துளி 20

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல்
செய்வோம் வருவாய்


இரண்டு மாதங்களுக்கு பிறகு தேவ்வுடன் கொழும்பிற்கு வந்தாள் ஸ்ரவ்யா...
விவாகரத்து வழக்கிற்கான அழைப்பு வந்திருக்க ஸ்ரவ்யாவை கொழும்பிற்கு அழைத்து வந்திருந்தான் தேவ்....
அஜய் அனுப்பிய விவாகரத்து பத்திரத்தை தேவ் ஸ்ரவ்யாவுடன் காட்டியபோது அவளது மனநிலையை அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை...
அதை கையில் கூட வாங்காது அவன் கூப்பிட கூப்பிட அதை மதியாது அவனை கடந்து சென்றுவிட்டாள்..
பின்னாடியே செல்ல முயல அவளோ பக்கத்து வீட்டிற்கு சென்றிட பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்..
ஆனால் அதற்கு பிறகும் ஸ்ரவ்யா அவனை தவிர்க்க அதில் குழம்பியவன் அவளிடம் விசாரிக்க முயல அவளோ தேவ்வை தவிர்ப்பதையே கருத்தாய் செய்தாள்....அதில் கடுப்பானவன் தன் தங்கையை அழைத்து அவளை தேயிலை தோட்டத்திற்கு அழைத்து வரச்சொன்னான்...
நதியும் தேவ் சொன்னபடியே ஸ்ரவ்யாவை ஏதோ காரணம் கூறி அந்த தேயிலை தோட்டத்திற்கு அழைத்து வந்தாள்...
மாலை மங்கும் வேளையில் தேயிலைக்கொழுந்துகள் பச்சை பசேலென படர்ந்துகிடக்க பனித்தூறல்களோ தம் தூறல்களை தூவத் தயாராகிக்கொண்டிருக்க அதன் நடுவே நாயகமாக அமைந்திருந்த கற்பாறையின் மீது அமர்ந்திருந்தான் தேவ்..
மாலை நேரமென்பதால் அவ்விடத்தில் கொழுந்தெடுக்கும் வேலை முடிந்திருக்க அங்கு எவரும் இருக்கவில்லை...
நதியோடு வரப்போகும் ஸ்ரவ்யாவை எதிர்பார்த்திருந்தவனது எண்ணம் முழுதும் அவளே... அவளது இந்த ஒதுக்கத்துக்கான காரணம் அந்த விவாகரத்து பத்திரம் என்று புரிந்த போதும் அதற்கான சரியான காரணம் அவனுக்கு புரியவில்லை...
அவன் யோசனையில் இருக்க அப்போது அங்கு நதியும் ஸ்ரவ்யாவும் வந்தனர்...
தேவ்வை கண்டதும் அங்கிருந்து செல்லமுயன்றவளை கைபிடித்து தடுத்த தேவ்
“நதி நீ வீட்டுக்கு போ... நான் இவளை கூட்டிட்டு வர்றேன்...” என்று கூறி நதியை அனுப்பிட ஸ்ரவ்யாவோ
“இல்லை இரு நதி நானும் வருகிறேன்...” என்று கூறி அவளுடன் செல்லமுயன்றாள்...
நதியோ என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்க தேவ்வோ ஸ்ரவ்யாவின் கையை இறுக்கமாய் பற்றி அவள் கையில் ஒரு அழுத்தம் கொடுத்தபடியே நதியிடம்
“நீ போ...” என்று கூறிட நதியும் தாமதியாது கிளம்பினாள்..
நதி அங்கிருந்து சென்றதும்
“கையை விடு...” என்று ஸ்ரவ்யா கூற அவள் கையை விட்டவன் அவளை முறைத்தபடியே
“இப்போ என்னாச்சுனு இப்படி முகத்தை திருப்பிட்டு அலையிற??”
“நான் இப்படி தான் இருப்பேன்.. இனியும் இப்படி தான் இருப்பேன்...”
“இவ்வளவு நாள் நல்லா இருந்தவளுக்கு இப்போ திடீர்னு என்னாச்சு..?? சொல்லு.. இப்போ எதை நினைத்து மனசை போட்டு குழப்பிக்கிற?? உனக்கு விளக்கம் கொடுத்தே எனக்கு வாழ்க்கை போயிடும் போல..”
“அவ்வளவு கஷ்டம்னா ஏன் என்னை உன் கூடவே வச்சிருக்க எக்கேடோ கெட்டு போனு விட்டுருக்க வேண்டியது தானே..”
“ஹேய்.. இப்போ என்னாச்சுனு இப்படி கோபப்படுற?? சும்மா விளையாட்டுக்கு சொன்னதெல்லாம் இப்படி சீரியஸாக எடுத்துக்கலாமா??”
“ஆமா.. நான் இப்படி தான்னு தெரிந்து தானே.. என்னை லவ் பண்ண??”
“ஸ்ரவ்யா... விஷயம் என்னனு சொல்லாமல் இப்படி வார்த்தைக்கு வார்த்தை பேசுனா எப்படி?? இப்போ எதுக்கு இப்படி இருக்க?? எதுக்கு டிவோர்ஸ் பேப்பரை கொடுத்தப்போ கண்டுக்காமல் போன??”
“ஓ... அப்போ அதை விசாரிக்க தான் என்னை இங்கு வரவைத்த?? அப்படி தானே...??”
“கடவுளே... இவ என்ன இன்னைக்கு இவ்வளவு பேசுறா?? அம்மா தாயே... பிரச்சினை என்னனு சொல்லாமல் என்னை காய்ச்சி எடுத்தா எப்படி...?? விஷயத்தை சொல்லு... அதுக்கு பிறகு விளக்கம் சொல்லுறேன்....”
“நீ எதுக்கும் விளக்கம் சொல்லத்தேவையில்லை... என்னை விடு நான் போறேன்...” என்று நகரமுயன்றவளை கைபிடித்து இழுத்து அந்த தோட்டத்தின் சற்று மறைவான இடத்திற்கு இழுத்து சென்றவன்
“சூட்டி... இப்போ என்ன ஆச்சுனு இப்படி கோபப்படுற?? அஜய் கால் பண்ணிட்டே இருக்காரு.. முதலில் இந்த டிவோர்ஸ் பேப்பரில் சைன் பண்ணு.. பிறகு நம்ம சண்டையை பார்த்துக்கலாம்...”
“என்னால முடியாது...”
“ஹேய்.. இப்போ எதனால முடியாதுனு சொல்லுற.... இதில் சைன் பண்ணுறதுல உனக்கு என்ன பிரச்சினை??”
“உனக்கு என்னை விட இது தானே இப்போ ரொம்ப முக்கியம்....”
“என்ன சூட்டி புரியாமல் பேசுற?? இது எவ்வளவு முக்கியம்னு உனக்கு தெரியாதா??”
“இல்லை.. உனக்கு என்னை விட இப்போ இந்த டிவோர்ஸ் பேப்பரில் நான் சைன் பண்ணுறது தான் ரொம்ப முக்கியம்..”
“லூசு மாதிரி பேசாத... நீ முக்கியம்னு நினைக்கிறதால தானே.. இதை செய்றேன்... இல்லைனா இதை செய்றதுக்கு எனக்கான அவசியம் என்ன??”
“இருக்கு.. உனக்கு நான் அந்த பரத்தோட மனைவி அப்படீங்கிற எண்ணம் தான் மனசுல இருக்கு.. அதனால தான் அதை இல்லாமல் பண்ணுற வேலையில் முதலில் இறங்கியிருக்க...”
“வேணாம் ஸ்ரவ்யா... ஏதாவது பேசனுங்கிறதுக்காக பேசாத... உனக்கே தெரியும்... எது உண்மைனு...”
“ஆமா... நானும் இவ்வளவு நாளா உனக்கு நான் மட்டும் தான் முக்கியம்னு நினைச்சிருந்தேன்.. ஆனால் இப்போ உனக்கு முதலில் உன்னோட மனசிலுள்ள சஞ்சலத்தை இல்லாமல் பண்ணனும்.. அதுக்கு பிறகு தான்.. நான் என் காதல் எல்லாமே...”
“இங்கபாரு ஸ்ரவ்யா... என் மனசுல எப்பவுமே எந்த குழப்பமோ சந்தேகமோ இருந்ததில்லை... நீ தான் ஏதோ தேவையில்லாததை எல்லாம் யோசித்து உன் மனசை குழப்பிக்கிற..... இங்கப்பாரு.. உனக்கு இஷ்டம்னா சைன் பண்ணு.. இல்லைனா விட்டுடு... அதனால் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. இப்போ வா.. வீட்டுக்கு போகலாம்...” என்று தேவ் அவள் கைபிடிக்க அதை உதறியவள்
“நீ என்ன நினைச்சிட்டு இருக்க மனசுல??? நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன்னு நினைச்சியா... ஆமா கேட்டேன்.... இத்தனை நாளாக உண்மையாக இருந்த உன் காதலுக்காக நீ சொன்ன எல்லாத்தையும் கேட்டேன்... ஆனா எப்போ உனக்கு மற்ற பிரச்சினைகளை விட இந்த டிவோர்ஸ் வாங்குவது முக்கியமானதாக போயிடுச்சோ... அப்போவே உன் காதல் பொய்யாகிடுச்சு... நீ என்னை உண்மையாக விரும்பலை... நீ எனக்கு வேண்டாம்...” என்று ஸ்ரவ்யா கோபத்தில் ஏதேதோ உளற அதில் கோபம் கிளர்ந்தெழப்பெற்ற தேவ் அவளை அறைந்துவிட்டான்......
“என்னடி நினைச்சிட்டு இருக்க மனசுல?? என்னை என்ன பொறுக்கினு நினைச்சிட்டியா?? டிவோர்ஸ் பேப்பரில் சைன் கேட்டா என் காதல் பொய்யாகிடுமா??? அப்புறம் என்ன சொன்ன?? என் மனசுல நீ அந்த கேடுகெட்டவன் பொண்டாட்டிங்கிற எண்ணம் இருக்கு?? இதை சொல்ல உனக்கே அபத்தமாக இல்லை...???? உனக்கு நடந்தது விபத்துனு நானே எத்தனை தடவை என் வாயால் சொல்லியிருப்பேன்... அப்படி பட்ட நானே அப்படி நினைக்கிறேன்னு நீ எப்படி சொல்லலாம்??? சஞ்சலமோ குழப்பமோ என் மனசுல இல்லை... உன் மனசுல தான் இருக்கு... உன் கூட தான் என் வாழ்க்கைங்கிறதில் நான் தெளிவாக தான் இருக்கேன்... அதுல அந்த பரத்தோ அந்த லாயரோ யாரு வந்தாலும் நான் பயப்படமாட்டேன்... இதை நான் உன்கிட்ட பலமுறை சொல்லியாச்சு.... நீ தான் ஏதேதோ நினைத்து உன்னை குழப்பிக்கிற?? என்ன கேட்ட உன்னை விட அந்ந டிவோர்ஸ் பேப்பரில் நீ சைன் பண்ணுறது முக்கியமானா??? ஆமா முக்கியம் தான்... உன்னோட வாழ்க்கையை அந்த பரத்தோ லாயரோ எந்த விதத்திலும் அவங்களுக்கு சாதகமாக மாற்றிடக்கூடாதுனு தான் அஜய்கிட்ட டிவோர்ஸிற்கான வேலையை பார்க்கச்சொன்னேன்...
உன் தாத்தாவோட உயில்படி நீ உன்னோட வாழ்க்கைத்துணையோடு ஒரு வருஷம் வாழ்ந்திருந்தால் தான் சொத்தை கைமாற்றுகின்ற உரிமை உனக்கு வரும்...
அந்த லாயரும் பரத்தும் சேர்ந்து நீயும் பரத்தும் ஒரு வருஷம் சேர்ந்து வாழ்ந்ததாக ஆதாரத்தை காண்பித்து உன்னுடைய சொத்தை அவங்க பெயருக்கு மாற்றிட்டாங்க.... இப்போ சொத்தை மீட்கனும்னா நான் கேஸ் போட்டா மட்டும் தான் முடியும்... ஆனாலும் உன் பெயரில் உள்ள சொத்து அவங்ககிட்ட தான் இருக்கும்... அதையும் மீட்கனும்னா நீ அந்த கேடுகெட்டவனை டிவோர்ஸ் பண்ணியிருக்கனும்... விவாகரத்துக்காக நீ சொல்லப்போற காரணத்தை வைத்தே உன் பெயரிலுள்ள சொத்தையும் மீட்கலாம்.. அதற்காக தான் உன்னை டிவோர்ஸ் பேப்பரில் சைன் பண்ண சொன்னேன்.. மற்றபடி இதில் எனக்கு எந்தவித விருப்பு வெறுப்புக்களும் இல்லை.... இது உன் பாதுகாப்புக்கான ஒரு ஏற்பாடே தவிர வேறு எதுவும் இல்லை... ஆனா நீ....அதை புரிந்துக்கொள்ளாமல் என் காதலை சந்தேகப்படுற...”என்று தேவ் விளக்கம் கூறிட ஸ்ரவ்யாவிற்கு தன் தவறு புரிந்தது...
இவ்வளவு நேரம் ஸ்ரவ்யா பேசிய வார்த்தைகள் அனைத்தும் அவள் ஆழ்மனதின் பயத்தின் காரணமாக வெளிவந்தவையே.. ஏற்கனவே தன் அனுமதியின்றி ஒரு காமுகனிடம் கற்பை இழந்ததை எண்ணி மனம் வெம்பித்துடித்தபடியே இருக்க எங்கே தேவ்வும் தன்னை பிரிந்துவிடுவானோ என்ற பயமும் சேர்ந்துகொள்ள அவள் மனதிலிருந்த பாதுகாப்பில்லாத உணர்வு இப்படி வெளிபட்டுவிட்டது.. தேவ் விவாகரத்து பத்திரத்தை நீட்டியபோது கூட தனக்கு நடந்தது தேவ்வின் மனதை உறுத்துகிறதென்றே எண்ணினாள்... அவன் மனதிலிருக்கும் சங்கட உணர்வை போக்குவதற்காகவே தேவ் இதை செய்ய முயல்கிறான் என்று எண்ணியவளுக்கு அவன் அவளது பாதுகாப்பிற்காகத்தான் இத்தனை வேலைகளையும் செய்கின்றான் என்று புரியவில்லை..
எங்கே தேவ்வும் தன்னை பிரிந்துவிடுவானோ என்ற பயத்தில் தான் ஸ்ரவ்யா ஏதேதோ உளறினாள்...
தேவ்வை இறுக்கி அணைத்துக்கொண்ட ஸ்ரவ்யா
“என்னை மன்னிச்சிரு அப்பு... நீ எப்பவும் எனக்காக தான் யோசிப்பனு எனக்கு தெரியும்.. ஆனா எனக்குள்ள உள்ள பயம் தான் என்னை இப்படி ஆட்டுவிக்குது.. இன்னும் என்னால் அந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வரமுடியவில்லை.... அவனால் நான் என்னோட கற்பை இழந்துட்டேனு என் மனசு அடிக்கடி என்கிட்ட சொல்லிட்டே இருக்கு... நீ இழக்கக்கூடாததை இழந்துட்டனு சொல்லி ஒவ்வொரு நிமிஷமும் என்னை வலியில் துடிக்கவைக்குது... என் மனசே என்னை இப்படி கஷ்டப்படுத்தும் போது நீயும் அப்படி நினைச்சிருவியோனு எனக்குள்ள ஒரு பயம்.... அது தேவையில்லாத பயம்னு நீ விளக்கம் கொடுத்த போதிலும் மனசுல இருந்து அந்த பயம் போகமாட்டேங்குது... ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நீ அதை சொல்லிக்காட்டிருவியோனு பயமா இருக்கு...” என்று அவனை அணைத்தபடியே அவள் கண்ணீர் விட தேவ் அவளை அணைத்தபடியே
“ஸ்ரவ்யா... ஒருத்தவங்களுக்கு ஒரு ஆக்சிடண்ட் நடந்தா அதை நாம சொல்லிக்காட்டுவோமா?? இல்லையே.. அதே மாதிரி தான் இதுவும்.. என்னை பொறுத்தவரை உனக்கு நடந்தது ஒரு ஆக்சிடண்ட் தான்.. அதை தவிர நான் வேறு எதையும் நினைக்கலை.... “
“நீ சொல்லுறது எனக்கு புரியிது.. காயப்பட்ட மனசுல உள்ள வடு மறைய இடம்கொடுக்கமாட்டேங்குது..” என்றவளை தன்னிடமிருந்து விலக்கியவன் அவள் வதனத்தை கையில் ஏந்தியபடி
“உன் மனசு எப்போ தான் மாறும்....”
“நீ எனக்கு மட்டும் தான் என்று நான் முழுதாக உணரும் போது.. உன்னை என்னைத்தவிர யாராலும் சொந்தம் கொண்டாட முடியாதுங்கிற ஒரு சந்தர்ப்பம் வரும் போது.. நீ என்னை தவிர வேறு யாரையும் பார்க்கக்கூடாதுனு சொல்லுற உரிமை எனக்கு கிடைக்கும் போது...” என்று ஸ்ரவ்யா கூற அவள் கூற்றில் சற்று யோசித்தவன் இன்று இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டுமென்று முடிவெடுத்தான்...
தாமதியாது அவள் கைபிடித்து அந்த தோட்டத்தின் ஒரு ஓரமாக இருந்த அம்மன் சன்னிதானதிற்கு அழைத்து சென்றான்...
அங்கிருந்த அம்மன் சன்னிதானத்தின் முன் நின்றவன் கண்மூடி அம்மனை பிரார்த்தித்து விட்டு தன் கழுத்திலிருந்த தங்கச்செயினை கழற்றியவன் அம்மனை வேண்டிக்கொண்டு ஸ்ரவ்யா எதிர்பாரா வேளையில் அவள் கழுத்தில் பூட்டினான்...
பின் அந்த சன்னிதானத்தில் சிறு சிமிழில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்தவன்
“இந்த நிமிஷத்துல இருந்து நீயும் நானும் கணவன் மனைவி.... உன் கழுத்துல நான் போட்ட அந்த செயினை நான் உயிருடன் இருக்கும் வரை நீ எப்பவும் கழட்டக்கூடாது...
இந்த அம்மன் பிரசாதமான குங்குமத்தை எப்போ நான் என் கையால் எடுத்து உன் நெற்றியில் வைத்தேனோ அந்த நொடியில இருந்து நான் உனக்கு மட்டும் தான் சொந்தம்.. எந்த காலத்திலும் நான் உனக்கு மட்டும் தான் சொந்தம்.. என்னோட வாக்குக்கு இந்த அம்மன் தான் சாட்சி..” என்று தேவ் கூறிட ஸ்ரவ்யாவின் கண்களோ விடாது நீரை சொறிந்தது...
தேவ்வின் செயல் அவள் எதிர்பாராதது தான் என்றபோதிலும் அந்த செயல் அவள் இழந்திருந்த பலமனைத்தையும் மீட்டுக்கொடுத்திருந்தது... இத்தனை நாட்கள் அவள் மனதை வாட்டிய வேதனை வலி அனைத்துமே அவளை விட்டு நீங்கியதாய் உணர்ந்தாள்...
அவனை இறுக அணைத்துக்கொண்டவள் நொடிக்கு நொடி தன் அணைப்பினை இறுக்க தேவ்வும் தானும் அதற்கு சளைத்தவனல்ல என்று அவளை இறுக அணைத்துக்கொண்டான்...
அந்த அணைப்பே இருவருக்கும் போதுமானதாக இருக்க சற்று நேரத்தில் தன்னிடமிருந்து ஸ்ரவ்யாவை பிரித்தவன்
“இப்போ உனக்கு சந்தோஷமா?? உன் மனசுல உள்ள பயம் எல்லாம் போயிடுச்சா??” என்று கேட்க தன் கண்ணீரை துடைத்தபடியே தலையாட்டியவளின் தலையில் செல்லமாய் முட்டியவன்
“இப்போ உனக்கு அந்த டிவோர்ஸ் பேப்பரில் சைன் பண்ணுறதுல உனக்கு எந்த பிரச்சினையும் இல்லையே... இப்பவும் நீ முடியாதுனு சொன்னா உன்னை கேள்வி கேட்குற உரிமை எனக்கு இருக்கு... நீ சட்ட ரீதியாகவோ சட்டமில்லாத ரீதியாகவோ எனக்கு மட்டும் உரிமையானவளாக இருக்கனும்... வேறு எவனும் நடுவுல வரக்கூடாது.... வரவும் விடமாட்டேன்...”
“பார்டா... என் ஆத்துக்காரர் ரூல்ஸ் எல்லாம் போடுறாரு...”
“இல்லைனா நீ தான் மறுபடியும் ஏதாவது சப்ப காரணம் சொல்லி பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சிருவியே???”
“ம்ம்ம்.... அந்த பயம் இருக்கட்டும்... ஆனா ஒரு விஷயம் ராகவ்...”
“என்னது ராகவ்வா?? இது எப்போ இருந்து???” என்று தேவ் சிரிக்க
“அதோ அப்போ இருந்து அப்படி தான்... இப்போ நான் சொல்லவந்ததை சொல்லவிடுறியா இல்லையா??”
“சொல்லு ஸ்ரயா பேபி...” என்று மீண்டும் தேவ் சிரிக்க அதில் நாணிச்சிவந்தவள் அவன் மார்பில் செல்லமாய் குத்தியபடியே
“சிரிக்காத ராகவ்.. ஒரு மாதிரி ஷையா இருக்கு...”
“என் பொண்டாட்டிக்கு வெட்கமெல்லாம் படத்தெரியுமா???”
“ப்ளீஸ்பா வேண்டாம்... அப்புறம் நான் சொல்லவந்ததை மறந்திடுவேன்...”
“ஓகே. ஓகே.. சொல்லு...”
“இந்த விஷயம் யாருக்கும் தெரியவேண்டாம்... எல்லா பிரச்சினையும் முடிந்ததும் அத்தை மாமா ஆசிர்வாதத்தோடு நாம மறுபடியும் மேரேஜ் பண்ணிக்கலாம்..”
“ஓகே.. ஓகே... ஆனா மேரேஜ் மட்டும் தானா??? இல்லை மற்ற எல்லாமேயா...??” என்று தேவ் மர்மப்புன்னகையோடு கேட்க ஸ்ரவ்யாவோ அவன் பார்வையில் வெட்கிச்சிவந்தபடியே
“மேரேஜும் அதுவும் மட்டும் பிறகு பார்த்துக்கலாம்... மற்றபடி உன் ரொமேன்ஸை நீ எப்போ வேணாலும் பண்ணலாம்..”
“அதுனா என்ன ஸ்ரவ்யா??” என்று அவளை கேலி செய்யும் நோக்கத்துடன் கேட்டவனின் கேள்வியில் வெளியே முறைத்தபடியே உள்ளுக்குள் நாணிச்சிவந்தவள்
“அது.. அது.. நேரம் வரும் போது சொல்லுறேன்...” என்றபடி அவன் தடுக்கும் முன்னே அங்கிருந்து நகர்ந்தாள் ஸ்ரவ்யா...
அவள் மலர்ச்சி இவனுக்கு ஆறுதல் தந்திட மனம் முழுதும் மகிழ்ச்சியுடன் அவளை பின்தொடர்ந்தான் தேவ்...
அவன் மனம் வேண்டுவது அவள் மகிழ்ச்சி மட்டுமே... அதற்கு உறுத்தலாக இருக்கும் எதையும் அவன் நிலைக்கவிட விரும்பவில்லை...இந்த விவாகரத்து கூட அவளை முற்றாய் காப்பதற்காக தேவ் எடுத்த ஒரு முயற்சியே... எந்தக்காரணம் கொண்டும் நிர்ப்பந்தத்தால் கையெழுத்திட்ட ஒரு பந்தத்தில் அவளை சிக்கி தவிக்கவிட அவன் விரும்பவில்லை... அதைவிட அதை காரணம் காட்டி பிறர் தம் சுயநலத்திற்காக அவளை பந்தாடுவதை என்றும் அனுமதிக்கமாட்டான்.... அதோடு சொத்து வழக்கில் ஸ்ரவ்யா அழைக்கப்படாமல் இருப்பதற்காகவே இந்த விவாகரத்து வழக்கை முதலில் முடிக்க வேண்டுமென அஜயிடம் கூறினான் தேவ்.. நேரடியாக சொத்து வழக்கில் இறங்கினால் எங்க ஸ்ரவ்யாவின் ஒழுக்கம் கேள்விக்குறியாக்கப்பட்டு விடுமோ என்று பயந்தே அவள் விவாகரத்தை காரணம் காட்டி அவளுடைய பங்கினை மீட்டு விடலாம் என்று அவன் நண்பன் கூறிய யோசனையை நடைமுறைப்படுத்த முடிவு செய்து அதனை அஜயிடம் கூறினான்...
அஜயும் அதற்கேற்றபடி அனைத்தும் ஒழுங்குபடுத்த இதோ இருவரும் கொழும்பிற்கு வந்தனர்..
தேவ் ஸ்ரவ்யாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஹோட்டலில் ரூம் புக் செய்திருக்க இருவரும் அங்கு தங்கினர்...
இன்னும் வழக்கிற்கு இரண்டு நாட்கள் இருக்க ஸ்ரவ்யா தேவ்வை வெளியே அழைத்து செல்லுமாறு கூறினான்...
இருவரும் காலிமுகத்திடலில் புதிதாய் திறக்கப்பட்டிருந்த “வன் கால் பேஸ்” மாலிற்கு சென்றனர்..
மாலில் இருவரும் கைகோர்த்தபடி ஒரு சுற்று சுற்றிமுடித்ததும் ஸ்ரவ்யா பசிக்கிறதென்று கூற இருவரும் புட் கோட்டிற்கு சென்று அங்கு தமக்கு தேவையான உணவினை ஆடர் செய்து உண்டனர்...
பின் இருவரும் அங்கிருந்த சினிமா ஹாலில் படம் பார்க்கலாம் என்று முடிவு செய்ய தேவ் சென்று இருவருக்கும் டிக்கட் மற்றும் பாப்கார்னுடன் வந்தான்...
வெகுநாட்களுக்கு பிறகு இருவரும் ஒன்றாக படம் பார்க்க வந்திருக்க
“ராகவ் நாம ஒன்றாக படம் பார்த்து எத்தனை வருஷமாச்சு??”
“ஆமா நாம இரண்டு பேரும் கடைசியாக சினிசிட்டியில ரெமோ பார்க்கபோனோம்...”
“ஆமா.. சிவா படம்... செம்ம படம்ல..”
“ஆமாமா.. உன்னை அந்த படத்துக்கு கூட்டிட்டு போயிட்டு எனக்கு நானே ஆப்பு வச்சிக்கிட்ட படம்?? அதை பார்த்துட்டு மேடம் என்னை படுத்திய பாடு நியாபகம் இருக்கா??”
“நான் என்ன உன்னை படுத்தினேன்... சிவா கீர்த்திக்கு ப்ரோபஸ் பண்ண மாதிரி உன்னையும் எனக்கு ப்ரபோஸ் பண்ண சொன்னேன்...ஆனா நீ தான் அதெல்லாம் செய்யலையே.. பிறகென்ன???”
“ஏன் ஸ்ரயா.. உனக்கே இது நியாயமகா இருக்கா?? அது ஏதோ படத்துக்கு ஒரு ஹைலைட் கொடுக்கனும்னு டிரெக்டர் ரொம்ப மெனக்கட்டு அந்த சீனை எடுத்திருக்காரு.. அதையே நீ ரியல் லைப்பில் எதிர்பார்த்தா எப்படிமா??”
“ஏன் எதிர்பார்க்கக்கூடாதா? பசங்க நீங்க மட்டும் எனக்கு வரப்போற மனைவி கீர்த்தி மாதிரி இருக்கனும் ராகுல் ப்ரீத் சிங் மாதிரி இருக்கனும்னு சொல்லிட்டு திரியலாம்.. ஆனா நாங்க சிவா மாதிரி கூட கேட்கலை.. அவரை மாதிரி ப்ரோபோஸ் பண்ணுனு கேட்கிறது தப்பா??”
“ஹேய் நான் எப்ப அப்படி சொன்னேன்.. ஆக்சுவலோ எனக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இருக்கலை... வரப்போறவ நம்ம மேல அன்பா இருக்கனும்னுங்கிற எதிர்பார்ப்பு மட்டும் தான் இருந்தது... அதனாலேயே எனக்கு வரப்போற மனைவி இந்த ஹீரோயின் மாதிரி இருக்கனும்னு நான் கற்பனை பண்ணதில்லை... உனக்கு தெரியுமா?? நான் கனவுல கூட எந்த ஹீரோயினும் வரக்கூடாதுனு தினமும் படுக்க போகும்போது வேண்டிப்பேன் தெரியுமா???” என்று தேவ் கூற அவன் பதிலில் சிரித்த ஸ்ரவ்யா
“உன்னை காலேஜில் எல்லாரும் கட்டப்பானு கூப்பிட்டதில் எந்த தப்பும் இல்லடா.... இப்படியாடா ஒருத்தன் இருப்பான்.... கனவுல ஹீரோயின் வரக்கூடாதுனு சாமி கும்பிட்டானாம்..”
“ஹேய் பொண்டாட்டி சும்மா என்னை கிண்டல் பண்ணாத... ஏனோ எனக்கு வரப்போறவ இப்படி தான் இருக்கனும்னு எதிர்பார்ப்பு இருக்கக்கூடாதுனு நினைச்சேன்... நமக்கு அமைகிற உறவுகள் இப்படி இருக்கனுங்கிற எதிர்பார்ப்பு இருந்தா அவங்க அறியாமல் செய்கிற சின்ன தப்பு நம்ம எதிர்ப்பார்ப்பை தகர்த்துற மாதிரி மாறிடுச்சுனா அந்த உறவில் ஒரு சின்ன பிளவு வரலாம்... கணவன் மனைவிங்கிற உறவில் இது இருக்கக்கூடாது நினைத்தேன்... உறவு பலமானதும் எழுகின்ற எதிர்பார்ப்புகள் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவு... அதே அந்த உறவு பலப்படுவதற்கு முன்னான எதிர்பார்ப்புக்கள் அந்த உறவையே பலவீனப்படுத்தலாம்... அதனால தான் நான் எந்த வித எதிர்பார்ப்புக்களும் வேண்டாம்னு நினைத்தேன்...”
“ஏன் ராகவ்... எல்லா விஷயத்துலயும் ஒரு கொள்கை வச்சிருப்பியா?? எதை கேட்டாலும் அதுக்கு ஒரு கொள்கை சொல்லுறியே..”
“ஹாஹா... அப்படி இல்லை பொண்டாட்டி.... சில விஷயங்களில் இப்படி தான் இருப்பேன்னு எனக்குள்ள சில கட்டுப்பாடுகள் இருக்கு.... அது நல்லதாக இருக்கும்பட்சத்தில் அதையே பாலோ பண்ணுறேன்... அவ்வளவு தான்...”
“எல்லாம் சரி.. ஆனா என்னையும் இதை பாலோ பண்ணு.. அதை பாலோ பண்ணுனு சொன்ன.. அப்புறம் நான் கடுப்பாகிடுவேன் பார்த்துக்கோ... “என்று ஸ்ரவ்யா கூற அவள் காதருகே குனிந்த தேவ்
“அப்படியா ஸ்ரயா... அப்போ ஊருக்கு போக வரைக்கும் உன்கிட்ட நல்லபிள்ளையாக நடந்துக்கனும்னு ஒரு கொள்கையோடு இருக்கேன்.. அதை நான் பாலோ பண்ணுவேன்.. ஆனா நீ தான் எதையும் பாலோ பண்ணமாட்டேன்னு சொல்லிட்டியே... இப்போ நானும் என்னோட கொள்கையை ப்ரேக் பண்ணிடவா??” என்று ரகசியமாய் கேட்க அவன் வார்த்தைகளின் அர்த்தம் புரிந்தவளுக்கு மறைந்திருந்த வெட்கம் உயிர்த்தெழுந்திட
“இல்.. நீ... நா... அப்...”
“என்ன என் பொண்டாட்டி தாறு மாறா உளருறா??” என்று தேவ் மீண்டும் சீண்ட அவளோ சிணுங்கியபடி
“போ ராகவ்.. நீ ரொம்ப மோசம்..” என்று கூற அவள் செய்கையில் சிரித்தவன்
“சரி சரி..நான் அந்த கொள்கையில் உறுதியாக இருக்கேன்.. சரிவா.. படம் போட போறாங்க.. உள்ள போகலாம்..” என்றபடி ஸ்ரவ்யாவை உள்ளே அழைத்து சென்றான் தேவ்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN