துளி 18

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தருகின்ற பொருளாய்
காதல் இல்லை
தந்தாலே காதல்
காதல் இல்லை...


அழைப்பை எடுத்த தேவ்
“சொல்லுங்க அஜய்...”
“தேவ்... பேபி பக்கத்துல இருக்காளா???”
“இல்லை.. சொல்லுங்க...”
“தேவ்... விஷயம் வேற மாதிரி போகுது....”
“என்னாச்சு அஜய்...”
“பேபியோட அப்பா என்கிட்ட பேசுனாரு...”
“என்ன சொல்லுறீங்க அஜய்?? அவரு எப்படி??”
“அவரு இப்போ ஹாஸ்பிடலில் இருக்காரு தேவ்...”
“என்ன சொல்லுறீங்க...”
“ஆமா... அங்கேயிருக்க ஒரு டாக்டர் மூலமாக என்னை காண்டக்ட் பண்ணியிருக்காரு....”
“ஆனா எப்படி அஜய் அவருக்கு உங்க நம்பர்..??”
“அதை நான் பிறகு சொல்றேன்.. அவரு இப்போ ஸ்ரவ்யாவை பார்க்கனும்னு சொல்றாரு...”
“என்ன அஜய் சொல்லுறீங்க?? மறுபடியும் அவரை எப்படி நம்புறது??? அவரு சூட்டியை தேடி வந்தாருனு தானே நான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன்...”
“தேவ் ஆனா அவரு பேபியை தேடிவந்தது அவகிட்ட மன்னிப்பு கேட்கனு சொல்றாரு...”
“இது என்ன அஜய் புதுசா??”
“எனக்கும் எதுவும் புரியலை தேவ்... நான் விசாரித்தபோதும் அவரு பேபிகிட்ட தான் எல்லாத்தையும் சொல்லுவேன்னு சொல்லிட்டாரு... ஆனா அவரை நம்பமுடியலை....”
“இதுவும் அவரோட ஏதாவது பிளானாக இருக்கப்போகுது அஜய்..”
“நானும் அப்படி தான் நினைத்தேன்.. ஆனா அந்த டாக்டர் சொன்ன விஷயம் இதுல வேற ஏதோ இருக்குனு உணர்த்துகிறது...”
“டாக்டரா... அது யாரு...??”
“பேபியோட அப்பா ட்ரீட்மென்ட் எடுக்குற ஆஸ்பிடல் பேபியோட தாத்தாவோட ஆஸ்பிடல்... அங்க வேலைசெய்ற டாக்டர்ஸ் எல்லாரும் பேபியோட தாத்தாவின் ட்ரஸ்ட் மூலமாக படித்தவங்க... அவங்க ஹையர் ஸ்டடிஸ் கனடாவில் முடித்தவங்க... அதுக்கான ஏற்பாடெல்லாம் ஆரம்பத்துல அப்பா தான் பார்த்துக்கிட்டாரு... இப்போ நான் அதை எக்சிகியூட் பண்ணுறேன்... அதானால அங்க இருக்க டாக்டர்ஸ் எல்லாருக்கும் என்னை தெரியும்... அங்க என்னோட ப்ரெண்ட் ஒருத்தனும் டாக்டராக இருக்கான்... அவன் தான் சொன்னான்... பேபியோட அப்பாவுக்கும் அவரோட வைப்பிற்கும் ஏதோ பிரச்சினை நடக்கிறதாகவும் அதுக்கு அந்த பரத்தோட அப்பா பஞ்சாயத்து பண்ணுறதாகவும் ஒரு பிரச்சினை ஓடுறதாக அவன் கேள்விபட்டதாக சொன்னான்... “
“ஓ... அப்போ நிஜமாகவே அவருக்கு வேறு ஏதாவது பிரிச்சினையா??”
“ஆமா தேவ்.. அவருக்கு மைல்ட் அட்டாக் வந்து தான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கதாக சொன்னான்...”
“எல்லாம் சரி அஜய்... ஆனா அவரை எப்படி நம்புறது??”
“எனக்கும் அது தான் பிரச்சினை... ஆனால் அவர்கிட்ட பேசுனா எல்லா பிரச்சினைக்கும் ஒரு முடிவு கட்டலாம்னு நினைக்கிறேன்...”
“அவரு தானே இத்தனை பிரச்சினைக்கும் காரணம் அஜய்..”
“ஆமா தேவ்.. ஆனா அவர் மட்டும் இல்லை அந்த லாயரும் தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம்..”
“என்ன சொல்லுறீங்க அஜய்??”
“ஆமா தேவ்.. நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்ல அந்த லாயருக்கும் பேபியோட அப்பாவுக்கும் ஏதோ கொடுக்கல் வாங்கல் இருக்குனு... அது உண்மை தான் தேவ்... “
“என்ன சொல்லுறீங்க அஜய்??”
“ஆமா தேவ்... அந்த லாயர் தான் இந்த எல்லா பிரச்சினைக்கும் காரணம்... அவனோட பிளான்படி தான் பேபியோட அப்பா இதெல்லாம் செய்திருக்காரு..”
“ஆனா.. ஏன் அஜய்....??”
“வேற எதுக்கு சொத்துக்கு தான்...”
“அந்த ஆளை சும்மா விடக்கூடாது அஜய்... சூட்டியை நம்பவைத்து ஏமாற்றியிருக்கான் அஜய்..”
“ஆமா தேவ்.. அதுக்கு முதலில் நாம பேபியோட அப்பாவை மீட் பண்ணனும் தேவ்....”
“நேரடியாகவா??”
“இல்லை தேவ்... அவ்வளவு சீக்கிரம் அவங்களை நம்பமுடியாது.. சிலவேளை பேபியை அங்கு வரவைக்க அவங்க போட்ட பிளானாக கூட இருக்கலாம்.. அதனால நாம ஸ்கைப்ல பேசலாம்... அதுக்கு பிறகு என்ன பண்ணுறதுனு முடிவு பண்ணலாம்...”
“சரி அஜய்.. எப்போ பேசனும்னு சொல்லுங்க பேசலாம்.. “
“நான் அரேன்ஜ் பண்ணிட்டு சொல்லுறேன்..ஆனா பேபி இதுக்கு சம்மதிப்பாளா??”
“அதை நான் பார்த்துக்கிறேன்.. அப்புறம் அவளோட டைவர்ஸிற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பண்ணிட்டீங்களா அஜய்??”
“ஆமா தேவ் பேப்பர்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டேன்.. பேபி சைன் பண்ணதும் அனுப்பிடலாம்...”
“சரி அஜய்....”
“தேவ் பேபி எப்படி இருக்கா???”
“அவ நல்லா இருக்கா... பேசுறீங்களா??”
“கொடுங்க தேவ்....” என்று அஜய் கூற அலைபேசியை ஸ்ரவ்யாவின் கொடுத்து
“அஜய் பேசுறாரு...” என்று கூற ஸ்ரவ்யாவும் அஜயோடு பேசத்தொடங்கினான்..
அஜயிடம் பேசி முடிந்ததும் ஸ்ரவ்யா
“அப்பு... என்னை ஒரு போட்டே எடேன் ப்ளீஸ்... அஜூ பார்க்கனும்னு கேட்கிறான்...”
“சரி வா... “ என்று கூறியவன் அவளை வெளியே அழைத்து சென்று அவளை புகைப்படமாய் சேமித்தான்...
அவனெடுத்த புகைப்படங்களை பார்த்த ஸ்ரவ்யா
“அப்பு நிஜமாகவே உன் செலெக்ஷன் சூப்பர்டா... இந்த சாரியில அவ்வளவு கியூட்டா இருக்கேனாடா....”
“இல்லடி... நீ எந்த ட்ரெஸ் போட்டாலும் சூப்பரா தான் இருப்ப..இன்னைக்கு சாரியில கொஞ்சம் பெரிய பொண்ணு மாதிரி இருக்க... அதான் உனக்கு வித்தியாசமாக இருக்கு...”
“சரி.. வா.. நாம செல்பி எடுக்கலாம்.... “ என்று கூறி அவன் மார்பில் சாய்தபடியிருக்க அவளை ஒரு கையால் பிடித்தபடி தேவ் செல்பி எடுத்தான்...
அதை எடுத்து பார்த்தவள்
“இந்த போட்டோ தான் இன்னும் சூப்பரா இருக்கு....”
“நான் இருக்கேன்ல.. அதான்...”
“ஆமாமா.... நீ இருப்பதால தான் ரொம்ப சூப்பராக இருக்கு...”
“பார்டா.... உடனே ஒத்துக்கிட்ட....”
“உண்மையை ஒத்துக்க தானே வேண்டும்..... நான் எப்பவுமே உன்கூட இருப்பது தான் எனக்கு அழகு...”
“ஆஹான்... என்ன இன்னைக்கு பேபி செம்ம பார்ம்ல இருக்காங்க போல...”
“ஆமா.... ரொம்ப.....”
“சரிசரி... நாம உள்ள போகலாமா...இல்லைனா அம்மா நம்மை தேடி வந்திடுவாங்க...” என்று தேவ் கூற அவனோடு உள்ளே சென்றாள் ஸ்ரவ்யா...
இரண்டு நாள் கழித்து ஸ்கைப்பில் ஸ்ரவ்யாவின் தந்தையோடு உரையாட அமர்ந்திருந்தனர் தேவ்வும் ஸ்ரவ்யாவும்...
தேவ் இதுபற்றி கூறியபோது முடியாதென்று பிடிவாதமாக நின்றவளை கெஞ்சி கொஞ்சி சரிகட்டியிருந்தான் தேவ்.. இப்போதும் கூட அவள் மறுத்துவிடுவாளோ என்ற பயத்தில் அவளோடு அமர்ந்திருந்தான்...
அப்போது அஜயும் ஆன்லைன் வந்திட அவன் ஸ்ரவ்யாவின் தந்தையையும் அழைப்பில் இணைத்தான்..
ஸ்ரவ்யாவோ தனக்கு எதுவும் சம்பந்தமில்லாது போல் இருக்க அஜயே ஆரம்பித்தான்..
“ஸ்ரவ்யாவும் லைன்ல தான் இருக்கா.. நீங்க சொல்லவேண்டியதை சொல்லுங்க...”
“ஸ்ரவ்யா நல்லா இருக்கியாமா??” என்று ஸ்ரவ்யாவின் தந்தை நலம் விசாரிக்க
“அஜூ சொல்ல வந்த விஷயத்தை சொல்ல சொல்லுறியா நான் எழுந்து போகவா..??” என்று ஸ்ரவ்யா தன் வெறுப்பை காட்டினாள்..
“நீ என்மேல் கோபமாக இருக்கனு தெரியும்.. உன்னோட இந்த நிலைக்கு முழுக்க முழுக்க நான் மட்டும் தான் காரணம்..... நான் உனக்கு மட்டுமில்லை உங்க அம்மாவுக்கும் நிறையை கொடுமை பண்ணியிருக்கேன்...”
“தேவ்.. ப்ளீஸ் லைனை டிஸ்கனெக்ட் பண்ணிடு... “என்று கூறிவிட்டு ஸ்ரவ்யா எழுந்துசெல்ல முயல அவளை தடுத்துநிறுத்திய தேவ்
“சூட்டி.. ப்ளீஸ் எனக்காக இரு... சார்.. நீங்க சொல்லவந்த விஷயத்த சீக்கிரம் சொல்லுங்க..”
“சொல்லுறேன்... ஸ்ரவ்யா இதுவரை நடந்த எல்லா பிரச்சினைக்கும் அந்த லாயர் தான் காரணம்...”
“தேவ்... போதும்.. இதுக்கு மேல என்னால எதுவும் கேட்கமுடியாது... இவரு தப்பை மறைக்க அவர்மேல பழியை போடுறாரு.. சொல்லப்போனோ நான் இப்போ வரை உயிரோடு இருப்பதற்கு அவரு தான் காரணம்..” என்று ஸ்ரவ்யா எகிற ஸ்ரவ்யாவின் தந்தை
“உனக்கு நடந்தது எதுவும் முழுதாக தெரியாது... இதுவரைக்கும் நடந்ததெல்லாம் அவன் திட்டப்படி தான் நடந்தது... ஆனால் இதற்கு பிறகு அதை நீ தான் தடுத்து நிறுத்தனும்... அதற்கு முதல்ல நடந்ததை நீ முழுதாக தெரிந்துக்கொள்ள வேண்டும்... உங்க தாத்தா சொத்து முழுதையும் உன் பெயரிலும்,தேவ்வின் பெயரிலும் எழுதி வைத்திருக்கிறாருங்கிற விஷயத்தை அந்த லாயர் தான் எனக்கு சொன்னான்.... நீ தேவ் குடும்பத்தை கண்டுபிடித்த விஷயத்தையும் என்கிட்ட சொன்னான்... சொத்து மேல உள்ள ஆசையில நான் தேவ் குடும்பத்தை காலிபண்ண தயாராக அந்த வக்கில் தான் என்னை தடுத்தான்... தேவ்விற்கும் அவன் குடும்பத்திற்கும் இன்னும் விஷயம் தெரியாது... அவங்க இறந்துட்டதாக ஒரு சர்டிபிகேட் கொடுத்திட்டா சொத்தை கைபற்றுவதில் எந்த பிரச்சினையும் இல்லைனு சொன்னான்... தேவ் வீட்டுக்கு வந்தப்போ அவனுக்கு எந்த விஷயமும் நீ சொல்லலைனு புரிந்தது... அவன் எக்காரணம் கொண்டும் உன்னை தேடி வரக்கூடாதுனு தான் உன்னை மிரட்டி அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தேன்..... சொத்தை முழுதாக என் பெயருக்கு மாற்ற உன்னோட சைன் வேணும்னு சொன்னான்... ஆனா அதுக்கு நீ சட்டப்படி திருமணமாகியிருக்கனும்னு உயிலில் இருந்ததால் உன்னை மிரட்டி பரத்துக்கு ரெஜிஸ்டர் பண்ணேன்....
இதெல்லாம் அந்த வக்கீலோட யோசனைப்படி தான் நடந்தது... ஆனால் எங்க நீ மறுபடியும் ஏதாவது குட்டையை கிளப்பிடுயோங்கிற பயத்துல அந்த வக்கில் உனக்கு உதவி பண்ணுறமாதிரி உன்னை ஆஸ்பிடலில் அட்மிட்டாக சொன்னான்... நீயும் அவன் பேச்சை நம்பி ஆஸ்பிடலில் அட்மிட் ஆன.. அது உன்னை கொலை பண்ண அவன் போட்ட திட்டம்.. ஆனால் அதிஷ்டவசமாக நீ தப்பிச்சிட்ட.. ஆனால் உனக்கு மூளை பேதலிச்சதால உன்னால எந்த பிரச்சினையும் வராதுனு உன்னை உயிரோடு விடச்சொன்னான்... ஆனால் அவனோட சுயரூபம் எனக்கு அப்போ புரியலை.. அவன் சொத்து முழுதையும் அவன் பெயருக்கு மாற்ற தான் இத்தனையும் செய்திருக்கான்... இதுமட்டுமில்லை.. உங்க அம்மா ஆக்சிடண்டில் சாகலை.. அவளையும் இவன் தான் ஆக்சிடண்ட் பண்ணியிருக்கான்... இதுக்கு அந்த பரத்தோட அப்பாவும் கூட்டு...அவன் மட்டும் இல்லை.. என்னோட இரண்டாவது மனைவிக்கும் இதில் பங்கு இருக்கு... இதுவும் கொஞ்ச நாளைக்கு முதலில் தான் எனக்கு தெரியவந்தது.. என்னையும் கொல்ல திட்டம் போட்டிருக்காங்க.. நான் என்னை பற்றி கவலைப்படலை.. ஆனால் உன்னால் எந்தவித பிரச்சினையும் வரக்கூடாதுனு உன்னையும் கொல்லத்திட்டம் போட்டிருக்காங்க... இவங்க சுயரூபம் தெரிந்ததும் தான் என்னோட தப்பை நான் உணர்ந்தேன்... உன்னையாவது காப்பாற்றனும்னு தான் அவங்களுக்கு தெரியாமல் உன்னை தேடி கொழும்புக்கு வந்தேன்.. ஆனா நீ அங்க இருக்கலை... எனக்கு உண்மை தெரிஞ்சிருச்சுனு அந்த வக்கீலுக்கு தெரிஞ்சிடுச்சு....என்னையும் கொல்வதற்கு சமயம் பார்த்திட்டு இருக்கான்... அதுக்கு முதலில் உனக்கு உண்மை தெரியனும்னு தான் உன்கூட பேசனும்னு முயற்சி பண்ணேன்...”
“நீங்க சொல்றது உண்மைனு நான் எப்படி நம்புறது?? நானும் பரத்தும் ஒரு வருஷம் வாழ்ந்தா தான் சொத்தை இன்னொருத்தர் பெயருக்கு எழுதமுடியும்னு லாயர் சொன்னாரு... நீங்க சொல்லுறபடி பார்த்தால் அது எப்படி சாத்தியமாகும்..”
“அதுக்கு சட்டத்துல இடம் இருக்குனு அந்த லாயர் சொன்னான்.. நீ மனநலம் சரியில்லாமல் இருந்ததை காரணம் காட்டி சொத்துக்கான உரிமையை பரத் பயன்படுத்துவதற்கான அனுமதி சட்டத்துல இருக்குனு சொன்னான்... உன்னோட மெடிகல் சர்டிபிக்கட்டை காட்டி சொத்து மொத்தத்தையும் அந்த பரத் லாயர் பெயருக்கு எழுதிட்டான்.....”
“இல்லை.. நான் நம்ப மாட்டேன்.. நீங்க பொய் சொல்லுறீங்க...”
“இல்லை பேபி.. உங்க அப்பா சொல்லுற அத்தனையும் உண்மை... “ என்று அஜய் கூற
“அஜூ...”
“ஆமா பேபி... இது எல்லாத்துக்கும் அந்த லாயர் மட்டும் தான் காரணம்... அவனோட பணத்தாசைக்காக உன் வாழ்க்கையோட விளையாடியிருக்கான்..”
“அஜூ... நீ.. நீ..”
“ஆமா பேபி.. உங்க அப்பா சொல்லுறது அனைத்தும் உண்மை.. இப்போ அந்த லாயர் உன்னை தேடிட்டு இருக்கான்.. நீ கோர்ட்டில் கேஸ் போட்டா சொத்து அத்தனையும் உன்கிட்ட வந்திடும்னு அவனுக்கு நல்லாவே தெரியும்... அதனால் உன்னை கொலை பண்ண அவன் உன்னை தேடிட்டு இருக்கான்... தேவ் வெளிநாட்டில் இருந்து வந்த விஷயம் அவனுக்கு இன்னும் தெரியாது.. அதனால் நீ தேவ்கூட இருக்க விஷயம் அவனுக்கு தெரியாது...”
“அஜூ.. அப்போ அந்த லாயர் தான் எல்லா பிரச்சினைக்கும் காரணமா?? அப்போ .... அம்..மா.. ஆக்சிடன்ட்டும்..”
“ஆமா பேபி.. அதுவும் அவன் வேலை தான்...”என்று அஜய் கூற ஸ்ரவ்யாவோ தன்னிடத்திலிருந்து எழுந்து அறையினுள் சென்று அடைந்துகொண்டான்..
தேவ்வோ
“அஜய் நீங்க பார்த்துக்கோங்க.. நான் ஆப்லைன் போறேன்...” என்றபடி அழைப்பை துண்டித்தவன் ஸ்ரவ்யாவை தேடிச்சென்றான்....
அங்கு ஸ்ரவ்யாவோ நிலத்தில் அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்...
அவள் அழுகை சத்தம் கேட்டு தேவ்வின் அன்னையும் அங்கு வந்திட அவரிடம் ஏதோ கூறி சமாளித்து அவரை அனுப்பி வைத்தவன் ஸ்வர்யாவின் முன் வந்து அமர்ந்தான்....
“சூட்டி இப்போ என்னாச்சுனு அழுற?? முதல்ல அழுகை நிறுத்து...”என்று தேவ் கூற அவளோ தலையை கூட நிமிர்த்தாது அழுகையை தொடர்ந்தாள்....
வலுக்கட்டாயமாக அவள் தலையை நிமிர்த்தியவன்
“இங்க பாரு சூட்டி... அழ வேண்டிய நீ இல்ல..அந்த லாயர் தான்....”
“ஆனா அவன் அழவில்லையே.. என்னை தானே இத்தனை நாளாக அழவைக்கிறான்..”
“சூட்டி நீயா இப்படி பேசுறது??”
“சொத்துக்காக என்னோட அம்மாவை கொலை பண்ணியிருக்கான்.... அதுமட்டுமா இன்னும் நிறைய பண்ணியிருக்கான்... எல்லாம் எதுக்கு அந்த சொத்துக்காக... உயிரை விட சொத்து முக்கியமா அப்பு..??? அம்மா... அம்மா... என்ன தப்பு பண்ணாங்க அப்பு... அவங்களை... நான் அவரை என்னோட அப்பா ஸ்தானத்துல வைத்து பார்த்தேன் அப்பு.. எனக்கு உதவி பண்ணுறதாக என்னை நம்பவைத்து ஏமாற்றியிருக்கான் அப்பு... ஏன் அப்பு காசு பணத்துக்கு மட்டும் தான் இந்த உலகத்துல மதிப்பு இருக்கா?? எதுக்கு சொத்துக்காக எங்க அம்மாவை என்கிட்ட இருந்து பிரிச்சான்...?? “
“சூட்டி.. உன்னோட நிலைமை எனக்கு புரியிது.. நானும் கூட இதை எதிர்பார்க்கலை.... அந்த லாயர் உனக்கு பண்ணது நம்பிக்கை துரோகம்... அது மட்டும் இல்லை... உன்னோட வாழ்க்கையில் நடந்த அத்தனை கொடுமைகளுக்கும் அவன் மட்டும் தான் காரணம்.. அதுக்கான தண்டனையை அவன் கூடிய சீக்கிரத்துல அனுபவிப்பான்... ஆனால் அதுக்காக நீ அழுது புலம்புவதில் எந்த அர்த்தமும் இல்லை... நீ பலவீனமானவனு நினைத்து தானே அவங்க இப்படிபட்ட ஒரு காரியத்தை பண்ணாங்க... அவங்களுக்கு நீ அப்படியில்லைனு புரியவை... அதை செய்வதற்கு நீ மனதளவில் தைரியமாக இருக்கனும்....உன்னோட தைரியம் தான் உன்னோட பலம்... அவங்களுக்கான தண்டனையை நீயே அவங்களுக்கு கொடுக்கனும்...”
“என்ன பண்ணாலும் இறந்து போன என்னோட அம்மா திரும்பி வரமாட்டாங்களே...??”
“சூட்டி... ஒன்றை நீ புரிந்துக்கொள்... நீ அவங்களுக்கு கொடுக்க போற தண்டனை அத்தையை மறுபடியும் நம்மகிட்ட கொண்டுவரமுடியாமல் அழைச்சிட்டு வராது.. ஆனால் அத்தை இறப்புக்கு நீதி கிடைக்கும்... அதை செய்யவேண்டியது அவங்க மகளான உன்னுடைய கடமை....”
“ரொம்ப கஷ்டமாக இருக்கு அப்பு... எத்தனை நாள் அம்மாவை நினைத்து ஏங்கி அழுதிருப்பேன் தெரியுமா??? மனசு கஷ்டமாக இருக்கும் போது அவங்க மடியில படுத்துக்க மனசு ஏங்கும்.... என்னோட இழப்பை அவங்களால் ஈடுகட்டு முடியுமா?? சில விஷயங்களை அம்மாகிட்ட மட்டும் சொல்லமுடியும்... அந்தமாதிரி நேரத்தில் அம்மாவுக்காக என் மனசு ஏங்கும்... அந்த நேரத்துல எவ்வளவு அழுதிருப்பேன் தெரியுமா?? கேவலம் சொத்துக்காக என்னோட உறவு நிம்மதி வாழ்க்கை எல்லாத்தையும் கெடுத்துட்டாங்க...”
“சூட்டி.. இங்க பாரு.. உனக்கு நான் இருக்கேன்.. இப்போ மட்டும் இல்லை . எப்பவும்... உனக்கு என்ன அத்தை ஸ்தானத்துல யாராவது வேண்டும்... அதானே.. நான் உன்னோட அம்மா ஸ்தானத்துல இருந்து உன்னை கண்ணுக்குள்ளே வைத்து பார்த்துக்கிறேன்.. ப்ளீஸ் அழாத.... நான் இருக்கேன் சூட்டி...” என்று தேவ் ஸ்ரவ்யாவின் கைகளை இறுகப்பற்ற
“நீயும் அம்மா மாதிரி என்னை விட்டு போகமாட்டல??” என்று ஸ்ரவ்யா கேட்க
“இல்லை... நீயா போன்னு சொன்னாலும் போகமாட்டேன்..” என்று தேவ் கூற தாவி அவனை இறுக அணைத்துக்கொண்டாள் ஸ்ரவ்யா..
அவளுக்கு எப்போதுமே அவன் மட்டும் தான் என்று அவளுணர்ந்து பலவருடங்களாகவிட்டது.. ஆனாலும் இன்று அவள் அறிந்த உண்மைகள் அவளை பலவீனமாக்கிட அவள் உள்ளம் உணர்ந்த உண்மையை அவள் வேதனை எனும் போர்வை தற்காலிகமாக மறைத்திட அதன் விளைவாலேயே அவள் வருந்தினாள்.. ஆனால் அதையும் சரியாய் உணர்ந்து புரிந்து தன்னவளிற்கு நிஜத்தை தன் வார்த்தைகளால் புரியவைத்தான் தேவ்... இதுவே காதல்... தன் துணை தேடும் ஆறுதலை அவர் விரும்பும் வகையில் வரையறையில்லாது வழங்குவது கூட அன்பை வெளிப்படுத்தும் ஒரு செயல் தான்.. சூழ்நிலை எத்தகையானதாக இருந்தாலும் உனக்காக நான் இருப்பேன் என்ற வார்த்தைகளை மட்டுமே காதல் கொண்ட நெஞ்சம் எதிர்பார்க்கும்.... இதை தகுந்த சமயங்களில் வழங்கத்தவறிய காதலே தோல்வியுற்ற காதல்...
தன்னை இறுக்கியணைத்தவளின் மனப்பாரம் முழுதும் தீரும் மட்டும் தேவ்வும் அவன் அணைப்பின் இறுக்கத்தை தளர்த்தவில்லை...
கணங்கள் விநாடிகளாகிட தன் அணைப்பின் இறுக்கத்தை தளர்த்தினாள் ஸ்ரவ்யா...
தன்னிடமிருந்து விலகமுயன்றவளுக்கு இடமளித்தவன்
“சூட்டி...” என்று ஏதோ கூறமுற்பட
“வேணாம் அப்பு... இதுக்கு மேல இதை பற்றி பேசவேண்டாம்... இதுக்கு பிறகு என்ன செய்றது என்பதை யோசிப்போம்...”
“இதை தான் சூட்டி நான் உன்கிட்ட எதிர்பார்த்தேன்... இது தான் நீ... எந்த பிரச்சினையையும் கண்டு நீ பயப்பட்டதில்லை... இனியும் கூட நீ பயப்படக்கூடாது.. சரி வா.. வெளியே போகலாம்... அம்மா என்னவோ ஏதோனு பயந்துட்டாங்க...எழுந்திரி..”என்று தேவ் ஸ்ரவ்யாவை எழுப்பமுயல அவளோ அவள் கரம்பற்றி தடுத்தவள்
“என்னை உனக்கு அவ்வளவு பிடிக்குமா அப்பு...???”
“அவ்வளோனா எவ்வளவு சூட்டி???”
“நீ தான் எவ்வளவுனு எனக்கு காட்டனும்...???”
“ஹாஹா... அது எப்படிமா காட்டுறது??”
“நீ சுத்த வேஸ்ட் அப்பு... ஒழுங்கா ரொமேன்ஸ் கூட பண்ணத்தெரியலை...”
“ஆமா... ஆமா.. எனக்கு பண்ணத்தெரியாது தான்... வேணும்னா நீ கொஞ்சம் சொல்லி தா சூட்டி...”
“சொல்லித்தரலாம்...ஆனா கிளாசுக்கு என்ன பீஸ் தருவ???”
“அதையும் நீங்களே சொல்லிடுங்க டீச்சர்....”
“ம்ம்ம்.. ஹான்... சொல்லுறேன்...ஒரே ஒருதடவை...”
“ஒரு தடவை ..”
“என்னை...”
“உன்னை...”
“ஸ்ரயானு கூப்பிடேன் அப்பு..”
“ஹேய்.. உனக்கு எப்படி?? ஓ மேடம் டையரியை படிச்சிட்டீங்களா??”
“ஹிஹி.. ஆமா... ப்ளீஸ் ஒரு தடவை அந்த பெயர் சொல்லி கூப்பிடேன்...”
“ம்ஹூம்.. அது மட்டும் முடியாது...”
“ஏன் முடியாது???”
“அது முடியாதுனா முடியாது தான்..”
“அது தான் ஏன்னு கேட்கிறேன்...”
“அது உன்னை அப்படி கூப்பிட தோன்றும் போது தான் அப்படி கூப்பிட முடியும்....”
“எப்போ தோன்றும்...??”
“அது தோன்றும் போது தோன்றும்...”
“இப்படி பதில் சொன்னா எப்படி அப்பு...??”
“ஹேய் அதெல்லாம் ஒரு மூடில் இருக்கும் போது தான் வரும்.... இப்படி சட்டுனு கேட்டா கூப்பிடமுடியாது...”
“ஓ... அது என்ன மூட்... ஏன் அது இப்போ வராதா??”
“அதெல்லாம் நினைத்தவுடன் வராது... அதாகவே வரணும்...”
“ஓ... அப்படி... இப்போ நான் அதை வரவைக்கவா??” என்று ஸ்ரவ்யா கூற
“அதெல்லாம்..வ...வ...வ...” என்று தொடங்கிய தேவ்வின் வார்த்தைகள் ஸ்ரவ்யாவின் இதழ் ஸ்பரிசத்தில் தந்தியடிக்கத்தொடங்கியது...
அவன் எதிர்பாராநேரத்தில் ஸ்ரவ்யாவின் இதழ்கள் தேவ்வின் இடக்கன்னத்தில் முத்திரை பதித்திருந்தது...
அவள் இதழ் முத்திரையில் அனைத்தும் செயலிழந்து நின்றவனை கண்டு சிரித்தவள்
“இப்போ சொல்லு அப்பு.... “
“ஸ்...ஸ்..ஸ்..ர.....யா.... ஸ்ரயா..”
“ஹாஹா பார்த்தியா... இப்போ சொல்லிட்டல்ல?? எப்புடி..” என்றவள் சிரித்தபடியே அறையிலிருந்து வெளியே சென்றட ஆணவனின் நிலையோ அவள் ஸ்பரிசத்தில் மயங்கிநின்றது....
ஸ்ரவ்யா மறுபடியும் வந்து அவனை உலுக்கியபின்பே தேவ்விற்கு உணர்வு வந்தது...
அவனது நடவடிக்கையில் சிரித்தவள்
“அப்பு... அத்தை உன்னை வரச்சொல்லுறாங்க... “ என்று கூறி அவனை அறையிலிருந்து அனுப்பி வைத்தவள் அறைக்கதவை மூடிவிட்டு அவனது டையரியை எடுத்துக்கொண்டு அமர்ந்தான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN