துளி 19

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கால்களில் ஆடிடும் கொலுசு
ஓசைகள் பூமிக்கு புதுசு
அதை காதுகள் கேட்டிடும் பொழுது
நான் கவியரசு


டையரியில் ஏற்கனவே தான் அடையாளமிட்டு வைத்திருந்த அந்த பக்கத்தை பிரட்டினாள் ஸ்ரவ்யா...
அதில் பிரபோசல் சப்ரைஸ் என்று பெயரிடப்பட்டிருந்தது.... அதை படித்தவளுக்கு தொடர்ந்து படிக்கும் ஆர்வம் அதிகமாகிட தன் வாசிப்பை தொடர்ந்தாள்..
“ஸ்ரயா பேபிக்கு சப்ரைஸ்னா ரொம்ப பிடிக்கும்... எதிர்பாராத நேரத்துல பூ கொடுக்குறது... எதிர்பாரா நேரத்துல அவளுக்கு பிடித்ததை வாங்கிக்கொடுப்பது இப்படி செய்றது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்... அதனால இந்த ப்ரபோசல் பிளானையும் சப்ரைஸாக செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்... எங்க மேரேஜிற்கு முதல் நாள் நைட் அவளுக்கு இந்த சப்ரைஸை செய்யலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.... சப்ரைஸ்னா எப்பவும் போல லட்சக்கணக்குல செலவளிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை... ஸ்ரயா பேபிக்கும் அது சுத்தமாக பிடிக்காது... கொஞ்சம் அதிகமாக செலவளித்தாலே சண்டை போடுவா.... அதனால அவளுக்கு பிடித்த மாதிரியே ஒரு சப்ரைஸ்....
அவளுக்கு நைட் டைம் ரொம்ப பிடிக்கும்..... அதுவும் கடலோடு அந்த நேரத்தை செலவளிக்க அவளுக்கு கொள்ளை பிரியம்...... அந்த நேரத்துல அவளுக்காகவென்று நானே எழுதிய ஒரு பாட்டை பாடி ப்ரபோஸ் பண்ணபோறேன்... என்னோட வரிகள்... என்னோட குரல்... என்னோட இசை... எல்லாம் அவளுக்காக... பாட்டு கூட எழுதிட்டேன்..... இதோ இது தான் அவளுக்காக நான் எழுதின பாட்டு..
மாலை வேளையில்
மங்கிய ஒளியில்
புழுதி என் பார்வை மறைக்க
மின்னி மறைந்தது அவள் விம்பம்
நொடியே என்றபோதிலும்
யுகமாய் நெருக்கமானது
அவள் விம்பம்..

இமைக்க மறந்தன என் விழிகள்
உணர மறுத்தது என் மேனி
அசைய மறுத்தன என் கால்கள்
துடிக்க மறந்தது என் இதயம்

அவள் விழியசைவு பல கதைகள் பேசிட
அவள் இதழ் சுழிப்பு என் ஜீவன் வதைத்திட
அவள் கன்னங்களோ என் இளமையை
சோதித்திட
நிலையின்றி தவித்தது என் காதல் மனம்

இமைக்க மறந்தன என் விழிகள்
உணர மறுத்தது என் மேனி
அசைய மறுத்தன என் கால்கள்
துடிக்க மறந்தது என் இதயம்

கண்டேன் அவளை அவள் காணாத போது
ரசித்தேன் அவளை அவளறியாத போது
நினைத்தேன் அவளை அவள் நினையாத போது
உயிர்த்தேன் அவளால் அவள் உணராமலே

அவள் கைகள் கோர்க்கும் வேளையை
என் மனமோ கனவில் சித்தரிக்க
அவள் நினைவுகள் விழுங்கும் வேளையில்
என் ஜீவன் ஜனித்ததடா...

காதல் உணர்ந்தது என் மனம்
கள்ளத்தனம் கற்றது என் விழிகள்
நாணல் கொண்டது என் ஆண்மை
நீ என் ஜீவனென்றானது இந்த நொடி”
இதை வாசித்தவளுக்கு இதழ்களில் புன்னகை ஒட்டிக்கொண்டது.. தனக்காக தேவ் பாட்டெல்லாம் எழுதுவானென்று அவள் கனவில் கூட எண்ணியதில்லை... அதுவும் அவன் மனதின் எண்ணங்களை பாடல் வரிகளாய் வாசிக்கும் போது ஸ்ரவ்யாவிற்கு அவனின் மொத்தகாதலையும் தனக்குள் உள்வாங்கிடவேண்டும் என்ற அவாவே எழுந்தது.... அளவில்லாத காதல் கூட கர்வம் தான்...
“ஸ்ரயாவை பீச்சுக்கு கூட்டிட்டு போய் இந்த பாட்டை பாடி அவளுக்கு ப்ரபோஸ் பண்ணபோறேன்... அதோடு இன்னொரு சப்ரைஸ் கிப்ட் ஒன்றும் ரெடி பண்ணியிருக்கேன்... ஆனா அது சப்ரைஸாகவே இருக்கட்டும்.... அது மட்டும் இல்லை... இன்னும்.... இல்லை இப்போதைக்கு வேண்டாம்... பிறகு சொல்றேன்...” என்று அப்பகுதி முடிவடைந்திருக்க மறுபக்கத்தை திருப்பினாள் ஸ்ரவ்யா....
“இன்னைக்கு பேபி அந்த ராஸ்கலை வெளுத்து கட்டிட்டா... ஹாஹா.. சோ ஹேப்பி... ஆனா என் பேபி உள்ளுக்கு இப்படியொரு ஜான்சி ராணி இருப்பாங்கனு நான் நினைச்சிக்கூட பார்க்கலை... எனக்கு எப்பவும் தைரியமான பொண்ணுங்கள பார்த்தா ரொம்ப பிடிக்கும்...என்ன தான் ஆண் பெண் சமம்னு வாதாடினாலும் நிறைய பேர் அதை செயலில் காண்பிப்பதில்லை ... பொண்ணுங்கனா அடக்கம் ஒடுக்கமா தான் இருக்கனும்னு வியாக்கியானம் பேசுறவங்க எதை குறிப்பிடுறாங்கனு எனக்கு புரியலை..ஒரு பொண்ணு தனக்கு தப்பு நடக்கும் போது அதை தட்டி கேட்பதில் என்ன அடக்க ஒடுக்கம் இல்லாமல் போயிடுது... ஐந்தறிவு ஜீவனே தனக்கொரு அநியாயம் நடக்கும் போது அது தான் அதை தட்டிக்கேட்குது..... நிறைய பொண்ணுங்க தங்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளை வெளிய சொல்ல பயப்படுறதுக்கு காரணமே இந்த மாதிரி பேசுபவர்கள் தான்...
பெண்ணோட மனவலிமையையும் உடல் வலிமையையும் எங்க அம்மா உருவத்தில் கண்கூடாக பார்த்திருக்கேன்... அம்மா எந்தவொரு விஷயத்துக்குமே பயந்ததில்லை.... ஐயா பலநேரம் வீட்டுல இருக்கமாட்டாரு... அந்த நேரமெல்லாம் தனியாக நின்று சமாளிக்கிற அம்மாவோட தைரியம் ரொம்ப பிடிக்கும்.. வேலைக்கு போற இடத்துல யார்க்காவது ஆண்கள் தொல்லை கொடுத்தால் அவங்க சட்டையை பிடித்து கேள்வி கேட்கிற அம்மாவோட துணிச்சல் ரொம்ப பிடிக்கும்... இதுமட்டும் இல்லை.. அம்மா நிறைய பேருக்கு உதவி பண்ணியிருக்காங்க.... அது சில நேரம் பணமாகவும் பல நேரம் ஆறுதலாகவும் இருந்திருக்கு.... இப்பவும் ஐயா இல்லைனா கூட தனியாக நின்று சமாளிக்கும் தைரியம் அம்மாவுக்கு இருக்கு... இதுக்கு ஐயாவும் காரணம்... அம்மாவை சக மனிஷியாக பார்த்தாரு... அவங்க உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்தாரு.... நிச்சயம் ஆண் பெண் இரண்டு பேரும் நினைத்தால் தான் சமத்துவத்தை கொண்டு வர முடியும்...
அதுமட்டும் இல்லை... இங்கு சில பெண்கள் தைரியத்தை சில தவறான விடயங்களில் வெளிப்படுத்துறாங்க... அதை அவங்களே உணரனும்...
ஆனா என்னோட ஸ்ரயா பேபி... இன்னைக்கு என்னை மெர்சலாக்கிட்டா... கொஞ்ச நாளா வேற டிப்பார்ட்மண்ட் பையன் அவளுக்கு தொந்தரவு கொடுப்பதாக என்னோட ப்ரெண்ட் சொன்னான்... ஆனா அவள் இதை பற்றி என்கிட்ட எதுவும் சொல்லலை.... நான் மறைமுகமாக கேட்டப்போ கூட அவ அதை சொல்லலை.. அவ சொல்லும் போது அவனை கவனிச்சிக்கலாம்னு விட்டுட்டேன்.. ஆனா அந்த பையனை வாட்ச் பண்ணிட்டு தான் இருந்தேன் .... இன்னைக்கு அவன் ஸ்ரயா பிராக்டிஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு கிளம்பும் போது வழி மறுத்து அவகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்கான்... நான் வாஸ்ரூம் போயிட்டு வருவதற்குள் இது நடந்திருக்கு.... நான் அவங்க இரண்டு பேரும் நின்னுட்டு இருந்த இடத்திற்கு போவதற்குள் ஸ்ரயா அவனை கையில் வைத்திருந்த தன்னோட பேக்கால் அடி பின்னி எடுத்துட்டா..... எனக்கு இது தான் விஷயம்னு தெரியாமல் ஸ்ரயாவை தடுக்க முயற்சி பண்ணப்போ என்னையும் இரண்டு மொத்து மொத்தி எடுத்துட்டா......... அடிவாங்கினவன் பயத்துல ஓட இவளோ விடமா அவனை துரத்த அதுக்குள்ள என்னோட மத்த ப்ரெண்ட்சும் வந்துட்டாங்க... அவன் ஓட இவ துரத்த அது முடியலை..... ஒருவழியா அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதும் தான் விட்டா.. இதை பார்த்திட்டு இருந்த மத்தவங்க என்கிட்ட என்னாச்சுனு விசாரிக்க எனக்கு தெரியலைனு சொன்னேன்... அவனை நல்லா கவனிச்சிட்டு வந்தவ என்னை திட்ட ஆரம்பிச்சிட்டா...” என்று வாசித்து முடித்தவளுக்கு அன்றைய நாளின் நினைவு வந்தது...
அவளிடம் தவறாக நடக்க முயற்சித்த அந்த இளைஞனை துரத்தியடித்தவள் கோபம் குறையாது தேவ் அருகே வந்து தன் கையில் வைத்திருந்த பையால் அவனை அடிக்கத்தொடங்கினாள்..
“ஹேய் சூட்டி..ஆ... வலிக்கிது... ஆ.. ஏய்... விடு... ஆ... இப்போ எதுக்கு என்னை அடிக்கிற??” என்று தேவ் ஸ்ரவ்யாவை தடுத்தபடியே கேட்க அவளோ கோபம் குறையாது
“வலிக்கட்டும்... நல்லா வலிக்கட்டும்...” என்றபடி மீண்டும் அவனை அடிக்கத்தொடங்க அவளை தடுக்கும் முகமாக இடைபுகுந்த அபி
“சூட்டி... எதுக்கு அடிக்கிறேன்னு சொல்லிட்டாவது அடிமா... அப்போ தான் நாங்களும் அதையே சாக்காக வைத்து எங்க சார்பாக அவனை மொத்தலாம்...” என்று அபி கூற அவனை திரும்பி முறைத்த ஸ்ரவ்யா
“என் அப்புவை நான் மட்டும் தான் அடிப்பேன்.. வேறு யாரும் அடிக்கமுடியாது...” என்று கூறிவிட்டு ஸ்ரவ்யா மீண்டும் தேவ்வை அடிக்க அப்போது கபிலனோ
“ஏன்டா அபி இது உனக்கு தேவையாடா??” என்று கேட்க அகிலனும்
“இந்த விசரனுக்கு இது தான் வேலை... சொன்னா கேட்கமாட்டான்...இவனிட்ட சொல்லி பிரயோஜனம் இல்லடா..”
“டேய் அகிலா என்னாடா இப்படி விசரன்னு உங்க ஊரு பாஷையில திட்டிட்ட???” என்று அபி போலியாய் வருந்த முபாரக்கோ
“அப்போ எங்க ஊரு பாஷையில மோலாகிட்டனு டீசன்டா செல்லவா??”
“சுத்தி சுத்தி என்னை பையித்தியம்னு சொல்லுறதுக்கு ஏன்டா ஒவ்வொரு ஊர் பாஷையில சொல்லி கஷ்டப்படுறீங்க?? ஒரேடியாக லூசுப்பயலேனு சொல்லி திட்டிருங்க.. ஒரே வேலையாக போயிடும்...” என்று அபி தன் பஞ்சாயத்தை ஆரம்பிக்க தேவ்வோ
“டேய் இங்க என்னை காப்பாத்த ஏதாவது பண்ணாம நீ லூசா பைத்தியமாங்கிற ஆராய்ச்சி தேவையாடா..?? வந்து இவளை நிறுத்துங்கடா..” என்று தேவ் கூற அபியோ
“எதுக்கு அவளும் அவ பங்குங்கு என்னை அரைகிறுக்குனு சொல்லுறதுக்கா?? போடா இனி நீயாச்சு அவளாச்சு.. டேய் கபிலா வா நாம போகலாம்..” என்றபடி மற்றவர்களை அழைத்துக்கொண்டு அபி அங்கிருந்து நகர்ந்தான்...
அவர்கள் அங்கிருந்து நகர்ந்ததும் அவள் கைபிடித்து தடுத்து அவளை தன் கை வளைவுக்குள் கொண்டுவந்தான் தேவ்..
ஸ்ரவ்யாவோ திமிறியபடி
“விடு அப்பு... என்னை விடு..”
“நீ என்னை அடிக்கமாட்டேன்னு சொல்லு விடுறேன்...”
“இல்லை நான் அடிப்பேன்.. விடு என்னை..”
“ஹேய் நான் என்ன பண்ணேன்னு என்னை அடிக்கிற??”
“நீ தப்பு பண்ண... எதுக்கு நான் அவனை அடிக்கும் போது என்னை தடுத்த??”
“அது அவனை காப்பாத்த தான்... நீ கோபத்தில் ஏதாவது எக்குத்தப்பா அடிச்சிட்டா யாரு எச்.ஓ.டி கிட்ட போய் நிற்கிறது...?? அதோடு இது காலேஜ் கேம்பஸ்... மாட்டுனோம் அவ்வளவு தான்...”
“அதுக்காக அவன் என்ன தப்பு பண்ணாலும் விட சொல்லுறியா??”
“அவன் என்ன தப்பு பண்ணான்?? உனக்கு ப்ரபோஸ் பண்ணான் அவ்வளவு தானே??”
“அதை நீ பார்த்தியா??”
“இல்லை.. ஒரு யூகம் தான்...”
“அவன்... அவன்... என்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண முயற்சி பண்ணான்....”
“ஏன் நீ இதை முதலிலேயே சொல்லலை...??”
“சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்ப??”
“அவனை நானும் சேர்ந்து நாலு மொத்து மொத்தியிருப்பேன்....”
“ஓ.. அப்போ ஏதோ காப்பாத்துறேன்.. எச்.ஓ.டி னு சொன்ன??”
“அதையெல்லாத்தையும் விட அவனுக்கு சரியான தண்டனை கொடுக்கிறது முக்கியம்.. அவன் பண்ணது தெரிந்தால் அவங்களும் கூட அதை சரினு ஏற்றுப்பாங்க... இரு அவன் எங்கேயிருந்தாலும் தேடி இழுத்துட்டு வர்றேன்..” என்று கோபத்தோடு கிளம்பமுயன்றவை தடுத்தவள்
“நான் கொடுத்ததையே அவன் வாழ்க்கை முழுதுக்கும் மறக்கமாட்டான்... நீ வா.. நாம போகலாம்...”
“சாரிமா... நான் கவனமாக இருந்திருக்கனும்... முபாரக்கும் அக்ஷயும் சொன்னப்போதே நான் அவனை எச்சரிச்சிருக்கனும்... நீ சொன்னதும் பார்த்துக்கலாம்னு விட்டது தான் அவனுக்கு இப்படி நடந்துக்கிற தைரியத்தை கொடுத்திருக்கு...”
“அப்பு... எதுக்கு சாரியெல்லாம் சொல்லிட்டு இருக்க?? உன்கிட்ட சொன்னா ஏதாவது பிரச்சினையாகிடும்னு தான் நான் ஏதும் சொல்லலை... நானும் கூட அவன் இப்படி மிஸ் பிஹேவ் பண்ணுவான்னு எதிர்பார்க்கலை... விடு அது அவன் புத்தி.... நான் தான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கனும்..”
“ஏன் சூட்டி இவ்வளவு நடந்திருக்கு..வேறு யாராவது இருந்திருந்தா அழுது புரண்டிருப்பாங்க...நீ என்னடானா எதுவும் நடக்காதமாதிரி நார்மலாக இருக்க??”
“நான் எதுக்கு அப்பு அழனும்?? தப்பு பண்ணவன் அவன்.. அவனுக்கு நான் தண்டனை கொடுத்துட்டேன்.. அவ்வளவு தான்.. இப்போ நான் அழுது புலம்புவதால எனக்கு நடந்த தப்பு இல்லைனு ஆகிடுமா இல்லை அவனுக்கு தான் தண்டனை கிடைச்சிடுமா??? இல்லை தானே.... நம்ம பலவீனம் தான் அப்பு அவங்க பலம்...அதுக்கு நாம எப்பவும் இடம்கொடுக்கக்கூடாது.... இன்னைக்கு கொடுத்த அடியில அவன் என்பக்கம் தலை வைத்து படுக்கமாட்டான்.. என் பக்கம்னு இல்லை.. எந்த பொண்ணுங்ககிட்டயும் தப்பா நடந்துக்க யோசிக்கக்கூடமாட்டான்...”
“இது தான் சூட்டி தைரியம்..... இது தான் இப்போ நிறைய பேர்கிட்ட இல்லை... ஒரு விஷயம் சொல்லவா... அவன் அப்படி நடந்துகிட்டதுக்கு நீ அழுது இருந்தனா நிச்சயம் எனக்கு கோபம் தான் வந்திருக்கும்.... ஆனா தைரியமாக அவனை வெளுத்து வாங்குன பாரு... அது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கு... இப்போ எனக்கு உன்னை ரொம்ப பிடிக்குது... “
“அப்போ இவ்வளவு நாள் உனக்கு என்னை பிடிக்கலையா??”
“பிடிக்காமலா உன் பின்னாடியே சுத்திட்டு இருக்கேன்...??”
“நல்லா பேச கத்துக்கிட்ட அப்பு...”
“இல்லைனா உன்னை சமாளிப்பது கஷ்டமே சூட்டி...” என்று கூற தன் கையிலிருந்த பையால் அவனை அடிக்கத்துரத்த தேவ்வும் ஓடி போக்குகாட்டினான்..
அப்போதைக்கு அவன் அந்த பிரச்சினையை மறந்ததாக காட்டிக்கொண்ட போதிலும் அந்த இளைஞனை அவன் முறையில் கவனித்ததை அபி மூலம் அறிந்துகொண்டாள் ஸ்ரவ்யா... ஆனால் அவளும் அதை பற்றி தேவ்விடம் ஏதும் விசாரிக்கவில்லை....
இவ்வாறு முந்தைய நினைவுகளில் மூழ்கியிருந்தவளை கலைத்தான் தேவ்...
அவளருகே அமர்ந்தபடியே
“என்ன சூட்டி என்னோட சீக்கிரெட்டெல்லாம் வாசித்து முடிச்சிட்டியா??”
“இன்னும் முழுதாக முடிக்கலை... அது சரி அப்பு... ஏன் என்னை இன்னமும் சூட்டினே கூப்பிடுற???”
“ஹாஹா..என்னாச்சு உனக்கு??? ஏன் திடீர்னு உனக்கு இப்படியொரு சந்தேகம்..?”
“பின்ன.. டையரியில எழுதும் போதெல்லாம் எவ்வளவு அழகாக ஸ்ரயா பேபினு எழுதியிருக்க... ஆனால் கூப்பிட்டும் போது மட்டும் சூட்டி பாட்டினு....”
“ஹாஹா.... பாட்டியா.. இது நல்லா இருக்கே....” என்று தேவ் சிரிக்க
“போடா கிழவா...” என்று கோபத்தில் ஸ்ரவ்யா முறுக்கிக்கொள்ள அவள் செய்கையில் சிரித்தவன்
“கோபப்படாத சூட்டி... காதலில் சில விஷயங்கள் எதிர்பாரா நேரத்தில் நடைபெறும் போது தான் அதில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும்... “
“உன் கலெண்டர் படி அது எப்போ வரும்னு சொல்லிட்டனா நான் தயாராகிப்பேன் அப்பு....”
“கிண்டலா பண்ணுற...உன்னை...” என்று வலிக்காதபடி அவள் கன்னத்தை கிள்ளினான் தேவ்...
ஏற்கனவே குளிரால் சிவந்திருந்த அவள் கன்னமிரண்டும் மேலும் தன்னை செம்மையாக்கிக்கொண்டு ஜொலிக்க அதை கண்டவனுக்கு எப்போதும் போதில் அதில் தன் இதழ்பதிக்கும் எண்ணம் தோன்றிட இன்றும் அதை மனதினுள்ளே புதைத்துக்கொண்டான்...
அவன் பார்வையிலேயே அவன் மனதினை புரிந்துக்கொண்ட ஸ்ரவ்யா
“ஏன் தேவ் இன்னும் தயங்குற??? நான் உன்னோட சூட்டி தேவ்... உனக்கானவ நான்... ஒருவேளை அந்த பரத் தொட்டு...” என்று தொடங்கியவளின் வாயினை தன் கைகளால் சிறை செய்தவன் நொடி தாமதிக்காது அவள் அதரங்களையும் சிறை செய்தான்...
அந்த இதழ் முத்தத்தில் அவள் வார்த்தைகள் அவனுக்கு கொடுத்த வலியே நிறைந்திருந்தது....
அதை உணர்ந்தவள் அவனை தன்னிடமிருந்து பிரிக்க அவன் கண்களோ கலங்கியிருந்தது...
“சாரி... அப்பு... என்னை மன்னிச்சிடு....”
“இல்லை ஸ்ரவ்யா... இது என்னோட தப்பு தான்.. உன் மனசில் காயம் இருக்குனு தெரிந்தும் அதை சரிப்படுத்தாமல் அமைதியாக இருந்தது என்னோட தப்பு தான்...”
“இல்லை அப்பு... நான் ஏதோ....”
“இல்லை இன்னைக்கு இதை பேசுறது தான் நம்ம வாழ்க்கைக்கு நல்லது... நான் உன்னை தான் விரும்புறேன் ஸ்ரவ்யா.. உன்னோட மனதை மட்டும் தான் விரும்புறேன்... இந்த நொடி வரை உன்னோட அழகோ வசதியோ என்னை பாதித்ததில்லை.... நான் விரும்புறது உன்னோட மனதை மட்டும் தான்.. அது என்னைக்கும் எனக்கு மட்டுமே சொந்தமாக இருக்கனும்னு நினைக்கிறேன்..... உன்னை மீறி நடந்த சில விஷயங்களுக்கு நீ பொறுப்பேற்பதை நான் விரும்பலை... என் மனசுக்கு தெரியும்... எப்பவும் நீ என்னை மட்டும் தான் விரும்புவ... அதை தாண்டி நான் எதையும் நினைக்க விரும்பலை... உன்கூட கடைசி வரைக்கும் இருக்கனும்.. அது கட்டாயம் மனரீதியானதாக இருக்கனும்.... உடல்ரீதியாக நாம சேர்வதா இல்லையான நாம பேசி தான் முடிவு பண்ணனும்... உன் நெருக்கத்தில் என்னை மீறி ஏதாவது பண்ணிடுவேனோனு தான் நான் உன்கிட்ட இருந்து விலகநினைத்தேன்...ஆனா அதையே நீ தப்பா புரிஞ்சிக்கிட்ட...”
“இல்லை அப்பு... நா...”
“ஸ்ரவ்யா நான் பேசி முடிச்சிடுறேன்... நான் எப்பவும் உன்னை தப்பா நினைக்கமாட்டேன்... இது கூட உன்னுடைய மனதின் ரணத்தின் வெளிப்பாடு தான்... எங்க நானும் உன்னை விட்டு போயிடுவேனோங்கிற பயம் தான் உன்னை இப்படி பேச வைத்திருக்கு.... இந்த நிமிஷமே உன்னை என்னவளாக்கி உன்னோட பயத்தை நீக்க என்னால் முடியும்... ஆனால் அதுக்கு பெயர் காதல் இல்லை... உன் ரணப்பட்ட மனம் நம்ம காதலை நம்பனும்... அப்போ தான் நாம வாழப்போற வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்... அந்த நாள் வரைக்கும் நான் காத்திருப்பேன்... என்னைக்கு உன்னோட பயம் முழுதாக நீங்கி நீ என்னை முழுமனதாக காதலோட ஏற்கனும்னு நினைக்கிறியோ அப்போ நாம மேரேஜ் பண்ணிக்கலாம்.. அதுக்கு எத்தனை வருஷமானாலும் நான் காத்திருக்கேன்....” என்று தேவ் கூற அவனை இறுக்கியணைத்தவள் அழுதபடியே
“சாரி அப்பு.. உன்னை ரொம்ப ஹேர்ட் பண்ணிட்டேன்.. என்னை அறியாமலேயே என்னோட வலி வார்த்தைகளாக வெளிப்படுது... நானும் அதை மறக்கனும்னு முயற்சிக்கிறேன்.... ஆனால் என்னால முடியலை.. “
“எனக்கு உன்னோட நிலமை புரியிது ஸ்ரவ்யா...... “
“நீ மட்டும் தான் தேவ் என்னை புரிந்துக்கொள்ள முடியும்.. இப்பவும் கூட என் மனதிலிருந்த சங்கடத்தை நீ புரிஞ்சிக்கிட்ட...ஆனா என்னால் நீ கஷ்டப்படுவதை பார்க்கமுடியலை அப்பு...” என்று ஸ்ரவ்யா கூற அவளை தன்னிடமிருந்து விலக்கியவன் அவள் வதனத்தை தன் கையில் ஏந்தி
“இங்கபாரு... நீ என்னை காயப்படுத்தவும் இல்லை... எனக்கு வலிக்கவும் இல்லை... சொல்லப்போனா நீ உன்னோட கோபமோ வேதனையோ அதை என்கிட்ட காண்பிக்கிற... அது எனக்கு சந்தோஷம் தான்.. மனசுல பாரம் கூடுனா அது நம்மை தான் கஷ்டப்படுத்தும்.... நீ இப்போ எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்ட... இனி உன்னால தெளிவாக யோசிக்கமுடியும்.... நடந்ததை இன்னும் உன்னால் மறக்கமுடியலைனா என்னை அந்த பரத்தா நினைத்து அவனை நீ என்ன பண்ணனும்னு நினைக்கிறியோ அதை பண்ணு.. அப்போதாவது உன்னோட மனதில் உள்ள வலி குறையிதானு பார்ப்போம்..”
“அவனுக்கு நீ நகலா?? ஹாஹா குட் ஜோக்... அவனெல்லாம் மனிதபிறப்பே இல்லை... காட்டுல இருக்க சிங்கம் புலிக்கு கூட இரக்கம் இருக்கும் போல.. ஆனா அவனுக்கு... அவனுக்கான தண்டனையை என்னைவிட சிறப்பாக நீயும் அஜூவும் கொடுப்பீங்க... நீ இப்படி எப்பவும் என் பக்கத்துலயே என்கூடவே இரு... சீக்கிரம் நடந்ததெல்லாம் மறந்திடுவேன்... என்கூட இருப்ப தானே அப்பு...”
“ஆமா..இப்போ அத்தை பையனா இன்னும் கொஞ்ச நாளில் ஆத்துக்காரரா....” என்று கூறி தேவ் கண்ணடிக்க ஸ்ரவ்யாவோ சிரித்தபடி அவன் கன்னத்தை கிள்ளியபடி
“ஸ்வீட் அப்பு நீ... எப்பவும் இப்படியே இரு...” என்று கூறி அவனுடன் செல்லம் கொஞ்சினாள் ஸ்ரவ்யா...
ஒரு வாரத்திற்கு பின் அஜய் தேவ்விற்கு அழைத்திருந்தான்...
“சொல்லுங்க அஜய்..”
“தேவ்.. டைவர்ஸ் நோட்டீஸ் உங்களுக்கு ரெஜிஸ்டர் போர்ட் பண்ணியிருக்கேன்... சூட்டிகிட்ட சைன் வாங்கிடுங்க...”
“ம்ம்.. சரி அஜய்.. அப்புறம் அந்த பரத்தை என்ன பண்ணுறதாக முடிவு பண்ணியிருக்கீங்க அஜய்..??”
“சூட்டிக்கு டிவோர்ஸ் கிடைப்பதில் லேட்டாகாது.... எப்படியும் இன்னும் இரண்டு மாதத்தில் அவளுக்கு டிவோர்ஸ் கிடைத்திடும்.. அதோடு கேஸிற்கான காரணமாக பாலியல் வன்கொடுமைனு நாம சொல்லியிருப்பதால் நிச்சயம் அவனக்கு அதற்கான தண்டனை கிடைக்கும்.... ஆனா அந்த வழக்கை உடைக்கிறதுக்கான பணபலம் அவனுக்கு இருக்கு.. “
“அப்படி அவன் வெளியில வந்தா நான் அவனை கவனிக்கிறேன்..”
“தேவ்....”
“ஆமா.. அஜய்.. ஒன்று சட்டம் அவனுக்கான தண்டனையை கொடுக்கனும்.. இல்லைனா நாம அவனுக்கான தண்டனையை கொடுக்கனும்.. அவன் கை வைத்தது என்னோட சூட்டி மேல...”
“சரி தேவ்.. அதோடு பேபி அட்மிட்டாகியிருந்த ஹாஸ்பிடலில் இருந்து சில சி.சி.டி.வி பூட்டேஜ் கிடைத்திருக்கு... அந்த லாயரும் பேபியோட அப்பாவும் அங்க வேலை செய்யிற வார்ட் பாய் மூலமாக பேபிக்கு ஸ்லோபாயிசன் கொடுத்தது சி.சி.டி.வி இல் ரெக்கார்டாகியிருக்கு.. அதோடு பேபியோட ஆஸ்பிடல் ரிப்போர்ட்ஸ்சும் ஸ்லோபாய்சன் கொடுக்கப்பட்டிருக்குனு கன்பார்ம் பண்ணியிருக்கு... அது மட்டும் இல்லை தேவ்.... பேபி வீட்டு ட்ரைவர் பரத் பேபிகிட்ட தப்பாக நடந்துக்க முயற்சிபண்ணதை பார்த்ததாக சாட்சி சொல்ல முன் வந்திருக்காரு.... அதோடு பேபியை அந்த பரத் அவள் கதற கதற வீட்டுக்குள்ள இழுத்துட்டு போன சி.சி.டி.வி பூட்டேஜூம் கிடைத்திருக்கு.. இது எல்லாம் போதும்.. அந்த பரத்தையும் அந்த லாயரையும் காலி பண்ண...”
“சரி அஜய்... அந்த பரத்தும் அந்த லாயரும் எந்த காரணம் கொண்டும் தப்பிக்க கூடாது...”
“ இப்போ இருக்க ஆதாரங்களை உடைத்து அவங்களால் எந்த காலத்திலும் தப்பிக்கமுடியாது.. ஆனால் அந்த லாயர் எந்தக்காரணம் கொண்டும் பேபியை நெருங்காமல் இருக்கனும்...அவன் நிச்சயம் பேபியை தேடிட்டு தான் இருப்பான்... அவ உங்ககூட தான் இருக்கான்னு தெரியாத வரைக்கும் தான் அவளுக்கு பாதுகாப்பு...”
“நான் பார்த்துக்கிறேன் அஜய்... அதோடு அந்த சொத்து பிரச்சினைக்கும் ஏதாவது வழி பண்ணனும் அஜய்..”
“அதை பற்றி லாயர் கிட்ட பேசுனேன்.. நீங்க கேஸ் போட்டாலே போதும்னு சொல்லுறாரு.. அதை பற்றி நான் அவருகிட்ட தெளிவாக பேசிட்டு உங்களுக்கு சொல்லுறேன்...”
“சரி அஜய்.. சீக்கிரம் இந்த பிரச்சினை எல்லாம் முடிந்தால் தான் அடுத்ததை பற்றி யோசிக்கமுடியும்...”
“நிச்சயம் இரண்டு மாதத்தில் எல்லாத்தையும் முடிச்சிடலாம் தேவ்... நீங்க பேபியை கவனமாக பார்த்துக்கோங்க..”
“சரி அஜய்..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தவன் தன் நண்பனொருவனை அழைத்து சில ஒழுங்குகள் செய்துவிட்டு தன் வேலைகளை கவனிக்க கிளம்பினான்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN