துளி 22

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆறாத காயம் இல்லையே
வெற்றி வெறி ரெண்டும்
ஒட்டறை சொல்தான்
திக்காதே


காலையிலேயே தேவ் பரபரப்பாக தயாராகிக்கொண்டிருக்க ஸ்ரவ்யாவோ தன்னிடத்திலிருந்து அசையாமல் அமர்ந்திருந்தாள்...
தயாராகி வந்தவன் ஸ்ரவ்யாவை அழைக்க அவள் இன்னும் தயாராகாது ஏதோ யோசனையில் இருக்க அவளருகே சென்றவன் அவள் தோள் தொட்டு
“ஸ்ரேயா.. என்னாச்சு.... நீ ஏன் இன்னும் கிளம்பாமல் இருக்க??”
“அப்பு.. அது....” என்று தடுமாற அவள் அப்பு என்ற அழைப்பிலேயே அவள் மனதை ஏதோ வாட்டுகிறதென்று புரிய ஸ்ரவ்யாவின் அருகே அமர்ந்து தேவ் அவள் கையினை எடுத்து தன் கரங்களுக்குள் அடக்கியபடி
“என்ன ஆச்சுமா... ஏன் ஒரு மாதிரி இருக்க?? எந்த விஷயம் உன்னை கஷ்டப்படுத்துகிறது??”
“நாம இன்னைக்கு கட்டாயம் கோர்ட்டுக்கு போகுமா??”
“ஆமாமா... ஏன் ஏதாவது பிரச்சனையா??”
“அப்பு... அங்கே..அங்கே.... அவன்....” என்றவளது வதனம் வேதனையில் சுருங்கிட அதை கண்டு அவன் மனம் வலியால் துடித்தபோதும் அதனை வெளிக்காட்டாது
“ஆமா ஸ்ரயா.... அங்கு அவன் இருப்பான்.... அவனுக்கான தண்டனை இன்றைய வழக்கிலிருந்து ஆரம்பிக்கப்போகுது.... அவன் உனக்கிழைத்த அநீதிக்கான பலன் இன்றிலிருந்து ஆரம்பிக்கப்போகுது....”
“ஆ..ஆனா... ஆனா.. அப்பு...”
“ஸ்ரயா... நீ என்னை நம்புற தானே....” என்று கேட்க தலையாட்டியவளின் தலையை ஆதரவாக தடவியவன்
“பயப்படாத ஸ்ரயா... அவனால் உனக்கோ எனக்கோ அஜயிற்கோ எந்த பாதிப்பும் வராது... அதற்கான எல்லா ஏற்பாட்டையும் நாங்க பக்காவா பண்ணிட்டோம்... நீ பண்ணவேண்டிய ஒரே விஷயம்.. தைரியமாக இருக்கனும்... நீ எதை பற்றியும் பயப்படாமல் இதை பேஸ் பண்ணனும்..... உன்னோட மனது பாதிக்கின்றமாதிரி எந்த விஷயமும் இன்றைக்கு நடக்காது... புரியிதா??” என்று அவளை திடப்படுத்தி தேவ்வின் பேச்சில் சற்று திடமடைந்தவள் தேவ்வின் தோளில் சாய்ந்து
“எதுவும் பிரச்சினையாகாதில்லையா?? என்னால் உனக்கும் அஜூவிற்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது....”
“எல்லாம் நல்லபடியாக முடியும்... பயப்படாத ஸ்ரயா... இப்போ போயிட்டு சீக்கிரம் ரெடியாகு... அஜயும் லாயரும் நமக்காக கோர்ட்டில் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க...” என்று அவளை கிளப்பியவன் அவள் தயாராகச்சென்றதும் அஜயை அழைத்தான் தேவ்...
“அஜய்...”
“கிளம்பிட்டீங்களா தேவ்...??”
“கிளம்பப்போறோம் அஜய்... நீங்க எங்கே இருக்கீங்க...??”
“நான் ஆன் தி வே...”
“எல்லாம் ஓகே தானே அஜய்...எதுவும் ப்ராப்ளம் ஆகாதே....??”
“எல்லாம் லாயர் பார்த்துப் பாரு தேவ்... நாம பேபியை பத்திரமாக பார்த்துக்கிட்டா ஓகே...இன்னைக்கே டைவர்ஸ் கிடைச்சிடும்னு லாயர் சொல்லியிருக்காரு... அதோடு டொமேஸ்டிக் வயலன்ஸ் கேசில் அந்த பரத்தை அரஸ்ட் பண்ணுவதற்கான ஏற்பாட்டையும் பண்ணிடலாம்னு சொல்லியிருக்காரு.......”
“ஆமா அஜய்... ஒரே நேரத்தில் அந்த பிராடு லோயரையும் பரத்தையும் சமாளிக்கமுடியாது... நிச்சயம் இன்னேரம் அந்த பரத் அந்த லாயர் கூட சேர்ந்து ஏதாவது திட்டம் போட்டிருப்பான்.....”
“ஆமா தேவ்... அதனால் தான் பேபியை பத்திரமாக பார்த்துக்கனும்னு சொல்லுறேன்.... இன்னைக்கு ட்ரையலிற்கு பிறகு பேபிக்கு போலிஸ் பாதுகாப்பு கிடைக்கவும் ஏற்பாடு பண்ணிடலாம்...”
“முடியுமா அஜய்...??”
“லாயர்கிட்ட அது பற்றி பேசியிருக்கேன்.... அவங்களுக்கு எதிராக எவிடன்சும் இருப்பதால் அதை காட்டி பெட்டிஷன் போட்டால் போலிஸ் பாதுகாப்புக்கு அரேன்ஜ் பண்ணலாம்னு சொல்லியிருக்காரு....நீங்க பேபியை மட்டும் கவனமாக பார்த்துக்கோங்க.....”
“சரி அஜய்... ஸ்ரேயா வந்துட்டா.... நான் அங்கே வந்ததும் மற்றதை பேசிக்கலாம்...” என்று அழைப்பை துண்டித்த தேவ் கிளம்பித்தயராயிருந்த ஸ்ரவ்யாவோடு அங்கிருந்து கிளம்பினான்....
இருவரும் வாடகைக்காரில் நீதிமன்ற வளாகத்தில் இறங்கியதும் அவர்களருகே வந்தான் அஜய்..
“பேபி... நீ எதுவும் பயப்படவேண்டியதில்லை.... லாயர் சொல்லுற மாதிரியே பேசுனா மட்டும் போதும் ஓகே வா??? எதுக்கு பயப்படாத நானும் தேவ்வும் இருக்கோம்..... சரியா??” என்று அஜயும் தன் பங்கிற்கு அவளுக்கு ஆறுதல் கூறினான்....
பின் லாயாரிடம் அழைத்து சென்றான் அஜய்... அவரும் அனைத்தும் விளக்கிட தன் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொண்டாள் ஸ்ரவ்யா...
அங்கிருந்து நகர முற்படும் போது காரில் வந்து இறங்கினர் பரத்,அவனது தந்தை மற்றும் அந்த லாயர் திக்விஜயன் .....
காரில் இருந்து இறங்கிய லாயரின் கண்கள் ஸ்ரவ்யாவை ஆராய்ந்தபடியே சுற்றியுள்ளவர்களையும் நோட்டம் விட்டவன் ஒரு மர்மம் புன்னகையை உதித்தபடியே அவர்கள் அருகே வந்தான்...
லாயரை கண்டதும் ஸ்ரவ்யாவிற்கு கட்டுக்கடங்காமல் ஆத்திரம் பொங்கிட அதை கட்டுப்படுத்தமுயன்று தோற்றவள் அங்கிருந்து நகர முயல அவள் மனநிலை உணர்ந்து அவள் கரத்தினை பற்றிக் கொண்டான் தேவ்... அவனை திரும்பிப் பார்த்த ஸ்ரவ்யாவை அங்கேயே இருக்கச்சொன்னவன் நடப்பவற்றை கவனிக்கச்சொல்லி பார்வையாலே சொல்லிட ஸ்ரவ்யாவும் தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அங்கேயே நின்றாள்...
ஸ்ரவ்யா அருகே வந்த லாயர்
“என்னம்மா ஸ்ரவ்யா நல்லா இருக்கியா??? நீ சௌக்கியமாக தானே இருப்ப??? அதான் உன்னோட காதலன் வந்துட்டானே..” என்று அவளை சீண்டிட
ஸ்ரவ்யாவோ
“நாம போகலாம் தேவ்...” என்று கூறிட அவளை தடுத்த திக்விஜயன்
“ஹாஹா.. இதுக்கே இப்படி தப்பிச்சு ஓடுனா எப்படி?? இன்னும் இன்னைக்கு நீ பார்க்க வேண்டிய விஷயம் எவ்வளவு இருக்கு....?? உன் கதையை அன்னைக்கே உன் அப்பன் சரியாக முடிச்சிருந்தா எனக்கு இன்னைக்கு இங்க வரவேண்டியிருந்திருக்காது.... பரவாயில்லை... ஆசைப்பட்டது சீக்கிரம் கிடைச்சிட்டா அதில் எந்த சந்தோஷமும் கிடைக்காது...ஆனா அதை அடித்து பிடித்து வாங்கும் போது கிடைக்கும் ஆனந்தமே தனி.... இத்தனை வருஷமாக நான் பார்த்து நிதானமாக எடுத்து வைத்த ஒவ்வொரு அடியையும் தவிடுபொடுயாக்கிடலாம்னு கனவு காணாத..... அது அவ்வளவு சீக்கிரம் உன்னால் முடியாது...... என்னைப்பற்றி தெரிந்த பிறகும் என்னை எதிர்த்ததுக்காக நீ நிச்சயம் இன்னைக்கு வருத்தப்படுவ.... நான் ஆசைப்பட்டதை அடைய எந்த எல்லைக்கும் போவேன்..... உன்னை பெத்தவனை கூட அதுக்கு தான் இன்னும் உயிரோடு விட்டு வச்சிருக்கேன்....”
“லாயர் சார்.... நீங்க எப்படி உங்க ஆசையை நிறைவேற்ற எந்த எல்லைக்கு வேணும்னாலும் போவீங்களோ.... அதே மாதிரி ஸ்ரவ்யாவும் அவ தாத்தாவோட ஆசையையும் அவ அம்மாவோட ஆசையையும் நிறைவேத்த எது வேணும்னாலும் செய்வா... அது மட்டும் இல்லை....... அவ வாழ்க்கையோடு விளையாடிய யாரையும் நாங்கள் விடுவதா இல்லை.... உங்களுக்கு மட்டும் தான் தகிடுதத்தம் பண்ணத்தெரியுமா???? நாங்களும் உண்மையை வெளிப்படுத்த எதுவும் செய்வோம்... அதை நீங்க இன்னைக்கு கோட்டில் பார்ப்பீங்க...” என்று தேவ் கூற அஜயும்
“ஹலோ சார்... பணபலம் இருந்தா எதுவும் செய்யலாம்னு நீங்க நினைச்சிட்டு இருந்தீங்கனா இன்றைக்கு கோர்ட்டில் நடக்கபோற சம்பவத்தில் நீங்க உங்க ஒபீனியனை மாத்திப்பீங்க லாயர் சார்.. அதுக்கு நான் கேயரன்டி.......”
“அது மட்டும் இல்லை அஜய்... இன்னும் பல சம்பவம் வரிசையாக காத்திட்டு இருக்கு லாயர் சார்... அதனால் என்ன பண்ணுறீங்கனா கோர்ட்டில் உங்களுக்காக காத்திருக்கிற வெடிகுண்டு என்னவா இருக்கும்னு யோசிச்சிட்டே போங்க.....”
“டேய் என்னடா பூச்சாண்டி காட்டுறீங்களா???? இன்னைக்கு இவளை நான் கோர்ட்டில் கதறவிடுவேன் ... அதை நீங்க இரண்டு பேரும் பார்ப்பீங்க.....”
“ஹாஹா... போங்க சார்... போயிட்டு இன்னைக்கு கேஸில் அந்த பரத்தை எப்படி காப்பாத்தலாம்னு யோசிங்க.... அஜய் ஸ்ரயா வாங்க போகலாம்....” என்றபடி தேவ் அவர்களை அழைத்து செல்ல அவர்களை முறைத்தபடியே அங்கு நின்றிருந்தார் திக்விஜயன்....
அவரருகே வந்த பரத்தும் அவன் தந்தையும் என்னவென்று விசாரிக்க அவர்கள் பேசிய அனைத்தையும் கூறினார்.....
“அங்கிள் அவனுங்க சும்மா சொல்லிட்டு போறானுங்களா இல்லை நிஜமாகவே ஏதாவது செய்யப்போறானுங்களா?? நீங்க சொன்னீங்களேனு தான் நான் எதுவும் பண்ணாமல் இருக்கேன்.... “
“அவனுங்களால் எதுவும் பண்ணமுடியாது பரத்.... சொத்து நம்ம கிட்ட இருக்கு... டைவர்ஸ் வாங்கிட்டா அதை காரணம் காட்டி மீட்கலாம்னு நினைக்கிறாங்க...... அது அவங்க கனவுல மட்டும் தான் நடக்கும்..... நீ நான் சொன்னபடியே கோர்ட்டில் சொல்லு..... அதுக்கு பிறகு அவங்களால் எதுவும் பண்ணமுடியாது.... இந்த கேஸை இழுக்கடித்தாலே அவங்க பயந்திடுவாங்க...”என்று லாயர் கூற பரத்தின் தந்தையோ
“ஏதோ நீ சொல்லுற..... இத்தனை வருட திட்டம் எந்த காரணத்தை கொண்டும் சிதைந்திட கூடாது..... பார்த்துக்கோ...”
“இது உனக்கு மட்டும் இல்லை... எனக்கும் உன் தங்கச்சிக்கும் இது தான் பல வருஷ கனவு.... இத்தனை வருஷமாக அவ அந்த பரமேஸ்வரன் கூட போலியான வாழ்க்கை வாழ்ந்தது இதற்கு தானே .... இவ்வளவு கஷ்டப்பட்ட பின் சொத்தை எந்த காரணம் கொண்டு கைநழுவி போக விடமாட்டேன்.......” என்று சூளுரைத்துக் கொண்ட திக்விஜயன் அவர்களை அழைத்துக்கொண்டு கோர்டிற்குள் சென்றார்...
இது சாதாரண விவாகரத்து வழக்கு என்பதால் ஸ்ரவ்யாவும் பரத்தும் எதிரெதிர் கூண்டுகளில் நிற்க அவரவர் வழக்கறிஞர்கள் தம் தரப்பினர் சார்பாக வாதங்களை முன் வைத்தனர்......
வாதம் முடிந்ததும் நீதிபதி குறுக்கு விசாரணைக்கு அனுமதி தந்திட திக்விஜயன் ஸ்ரவ்யாவை குறுக்கு விசாரணை செய்யத்தொடங்கினார்...
“மிஸஸ் பரத்..... நீங்க மிஸ்டர் பரத் உங்களை உடல் ரீதியாக துன்புறுத்தியதாக சொல்லியிருந்தீங்க??? அப்படி தானே....”
“ஆமா....”
“அது எப்போ எப்படின்னு கொஞ்சம் தெளிவாக சொல்லமுடியுமா??” என்று திக்விஜயன் கேட்க அப்போது ஸ்ரவ்யா தரப்பு வக்கீல் தயாளன்
“ஆப்ஜக்ஷன் யுவரோனர்...” என்று கூற திக்விஜயனோ
“யுவரோனர் என் தரப்பினர் மீது அபாண்டமாக ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருக்கும் போது அதை குறுக்கு விசாரணை செய்வதில் எதிர்தரப்பு வக்கீலுக்கு என்ன எதிர்ப்புனு எனக்கு புரியலை...”
“மிஸ்டர் தயாளன்..... இது விவாகரத்து... இதில் இரண்டு தரப்பினரையும் குறுக்கு விசாரணை பண்ணா தான் சரியான தீர்வுக்கு வரமுடியும்... அதனால் மிஸ்டர் திக்விஜயன் தொடரட்டும்..... திக்விஜயன் நீங்கள் உங்கள் விசாரணையை ஆரம்பிங்க.....”
“நன்றி யுவரோனர்... மிஸஸ் பரத் சொல்லுங்க.... என்னுடைய கட்சிக்காரர் பரத் உங்களை என்ன துன்புறுத்தினார்...??” என்று கேட்க ஸ்ரவ்யாவோ அன்றைய நாளின் நினைவில் முகம் வேதனையில் சுருங்கிட தன்னை கட்டுப்படுத்திய படியே அன்று நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினாள்....
அதை கேட்டு சிரித்த திக்விஜயன்
“யுவர்ரோனர்..... இவங்க சொல்வது அனைத்தும் பொய்......”
“இல்லை... இதெல்லாம் உண்மை.... அவன்... அவன்....”
“இப்படி இமோஷனலாக பேசினால் நீங்க சொன்ன அனைத்தும் உண்மையாகிடாது..... சரி நீங்க சொல்வதெல்லாம் உண்மைனு ஒப்புக் கொண்டாலும் ஏன் பரத் இப்படி செய்யனும்???”
“அவனுக்கு என் சொத்தை அடையனும்... அதுக்கு என்னை பயன்படுத்துக்கொண்டான்...”
“ஹாஹா குட்ஜோக்.... யுவரோனர் என்னுடைய கட்சிக்காரர் பரத் இவங்க சொல்கின்ற மாதிரி சொத்துக்காக எதுவும் செய்யலை.... ஏன்னா அவருக்கு அதற்கான எந்த தேவையும் இல்லை.... பலகோடி சொத்துக்கள் அவரோட பெயரில் இருக்கும் பட்சத்தில் மிஸஸ்.பரத் சொல்கின்ற காரணம் நம்பும் படியாக இல்லை....”
“இல்லை... நான் பொய் சொல்லலை.... நான் சொல்றது உண்மை.. “
“சரி நீங்க சொல்வது உண்மைனு எடுத்துப்போம்.... உங்களுக்கு மிஸ்டர் பரத்தை பிடிக்கலைனு சொல்றீங்க??? அப்போ எதுக்கு அவரை மேரேஜ் பண்ணீங்க??? ஆரம்பத்திலேயே முடியாதுனு சொல்லியிருக்கலாமே...”
“அது.......”
“ம்.... சொல்லுங்க மிஸஸ். பரத்.... நீங்க சொல்வதை உண்மையா இதை சொல்ல ஏன் தயங்கனும்??”
“நான் சொன்னது அனைத்தும் உண்மை தான்..... இனி சொல்லப்போவதும் உண்மை தான்....” என்றவள் தேவ்வை அவள் தந்தை சிறையில் அடைத்ததிலிருந்து அனைத்தையும் கூறி முடித்தாள்....
அதை கேட்டு கேலியாய் சிரித்த திக்விஜயம்
“என்ன மிஸஸ். பரத் எதை கேட்டாலும் ஒரு படமே ஓட்டுறீங்க....”
“எனக்கு பொய் சொல்லவேண்டிய அவசியமில்லை....” என்று ஸ்ரவ்யா சற்று அழுத்தமாக கூற
“இருக்கு... உங்களுக்கு இருக்கு... உங்கள் பரம்பரை சொத்தை எப்படியாவது அடைந்து உங்க காதலன் கூட சந்தோஷமாக வாழும் மோட்டிவ் உங்களுக்கு இருக்கு....”
“நோ... நான் ....”
“யுவரோனர் மிஸஸ். ஸ்ரவ்யாவிற்கு அவங்க தாத்தா வழி சொத்தை மொத்தமாக கையகப்படுத்தனுங்கிற எண்ணம் இருக்கு.... அது அவங்களுக்கு உரிமையுள்ள சொத்து தான்... ஆனா அவங்க அதை தவறான வழியில் உபயோகித்ததால் அவங்க தாத்தா அவங்களுக்கு மேரேஜ் ஆகி ஒரு வருஷம் அவங்க கணவரோடு வாழ்ந்தால் தான் அதை நிர்வகப்படுத்த முடியும்னு அவரோட உயிலில் எழுதியிருக்காரு.... இதை தெரிந்துக்கொண்ட ஸ்ரவ்யா பரத்தை திருமணம் பண்ணியிருக்காங்க.... அதே நேரம் அவங்க காதலரோடும் தொடர்பில் இருந்திருக்காங்க..... இதை தெரிந்துகொண்ட என்னோட கட்சிக்காரர் என்னனு விசாரிக்க அவங்க இரண்டு பேருக்கும் இடையில் தகராறு வந்திருக்கு.... என்னோட கட்சிக்காரர் கோபத்தில் வீட்டிலிருந்து வெளியேறி மறுபடியும் வீட்டுக்கு வந்து பார்த்தப்போ மிஸஸ் பரத் மயங்கியிருந்திருக்காங்க... அவங்களை ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணப்போ தான் தெரிந்தது அவங்க ஒரு போதைப்பொருள் பாவனையாளர்னு......... அதிகப்படியான போதைப்பொருள் பாவனை அவங்களை ஹிஸ்டீரிய் பேஷண்டாக மாற்றியிருக்கு. அதுக்கு பிறகு அவங்களை மனநல காப்பகத்தில் அனுமதித்து சிகிச்சை வழங்கியிருக்காங்க....... நான்கு வருஷம் அங்கு தான் இருந்திருக்காங்க.... சில வாரங்களுக்கு முன் ஆஸ்பிடல் நிறுவனத்திலிருந்து மிஸஸ். பரத் குணமாகிட்டதாகவும் அவங்களை அழைச்சிட்டு போகச்சொல்லி வரச்சொல்லியிருந்தாங்க. ஆனால் மிஸ்டர் பரத் அங்கு போறதுக்கு முதலில் வேறு யாரோ மிஸஸ்.பரத்தை அங்கிருந்து அழைச்சிட்டு போயிருக்காங்க.... என்னோட கட்சிக்காரர் தன் மனைவியை தேடிட்டு இருந்தபோது தான் மிஸஸ். பரத் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்காங்க....... இதற்கான அத்தனை ஆதாரங்களையும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்...”என்ற திக்விஜயன் ஆதாரங்கள் அனைத்தையும் நீதிபதியிடம் சமர்ப்பிக்க அவரும் அனைத்தையும் ஆராய்ந்தார்.....
ஆராய்ந்து முடித்ததும் நீதிபதி
“எதிர்கட்சி வக்கீல் உங்கள் வாதத்தை தொடரலாம்...”
“தாங்க்யூ யுவரோனர்.... எதிர்கட்சி வக்கீல் சில விஷயங்களை ரொம்ப அழகாக செதுக்கி சில பல இடங்களில் டிங்கரிங் எல்லாம் பண்ணி ஒரு கதை சொல்லி அதற்கும் ஆதாரம் உங்கள் முன் சமர்ப்பித்திருந்தார் . ஆனா சார் ஒரு விஷயத்தை மறந்துட்டாரு... அவரு பொய்யான ஒரு சம்பவத்திற்கே இத்தனை அழகாக ஆதாரங்கள் தயார்படுத்த முடியும் போது உண்மையை வெளிப்படுத்தும் ஆதாரங்களும் இருக்கும்னு மறந்துட்டாரு..... யுவரோனர் மிஸ்டர் பரத்தை விசாரிக்க எனக்கு அனுமதி தரவேண்டும்...”
“யூ கேன் பிரசீட்...” என்று அனுமதி தந்திட வக்கீல் ரத்னமூர்த்தியும் பரத்தை விசாரிக்கத்தொடங்கினார்.....
“மிஸ்டர் பரத்.... உங்க வக்கீல் சில விஷயங்கள் சொல்லியிருந்தாரு.... அதை மறுபடியும் நீங்க ஒரு தடவை சொல்லமுடியுமா??” என்று கேட்க பரத் சொல்லத்தொடங்க ஒரு இடத்தில் இடையிட்டு
“அப்போ உங்களுக்கு மிஸஸ்.பரத்திற்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லைனு தெரியும் அப்படிதானே....??”
“ஆமா....”
“அப்போ விருப்பம் இல்லாத ஒரு பொண்ணை திருமணம் பண்ணுறது தப்பில்லையா??? அதுவும் உங்க லாயர் சொன்னபடி காதல் தொடர்புள்ள ஒரு பொண்ணை திருமணம் பண்ணுவதில் உங்களுக்கு என்ன லாபம்.....??”
“ஸ்ரவ்யாவோட அப்பா தான் என்கிட்ட வந்து ஸ்ரவ்யாவை மேரேஜ் பண்ணிக்க சொல்லி கெஞ்சினாரு.... அவரு அப்பாவோட பிசினஸ் பார்ட்னர்...ரொம்ப நல்லவரும் கூட.. அதனால் அவருக்காக தான் ஸ்ரவ்யாவை மேரேஜ் பண்ண ஒத்துக்கிட்டேன்.....”
“குட் ஜோக்..... யாரோ ஒருத்தருக்காக வேண்டி ஏன் நீங்க உங்க வாழ்க்கையை தியாகம் பண்ண முன்வந்தீங்க??? அதில் உங்களுக்கு எந்தவித லாபமும் இல்லாதபட்சத்தில்...?????? ம்.... சொல்லுங்க மிஸ்டர் பரத்....”
“அது... அது..”
“நான் சொல்லவா மிஸ்டர்.பரத்... யுவரோனர் மிஸ்டர் பரத்தோட அப்பாவும் ஸ்ரவ்யாவோட அப்பாவும் பிசினஸ் பார்ட்னர் மட்டும் இல்லை... அவங்க உறவினர்கள்... அதாவது ஸ்ரவ்யாவோட அப்பா பரத்தோட அத்தையை இரண்டாம் தாரமாக மணம் முடிச்சிருக்காரு.. சோ பரத்தோட அப்பாவும் மிஸஸ். பரத்தோட அப்பாவும் நெருங்கிய உறவினர்கள்.... அதனால் தான் பரத்திடம் ஸ்ரவ்யாவோட அப்பா ஸ்ரவ்யாவை மேரேஜ் பண்ணிக்க சொல்லியிருக்காங்க... பொண்ணோட பொருளும் வருதுன்னு மிஸ்டர்.பரத்தும் ஸ்ரவ்யாவோட பாஸ்டை பத்தி கவலை படாமல் என்கேஜ்மண்டுக்கு ஓகே சொல்லி என்கேஜ்மண்ட் நடந்தது..... ஆனால் இதற்கு பிறகு நடந்த விஷயங்கள் தான் வேறு.... என் கட்சிக்காரர் சொன்னது போல் என்கேஜ்மண்ட் முடிந்து அடுத்த நாள் மிஸ்டர் பரத் என்னுடைய கட்சிக்காரரிடம் ரொம்ப மோசமாக நடந்திருக்காரு.... அதற்கு பிறகு மூன்று நாட்களுக்கு பின் என்னுடைய கட்சிக்காரரை ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்காங்க...... அதுக்கு காரணம் போதைப்பொருள் இல்லை... அவங்க தற்கொலைக்கு முயற்சி பண்ணியிருக்காங்க..... இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் இதில் இருக்கு... அதோடு இன்னொரு வீடியோ ஆதாரத்தை உங்களுக்கு காண்பிக்கனும்னு நினைக்கிறேன்...” என்றவர் ஒரு வீடியோ ஆதாரத்தை நீதிபதியிடம் காண்பித்தார் ரத்னமூர்த்தி...
அதில் பரத் ஸ்ரவ்யாவை அவள் மறுப்பதை பொருட்படுத்தாது வீட்டினுள் இழுத்து செல்வதும் சற்று நேரத்தில் ஒருவன் வந்து ஒரு சிறிய பார்சலை கொடுக்க அதை உடைத்து முகர்ந்து பார்த்துவிட்டு அவனிடம் பணம் கொடுத்து அனுப்புவதும் அந்த காணொளியில் பதிவாகியிருந்தது.....
அடுத்து ஸ்ரவ்யா கலைந்த தோற்றத்துடன் அழுதபடி வீட்டிலிருந்து வெளியே வருவதும் பதிவாகியிருந்தது.....
அதை நீதிபதி பார்த்து முடித்ததும் ரத்னமூர்த்தி
“யுவரோனர் இது தான் அன்றைக்கு நிஜமாக நடந்த சம்பவம்.... இதை பார்த்த பிறகு என் கட்சிக்காரர் சொன்னது அனைத்தும் உண்மைனு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்....”
“திக்விஜயன் இதுக்கு என்ன பதில் சொல்லுறீங்க??? இதை நீங்க மறுக்குறீங்களா??”
“ஆமா யுவரோனர்.... கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்னு சொல்லுவாங்க.... அதே மாதிரி பார்க்கிற கோணம் தப்பாக இருந்தால் எல்லாம் தப்பா தானே இருக்கும்..... என்னோட கட்சிக்காரர் அவரோட மனைவியை வற்புறுத்து வீட்டுக்கு இழுத்துட்டு போறாருனு அட்வகேட் சொன்னாரு... அது ஏன் மிஸஸ்.பரத் மிஸ்டர். பரத் சொன்னதை காது கொடுத்து கேட்காமல் செய்ததாக இருக்காது?? அதே மாதிரி மற்றைய விடயங்களும் வேறு காரணத்துக்காக நடந்திருக்கலாம்.....”
“ஹாஹா... எதிர்கட்சி வக்கீல் நல்லா கற்பனை கதை சொல்லுறாரு...... ஆனா அதில் நீங்க பார்த்தது மட்டும் தான் நிஜம்... அதோடு மிஸ்டர்.பரத் அந்த வீடியோவில் முகர்ந்து பார்த்தது வீட்.... அதை கொண்டு வந்து கொடுத்தவன் இப்போ ஜெயிலில் இருக்கான்... அதற்கான ஆதாரமும் இதில் இருக்கு.... இதிலிருந்தே தெளிவாக தெரியிது மிஸ்டர். பரத் தான் ட்ரக் யூசர்... என்னோட கட்சிக்காரர் மீது எந்த தவறும் இல்லை.... அவரை அட்மிட் பண்ண ஆஸ்பிடலில் எடுத்த ரிப்போட்ஸ்சும் அதை தான் சொல்லுது.....” என்று ரத்னமூர்த்தி தன் வாதத்தை காட்சிகளோடு ஆதாரப்படுத்த திக்விஜயனுக்கு எதிர்வாதம் புரியமுடியவில்லை....
ஆனாலும் முயற்சிக்க முயல் நீதிபதியோ
“ஆதாரங்கள் அனைத்தும் மிஸஸ். ஸ்ரவ்யாவிற்கு ஆதரவாக இருப்பதால் இந்த விவாகரத்து செல்லுபடியாகும்..... மிஸஸ் ஸ்ரவ்யா மறுபடியும் ஒருமுறை கேட்கிறேன்... உங்களுக்கு இந்த விவாகரத்தில் முழுமனதாக சம்மதமா??” என்று நீதிபதி கேட்க ஸ்ரவ்யா தன் சம்மதத்தை தெரிவித்திட பார்த்தோ
“இல்லை.. எனக்கு இதில் இஷ்டமில்லை...”
“மிஸ்டர் பரத்... நீங்க மறுத்தாலும் இந்த விவாகரத்து தீர்ப்பு வழங்குவதில் எந்தவித மாற்றமும் இல்லை.... உங்க இஷ்டத்துக்கு ஒரு பெண்ணை பற்றியும் அவங்க ஒழுக்கத்தை பற்றியும் தரக்குறைவான கருத்துக்களை நீதிமன்றத்தில் சொல்வது சட்டப்படி குற்றம்... இதுக்கே அவங்க தனி கேஸ் பைல் பண்ணலாம்....அதுமட்டும் இல்லை..... நீங்க அவங்களை துன்புறுத்தியிருக்கீங்க....... அதற்கும் உங்களுக்கு தனி தண்டனை இருக்கு...... ரத்னமூர்த்தி உங்க கட்சிக்காரர் நஷ்ட ஈடு எதிர்பார்க்கிறாங்களா??”
“ஆமா சார்.... என்னோட கட்சிக்காரரிற்கு நஷ்ட ஈடாக ××××××××××× இந்த தொகை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.... “
“ம்ம்ம்... மிஸ்டர் பரத் மற்றும் ஸ்ரவ்யாவின் விவாகரத்து வழக்கின் தீர்வாக அவர்களது விவாகரத்து செல்லுபடியாகிறது என்று தீர்ப்பு வழங்குவதோடு ஸ்ரஸ்யாவின் தரப்பில் கேட்கப்பட்ட நஷ்ட ஈடை வழங்குமாறு பரத் தரப்பிற்கு உத்தரவிடுகிறேன்..... அதோடு ஸ்ரவ்யாவிற்கு நடந்த கொடுமைக்காக இரண்டு லட்சம் தண்டப்பணமும் ஒரு வருட சிறை வாசமும் தண்டனையாக பரத்திற்கு வழங்கப்படுகிறது.... இத்தோடு நீதிமன்றம் கலைகிறது........” என்று நீதிபதி அறிவிக்க அத்தோடு நீதிமன்றம் கலைந்தது....
பரத்தை போலிஸார் கைது செய்ய ஸ்ரவ்யாவோ தேவ்வை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டு தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள்.... இத்தனை நாட்களாய் அவளை உறுத்திக்கொண்டிருந்த பெரும் கவலை அவள் மனதைவிட்டு இன்று அகன்றது......
அப்போது அவர்களருகே நின்றிருந்த அஜய்
“இப்போ நீ ஹேப்பியா பேபி....??” என்று புன்னகையுடன் கேட்க தேவ்வை விட்டு விலகிய ஸ்ரவ்யா அஜயை அணைத்து
“ரொம்ப தேங்க்ஸ் அஜூ.... நீ இல்லைனா இந்த பிரச்சினையை இவ்வளவு சுமூகமாக முடிச்சிருக்கமுடியாது..... நீ என் நிம்மதியை மீட்டுக் கொடுத்திருக்க அஜூ....”என்று கண்ணீர்விட்டவளை விலக்கியவன் அவன் கண்களை துடைத்துவிட்டு
“நீ எப்பவும் ஜேப்பியாக இருக்கனும்...அது தான் என்னுடைய ஆசை..... உனக்கு ஒரு பிரச்சினைனா நான் எப்பவும் இருப்பேன்னு நீ மறந்திடக்கூடாது... ஓகேவா??”
“ம்ம்....” என்று ஸ்ரவ்யா தலையாட்டிட அதில் சிரித்த அஜயை பார்த்து
“ஆனால் எப்படி அந்த வீடியோவை கண்டுபிடிச்ச?? அதோடு அந்த மெடிகல் ரிப்போர்ட்ஸ்....”
“உன்னை அந்த பரத் எந்த இடத்துக்கு கூட்டிட்டு போனான்னு தெரிஞ்சிக்கிட்டு நம்ம அச்சு சித்தி சன் ப்ரணவ்வை அங்கு போய் விசாரிக்க சொன்னேன்.... அவன் தான் இந்த வீடியோவை கலெக்ட் பண்ணி கொடுத்தான் ....”
“யாரு ப்ரணவ்வா?? அவனுக்கு தான் என்னை பிடிக்காதே..... “
“அப்படினு நீ தான் நினைச்சிட்டு இருக்க.. அவனுக்கு உன் அப்பாவை தான் பிடிக்காது.....எங்க உன்கூட பேசுனா உங்க அப்பா அதை வைத்து உன்னை கஷ்டப்படுவாறுனு தான் உன்னை கண்டால் ஒதுங்கி போயிருக்கான்.....”
“அவரால் நான் எத்தனை சொத்துக்களையும் உறவுகளையும் இழந்திருக்கேன்....”
“விடு பேபி.... இனி எல்லாரோடும் சேர்த்துக்கலாம்.... என்ன தேவ் எதுவும் பேசாமல் இருக்கீங்க??”
“ஒன்றும் இல்லை..... இனி அடுத்து என்ன??”
“இனி சொத்தை மீட்பது மட்டும் தான் மீதி...”
“ஏன் அஜய் நஷ்ட ஈடு கேட்கும் போது சொத்தையே நஷ்ட ஈடாக கேட்டிருக்கலாமே??? ஏன் கேட்கலை...??”
“இல்லை தேவ்... அப்படி கேட்டிருந்தால் வழக்கு திசைமாற வாய்ப்பிருக்குனு லாயர் சொன்னாரு... அதனால் தான் இப்படியொரு நஷ்ட ஈடு தொகை.....”
“புரியல அஜய்...”
“அதாவது இது விவாகரத்து வழக்கு... சோ ஒரு ரீசனபல் அமௌன்ட் தான் கேட்க முடியும்... அதோடு இப்போ அந்த சொத்து லாயர் பெயரில் இருக்கு... சோ கேட்டும் நோ யூஸ்......”
“அப்படியா விஷயம்... சரி... இனி அடுத்த எப்போ ஹியரிங்..”
“நெக்ஸ்ட் வீக்னு லாயர் சார் சொன்னாரு. . வாங்க அவருகிட்ட பேசிட்டு வந்திடலாம்....” என்று கூறி அஜய் தேவ்வையும் ஸ்ரவ்யாவையும் லாயரிடம் அழைத்து சென்றான்....
லாயரிடம் பேசிவிட்டு மூவரும் கிளம்பினர்.....நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறி பாதையை கடக்க முற்படும் போது எங்கிருந்தோ வேகமாக வந்த லாரியொன்று தேவ்வை நெருங்க அதை கண்ட ஸ்ரவ்யா சுதாரித்து அவனை காப்பதற்காக கத்தும் முன் அந்த அசம்பாவிதம் நிகழ்ந்தது...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN