காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி.30

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஊட்டி

மரப்பலகைகளை அடுக்கியவனின் கோபக் கண்களையும் அதில் குடிக்கொண்டிருந்த உக்கிரத்தையும் பார்த்திருந்த தியா தன் விளையாட்டுகள் அவனை கோபப்படுத்தியதை உணர்ந்து கொண்டவளின் முகமும் அகமும் ஒருசேர பிரகாசமாய் மாறியது. இந்த கோபம் எதனால் வந்தது தனக்கு தெரிந்த ஒரு பெண்ணிடம் ஒரு ஆண் பழகுவதாலா!! இல்லை தனக்கு நெருக்கமான இல்லை இல்லை தனக்கு சொந்தமான பெண்ணிடம் பழகுவதாலா??! இதில் அவன் மனம் எதை நினைத்து கோபம் கொள்கிறது என்று தெரியாமல் அவளின் குழப்பம் நிறைந்த பார்வை சித்துவின் நடவடிக்கைகளை துளைப்பதாய் இருக்க அவளிடம் இருந்து தப்புவிற்ப்பதற்காக ஹோட்டலில் விரிவுபடுத்தும் வேலை நடப்பதால் இதையே காரணம் வைத்து அந்த இடத்தை விட்டு சித்தார்த் அகன்று விட அவன் படபடப்பை மனதில் குறித்துக்கொண்டு இயல்பாய் பேச ஆரம்பித்து விட்டாள் தியா.

அனைவரின் ஷேம லாபங்களையும் விசாரித்து அளவளாவியபடியே சாப்பாட்டையும் முடித்து நேரம் போவதே தெரியாமல் ராதாவும் தியாவும் ஒருவரை ஒருவர் கிண்டலடித்து பேசிக்கொண்டு இருக்க "என்ன மா வீட்டுக்கு கிளம்பனும் எண்ணம் இல்லையா விட்டா நாள் புல்லா பேசிட்டே இருப்ப போல" என்று வந்து நின்றான் சித்தார்த்.

அதே நேரம் ஹேய் தியா... "மேம் எல்லாரையும் ரெடி அக சொன்னாங்க இப்போ கைட் வந்திடுவாங்களாம் சீக்கிரம் வா..." என்று தோழி ஒருவள் குரல் கொடுத்தாள்.

வந்து நின்றவனின் முகம் கூட பார்க்க கூடாது தன்னை தவிக்க விட்டவனை சுத்தல்ல விடனும் என்று உள் மனம் பொங்கியது…. 'உன் மனசுல நான் இருக்கேன் இதை நான் இந்த ஊரை விட்டு போறதுக்குள்ள என்கிட்ட நீயா வந்து சொல்ல வைக்கிறேன்' என்று முடிவுசெய்தவள் "பச்... என்று சலித்தவாறே ஆண்டி நாம பேசுறது இங்க யாருக்குமே புடிக்கல எல்லாம் நம்ம பிரிக்க சதிசெய்றாங்க" என்று முகத்தை சுழித்தவாறே கூற

அதில் பக் என்று சிரித்த ராதா "நாம எங்கையாவது தனியா மீட்பண்ணி பேசுவோம்… நமக்கு பிரைவேசியே இல்ல எலிகுட்டி" என்று தியாவிடம் கூறி சித்துவை பார்த்தவாறே வம்பிழுக்க

"ம்கூம் பெரிய காவிய தலைவிகள் ரெண்டுபேரும்... ரெண்டு நாட்டோட ராணுவரகசியம் பேசுறிங்க... வெறுப்பு ஏத்தாதிங்க மா எனக்கு வேலை இருக்கு வந்திங்கனா வீட்டுல விட்டுட்டு ப்ளம்மர பாக்கனும் போயிட்டு வருவேன் இல்லனா நீங்களே ஆட்டோ பிடிச்சு போறிங்கனா சொல்லுங்க விட்டுட்டு போறேன்" என்று கடுகடுவேன்று பேசினான் சித்து

"டேய் எலி காண்டாயிட்டான் நான் ஏதாவது சொன்னா விட்டு போனாலும் பரவாயிவ்லை மூஞ்சிய தூக்கி வைச்சிட்டு சுத்துவான். அதை பார்க்கத்தான் சகிக்காது நான் கிளம்புறேன் டா நைட்டு இவனை கழட்டி விட்டுட்டு அங்கிள் கூட வர்றேன்" என்று ரகசியமாய் காதில் கூறியவர் செய்கையில் மேலும் கடுப்பானவன்

"மா..." என்று அழைத்து பைக்கின் ஸ்ண்டை எடுத்து ஆக்ஸிலேட்டரை முருக்கினான். "வரேன் டா" என்று மகனுக்கு குரல் கொடுத்தவர் "இவன் ஒருதன் டுர்ருடுர்ருன்னிட்டு" என முனுமுனுத்துவிட்டு "எதுனாலும் போன் பண்ணு" என்று தியாவிடம் கூறி கிளம்பி சென்றுவிட்டார்.

மதியம் பண்ணிரண்டு மணிக்கு மேல் கிளம்பியவர்கள் ரோஸ்கார்டன் பொட்டானிக்கள் கார்டன் என சில இடங்களை சுற்றிபார்க்க நேரம் 6 ரை கடந்து இருந்தது. இவர்களுக்கு தேவையான தகவல்களை சேகரித்தவர்கள். நேரம் கிடைக்கும் போது அதன் அழகை ரசிக்கவும் மறக்கவில்லை ரோஸ் கார்டனில் விதவிதமான ரோஜா மலர்களின் வண்ணங்களிலும் அதன் அழகிலும் மனம் சிலாகித்து கொண்டும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டும் ஆட்டம் பாட்டு கேளிக்கை சிரிப்பு கும்மாளம் என சேட்டைகள் செய்த வண்ணமும் ஹோட்டலுக்குள் தஞ்சம் அடைந்தனர். பஸ்ஸில் ஏறும்போதே அலைந்து திரிந்ததனால் லேசாய் இருந்த வயிற்று வலி அதன் வீரியத்தை கூட்ட கொஞ்சம் தளர்ந்து சோர்ந்து போயிருந்தாள் தியா.

மாலை இருள் சூழும் நேரத்தில் ஹோட்டலை அடைந்தனர். அதுவரையிலும் வெளியிடங்களில் பார்வையிட்டுக் கொண்டிருந்தவன் மாலை நேரம் என்பதாலும் ரெஸ்டரண்டில் கூட்டம் இருக்கும் சமயம் என்பதாலும் ஹோட்டலின் உள்ளே சென்றவனின் கண்களுக்கு அறைக்கு திரும்பும் தியாவின் வாடிய முகமும் தளர்ந்த நடையும் தெரிய உடல்நிலை சரியில்லையோ என்று நினைத்தாலும் அருகில் சென்று கேட்க மனம் சண்டிதனம் செய்ய அவள் மேல் உள்ள கோபத்தில் அதை கிடப்பில் போட்டவனின் நேரம் காற்றை விட வேகமாய் பறந்தது. இரவு 7.30 மணி அளவில் மாணவமாணவியர்கள் கூட்டம் சாப்பிட வர அந்த பகுதியே கலகலப்பானது. இத்தனை கூட்டத்திலும் தன் பார்வை வட்டத்தில் தியா வராததை கண்டுகொண்டவன் வேறு எங்கும் அமர்ந்து உள்ளாளா என்று யாரும் அறியா வண்ணம் தன் தேடலை தொட அவள் இருப்பதற்கான அறிகுறி தான் இல்லை.

'என்ன பண்ற இன்னும் வெளியே போய் அலைஞ்சி திரிஞ்சி வந்திருக்கா வயித்துக்கு நேர நேரத்துக்கு சாப்பிட வேண்டாமா?' என்று உள்ளுக்குள் அவளை கருவினாலும் வெளியே சாதரணமாகவே முகத்தை வைததுக்கொண்டு இருந்தான். நேரங்கள் கடக்க 10 நிமிடங்கள் பார்த்தவன் அவள் வராமல் போகவே பொருமை இழந்து வேகமாக அவள் இருக்கும் அறை கதவின் முன் போய் நின்றான். ஒரு வேகத்தில் மனம் உந்த வந்துவிட்டான் கதவை தட்ட கை வைக்க அதற்குள் தியாவின் தோழி அறைக்கு வருவது தெரிய அவள் அறியா வண்ணம் ஒரு ஓரமாய் நின்று கொண்டான் வந்தவளின் கையில் ஏதோ பார்சல் போல இருக்க அது அவளுக்கான உணவு என்பதனை ஊர்ஜிதபடுத்தியவன் அங்கிருந்து நழுவினான்.

வெளியே சென்று வந்ததினால் ஏற்பட்ட கலைப்பின் காரணமாக அவள் சாப்பிடும் இடத்திற்கு வரவில்லை என்று தானே எண்ணிகொண்டவன் அவளிடத்தில் எதுவும் விசாரிக்காமலேயே வீடுவந்து சேர்ந்தான்.

"மா.... மா..... ரொம்ப பசிக்குது ரெண்டு தோசை போதும்" என்றவறே அறைக்குள்ளே செல்ல அவனை நிறுத்திய ராதா "உனக்கு தோசை எடுத்து ஹாட் பேக்குல வைச்சிடவா?" என்றார்.

"ஏன் மா நான்தான் வந்துட்டேனே எதுக்கு ஹாட்பேக்?" என்றான் ஒனறும் புரியாமல்

"அது இல்லடா நம்ம தியாவ பாக்க அப்பா கூட போலான்னு அதான் ஹாட்பேக் ல எடுத்து வைக்கவான்னு கேட்டேன்" என்று கூறினார்.

அவளின் சோர்வை மனதில் வைத்து "அம்மா கொஞ்ச நேரம் முன்னதான் அவங்க வெளியே போயிட்டு வந்தாங்க எல்லாருமே டையார்டா இருப்பாங்க அதுலயும் ஆழாக்கு ரொம்ப டையார்டா இருந்துச்சி இன்னைக்கு வைச்சி செஞ்சிட்டாங்க போல" என்ற அன்னையிடம் கிண்டலடித்தவன் "நாளைக்கு போய் பாருங்க அம்மா அவங்க தூங்கி இருப்பாங்க" என்றான்.

"ஏண்டா குழந்தைய ஆழாக்குன்னு சொல்ற நல்ல வளர்த்தி தான் உனக்கு ஈக்குவலா இருக்கா தெரியுமா?" என்று ராதா கேட்க அன்னை வதுவை தன்னுடன் சேர்த்து பேச ஒரு நிமிடம் அதிர்வாய் பார்த்தவன் பின் சுதாரித்து "எனக்கு பசிக்குது போய் எடுத்துவைங்க வரேன் என்று அடர்ந்த குரலில் கூறியவன் அறைக்கு சென்றுவிட்டான். (ஆஹ்... அப்போ நீங்க மட்டும் எலின்னு சொல்லாலாமோ எனக்கு மட்டும் அவளை ஆழாக்குன்னு சொல்ல உரிமை இல்லையா என்று மனதில் வறுத்தபடிதான் அறைக்கு சென்றான். இது என்னடா வம்பா போச்சி புடிக்கல வேண்டான்னு சொன்னவன் உரிமை குரல் எழுப்புறான் சம்திங் ராங். )

அடுத்த நாள் காலை பொழுது புலர்ந்தது. விடிந்தும் விடியாத காலையும் சில்லென்ற காற்றும் பனிபடந்த மலைகளும் அந்த இடத்தையே சொர்கலோகம் போல் காட்டியது. காட்டேஜில் இருந்து சிறிது தெலைவில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் காலை 8 மணிக்குள் தயாராகி வருமாறு ஆசிரியர்கள் கூறியிருக்க தியாவின் அறையில் இருந்த தோழி அவளை எழுப்பினாள்.

"தியா எந்திரிடி"

"ம்... கொஞ்சம் நேரம் டீ ஒரு 5 மினிட்ஸ் டீ" என்று படுத்துக்கொள்ள

"ஹேய் டையம் ஆச்சி இன்னும் கொஞ்சம் லேட் ஆச்சி அந்த சோடா புட்டி ரூமுக்கே வந்திடும் டீ". என்று கூறிபடியே குளியலறைக்குள் புகுந்தாள்.

இரவு வயிற்று வலியின் காரணமாய் அவள் மாத்திரை எடுத்துக்கொண்டாலும் இன்னும் அது தொடர்வது போல் படுத்தி எடுக்க எழுந்து அமர்ந்தவள். அப்படியே வயிற்றை பிடித்தபடியே படுக்கையில் சுருண்டு படுத்தாள். அவளால் எழுந்திரிகக் கூட முடியவில்லை கால்களில் நடுக்கம் பரவியது போல் உணர்நதால் அடிவயிற்றை கீறுவது போல வலி உயிரை எடுத்தது. கண்களை இறுக்க மூடி சுருண்டு படியே இருந்தாள் தியா. குளியலறையை விட்டு வந்த அவளது தோழி "தியா ஏய் தியா என்ன ஆச்சி டீ இப்படி படுத்து இருக்க?" என்று அவள் படுத்த கோலம் கண்டு அருகில் வந்தாள்.

"பச் முடியலடி எனக்கு" என்றாள் வயிற்றை பிடித்துக்கொண்டு

"என்ன தியா ரொம்ப பெயினா இருக்கா திடீர்னு வயித்துவலின்னு சொல்ற இரு நான் மேம கூப்பிடுறேன்".

"இரு இரு வேணா... மேம ஏன் கூப்பிடுற? இது எப்பவும் பீரியட் டைம்ல வர்ரதுதான் பச் இவ்வளவுலாம் இருக்காது அம்மா எப்பவும் சாப்பாடு ஜீஸ் மோர் ன்னு அப்பப்ப கொடுத்து பாத்துப்பாங்க இங்க நேத்தில இருந்து ரொம்ப அலைச்சல் நடந்தது நடந்து கால்லாம் ரொம்ப பெயினா இருக்கு." என்றாள் வலியில் கண்களை மூடிக்கொண்டு.

"தியா இப்படி இருக்கும் போது நீ ஏன் வந்த இதை சொல்லி இருக்காலம்ல?" என்றவள் "சரி மேம்கிட்ட சொல்ல ஏன் வேணாங்குர?" என்றாள்

"இதை எல்லாம் காரணமா எப்படி சொல்ல முடியும் டீ இது ஒரு பெரிய விஷயம் இல்ல.... எனக்கு இதுல கொஞ்சம் கவனம் தேவை அவ்வளவுதான்... நேத்து எனக்கு இங்க வந்த பிறகுதான் தெரியும் முன் எச்சரிக்கையோடுதான் வந்தேன் ஆனா என்ன அலைச்சல் ஒத்துக்கல அதான் இப்படி படுத்திடுச்சி.... இதை பெரிய இஷ்ஷூவா ஆக்காதே" என்று கூறியவள் சிறிது நேரம் படுத்துட்டு அப்புறம் குளிக்க போறேன் என்றாள்.

"சரி தியா நீ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் ரெடி ஆகி வா நான் வைட் பண்றேன். உனக்கு சாப்பிட எடுத்துட்டு வறேன் இங்கயே சாப்பிட்டு நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்." என்றதும் "சரி" என்ற தியா படுத்துக்கொண்டாள்.

சித்துவும் காலையில் ஹோட்டலுக்கு வந்துவிட அவனுக்கும் ரிசப்ஷன் ரெஸ்டரெண்ட் காட்டேஜ். மற்றும் வேலை ஆட்களை மேற்பார்வை பார்ப்பது என்று வேலைகள் அடுக்கடுக்காய் வரிசைகட்டி நின்றுவிட எதை பற்றியும் சிந்தனை இல்லாமல் கடமையே கண்ணாய் வேலைபார்த்துக் கொண்டிருந்தான்.

வயிற்று வலி நிற்பது போல் இல்லை மேலும் படுத்தி எடுக்க அவளை பார்த்த தோழி தியாவின் சொல்லையும் மீறி மேமிடம் கூற அவள் கூறாமல் இருந்ததிற்கு கடிந்து கொண்டவர் ரிசப்ஷனை நோக்கி விரைந்தார்.

ஹோட்டலினுள் நுழைந்த சித்துவிற்கு
பேராசிரியை ரிசப்ஷனில் ஏதோ பதட்டமாய் பேசிக்கொண்டு இருப்பதை பார்க்க அவர்களுக்கு அருகில் சென்றவன் மே ஐ ஹெல்ப் யூ மேடம் என்ன விஷயம் என்றான்.

"சார் இங்க யாரவது நல்ல டாக்டர் இருக்காங்களா?" என்றார் அவர்.

"டாக்கடரா?? யாருக்காவது ஏதாவது பிரச்சனையா மேம்?" என்றதும்

"ஆமா சார் பிரச்சனைதான் லேடி டாக்டரா இருந்தா நல்லா இருக்கும்." என்றார்.

"ஓகே மேம் கொஞ்சம் வைட் பண்ணுங்க" என்றவன் தன் செல்லில் இருந்து ஒரு எண்ணிற்கு அழைத்து பேசியவன் சிறிது நேரத்திற்கு பிறகு அவரிடம் திரும்பி "இன்னும் 15 மினிட்ஸ் ல இங்க இருப்பாங்க மேம்" என்று கூறினான்.

தெங்க்ஸ் சார் என்றதும்

மேம் யாருக்குன்னு என்று இழுக்க

"நேத்து நீங்க பார்க்கனும் சொன்னிங்கள அந்த பொண்ணுதான் பேரு வித்யா" என்றதும் "விதுக்கா விதுக்கு" என்ன ஆச்சி மேம் என்றான் .

அவனிடம் எப்படி கூறுவது என்று முழித்தவர் "கொஞ்சம் உடம்புக்கு முடியல" என்றவர் மற்ற மாணவர்களை கிளம்பி இருக்க கூற சென்றார்.

அதற்குள் இவனும் மனது கேளாமல் தாயிக்கு அழைத்து அவளுக்கு உடல்நிலை சரியில்லையென்று கூறியவன் உடனடியாக ஹோட்டலுக்கு வருமாறு கூறிவிட்டு தியாவை காண அவளது அறைக்கு சென்றான்.

கட்டிலில் சுருண்டு படுத்து இருந்தவள் யாரோ வரும் அரவம் உணர்ந்து கண்களை திறக்க இவனை கண்டதும் கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.

விது விது... என்று அழைக்க கண்களை லிறவாமலையே படுத்திருந்தாள்.

விதுமா..... என அருகில் வந்து என்ன ஆச்சிடா உடம்புக்கு என்ன செய்துமா என்று அன்பாய் கேட்டான்.

அவனின் அன்புகலப்த வார்த்தையில் கண்கள் கலங்கி இருக்க அந்த சமயத்தில் வலியின் காரணமாய் வந்த கோவம் வெறுப்பு இவனிடம் எப்படி சொல்வது என்று தவிப்பு இவையனைத்தும் சேர்த்து தனக்கு உரிமையான அவன் மேல் தன் இயலாமையை கோபமாய் வெளிப்பட

"உங்களை யார் வர சொன்னது? எனக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன? எனக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு? நீங்க யாரு என்னை பத்தி தெரிஞ்சிக்க? என்ன உரிமையில இந்த இடத்துல என்னை கேள்வி கேட்டுகிட்டு நிக்குறிங்க?" என்று கடுகடுவென பொறிந்தாள்.

அவள் ஏன் கோபப்படுகிறாள் என்று அறியாவிட்டாலும் இப்போது அதை ஆராய்வதற்கான சமயம் இல்லை என்பதை மட்டும் உணர்ந்தவன் அதை பொருட்படுதத்தாது "வதுமா பீளிஸ் டா நீ ஏன் இப்படி பேசுறேன்னு தெரியல அது எல்லாம் நீ நல்ல இருக்கும் போது எவ்வளவு வேணாலும் பேசி திட்டி நாம சண்டை போட்டுக்கலாம்... ஓகே வா இப்போ நீ டென்ஷன் ஆகாத டா பீவரா இல்லை வேற ஏதாவதா சொல்லுடா என்று அமைதியாய் அவள் நெற்றியில் கைவைத்து ஆராய்ந்து சமாதணமாய் கேட்க

"அவன் கையை தட்டிவிட்டவள் தொடாதிங்க கைய எடுங்க எந்த தைரியத்துல என் மேல கைய வைக்குறிங்க... போங்க வெளியே போங்க.. போங்க..." என்று அந்த வலியிலும் கத்த அவளின் உடல்நிலையை மனதில் கொண்டு அவளை மேலும் கத்தவைக்காமல் வெளியே சென்றுவிட்டான்.

சிறிது நேரத்தில் மருத்துவரும் வந்துவிட அதே நேரம் சித்துவின் தாயும் வந்துவிட அவரையும் உள்ளே அனுப்பியவன் தவிப்பாய் வெளியே நின்றிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராதா "டேய் ஒரு வண்டி சொல்லு நாம தியாவ வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்." என்றதும் தூக்கி வாரி போட்டது அவனுக்கு

"அம்மா என்னம்மா?? என்ன ஆச்சி?? வந்த பாத்த உடனே அவள வீட்டுக்கு கூட்டிட்டு கிளம்பனும்னு சொல்ற அவளுக்கு என்னம்மா ஆச்சி? என்றான் பதட்டம் நிறைந்த குரலில்

"பயப்படும்படி அவளுக்கு ஒன்னும் இல்ல.... நீ போய் நான் சொன்னத மட்டும் செய்" என்று அவனுக்கு கூறாமல் அனுப்ப முயற்சித்தார் ராதா

"மா.... நான் என்ன கேக்குறேன் நீங்க என்ன பதில் சொல்றிங்க அவளுக்கு என்ன ஆச்சி ஏன் ஒருமாதிரியா இருக்கா டாக்டர் என்ன சொன்னாங்கன்னு கேட்டா சொன்னத செய்யுன்னு சொல்றிங்க" என்றான் ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அழுத்தம் கொடுத்து கேள்வி கேட்டான்.

"உஃப்... உனக்கு எப்படி சொல்லி புரியவைப்பேன் வேண்டாம்னா போயேன் டா" என்று சலிப்புடன் கூற

"அது எல்லாம் சொல்ற விதத்துல சொன்ன புரியும் இப்போ சொல்லறிங்களா இல்லை நான் அவகிட்டயே போய் கேக்கவா?" என்று அறைக்குள் செல்ல முற்பட அவனை தடுத்தவர்

"ஒன்னு வேண்டான்னு சொன்னா ஒத்துக்க மாட்டியே இரு நானே சொல்றேன் அவகிட்ட கேட்காதே நம்ம வீட்டுக்கு வர ஒத்துக்கவே இல்ல இதுல நீ போயி கேட்டா அவ வரவே மாட்டா" என்றவர் "அவளுக்கு மாதாந்திர வர்ர வயித்து வலி தான்டா இதுல பயப்படறத்துக்கு ஒன்னும் இல்லை டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லி மருந்து எழுதி கொடுத்து இருக்காங்க... இங்கே இருக்கேன் தான் சொன்னா இந்த மாதிரியான நேரத்துல ரொம்ப மனஅழுத்தம் இருக்கும் உடல் வலி இருக்கும் அதுவும் இல்லாம நேத்து முழுசும் சுத்தி இருக்கா அதுதான் வலி அதிகமா இருக்குன்னு சொல்லி மஞ்சுகிட்ட பேசி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்னு சொல்லி அவங்க மேம்கிட்டயும் பர்மிஷன் வாங்கிட்டேன்... மத்தபடி ஒன்னும் இல்லை டா." என்றார். சேலை முந்தானையால் முகத்தை துடைத்தபடி

ராதா கூறியதும் எந்த மாதிரியான உணர்வுக்குள் சிக்கிக்கொண்டான் என்றே வரையறுக்க முடியாமல் இருந்தது அவன் உணர்வுகள்.... இதை கூறமுடியாமல் தான் வது தன்மேல் கோபத்தை காட்டினாள்... என்று தெரிந்ததும் அவள் வேதனையும் வலியில் அவள் முகம் சுழித்து படுத்திருந்ததே கண்களுக்குள் நிழல் ஆடியது.

"என்னடா ஏன் ஒரு மாதிரி ஆகிட்ட"

"அவளாள ரொம்ப முடியலையாம்மா அதான் ஒரு மாதிரியா படுத்து இருந்தாளா... எப்போ மா அவளுக்கு சரியாகும் பாக்கவே பாவமா இருக்கா அவள இப்படி வலியில பாக்கவே முடியலமா" என்றான் வேதனையான குரலில்.

"ம்.. பொண்ணா பிறந்துட்டா இது எல்லாம் அனுபவிச்சிதான் ஆகனும்... என்று பெருமூச்சி விட்டவர் "இன்னைக்கு தான்டா அவ அப்படி இருக்கா எப்பவும் இப்படி வராது கொஞ்சம் அலைச்சல் அதுதான் இப்படி வலிக்கான காரணம் தியாகுட்டி நல்லா ரெஸ்ட் எடுத்தாலே போதும் சீக்கிரமே சரி ஆகிடுவா நாமதான் வீட்டுக்கு கூட்டிட்டு போறோமே நான் நல்லா பாத்துக்குறேன்" என்றவர் "வண்டிய வர சொல்லு கூட்டிட்டு போலாம்" என்றார்.

வட்டியை வரசொல்லி ஏற்பாடு செய்தவன் அவளுக்கு டாக்டர் எழுதிகொடுத்த மருந்துகளையும் மற்றும் அவளுக்கு தேவையான பொருட்களையும் வாங்கிவந்தவன் தியாவையும் ராதாவையும் வண்டியில் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தனது பைக்கில் அவனும் அவர்களை பின்தொடர்ந்து வீட்டிற்கு சென்றான்.

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

பிரபலாமன அந்த காபி ஷாப்பில் எதிர் எதிர் இருக்கையில் போலீஸ் இன்பெக்டர் சக்தியும் அவனுக்கு எதிர் இருக்கையில் கவியின் தந்தை வக்கில் மாணிக்கமும் அமர்ந்து இருந்தனர்.

நீண்டயோசனையுடன் அமர்ந்திருந்த மாணிக்கத்தின் மௌனத்தை கலைக்க சக்தியே முதலில் பேச ஆரம்பித்தான்.

தொண்டையை செருமி கொட்டவன் "சார் என்னை பார்ககனும்னு சொல்லி இருந்திங்களாம்! என்ன விஷயாமா சார்"? என்றான் கொஞ்சம் இளகுவான குரலில்.

யோசனை முகத்துடனே "ஆமா இன்ஸ்பெக்டர் சார் உங்களை பார்க்கனும்னுதான் கேஷவ்விடம் சொல்லி இருந்தேன். ஆனா எப்படி" என்று நிறுத்த

சுற்றும் முற்றும் பார்த்தவற் கொஞ்சம் இருக்கையில் இருந்து முன்நோக்கி வந்தவன் "நீங்க என்னை நம்பி எதுவானாலும் சொல்லலாம் சார்" என்று அவரை பார்த்து கூற

"நான் தயங்கரத்துக்கு காரணம் இதுல என்னால யாருக்கும் எதுவும் ஆகிட கூடாதுன்னு தான்" என்று அவர் இருக்கலயில் சாய்ந்துக்கொண்டு பெருமுச்சி ஒன்றை வெளியேற்றினார்.

அவரின் குழப்பமான முகத்தை பார்த்தவன் "நான் நேரடியா விஷயத்துக்கு வறேன் சார் நீங்க எதையோ மறைக்குறிங்க உங்கள சுத்தி பல மர்மமான விஷயங்கள் நடக்குற மாதிரி எனக்குப்படுது அதோட வெளிப்பாடுதான் உங்க பொண்ணு கல்யாணத்துல நடந்தது ஆம் ஐ கரெக்ட் லாயர் சார்?" என்று அவர் பதிலுக்காக காத்திருக்க

கண்களை மூடி ஆமோதிப்பாய் தலை அசைத்தவர் "எல்லாத்துக்கும் காரணம்...." என்று நிறுத்தி "மந்திரி ஆளவந்தான்" தான் என்றார்.

அவர்கூறிய செய்தி அவனுக்கு அதிரிச்சி அளித்தது என்பது அவன் முகத்திலேயே பிரிதிபலித்தது.

"மறைமுகமா இதுவரை வேலைய செய்துட்டு இருந்தவன் இப்போ காப்ரேட் கம்பனியோட கூட்டுல ஒரு ஊரையே நாசம் பண்ண கிளம்பிட்டான்" என்றார்.

அவர் நிறுத்தியதும் "என்ன சொல்றிங்க சார் மந்திரி ஆளவந்தானா அவருக்கு கட்சில கூட அவ்வளவு நல்ல பெரு.... நீங்க அவரை எதிர்த்து எப்படி? என்று குழம்பியவனுக்கு "ஆமா நியாயவான் நல்லவன் போர்வையிலதான் இந்த குள்ளநரி வேலை எல்லாம் பண்றான்." என்று மந்திரியின் பீர் ஃபேக்டரியை பற்றியும் அவனைபற்றியும் விவரமாய் விளக்கிய மாணிக்கம் "எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் செய்யமுடியுமா?" என்றார்.

"என்ன செய்யனும் சொல்லுங்க சார் என்னால முடியும்னா கண்டிப்பா செய்வேன்" என்று உறுதி அளிக்க,

"இன்ஸ்பெக்டர் நான் கோர்ட்ல கதிர் பற்றிய ஆட்கொணர்வு மனு போட்டு இருக்கேன். ஆனா அதற்கான எந்த ஒரு பதிலையும் இன்னும் தெரிவிக்காம நாளை கடத்திட்டு இருக்காங்க... எனக்கு இதில் ஆளவந்தானோட தலையிடு இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு..."

"இந்த கேஸ்ல நீங்க பர்சனால தகவல்கள் சேகரிக்க முடியுமா அவனை பற்றி சிறு க்ளு கிடைச்சாலும் இந்த ஃபேக்டரிய அடியோட இழுத்து மூட வைச்சிடலாம்" என்று மாணிக்கம் நம்பிக்கையுடன் கூற

"கவலை படாதிங்க சார். நிச்சயம் இதுல என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும் இன்னும் 1 வாரத்துல கதிர் பத்திய பக்கா டீட்டல்ஸோட உங்களை மீட் பண்றேன்." என்று அவருக்கு கைகுலுக்கி விடைபெற்றான்.....
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி.30
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN