காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி.31

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கோவை

காலை 8 மணி அளவில் ஆதியையும் ராஜராமனையும் விமானநிலையத்திற்கு அழைத்து சென்று இமிகிரேஷனை முடித்து அவர்களை மலேஷியாவிற்கு வழியனுப்பி வைத்தவனின் மனது தன் மனைவியை தேடியது அவளுடன் இருக்கும் நிமிடம் எந்த நினைவுகளும் தன்னை இம்சிப்பது இல்லை என்பதை உணர்ந்தவன் மனைவியின் அருகாமையை நாடினான். அதே சமயம் அவனது கைபேசி அலறியது. அதை எடுத்து பார்த்தவன் கார்த்திக் என்பது தெரிந்ததும் அதை எடுத்து பேச மனதில்லாமல் கட் செய்யாமல் சைலண்டில் போட்டான்.

மறுபடியும் அலைபேசி அலற இனியும் அதை தவிர்பது முறையல்ல என்று தயங்கியபடியே அதை சுவைப் செய்து காதில் பொருத்திய கேஷவ் ஹலோ என்றதும்

"டேய் கேஷவ் எங்க போன இவ்வளவு நேரம் ஆளை காணோம் நீ சைன் பண்ண வேண்டிய பைல்ஸ் எல்லாம் பெண்டிங் இருக்கு.... கம்பெனிக்கு அனுப்ப வேண்டிய கொட்டேஷன் அப்படியே இருக்கு அமௌன்ட் கோட் பண்ணனும் டா" என்று அவனுக்கு நியாபகபடுத்த

'பச் இது எப்படி மறந்து போனேன்' என்று தலை முடியை அழுந்த பின்னால் தள்ளியவன் வாட்ச்சை பார்த்தான். "கார்த்திக் நான் ஏர்போர்ட் பக்கத்துல இருக்கேன் ஒரு 30 மினிட்ல ஆங்க இருப்பேன்" என்று போனை அணைத்தவனின் கார் தார்சாலையில் சீறி பறந்தது.

அலுவலகத்திற்கு சென்றவன் தனக்கான கேபினில் நுழைய அவனுக்காக பைல்களை சரிபார்த்து எடுத்து வைத்துக்கொண்டு இருந்த கார்த்திக் அவனின் முகம் பாரத்தான்.
"கேஷவ் நீ இன்னும் தெளிவில்லாம இருக்கன்னு நினைக்கிறேன்" என்றான்.

எதுவும் கூறாமல் அமைதியாய் இருக்கைக்கு சென்றவன் மானிட்டரை ஆன் செய்து அதை ஒளிர விட்டவன் "இல்ல கார்த்திக் நான் நார்மலாதான் இருக்கேன்" என்றான் தன் முகத்தினை சீராக்கி

"உன்னோட குழப்பமான முகமே சொல்லுதடா நீ நார்மல இல்லன்னு அந்த சாருகேஷ நினைச்சி பயப்படுறியா" என்றான் அவனின் தோளில் கைவைத்து.

"பயம்.... என்று இடைவெளி விட்டவன் அதை எல்லாம் கடந்து நான் எப்போவோ வந்துட்டேன் கார்த்திக்... எனக்கு உத்ராவ பத்திதான்" என்றதும்

"நடந்த நிகழ்ச்சி ஒரு விபத்து அதுக்கு நீ மட்டும் எப்படி பொருப்பாக முடியும். அந்த மூளை இல்லதவன் தான் பழிவாங்கனும் பாப்கான் சாப்பிடனும்னு அலஞ்சிட்டு இருக்கான். அந்த பையித்தியகாரனுக்கு சொன்னாலும் புருஞ்சிக்கிர மனநிலை இல்ல நீ இதை வொரி பண்ணாத நாம ஒரு போலீஸ் கம்ளைண்ட் கொடுத்து வைச்சிடலாம்.. அவன் பேர்ல அப்போதான் அவனால எந்த விதமான தொந்தரவும் இருக்காது" என்றான் காரத்திக்.

"சற்று நேரம் யோசித்தவன் இதை நான் பாத்துக்குறேன் கார்த்திக் இன்னைக்கு ஏதாவது மீட்டிங் இருக்கா" என்றான் கணினி திரையில் பார்வையை பதித்தபடி

"இன்னைக்கு இல்லை கேஷவ்" என்று அவனுக்கு பதில் உரைத்தவன் அவன் கையோப்பம் இட வேண்டிய பைல்களையும் மற்றும் கொண்டேஷன்களையும் கொடுத்துவிட்டு "புது டீலர்ஸோட கம்பெனி மேனேஜர்ஸ் உன்னை மீட் பண்ணனும்னு சொல்றாங்க நாளைக்கு காலை 11 மணிக்கு ஆப்பாய்ண்டமெண்ட் பிக்ஸ் பண்ணட்டுமா"? என்றாவன் கேஷவின் பதிலுக்காக காத்திருந்தான்.

"பிக்ஸ் இட் கார்த்திக் நோ பிராப்ளம்... அப்புறம் இந்த சாருகேஷ் மேட்டர் அண்ணனுக்கு இப்போ தெரிய வேண்டாம்... என்னை நினைச்சி அவன் போட்டியில சரியா கவனம் செலுத்த முடியாது சோ இப்போதைக்கு சொல்ல வேண்டாம்" என்றான்.

"உன்னால இதை தனியா ஹேண்டில் பண்ணமுடியுமா கேஷவ்' என்றதும்

"ஒரு காலத்துல அவன் என் பிரண்டா இருந்தவன் தான் கார்த்தி அண்ணா" என்றதும் கார்த்திக்குக்கும் பழைய நியாபகங்கள் துளிர்விட்டது. "ம்..... ஆனா ஜெய் கிட்ட என்னால ரொம்ப நாள் எல்லாம் மறைக்க முடியாது கேஷவ்" என்னு அடர்த்தி நிறைந்த குரலில் கூறியவன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

மாலை 5 மணி கல்லூரி முடிந்து வந்த கவிக்கு வீட்டில் யாரும் இல்லாது வெறுமை நிறைந்து இருக்க சே... இவரு லேட்டா வருவாருன்னு தெரிஞ்சி இருந்தா இன்னும் கொஞ்ச நேரம் ஷீலா கூட அரட்டை அடிச்சிட்டு வந்து இருக்காலாம். என்று எண்ணம் எழுந்தது அத்தை போய் சேர்ந்து இருப்பாங்களா?? சேர்ந்திருந்தா இந்நேரம் போன் செஞ்சி சொல்லி இருப்பாங்களே... என்று தனக்கு தானே பேசியவள் இப்படியே இருந்தா வேலைக்கு ஆகாது என்று நினைத்து முகம் கழுவி தன்னை சுத்தபடுத்தியவள் சமயற்கூடத்திற்குள் சென்று பாலை காய்சினாள்.

வந்ததில் இருந்து தான் கஷ்டப்பட்டு கற்றுக்கொண்ட ஒரே விஷயமான காபியை கலந்தவள் தோட்டத்தில் அமர்ந்து அதை பருக ஆரம்பித்து இருந்தாள். நல்ல இதமான மாலை காற்று சிலுசிலுவென அடிக்க சுமாராய் இருந்த காபி கூட இருந்த மானநிலைக்கு கொஞ்சம் ருசி இருப்பதாகவே தோன்றியது அவளுக்கு.கூடவே அவளின் கணவனின் நினைவும் மலர இன்னும் இனித்தது

விதவிதமான மலர்களை பார்வையிட்டு கொண்டே வந்தவள் வீட்டு கேட்டினை பார்க்க அதில் ஏதோ போஸ்ட்டல் கவரும் ஒரு கடிதமும் இருப்தை பார்த்தவள் அதை எடுத்துக்கொண்டு அங்கே போடப்பட்டு இருந்த கல் பெஞ்சில் போய் அமர்ந்தாள்.

முதலில் கணவருக்கு வந்திருந்த கவரை பிரித்தவளின் முகம் பிரகாசமாய் மாறியது வாவ் என்று வாய்விட்டு மகிழ்ச்சியை வெளிபடுத்தியவள் அந்த கவரை முத்தமிட்டு பத்திமாய் சேமித்து வைத்தாள்.

அடுத்ததாய் வந்த பெயரில்லாத கடித உறையை பார்த்தவள் யோசனையாக பெரை எழுத மறந்துட்டாங்களா தலையும் இல்லாம வாலும் இல்லாம யாரோ எடுத்துட்டு வந்து போட்டது போல இருக்கு
என்று நினைத்தவள் பிரிக்கலாமா? வேண்டாமா? யாருக்கு வந்தது இருக்கும்? ஒரு வேல ஜெயந்த் மாமாவுக்கா இல்லை அங்கிலுக்கா அவங்களுக்கா இருந்தா நாம எப்படி பிரிக்கிறது என யோசனையுடன் கையில் இருந்த பேப்பரை திருப்பி திருப்பி பார்த்தாள்.

அதற்குள் வீட்டிடுக்குள் இருந்து தொலைபேசி அழைப்பு கேட்க கடிததை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.
அழைப்பை ஏற்று ஹலோ என்றாள்.

ஹலோ நான்தான்டா அம்மா பேசுறேன் என்றார் கவியின் அன்னை மஞ்சுளா

'மா எப்படி மா இருக்கிங்க? அப்பா எப்படி இருக்காங்க? தியா போன் பண்ணாலா?என்று அனைவரின் நலமும் விசாரித்தவள் பல கதைகளை பேசிக்கொண்டு இருந்தாள்.

அதே சமயம் பார்கவி வீட்டில் தனியாக இருப்பாள் என்று கேஷவும் சீக்கிரமே அலுவலகத்தில் இருந்து கிளம்பி இருந்தான். வண்டியில் இளையராஜவின்
மெல்லிசைகள் ஒளித்துக்கொண்டு வண்டியை இயக்கிய வண்ணம் இருந்தான் கேஷவ்.

ராஜவின் இசை ஒலித்துக் கொண்டிருந்த சீடிபிளேயரில் இப்போது ஒரு ஆணின் குரல் ஒலித்தது என்ன கேஷவ் எப்படி இருக்க என்று எள்ளலாக கேட்பது போல் இருந்தது அந்த குரல்.... நான் யாருன்னு கண்டுபிடிச்சிட்டியா என்ற அழுத்தம் நிறைந்த அந்த குரலை உள்வாங்கியதும் சட்டென வண்டியை நிறுத்தி இருந்தான்.

'என்ன சத்தம் ஓ..... அதிரிச்சியில வண்டியை நிறுத்திட்டியா.... கேஷவ் என்று வினா எழுப்பியவன் தொடர்ந்து பேசினான்.

என்ன கேஷவ் என் ஆருயிர் நாண்பா எப்படி இருக்க.... ம் நல்லா தான் இருப்ப ஏன் இருக்க மாட்ட இழப்பு அங்க இல்லையே இங்கதானே என்று பற்களை கடித்தவன். கல்யாணம் ஆகிடுச்சின்னு கேள்விபட்டேன் ரொம்ப சந்தோஷம மனைவி மக்கள் குடும்பம்னு சந்தோஷமா வாழுறாப்போல இருக்கு... உன் சந்தோஷத்தை ஒன்னு ஒன்னா அழிக்கிறேன் டா.... இப்போ வீட்டுல யாரும் இல்லை உன் வைப் மட்டும் தான் இருக்கா போல... ம்... சரி ரொம் நாள் கழிச்சி பேசுறோம் நாம ஏதாவது இன்டீரஸ்டிங் கேமா விளையாடலாமா" என்றான்.

"இப்போ உன் வீட்டுல ஒரு வெடிகுண்டு வைச்சி இருக்கேன் அது சரியா 6 மணிக்குக்கு வெடிச்சிடும் இப்போ டைம் என்ன உன் வாச்சை பாரு" என்றதும் பதட்டமாக அவனின் வாட்டை பார்க்க அது 5.45 காட்டியது

என்னோட கணக்குபடி 15 நிமிஷத்துக்குள்ள நீ போகலனா உன் உயிர் பறந்து போயிடும் கேஷவ் என்று அகங்காரமாய் சிரித்தவன் இந்த பதினைஞ்சி நிமிஷத்துக்குள்ள நீ போயிட்டேன்னு வை நீ ஜெயிச்சிட்ட ஆனா 6 மணி ஆடிச்சி ஓரு நிமிஷம் லேட் ஆனாலும் நான் ஜெயிச்சிடுவேன் பால் இஸ் இன் யுவர் கோர்ட் நண்பா முடிஞ்சா உன் மனைவிய காப்பாத்திக்க என்று கூறி பேச்சை முடித்துக்கொண்டான்.

அவன் கூறியதும் மனைவியின் கைபேசிக்கு அழைத்தவன் அது செயலற்று போயிருக்கேன் என்று தகவல் அளிக்க வீட்டு எண்ணிற்ககு அழைத்து இருந்தான் கவி தாயிடம் பேசும் ஆர்வத்தில் கொஞ்சம் பேச்சி அதிமாகி போக அவளுக்கு கணவன் அழைப்பது தெரியாலேயே போனது தொடர்ந்து 10, 15 முறை அவளுக்கு தொடர்ந்து அழைத்தவன் பொறுமை இழந்து போனை சீட்டில் தூக்கி எரிந்தான்.

காரில் ஏசி இருந்தாலும் பதட்டம் பயத்தின் காரணமாய் முகத்தில் வியர்வை வழிந்தது.... கைகள் நடுங்கியது சாலை விதிகள் வேறு அவனை படுத்தி எடுக்க குறுநெடுக்குமாய் புகுந்து அசுற வேகத்தில் பறந்தவன் உயிரை கையில் பிடித்து வண்டியை செலுத்திக் கொண்டு இருந்தான்.

கேஷவ் வீட்டிற்குள் நுழையவும் மணி 6 யை கடக்கவும் கடந்து போகவும் சரியாய் இருக்க அரக்கபரக்க ஓடிவந்தவன் வீட்டில் இண்டு இடுக்கு என்று ஒரு இடம் விடாமல் தேடிக்கொண்டு இருந்தான். அவன் வந்ததும் வந்துட்டிங்களா என்றபடி வந்த கவி அவனின் செய்கைகளை கண்டு ஒன்றும் புரியாமல் அவன் பின்னே நடந்தபடி "என்ன கேஷவ் எதை தேடுறிங்க? என்ன வேண்டும்" என்று கேட்க அவளிடம் எதையும் கூறாமல் தேடுதலை தொடர "இப்போ சொல்ல போறிங்களா இல்லையா" என்று அவனை அவளின் புறம் திருப்பினாள்.

"பார்கவி" என்று கத்தியவன் "மனுஷனோட சிரியஸானஸ் என்னன்னு தெரியாம எதுக்கு இம்ச பண்ற??? உனக்கு எத்தனை முறை கால் பண்ணேன் என்கேஜ் என்கேஜ் உயிர கையில புடிச்சிட்டு வந்தேன் டீ என்று அவளை அறைந்துவிட, அவளும் அதிரிச்சியில் அப்படியே நின்றுவிட்டாள்.

டிபாயின் மேலே இருந்த அவளின் அலைபேசி கண்களில் பட அதை கையில் எடுத்தவன் இது இருந்தும் ஒன்னுதான் இல்லாம இருக்கரதும் ஒன்னுதான் என்று பட்டென தரையில் விச அது சிவ்லுகில்லாக உடைந்து சிதறியது. "என்ன மரம் மாதிரி நிக்கிற என்னை தொந்தரவு பண்ணாம அப்படி போய் உட்காரு" என்று கத்தினான். அவன் கத்தலிலும் செய்கையிலும் அரண்டு போயிருந்தவள் கண்கள் கலங்க நான் என்ன செய்துட்டேன்னு இப்படி கோவப்படுராரு என்று அவன் மீது கடும் கோபத்துடன் சோபாவில் போய் அமர்ந்தாள்.

வீடு முழுதும் தேடி தேடி அலைய அவன் கைபேசி ஒலி எழுப்பியது அதை எடுத்து பார்க்க அன்நவுன் நம்பர் என்று வர நடுங்கும் கரங்களுடன் அதை காதில் வைத்தான்.

ஹா.... ஹா..... என்ன கிடைச்சிதா என்றான் நக்கலாக

எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்தான் கேஷவ்.

சாரி கேஷவ் ஒன்னை சொல்ல மறந்துட்டேன் நாளைக்கு கன்பார்மா வைச்சிடுறேன் இன்னைக்கு உன் ரியாக்ஷன் பார்க்கனும்னு தோனுப்சி பொண்டாட்டின்னா அவ்வளவு புடிக்குமா புது பொண்டாட்டி இல்ல அப்படிதான் இருக்கும். என் அடுத்த கேம் நஆளைக்கு சொல்றேன்" என்று வில்லத்தனமாக சிரிக்க.

"சாருகேஷ்......நடந்தது என்னன்னு தெரியாம நீ தப்புக்கு மேல தப்பு செய்துகிட்டு இருக்க இதுக்கு எல்லாம் நீ பதில் சொல்லியே ஆகனும்" என்று பதில் பேசியவன் பொத்தென நாற்காலியில் அமர்ந்தான்.

அவன்தானே அடித்தான் அவனே வந்து சமாதனம் செய்ய வேண்டும் என்று கவி அவனிடத்தில் கோபம் கொண்டு பேசாமல் இருந்த.இடத்தை விட்டு அகலாமல் இருந்தவள் ஒரு மணி நேரம் ஆகியும் கேஷவ் அறையிவ் இருந்து வெளியே வராமல் இருக்கவும் அவன் மீது இன்னும் கடுப்பனவள் நெட்டகொக்கு நீயா வந்து சமாதானம் செய்ற வரையும் நானா வந்து பேச மாட்டேன் டா என்று அவளும் வீம்பாய் இருக்க மணி 8 கடக்க இதற்கு மேல் அவளால் பசியை தாங்கமுடியாத காரணத்தால் அவளே விஷபரிட்சைக்கு தயாரானாள்.

சமயலறைக்குள் போனவள் என்ன செய்யலாம் என்று யோசனையுடனே பிரிட்ஜை திறக்க அதில் இருவருக்கும் போதுமான அளவு மாவு இருக்க மூளையில் மின்னல் வேகத்தில் யோசனை உதித்தது.

நாமே கார சட்னிக்கு டிரை பண்ணா என்ன அவருக்கு என்று கூறியவள் என்னை கன்னம் வீங்கர அளவு அடிச்சிட்டான் அவனுக்கு என்ன மரியாதை கஞ்சி பவுடர், ராட்சன், ராத்தகாட்டேரி என்று பெயர் வைத்தவள் அவனுக்கு என்ன புடிக்கும் என்று யோசித்தாள்.

அவனுக்கு புடிச்சா என்ன புடிக்கலனா என்ன நான் இதை தான் செய்ய போறேன் என்று வாயிவிட்டு கூறியவள் அம்மாவுக்கு போன் செய்யலாம் என்று நினைக்க வேண்டாம் கிண்டல் பண்ணுவாங்க அவங்கள அந்த ஓட்டு ஓட்டி இருக்கேன் அத்தைக்கு அவங்க இன்னும் போனாங்களானனே தெரியலையே யூடிப் போலாம்ன்னா படுபாவி செல்ல ஒடச்சிட்டானே வேற அப்போ யாருக்கு செய்யலாம் ஷீலாக்கு பண்ணாலாம் இப்போதான் அவ குடும்ப இஸ்திரி பெட்டி ஆயாச்சே என்று கிண்டலடித்தவள் நினைவில் இருந்த அவளின் செல் நம்பருக்கு அழைத்தாள்.

"ஏய் என்ன டி இந்த நேரத்துல?"

"எப்படி ஷீலா நான்தான்னு கண்டுபுடிச்ச"

"அட மண்டு நீதானே ராஜூ எனக்கு மொபைல் வாங்கி கொடுத்தார்னு சொன்னாதுக்கு இப்படி கொடுன்னு வாங்கி உன் நம்பரும் வீட்டு நம்பரும் சேவ் பண்ணி கொடுத்த" என்றதும்

"ஆமாம்லா"

"ஆமாவா இல்லையா ரெண்டு பதிலையும் ஒரே நேரத்துல சொல்றியேடி" என்று அவள் காலை ஷீலா வார

"போதும் என்டு கரோ.... என்று திட்டியவள் இப்போ எனக்கு கார சட்னிய எப்படி செய்யறதுன்னு சொல்லிகொடு" என்றதும் விழந்து விழுந்து சிரித்தாள் ஷீலா..

பற்கலை நறநறவென கடித்தவள் "இப்போ எதுக்கு சிரிக்கிற" என்று காரமாக கவி கேட்க

"சமைக்க கஷ்டம் சொல்லிட்டு சமயல்காரனையே கல்யாணம் பண்ணிப்பேன்னு சொன்னவதானே நீ" என்றதும்

"ஏய் எருமை வாயமூடு வாங்கி கட்டிக்காத" என்று வார்த்தைகளால் வெலுக்க

அதில் அடங்கிய ஷீலா செய்முறையை கூற அதை மண்டையில் ஏற்றிக் கொண்டவள் தன்வீரதீர பராக்கமங்களை காட்ட சமயலறைக்குள் புகுந்தாள்.

தக்காளி இரண்டு எடுக்க சொன்னா கட்பண்ணிட்டு போட சொன்னாளா இல்ல அப்படியே போட சொன்னாளா என்று குழம்பியவள் மறுபடியும் அவளுக்கு அழைத்தாள்.

"என்னடி உடனே கூப்பிட்டுட்ட அதுக்குள்ள செஞ்சி முடிச்சிட்டியா?" என்று தன் வியப்பை காட்ட

"ஒரு நிமிஷம் என்னை பேச விடுடி என்றவள் தக்காளிய கட்பண்ணி போடவா இல்ல அப்படியே போடவா?" என்றதும்

"எப்படி போட்டாலும் அதை அரைக்கதானே போகுது" என்று அலுப்புடன் கூற

"சரி சரி சின்னதா கட்பண்ணனுமா பெருசாவா?"

"ஏய் கேக்கனும்னு கேள்விய கேக்காதடி சமைக்கனும்னு எண்ணம் இருந்தா ஒழுங்க சமைக்கலாம் தப்பிக்கனும்னு நினைச்சா அப்படி தான் தக்காளி மாட்டினடீ" என்று அவளை வெறுப்பேற்ற

"அடிவிழும் எருமை நாளைக்கு வா டின்னு கட்டுறேன்" என்று வேகமாக போனை வைக்க

ஏன் எனக்கு தெரியாதா நானே சமைச்சிக்கிறேன் என்று ஜம்பமாய் சென்றவள் வெங்காயம் போட்டதும் பச்சமிளகாயா காஞ்சமிளகாயா என்று குழம்ப எதை போட்டாலும் காரம் இருக்கும் தானே.... புளி இது இல்லனா நல்லா இருக்காதுன்னு சொன்னாலே சரி எடுத்து போடுவோம் என்று ஒருவழியாய் ரணகளபடுத்தி அரைத்து முடித்தவள் தோசை வார்க்கும் பெரிய சோதனையை சந்தித்தாள். அவள் வார்க்கும் போது வட்டமாய் வரும் தோசை அதை கல்லில் இருந்து பிரித்து எடுங்கும் போது வரட்டியாய் அங்கும் இங்கும் ஒட்டிக்கொண்டு சண்டிதனம் செய்தது. ஒரு வழியாய் தோசையை ஊத்தி முடித்தவள் அவனிருக்கும் அறைக்கு சென்றாள்.

அங்கு அவளை அடித்து திட்டிவிட்டு வந்துவிட்டானே ஒழிய எப்படி சமதானம் செய்வது என்று தெரியாமல் தவித்து அங்கும் இங்கும் நடைபயின்று கொண்டிருந்தான். அவளை அறையை திறக்கும் அரவம் கேட்டதும் அவள் முகத்தையே பார்த்து இருக்க அவள் கோபமாய் வேறுபுறம் திரும்பி கொண்டு கட்டிலில் அமர்ந்தாள்.

அவளை பார்ப்பதும் மறுபடி நடப்பதுமாய் இருந்தவன் அவள் அருகில் சென்று சாரி மா... சாரி என்று பக்கத்தில் அமர அவனின் கைகளை தட்டி விட்டு எழுந்தவள் நீங்க வந்தவுடனே எவ்வளவு ஆசைஆசையா வந்தேன் தெரியுமா உங்ககிட்ட பேச? உங்களுக்கு சந்தோஷமான் விஷயத்தை சொல்ல காத்திருந்தேன் தெரியுமா???என்று சிறுகுழந்தை போல் அவன் முகம் பார்த்தாள்.

அவள் தலை கோதி அவன் பதட்டபட்டதற்கான விஷயத்தை மறைத்தவன் "சாரி டா நீ வீட்டுல தனியா இருப்பன்னு எத்தனை வாட்டி உனக்கு கால் பண்ணேன் தெரியுமா???? உனக்கு ஏதோ ஆகிடுச்சகன்னு தான் ரொம்ப பயந்து பயத்திக்காரத்தனமா நடந்துகிட்டேன் டா என்னை மன்னிச்சிடுடா" என்று தன் கைவிரல் பதிந்த அவளின் கன்னத்தில் கைவைத்து கேட்க

"மன்னிக்க முடியாது போ... ரொம்ப வலிச்சிது தெரியுமா...' என்று அவளின் கன்னத்தில் கை வைத்து தடவினாள்.

"சாரிடா... சாரி செல்லம் இனி இது மாதிரி நடக்காம கவனமா இருக்கேன் டா" என்று மறுமுறை சாரி கேட்க

"ம்... இந்த வாட்டி போனா போகுதுன்னு மன்னிக்கிறேன்... என்று மனமிறங்கி வந்தவள் வாங்க சாப்பிடலாம்" எனக்கு பசிக்குது என்றாள்.

"சாப்பிடவா..... "என்று தன் அதிர்ச்சியை வெளிபடுத்தியவன் "சமையல்காரம்மா நாளைல இருந்துதான் மூனுவேலையும் செய்வாங்கன்னு அம்மா சொல்லி இருந்தாங்க" என்றான்.

"அத்தை எனக்கும் சொல்லி இருந்தாங்க இப்போ மட்டும் தானே டைம் வேர ஆகிடுச்சி ரொம்ப பசிச்சது அதான் நானே செய்துட்டேன்" என்று கூறி அவனை அழைத்து சென்று உணவு பறிமாற ஆரம்பித்தாள்.

தோசையை பார்த்தவுடனே அதன் பறிதாப நிலையை உணர்ந்தவன் இப்போதான் ஒரு பூகம்பம் முடிஞ்சுது அதுக்குள்ள இன்னொன்னா தோசையே இந்த நிலமைனா சட்னியோட நிலமை என்று எண்ணி அதை வாயில் வைத்தவன் காதில் புகை வாராத குறைதான் கண்களை மூடி சாமளித்தவன் ஒன்றும் கூறமுடியாமல் எழுந்து அவளின் கையை பிடித்து சாப்பிடவிடாமல் தடுத்தவன் "போதும் கவி வா மணி 9 தான் ஆகுது வெளியே போய் சாப்பிட்டு வரலாம்" என்று அழைத்தான்.

"ஏன் இதையே சாப்பிடலாமே நல்லாதானே இருக்கு" என்று கூறியவளின் கையை விடபடியாக பற்றியவன் "பீளிஸ் மா வா எனக்கும் பசிக்குது" என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு உணவகத்திற்கு சென்றான்.

இன்று பல கலவையான உணர்வுகளுடன் பயணித்த கேஷவ் உணவு விடுதியில் இருந்து திரும்பியவனின் மனமும் உடலும் கலைத்திருக்க படுத்த அரைவினாடியிலேயே மனைவியினை அணைத்தபடி கண் அயர்ந்தான்.

கணவனின் கையணைப்பில் இருந்தவளுக்கு மாலையில் வந்த கவர் நியாபகத்திற்கு வர "சே.... நம்ம கச்சேரியில இதை அவன் கிட்ட சொல்ல மறந்துட்டனே நாளைக்கு சர்பிரைஸா சொல்லனும்" என்று திட்டமிட்டபடியே உறங்கினாள்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி.31
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN