துளி 11

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காற்றில் இலைகள் பறந்தபிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்டபிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை


சாரி என்று ஆரம்பித்திருந்த அந்த பக்கத்தை கண்டவனுக்கு அன்றைய நாளின் நியாபகம் வந்து விரக்தியை ஏற்படுத்தியது... அப்படியொரு நாள் வராமல் இருந்திருந்தால் இன்று ஸ்ரவ்யாவிற்கு இப்படியொரு நிலை வந்திருக்காது என்று அவன் மனம் கலங்கி நின்றது...
அன்றைய நாள் தன்னை விட அவளே உச்சகட்ட வேதனையில் உழன்றிருப்பாள் என்று புரிந்தவனுக்கு தானும் அதற்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து அவளை வதைத்துவிட்டோமே என்று வருந்தத்துடன் அந்த பக்கத்தை வாசிக்கத்தொடங்கினான்....

“சாரி.. அப்பு... சாரி கேட்குற தகுதியை கூட நான் இழந்துட்டேன்... ஆனா உன்னை இழப்பதற்கு பதிலாக இந்த தகுதியை இழப்பது எனக்கு பெரிய விஷயமாக தெரியலை... நான் உன்னை போனு சொன்னப்போ கூட நீ போகல... அந்த ஒரு சந்தோஷமே என் வாழ்க்கை முழுதுக்கும் போதும்.... ஏன்டா என்னை இவ்வளவு காதலிச்ச?? நான் சபிக்கப்பட்ட பிறவிடா... என்கூட எதுவுமே நிரந்தரமாக இருந்ததில்லை... நான் விரும்புகின்ற எதுவும் எனக்கு கிடைத்ததில்லை... உன்னை தவிர... அது கூட கடவுளுக்கு பொறுக்கவில்லை.. அதான் என்னை பெத்தவரு மூலமாக நீ எனக்கு கிடைக்கவிடாமல் பண்ணிட்டாரு...

அவரு.... உன்மேல கம்ப்ளெய்ண்ட் கொடுக்குறேன்னு சொன்னப்போ கூட நான் கண்டுக்கல.. ஆனா என் கண் முன்னாடி உன்னோட பொருட்களை பொலிஸிடம் கொடுத்து நீ ட்ரக் டீலர்னு சொல்லி உன்னுடைய லக்கேஜில ட்ரக்ஸ் இருந்ததாக காட்டியபோது தான் அவர் நிஜமாகவே உன்னோட வாழ்க்கையை அழிக்கப்போறார்னு எனக்கு புரிந்தது.. பணபலத்தால எதையும் செய்கிற அவருக்கு இந்த விஷயம் அத்தனை கடினமில்லைனு எனக்கு தெரியும்...அந்தநேரம் அவரை தடுத்து உன்னை காப்பாற்றனும்னு மட்டும் தான் என்னோட மனதில் இருந்தது... அதற்காக அவரை எதிர்த்தேன்.. ஆனா அவரு... அவரு... என்னை அடித்து ரூம்ல அடைச்சிட்டாரு.... நான் உன்னை விட்டுட சொல்லி அழுதேன்... ஆனா அவரு கேட்கலை.... உன் மேல கேஸ் பைல் பண்ண போறதாக சொன்னாரு...அதோட... உன்னை பொலிஸ்காரங்க அடிக்கிற ஆடியோவை எனக்கு போட்டுக்காட்டுனாரு..நீ. நீ... வலியில் கதறுனதை கேட்டப்போ எப்படியாவது உன்னை காப்பாற்ற முடியாதானு என் அப்பாவோட சட்டையை பிடித்து உன்னை விட சொன்னேன்.. ஆனா... அவரு.... என்னை அடித்து மறுபடியும் ரூம்ல வச்சு பூட்டிட்டாரு... அதோடு என்னை... ரேப்... பண்ண முயன்றதாக உன்மேல கேஸ் கொடுக்கப்போறதாக சொன்னாரு..அதே கேட்டதும் எனக்கு உள்ளுக்குள்ள பயம் பரவ ஆரம்பித்தது.... அவரு அப்படி ஏதாவது பண்ணிட்டா உன்னோட வாழ்க்கை கேள்விக்குறியாகிடுமேனு பயந்தேன்.... அந்த நொடி உன் வாழ்க்கையில இருந்து நான் விலகுவதாக முடிவெடுத்தேன்... அதை அவருகிட்ட சொன்னப்போ அவரு அதை நம்பவில்லை... நீங்க நம்புறதுக்கு நான் என்ன பண்ணனும்னு கேட்டப்போ என்னை மேரேஜ் பண்ணிக்க சொன்னாரு... அப்போ எனக்கு நீயும் உன் வாழ்க்கையும் மட்டும் தான் என் மனசுல இருந்தது... நான் சரினு சொன்னதும் அவரு அப்போ இன்றைக்கு உனக்கு பரத்தோட என்கேஜ் மண்ட்னு சொன்னாரு... எனக்கு எதுவும் யோசிக்கக்கூட தோன்றலை.... நீ சந்தோஷமாக இருந்தாலே போதும்னு தான் தோன்றியது... யார்யாரோ வந்தாங்க போனாங்க... ஆனா எதுவுமே எனக்கு மனதில் பதியவில்லை... பரத் எனும் வெறி பிடித்த மிருகத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன்னு எனக்கு அப்போ புரியவில்லை.... அவன் என்னை எந்த நோக்கத்தோட உரசி விளையாடினான் என்றும் புரியாத அளவுக்கு உன்னை மட்டும் நினைச்சிட்டு இருந்தேன்...அடுத்தநாள் காலையில் கேஸை வாபஸ் வாங்க போறதாக சொன்னப்போ எனக்கு முதல்நாள் நடந்தது எதுவுமே மனதில் இல்லை.. ஆனா அவரு உன்னை ரிலீஸ் பண்ணதும் உன்னை இங்கேயிருந்து போகச்சொல்லனும்னு சொன்னாரு... அப்படி சொல்லாமல் வேறு ஏதாவது பண்ணா அவர் சொன்னமாதிரியே செய்வதாக என்னை மிரட்டுனாரு... அப்போதைக்கு உன்னை அங்கிருந்து எப்படியாவது அனுப்பினால் போதும்னு தான் உன்கிட்ட அப்படி பேசுனேன்... உன்கிட்ட அப்படி பேசும் போது நான் உள்ளுக்குள்ளே எவ்வளவு அழுதேன் தெரியுமா??.. ஆனா அதைவிட ரொம்ப மோசமாக நீ நொறுங்கிப்போய்ட்டனு நீ பேசுனதுலயே புரிந்தது... சாரிடா... சத்தியமாக நான் உன்னை அப்படி நினைக்கவே இல்லைடா... சொல்லப்போனா நான் வசதியான வீட்டு பொண்ணுன்னு தெரிந்தால் நீ என்னை விட்டு விலகிடுவியோனு பயந்து தான் நான் உன்கிட்ட அந்த விஷயத்தை மறைத்தேன்... கடைசியில் உன்னை காப்பாற்ற அந்த காரணத்தை சொல்லிட்டேன்னு நினைக்கும் போது என்னை நினைத்தால் எனக்கே வெட்கமாக இருக்கு.. ஆனா அதை பற்றி நான் கவலைபடமாட்டேன்.... உன்னை காப்பாற்றிட்டேன்... எனக்கு அது போதும்.... அதுக்கான தண்டனையை கடவுள் எனக்கு அந்த பரத்தோட ரூபத்துல அனுப்பினாரு....

நீ கோபத்துல எல்லாம் முடிந்தது என்று சொல்லிட்டு போனதும் எனக்கு வாழ்க்கை மொத்தமும் முடிந்தது என்று புரிந்தது... நீ தான் என் வாழ்க்கைனு நினைத்திருந்தேன்... ஆனா நீயும் இல்லைனு நீ போனதும் தான் புரிந்தது... அந்த நிமிடமே செத்துட்டா என்னதுனு கூட தோன்றியது... இல்லை உனக்கு பண்ண பாவத்துக்கு உயிரோட இருப்பதுதான் தான் எனக்கு கொடுக்கக்கூடிய அதிகபட்ச தண்டனை என்று முடிவெடுத்தேன்.... ஆனா அந்த கடவுள் அதை விட கொடுமையான தண்டனையை தரனும்னு முடிவு பண்ணி பரத்தை அனுப்பி வைத்தார்.. நான் உன்னை நினைத்து காரில் அழுதுட்டே வந்ததில் காரில் பரத் ஏறியதையோ எங்கப்பா இறங்கியதையோ கார் வேறொரு பாதையில் சென்றதையோ கவனிக்கவில்லை.... கார் ஒரு கெஸ்ட் ஹவுஸ் முன்னுக்கு நிற்கவும் தான் எனக்கு உணர்வே வந்தது.... அப்போ தான் சுற்றும் முற்றும் பார்க்கும் போது வேறெங்கோ வந்திருப்பது புரிய ட்ரைவரிடம் எங்க வந்திருக்கோம்னு நான் கேட்க முயலும் போது அந்த பரத் ட்ரைவரிடம் காசை கொடுத்து வெளியில போகச்சொன்னான்.... அவரும் காரில் இருந்து இறங்கி வெளியே போக அந்த பரத் என்னை கெஸ்ட் ஹவுஸ்க்கு வரச்சொன்னான்.. நான் முடியாதுனு சொன்னதும் அவன் என்னை வலுக்கட்டாயமாக உள்ளுக்கு இழுத்துட்டு போனான்... நான் அவன்கிட்ட இருந்து எப்படியாவது தப்பிச்சிடனும்னு எவ்வளவோ முயற்சி பண்ணேன்.. ஆனா....அவன்... என்னை அடித்து கீழே தள்ளிட்டான்... நான் எழுந்து தப்பிப்பதற்கு முதலில் என்னை இழுத்துட்டு போய் ஒரு ரூம்ல அடைச்சிட்டான்.... நான்... கதவை திறந்து என்னை வெளிய விடச்சொல்ல கெஞ்சினேன்... கதறுனேன்... ஆனா... அவன் கதவை திறக்கவில்லை... நான் எதிர்பாராத நேரத்துல கதவை திறந்துட்டு உள்ளே வந்தான்... மறுபடியும் அவன்கிட்ட கெஞ்சினேன்...ஆனால் நான் கெஞ்சியது எதுவுமே அவன் காதுல விழவில்லை... நான் தப்பிக்க முயற்சி பண்ணேன்... ஆனா அவன் என்னை அடிச்சான்...அவன் நிறுத்தாமல் அடிக்கவும் எனக்கு மயக்கம் வருகிற மாதிரி இருந்தது.. நான் சோர்ந்து விழுந்தததும் அவன் என் கையிரண்டையும் காலையும் கட்டிட்டு வெளியில போனான்.... அவன் வருவதற்குள்ள எப்படியாவது தப்பிக்கனும்னு நான் முயற்சிப்பண்ணும் போது மறுபடியும் ரூமிற்குள் வந்தான்...
வந்தவன் பேண்ட் பாக்கெட்டுல இருந்து ஒரு சின்ன பேக்கட்டை எடுத்து கையில கொட்டி அதை முகர்ந்து பார்த்தான்... அப்போ தான் அது ஏதோ போதைப்பொருள்னு எனக்கு புரிந்தது... அதை பார்த்ததும் எனக்குள்ள உள்ள பயம் அதிகரித்துவிட்டது.... அந்த நொடி எனக்கு முன்னுக்கு ஒரு மிருகம் நின்றுக்கொண்டு இருந்ததை உணர்ந்தேன்... எப்படியாவது தப்பிக்க முடியாதானு என்னால் முடிந்த எல்லா முயற்சியும் பண்ணேன்.. அவன் போதையில என்கிட்ட வந்தபோது கூட அவனை தள்ளிவிட்டேன்... ஆனா அவன் இன்னும் வெறியாகி.... வெறியாகி........” என்று முடிந்திருக்க தேவ்வின் கையிலிருந்த டையரி நழுவி கீழே விழுந்தது......

அந்த எழுத்தில் இருந்த வலி அவனை அந்த சம்பவத்திற்கு கூட்டிச்சென்றது.... குழந்தை போன்ற குணமுடையவளை கடவுள் ஏன் இத்தனை கொடூரமாய் சோதிக்கவேண்டும்??? வாசிக்கும் தனக்கே உள்ளம் நடுங்குகிறதே.. அனுபவித்த அவளின் வேதனை வலி எத்தனை கொடூரமாக இருந்திருக்கும்??? எதற்காக அவள் வாழ்க்கையை ஆளிற்கு ஒரு பங்காய் நாசம் செய்தார்கள்??? அவள் எதிர் பார்த்தது அன்பை மட்டுமே... ஆனால் அவளுக்கு இழைக்கப்பட்டது அனைத்துமே கொடுமை... யாரிடம் சென்று நியாயம் கேட்பது??? அவளை படைத்தவனிடமா??இல்லை அவளை பெற்றவரிடமா???

அந்த நொடி தான் ஸ்ரவ்யாவிற்கு பெரும் கொடுமை இழைத்துவிட்டதாய் தன்னைத்தானே சாடினான் தேவ்... இதற்கு மேல் அவன் மனமோ டையரியை வாசிக்கவேண்டாமென கூற அவனோ இல்லை அவள் அனுபவித்த கொடுமைகள் அனைத்தும் தான் தெரிந்துகொள்ள வேண்டும்... என்று முடிவெடுத்தவன் அடுத்ததை வாசிக்கத்தொடங்கினான்..

“அவன் என்னை சிதைத்து விட்டான் அப்பு.... என்னோட அனுமதி இல்லாமல் என்னை வேட்டையாடிட்டான்... அவனோட போதைக்கு என்னோட கற்பு ஊறுகாய் ஆகிவிட்டது... உனக்கென்று நான் பேணிக்காத்த கற்பு... இன்னொருத்தன் அத்துமீறி திருடி அதை உருத்தெரியாம அழிச்சிட்டான்... ரொம்ப வலிக்கிது அப்பு..... நான் என்னை விட்டுட சொல்லி கெஞ்சினேன் அப்பு.... போதும்னு கதறுனேன் அப்பு... ஆனா அவன் கேட்கவில்லை..... உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரிகின்ற மாதிரி இருக்கு அப்பு.... நீ வா அப்பு. . வந்து அவன்கூட சண்டை போடு... என்னை கிண்டல் பண்ணுறவங்க கூட சண்டை போடுவல்ல... இவன் கூடவும் சண்டை போடு.... இவன்........ இவன்...
முடியல அப்பு.... எனக்கு இப்போ உன் மடியில படுத்து அழணும் போல இருக்கு. .. உன்கிட்ட எனக்கு நடந்து அநியாயத்தை சொல்லி அழணும் போல இருக்கு... நீ மட்டும் தான் என்னோட வலிகளையும் உணர்வுகளையும் புரிந்துக்கொள்வாய்.... ப்ளீஸ்டா. ஒரு தடவை என்னை பார்க்க வாடா... நான் அழணும்டா.... மனசுவிட்டு அழணும்....
நீ வரமாட்ட.. நான் உன்னை போகச்சொல்லிட்டேன்ல... நீ திரும்ப வரமாட்ட .. நான் வந்து உன்னை கூப்பிடும் வரை நீ வரமாட்ட... ஆனா நான் உன்னை வந்து உன்னை கூப்பிடமாட்டேன்... அது தப்பு.... அது நான் உனக்கும் உன்னோட காதலுக்கும் பண்ணுற துரோகம்....

ஒரு நாளில் என்னோட வாழ்க்கையில நடந்த விஷயங்களை நினைத்து பார்க்கும் போது ரொம்ப வலித்தது... உன் கூட எவ்வளவு சந்தோஷமாக வந்தேன்... ஆனா இப்போ.... நீயும் இல்லை... என் பெண்மையும் இல்லை.... நான் போன ஜென்மத்தில் யாருக்கு என்ன பாவம்டா பண்ணேன்... எதுக்காக இவ்வளவு கஷ்டம்.... ம்ஹூம்... நான் சபிக்கப்பட்ட பிறவி... அது தான் நிஜம்... நல்லவேளை என்கூட இருந்திருந்தா நீயும் சந்தோஷமாக இருந்திருக்கமாட்ட... நல்லவேளை.... நீயும் போயிட்ட.... நீ இல்லைனாலும் பரவாயில்லை... உன்னை நினைச்சிட்டாவது வாழ்ந்திடலாம்னு நினைத்தேன்... ஆனா அதுக்கு கூட இந்த கடவுள் எனக்கு வாய்ப்பு கொடுக்கலை.... எத்தனை கஷ்டம் அனுபவித்த போது கூட எனக்கு ஏன்டா உயிரோட இருக்கோம்... செத்திடலாம்னு தோன்றியதில்லை.... ஆனா இப்போ.... இந்த சபிக்கப்பட்ட வாழ்க்கையும் கறைப்பட்ட உடலும் இனியும் உயிரோட இருந்து யாருக்கும் எந்த பிரயோஜனுமும் இல்லை..... நான் போறேன் அப்பு... யாருக்கும் தொந்தரவில்லாத தூரத்துக்கு போறேன்.... சாரி அப்பு.... உன்னை நான் ரொம்ப காயப்படுத்திட்டேன்... எல்லாம் முடிந்துவிட்டதுனு நீ சொல்லிட்டு போனாலும் என்னை நீ எப்பவும் மறுக்கவும் மாட்ட.. வெறுக்கவும் மாட்ட... ஆனா நான் உன் கை படக்கூடாத பொருளாகிட்டேன்.... நான் இனி உனக்கு வேண்டாம்... நான் போறேன்... லவ் யூ அப்பு....... இன்னொரு ஜென்மம் இருந்தா அப்போ நான் உன்னை திகட்ட திகட்ட காதலிக்கனும்... உன்னை கல்யாணம் பண்ணிக்கட்டு நூறு வருஷம் சந்தோஷமாக வாழனும்.... பாய்டா... நான் போறேன்...” என்று முடிவுற்றிருந்தது...

அதை வாசித்தவனுக்கு அப்போது தான் ஒரு உண்மை புலப்பட்டது.... ஸ்ரவ்யா தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாள்...... கடவுளே.... ஏன் அவள் வாழ்வை சிதைத்தாய்??? இறுதி நொடியில் கூட அவள் என்னையல்லவா நாடியிருக்கிறாள்..... ஆனால் நானோ அவளை பற்றிய கவலையில்லாமல் இருந்துவிட்டேனே...... வாழ்வின் மீதான அவள் விரக்தி அவளை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறதென்றால் அவள் மனதளவில் எத்தனை தூரம் துவண்டிருப்பாள்???? கடவுளே... இனி அவளை இதிலிருந்து எவ்வாறு மீட்பேன்....

இவ்வாறு தன்னுள் உழன்றவனுக்கு உறக்கம் எட்டாக்கனியானது.... இரவு முழுவதும் வேதனை அரித்துத்தின்ன அந்த டையரியை அணைத்தபடியே இரவு முழுவதும் விழித்திருந்தவன் விடிந்ததும் முதல் வேலையாக அஜயிற்கு அழைத்தான்... அன்று ஞாயிற்றுக்கிழமையென்பதால் அபியும் வீட்டிலிருக்க இருவரும் காலை பத்துமணியளவில் ஸ்ரவ்யாவை பார்க்க வந்தனர்...

அபியிடம் சில பொருட்கள் வாங்கிவருமாறு கூறி அவனை அனுப்பிவைத்த தேவ் அஜயிடம்
“சூட்டியை எதனால ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணாங்க...??”

“அது தான் சொன்னேனே தேவ்.... அவளுக்கு டிஹைட்ரேஷன்னு...”

“பொய்....நீங்க பொய் சொல்லுறீங்க...”

“இல்லை தேவ்...” என்று அஜய் கூற எழுந்து ஆவேசமாக அவன் சட்டை காலரை பிடித்த தேவ் அவனை உலுக்கி

“ஏன் மறைக்கிறீங்க... உண்மையை சொல்லுங்க... அவ சூசைட் பண்ண ட்ரை பண்ணா.... அது தான் ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணாங்கனு சொல்லுங்க அஜய்...” என்று சொல்ல தன் சட்டையிலிருந்து தேவ்வின் கையினை அகற்றியவன்

“எதை சொல்ல சொல்லுறீங்க தேவ்.... அவ சூசைட் பண்ண ட்ரை பண்ணதையா இல்லை அவ அப்பாவே ஆள் வைத்து அவளை மர்டர் பண்ண முயற்சித்ததையா????”

“அஜய்...”

“ஆமா தேவ்.... அவ இப்போ இப்படி இருப்பதற்கு காரணம் அவ அப்பா தான்... சூசைட் பண்ண முயற்சித்தவளை காப்பாற்றிவிட்டோம்.. ஆனா சொத்துக்காக அவளை ஸ்லோ பாய்சன் கொடுத்து அவ அப்பா அவளை கொலை பண்ண முயற்சித்தாரு... எப்படியோ டாக்டர்ஸ் அதை சரியான நேரத்தில் கண்டுபிடித்ததால் அவள் உயிரை காப்பாற்ற முடிந்தது.. ஆனால் அந்த மருந்தோட தாக்கம் அவள் மூளையை பாதித்திருந்தது.... அதனால் அவளை ஆஸ்பிடலில் அனுமதித்து ட்ரீட் மண்ட் கொடுத்தோம்.... கொஞ்சம் கொஞ்சமாக குணமாக ஆரம்பிச்சா... ஆனா அவ மனசுல இருந்த விரக்தி அவளை முழுதாக குணமடையவிடவில்லை..... மறுபடியும் அவளை மனநல காப்பகத்தில் சேர்த்தப்போ தான் மறுபடியும் அவள் வாழ்க்கையில் விதி விளையாடியது....”

“ஏன் அஜய் இதை முன்னாடியே என்கிட்ட சொல்லலை....”

“எப்படி சொல்றது தேவ்..?? என்ன நடந்தது என்று எதுவுமே சரியாக தெரியாமல் எப்படி சொல்லச்சொல்றீங்க தேவ்.... அவ இருந்த நிலைமையில் அவளை அப்போதைக்கு காப்பாற்றுவது மட்டும் தான் என் மனதில் இருந்ததே தவிர என்ன நடந்ததுனு ஆரய விரும்பவில்லை.... அவ பழைய படியே மீண்டு வந்தா போதும்னு நினைத்தேன்...” என்று அஜய் கூற அவனிடம் அவளது டயரியை நீட்டியவன் அதை படிக்க கூற அஜயும் அதை படித்தவன் உச்சபட்ட ஆத்திரத்துடன்

“தேவ்.... அவனை சும்மா விடக்கூடாது... அவனை மட்டும் இல்லை... பெரிய மனுஷன்னு சொல்லிட்டு சுத்துறானே ஸ்ரவ்யாவோட அப்பா... அவனையும் சும்மா விடக்கூடாது..... சொத்துக்காக இவ்வளவு தரங்கெட்டு நடந்துப்பான்னு நான் கனவுல நினைக்கவில்லை...அந்த பரத் யாரு தெரியுமா??? அவன் இல்லீகல் ட்ரக் டீலர் சபாபதியோட மகன்..... அவன் மேல இல்லாத கேஸ் எதுவும் இல்லை... அவ்வளவு கேடுகெட்டவன்கிட்ட இவளை ஒப்படைச்சிருக்கான்னா ஸ்ரவ்யாவோட அப்பா மனிதனே இல்லை..... அந்த ஆளை பற்றி தெரிந்தும் கூட பேபியை இங்கே விட்டுட்டு போனது என்னோட தப்பு தான்.....” என்று அஜய் கூற தேவ்வோ

“சூட்டியோட அப்பா எதனால இப்படி நடந்துக்கிட்டாரு அஜய்... அவ அம்மா மேல உள்ள கோபத்தை தான் அவ மேல காட்டுனாருனு நினைத்தேன்...”

“அத்தை ரொம்ப நல்லவங்க தேவ்... ஸ்ரவ்யாவோட வாழ்க்கை நன்றாக இருக்கனும்னு நினைத்து தான் அந்த மனிதனை பிரிந்து வந்தாங்க... ஸ்ரவ்யாவோட அப்பா குடும்பம் பரம்பரை பணக்காரங்க... பேபியோட தாத்தா ரொம்ப நல்லவங்க... பேபியோட அப்பா அவருக்கு நேர் எதிர்... அவர்கிட்ட இல்லாத கெட்டபழக்கமே இல்லை...அவரோ நடத்தையினால் பயந்த அவரோட அப்பா தன்னோட ஆபிஸில் வேலைபார்த்த அத்தையை அவருக்கு திருமணம் பண்ணி வைத்தார்.... அத்தைக்கும் அவரை பற்றி தெரிந்ததால எப்படியும் அவரை திருத்திடலாம் அப்படீங்கிற நம்பிக்கையில் அவர்கூட வாழ ஆரம்பிச்சாங்க ... ஆனால் திருமணத்திற்கு பிறகும் அவரோட நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை... அவர் தன்னை மாற்றிக்கொள்வதாகவும் இல்லை.... அவரோட இந்த நடவடிக்கையை பார்த்து பயந்த பேபியோட தாத்தா பணம் இருப்பதால தானே இப்படி நடந்துக்கிறனு சொத்து முழுவதையும் பேபியோட பெயரிலும் அத்தை பெயரிலும் மாற்றி எழுதியதோடு மொத்த நிர்வாகத்தையும் அத்தை கையில கொடுத்துட்டாரு.. அதை ஏற்காத பேபியோட அப்பா தன்னோட அப்பாகிட்ட வாக்குவாதம் பண்ண ஒருகட்டத்துல கோபத்தில் தன்னோட அப்பா என்றுகூட பார்க்காமல் பேபியோட தாத்தாவை கீழே பிடித்து தள்ளிவிட்டுருக்காரு...அந்த நிமிஷமே அத்தை தன்னோட மாமானாரை அழைச்சிட்டு வீட்டை விட்டு வெளியேறிட்டாங்க. . அதற்கு பிறகும் அவர் சும்மா இருக்கவில்லை.....அடிக்கடி வீட்டுக்கு வந்து தொல்லைகொடுக்க நிர்வாகப்பொறுப்பை மட்டும் அவருக்கு கொடுத்துட்டு இனிமே தொல்லை பண்ணக்கூடாதுனு எச்சரிச்சிருக்காங்க.. ஆனா அவரு அதை கண்டுக்கல... ஏதோவொரு வழியில அத்தையை தொந்தரவு பண்ணிட்டே இருந்திருக்காரு... இதெல்லாம் பேபிக்கு தெரியக்கூடாதுனு தான் அவளை ஹாஸ்டலில் சேர்த்தாங்க... அத்தை ஆக்சிடன்ட்டில் இறந்ததும் பேபி அவரோட நிழலில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது... அதாவது அப்படியொரு சூழலை அவர் உருவாக்கினாரு..அத்தை இறந்ததும் சொத்து முழுவதும் பேபி பெயரிற்கு மாறியது.. அதை மொத்தமாக கைபற்ற தான் இந்த திட்டம்... இப்படி நடக்குமென்று தெரிந்தால தானோ என்னவோ அத்தை பேபி லீகலி என்கேஜ் ஆகும் வரை இதை வேறொருத்தருக்கு தாரை வார்க்கமுடியாது என்று பதிவு உயில் எழுதியிருந்தாங்க.....இதை தெரிந்துக்கொண்டதால் தான் உங்களை விரட்ட நினைத்தாரு... அந்த ட்ரக் டீலர் பரத்திற்கும் பேபியிற்கும் என்கேஜ்மண்ட் ரெடி பண்ணியிருப்பாரு... அந்த பரத்தோட அப்பா இவரோட மாஜி வைப்போட அண்ணா... சொத்துக்கு பிளான் பண்ணி தான் இதையெல்லாம் செய்திருக்காரு.. அவ பிழைத்து வந்து கேஸ் பைல் பண்ணா மறுபடியும் சொத்து அவங்க கையை விட்டு போயிடுமோனு பயந்து தான் ஹாஸ்பிடலில் வைத்து அவளை கொலை செய்ய முயற்சி பண்ணியிருக்கனும்.....”

“எப்படி அஜய் சொத்துக்காக பெத்த பொண்ணையே கொலை செய்ய மனது வரும்...??? அவ முகத்தை பார்த்தால் கோபமாக பேசக்கூட தோன்றாதே...”

“மனித தன்மையே இல்லாத ஒருத்தரிடம் அதை எதிர்பார்ப்பது தப்பு தேவ்....”

“அவரோட மாஜி வைப்....”

“அவங்க இப்போ மாஜி இல்லை... லீகல் வைப்.....”

“என்ன சொல்லுறீங்க அஜய்??”

“ஆமா தேவ்.... அவங்க கூட வாழ சொகுசா வாழத்தான் எல்லாருடைய வாழ்க்கையையும் அழித்தார்... அவருக்கு ஒரு பையனும் இருக்கான்...”

“பணமிருந்தா எந்த தப்பும் பண்ணலாமா அஜய்??”

“அதை அனுபவிக்கும் போது அவருக்கு புரியும்...”

“அவரை விட அவர் செய்த கொடுமைகளால் என்னோட சூட்டி தானே அனுபவிக்கிறா அஜய்???”

“அவருக்கு சரியான பனிஷ்மன்ட் கிடைப்பதற்கான ஆதாரங்கள் சிலது என்கிட்ட இருக்கு... அது முழுதாக கிடைத்ததும் பேபிக்கு அவர் பண்ண அத்தனை கொடுமைகளுக்கும் பதில் சொல்லியாகனும்...”

“பழிக்கு பழி என்பது எனக்கு பிடிக்காத கருத்து.... ஆனா என்னோட சூட்டிக்கு நியாயம் கிடைக்க கட்டாயம் ஏதாவது செய்தே ஆகவேண்டும் அஜய்...”

“நான் அதை பார்த்துக்கிறேன் தேவ்... இப்போ சூட்டிக்கு நீங்க மட்டும் தான் தேவை... அவள் பட்ட காயங்களுக்கும் வேதனைகளுக்கும் நீங்க மட்டும் தான் தேவ் மருந்து... ப்ளீஸ் எப்படியாவது அவளை பழைய பேபியாக மீட்டுத்தாங்க...”

“அஜய்... அவ என்னோட வைப்... இனி அவள் என்னோட பொறுப்பு... யாருக்காவும் அவளை விட்டுத்தரமாட்டேன்... குணமாகி வந்து அவளே போறேன்னு சொன்னாக்கூட...” என்று தேவ் கூற அவனை கட்டித்தழுவிக்கொண்டான் அஜய்...

அவனுக்கு தேவ் மீது முழுதாய் நய்பிக்கை வந்தது... இனி தன் பேபியோட வாழ்வை பற்றி கவலை தேவையில்லையென அவன் மனம் திடம்கொண்டது...
அப்போது வெளியே சென்றிருந்த அபியும் வந்திட டூர் செல்வதை பற்றி பேசியவர் வரும் சனியன்று ஹிக்கடுவ செல்லலாமென்று முடிவெடுத்தனர்...
மற்றவர்களுக்கும் அதை பற்றி தெரிவிக்கும் பொறுப்பை அபி எடுத்துக கொள்ள தேவ் அஜயையும் தம்மோடு வருமாறு அழைத்தான்...
இவையனைத்தும் ஸ்ரவ்யாவின் முன்னே கலந்துரையாடியதை பார்த்திருந்த ஸ்ரவ்யா அப்பு என்று அழைத்து அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்...
அவள் மன மகிழ்ச்சியின் வெளிபாடு தான் இது என்று உணர்ந்த தேவ்வும் அவள் தலையை ஆதரவாக வருடிக்கொடுத்தான்...
அஜயும் அபியும் கிளம்பிச்சென்றதும் ஸ்ரவ்யாவை தன் மடியில் படுக்க வைத்த தேவ்

“சூட்டி... உன்னோட கஷ்டம் எல்லாத்தையும் என்கிட்ட கொட்டிடு.. அதோட பாரத்தை நான் ஏத்துக்கிறேன்... உனக்கு நான் இருக்கேன்மா... வேறு யாரும் வேண்டாம்...எப்பவும் நான் இருக்கேன்... நான் இருக்கேன் சூட்டிமா... எப்பவும் நான் உன்கூடவே இருப்பேன்...” என்று தலையை தடவியபடி கூற தன் தலையை திருப்பி அவனை ஒரு பார்வை பார்த்த ஸ்ரவ்யா மீண்டும் கண்மூடிக்கொண்டாள்..
அவள் வாய்திறவாத போதிலும் அவள் ஒற்றை பார்வையே அவள் ஒட்டுமொத்த வலியையும் அவனிடம் கொட்டுவிட்டது..
தன் மனம் வலிதீரும் மட்டும் அவளோடு இருந்தவன் அவள் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டு தன் படுக்கையில்வந்து விழுந்தான்..

முதல் ஆட்டத்திலேயே அவர்கள் இருவரின் வாழ்வும் திசைக்கொன்றாய் சிதறிட இனி அவர்கள் வாழ்வில் விதி ஆடப்போகும் இறுதியாட்டம் எத்தனை திருப்புமுனைகளை கொண்டுவரப்போகிறதென்று விதி பதில் சொல்லும்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN