மாற்றம் -4

Bhagya sivakumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் -4

மாற்றம் ஒன்றே மாறாதது


தன்னவளை பைக்கில் அமர்த்தியவன் பல்கலைக்கழகம் வரை அமைதியாகவே பைக்கை செலுத்திக்கொண்டு வந்தான். நிறைய பேசவேண்டும் போல் இருந்தது அவனுக்கு ஆனால் எப்படி துவங்குவது என்பதில் குழப்பம் மிஞ்சியது.

"யுனிவர்சிட்டி வந்திடுச்சு நிறுத்துங்க" என்றாள் தோளை தட்டியபடி. அவளது கைகள் தோளில் ஸ்பரிசம் ஆனதை நினைத்து பூரித்துக்கொண்டவன் சிறு புன்னகையுடன் அவளுடன் உள்ளே நுழைந்தான்.

இருவரும் முன்னும் பின்னும் வரிசையில் நின்றனர். அவ்வப்போது காற்றில் அசைந்தாடும் கூந்தல் அவன் மீது உரசிக்கொள்ள தன்நிலை அவ்வப்போது மறந்துக்கொண்டிருந்தான். ஒருவழியாக இருவரும் விண்ணப்பம் வாங்கிக்கொண்டு வெளியே வர..

"பை ஆர்யா" என்றாள் கையசைத்தப்படி

"அ...அது வந்து இப்ப ரிடர்ன் எப்படி போகப்போறீங்க" என்று வினவ..

"வேற எப்படி எல்லாம் பஸ் தான்" என்றாள் தோளை குலுக்கியபடி.

"உங்களுக்கு ஆட்சயபனை இல்லைனா நானே ட்ராப் பண்ணவா" என்றான் தயங்காமல்.

"ம்ம்ம்" என்று ஒப்புக்கொண்டு அவனுடன் ஏறி அமர்ந்தாள். ஏனெனில் பஸ்ஸில் செல்வதை விட அவனுடன் செல்வது அவளுக்கு பாதுகாப்புணர்வு அளித்தது.

"ரோஜா.." என்றழைக்க

"சொல்லுங்கள் மிஸ்டர் ஆர்யா"

"எங்கள் க்ளாஸ் கலை உங்கள் ப்ரண்டா" என்றான் விழுக்கென்று.

"ஆமாம் ஏன் கேக்குறீங்க" என்றாள் சந்தேகத்துடன்.

"இல்லை அடிக்கடி அவள் உங்கள் பெயர் பயன்படுத்தி பேசிட்டு இருப்பா அதான்" என்றான்.

"ஹாஹா உண்மை தான் ஆர்யா"

"ஓ..சரி சரி" என்றான் புன்னகையித்தபடி. அவன் ஏன் இதைப்பற்றி கேட்டான் என்று புரியவில்லை அவளுக்கு ஆனால் அவனோ சாதுரியமாக இவர்களின் நட்பு பிணைப்பு எந்தளவு என்பதை தெரிந்து கொள்ளவே கேட்டான். இதனால் கலை மூலமாக ரோஜாவை காதலோடு நெருங்கிவிடலாம் என்று மனகணக்கு போட்டுக்கொண்டான். ஏற்கனவே இவன் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான்.
.....
தயாளன் வீட்டில் அன்று பாத்திரம் உருண்டு கொண்டிருந்தது வேறு என்ன எல்லாம் அவன் மனைவி உருட்டுவது தான்...

"ஏய் என்னடி பிரச்சினை உனக்கு" என்றான் கோபத்தின் உச்சத்தில்.

"ஆமாம் நான் தான் கோபப்பட்டு பேசுறன் நீங்கள் அப்படியே நல்லவரு பாருங்க"

"ச்ச இந்த வீட்டில் கொஞ்சம் கூட நிம்மதியே இல்லை " என்றபடி தன் அறைக்குள் சென்று புகுந்து கொண்டான்.

தயாளனுக்கு பிரச்சனையே அவன் மனைவி தான்.. இவன் என்னதான் அவளிடம் பாசம் காட்டினாலும் இவனிடம் எதையாவது வம்பு இழுத்து கொண்டே இருப்பாள் இது வாடிக்கை ஆயிற்று. இவனது தாய் மஹாலட்சுமி இவை எல்லாவற்றையும் சகித்து கொண்டு மகனுக்கு அறிவுரை கூறி காலத்தை தள்ளிக்கொண்டு சென்றனர்.
மஹாலட்சுமி கணவர் போன வருடம் தான் விபத்தில் இறந்து விட்டார். வேறு என்ன செய்ய மகனே உலகம் என்று வாழ்கிறார் மஹாலட்சுமி. அவ்வப்போது கடந்த கால வாழ்வினை நினைவுகூர்ந்து தன் மனதை ஆசுவாசப்படுத்தி கொள்வாள் அந்த பெண்மணி. தயாளனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத காரணத்தால் அந்த குறையும் அக்குடும்பத்தில் ஒன்று.

தனது நிறுவனத்தின் சார்பாக வருடத்தில் ஒருமுறை வசதியற்ற குழந்தைகளுக்கு படிக்க உதவி செய்வான் தயாளன். இந்த வருடம் ரவியை தேர்வு செய்து உதவித்தொகை அளித்தான். என்னவோ தெரியவில்லை ரவியை மிகவும் பிடித்துபோனது. அவ்வப்போது அழைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசவும் செய்வான்.

அன்று ரவியின் பிறந்த நாள் எனவே அவனுக்கு போன் செய்ய சட்டென்று ரோஜா எடுத்து பேசினாள்.
"சொல்லுங்கள் தயாளன் சார்"

"ஆங்,ரோஜா உன் தம்பி ரவியிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லனும்னு கால் பண்ணேன்"என்றதும் போனை ரவியிடம் தந்தவள்..

"தயாளன் அங்கிள் ரொம்ப தாங்க்ஸ். இன்னைக்கு எங்கள் அக்காவுக்கு அடுத்தப்படியாக நீங்கள் தான் விஷ் பண்ணியிருக்கீங்க"

"ஹாஹா.. ஓகே டா கண்ணு நல்லா படி பை." என்று அழைப்பை துண்டித்து விட்டு எதையோ சிந்திக்கலானான்.

'நமக்கு இந்த ரவி மேல ஏன் இப்படி ஒரு பிரியம்.. எத்தனையோ பேருக்கு உதவி பண்ணியிருக்கேன் ஆனால் இவன்மேல் வச்ச பாசம் வேற யார் மேலயும் வச்சதே இல்லை' என்று நினைத்தவன் தன் லேப்டாப் எடுத்து வேலை செய்ய துவங்கினான். தான் புதியதாக துவங்க இருக்கும் ப்ராஜெக்ட் விஷயமா மெயில் அனுப்பினான்.

தன் தம்பியின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக வீட்டிலேயே அவனுக்கு பிடித்த குலாப் ஜாமுன் செய்து அவசர அவசரமாக டிபனும் செய்து விட்டு வேலைக்கும் கிளம்பினாள்.

"என்னம்மா ரோஜா நேத்து யுனிவர்சிட்டி போனியே அப்ளிகேஷன் வாங்கிட்டியா" என்றார் கடை உரிமையாளர்.

"வாங்கிட்டேன் சார்" என்றாள் புன்னகையித்தபடி.

"சரி சரி புதுசா வந்த ஸ்டாக் எல்லாம் அடுக்கி வைங்க நீயும் அந்த கண்ணாடி போட்ட பொண்ணும்" என்று கூறிவிட்டு கல்லாவில் இருக்கும் பணத்தை எண்ணிக்கொண்டு இருந்தார். இவளோ புதியதாக வந்த அந்த கண்ணாடி அணிந்த பெண்ணுடன் கைகுலூக்கி

"ஹாய் ஐயம் ரோஜா" என்றாள்.

"நான் ரேகா"

ம்ம்ம் வாங்க வேலையை கவனிப்போம் என்று இருவரும் வேலையை துவங்கினர். அன்று முதல் இருவரும் தோழிகள் ஆகினர். ரேகாவின் இனிமையான பேச்சுக்களும் எப்போதும் மலர்ச்சியாக இருக்கும் முகமும் ரோஜாவிற்கு பிடித்து போயின..
ஆனால் அவ்வப்போது ரேகா மனதுக்குள் எதையோ நினைத்து நொந்து கொள்வதை கவனித்தாள் ரோஜா.

அது என்ன என்பதை தெரிந்து கொண்டு அவளுக்கு ஏதேனும் நன்மை செய்வாளா தோழியாயிற்றே விரைவில் ரேகாவின் மனதை ஆராய்வாள் ரோஜா.

தொடரும்






Comment your suggestion. Click like and share
 

Author: Bhagya sivakumar
Article Title: மாற்றம் -4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN