தாயுமானவன் 31

hema4inbaa

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

தான் என்ற கர்வத்தை அழித்து என்னுள் நுழைந்த மின்னலே...
நீ என் வாழ்வின் வசந்தமாய் மாறுவது என்று...
பெண்ணே உன் மீது நான் கொண்ட நேசம்
சொல்லும் அது காதல் என்று...
எனக்கு மட்டும் நீ சொந்தம் என்று...
உன் தாயுமானவன்...

நள்ளிரவு நேரம்...

அனைவரும் நித்திராதேவியின் பிடியில் மூழ்கியிருக்க மயூ மட்டும் தூக்கம் வராமல் ஆழ்ந்த யோசனையின் பிடியில் இருந்தாள்...

ஏனோ அவளுக்குத் தூக்கம் வர மறுத்தது... அவளருகே படுத்திருந்த ஆகாஷூம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.... மெல்ல அவன் நெஞ்சில் தலை சாய்த்தவள் அவனது சட்டையை இறுக பற்றிக் கொண்டாள்...

அவளது ஸ்பரிசத்தில் கண் விழித்தவன் "என்னாச்சுடா...", என்றான் தூக்க கலக்கத்தில்...

ஒன்றும் இல்லையென தலையசைத்தவள் கண் மூடி தூங்க முயற்சித்தாள்... அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஆகாஷின் தூக்கம் காற்றில் பறக்க மயூவின் தலையைக் கோதியாவறே விழித்திருந்தான்...

மயூ கண்மூடியிருந்தாலும் அவள் தூங்காமலிருப்பது அலைப்பூரும் அவளது கண்விழியில் தெரிந்தது...

மயூவிற்கு ஏனென்று தெரியாத பயம் பீடித்துக் கொண்டது... மீண்டும் மீண்டும் வயிற்றில் ஏதோ பிசைவது போன்றதொரு உணர்வு...

சில நொடிகளில் அவளது அடி வயிற்றில் மின்னலென ஒரு வலி தீண்டிச் சென்றது... அந்த ஏசி அறையில் முகமெல்லாம் வேர்த்தது... முடியிருந்த இமைகளைப் பிரித்துப் பார்த்தவள்... அவள் முகத்திற்கு நேரே அவளையே ஆழ்ந்து நோக்கியப்படி இருந்த ஆகாஷின் முகம் தான் தெரிந்தது...

மீண்டும் அதே வலி மயூவின் உயிரையே தனியே பிரித்தெடுப்பது போலிருந்தது... இப்பொழுது மயூவின் பயம் அதிகரித்தது... தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டு வார்த்தைகள் வெளிவறாமல் சண்டித்தனம் செய்தன... 1000 வட்ஸ் மின்சாரத்தின் பிடியில் சிக்குண்டு இருப்பதைப் போலிருந்தது அவளுக்கு...

ஆகாஷின் சட்டையை அழுத்தமாக பற்றியவள் அவனது வலது கையைத் தன் வயிற்றில் அழுத்திக் கொண்டு "வலிக்குது ஆகாஷ்...", என்று ஈணஸ்வரத்தில் முனகினாள்...

மயூவிற்கு பிரசவ வலி ஏற்பட்டு விட்டது என்பதை உணர்ந்து கொண்டவனாய்

"அக்கா... அக்கா... விக்ரம்... சதீஸ்...", என்று ஆகாஷ் கூச்சலிட்டதில் அந்த வீட்டிலிருந்த அனைவரின் உறக்கமும் களைந்து ஒரு வித பதட்ட நிலை ஆக்கிரமித்தது...

கொஞ்ச கொஞ்சமாய் தூக்கத்திலிருந்து விழித்தவர்களை மயூவின் "அம்ம்ம்ம்மம்ம்ம்ம்ம்ம்மா...", என்ற பெருங்கூவலே வரவேற்றது...

மயூவின் வேதனை நிறைந்த குரலில் ஆகாஷின் கண்கள் பனித்தது... தான் ஒரு ஆண்மகன் என்பதையும் மறந்து மயூவை தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டு அழுதான்...

அவர்களது மகவு பூமியை காணும் ஆவலில் அவளது வறிற்றில் புட்பால் ஆட தொடங்கிவிட்டாள்...
மயூவினால் வலியை பெருக்க முடியாமல் போக "அம்ம்ம்ம்ம்ம்மா ஆஆஆஆஆஆ...", என்று கதறினாள்...

மயூவை பரிசோதித்த மித்ரா அவளை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டுமென்று கூறியவள் அவளது மருத்து ஊழியர்களைத் தொடர்பு கொண்டு அடுத்தடுத்து கட்டளைகளைப் பிறப்பித்தாள்...

வலியில் சுருண்டவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டவன் காரிற்கு விரைய அவனையே பதட்டதோடு மற்றவரும் பின் தொடர்ந்தனர்...

மயூவைப் பின் இருக்கையில் படுக்க வைத்தவன் அவளை விட்டு விலக எத்தனிக்க ஆகாஷின் கைகளை இறுக பற்றிக் கொண்டு இடம்வலமாக தலையசைத்து அவனைத் தன்னுடனே இருக்குமாறு இறைஞ்சியது அவளது விழிகள்...

"மச்சி நீ தங்கச்சி பக்கத்துலே இருடா...", என்று அவனது தோளைத் தட்டிக் கொடுத்த சதீஸ் அவனே காரை செலுத்தினான்...

மயூவின் கூவல் ஒவ்வொரு நொடிக்கும் அதிகரிக்க வாகனமும் சாலையில் சீறிப்பாய்ந்தது...

ஆகாஷின் கையைப் பற்றியிருந்த மயூ ஒவ்வொரு முறை வலியை உணரும் பொழுதும் அவனது கைகளில் கொடுத்த அழுத்தம் அவனது எலும்பே நொருங்கிவிடும் போலிருந்தது...

"ஆகாஷ் ரொம்ப வலிக்குதுடா...", மயூ உள்ளே போன குரலில் சொல்ல ஆகாஷ் அவளைத் தன் நெஞ்சோடு அழுத்திக் கொண்டான்...
"ஒன்னும் ஆகாதுடா.. இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்துக்கோடா... சீக்கிரம் ஹாஸ்பிட்டல் போயிடலாம்... ப்லீஸ்டி பொருத்துக்கோ... எனக்கு நீ நல்லபடியா வேணும்டி ப்லீஸ்...", அவளுக்கு தைரியம் கூறுவதாய் தனக்கும் சேர்த்தே தைரியம் கூறிக் கொண்டவன் இறைவனை மௌனமாக பிரார்த்திப்படியே வந்தான்...

மருத்துவமனையை வந்தடைந்தது முதல் மயூவை அந்த பிரசவ அறைக்குள் அழைத்து வரும் வரை ஆகாஷ் சுயநினைவின்றி இருந்தான் என்றே சொல்லலாம்...

ஒரு புறம் தன் உயிரைச் சுமக்கும் தன் உயிருக்கும் நிகரானவள்... மறுபுறம் இந்த பூமியைப் பார்க்க துடிக்கும் தன் குழந்தை... இரண்டில் எந்தவொரு உயிருக்கு ஆபத்து என்றாலும் அவனால் தாங்கிக் கொள்ள முடியாது...

அருகிலிருந்து என்னதான் அவன் ஆறுதல் வார்த்தைகளைக் கூறி அவளுக்குத் தைரியம் சொன்னாலும் பிரசவ வலியை அவள் தானே உணர்ந்து அனுபவிக்குறாள்...

மயூவின் வலிக்கு ஆகாஷின் கண்ணீர் பதில் மொழியாய் இருந்ததிலே அவனது காதலும் தாய்மையும் ஆழமாக மற்றவருக்குத் தெரிந்தது...

யாருக்கு எப்படியோ மயூவிற்கு வலியிருந்தாலும் பயம் சிறிதுமில்லை...

ஆகாஷை மீறி மரணமும் கூட அவளைத் தீண்ட முடியாது என உறுதியாக நம்பினாள் அந்த பேதைப் பெண்...

மித்ரா மயூவோடு போராடிக் கொண்டிருக்க...
"அக்கா எதாவது செய்ங்க அவ வலில துடிக்குறா பாருங்க... என்னால அவள இப்படி பார்க்க முடியலை...", மயூவின் வலியைத் தன்னால் போக்க முடியாமல் போன தன் கையாலாகா தனத்தை எண்ணி நொந்தவன் மித்ராவை அதட்டினான்...

"ஆகாஷ் சும்மா இருக்கருதுனா இங்க இரு... இல்லனா நான் உன்னை வெளிய தூரத்திருவன் பார்த்துக்கோ...", ஆகாஷை மிரட்டியவள் மயூவின் தலையை இதமாக கோதி...

"மூச்ச நல்லா இழுத்துவிடு மயூ...
அப்புறமா நல்லா புஷ் பண்ணு... டென்ஷன் ஆகாத...", என்றாள் சிறு குழந்தைக்குச் சொல்வதைப் போல்...

புரிந்ததாக தலையசைத்த மயூ கண்களால் ஆகாஷை அருகில் அழைக்க அவள் பக்கம் நகர்ந்து நின்றான்... மயூ அவனின் கையைத் தனக்கு அரணாய் எண்ணி அழுத்தப் பற்றிக் கொணடாள்...

தன்னுள் வாசம் கொணடிருக்கும் தன் பூவிதழ் பெண்ணவளை இப்பூவுலகிற்கு அறிமுகம் செய்து வைக்க தன் முழு பலத்தையும் ஒன்று திரட்டி முயன்றாள் அவள்...

"இன்னும் கொஞ்சம் வேகமா புஷ் பண்ணுடா... இன்னும் கொஞ்சம்..." என்று மித்ரா ஊக்கப்படுத்த

"புஷ் பண்ணுடி... உன்னால முடியும் புஷ் பண்ணுமா...", என்று ஆகாஷ் அவளுக்கு நம்பிக்கைக் கொடுக்க..

"ரொம்ப வலிக்குது ஆகாஷ்... என்னால முடியல...", மயூ கண்ணீரில் கதறினாள்...

மயூ தற்சமயம் அனுபவிக்கும் வலியினை வார்த்தையால் வர்ணிக்க முடியாது... தன் உயிரையே யாரோ கட்டி இழுப்பதைப் போல் ஒரு உணர்வு...

அறை மணி நேர போராட்டத்திற்கு பின் மயூவின் "அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா...", என்ற பெருங்கூவலோடு குழந்தையின் அழுகுறலும் அந்த இடத்தையே நிறைத்தது...

ஆகாஷ் உணர்ச்சிபூர்வமாக மயூவின் நெற்றியில் முத்தமிட "ஐ லவ் யூ ஆகாஷ்...", மயூவின் குரல் தேய்ந்து மறைந்தது...

மயூவின் கண்கள் மெல்ல சொருக அவள் மயக்க நிலைக்குச் சென்றாள்...

"ஆகாஷ் உனக்கு பெண் குழந்தை பிறந்துருக்காடா...", என்று குதுகலித்த மித்ரா அவனை சிறிது நேரம் வெளிய காத்திருக்க சொன்னாள்...

"அக்கா மயூக்கு...", வார்த்தைகள் சிக்கிக் கொள்ள மித்ராவின் பதிலுக்காக காத்திருந்தான் ஆகாஷ்...

"மயூவும் உன்னோட குழந்தையும் ரொம்பவே நல்லாருக்காங்க... பயப்படாம போ... இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தைய கிளின் பண்ணி உன் கையில கொடுக்குறன்...", செல்லமாய் அவன் தலையலைக் கலைத்தவள் மயூவைக் கவனிக்க சென்றாள்...

ஆகாஷ் கண்களில் கண்ணீரோடும் அதற்கு எதிர்மாறாக உதட்டில் புன்னகையோடு அந்த அறையை விட்டு வெளியேறினான்...

மயூவிற்கும் குழந்தைக்கும் என்னானது என்ற பதட்டத்தில் அந்த அறைக்கு வெளியே காத்திருந்தவர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்...

"டேய் மயூக்கு எப்படிடா இருக்கு...", விக்ரம்

"குட்டிமா எப்டி இருக்கா மச்சி...", சதீஸ்

"ஆகாஷ் பாப்பாவும் மயூவும் எப்டி இருக்காங்க...", ஜானகி

"கேர்ள் பேபியா போய் பேபி.. சீக்கிரம் சொல்லுடா...", நிம்மி

பலதரப்பட்ட கேள்விகளுக்கு ஆகாஷின் பதில் ஒற்றைப் புன்னகை மட்டுமே...

அவனது உணர்வுகளை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை... அதை வெளியே சொல்ல அவனுக்கு நா எழவில்லை...

எவ்வளவு தியாகங்கள் வலிகள்.... சின்னஞ்சிறிய பூக்குவியலைத் தன் கையில் ஏந்த தான் எத்தனை போராட்டாம்... தன்னுள் ஓர் உயிரைச் சுமந்து இன்று தனக்கு அப்பா என்ற அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறாள்...

ஆகாஷ் தன்னுள் சுழன்று கொண்டிருக்க மித்ரா குழந்தையைப் புத்தம் புதிய பூத்துவழையில் சுற்றி அவன் கையில் கொடுத்தாள்...

குண்டு கன்னமும் குட்டி முகமும் மயூவின் சாயலைக் கொண்டே பிறந்திருந்தாள் அந்த குட்டி இளவரசி...

ஆகாஷ் மயூவின் வாழ்வை இணைக்கவென்று கடவுள் கொடுத்த பெரும் பொக்கிஷமான அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனின் முகம் புன்னகையில் விரிந்தது...

எங்கே அழுத்தப் பற்றினால் அவளுக்கு வலித்து விடுமோ என பயம் கொண்டவனாய் மென்மையாக தன்னோடு அணைத்த வாக்கில் குழந்தையை கையில் ஏந்தியிருந்தான்...

குழந்தையைப் பார்க்கும் ஆவலில் விக்ரம், சதீஸ், நிம்மி, ஜானகியென அனைவரும் அவனைச் சூழ்ந்துக் கொண்டு குழந்தையைத் தங்களிடம் கொடுக்க சொன்னதற்கு...
முடியாது என்பதாய் தலையசைத்து மறுத்தவன்..
குழந்தையை தன்னுடனே வைத்துக் கொண்டான்...

(ஹீ ஹீ ஹீ மயூவ தான் யாருக்கும் விட்டுக் குடுக்க மாட்டான்னு நினைச்சா இவன் பேபிய பார்க்க கூட விட மாட்றானே அய்யோ அய்யோ இவன எந்த ஏலியன் உலகத்துல இருந்து புடிச்சிட்டு வந்தாங்கனு தெரியலையே)

"டேய் அண்ணா இவன் லொல்லு தாங்க முடியல... பேபிய பார்க்கலாம்னு பார்த்தா இவன் பேஸ்ஸ காட்டி பயம் காட்றான்... பாப்பு எவ்வளோ அழகா ரோஸ் பேபி மாதிரி செம்மையா இருக்கா... என்கிட்ட கொடுக்க சொல்லுடா...", நிம்மி அந்த சின்ன குழந்தைக்காக இவளும் ஒரு குழந்தையாக மாறி சிணுங்க...

ஆகாஷ் அவளுக்குப் பழிப்பு காட்டிவிட்டு... "கொடுக்க முடியாது போடி...", என்றான் திமிறாக...

"அண்ணா...", நிம்மி காலை தரையில் உதைத்து சிணுங்க

"சொல்லுங்க வெண்ண...", என்றான் விக்ரம் கிண்டலாக...

"போங்கடா லூசுகளா...", நிம்மி கோவமாக காலை தரையில் உதறிவிட்டு தள்ளி போய் அமர்ந்து கொண்டாள்...

அவர்களின் விளையாட்டை தன் பஞ்சி மிட்டாய் கண்களைக் கொண்டு இரசித்துக் கொண்டிருந்த குழந்தை என்ன நினைத்தாளோ திடீரென்று வீரிட்டு அழ தொடங்கினாள்...

"ங்கா...ங்கா...", என்ற குழந்தையின் அழுகை அங்கிருந்தவர்களின் மனதை நிறைத்தது...

குழந்தையின் அழுகையை அனைவரும் இரசித்துப் பார்த்துக் கொண்டிருக்க மித்ரா விக்ரமின் முதுகில் பட்டென்று ஒரு அடி வைத்தாள்...

"டேய் எருமை குழந்தை அழுது... நீங்க என்னனா அதை ரசிச்சி பார்த்துட்டு நிக்குறிங்கலா...", அவனை முறைத்தவள்...

ஆகாஷிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு மயூவிடம் சென்றாள்...

"இதுக்கும் நான் தான் மாட்டுனனா...", விக்ரம் சத்தமாக புலம்பா...

"சிக்கிட்ட தப்பவா முடியும்...", என்று கோரஸாக சத்தம் கேட்டது...

தாய்மை மிளிரும்...

Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN