கண்ணில் பதிந்து கருத்தில் பதியாததா காதல்...
நெஞ்சில் புதைந்து நிஜத்தில்
கை சேராததா காதல்...
இரவில் தோன்றி நிழலில் மறைவதா காதல்...
உன் தாயுமானவன்...
ஆகாஷ் மயூவின் திருமணம் எந்தவித தடையுமின்றி இனிதே நடந்து முடிந்த சந்தோஷத்தில் அனைவரும் திளைத்திருக்க மகிழ்ச்சியின் மறு உருவமாய் இருக்க வேண்டிய மயூவோ ஆகாஷின் மீது கடுங்கோபத்திலிருந்தாள்...
விக்கி-மித்ரா... சதீஸ்-ஜானகி... நிம்மி, சாரு என அனைவரும் ஆகாஷின் வீட்டில் ஒன்று கூடியிருந்தனர்...
ஆகாஷ் மயூவை வீடு முழுதும் தேடி அவளைக் காணாமல் போக மித்ராவிடம் அவள் எங்கேயென வினவினான்..
"அக்கா மயூவ பார்த்தியா... நானும் அவள தேடிட்டு இருக்கன் ஆளையே காணோம்...", என்றான் கேள்வியாக...
"மயூ இங்கதான் இருந்தா... உன்னோடையும் மயூவோடையும் லவ் ஸ்தோரிய பேசிட்டே இருந்தோம்... அப்புறம் நிலா பாப்பாவ பத்தி சொன்னன்... உனக்கும் மயூக்கும் நிலா மகள வந்தது கடவுள் போட்ட முடிச்சினு பேசிட்டு இருந்தோம்... அப்பதான் ஜானகி மயூக்கு ஸ்பேர்ம் டோனேட் பண்ணது நீ தான்... மயூ உன்கிட்ட வரனும்னு விதி இருந்துருக்குனு சொல்லிட்டே இருந்தோம்... அவ யார்கிட்டயும் பேசாம நிலா பாப்பாவ தூக்கிட்டு போயிட்டா... யான்டா...", மித்ரா அப்பாவியாக கேட்க...
ஆகாஷ் அவளைக் கொலை வெறியோடு நோக்கினான்...
"மித்து அக்கா நீ ஒன்னொன்னையும் தெரிஞ்சிதான் செய்யுறியா... இல்ல தெரியாம செய்யுறியானு தெரியல... உன்கிட்ட நான் என்ன சொன்னன்... மயூவ நான் மேரேஜ் பண்ணிட்டதுக்கு அப்புறமா தான் அவகிட்ட அந்த ஸ்பேர்ம் டோனேஷன் பத்தி சொல்லுவன்னு சொன்னன் தான... இப்போ நீ எதுக்கு ரேடியோ பொட்டி மாதிரி இத அவகிட்ட சொன்ன...", மித்ராவையும் ஜானகியையும் ஒரு சேர முறைத்தவன் மயூவைத் தேடிச் சென்றான்...
அவள் எப்படியும் தோட்டத்தில்தான் இருப்பாளென கணித்தவன் அங்கு சென்றான்...
அங்கு அவன் கண்ட காட்சி ஆகாஷின் மனதைப் பிழிந்தது...
ஆதரவைத் தேடும் சிறுக்குழந்தைப் போல் ஒரு கையில் நிலாவை இறுகப் பற்றியவள் மறு கையில் ரோஜா மலரின் ஒவ்வொரு இதழ்களையும் பிய்த்து எறிந்து கொண்டிருந்தாள்...
ஆகாஷ் பூனை நடையோடு மயூவை நெருங்கி அவளருகே அமர்ந்து கொண்டான்...
தன்னருகே நிழலாடுவது தெரிந்தாலும் அவனைத் திரும்பி பார்க்காமல் தன் வேலையை மிகுந்த சிறத்தையோடு செய்து கொண்டிருந்தாள்...
ஆகாஷ் நிலாவைத் தூக்க முயல அவன் கையைத் தட்டி விட்டவள்
சற்று தள்ளி அமர்ந்தாள்...
'ஓஓஓ... மேடம் கோவமா இருக்காங்க போல...', என்று நினைத்தவன்...
"யாரோ இங்க ரொம்ப கோவமா இருக்காங்க போல குட்டிமா... அது யாருனு உனக்கு தெரியுமா நிலா பேபி...", குழந்தையை தன் பேச்சில் இழுத்தான்...
அவன் என்ன பேசுகிறானென புரியாமல் விழித்த குழந்தை தன் பொக்கை வாயைக் கொண்டு சிரித்து வைத்தாள்...
"பொய் சொல்லி ஏமாத்துனவங்கலாம் என்கிட்ட பேச வேணாம்னு சொல்லு பேபி... நான் யார் கூடயும் பேச மாட்டன்... இங்கிருந்து போவ சொல்லு...", மயூ கோபமாக பதிலளிக்க...
"ஆஹான்... நான் அப்படி என்ன பொய் சொல்லி உன்னோட மம்மிய ஏமாத்திட்டன்னு கேளு பேபி...", ஆகாஷ் அவளுக்கு தான் சளைத்தவன் அல்ல என்று உறுதி செய்தான்...
"பொய் தான் எல்லாம் பொய் தான்...", மயூ கோவத்தில் வார்த்தைகளை விட...
அவளை வலுக்கட்டாயமாக தன்புறம் திருப்பியவன் "எங்க என்னைப் பார்த்து சொல்லு... எல்லாம் பொய்னா நான் உன் மேல வெச்சிருக்குற காதலும் பொய்யா சொல்லு...", ஆகாஷ் ஆவேசமாக கேட்க...
அவனின் சத்தம் கேட்டு திடுகிட்ட போய் அழ தொடங்கினாள்... குழந்தையோடு மயூவும் சேர்ந்து அழ ஆகாஷின் பாடுதான் திண்டாட்டமாய் போனது...
(ரெண்டு பேபிஸ் கிட்ட சிக்கிட்ட நீ தப்பிக்கவா முடியும் சின்ன பேபிக்கு மில்க் அன்ட் பெரிய பேபிக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி கொடு)
"ஏய் மயூ அழறது மொதல்ல நிறுத்து... நீ அழுவறது பார்த்து பாப்பாவும் அழற பாரு... இப்ப என்ன சொல்லிட்டனு நீ டேம்ம திறக்குற...", ஆகாஷ் நக்கலாய் கேட்க...
"போடா எனக்கு ஒன்னும் வேணாம்... உனக்கு பாப்பா மேல மட்டும்தான் பாசம் இருக்கு... நிலாக்காக தான நீ என்னை கல்யாணம் பண்ணிட்ட... சப்போஸ் நிலா உன்னோட குழந்தையா இல்லாம இருந்துருந்தா நீ என்னைக் கல்யாணம் பண்ணிருக்க மாட்ட...", மயூ தன் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக ஆகாஷ் விட்ட ஒற்றை அறையில் அவளது பேச்சு தடைப்பட்டது...
"இதுக்கு மேல ஒரு வார்த்த பேசுனா கொன்னு புதச்சிடுவன்டி... எனக்கு பேபிதான் வேணும் நீ வேணானு சொல்றல... சரி நான் உன்னை டிவோர்ஸ் பண்ணிடுறன்... உன் வாழ்க்கைய பாத்துட்டு போயிட்டே இரு...", கோவத்தில் வார்த்தைகள் தடித்தது...
அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போய் நின்றவளிடமிருந்து குழந்தையை வெடுக்கென்று பிடுங்கியவன் அங்கிருந்து அகன்று சென்றான்...
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவளின் அழுகை வெடிக்க மடங்கி அமர்ந்து அழுது தீர்த்தாள்...
நிலாவோடு வீட்டினுள் நுழைந்தவன் குழந்தையை மித்ராவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் மயூவைப் பார்க்க போக...
"டேய் என்னாச்சிடா... மயூவ தேடிட்டு வரன்னு போனவன் பேபிய தூக்கிட்டு வந்துருக்க... மயூ எங்கடா???", மித்ரா அவனிடம் குழப்பமாக கேட்க
மித்ராவை முறைத்தவன் "அக்கானு பார்க்குறன் இல்லனா உன்னை என்ன பண்ணுவன்னே தெரியாது... பிள்ளையையும் கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்றியா நீ... மித்துக்கா செம்ம காண்டுல இருக்கன் வேணா போயிடு...", என்றவன் திரும்பியும் பாராது மயூவை சமாதானம் செய்ய சென்றான்...
அங்கு மயூ இன்னும் அழுது கொண்டிருந்தாள்... அவளை தன் அணைப்பிற்கு கொண்டு வந்தவன்
"ஏய் என்ன நீ மட்டும் தனியா ஜாலியா அழுதுட்டு இருக்க... என்னனு சொன்னா நானும் உன்கூட சேர்ந்து அழுவன்ல...", ஆகாஷ் மயூவை கிண்டல் செய்ய அவனை முறைத்துப் பார்த்தவள் அவன் அணைப்பிலிருந்து விலக முயன்றாள்...
"ஏய் லூசு கம்முனு நான் சொல்றத கேளு... இல்லனா உண்மையா உன்னை டிவோர்ஸ் பண்ணிட்டு உள்ளூர் அழகிய கல்யாணம் பண்ணிக்குவன்...", என்றான்
"யாரும் ஒன்னும் சொல்ல வேண்டாம்... யாருக்கும் எதும் தெரிய வேண்டாம்... என் மேல யாருக்கும் பாசமே இல்லை... நீ ஒன்னும் என்கிட்ட பேச வேணாம் போ... ஐ ஹேட் யூ... ஐ ரியலி ஹேட் யூ...", மயூ அவனிடம் மீண்டும் மீண்டும் சிறுகுழந்தையென சண்டையிட்டாள்... அதை காண அவனுக்கு சிரிப்பாக இருந்தது...
'இந்த லூச சமாளிக்குறதுக்கு பதிலா நிலா பாப்பாவையே சமாளிச்சிடலாம் போல... என்னமா அடம் பண்றா... லவ் இல்லாமதான் இவ பின்னாடியே பூனைக்குட்டி மாதிரி சுத்திட்டு இருக்கனா... ஒரு செகண்ட்ல என்னோட லவ்வ சந்தேக பட்டுடாளே... பட் தப்பு என் மேலயும் இருக்கு... இவகிட்ட மொதல்லே இதப்பத்தி சொல்லிருக்கனும்... சரி சமாளிப்போம்...', என்று நினைத்தவனாய் மயூவைப் பார்த்தவனுக்கு முகத்தில் மேலும் புன்னகை விரிந்தது...
அவளின் உதடு இவனைப் பிடிக்கவில்லை என்றாலும் மயூவின் கைகள் இன்னமும் அவனின் கழுத்தை சுற்றி வளைத்திருந்தது... முகத்தை அவனின் நெஞ்சில் அழுத்தப் புதைத்திருந்தாள்...
"மயூ டார்லிங்... ஒருத்தவங்க என்னை பிடிக்கலனு சொன்னாங்க... பட் இப்ப அவங்கதான் என்னைக் கட்டி பிடிச்சிட்டு இருக்காங்க...", என்றான் நக்கலாக...
"போடா எரும...", என்றவள் மீண்டும் அழ தொடங்கினாள்..
"மயூ ப்லீஸ் அழத... உனக்கு என்னைப் பத்தி தெரியாதா??? சரி ஒத்துக்குறன் உனக்கு ஸ்பெர்ம் டோனேட் பண்ணது நான்தான்னு உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கனும்... சொல்லிருந்தா என்ன பண்ணிருப்ப... எனக்கு உன் மேல லவ் இல்ல பேபிக்காக தான் உன்னைப் பார்த்துக்குறன்னு சொல்லிருப்ப... நான் உனக்கு லவ்வரா ஹஸ்பன்டா இருக்கனும்னு நினைக்கலடி... உனக்கு தாயுமானவனா இருக்கனும்னு நினைச்சன்... நீ எனக்கு மட்டும் தான்... உன்னைச் சேர்ந்த எல்லாம் என்னோட சொந்தம்... என்னைச் சேர்ந்த எல்லாமே உன்னோட சொந்தம்... நிலா நமக்கு கடவுள் குடுத்த பரிசு... சப்போஸ் நிலா இல்லாம இருந்து உனக்கு அன்னிக்கு அந்த சம்பவம் நடக்காம போயிருந்தா உன்னை துரத்தி துரத்தி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருப்பன்... இப்போ கூட பிரச்சனையே இல்ல... கல்யாணம் பண்ணிட்டு உன்னை துரத்தி துரத்தி லவ் பண்றன் சரியா??? என் வாழ்க்கைல நீ வேற நிலா வேற கிடையாது... நிலா நம்ம லைப்ல குட்டி இளவரசினா அவள எனக்கு குடுத்த நீ என்னோட இதயராணி... இல்லாத மூளைய வெச்சி யோசிக்குறன்னு சொல்லிட்டு உளறி வெக்காத சரியா???", என்றான் கேள்வியாக..
மயூ தலை தானாக மேலும் கீழும் அசைந்தது...
"அப்படியே சோலக்காட்டு பொம்மை மாதிரி இருக்க... ஓன்ஸ் மோர் செய் பேபி...", என்று அவளை கடுப்பாக்கினான்...
"போடா பிசாசு...", மயூ கோபம் கொண்டவளாய் முகத்தை திருப்பி கொண்டாள்...
"பார்ரா... என்னோட பேபிக்கு கோவம் கூட வருது..." ஆகாஷ் அவளை மீண்டும் வம்புக்கு இழுத்தான்...
"ஆகாஷ் வேணா சொல்லிட்டன்... அப்புறம் என்ன பண்ணுவன்னு எனக்கே தெரியாது...", மயூ அவனை எச்சரித்தாள்...
"தெரியாத விஷயத்த யான் பேபி செய்ய முயற்சி பண்ற... விட்று செல்லம்... அப்புறம் எடக்கு மொடக்கா எதாவது ஆகிட போது...", ஆகாஷ் விடாமல் அவளை கேலி செய்ய...
"நீயும் ரொம்ப மோசம் ஆகாஷ்... போ உன் பேச்சி கா... நான் போறன்..." என்றவள் அவனிடமிருந்து திமிறி விலகினாள்...
மயூ திரும்பி பார்க்க அங்கு மொத்த குடும்பமும் இவர்களது விளையாட்டை இரசித்தப்படி நின்றிருந்தனர்...
அவர்களைப் பார்த்ததும் மயூவை வெக்கம் சூழ மீண்டும் ஆகாஷின் நெஞ்சில் புதைந்து கொண்டாள்....
அவளது அச்செயலில் அவர்களின் புன்னகை விரிய... "ஓஹோ..." என்று சத்தமாக கூச்சலிட்டனர்...
திமிறி விலகியவள் மீண்டும் கைச்சேர்ந்த ஆச்சிரியத்தில் இருந்தவன் இந்த கூச்சலில் தெளிந்தவனாய் அவர்களை முறைத்துப் பார்க்க...
மித்ராவும் ஜானகியும் திருதிருவென விழித்தனர்... நான் இல்லை இவதான் என்பதாய் இருவரும் மாறி மாறி அடுத்தவரைச் சுட்டிக் காட்ட... தொலைந்துபோன சந்தோஷம் அனைவரின் இதயத்தில சத்தமின்றி நுழைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்தது...
நாட்கள் அதன் போக்கில் நகர தொடங்கியது... ஆகாஷ் மயூவின் வாழ்வில் மகிழ்ச்சியின் சாரல் மட்டுமே நிலையாய் இருந்தது...
அன்று அனைவரும் சதீஸின் இல்லத்தில் ஒன்று கூடியிருந்தனர்...
சதீஸ் இன்னும் ஒரு மாதத்தில் ஜானகியைத் திருமணம் செய்து கொள்ள போவதாய் கூறினான்...
"யான் மச்சி இன்னும் ஓன் மந்த் வெயிட் பண்ணனும்... இப்போவே கல்யாணத்த வெச்சிக்க வேண்டிதானா???", ஆகாஷ் யோசனையாக வினவ...
"அது ஒன்னும் இல்லடா... கல்யாணத்துக்கு முன்னாடி குழந்தைக கூட கொஞ்ச நாள் நல்லா பழகிக்கலாம்னு பார்க்குறன்... நிம்மிக்கு மாப்ள பார்க்கலாம்னு பார்த்தா அந்த லூசு நீ மொதல்ல கல்யாணம் பண்ணிட்டு போ... நான் லைப்ப என்ஜோய் பண்ண போறன்னு சொல்றா... இவ்வளோ சீக்கிரம் என்னை யார் தலைலயோ கட்ட பிளன் போடுறியா நீ அப்டினு கேட்குற...", என்றான் விளக்கமாக...
"சரிதான் இந்த லூசுகிட்ட மாட்டிட்டு எந்த அப்பாவி ஜீவன் கஷ்டப்பட போறானோ... அப்படி இப்படினு நம்ம கேங்ல நீயும் செட்டிலாக போற... வெல்கம் டூ வாழ்க்கை பூரா வருத்தப்படும் சங்கம்...", என்றான் விக்ரம் கேலியாக... இதைக் கேட்டு மற்றவர்கள் சிரிக்க மித்ராவோ அவனை முறைத்து வைத்தாள்...
"இங்க யாரும் வாழ்க்கை பூரா வருத்தப்பட்டுட்டு வாழ வேணா... இப்போவே போய்க்க சொல்லு மயூ...", என்றாள் மித்ரா சிரிக்காமல்...
"யாரு இவனாவது... விட்டுட்டு போறதாவது... பையன் ஆகாஷ் கிட்ட என்னமா சண்டைக்கு நின்னான்... மித்ராவ இவன் கல்யாணம் பண்ணிக்கிட்டத ஆகாஷ்ட சொல்லும் போது...", என்ற சதீஸைப் பார்த்து அசடு வழிந்தான் விக்ரம்...
"டேய் மச்சி விடுடா... அதலாம் யான்டா பப்ளிக்ல சொல்ற... நம்ம கெத்து என்னாவறது...", என்றான் விக்ரம் அவசரமாக...
"சதீஸ் அண்ணா அதலாம் போங் ஆட்டம்... இந்த தடியன் கிட்ட அவன் கல்யாணம் விஷயம் எப்படி ஆகாஷூக்கு உங்களுக்கு எல்லாம் தெரியும்னு கேட்டா உன் அண்ணன்கிட்டயே கேட்டுக்கோனு சொல்றான்... நீங்களும் இப்படி சொல்றிங்க... ப்லீஸ் ப்லீஸ்
சொல்லுங்கணா...", என்று குதுகலித்தாள் மயூ...
"அது என்ன கதனா... எல்லாம் அப்படியே மேலப் பாருங்க...", சதீஸ்
"என்னத்துக்கு மேல ஆகாயத்துல ஆயா வட சுட்டுட்டு இருக்கா...", என்று அதிரடியாக வீட்டினுள் நுழைந்தாள் நிம்மி...
"ஏய் நிம்மி வா வா... உன்னதான் காணுமேனு தேடுனன்... நம்ம வீட்டு வீரன் சூரன் அவனோட திருட்டு கல்யாணத்த எப்படி ஆகாஷ்ட சொன்னான்னு கேட்டுட்டு இருக்கோம்...", என்ற மயூ நிம்மியை தன் அருகே அமர்த்திக் கொண்டாள்...
"இதுல என்ன பெரிய மாயாஜாலம் இருக்க போது மயூ... கண்டிப்பா இந்த தடியன் அந்த தடியன்கிட்ட அடி வாங்கிருப்பான்...", என்றாள் நிம்மி அலட்சியமாக...
"ஏய் யாரு தடியன்...", ஆகாஷ் விக்ரமின் குரல் ஒருங்கே கேட்டது...
இவர்களின் ஒருமித்த குரலில் அங்கு சிரிப்பொழி வெடித்து கிளம்பியது...
"சரி சரி சீக்கிரம் சொல்லுங்க பா... அன்னிக்கு அப்படி என்னதான் நடந்திச்சி...", என்றாள் மித்ரா ஆர்வமாக...
"சொல்றன் சொல்றன்...", என்றவனது ஞாபக அலைகள் அன்றைய நாளைப் பின்னோக்கி சென்றது...
மித்ராவை ஆகாஷின் அக்காவாக அந்த வீட்டில் கண்டதும் விக்ரமிற்கு மனம் நிலைக் கொள்ளவில்லை... அவளைத் தனது மனைவியாக தன்னுடனே வைத்துக் கொள்ள வேண்டுமென்ற உத்வேகம் பெருகியது...
ஆனால் இந்த உண்மையை வெளிக்கூறுவதில் ஒரு சிக்கலுமல்லவா இருக்கிறது...
மயூவின் எதிர்கால வாழ்க்கை..
என்னதான் ஆகாஷ் மயூவின் மீது உயிராய் இருப்பதை அவன் கண்கூடாக பார்த்திருந்தாலும் மித்ராவின் வாழ்வில் இவனது குறுக்கீடும் இவர்களது அதிரடியான திருமணமும் ஆகாஷிற்கு தெரிந்தால் என்னாகும் என்று அவனால் கணிக்க முடியவில்லை...
விக்ரம் முதலில் தன்னுடைய மனக்கலக்கத்தை சதீஸிடம் தான் கூறினான்... வயதில் மூத்தவனாய் இவனது பிரச்சனைக்கு நல்ல தீர்வினைக் கொடுப்பான் என்று எண்ணினான்...
விஷயம் தெரிந்த சதீஸ் பார்த்த ஒற்றைப் பார்வையில் விக்ரமின் தலை தன்னாலே கவிழ்ந்தது...
"இப்ப தலை குனிஞ்சி என்னடா பண்றது... எல்லாம் செய்றதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்... அவன் ஏற்கனவே அக்காக்கு எதாவது ஒன்னுனா ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்... இதுல இது தெரிஞ்சிச்சினா உனக்கு டன்டனக்கா தான்... பையன் ருத்ரதாண்டவம் ஆடுவான்... நல்லா வாங்கி கட்டிக்கோ...", என்றவன் விக்ரமை ஆகாஷின் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றான்...
ஆகாஷ் அவனது அலுவலகத்தில் கோப்புகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான்... அங்கு சுற்றி இங்கு சுற்றி அவனது நினைவு மயூவைத்தான் சுற்றிக் கொண்டிருந்தது...
அப்பொழுது அவனைக் காண வந்த சதீஸையும் விக்ரமையும் கண்டு யோசனையாக நோக்கினான்...
விக்ரம் சதீஸோடு வந்துவிட்டாலும் அந்த விஷயத்தை எப்படி ஆகாஷிடம் சொல்வதென்று தெரியாமல் தவித்தான்....வார்த்தைகள் வெளிவராமல் சண்டித்தனம் செய்ய, அவனைப் பார்த்து மர்ம புன்னகையை உதிர்த்தவன்...
"சொல்லுங்க விக்ரம் எப்போ உங்களோட வைப்ப உங்க வீட்டுக்கு முறைப்படி கூட்டி போக போறிங்க...", என்று அமைதியாக வினவி விக்ரம் சதீஸினுள் பூகம்பத்தை கிளப்பினான் ஆகாஷ்...
ஆகாஷை விழி விரித்து பார்த்தவன் "ஆகாஷ் இது... உனக்கு... எப்படி தெரியும்...", விக்ரமின் வார்த்தை தந்தியடித்தது...
"ஸோ சிம்பல்... உங்க தங்கச்சிதான் என்கிட்ட சொன்னா...", அவன் அசராமல் கூறி அவர்களின் பீபியை ஏத்தினான்...
"அடேய் என்னடா நடக்குது இங்க... உன்கிட்ட உண்மைய எப்படி சொல்றதுனு தெரியாம நாங்க முழிச்சிட்டு இருந்தா... நீ என்னமோ ஐஸ் கிரீம் குடுத்த மாதிரி இவ்வளோ கூல்லா இந்த விஷயத்த சொல்ற... மயூவ லவ் பண்ண ஆரம்பிச்சோன உனக்கு லூசு எதாச்சும் புடிச்சிடுச்சா... விஷயம் தெரிஞ்சி சாமி ஆடுவன்னு பார்த்தா எப்படிடா இப்படி... அன்ட் மயூக்கு எப்படிடா இத பத்தி தெரியும்... என்னை வெச்சி நீ காமெடி கிமிடி பண்ணலையே...", சதீஸ் பாவமாக கேட்க..
அவனது பாவணையில் ஆகாஷ் மட்டுமின்றி அதுவரை தன்னுள் மூழ்கியிருந்த விக்ரம் கூட சிரிக்க தொடங்கினான்...
"அடப்பாவிகளா... மாமனும் மச்சானும் ஒன்னு சேர்ந்து என்னை இப்படி காமெடி பீஸ் ஆக்கிட்டிங்களே...", சதீஸ் மீண்டும் அலற... ஆகாஷ் தன்னுடன் வைத்திருந்த மித்ராவின் டைரியை விக்ரமிடம் கொடுத்தான்...
"இது மித்து அக்காவோட டைரி... யான் அவங்க மனசுனு கூட சொல்லலாம் இதுல உன்னைப் பத்திதான் இருக்கு... உன்கிட்ட அவங்க எப்படி பீல் பண்ணாங்க... நீ அவங்க லைப்ல யாரு... எவ்வளோ முக்கியம்னு இதுல இருக்கு... பட் உன் மேல செம்ம காண்டுல இருக்காங்க... ஸோ இனி நீயாச்சி உன்னோட வைப் ஆச்சி...", ஆகாஷ் விக்ரமைப் பார்த்து கண்ணடித்தான்...
"ஆகாஷ் இந்த பிஞ்சி மனசு ஒரு நாளைக்கு ஒரு ஷோக்கிங் நியூஸதான் தாங்கும்... இப்படி ஆளாளுக்கு என்னை வெச்சி செய்றிங்களே... என்னைப் பார்த்தா பாவமாவே இல்லையாடா... மித்ரா டைரிய படிச்சி அவ லவ் பத்தி தெரிஞ்சிட்ட... பட் விக்ரம் தான் அவளோட புருஷன்னு உனக்கு எப்படிடா தெரியும்...", என்றான் ஆகாஷையே ஒரு மார்க்கமாக பார்த்தப்படி...
"அதுவா... ரெண்டு லவ் பேர்ட்ஸ் சுத்தி யாரு இருக்கானு கூட பார்க்காம ரொமென்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க... பட் வாட் டு டூ... நான் அத பார்த்துட்டனே...", என்றான் விளையாட்டாக...
அதன்பின் வந்த நாட்களில் விக்ரம் மித்ராவிற்கு இடையே இருந்த இடைவெளியும் அவர்களது செயல்கள் யாவும் தெரிந்தாலும் தெரியாதது போலவே காட்டிக் கொண்டனர்...
"அடச்சீ... நான் கூட உன்னோட கதைல அடிதடி... இரத்தம்... அப்படி இப்படினு திரில்லா இருக்கும்னு நினச்சன்... இப்படி மொக்கையா இருக்கே...", நிம்மி ராகமாக உச்சி கொட்ட விக்ரம் அவளை அடிக்க துரத்தினான்...
"ஓ மை கடவுளே... இந்த மனிஷ குரங்கு அடிக்க துரத்துது... என்னை யாராச்சும் காப்பாத்துங்களேன்... டேய் தடியா தங்கச்சி பாவம்டா விட்று... மயூ டார்லிங்... ஜானு அண்ணி... மித்து அண்ணி... யாராச்சும் காப்பாத்துங்க பா... நான் பாவம் சின்ன கொழந்த... நிலா பாப்பா நீயாச்சும் காப்பாத்து...", நிம்மி கத்திக் கொண்டே ஓட விக்ரம் அவளை விடாமல் துரத்தினான்...
சோகங்களைச் சுமந்த உள்ளங்கள் யாவும் சந்தோஷத்தில் நிறைந்திருக்க அந்த சந்தோஷம் என்றும் நிலைக்க வாழ்த்தி விடைபெறுவோம்...
தாய்மை மிளிர்ந்தது...
முற்றும்...❤❤

Author: hema4inbaa
Article Title: தாயுமானவன் 33
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.