யாரென்று தெரியாமல் எவறென்று புரியாமல் உன் மீது அன்பு கொண்டேன்...
கண்சிமிட்டும் நேரத்தில் மறைந்து போக நீயொன்று கனவல்ல என்னவளே...
எனதுயிரில் கலந்து என் நெஞ்சில்காதலை விதைத்தவள்...
உன் தாயுமானவன்...
மயக்கம் தெளிந்த மயூ இன்னும் களைப்பு நீங்காமல் இருக்க அனைவரும் அவளிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர்...
"மயூ பேபி செம்ம கியூட்டா உன்னை மாதிரியே இருக்காடா...", மித்ரா அவளிடம் குழந்தையைக் காண்பிக்க மயூ மெதுவாக எழுந்து அவளது குட்டி இளவரசியைத் தன் கையில் ஏந்தி கொண்டாள்... அன்றொரு நாள் கனவில் கண்ட அதே தேவதை இன்று மீண்டும் உயிர் பெற்று தன் கைகளில் தவழ்வது போலிருந்தது அவளுக்கு...
மயூவின் விரல் குழந்தையின் பால் நிற தேகத்தை வருடிக் கொண்டிருக்க... அவளது கண்களோ ஆகாஷைத் தேடி அலைந்தது...
சோர்வையும் மீறி தாய்மை அழகில் மிளிர்ந்தவளைத் தள்ளி நின்று இரசித்து கொண்டிருந்தான் ஆகாஷ்... மயூ கண்களால் இவனைத் தேட அவளை நெருங்கினான்...
மயூ அவனைப் பார்த்து புன்னகைக்க அவளது கைகளை ஆதரவாக பற்றிக் கொண்டான்...
ஆகாஷ் மயூவின் மௌன மொழியை இரசித்தவர்கள் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணியாவர்களாய்
"மயூ நீ நல்லா ரெஸ்ட் எடுடா.. நாங்க போயிட்டு நாளைக்கு வரோம்... ", என்று கூறி விடைப் பெற்றனர்...
மித்ரா ஆகாஷை ஆழமான பார்வை பார்த்து விட்டு சென்றாள்... அவள் பார்வையில் ஒளிந்திருந்த கண்டிப்பை உணர்ந்து கொண்ட ஆகாஷின் இதழ்கள் புன்னகைத்தன...
அனைவரும் செல்லும் வரை காத்திருந்தவன் மயூவின் அருகே அமர்ந்து கொண்டு அவள் நெற்றியில் தன் இதழ் தடத்தைப் பதித்தான்... மயூ பாந்தமாக அவன் தோளில் சாய்ந்து கொள்ள குழந்தையையும் அவளையும் ஒரு சேர அணைத்தவனின் முகத்தில் இனி வரும் காலங்களில் இவர்களது நிழலாய் இருந்து காப்பேன் என்ற உறுதி தெரிந்தது...
வார்த்தையில்லா மௌனம் ஆயிரம் அரத்தங்களை அவர்கள் மனதில் பொதித்தித்துச் சென்றது...
இரண்டு மாதங்களுக்குப் பிறகு...
"மயூ சீக்கிரம் வா... இப்போவே டைம் ஆச்சி... நீ இன்னும் உள்ள என்னதான் பண்ணிட்டு இருக்க... அங்க எல்லாம் நமக்கு வெய்ட் பண்றாங்னு சொன்னேன் தான...", ஆகாஷ் மயூவை விரட்டிக் கொண்டிருக்க...
அவளோ உர்ரென முகத்தை வைத்துக்கொண்டு அவனை நோக்கி வந்தாள்...
"கொஞ்சமாவது அறிவிருக்கா ஆகாஷ் உனக்கு... இன்னும் விடிய கூட இல்லை... நல்லா தூங்கிட்டு இருந்தவள எழுப்பி வெளிய போனும்னு அலும்பு பண்ணிட்டு இருக்க... நிலாக்கு பனி ஒத்துக்காதுடா... அவள வேற தூக்கிட்டு வானு சொல்ற...", மயூ அவனை முறைத்துக் கொண்டே கூறினாள்...
(நிலா தான் நம்ம ஆகாஷ் மயூவோட குட்டி இளவரசி)
"ஈஈஈஈஈஈஈஈ... அவளும் கூட வந்தாதான் மாஸ்ஸா இருக்கும்... அவ இல்லாம நாம மட்டும் போய் என்ன பண்றது... செல்லமில்லை... அவளையும் கூட்டிட்டு போலாம் டா... பாப்பா எப்பையும் வீட்ல தான இருக்கா...", அசடு வலிய ஆகாஷ் சொன்ன விதத்தில் அவன் காதை வலிக்காமல் திருகியவள் அவனோடு கிளம்ப ஆயத்தமானாள்...
ஆகாஷின் வாகனம் சாலையில் சீறிப் பாய்ந்தது...
"டேய் இப்போதாவது சொல்லுடா நாம்ம எங்க போறோம்னு... எது கேட்டலும் ஈஈஈனு இளிச்சு வெக்குற... இப்போ சொல்ல போறியா இல்லையா...", என்று மிரட்டினாள்...
"சொல்ல முடியாது போடி...", ஆகாஷ் கெத்தாக சொல்ல அவனை முறைத்தவள் தலையை மறுப்புறம் திருப்பிக் கொண்டாள்...
தன் அணைப்பின் கதகதப்பில் சுகமாக துயில் கொண்டிருந்த குழந்தையை கண்சிமிட்டாமல் பார்த்தப்படியே வந்தாள் மயூ...
ஆகாஷ் அவளை ஓர் அர்த்தம் பொதிந்த பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் சாலையில் கவனம் செலுத்தினான்...
மயூ அவன் வாழ்வில் வந்தபின் அவளால் தன்னுள் நிகழ்ந்த அனைத்து மாற்றங்களையும் அவனது மனம் அசைப்போட்டபடியே வந்தது...
மனைவியாய் தன்னுடன் வாழ்வை பகிர்ந்து கொள்ள எந்தவொரு பெண்ணும் இல்லை என்ற இறுமாப்பைத் தகர்த்து...
அவன் இதயத்தைச் சிறைப்பிடித்தவள் அல்லவாமயூ...
எப்படி மயூ அவன் வாழ்வில் வந்தாள் எப்படி அவனைக் கவர்ந்தாள்... அது ஆகாஷே அறியாத ஒன்று...
ஆனால் அவள் தான் அவனின் சரிபாதியென ஒவ்வொரு கணமும் அவனின் மனம் அழுத்த கூறியது...
சாலையில் முழு கவனத்தையும் செலுத்த முயன்று தோற்றவன் வாகனத்தை சாலை ஓரமாக நிறுத்தினான்..
"ஏய் என்னாச்சி... எதுக்கு இப்போ கார நிறுத்துன...", மயூ யோசனையாக கேட்க...
அவளின் முகத்தைத் தன் கைகளில் ஏந்தி "ஐ லவ் யூ மயூ...", என்றான் காதலாக...
மயூ ஆகாஷை 'லூசாப்பா நீ...', என்ற பாவணையில் பார்த்தாள்...
'இவன் என்ன இன்னிக்கு ஒரு மார்க்கமா இருக்கான்... காலைல என்னடானா தூங்க விடாம எழுப்பி விட்டுட்டு இம்சை பண்றான்... இவன மோகினி பிசாசு எதும் அடிச்சிருச்சா... பட் இவனே ஒரு பேய்... இவன எது அடிக்க போது... இவன் அத அடிச்சி வைக்காம இருந்தா சரிதான்...', மயூ தன் அதீத கற்பனையில் ஆகாஷை டம்மி பிஸாக்கி கொண்டிருந்தாள்...
அதை அறியாத ஆகாஷோ அவளைக் காதல் ததும்பும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்...
ஆகாஷ் முன்னே சொடுக்கியவள்.. "ஹலோ வண்டிய எடுங்க... ", என்றாள் கிண்டலாக...
'கிராதகி... கொஞ்ச நேரம் ரொமென்ஸ் பண்ண விடுறாளா...' என்று சிணுங்கியவாரே தன் பயணத்தைத் தொடர்ந்தான்..
உன்னை நான் கண்ட தினம் நினைத்ததில்லையே...
நீயே எந்தன் தாரமாய் ஆவாயென....
தாயை இழந்து போர்க்களமான
என் வாழ்வின் நீ புயலென நுழைந்தாய் பெண்ணே...
காதலை உணர என் இறும்பு
மனதில் அன்பெனும் அற்புதத்தை
விதைத்தாய் பெண்ணே...
ஆகாஷின் வாகனம் அந்த ஊர் மலைக்கோவிலைச் சென்றடைந்தது..
மயூ ஆகாஷைக் கேள்வியாய் நோக்க அவன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்..
"ஆகாஷ் இப்போ எதுக்கு கோவிலுக்கு வந்துருக்கோம்... அதுவும் இன்னும் விடியக்கூட இல்லை... இந்த நேரத்துல யாரு கோவில்ல இருப்பானு நீ இங்க கூட்டிட்டு வந்துருக்க..." என்ற மயூ அவனை முறைத்தாள்...
ஆகாஷ் அவளது கேள்விக்குச் செவி சாய்க்காதது போல் கோவிலை நோக்கி செல்ல அவனைப் பின் தொடர்ந்தவள் மீண்டும் தன் சுப்ரபாதத்தைத் தொடங்கினாள்..
"டேய் எருமை சொல்லிட்டு போடா... இப்போ எதுக்கு இங்க வந்துருக்கோம்...", மயூவின் சத்தம் கேட்டு தூக்கம் களைந்த குழந்தை சிணுங்கினாள்...
குழந்தையை அவளிடமிருந்து வாங்கியவன் தன் தோளில் போட்டு தட்டிக் கொடுக்க அவள் மீண்டும் உறங்கிப்போனாள்...
"அடியே சிவகாசி பட்டாசு.. கொஞ்ச நேரம் வாய மூடிட்டு கம்முனு வா... இல்லைனா பேசிட்டே இருக்குற அந்த வாய..." ஆகாஷ் விஷமமாய் புன்னகைக்க
"டேய் டேய் குழந்தைய வெச்சிட்டு என்னடா பேசுற...", மயூ சத்தமாய் அலற
"ஹலோ ஹலோ மேடம் வாயில பட்டாச கொளுத்தி போட்றுவன்னு சொன்னன்... உங்க கற்பனை குதிரைய தட்டி விடாம என்கூட வரிங்கலா... நான் ஒன்னும் உன்னை கடத்திட்டு போயிட மாட்டன்...", மயூவை தன் அருகே இழுந்து அவளை தன்னோடு நடத்திச் சென்றான்...
"கொய்யால.. என்னனும் சொல்ல மாட்றான்... பேசவும் விட மாட்றான்... ஹிட்லருன்றது சரியா தான் இருக்கு...", மயூ சத்தமாய் முணுமுணுக்க ஆகாஷ் அவளை முறைத்தான்...
"ஈஈஈஈ... ஒன்னும் இல்லடா... உன்னை ரொம்ப நல்லவன் வல்லவன்னு சொன்னன்..." மயூ சமாளிக்க முயன்று தோற்றாள்...
"ரொம்ப வழியுது வாடி..." என்றவன் சிரித்து விட்டான்...
ஆகாஷூம் மயூவும் மலையின் உச்சியை அடைந்தனர்... அங்கிருந்த கோவிலைக் கண்டதும் மயூ சிலையாகிப் போனாள்... மயூவின் கால்கள் நடப்பதை மறந்து நிலத்தோடு வேரூன்றி போனது...
அவளைத் தன் தோளோடு இழுத்தணைத்தவன் "குமாரி மயூரியா இருக்குற நீங்க... திருமதி ஆகாஷா மாற என்னோட வாழ்த்துகள் பேபி...", என்று அவள் காதில் கிசுகிசுக்க மயூவின் கண்கள் சந்தோஷத்தில் பனித்தது..
ஆகாஷைக் கண்ட நாள் முதல் இன்று வரை தன்னைத் திருமணம் செய்து கொள்ளும் படி அவளும் கேட்கவில்லை அவனும் அவளிடம் சொல்லவில்லை... ஆகாஷிற்கும் தனக்குமான பந்தம் திருமணத்தையும் மீறிய ஒன்றென்று அவளது உள்மனம் கூறியது... அவளும் அதையே நம்பினாள்...
அன்று அவள் கேட்கமாலையே அவனின் காதலியாக இதயத்தில் இடம் கொடுத்தவன் இன்று மனைவியாக அவன் வாழ்விலும் இடமளிக்க போகிறான்..
"மயூ உனக்கொரு குட்டி கதை சொல்லட்டா... போன வருஷம் இதே நாள்ல ஒரு கருப்பு சுடிதார் மோகினி என்னோட வாழ்க்கையில வந்தா... அவள பார்த்தப்ப எனக்கு அவதான் வாழ்க்கைல என்னோட சரிபாதியா வர போறவனு தெரியாது... அவ்வளோ ஏன் நான் லவ் பண்ணுவன்னு கூட தெரியாது... பட் இன்னிக்கு அதே நாள் அதே மோகினி பிசாசு... என்னோட வைப்பா மாற போறா... அவ எனக்கு பெண்டாட்டி மட்டும் இல்லை என்னோட குட்டி இளவரசிக்கு அம்மாவும் கூட...", ஆகாஷ் புன்னகை மாற முகத்துடன் கூறினான்...
மயூ சந்தோஷ மிகுதியில் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்... "ஏய் ஏய் பாப்பா இருக்காடி...", என்றான் அவன்..
"சாரி...", என்ற ஒற்றை வார்த்தையில் அவனிடமிருந்து விலகியவள் அவன் கன்னத்தில் அழுத்த முத்தமிட்டாள்...
அவளின் செயலில் அவன் முகத்தில் புன்னகை விரிய "வா போலாம்...", என்று மயூவின் கைப்பற்றி அழைத்துச் சென்றான்...
அங்கு மலைக்கோவிலில் மாவிலை தோரணங்கள் ஒன்றோடு ஒன்று உரசி விளையாட மங்கள வாத்தியங்கள் முழங்க கால்யாண கலையில் ஜொலித்தது..
ஆகாஷ் மயூவைக் கண்டதும் அவர்களை நெருங்கிய மித்ராவும் ஜானகியும் "கால்யாணத்துக்கு பொண்ணும் மாப்பிளையும் லேட்டா வர கூத்து இங்க மட்டும்தான் நடக்கும்டா... நீ மட்டும் யான்டா எதை செஞ்சாலும் இப்படி எங்க பீபிய ஏத்தி விடற மாதிரியே செய்ற...", மித்ரா அவனை முறைக்க...
"மித்துக்கா நான் இன்னிக்கு கல்யாண மாப்ள... ஸோ மரியாத மரியாத...", என்றான் தோரணையாக...
"அப்படியா மாப்ள சார்... வாங்க மாப்ள சார்... வந்து கல்யாணத்துக்கு ரெடியாகுங்க மாப்ள சார்...", என்றாள் பௌவியமாக...
"அது...", என்றவனின் தலையில் வலிக்குமாறு கொட்டை பரிசாக கொடுத்தவள் குழந்தையை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு மயூவையும் தன்னோடு அழைத்துச் சென்றாள்...
மங்கள வாத்தியங்கள் காற்றில் மிதக்க அன்பு இல்லத்தில் உள்ளவர்கள் அன்பான மனதோடு மயூவையும் ஆகாஷையும் தங்கள் குழந்தைகளாகவே பாவித்து வருகை புரிந்திருக்க...
ஐயர் கூறும் மந்திரங்களை உள்கொணர்ந்து மிக சிரத்தையாக உச்சரித்துக் கொண்டிருந்தனர் ஆகாஷூம் மயூவும்...
குனிந்த தலை நிமிராமல் வேதங்களை வெகு முனைப்பாக சொல்லிக் கொண்டிருந்தவளைச் சீண்டும் வீதமாக மயூவின் இடையை கிள்ளி வைத்தான் ஆகாஷ்...
மயூ நன்றாக நிமிர்ந்து அவனை முறைக்க அவளைப் பார்த்து கண்சிமிட்டினான்...
அவர்களின் கவனத்தைக் கட்டி இழுப்பதைப் போல ஐயர் "கொட்டிமேளம் கொட்டிமேளம்...", என்று கூற இருவர் முகத்தில் புன்னகையின் சாயல் வந்து போனது...
மேளங்கள் ஒழிக்க சுற்றியிருந்தோரின் நல்லாசிகளைப் பெற்றுக் கொண்டு மயூவின் சங்கு கழுத்தில் மங்கள நாணைப் பூட்டினான்...
நாத்தனர் முடிச்சிட வந்த மித்ராவிடம் மறுப்பாய் தலையசைத்தவன்.. தானே மூன்று முடிச்சிட்டு மயூவைத் தன்னில் சரிபாதியாக மாற்றிக் கொண்டான்...
ஆகாஷ் மயூவின் வகிட்டில் குங்குமமிட்டதும் மயூவின் இரண்டு சொட்டு கண்ணீர் அவன் கைகளைச் சுட்டது...
ஆகாஷ் மயூவின் விரல்களைப் பிடித்து அக்னியை வலம் வருகையில் உலகையே வென்ற தித்திப்பில் மிதந்தான்...
மயூவோ இன்று தன்னோடு பிணைக்கப்பட்ட அவனது விரல்கள் இனி ஏழேழு ஜென்மத்திற்கும் தன்னோடு பிணைக்கப்பட வேண்டுமென்று மனதார வேண்டிக் கொண்டாள்...
அதன்பின் மேலும் பல சடங்குகள் நடந்து ஆகாஷ் மயூவின் திருமணம் இனிதே நடந்தேறியது...
தாய்மை மிளிரும்...

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 32
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.