காதலில்.உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 29

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கோவை

என்னதான் அண்ணனிடத்தில் சாதாரணமாய் பேசி சாருகேஷை பற்றிய தகவலை கூறவில்லை என்றாலும் மனதின் ஓரத்தில் வலி இருக்கத்தான் செய்தது. ‘நான் செய்த வேலைக்கு என் குடும்பத்தை அழிக்க வேண்டும் எனில் அதை உடனே செய்து இருக்கலாமே ஏன் மூன்று வருடங்களாக காத்திருந்து செய்கிறான்' என்ற எண்ணம் உதித்து கனவில் இருந்து விழித்தவனாக இலக்கில்லாமல் அலைபாய்ந்த மனது பெரும் குரலெடுத்து ‘உத்ரா உத்ரா' என்று கத்தியது.

தன் கண்மூடித்தனமான நம்பிக்கையில் ஒரு குடும்பமே உருதெரியாமல் குலைந்து போயிருக்க அதில் மிச்சமாய் இருந்தவன் தான் சாருகேஷ். அந்த இழப்பின் போது காணாமல் போயிருந்தவனுடைய பெயரையே இன்று தான் அவன் காதால் கேட்கிறான்.

‘நான் தப்பு செய்யல சாருகேஷ். நான் சொன்னா நீ கேக்குற மனநிலையில இருப்பியா டா.... உத்ராக்கு அநியாயம் செய்யல டா' என்று அவன் மனம் அரற்றியது.... அவன் பக்கம் இருக்கும் நியாயத்தை சொன்னால் புரிந்துகொள்வானா தன் உயிர் நண்பன் என்ற எண்ணம் மனதை அழுத்தியது. உடல்கள் இரண்டாயினும் நட்பு எனும் சங்கிலியில் ஒரு உயிராக பிணைக்கப்பட்டிருந்த இரு மனங்களில் ஒன்று எதிரியாய் நினைத்து துவேஷம் கொண்டு அவனை பழிவாங்க நினைக்கிறது.

இதை நினைக்க நினைக்க கேஷவின் உடலும் மனமும் மிகுந்த களைப்படைந்து சீட்டின் பின் இருக்கையில் சாய்ந்திருக்க காரின் ஹாரன் சத்தம் அவனின் எண்ணப்போக்கை தடை செய்து நிகழ் உலகிற்கு கொண்டு வந்திருக்க அந்நேரம் வீடு வந்து சேர்ந்திருந்தான் கேஷவ். தனது லேப்டாப் பேகுடன் காரில் இருந்து இறங்கியவனின் முகமே கவலையாய் இருந்தது. எதையோ பறிகொடுத்தவன் போல் இருந்தான் உண்மை காரணத்தை தாய் தந்தை அறிந்தால் மலேஷியா செல்ல நிச்சயம் தயங்குவார்கள் என்று அறிந்தவன் சிரமபட்டு முகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து வீட்டிற்குள் நுழைந்தான்.

வீட்டிற்குள் நுழையும்போதே வரவேற்பறையில் இருந்த ஆதியும் ராஜாராமனும் ஏதோ சுவாரஸ்சியமாய் பேசியபடி இருக்க அலுவலகத்தில் நடந்த சம்பவங்கள் எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு தெரிய வேண்டாம் என்பதில் இன்னும் தீவிரமாக இருந்தான்.

ஆதிதான் மகன் வாசலிலேயே நிற்பதை முதலில் பார்த்தார். “என்ன கண்ணா அங்கயே நின்னுட்ட உள்ள வாபா” என்றவர் அவனுக்காக உணவினை எடுத்து வைக்க செல்ல அவரை தடுத்து “வேண்டாம்” என்றவன்.

“என்னமா இன்னும் தூங்கலையா இவ்வளவு ?. நேரம் முழிச்சிட்டு இருக்கிங்க” என்று கையில் இருக்கும் பேகை டீபாயில் வைத்துக்கொண்டே எங்கே முகம் காட்டிக்கொடுத்து விடுமோ என்ற கலவரத்துடனே வினவினான்.

“தூங்க போகனும்தான் நீ ஏன்பா இவ்வளவு நேரம் கழிச்சி வந்திருக்க ?. லேட்டுன்னா ஒரு கால்பண்ணி சொல்லி இருக்கனும்ல. கவி எத்தனை முறை போன் பண்ணாலாம் எடுக்கவே இல்லையாம் ரொம்ப பயந்துட்டா அப்புறம் கார்த்திக்கு போன் பண்ணிதான் தெரிஞ்சது” என்று பேசிக்கொண்டே வந்தவர் அடுத்தவார்த்தை பேசுவதற்கு முன் என்ன சொன்னான் என்ன தெரிஞ்சது என்று பதட்டமானான்.

“என்ன கேஷவ் ஏதாவது ப்ராமளமா ?. ஏன் இப்படி பதட்டபடுற ?.” என்றார் ஆதி இதுவரை இருவரின் வார்த்தையாடல்களை கவனித்த வண்ணம் இருந்த ராஜராமனுக்கும் கேஷவின் பதட்டம் சந்தேகத்தை கிளப்ப “என்ன நடந்தது ?.” என்றார் கம்பீர குரலில்.

‘கேஷவ் நார்மல் நார்மல் நீ கொஞ்சம் ஜர்க் ஆனாலும் அம்மா கண்டுபிடிச்சிடுவாங்க' என்று தன்னை சமாளித்தவன் “அது…… அப்பா…..” என்று இழுத்தவன் “கொஞ்சம் ராங் டீலர்சல்லாம் நான் டெஸ்ட் டிரைவ் பண்ணேன். அவங்களுக்கு வயித்தெரிச்சல் சோ கொஞ்சம் மிரட்டல். அப்புறம் அப்படி பண்ணிடுவேன்…. இப்படி பண்ணிடுவேன்னு…. உதார் இது எல்லாம் சொல்லி அம்மாவ கலவரபடுத்திட்டாரான்னு கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன் வேற ஒன்னும் இல்ல. என்றான் அவரிடம் சாருகேஷின் விஷயத்திற்கு இது ஆயிரம் மடங்கு மேல் என்று நினைத்துதான் இதை சொன்னான்.

“ஓ...” என்ற ஆமோதிப்பாய் தலையாட்டியவர் “நாளைக்கு டிஐஜீய பார்த்து ஒரு போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்துடு எதுவானாலும் சட்டபடி ஆக்க்ஷன்ல காமிக்கனும் கேஷவ்” என்றார் அவனின் எண்ணவோட்டத்தை அறிந்ததனால்.

“சரிங்கப்பா” என்றவன் பேகில் இருந்து ஒரு கவரை எடுத்து கொடுத்து “இதுல மலேஷியா போக உங்களுக்கும் அம்மாவுக்கும் டிக்கெட் இருக்குப்பா நாளைக்கு காலைல 10 மணிக்கு ஃப்ளைட்” என்றான். இருவருக்கும் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் இருந்தனர். இது எதிர்பார்க்காத ஒன்று அவர்களின் முகத்தினை வைத்தே அதனை அறிந்தவன் “அம்மா ஜெய் ஃபைனல்ஸ்க்கு நீங்க ரெண்டு பேரூம் கூட இருக்கனும்னு ஆசைபடுறான் இவினிங் தான் புக் பண்ணேன்” என்றான்.

“எங்க ரெண்டு பேருக்கு மட்டுமா பா ?. உனக்கும் கவிக்கும் சேர்த்து போட்டு

இருக்கலாமே பா நாம எல்லாரும் போயி இருந்தா இன்னும் சந்தோஷபட்டு இருப்பானே” என்றார் ஒரு அன்னையாக.

“கவிக்கு இப்போ ஃபைனல் இயர் எக்சாம் வருது மா அவளால வரமுடியாது எனக்கும் ஆஃபீஸ்லயும் ஃபேக்ட்ரிலையும் வொர்க் இருக்கு நீங்க போயிட்டு வாங்க” என்றவன் “எனக்கு டையர்டா இருக்கு மா நான் ரூமுக்கு போறேன்” என்றான் அவர்களிடம் இன்னும் சமாளிக்க முடியாமல்.

அவரை விட்டு நகர்ந்தவனை நிறுத்தியவர் “எதுவுமே சாம்பிடாம போனா வயித்துக்கு ஒத்துக்காதுபா இரு கொஞ்சம் பாலாவது சூடு பண்ணி தறேன்” என்று அவர் அடுப்படிக்கு செல்ல..

“இல்ல மா எதுவும் வேண்டாம் மா” என்றவன் மாடியை நோக்கி நடந்தான்.

கேஷவின் வரவை எதிர்நோக்கி காத்திருந்து மெத்தையில் சாய்ந்து அமர்ந்த நிலையிலையே தூங்கி இருந்தாள் கவி. அறை முழுவதும் இருட்டு ஆக்கிரமித்து இருக்க உள்ளே நுழைந்ததும் மின்விளக்கை ஒளிர செய்தவனுக்கு அமர்ந்த நிலையிலையே தூங்கி இருந்த மனைவி கண்களில் பட்டாள். தன் தடுமாற்றம் அவளை எந்த விதத்திலும் பாதிக்கவிடகூடாது என்பதில் கவனம் கொண்டவன் மொபைலை எடுத்து பார்க்க ஏறக்குறைய 20 மிஸ்டுகால்கள் இருந்தது. மனைவியின் அருகில் சென்று நிற்க அதற்குள் விளிக்கின் வெளிச்சமும் கணவனின் அரவமும் உணர்ந்தவள் கண்களை சிரமபட்டு திறந்து எழுந்து நின்றாள்

“வந்துட்டிங்களா எப்போ வந்திங்க ஏன் ஃபோன் அட்டன்ட் பண்ணவே இல்ல” என்றாள் கொஞ்சம் கடுப்பாகவே

“சாரி” என்று பேச்சை ஆரம்பித்தவன் அவளுக்கு என்ன சாமதானம் சொல்வது என்று யோசித்து “அது அது கொஞ்சம் ஆஃபீஸ் வொர்க். இன்னைக்கே முடிச்சகனும் அம்மாவும் அப்பாவும் நாளைக்கு மாலேஷியா கிளம்புறாங்க” என்றான் எங்கோ பார்த்தபடி கூறினான்.

“ஹோ…..” என்று அமைதியானவள் “என்ன திடீர்ன்னு ஊருக்கு போறாங்க” என்றாள் அவனைப்பார்த்தபடி

அவள் கேள்வி கேட்க கேட்க எங்கே தடுமாற்றம் தெரிந்துவிடுமோ என்று எல்லாம் “உன்கிட்ட சொல்லிட்டு தான் செய்யனுமோ ?.” என் எரிச்சலாய்.

கேஷவின் பதிலில் கவியின் முகம் வாடிவிட அதை கண்டவன் ‘சே… நான் நினைச்சமாதிரியே நடக்குதே… உன்னை ஹர்ட் பண்ணிடுவேன்னுதான் பயந்து பயந்து பேசினேன் அப்படியும் என்னையும் மீறி வார்த்தை வந்துடுச்சி' என்று மனதால் வருந்தியவன் “சாரி மா ஏதோ நியாபகத்துல கோபமா பேசிட்டேன்.. சாரி” என்றான்.

“என்னங்க சாரியெல்லாம் கேக்கிறிங்க என்ன ஆச்சி ஏன் ஒரு மாதிரி பேசுறிங்க”. என்றாள் “உடம்பு ஏதாவது சரியில்லையா ?.” என்று அவன் நெற்றியை இளகுவாய் தொட்டுபார்த்தாள்.

தன் நெற்றியில் வைத்த கையை பற்றியவனின் முகத்தில் வியர்வை முத்துக்கள் பூத்திருந்தது. “ஏங்க என்ன ஆச்சி ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்கிங்க ?.” என்றாள் அவன் முகத்தினை பார்த்தவாறே.

அவளிடம் கூறலாமா வேண்டாமா என்று யோசிக்க என் பக்கம் இருக்கும் உண்மையை புரிந்துக்கொள்ளாமல் இவளும் தன்னை வெறுத்துவிடுவாளோ என்ற நினைப்பே அவளிடம் விஷயத்தை கூற தயங்க ஒன்னும் “இல்ல கவி தலைவலி நீ படு” என்றவன் அவளை விட்டு விலகி மாற்று உடையை எடுத்துக்கொண்டு குளியலறை சென்றான்.

‘கவியா’ என்று வாயசைத்து தலையை ஆட்டியவள் ‘சம்திங் ராங் மனுஷன் மனுஷனாவே இல்ல ஏன் இவரு இப்படி வித்தியாசமா நடந்துக்குராரு பேச்சு பார்வை எல்லாமே வேறமாதிரி இருக்கு' என்று யோசிக்க யோசிக்க ஒற்றும் புரியாமல் மூளைதான் குழம்பியது அவளுக்கு குளியலறை சென்றவனும் வெளியே வந்துவிட “தலைவலின்னு சொன்னிங்களே சூடாக காஃபி குடிக்கிறிங்களா கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவிங்க” என்றாள் அவன் முகம் பார்த்து.

அவளை பார்க்கமலையே கட்டலில் படுத்தவன் “வேண்டாம் லேட் ஆகிடுச்சி நீயும் படு” என்று கண்களை மூடிக்கொண்டான். இதுவரையிலும் சிறு குற்றவுணர்வும் இன்றி இருந்தவன் இன்று சாருகேஷின் வரவு அவனை படுகுழியில் தள்ளி இருந்தது. மனைவி குடும்பம் உறவுகள் என தான் மட்டும் சந்தோஷமாய் இருந்து உத்ராவின் சந்தோஷத்தை பாழ்படுத்தியது போல் குற்றவுணர்வில் தூக்கம் வராமல் புரண்டு படுத்தான். அவன் உறக்கமின்றி மனதில் எதையோ வைத்து அமைதியற்று இருப்பதை பார்த்தவள் அவன் அருகில் அமர்ந்து இதமாய் தலையை அழுத்தி விட கண்களை மூடி உறக்கமின்றி தவித்தவன் மனைவியின் மடியில் தலைவைத்து அறுதல் தேடினான்.

கவியின் விரல்கள் கேஷவின் தலையினை வருடிக்கொடுக்க சுமையாய் இருந்த மனதில் கொஞ்சம் இதம் பரவியது மனைவியின் கைகளை எடுத்து கண்ணத்தில் வைத்தவன் அதை இதழ்களுக்கு இடம் மாற்றினான்.

“என்னங்க ஏன் இப்படி ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கிங்க ஏதாவது பிர்ச்சனையா ?.” என்று அவனிடம் வினவ அவள் மடியில் இருந்து எழுந்தவன் அவள் கைகளை எடுத்து தன் நெஞ்சினுள் புதைத்து கொண்டான்.

“கவி நான் தப்பு செய்து இருக்க மாட்டேன்னு நீ நம்புவ இல்ல யார் என்ன சொன்னாலும் என் மேல உனக்கு நம்பிக்கை இருக்குமா கவி” என்றான் அவள் ‘ஆம்’ என்று கூற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் சிறுகுழந்தையின் தவிப்பை தன் கணவனின் முகத்தில் பார்த்த பார்கவி

“என் கேஷவனை நம்பாம நான் யாரை நம்பரதான் ம் சொல்லுங்க” என்றாள் ஒற்றை புருவம் உயர்த்தி அவனிடமே.

இன்னும் தெளிவில்லாமல் இருக்கும் கணவனின் முகம் அவள் மனதினை கவலை செய்ய அவன் தோள்களில் சாய்ந்தவள் “என்னை விட நான் உங்களை தான் நம்புறேன்ங்க நமக்கு கல்யாணம் ஆகி ஒருமாசம் ஆகுது என் மனசு மாறனும்னு காத்திருக்க உங்களோட குணம் பிடிச்சி இருக்கு... என்னை சகஜமா பேசவைக்கனும்னு நீங்க என் கூட வம்பு இழுக்கறது பிடிச்சிருக்கு.... எல்லாத்துக்கும் மேல உங்க மீசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...” என்று ஒவ்வொன்றாக கூறி வந்தவள் இறுதியாய் அவன் மீசையை பிடித்து முருக்கிவிட.

அவளின் செய்கையில் தன்னை மறந்து நின்றவன் சற்று சுதாரித்து “நீ வர்றத்துக்கு முன்ன வரையும் சத்தியமா எனக்கு வாழனும் அப்படின்னு எண்ணமோ ஆசையோ இருந்ததே இல்ல.... ஏனோ தானோன்னு வாழ்க்கைய அதன் போக்குல வாழ்ந்துக்கிட்டு இருந்தேன் ... என்னை நான் வெளியே காட்டிக்கிட்டதும் இல்லை டீ... எல்லாம் நடந்தது எப்போ தெரியுமா என் வாழ்க்கையில் நான் முதல்முதலா உன்னை பார்த்த பிறகு தான்.... ஏதோ நீ மேஜிக் போல வந்த உன்னை பார்த்ததும் நான் என் கஷ்டம் எல்லாம் மறந்தேன் சத்தியமா இதுவரை ஞாபகம் வந்ததே இல்லடி உன் பேச்சி சிரிப்பு கோவம் எல்லாம் என்னை மறக்கடிச்சி உன்னையே நினைக்க வைச்சது..... இதுநாள் வரையிலும் நான் நல்ல தூங்கினேன்னா அது நீ வந்த பிறகுதான்” என சற்று கரகரப்பான குரலில் கூற., அவனின் குரளை வைத்தே உணர்ச்சிவசப்படுகிறான் என்று அறிந்தவள் அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள். அவள் அணைப்பில் இருந்தபடியே அவள் முகத்தினை கையால் உயர்த்தி அல்லி மலர் கண்களை நோக்கியவன் “நான் உண்மைய சொல்றேன் ஆட்டோபாம் நீ என்னைவிட்டு போயிட்டா நிச்சயமா அந்த நொடி என் உயிர் உன்னை தேடி பறந்து வந்திடும் டீ” என்றான் உணர்வுபூர்வமாக...... ஒரு மனைவிக்கு இதை விட கணவனிடத்தில் வேறென்ன வேண்டும்... பொன்னோ போருளோ பணமோ தேவையில்லை கணவனின் மாசற்ற அன்பு தனக்கு மட்டுமே என்று எதிர்பார்க்கும் மனதில் தான் யார் என்பதை அறிந்த பின்னர் அவனின் ஒவ்வொரு சொல்லுக்கும் கரைந்தாள். இறுதியாய் கூறிய கேஷவின் வார்த்தைகளில் உறுகிவிட அவனுள் ஒர் உயிராய் இணைந்து விட்டாள். கணவனின் மனசஞ்சலத்திற்க்கு தானே மருந்து என்றும் இப்போது அவனுக்கு வேண்டியது தன்னுடைய அன்பும் அரவணைப்பும் என்பதனை உணர்ந்தவள் அவனுடன் இணைய தானே முதல் அடியை எடுத்து வைத்தாள்.

அவளின் இறுக்கமும் அணைப்பும் அவனுக்கு வேண்டியதாய் இருக்க அவனுமே அவளுள் கரைய முற்பட்டான். அவள் முகம் எங்கும் முத்த ஊர்வலம் நடத்தியவன் அவள் மாங்கனி அதரங்களில் தேனை உருஞ்சி அடுத்த கட்டத்திற்கு முன்னேற அங்கே அழகிய சங்கமம் நடந்தேறியது இருமனங்களும் இணைந்த திருமண வாழ்க்கையில் முதல் அத்தியத்தை எழுதி இருந்தனர் இந்த தம்பதியினர்.

அழகாய் விடிந்தது காலை பொழுது பறவைகளின் ரீங்காரத்தில் துயில் கலைந்தவள் கேஷவின் இறுகிய அணைப்பில் இருப்பதை கண்டு நாணம் கொண்டவள் அவன் முகத்தினில் விரல் கொண்டு கோலம் வரைந்தாள். மெல்ல கண்விழித்தவன் விட்டால் எங்கே எழுந்து சென்று விடுவாளோ என்று எண்ணம் வந்தவன் போல இன்னும் இறுகியது அவன் அணைப்பு.

இளம் ரோஜா வண்ணம் கொண்ட செவ்விதழ்களில் கூறுநகை மலர அவன் தலையை கலைத்துவிட்டவள் “பளீஸ் மா எந்திரிங்க இல்லை என்னையாவது எழுந்துக்க விடுங்க” என்று செல்லம் கொஞ்ச,

மறுப்பாக தலை அசைத்து இன்னும் ஒண்டினான். “என் செல்லம்ல எந்திரிங்க மணி இப்போவே 6 அத்தை மாமாவும் ஊருக்கு போறாங்க நானும் காலேஜ்க்கு கிளம்பனும்ல இப்படியே இருந்தா எப்படியாம்” என்றாள் அவன் காதுகளில்.

அணைத்து இருந்தவனின் கைகள் இலகுவாகி அவளை விடுவிக்க எழுந்து சென்றவளின் கைகளை பற்றி “என்னை விட்டு போக மாட்டல்ல” என்றான் சம்பந்தமே இல்லாமல்

அவனை கேள்வியாய் பார்த்தவள் நேற்றிய பேச்சிகளில் எஞ்சியவை என்று ஞாபகத்தில் வர “நீங்களே என்னை போக சொன்னாலும் உங்களை விட்டு போகமாட்டேன் இது உங்கமேல ப்ராமிஸ்” என்று அவன் தலையில் கைவைத்து சத்தியம் செய்தாள்.

மலேஷியா

மது வீட்டைவிட்டு வெளியேறி முழுதாய் ஒரு நாள் ஆகியிருந்தது… அவளை தனியாய் இருக்க வைக்க மனமில்லாத சீமா மதுவுடனே தாங்கியிருந்தாள். “இன்னும் என்னடி படுத்து இருக்க” என்று மதுவை எழுப்பினாள். கண்களை மூடி சுருண்டு படுத்திருந்தவளின் கோலம் அவளுக்கு தன் தோழியின் மனநிலையை விளக்க “ஹே…. பேபி நடந்ததையே நினைச்சிட்டு இருக்கமா இனியாவது உனக்காக வாழ பழகிக்க டா” என்று வேலைக்கு செல்லும் அவசரகதியிலும் தன் தோழிக்கு புத்திமதிகளை கூற மறக்கவில்லை சீமா…

சீமாவின் பேச்சை காதில் வாங்காமல் திரும்பி படுத்த மதுவை தன் பலம் கொண்ட மட்டும் எழுப்பி உட்காரவைக்க முயன்றவளை பாவமாய் முகத்தை வைத்து பார்த்தாள் மது…

“உன்னை விட்டா இப்படியே தான் கிடப்ப மரியாதைய எழுந்து ஃபிரெஷ் ஆகிட்டு வா உன்னை தனியா எல்லாம் விட முடியாது போ….. சீக்கிரம் போ…. எனக்கும் டைம் ஆச்சி” என்று அவளை துரிதப்படுத்த வேண்டா வெறுப்பாய் குளியலறைக்குள் புகுந்தாள் மது…

‘ப்பா….. என்ன அழுத்தம் இந்த அழுதத்தை அவங்ககிட்ட காமிச்சிருந்தா உனக்கு இந்த நிலை வந்திருக்குமா' என்று நினைத்தவள் தானும் அவசர அவசரமாக கிளம்பி இருந்தாள். இவள் குளியலறையில் இருந்து வெளியே வரும் சமயம் கதவு தட்டும் ஒசை கேட்க சீமா கதவை திறக்க அங்கே ஜெய் நின்றிருந்தான்.

அவனை பார்த்ததும் “வாங்க வாங்க ஹேன்ட்சம்” என்று அவனை உபசரித்து உள்ளே அழைத்தவள் உட்கார இறுக்கையை காட்டி அமரச்சொன்னாள்.

அவளின் ஹேன்ட்சம் என்று அழைப்பில் புன்னகையித்தவன் “மிஸ் சீமா யூ கேன் கால் மீ ஜெயந்த் ஆர் ஜெய். நீங்க கூப்படுரது ஒரு மாதிரி இருக்கு” என்றான்.

“நோ .. நோ… ஹேன்சம் உங்கள பார்த்த அன்னைக்கே வச்ச பெயர் மாத்தலாம் முடியாது” என்று மறுத்தவள் “என்ன சாப்பிடுறிங்க காபீ ஜீஸ்” என்று கேட்க

“ம்.. ஒன்னும் வேண்டாம் உங்க பிரெணட் இல்லையா இப்போ எப்படி இருக்காங்க நார்மல் ஆகிட்டாங்களா இந்த இடம் கம்ஃபர்ட்பிளா இருக்கா” என்று விசாரித்தான்.

“இது எங்களுக்கு ரொம்ப அதிகம் ஹேன்சம்… அவ இருக்க மனநிலைக்கு அவளை தனியா விடமுடியாம நானும் அவகூட இங்கதான் இருக்கேன். நான் தங்கி இருக்க ஃபிளாட்ள நாளைக்கு தான் வெக்கேட் பண்றாங்க அப்புறம் இவள அங்கேயே கூட்டிட்டு போயிடுவேன்” என்றவள் “எங்க ஹேன்சம் எனக்கும் வோர்க்குக்கு டைம் ஆச்சி இப்போதான் வலுக்கட்டாயமாக அவள குளிக்க அனுப்பினேன்” என்றாள்.

“நீங்க ஏன் வேற ஃபிளாட்டுக்கு போகனும் சீமா இது உங்களுககு கம்ஃபர்டபிளா இருந்தா இதுலயே கண்டினீயூ பண்ணலாமே” என்ற ஜெயந்த் “அவங்களுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு அது மட்டும் தெரியுது” என்றான்.

“ஆமா ஹேன்சம் பிரச்சினை கொஞ்சம் பெருசு தான் நடந்ததையே நினைச்சிட்டு இருக்கா இதுல இந்த சேம் வேற பிரச்சசனைய ஏத்தி விட்டு அவளை வீட்டைவிட்டு வெளியே அனுப்புறாப்போல வைச்சுட்டான். இப்போ கஷ்டபடுறது இவ மட்டும் தான் இவ சம்பாரிச்சி போடும் போது இனிச்சிது ஒரு பிராப்ளம் னு தெரிஞ்சதும் தூக்கி தூரப்போட்டுடாங்க என்ன மனுஷங்களோ” என்று அவள் சொல்லி முடிக்கும் போதே மது வந்துவிட்டாள்.

“வாங்க வாங்க சார். எப்படி இருக்கிங்க உங்க பிராக்டீஸ் எல்லாம் எப்படி போகுது” என்று எதுவுமே நடவாதது போல் முகத்தை இயல்பாய் வைத்து சிரித்து பேசியது இருவருக்குமே ஆச்சரியம் ‘காலையில் இருந்து அழுது வடிந்த மதுவா இவள்' என்று சீமாவே ஆச்சிரியபடும் அளவிற்கு நடித்துக்கொண்டு இருந்தாள்.

அவனுக்கு ஜீஸ் எடுத்து வர உள்ளே சென்றதும் ஜெய்யின் அருகில் வந்த சீமா “ஹேன்சம் எனக்கு வொர்க்குக்கு டைம் ஆச்சி தனியா விட்டு போகவும் பயமா இருக்கு இஃப் யூ டோன்ட் மைன்ட் அவளை கொஞ்சம் வெளியே அழைச்சிட்டு போறிங்களா அவளுக்கு ஒரு நல்ல சேஞ்ச்ஜா இருக்கும்” என கூற

“சீமா மது என் கூட எப்படி வருவாங்க நான் அவங்களுக்கு அவ்வளவா பழக்கம் இல்ல என்னை நம்பி நீங்களும் கூட்டிட்டு போங்கன்னு சொல்றிங்க” என்றான் வியப்பாக

“ஹேன்டசம் எனக்கு மதுவ பத்தி நல்லா தெரியும் ஃபர்ஸ்ட் சைட்லயே அவ ஆளுங்களோட குணத்தை சொல்லிடுவா உங்ககிட்ட அவ பேசுறா பழகுறான்னா நீங்க கண்டிப்பா ஒரு ஜெனியூன் பர்சனாதான் இருப்பிங்க” என்றாள் சற்றே கண்ணடித்தவாறு கூற அவள் செயலில் சிரித்தவன் “ம்” என்று தலை ஆட்டினான்.

“பாய் பேபி” என்று உள் நோக்கி குரல் கொடுத்தவள் “பை ஹேன்சம் பேபி பத்திரம்” என்று கூறிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டாள்.

அவனுக்காக பழச்சாற்றை கொண்டு வந்தவள் அவனிடத்தில் கொடுத்து “எடுத்துக்கோங்க” என்று பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

வீட்டை ஒரு பார்வையிட்டவன் வீடு உங்களுக்கு பிடிச்சிருக்கா என்றான் சாதாரணமாக.... தூக்கத்தில் இருந்து விழித்தவள் போல் ஆஹ் என்று முழிக்க மறுபடி வினவிய பிறகே அவன் கேள்வியை உணர்ந்தவள் “ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார் என்ன செய்ய போறோம்னு தவிச்ச நின்ன நிலையல வந்து உதவி செஞ்சி இருந்கிங்க ரொம்ப தேங்க்ஸ்” என்றாள்.

“ஹே… மது பச்.. ரொம்ப ஃபீளீங் ஆஃப் மலேஷியாவா இருக்கிங்க” என்று அவன் கூறிய விதமே அவளுக்கு மென்னகை மலர “ம்.. இது ஓகே பாக்க நல்லா இருக்கு நீங்க எனக்கு தேங்க்ஸ் சொல்லனும்னா ஒரு ரெண்டு நாள் உங்க வொர்க்கு லீவ் சொல்ல முடியுமா ?.” என்றான் பீடிகையாக

சற்று யோசித்தவள் “வொய் நாட் கண்ஃபார்மா சொல்றேன்” என்றவள் அதற்கான காரணத்தை கேட்க “இன்னைக்கு ஊர்ல இருந்து எங்க பேரண்ட்ஸ் வர்றாங்க அவங்களுக்கு இந்த ஊர் எல்லாம் சுத்தி காட்டனும் அவங்க கூட இருக்கனும் உங்களால முடியுமா ?.” என்றான் வெகு சாதாரணமாக.

“தட்ஸ் வொண்டர்ஃபுல் எப்போ வர்றாங்க சொல்லுங்க போகலாம்” என்றவள் “அவங்களுக்கு கொஞ்சம் பர்ச்சேஸ் பண்ண வேண்டி இருக்கு தம்பி சில திங்க்ஸ் வாங்க சொன்னான் இவினிங் தான் வர்றாங்க என்கூட ஷாப்பிங் வர முடியுமா ?.” என்றான்.

சற்று யோசித்தவள் “ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் சீமாக்கு இன்பார்ம் பண்ணிட்டு வர்றேன் கிளம்பளாம்” என்றவள் தோழிக்கு அழைத்து தான் ஜெயந்துடன் வெளியே செல்வதாகவும் வந்து மீதியை கூறுவதாகவும் கூறி தொடர்பை துண்டித்தவள் அவனுடன் வெளியே செல்ல தயாராகி வர இருவரும் ஷாப்பிங்மாலிற்கு சென்றனர்.

“உங்க அம்மா அப்பா எப்படி இருப்பாங்க சார்”. என அவள் பேச்சை ஆரம்பிக்க., “உங்களுக்கு அவங்கள பாக்கணுமா அப்போ இந்த சார்லாம் சொல்லாம பெயர் சொல்லி கூப்பிடுங்க மது” என்றான்.

“ம்…” என்று சிறிது யோசித்தவள் “ஒகே ஜெய் அவங்கள காட்டுங்க பீளிஸ்” என்றாள்.

தனிடம் உள்ள மொபைலில் இருந்த படத்தை எடுத்து காட்ட “சோ கீயூட் ரொம்ப அழகா இருக்காங்க அங்கிள் செம டிரிம்மா இருக்காங்க ஹவ் ஸ்வீட் ஃபேமிலி” என்றவள் கண்கள் தான் கலங்கியது போல் இருந்தது அவனுக்கு ஓகே… “சரி எந்த மாலுக்கு போகலாம் நீங்களே சொல்லுங்க நான் இந்த ஊருக்கு புதுசு” என்று பேச்சை திசைதிருப்ப அவள் கூறிய இடத்திற்கு சென்றனர். அவனுக்கு ஷாப்பிங்கிற்கு சில உதவிகளை செய்தவள் அவளும் தானாக முன்வந்து சில பொருட்களை அவன் தாயாருக்காக தேர்வு செய்தாள். அவள் சோர்ந்து போகும் நேரம் எதையாவது பேசி அவளின் நிலையை மறக்க செய்து இருந்தான். நேரம் பறந்தோட மதியம் கடந்த நிலையில் இருவரும் உணவகத்திற்கு சென்றனர். இருவருக்குமே வேற்றாள் ஒருவரோடு இருக்கிறோம் என்ற உணர்வு இன்றி நல்ல மனநிலையிலையே இருந்தனர்.
 

Author: Bhagi
Article Title: காதலில்.உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 29
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN