அத்தியாயம் 15

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ASU 15
பறவைகளின் கீச்சிடும் சத்தத்தில் அழகாக விடிந்த காலை வேளை... புத்தம்புது மலராய் இடையை தாண்டி வளர்ந்து கொண்டு இருந்த கூந்தலில் பன்னீர் துளிபோல் நீர் சொட்டிக்கொண்டு இருக்க, எதிரில் இருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்ததாள் சிவரஞ்சனி. அழுது சிவந்திருந்த கண்கள் அவள் துயரத்தை வெளிச்சம் போட்டு காட்டி கொண்டு இருந்தது.
நேற்று இரவு நடந்தது எல்லாம் இப்பொழுதும் நினைவு வர இவ்வளவு நேரம் கட்டுபடுத்திய கண்ணீரெல்லாம் மீண்டும் வருவது போல் இருந்தது... தன் பார்வையை தனது இடைவரை நீண்ட கூந்தலில் திசைதிருப்பி துவட்ட ஆரம்பித்தாள்.
இருபத்து நான்கு வருடங்களாக அவளின் பாட்டி சிவசக்தியின் பராமரிப்பில் செழிப்புடன் வளர்ந்து இருந்த அவளது கூந்தல் தற்போது அவள் தோட்டிய துண்டிலேயே நிறைய கழன்று கொண்டு வந்தது. சிவசக்தியின் நியாயங்களை தொடர்ந்து அர்ஜூனின் நியாபகங்கள் வந்து இம்சிக்க, மீண்டும் கண்ணீரை கட்டுப்படுத்துவதே பெரிய வேலையாக இருந்தது சிவரஞ்சனிக்கு. அருகில் உள்ள கட்டிலில் தான் இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கிறான் என்று அவனை தவிர்க்க கண்களை இறுக்கி மூடிக்கொண்டவளின் கண்களுக்குள்ளும் அர்ஜூனே...!
நேற்று இரவு அதிசயமாக சக்தியே தொலைபேசியில் அர்ஜூனை அழைத்து பேசினான். சிவரஞ்சனியும் அவன் தான் பேசுகிறான் என தெரிந்து அடித்து பிடித்து கொண்டு வந்து அர்ஜூனிடம் இருந்து பிடுங்கி பேசினாள்... ஆனால் சக்தி‌ பேசிய வார்த்தைகள் அவளை கண்ணீருக்கு உள்ளாக்கியது.
"சக்தி... எப்படிடா இருக்க... ஏன்டா என் கால அட்டன் பன்னல..." அழுது விடும் போல் பேசிய சிவரஞ்சனியை பார்க்க, அர்ஜூனுக்கே பாவமாக இருந்தது.
"பாட்டி இறந்து மூன்று மாசம் ஆகுது. இந்த மாசம் கொடுக்கவேண்டிய திதிக்கு உன்னையும் உன் ஹஸ்பன்ட்டயும் கூப்பிடலாம்னு எல்லாரும் ப்ளான் பன்னறாங்க... தயவு செய்து வந்துடாத..." என்றவன் அழைப்பை துண்டித்து இருந்தான். சிவரஞ்சனிக்கு உள்ளம் உடைந்தது போல் இருந்தது.
"ரஞ்சு... என்ன சொன்னான்..." அர்ஜுன் ஆர்வமாக கேட்டான். ஏனெனில் சக்தியை புரிந்து கொள்ளாமல் தான் செய்த தவறு அவனுக்கும் வருத்தத்தை அளித்தது. அதையெல்லாம் மறந்து சக்தியே தொலைபேசியில் அழைத்து திதிக்கு வருமாறு கூப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

அவனை கோபமாக ஒரு பார்வை பார்த்து வைத்தவள் சக்தியை திரும்பவும் தொலைபேசியில் அழைத்துக்கொண்டே பால்கனிக்கு வந்திருந்தாள்.
சிவரஞ்சனியின் கோபப்பார்வை அர்ஜூனுக்கு புதிதாக இருக்க அவள் செய்கைகளை கவனமாக கவனித்து கொண்டு இருந்தான்....
சக்தி எடுக்காமல் போகவே திரும்ப திரும்ப அழைத்தவள் ஒரு கட்டத்தில் அவன் தொலைபேசியை எடுக்க பொரிந்து தள்ளிவிட்டாள்.
"டேய் இப்போ உனக்கு என்னதான் பிரச்சினை... என்ன சொன்ன 'உன் ஹஸ்பன்டா...?' நீதானடா பிடிவாதமா அர்ஜூன தான் நான் கல்யாணம் பன்னிக்கனும்னு ஒத்த கால்ல நின்ன... இப்போ என் வாழ்க்கை இப்படி நாசமா போனதுக்கு நீதான் காரணம். இதுக்கு நான் அத்தானயே கல்யாணம் பன்னிட்டு நம்ம வீட்டுலயாவது வாழ்ந்து இருப்பேனே... உனக்காக தானடா நான் அவர கல்யாணம் பன்னிட்டு தினமும் அவஸ்தை பட்டுகிட்டு இருக்கேன்... நான் எதாவது உன்ன ஒரு வார்த்தை சொன்னனா... நீ ஏன்டா‌ இப்படி ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு இப்படி பன்னற... என்ன ஆம்பிளைங்கிற திமிரா... உன் மாமா தான உன்ன அடிச்சாரு..." என்றவளுக்கு சக்தி ஏதோ கூறினான்.
........
"இப்போ ஒன்னும் பிரச்சினை இல்லை... நல்லாதான் இருக்கோம்... நீ குறுக்க பேசி என்ன டிஸ்ட்ராக்ட் பன்னாத... என்ன சொல்லிட்டு இருந்தேன்... ஹாங்... மாமாதான உன்ன அடிச்சாரு... நான் உனக்கு சப்போர்ட் பன்னலன்னு கோச்சிகிறயே, அத்தனை பேர் முன்னாடி ஒரு சின்ன பொண்ணுடைய மானத்தை வாங்க சொல்லறியா.... நான் கூட நீ உண்மையா அர்ச்சனாவ லவ் பன்னறியோன்னு நினச்சுட்டேன். உண்மையா லவ் பன்னி இருந்திருந்தைன்னா அவள கேவல படுத்த நினச்சு இருக்க மாட்ட... உன்ன பைத்தியக்காரத்தனமா லவ் பன்னறா பாரு அவள சொல்லனும்... நீ அவளுக்கு ‌வொர்த்தே இல்லை... "
"சரி நான் ஏன் அங்க வரக் கூடாது... அது என் வீடு... உனக்கு எவ்வளவு உரிமை இருக்கோ அந்த அளவுக்கு எனக்கும் இருக்கு.... பாவம் அந்த மனுசன்... இன்னைக்கு அந்த ரவி கிடச்ச பிறகு தான் நிம்மதியானாரு... ஆனா நீ என்னடா முயற்சி செஞ்ச... ஓடி ஒளிஞ்சுக்க தான் செஞ்ச... அர்ச்சனா எப்படி இருக்காள்னாவது உனக்கு தெரியுமா... தெரியாது... எப்புறம் என்ன மண்ணாங்கட்டி லவ்... இனி அர்ச்சனாக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... உனக்காக பார்த்து நான் அர்ஜூன கல்யாணம் பன்னி கிட்டு ரொம்ப பட்டு, இப்போதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன்... அவரு அங்க வரும்போது தயவு செய்து எனக்காக அவருகிட்ட நல்லபடியா நடந்துக்கோ..." என்றவள் தொடர்பை தூண்டித்து இருந்தாள்.
என்னதான் பேசுகிறாள் என கேட்க ஆர்வமாக அங்கு வந்த அர்ஜூன், அவள் முதலில் பேசியதை மட்டும் கேட்டு விட்டு வீட்டைவிட்டு வெளியேறினான்.
'இதுக்கு நான் அத்தானயே கல்யாணம் பன்னிட்டு நம்ம வீட்டுலயாவது வாழ்ந்து இருப்பேனே... வாழ்க்கை நாசமாகிவிட்டாது... தினமும் அவஸ்தைபடுகிறேன்....' சிவரஞ்சனி கூறிய வார்த்தைகளையே அசைபோட்டபடி தன் போக்கில் மகிழுந்தை செலுத்திக் கொண்டு இருந்தான் அர்ஜூன். அர்ஜூனுக்கு சிவரஞ்சனி கூறிய வார்த்தைகள் அனைத்தும் நெருஞ்சி முள்ளாய் குத்தியது... அதிலும் அத்தானையே திருமணம் செய்து இருக்கலாம் என்று கூறியது வேதனையை அளித்தது. அன்று ஒருநாள் அர்ஜுன் இதுபோன்று பேசியதற்கு கோபம் கொண்டவள் தற்போது அவளே அவளின் வாயால் கூறியது மிகவும் வருத்தத்தை அளித்தது.
தன் போக்கில் மகிழுந்தை செலுத்திக் கொண்டு இருந்தவன் தானாக அலுவலகத்தின் வெளியே காரை நிறுத்தினான். ஏதாவது வேலை செய்வோம் என நினைத்து உள்ளே செல்ல நினைத்தவனிடம் அடையாள அட்டை இல்லை...
அது உலகப்புகழ் பெற்ற பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பதால் அடையாள அட்டை இல்லாமல் மற்றும் கைரேகை வைக்காமல் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது.
உள்ளே செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டவன் தனது காரை திருப்ப அவனிடம் ஓடி வந்து சேர்ந்தான் அவனுடன் பணிபுரியும் ஒருவன். வந்தவன் அர்ச்சனாவின் நலம் விசாரித்ததோடு விடாமல் ஓசி குடிக்கு வேறு அர்ஜூனை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கொஞ்சம் மட்டும் குடிக்க வைக்க, சிவரஞ்சனி ஏற்படுத்திய காயத்தால் மீண்டும் மீண்டும் குடித்தவன், மற்றவர்கள் வலுக்கட்டாயமாக அவனை அழைத்து சென்ற பிறகே அந்த பாரை விட்டு வெளியேறினான்.
இவ்வளவு நேரம் ஹாலில்தான் அமர்ந்து இருந்த அர்ஜூன் காணாமல் போகவும் அவன் வெளியே சென்று இருக்கிறான் என அவன் கார் சாவி இல்லாததை வைத்து தெரிந்து கொண்டவள் அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள். பதினொரு மணியளவில் ஒருவன் அர்ஜூனை கைத்தாங்கலாக அழைத்து வருவதை பார்த்து விட்டு அதிர்ந்தவள், வந்தவனுக்கு நன்றி கூறி அனுப்பி வைத்துவிட்டு அர்ஜூனை கைத்தாங்கலாக அழைத்து வந்து படுக்கை அறையில் படுக்க வைத்துவிட்டு "சாருக்கு இந்த பழக்கம்லா கூட இருக்கா... லவ் பெயிலியர் கேஸ் தான இவனும்... இருக்கத்தான் செய்யும்..." என்றபடி அவனின் ஷூவை கழுட்ட துவங்கினாள்.
போதையின் பிடியில் இருந்தவன் சிவரஞ்சனியின் குரலை அடையாளம் கண்டு கொண்டு "ஏய்... டோன்ட் டச் மீ... நீயெல்லாம் பொண்ணே இல்ல... அப்பவே அவன் உன்ன பத்தி சொன்னான்... என்தப்பு தான்... உன்ன கல்யாணம் பன்னிகிட்டனே என்தப்பு தான்... அவன் கூடவே போயிடு... போயிடு... போடி... போ..." என்று என்னென்னவோ கூறியவன் பிறகு போதையின் பிடியில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தான்.

அவன் சொல்வதையெல்லாம் அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவள், அவன் தூங்கிவிட்டான் என தெரிந்ததும் அமைதியாக அங்கிருந்த பால்கனிக்கு சென்று தூரத்தில் தெரியும் இருளை வெறித்துக் கொண்டு இருந்தாள். மனமெல்லாம் பாரம் அழுத்தியது. 'எவ்வளவு சுலபமாக சொல்கிறான் என்னை விட்டு போ என்று... அவன் மனதில் ஒரு துளி கூட நான் இல்லையா... நான் அவனை சற்று கூட பாதிக்கவில்லையா... வேறு எவனுடனே இனைத்து பேச அவனால் எப்படி முடிகிறது...' என்று அவளின் காதல் கொண்ட மனம் அமைதியாக கண்ணீர் வடித்தது.
வெகு நேரம் அங்கேயே அமர்ந்து இருந்தவள் ஒரு முடிவு எடுத்தவளாக தன் துணிகளை எல்லாம் டிராலியில் எடுத்து வைக்க ஆரம்பித்தாள். திரும்ப திரும்ப அவனிடம் தன்னுடைய தன்மானத்தை இழைப்பதை அவளால் ஏற்க முடியவில்லை.
அவளின் ‌துணிகளுடன் அவள் அவனுக்கு ஆசையாக எடுத்து வைத்து கொடுக்காமல் போன டீசர்ட் தென்பட அதை எடுத்து வருடிக்கொண்டு இருந்தவளுக்கு கண்ணீர் வந்தது. இப்பொழுதெல்லாம் எதற்கெடுத்தாலும் கோழைப்போல் அழுகிறேனே... என நினைத்தவளின் கண்கள் மட்டும் தன் கண்ணீரை அடக்காமல் இருந்தது.
"திரைப்படங்களில் வருவது போல் குடித்து விட்டு அர்ஜூன் ஒன்றும் தவறாக நடந்து கொள்ளவில்லையே.... அடித்து துன்புறுத்தவில்லையே..." என அவனுக்காக அவளின் மனம் அவளிடமே பறிந்து பேச, "போ என்று எப்படி சொல்லலாம்... நான் இங்கிருந்து சென்றால்தான் என்னுடைய அருமை அவனுக்கு புரியவரும்..." என்று அதை அடக்கி வைத்தாள்.
கோவை செல்லும் விமானத்திற்கு டிக்கெட் புக் செய்தவள் அவன் எழுந்ததும் முகத்தில் அடித்தார் போன்று நான்கு கேள்வி கேட்டுவிட்டு அவனுக்கும் ஒரு கும்பிடு... இந்த ஊருக்கும் ஒரு கும்பிடு போட்டு விட்டு, கிளம்ப வேண்டும் என்று காத்திருந்தவள் அப்படியே உறங்கிப்போனாள்.
********
தலையை தோட்டியபடி தன் சிந்தனையில் உழன்று கொண்டு இருந்தவளை கலைத்தது அவளின் சிந்தனையின் நாயகன் அர்ஜூனே...
இவ்வளவு நேரம் அவளின் தூக்கத்தை கெடுத்துவிட்டு நிம்மதியாக தூங்கி எழுந்து அமர்ந்தவன் சோம்பல் முறித்துக் கொண்டே "ரஞ்சி... ரொம்ப தலை வலிக்குது... டீ வேணும்..." என்றவன் கண்ணை கசக்கிக்கொண்டு தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான்.
அர்ஜூன் டீ பைத்தியமாக இருந்தாலும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிக்கவே மாட்டான் என்பது அவளுக்கு தெரியும். இது நேற்று அடித்த சரக்கினால் வந்த தலைவலி என்பதை புரிந்து கொண்டவள், சமையல் அறைக்கு சென்று தயிரில் கொஞ்சம் உப்பு கலந்து பீட்டர் வைத்து நன்றாக கலக்கி தண்ணீர் விட்டு கொஞ்சம் சீரகம் சேர்த்து பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து கலக்கியவள் ஒரு கண்ணாடி டம்ளரில் அந்த மோரை ஊற்றி அதன் மேலே நறுக்கிய கொத்தமல்லியை தூவி அவனிடம் எடுத்து சென்று நீட்டினாள்,
அதற்குள் நேற்று இரவு சக்தியிடம் அவள் பேசிய வார்த்தைகளை நினைவில் கொண்டு வந்தவன் கடுப்பாக "டீ தான கேட்டேன்..." என்று கூறி இவ்வளவு நேரம் அவள் அடக்கி வைத்திருந்த பொறுமையை காற்றில் அவிழ்த்து விட்டான்.
"எனக்கு வேணும்... நீங்க நைட் போதையில அப்படி நடந்துக்கிட்ட பிறகும் நான் பொறுமையா பாவமேன்னு போதை தெளிய மோர் கொண்டுவந்தேன் பாருங்க... எனக்கு நல்லா வேணும்..." என்று அவனிடம் கோபமாக கத்தியவள் அருகில் இருந்த டேபிளில் மோர் டம்ளரை "டங்" என வைத்து விட்டு தலை வாரும் வேலையை தொடர்ந்தாள்.
சிவரஞ்சனி தலைக்கு குளித்து புடவை கட்டி எங்கயோ கிளம்பிச்செல்வது, அருகில் இருந்த டிராலி, அவளின் கோப வார்த்தைகள் எல்லாம் சொல்லாமல் சொல்லியது நேற்று இரவு ஏதோ நடந்து இருக்கிறது என்று. ஆனால் எவ்வளவு யோசித்தும் நினைவு வரவில்லை. எப்படி வீட்டிற்கு வந்தோம் என்று கூட நினைவில் இல்லை... 'போதையில அப்படி நடந்துகிட்ட பிறகும்...' என்ற சிவரஞ்சனியின் வார்த்தைகள் அவன் நினைவுக்கு வர தலையில் கைவைத்தவன் "ஷிட்..." என்று கத்தினான்.
புரியாமல் திரும்பி பார்த்த சிவரஞ்சனியின் முகத்தை பார்க்க முடியாமல் வேறுபக்கம் திரும்பியவன் "நான் உன்கிட்ட தப்பா... எதாவது தப்பா நடந்துகிட்டனா...?" தயக்கமாக அவன் கேட்ட விதத்தில், அவனுக்கு இரவு அவன் பேசிய வார்த்தைகள் எதுவும் நினைவில் இல்லை என்பதை உணர்ந்தவள் என்ன கேட்க வருகிறான் என்று பார்த்தாள்.
"ப்ளீஸ் தயவு செய்து சொல்லும்மா... எனக்கு சுத்தமா நியாபகம் இல்லை... நான் உன்ன... உன்ன ரேப் பன்னிட்டனா...." எழுந்து வந்து சிவரஞ்சனியின் கையைப்பிடித்து கெஞ்சியவனை பார்க்க அவளுக்கு பாவமாக இருந்தது. இருந்தாலும் இவ்வளவு நாள் நீ போட்ட ஆட்டத்திற்கு இந்த குற்றவுணர்வு தான் பதிலடி... என்று நினைத்தவள் ஆமாம் என்று தலையாட்டியவள் தன் தோல்பையை‌‌ மாட்டிக்கொண்டு டிராலியை தள்ளிக்கொண்டு புறப்பட்டாள்.

கட்டிலில் தெப்பென்று அமர்ந்த அர்ஜூன் கையாலாகாத தனத்துடன் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான்...
இனி சிவாவின் ஆட்டம் தொடரும்...
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியேஎனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும்உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஒ ஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்....
(# Mannipaya from VinnaiThandiVaruvaya)
வணக்கம் வாசகர்களே... மிகவும் நன்றி. எப்பொழுதும் விட சென்ற பகுதிக்கு அதிகமாக வாக்குகளும் கருத்துக்களையும் தந்து ஆதரவு அளித்து இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் ஆதரவை தரும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி...
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 15
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN