துளி 21

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சிந்தாமல் நின்றாடும்
செந்தேனே
சங்கீதம் உண்டாகும்
நீ பேசும்
பேச்சில் தான்....தேவ்வும் ஸ்ரவ்யாவும் படம் முடிந்ததும் வெளியே வர அங்கு அஜய் , திவ்யா இருவரும் நின்றிருந்தனர்....
அவர்களை கண்டதும் அவர்களருகே சென்ற ஸ்ரவ்யா
“அஜூ, திவி நீங்க இரண்டு பேரும் எப்படி இங்க??”
“ஏன்டி நாங்க எல்லாம் வரக்கூடாதா???” என்று திவ்யா அவளை முறைத்தபடி கேட்க அதில் சிரித்தவள் அவளருகே சென்று அவளை அணைத்தபடி
“என் பேபி என்மேல கோபமாக இருக்கீங்க போலயே???” என்று திவ்யாவின் கன்னத்தில் இதழ் பதிக்க ஸ்ரவ்யாவை மெதுவாக தள்ளிவிட்டவள்
“இவ்வளவு நாள் எங்களையெல்லாம் மேடமுக்கு கண்ணுலயே தெரியலை... இப்போ என்ன புதுசா.. போ... நான் உன் கூட டூ...”
“அச்சோ என் பேபி கோவிச்சிக்கிட்டா.. சாரி திவ்ஸ்... சாரி... உன் பெஸ்ட் ப்ரெண்டை மன்னிச்சிடுமா...”
“முடியாது போ...” என்று அவள் முறுக்கிக்கொள்ள அப்போது அஜய்
“அதான் பேபி சாரி சொல்லிட்டால்ல??? பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடலாமே..???”
“ஹலோ பாஸ் நீங்க என்ன அவளுக்கு தூதா?? இது எனக்கும் அவளுக்குமான பிரச்சினை... அதை நாங்க டீல் பண்ணிக்கிறோம்... யாரும் எங்களுக்கு கொடி பிடிச்சிட்டு வரவேண்டாம்..” என்று சற்று கடுமையாய் திவ்யா கூற ஸ்ரவ்யாவோ அவள் கடுமையில் சற்று ஆச்சரியமடைந்தாள்...
திவ்யா எப்போதுமே இவ்வாறு பேசியதில்லை.. அவள் பேச்சில் கடுமை இருக்குமென்பதே அவளுக்கு இன்று தான் தெரிந்தது...
அஜயையும் திவ்யாவையும் மாறி மாறிப்பார்த்த ஸ்ரவ்யாவிற்கு காரணம் புரிபட்டுவிட தனக்குள் சிரித்துக்கொண்டவள்
“ஹேய் அஜூவை திட்டாத... அவன் எனக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு வந்தா உன்கிட்ட பல்பு வாங்குவோம்னு தெரியாதில்ல...அதான் வந்திட்டான்.. விட்டுரு பாவம்..”
“இனிமே தெரிந்துக்கொள்ள சொல்லு.... யாரைபற்றியும் சரியாக தெரியாமல் எதுவும் பேச வேண்டாம்னு சொல்லு..” என்று திவ்யா கூற அஜயின் முகமோ வாடிவிட்டது.... அதை கண்ட தேவ்விற்கும் விஷயம் புரிபட அப்போது நிலைமை சுமூகப்படுத்த எண்ணி
“திவ்யாமா.... உன் அண்ணாவுக்காகவாவது சூட்டியை மன்னிச்சிடு... இல்லைனா இன்னைக்கு என் நிலைமை அவ்வளவு தான்..” என்று தேவ் கூற திவ்யாவோ
“ அப்படி என்னண்ணா ஆகும்??”
“வேற என்ன??? என் காதுல இரத்தம் வரும்....”என்று தேவ் பாவமாக கூற அவனை பார்த்து ஸ்ரவ்யா முறைத்தாள்...
அதை கண்டு சிரித்த திவ்யா
“உங்க நிலைமை ரொம்ப மோசமாக இருக்கும் போலவே அண்ணா.. சரி சரி உங்களுக்காக இந்த இடியட்டை மன்னிச்சு விடுறேன்... உங்களுக்காக மட்டும் தான் அண்ணா..” என்று ஸ்ரவ்யாவை முறைத்தபடியே கூறிய திவியின் கையினை பிடித்து கிள்ளியபடியே அவள் வலியில் துடிப்பதை பார்த்து சிரித்தபடியே ஸ்ரவ்யா
“ஓ... மேடம் உங்க அண்ணாவுக்காக பெரிய மனசு பண்ணி தான் என்னை மன்னிப்பீங்களா????? நான் இடியட்டா உனக்கு??” என்று ஸ்ரவ்யா தன் பிடியை விடாதிருக்க வலியில் அலறியபடியே
“ஸ்ர்வ்யா . ஆ... பேபி.... உ... வலிக்கிறது... பக்கி... ஆ... விடு...” என்று அலற அதை கண்டு மீண்டும் அஜய் ஸ்ரவ்யாவிடம்
“பேபி... ப்ளீஸ்... விட்டுரு.... பாவம் ரொம்ப வலிக்கிது போல விட்டுரு...” என்று திவியின் உதவிக்கு வர ஸ்ரவ்யாவோ
“இன்னைக்கு உன் ஆளை நான் விடுவதா இல்லை... அவளை காப்பாத்த நினைத்தால் உன்னையும் கிள்ளிடுவேன் பார்த்துக்கோ..” என்று ஸ்ரவ்யா அஜயை மிரட்ட விரைந்து அவள் கையை உதறிய நிவி
“ஏய் யாருக்கு யாருடி ஆளு???”
“வேறு யாருக்கு...??? அஜூவோட ஆளு தானே நீ...??” என்று கேலியாக கேட்க திவியோ
“அது.... நான்.. அது.... அதெல்லாம் எதுவும் இல்லை ...” என்று திவி மறுக்க ஸ்ரவ்யாவோ
“என்கிட்டயேவா... சரி விடு.... இப்ப சொல்லு... நீ எப்படி இங்க??”
“அண்ணா தான் நீங்க இரண்டு பேரும் இங்கு வந்திருப்பதாக சொன்னாரு.. அதான் உன்னை பார்க்கலாம்னு வந்தேன்..”
“அஜூ... நீ எப்படி இங்க??” என்று அஜயிடம் ஸ்ரவ்யா கேட்க அவன் பதில் கூறும் முன் தேவ்வே பதிலை கூறினான்.
“நான் தான் ஸ்ரயா வரச்சொன்னேன். திவியை கண்டால் நிச்சயம் நீ என்னை மறந்திடுவ.... அதான் எனக்கு கம்பெனிக்கு வரச்சொன்னேன்..”
“பார்த்தியா.... கிடைக்கிற கேப்பில் என்னை கிண்டல் பண்ணுற??” என்று ஸ்ரவ்யா சிணுங்க
“ஹாஹா.... நிஜமாக உன்னை கிண்டல் பண்ணலை ஸ்ரயா.... நான் சொன்னது அத்தனையும் உண்மை தான்...”
“போடா...” என்றபடி ஸ்ரவ்யா அங்கிருந்து விறுவிறுவென நடக்க தேவ்வும் அவளை சமாதானப்படுத்தும் பொருட்டு பின்னாலேயே ஓடினான்...
அவ்விடத்தில் திவியும் அஜயும் மட்டும் தனித்து நிற்க அச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்த நினைத்தான் அஜய்..
“சாரி யாஷி....” என்று அவன் மன்னிப்பு கோர திவியோ அங்கிருந்து விலகமுயல அவள் கைபிடித்தே தடுத்தவன்
“அம்மு.... நான் சொல்வதை ஒரு தடவை கேளுமா.. ..”
“கையை விடு ஜெய்...”
“ப்ளீஸ் மா... என்னை மன்னிச்சிடு.... உன்கிட்ட இருந்து எல்லாத்தையும் மறைத்தது தப்பு தான்... அது நான் வேணும்னு எதுவும் பண்ணலை...”
“எதுடா வேணும்னு பண்ணலை.... எல்லாம் தெரிந்தும் நீ என்கிட்டேயிருந்து மறைத்திருக்க...”
“தப்பு தான் யாஷி... ஆனால் மறைக்கனும்னு மறைக்கலை... எங்க உனக்கும் இதனால் ஏதாவது பிரச்சினை வந்திடுமோனு பயந்து தான் மறைத்தேன்.. எனக்கு பேபி எவ்வளவு முக்கியமோ அதே அளவு நீயும் எனக்கு முக்கியம்மா....”
“அஜய் அவ உனக்கு அத்தை பொண்ணுனா எனக்கு அவ பெஸ்ட் ப்ரெண்டுடா... அவளுக்கு ஒரு பிரச்சினைனா அவளை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கும் இருக்குடா....”
“இதனால் தான் யாஷி நான் எதுவும் சொல்லலை..... பேபி அப்பாவை பற்றி நல்லா தெரிந்தபிறகு உனக்கும் அவரால் ஏதாவது பிரச்சினை வந்திடுமோனு தான் உன்கிட்ட எல்லா விஷயத்தையும் மறைத்தேன்....”
ஆம் அஜயும் திவ்யாவும் காதலிக்கின்றனர்... அஜயுடனான காதல் திவ்யாவின் பள்ளிக்காலத்தில் தொடங்கியது.... சிறு வயது முதலே ஸ்ரவ்யாவின் மூலம் அவனை அறிந்தவள் ஏலவல் படிக்கும் போது இன்ஸ்டகிராம் மூலம் அஜயோடு நட்பானாள்... ஸ்ரவ்யாவின் மூலம் அஜயை நன்கு அறிந்தவளுக்கு மனதளவில் அவன் மீது ஈர்ப்பிருந்தது... அந்த ஈர்ப்பு சில காலத்தில் காதலாய் மாறிட அஜயே தன் காதலை வெளிப்படுத்திட திவ்யாவும் தன் சம்மதத்தை தெரிவித்தாள்....இன்ஸ்டா மூலமே காதலை வளர்த்தவர்கள் தம் காதலை ஸ்ரவ்யாவிற்கு தெரியப்படுத்தவில்லை என்ற போதிலும் ஸ்ரவ்யா அதை ஊகித்திருந்தாள்..... அவர்களிருவரும் தெரியப்படுத்தும் வரை அமைதியாக இருக்க வேண்டுமென ஸ்ரவ்யா முடிவெடுத்திருக்க இவர்களோ இணையத்திலேயே டூயட் பாடித்திரிந்தனர்....
இவ்வாறிருக்கையில் ஸ்ரவ்யாவிற்கு நடந்த எதையும் அஜய் திவ்யாவிற்கு தெரியப்படுத்தவில்லை... திவ்யா ஸ்ரவ்யா பற்றி விசாரிக்கும் போதெல்லாம் ஏதேதோ காரணம் சொல்லி மழுப்பி வந்தான்.... தேவ்வின் மூலம் ஸ்ரவ்யாவின் நிலையை அறிந்த திவ்யா அத்தோடு அஜயோடு பேசுவதை அடியோடு நிறுத்துவிட்டாள்...அஜய் எவ்வளவோ முயற்சித்தும் அவள் இடம்கொடுக்கவில்லை...அதனாலேயே இன்றும் அவ்வாறு அவனிடம் கடுகடுத்தாள்..... அவளை பொறுத்தவரை அஜய் அவளை காதலியாக எண்ணி அவன் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொள்ளவில்லை என்ற கோபமே மேலோங்கியிருந்தது.... ஆனால் அஜயோ ஸ்ரவ்யாவிற்கு நிகழ்ந்தது யாருக்கும் தெரியக்கூடாது என்று எண்ணினான்...
தேவ்விற்கு கூட எதிர்காலத்தில் தனக்கு எதையும் தெரிவித்திடவில்லையென தேவ்விற்கும் ஸ்ரவ்யாவிற்கும் எந்த பிரச்சினையும் வந்திடக்கூடாதென எண்ணியே அனைத்தையும் தெரியப்படுத்தினான்...
ஆனால் திவ்யாவும் இப்போது தன்னிடம் எல்லாவற்றையும் மறைத்துவிட்டதாய் சண்டையிட அவளை சமாதானப்படுத்தமுடியாது திண்டாடினான் அஜய் ....
“தப்பு தான் யாஷி... ப்ளீஸ் மன்னிச்சிடு..... இனிமே உன்கிட்ட எதுவும் மறைக்கமாட்டேன்... என்னை நம்புமா..”. என்று பலமுறை அவள் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக கெஞ்சி ஒருவழியாய் திவ்யாவை மலையிறக்கினான் அஜய்...
இருவரும் சமாதானமானதும் தேவ்வை அழைத்தான் அஜய்...
அவன் ஸ்ரவ்யாவோடு பீச்சில் இருப்பதாக கூறி அவர்களை வரச்சொல்ல அஜயும் திவியை அழைத்துக்கொண்டு பீச்சிற்கு சென்றான்....
அங்கு நேரத்தை கழித்த நால்வரும் உணவை முடித்துக்கொண்டு தம்மிடம் திரும்பினர்....
தம் அறைக்கு வந்த தேவ்வும் ஸ்ரவ்யாவும் ஒருவர் மாற்றி ஒருவர் உடை மாற்றிவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்து கொண்டனர்...
தேவ் அறையிலிருந்த தொலைகாட்சியை உயிர்ப்பித்துவிட்டு கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து கொள்ள ஸ்ரவ்யாவோ அவன் மடியினில் தலை வைத்து படுத்தாள்..
அவளது செயலில் தேவ்வின் இதழில் புன்னகை வந்து ஒட்டிக்கொள்ள அவள் தலையை கோதத்தொடங்கினான்...
அவளோ அவன் செய்கையை தடுத்து அவன் கையினை எடுத்து தன் கன்னத்தின் மீது வைத்து அழுத்த தேவ்வும்
“என்னாச்சு ஸ்ரயா???”
“சும்மா தான்....”
“ம்ம்.. ஆமா... அஜயும் திவ்யாவும் லவ் பண்ணுவாங்களா??”
“ஆமா ராகவ்... இரண்டு பேரும் ரொம்ப நாளாக ஒருத்தரையொருத்தர் விரும்புறாங்க... ஆனா இரண்டு பேருமே இதை என்கிட்ட சொல்லலை.... அவங்களாகவே சொல்லட்டும்னு நானும் இதுவரை கேட்கலை...”
“ஓ... ஆனால் திவி உன்கிட்ட இதை மறைச்சிட்டாளேனு உனக்கு கோபம் வரலையா???”
“இந்த விஷயம் தெரிஞ்சப்போ இரண்டு பேர் மேலேயும் செம்ம கோபம் வந்திச்சு.... ஆனா அவங்க நிலையில் இருந்து யோசிச்சப்போ அவங்க மனநிலையை புரிந்தது....”
“பார்டா... அப்படி என்ன என் வீட்டுக்கார அம்மணிக்கு புரிந்தது....???”
“அஜூ என்னோட கசின்.. அதாவது அஜூ என்னுடைய மாமா பையன்..... அதோடு திவிக்கு அஜூவை என்மூலமாக தான் தெரியும்... அவங்க இரண்டு பேரும் விரும்புவதை நான் தப்பாக நினைச்சிருவேனோனு அவங்க நினைச்சிருப்பாங்க....”
“இதுல தப்பாக நினைக்க என்ன இருக்கு ஸ்ரயா??”
“அவங்க இரண்டு பேருக்குமே நான் ரொம்ப முக்கியம்... எங்க அவங்க ரிலேஷன்சிப்பால் எனக்கும் அவங்களுக்கும் இடையில் உள்ள உறவு பலவீனப்பட்டிருமோனு இரண்டு பேரும் நினைத்திருக்கலாம்.... அதுமட்டும் இல்லை.... நான் அவங்க உறவை தவறாக எடுத்துப்பேனோங்கிற பயமாக கூட இருந்திருக்கலாம்....”
“உன்னை பற்றி தெரிந்தும் கூட அவங்க எப்படி அப்படி நினைப்பாங்க??”
“அது அப்படி இல்லை ராகவ்.. இது அவங்களுக்கு என்மீதுள்ள உரிமையால் எழுகின்ற பயம்... அதாவது அஜூ என்னோட மாமா பையனாக இருந்தாலும் அவன் என்னோட க்ளோஸ் ப்ரெண்ட்..... அதே மாதிரி திவியும் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட்.... நான் அவங்க காதல் பற்றி சின்னதாக கோபப்பட்டால் கூட இரண்டு பேரும் நிச்சயம் காயப்படுவாங்க..... அதுக்கு பயந்து கூட இரண்டு பேரும் சொல்லாமல் இருந்திருக்கலாம்.....”
“ஓ.... சரி சரி... ஆனா ஏன் இன்றைக்கு இரண்டு பேரும் சண்டை போட்டுகிட்டாங்க...??”
“எனக்காக தான் இருக்கும்...”
“உனக்காகவா??”
“ஆமா..அஜூ என்னை பற்றி எதுவும் திவிகிட்ட சொல்லியிருக்கமாட்டான்... அதான் அவ சண்டை போட்டிருப்பா...”
“அது எப்படி நீ இவ்வளவு நிச்சயமாக சொல்லுற ஸ்ரயா???”
“அது அப்படி தான்....”
“ம்ம்ம்... சரி தூங்கிறியா???லைட்டை ஆப் பண்ணட்டுமா??”
“ஏன் ராகவ் உனக்கு தூக்கம் வருதா???”
“இல்லை... “
“அப்போ கொஞ்ச நேரம் பேசலாம்...”
“சரி சொல்லு ஸ்ரயா...”
“ உனக்கு எப்போ என்னை ரொம்ப சைட் அடிக்கனும்னு தோன்றியது??”
“ஹாஹா.. இது என்னடி கேள்வி??? உன்னை எப்போ பார்த்தாலும் சைட் அடிக்கத்தோன்றும்..ஏன்னா நான் ஒவ்வொரு முறையும் உன்னை பார்க்கும் போதும் உன்னோட அழகு கூடியிருக்கமாதிரி தான் தோன்றும்.. அதை ரசிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்..”
“நான் அதை கேட்கலை ராகவ்... என்னை பலதடவை பார்த்திருப்ப..... ஆனா நிச்சயம் ஒருமுறை மற்றமுறைகளை விட கொஞ்சம் வித்தியாசமாக இருந்திருக்கும்... அது எப்போனு சொல்லு...”
“அது.... “ என்று யோசித்தவன்
“இரு காட்டுறேன்...” என்றபடி தன் மொபைலை எடுத்தவன் அதிலிருந்து ஒரு புகைப்படத்தை ஸ்ரவ்யாவிற்கு காட்டினான்....
அது அவள் காலேஜ் கார்டனில் இருந்த பென்ஞ்சில் அமர்ந்திருந்த போது எடுத்த புகைப்படம்...
அதில் அவள் காலின் மேல் காலிட்டு காதில் ஹியர் செட் அணிந்தபடி கையில் ஏதோவொரு புத்தகத்தை பிரட்டியபடியிருக்க அவள் அமர்ந்திருந்த இடத்திற்கு கீழே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற பூக்கள் சிதறிக் கிடந்தது.... அதோடு அவள் அமர்ந்திருந்த பெஞ்சில் ஒருபுறம் புத்தகங்களும் அவளது மொபைலும் வீற்றிருந்தது... அவள் நீலநிற ப்ளவுசும் பச்சை மற்றும் இன்னும் பல வண்ணங்கள் கலந்த நீண்ட பாவடையொன்று அணிந்திருந்தாள்.. தலையில் வெள்ளை நிற பேன்ட் மட்டும் இருந்தது.. இந்த காட்சி அவளிற்கு ஒருபுறமாய் ஒரு சந்திலிருந்து எடுக்கப்பட்டது போல் இருந்தது...
அதை பார்த்த ஸ்ரவ்யா
“ஹேய் இது எப்போ எடுத்தது... அதுவும் எனக்கே தெரியாமல் சைட் ஆங்கிலில்....” என்று அப்புகைப்படத்தை ரசித்தபடியே கேட்க
“இது நீ நம்ம காலேஜ் கார்டனில் இருந்தப்போ எடுத்தது.... நான் அந்த வழியாக போகும் போது உன்னை பார்த்தேன்... உன்கிட்ட வந்து பேசலாம்னு தான் நினைத்தேன்.... ஆனா ஏனோ நான் கண்டதை அப்படியே புகைப்படமாக சேமிக்கனும்னு தோன்றியது.... உடனே அதை அப்படியே என்னுடைய மொபைலில் கேப்சர் பண்ணிட்டேன்.... அந்த நேரம் நீ அவ்வளவு அழகாக இருந்த.. அதுக்கு காரணம் உன் உடையா, அலங்காரமா, நீ அமர்ந்திருந்த விதமாக,உன் செயலா, இல்லை சூழலானு தெரியலை... ஆனா அந்த நொடி என்னோட மனதில் அப்படியே பதிந்திடுச்சு...”
“நிஜமாகவே இந்த ஸ்னெப் அவ்வளவு அழகாக இருக்கு ராகவ்....”
“இல்லை நீ தான் அதில் அவ்வளவு அழகாக இருக்க...”
“ம்ம்.. சரி.. அப்புறம் இன்னொரு கேள்வி... நான் எப்படி இருந்தால் உனக்கு பிடிக்கும்....??”
“என்ன இன்னைக்கு என் வீட்டுக்காரம்மா கேள்வியாக கேட்டுட்டே இருக்காங்க... “
“சொல்லு ராகவ்....”
“இப்படி தான் இருக்கனும்னு சொல்லமுடியாது... நீ நீயாகவே இருக்கனும்னு தான் நான் ஆசைப்படுறேன்.....”
“ஹான்... அப்படியா??”
“ஆமா ஸ்ரயா.. உன்னோட இயல்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். வளைந்து கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை... ஆனால் மொத்த வாழ்க்கையையும் வளைந்து கொடுப்பது முட்டாள் தனம்... உன்னுடைய தேவையை வெளிப்படுத்தவும் அதை நிறைவேற்ற தயங்காத உன்னுடைய குணம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... சொல்லப்போனா உன்மேல் காதல் வருவதற்கு முதல்காரணமே அது தான் .... “
“ஹாஹா... என்ன ராகவ்... பிடிவாதம் பிடிப்பது தப்புனு எல்லாரும் சொல்லுவாங்க... ஆனால் நீ இந்த பிடிவாதம் தான் பிடிச்சிருக்குனு சொல்லுற??? ஆனாலும் இவ்வளவு அழகாய் சொல்ல உன்னால் மட்டும் தான் முடியும்...” என்று ஸ்ரவ்யா அவன் கையை பிடித்தபடியே சிரிக்க அவள் சிரிப்பில் மயங்கியவன் அவள் கன்னம் பற்றி கிள்ளிய படியே
“அழகான பிடிவாதம் கூட அழகுதான் ஸ்ரயா.... உன்னோட பிடிவாதம் தான் இந்த நொடி வரை நாம் சேர்ந்திருப்பதற்கு காரணம்.... உன்னோட பிடிவாதம் தான் இத்தனை பிரச்சினைக்கு பிறகும் உன்னை தைரியமாக வைத்திருக்கு... உன்னோட பிடிவாதம் தான் வேண்டாம்னு போனவனை மறுபடியும் உன்கிட்ட வரவைத்திருக்கு..... அப்படி இருக்கும் போது உன்னோட பிடிவாதம் அழகு தானே ஸ்ரயா...” என்று தேவ் கூற எழுந்தமர்ந்த ஸ்ரவ்யா தேவ்வினை இமைக்க மறந்து பார்த்திருந்தாள்....
அவனது வார்த்தைகள் அனைத்தும் உண்மையே.... அவள் பிடிவாதம் தான் அனைத்திற்கும் காரணம்.... ஆனால் அதை பாராட்டுதலாக தேவ்வின் வார்த்தைகளால் கேட்டவளுக்கு உவகை பொங்கி வழிந்தது....
பலர் தன் இந்த பிடிவாதகுணத்தை குறையாய் சுட்டிக்காட்டியிருக்க தன் மனம் கவர்ந்தவனோ அந்த குணத்திற்காகவே அவளை பிடித்ததாக கூற கேட்டவள் அவனை இறுக அணைத்துக்கொண்டாள்....
தேவ்வும் அவளை மென்மையாக அணைத்தவன்
“என்னாச்சு ஸ்ரயா???”
“கொஞ்சம் நேரத்துக்கு எதுவும் கேட்காத ராகவ்...”என்றவள் அவனை இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்...
ஸ்ரவ்யாவின் வேண்டுகோளிற்கு இணங்கி தேவ்வும் அவளை அணைத்தபடியே அமைதியாக இருந்தான்...
சில மணித்துளிகளுக்கு பின் ஸ்ரவ்யாவிடம் ஏதும் அசைவில்லாதிருக்க அவளை மெதுவாக விலக்க அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்....
மெதுவாக அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் அவளை கட்டிலில் சரியாக படுக்கவைத்து போர்வையை போர்த்தி விட்டு எழமுயல அவள் கையை இறுக பற்றி இருந்தாள் ஸ்ரவ்யா...
அதை கண்டவன் சிரித்தபடியே தன் கையை விலக்கமுயல ஸ்ரவ்யாவோ உறக்கத்தில்
“ராகவ்... எனக்கு நீ மட்டும் போதும்டா.... வேறு யாரும் வேண்டாம்... நீ... மட்டும் என்கூடவே இரு... எப்பவும் என்னை விட்டு போயிடாத...என்னை விட்டுட்டு போயிடாத...” என்று உளற அவள் கையில் ஒரு அழுத்தம் கொடுத்தவன் அவள் முன்னுச்சியில் இதழ் பதிக்க அவள் உளறல் நின்று ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள்....
அவள் கையிலிருந்து மெதுவாக தன் கையினை பிரித்தவன் ஏசியினை சரியான அளவில் வைத்துவிட்டு பால்கனிக்கு வந்தான்....
அங்கு வெண்ணிலா உலா வந்துகொண்டிருக்க அதை ரசித்தபடியே அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் தன் கையில் இருந்த தன் மொபைலை எடுத்து அந்த வீடியோவை பார்க்கத்தொடங்கினான்....
அது அவர்கள் நுவரேலியாவிலிருந்த ஸ்ரோபரி தோட்டத்திற்கு சென்றிருந்த போது எடுக்கப்பட்ட காணொளி....
அதில் ஸ்ரவ்யா ஒரு ஸ்ராபரியை ருசிப்பது காணொளியாக்கப்பட்டிருந்தது. .
அந்த ஸ்ராபரி பண்ணையில் பல இன ஸ்ராபரிகள் இருக்க அந்த ஸ்ராபரி இனங்களை பற்றி விளக்கியபடி வந்த கைட் ஸ்வீட் ஸ்ராபரி பற்றி விளக்கினார்...
வழமையான ஸ்ட்ராபெரி போலல்லாது இந்த ஸ்ராபரி இனம் இனிப்புச் சுவை கொண்டது என கூற ஸ்ரவ்யாவும் தானும் அதை சுவைக்க வேண்டுமென கூறிட அந்த கைட்டும் ஸ்வீட ஸ்ட்ராபெரி பழமொன்றை அவளிற்கு கொடுத்தார்... அவள் அதை சாப்பிடுவதை தேவ்விடம் கூறி வீடியோ எடுக்கச்சொல்ல தேவ்வும் அதை வீடியோ எடுத்திருந்தான்...
அதை ஸ்ரவ்யா ரசித்து ருசித்து சாப்பிட்ட அழகு இன்னும் வரை தேவ்வை மதிமயங்கவைக்கும்..... அந்த ஸ்ராபரியை அவள் வாயினுள் இட்டு மென்று ருசிக்கும் போது அந்த கன்னமிரண்டும் இடையிடையே உப்பி எழும்பிட கண்மூடி அவள் சுவைக்கும் அழகு பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்.. அதுவும் அவள் அதரங்கள் அந்த பழத்தை உள்ளிழுக்கும் ஒவ்வொரு நொடியும் ஓவியமாய் வடிக்கப்படவேண்டிய வரைபடம்.... உண்டு முடித்ததும் அவள் சப்புகொட்டும் அழகை விவரிக்க வார்த்தைகள் இல்லை... அதை உண்டு முடித்ததும் அவள் முகம் பிரதிபலித்த வியப்பை இன்று வரை தேவ்வின் மனம் ரசிக்கும். .
அவள் நினைவு வரும்போதெல்லாம் தேவ் இந்த காணொளியை எடுத்து பார்ப்பான்.. அவளை பிரிந்தபோதிலும் அவள் நினைவுகளையும் ஞாபகங்களையும் அவன் மறந்திட முயலவில்லை.. இன்று வரை அவள் கொடுத்த அனைத்து பொருட்களையும் பத்திரமாக வைத்திருக்கிறான் தேவ்..
அந்த காணொளியை நிறுத்தியவன் அவளது குரலில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு பாடலை ஓடிவிட்டவன் அதை ஹெட்செட்டின் உதவியோடு கேட்டபடியே உறங்கிவிட்டான்.

உன்னோடு வாழ்வது ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே ஆனந்தமே
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே

காதலாட காதலாட காத்திருந்தேனே
ஆசை நூலில் பாச பூக்கள் கோர்த்திருன்தேனே
செய்யாத மாதவம் நீயே பொய்யாத பேரருள் நீயே
ஓயாத தேன்மழை அதை ஏந்தவே புது பூமி செய்வோமே
உன்னோடு வாழ்வது ஆனந்தமே ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே ஆனந்தமே
இல்லைகள் இங்கில்லை பேரின்பமே
நீல வானம் மாய்ந்த போதும்
நீ இருப்பாயே
தேவகானம் தூய மௌனம்
நீ கொடுப்பாயே
பொல்லாத போர்களில் உன் வேர்வையாக
பூதிருப்பேனே
நில்லாத ஓடையாய் உன் கை பிடித்து
ஓடுகின்றேனே

ஆலகால நஞ்சு பாய்ந்தது
மெல்ல மீள்வோமே
பிள்ளை தெய்வம் மண்ணில் தோன்றிட
வாழ்வு நீல்வோமே

உன்னோடு வாழ்வது ஆனந்தமே
உன்னோடு வாழ்வது ஆனந்தமே
உன்னோடு உன்னோடு வாழ்வது ஆனந்தமே
உன்னோடு உன்னோடு வாழ்வது
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN