இருக்கு... நான் ரொம்ப நல்ல பையன் மை டியர் செல்லமே...", ஜானகி இன்னமும் அவனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லையே என்ற ஏக்கம் அவனுக்குள் இருக்கதான் செய்தது...

"ஹீரோயின் தான் பட் வில்லன் கிட்ட மாட்டுன ஹீரோயின் இல்ல... ஹீரோகிட்ட மாட்டிக்கிட்ட ஹீரோயின்...", வெட்கம் கலந்த குரலில் சொன்னவள் அவனை விட்டு விலகிச் செல்ல முயன்றாள்... அது முடியாமல் போகவே சதீஸிடமே சரணடைந்தாள் அவனின் காதலி...

இப்படியாக அந்த நாள் முடிய மறுநாள் குதுகலமாக விடிந்தது...

ஆகாஷின் வீடே விழாக் கோலம் பூண்டிருந்தது...

வர்ண மலர்களால் வீடு முழுதும் அழங்கரிக்கப் பட்டிருக்க மாயிலைத் தோரணங்கள் அதற்கு இன்னும் அழகு சேர்த்தது...

ஆகாஷ் பட்டு வேட்டி சட்டையில் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான்...

கொஞ்சம் நேரம் அவனது நடவடிக்கையை எட்டி நின்று இரசித்தவர்கள் அவனை வரிசையாக இடைமறித்து நிற்க...

ஆகாஷ் என்ன என்பதாய் அவர்கள் முகத்தை ஆராய்ந்தான்..

"டேய் இது உனக்கே நியாயமா இருக்கா... சிம்பலா செய்ய போறன் சிம்பலா செய்ய போறன்னு அமைதியா சொல்லிட்டு... பட்டு வேட்டி சட்டைல மாப்பிள கணக்கா சுத்திட்டு இருக்க...", சதீஸ் அவனைக் கொலை வெறியோடு பார்க்க...

"ஈஈஈஈஈஈ... அது ஒன்னும் இல்ல மச்சி... என்னோட பேபிக்கு நான் முத முதல்ல ஒன்னு செய்றன் அதான்...", ஆகாஷ் முகத்தில் டன் கணக்கில் அசடு வழிந்தது...

"மச்சி பட்டுனு திரும்பாத... மெதுவா உன் பின்னாடி பாரேன்...", சதீஸ் அவன் காதில் கிசுகிசுக்க... என்னவாக இருக்குமென திரும்பியவன் இமைக்க மறந்தான்...

அரக்கு வண்ண பட்டு புடவை மயூவிற்கு பாந்தமாய் பொருந்தியிருக்க...
வைரம் பதித்த நகைகள் அவள் அழகுக்கு இன்னும் அழகு சேர்க்க... மேடிட்ட வயிற்றோடு அன்ன நடையிட்டு வந்தவளின் மீது ஆகாஷ் மீண்டும் ஒரு முறை காதலில் விழுந்தான்...

என்றோ சந்தித்த பெண்தான்...

தினம் தினம் அவன் முன்னே கொஞ்சி விளையாடும் கண்கள்தான்...

ஆனால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் அவன் மனதை கவர்கிறாளே...

ஒவ்வொரு நொடியும் அவள் மீதிருந்த காதலை அதிகரிக்க செய்து ஆகாஷை மீண்டும் மீண்டும் மயூவின் காதலனாய் பிறப்பெடுக்க வைக்கிறாளே...

மயூ நேராக ஆகாஷிடம் தான் வந்தாள்... அவளை கண்சிமிட்டாமல் பார்த்தவனை கண்டு புன்னகைத்தவள்... அவன் காலில் விழ போக மயூவைத் தடுத்து தன் தோளோடு அணைத்துக் கொண்டவன்... தாய்மையில் பூரித்து போயிருந்த கன்னத்தில் கிள்ளி வைத்தான்...

அனைவரும் மயூவிற்கு வளையல் அணிவிக்க தொடங்கினர்...

சாரு அந்த இனிய தருணத்தை அழகாக தன் காமிராவில் பதிவு செய்ய அவளை இருவிழிகள் இரசனையோடு கவனித்துக் கொண்டிருந்தது...

தன் பாட்டியின் உடல் நிலை சற்று மோசமாக இருந்த காரணத்தால் அவரை அருகிலிருந்து கவனித்துக் கொண்டவள் மயூவின் வளைகாப்பு விழாவிற்காகதான் மீண்டும் ஊருக்கு வந்திருந்தாள்...

இறுதியாக ஆகாஷின் முறை வர மயூவின் பட்டுக் கன்னத்தில் சந்தனம் தடவி நெற்றியில் மென்மையாக இதழ் பதித்தான்...

"நாங்களும் இங்க தான் இருக்கோம்... உங்க ரொமன்ஸ கொஞ்சம் தனியா வெச்சிக்கிறிங்களா... ", எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கிண்டல் செய்ய தொடங்கினர்..

இவர்களின் ஆரவாரத்தில் ஆகாஷின் பார்வையும் மயூவின் பார்வையும் ஒன்றை மற்றொன்று உரசி சென்றது... ஆகாஷின் பார்வை அவள் கண்களை உடுருவி சென்றதும்... அதன் வீச்சைத் தாங்காமல் மயூ தன் தலையைத் தாழ்த்திக் கொள்ள சுற்றியிருந்தோரின் ஆரவாரம் இன்னும் அதிகரித்தது...

வளைகாப்பு சடங்கு இனிதே முடிவுற மயூவின் முகத்தில் சோர்வையும் மீறி ஒரு வெளிச்சம் குடிக்கொண்டது...

தங்க மேனியில் பட்டு சேலை சரசரக்க...

கைகளில் வண்ண வண்ண வளையல் ஒன்றோடு ஒன்று உரசி ஒலி எழுப்ப...

மயூ முழுதான தாய்மையினை உணர்ந்து கொண்டாள்....

அவளுக்கு பிடித்த இடமான தோட்டத்தில் சூரியன் தன் மேகத்துப் போர்வைக்குள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக் கொண்டிருந்ததை இரசித்து கொண்டிருந்தவளைப் பின்னாலிருந்து அணைத்து அவள் தோள்களில் முகம் புதைத்தான் ஆகாஷ்...

அணைத்திருந்தவனின் கையிலிருந்து விலகாத வண்ணம் அவன் புறம் திரும்பியவள்... ஆகாஷின் முகத்தைக் கையில் ஏந்தி அவன் கண்ணை ஆழமாக நோக்கி "தேங்க்ஸ் ஆகாஷ்...", என்றாள் உணர்ச்சிபூர்வமாக...

அந்த ஒற்றை வார்த்தையில் பல அர்த்தங்கள் பொதிந்திருந்தாலும்...
"எதுக்கு மயூ தேங்க்ஸ்...", என்றான் அவளின் கள்வன்...

"எல்லாத்துக்கும் ஆகாஷ்... முக்கியமா நீ என் மீது வெச்சிருக்குற காதலுக்காக... இதுக்குலாம் நான் தகுதியானவளா ஆகாஷ்... நீ எனக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் வேணும்டா...", என்றாள் கண்களில் கண்ணீர் சொட்ட...

சிறு புன்னகையுடன் அவள் கண்ணீரைத் துடைத்தவன்..
"மயூ... இந்த காதலுக்கு உன்னைவிட தகுதுதியான ஒருத்தி இல்லைடா... நீ என்னோட லைப்ல வந்ததுக்கு அப்புறமாதான் எனக்கு வாழ்க்கைனா என்னனே புரிஞ்சது... உன்னோட முகத்துல சந்தோஷத்த பார்க்குறப்ப எனக்கு உலகத்தையே ஜெய்ச்ச மாதிரி ஒரு பீல் வரும்... நம்ம காதல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது... ஸோ இல்லாத குட்டி மூளைய தட்டி யோசிக்காமா... என்னோட லவ்வ மட்டும் ஜோலியா பீல் பண்ணு சரியா...", அவளை இறுக்கமாக அணைத்தவன் அவள் நெற்றியில் முத்தம் வைத்தான்...

மயூவும் தன் பங்கிற்கு அவனை அணைத்து அவன் மார்பில் முகம் புதைத்தது அவனது செயலுக்குப் பதிலளிப்பது போலிருந்தது...

ஆகாஷின் அணைப்பில் தன்னை பொருத்திக் கொண்டிருந்தவளின் வயிற்றில் ஏதோ பிசைவது போலிருக்க அவள் முகத்தில் கலவரம் பரவியது...

மித்ரா குழந்தை பிறக்க இன்னும் இரண்டு வாரம் இருக்கிறது என கூறியிருந்ததால் மயூ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை...

இருப்பினும் அவள் மனதில் அச்சம் ஏற்பட ஆகாஷை அவளோடே இருக்குமாறு வற்புருத்தினாள்...

அவளின் மாற்றம் ஆகாஷிற்கு ஆச்சிரியத்தைக் கொடுத்தாலும் மறுவார்த்தையின்றி அவளது வேண்டுகோளுக்கு இணங்கினான் அந்த அன்பு காதலன்...



தாய்மை மிளிரும்...💜❤️💜
 

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 30
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN