அத்தியாயம் 19

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ASU 19
"அத்தனுக்கு ஷிவ் மேல லவ்லாம் இல்ல மாமா... அவருக்கு அவள ரொம்ப பிடிக்கும் அவ்வளவு தான். அவருடைய தங்கச்சிகிட்ட காட்ட முடியாத அன்பை சிவாட்ட காட்டுவாரு... சின்ன வயசுல இருந்து கூடவே சுத்திட்டு இருந்தவ இப்போ திடீர்னு உங்ககூட போய்டவும் அவனால ஏத்துக்க முடியல..." - சக்தி.
அர்ஜூனிடம் எதற்கு ஹேர்கட் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய சக்தியிடம், அர்ஜூன் நிரஞ்சனை பற்றிய எல்லா உண்மைகளையும் பிட்டு பிட்டு வைத்திருந்தான். சிவரஞ்சனியிடம் கூறி அவளின் நிம்மதியை கெடுக்க விரும்பாமல் இதைப்பற்றி கூற சரியான ஆள் சக்திதான் என்று கணித்து அவனிடம் அனைத்தையும் கூறினான். சக்திக்குமே இது அதிர்ச்சியாகதான் இருந்தது. ஆனாலும் அர்ஜூன் கூறியதை முழுமையாக நம்பினான். இருந்தாலும் நிரஞ்சனை விட்டு கொடுக்க முடியாமல் அவனின் நிலையை விளக்க முயன்றான்.
"ம்ச் சக்தி... நீ சிவாகூடவே வயித்துல இருக்கும்போதுல இருந்து கூடவே இருக்க... நீயே ஏத்துக்கிட்ட... அவன் யாரு... ஐஸ்ட் அத்தை பையன் தான... ஏன் இப்படி சைக்கோ மாதிரி நடந்துக்கறான். சரி இத்தனை வருஷமா கூட இருந்தேன்னு சொல்லரான் இல்ல... அப்பவே வீட்டுல பேசி அவளை கல்யாணம் பண்ணி இருக்கலாம். இல்லன்னா சிவாட்ட லவ்வ சொல்லி இருக்கலாம் இல்ல... நான் இடையில வர வரைக்கும் என்ன கிழிச்சிட்டு இருந்தான்... ஏன் இப்ப வந்து உறவு கொண்டாடரான் ராஸ்கல்..." அர்ஜூன் சக்தியிடம் வெடித்து கொண்டு இருந்தான்.
"மாமா... சிவாக்கு லவ்லாம் சுத்தமா பிடிக்காது... பெத்து வளத்தவங்களுக்கு கல்யாணம் செய்துவைக்க தெரியாதான்னு எப்பவும் சொல்லுவா... அத்தான் லவ்வ சொல்லி இருந்தாலும் அவளுடைய பதில் 'நோ'வாதான் இருக்கும். இது அத்தானுக்கும் தெரியும். அதான் சிவாட்ட சொல்லாம விட்டு இருப்பாங்க... அதோடு வீட்டுல அவர் வந்து பேசி இருந்தாலும் பாட்டி அவங்கள சிவாக்கு மாப்பிள்ளையா ஏத்துக்க மாட்டாங்கன்னு அவருக்கு தெரியும்... பாட்டி என்கிட்ட ஒருதடவை சொன்னாங்க எக்காரணம் கொண்டும் நிரஞ்சன் இந்தவீட்டு மாப்பிள்ளையா வரகூடாதுன்னு. எங்க வீட்டுல பாட்டி சொல்வதுதான் வேதவாக்கு... அதான் இப்போ அவர் போனபிறகு பிரச்சினை பன்னராருன்னு நினைக்கிறேன்..." என்ற சக்தி அர்ஜூனின் முகத்தை பார்த்து கொண்டே நின்றான்.
"உங்க பாட்டி ஏன் நிரஞ்சன ஏத்துக்கமாட்டாங்க... நிரஞ்சனும் அவருடைய பேரன்தான... அப்புறம் எதுக்கு இந்த பார்ஷியாலிட்டி..."
"பாட்டிக்கு அத்தான பிடிக்கும் தான் மாமா... ஆனா அவரை ஏன் சிவரஞ்சனிக்கு கட்டிவைக்க கூடாதுன்னு சொன்னாங்கன்னு எனக்கு தெரியலை..."
"ம்... சோ நெக்ஸ்ட்..." சக்தியிடமே என்ன செய்வது என்று கேட்டவனிடம்,
"சிவாட்ட நிரஞ்சன் பத்தி சொல்லலாம். அப்போதுதான் உங்களுக்குள்ள எந்த மிஸ்அண்டர்ஸ்டான்டிங்கும் வராமல் இருக்கும்..‌. உங்கள ஏதேதோ ஃபோட்டோ காட்டி குழப்பன மாதிரி சிவாவ குழப்ப அவருக்கு நிறையா நேரம் ஆகாது..." சக்தி கூறியதும் அர்ஜூனுக்கு நல்லதாகவே பட்டது.
"ம் ஓகோ... நான் நிரஞ்சன பத்தி சொன்னா நம்புவாளோ மாட்டாளோ தெரியல... சோ நீயே அவகிட்ட சொல்லு சக்தி..."
"சரி மாமா..."
"சக்தி... நீ என்மேல செம கோபமா இருக்கேன்னு எனக்கு தெரியும். பட் நீ என்னுடைய சுச்சுவேஷனயும் புரிஞ்சிக்கோடா... நான் அர்ச்சனாவ அப்படி இரத்த வெள்ளத்தில் பார்த்ததும் ரொம்ப அப்சட்டாகிட்டேன். என்னால யோசிக்கவே முடியல... அதான் அப்படி நடந்துகிட்டேன்... சாரி..." அர்ஜூன் உண்மையில் மனம் வருந்தி மன்னிப்பு வேண்டினான்.
"புரியுது மாமா... நீங்க தான் அப்பவே மன்னிப்பு கேட்டுடீங்களே... எனக்கு உங்க மேல எந்த வருத்தமும் இல்லை..."
"அப்புறம் ஏன் என்கூட முன்மாதிரி பேசமாட்டிங்குற..." அர்ஜூன் கேட்க, உங்களிடமே எப்படி சொல்லமுடியும் என நினைத்தவன்,
"அது எனக்கே தெரியவில்லை மாமா... என்னால இப்பல்லாம் உங்ககிட்ட மட்டும் இல்ல, யார்கிட்டேயும் பேசவிருப்பம் இருக்கமாட்டிங்குது. பேசனுமேன்னு எல்லார்கிட்டயும் பேசிட்டு இருக்கேன். மே பி எக்ஸாம் டென்ஷனா இருக்கலாம். பிஜி நீட் எக்ஸாம் வரப்போகுது. ரொம்ப நாளா கோச்சிங் கிளாஸ் கூட போகல... அதான் டென்ஷனா இருக்கு போல..." என்றவன் கைகளை விரித்து தோலை குலுக்கிக் கொண்டான்.
சிறிதுநேரம் அப்படியே பேசிக்கொண்டு இருந்தவர்கள் நேரம் ஆகியதை உணர்ந்து அங்கிருந்து கிளம்பினர்.
*******
மாடியில் இருந்து அறைக்கு வந்த சக்தி தலையை பிடித்து கொண்டு அமர்ந்துவிட்டான். நிரஞ்சன் இவ்வளவு கீழ்தரமான இறங்குவான் என்று சக்தி சற்றும் எதிர்பார்க்கவில்லை. அர்ஜூனை அமைதி படுத்த நிரஞ்சனின் நிலையையும் எடுத்துரைத்துவிட்டு வந்துவிட்டான். ஆனால் தற்போது அவனுக்கு குழப்பமாக இருந்தது.
சிவரஞ்சனியின் திருமணம் முடிந்த பிறகும் இப்படி காதல் என்று சுற்றுவான் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதுவும் அர்ஜூனிடமே நேரடியாக வந்து சிவரஞ்சனியை அடைந்தே தீருவேன் என சவால் விடுவான் என்பதை சக்தி எதிர்பார்க்கவில்லை.
ஏற்கனவே அர்ச்சனா எப்படி இருக்கிறாளோ... என்ற யோசனையிலேயே மனதை வருத்திக் கொண்டு இருந்த சக்தி, இப்போது சிவாவிற்கு என்ன பிரச்சினை காத்துக்கொண்டு இருக்கிறதோ என்று கவலை கொண்டான்.

*******
நிரஞ்சனை மனதில் தோன்றிய கெட்டவார்த்தைகளால் மனதுக்குள் திட்டியபடியே அறைக்கு வந்த அர்ஜூன், நல்ல நித்திரையில் மூழ்கி இருந்த சிவரஞ்சனியை கண்டான். தன் தூக்கத்தை தூர விரட்டியவள் நன்றாக உறங்குவதை கண்டு அவளின் தூக்கத்தை கெடுக்க விரும்பி அவள் அருகில் சென்று படுத்துக் கொண்டு அவளை பின்னால் இருந்து இறுக்கி அணைத்து கொண்டான்.
தன் இடையில் யாருடைய ஸ்பரிசத்தையோ உணர்ந்தவளின் பெண்மை எச்சரிக்க பதறியடித்து கொண்டு எழுந்தவள் பிறகு அர்ஜூன் தான் தன் அருகில் இருக்கிறான் என உணர்ந்து "நீங்களா... ஒரு நிமிஷம் பயந்துட்டேன்..." என்றவள், விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.
அவள் எதுவும் சொல்லாமல் திரும்ப படுத்து நன்றாக உறங்கியதை கண்டவன் மானசீகமாக தலையில் அடித்து கொண்டு "ரஞ்சி... தண்ணீர் இல்ல பாரு... எடுத்துட்டு வா... ஃபாஸ்ட்... ஃபாஸ்ட்..." என்று அவளை உலுக்க "அஜூ... ப்ளீஸ்டா... லேண்ட்லைன்ல இருந்து 45க்கு கால்பண்ணா கிச்சன்ல இருந்து யாராவது எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க..". என்றவள் இடைவரை போர்த்தி இருந்த போர்வையை இழுத்து தலைவரை மூடினாள்.
"என்ன 'டா'வா..." என்றவன் அவள் போர்த்தியிருந்த பெட்சீட்டை முழுவதுமாக இழுத்து தரையில் போட்டவன் சிவரஞ்சனியின் பயந்த முகத்தை பார்த்து, 'புன்னகை வரப்போகிறேன்' என்று தோன்ற, அதை இழுத்து பிடித்து வாய்க்குள்ளேயே நிறுத்தினான்.
"பசங்க எல்லாரும் பாசமா ' டா' 'பா' லாம் போட்டு பேசுவீங்க இல்ல... அந்த 'டா' இது..."
" சரி என்னவோ போ... என்ன உனக்கு அதுக்குள்ளே தூக்கம்... நேத்து பஸ்ட் நைட் நடந்துச்சி இல்ல... இன்னைக்கு நமக்கு செசன்ட் நைட்..." என்று கூற, சிவரஞ்சனியின் முகம் பேயரைந்தார் போல் ஆகியது. அதையெல்லாம் பார்த்தும் பார்க்காதது போல் இருந்தவன் மலங்க மலங்க விழித்துக்கொண்டு இருந்தவளை இறுக்கமாக அணைத்திருந்தான்.
சிறிது நேரத்தில் அர்ஜூனின் கைகள் அவள் முதுகில் கோலம் போட துவங்க, அதுவரை என்ன நடக்கிறது என்று புரியாமல் இருந்தவளின் பெண்மை முழித்துக்கொள்ள, திமிறிக்கொண்டு அவனை விளக்கியவள் அனிச்சை செயலாக அவனை அறைய கையை ஓங்கினாள்.
அதை எதிர்பார்த்தார் போல் அர்ஜூன் அவளின் கையை பிடித்து தடுத்து அதை வளைத்து அவளின் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்றவன், மற்றொரு கையால் அவள் அணிந்திருந்த தாலியை தூக்கிக் காட்டி "இதை நான்தான கட்டினேன்... அப்புறம் எதுக்கு என்ன அடிக்க வர..." என்று கேட்க உண்மையை கூறிவிடுவதே நல்லது என்று அன்று நடந்ததை விளக்கினாள்.
"என் மானம்னு நான் சொன்னது என்னுடைய தன்மானத்தை... நீங்க கண்ட கண்ட படத்தை பார்த்துட்டு வந்துட்டு என்னென்னமோ கற்பனை பன்னிகிட்டீங்க... உங்க முகத்துல வேற தப்புபண்ணிட்டோமேன்னு ஒரு திகில் தெரிஞ்சது. அதான் நான் அதை அப்படியே மெயின்டெய்ன் பன்னிக்கிட்டேன்... அவ்வளவு தான்..." என்று அசால்ட்டாக தோலை குலுக்கிக்கொண்டாள்.
"அடிப்பாவி... உன்ன அமைதியான பொண்ணுன்னு நினச்சா நீ என்னம்மா தில்லாலங்கடி வேலை பன்னற..." என்றவன் கதவு தட்டப்படும் ஓசைக்கேட்டு கதவை திறக்கச்சென்றான்.‌ அங்கு நின்றிருந்த லிங்கத்தையும் ஸ்ரீதரையும் பார்க்க இவனுக்கு குழப்பமாக இருந்தது.
"மாப்பிள்ளை... படுத்துட்டீங்களா...‌" லிங்கம் தான் தன்மையாக கேட்டார்.
"ஆமாம் மாமா... ட்ராவல் பன்ன டயர்ட்..." என்று கூற அப்போது அங்கே வந்த சிவரஞ்சனி தனது தந்தை அறைக்கே வந்து இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தாள். ஏனெனில் அவர் பெரும்பாலும் மேலே உள்ள அறைகளுக்கு வரமாட்டார் என்பதால்.
"அப்பா... என்ன ஆச்சு..." என்று கேட்க, ஸ்ரீதர் அவளிடம் "சிவா நம்ம சித்து சும்மா அழுதுட்டே இருக்கான். என்னால தூங்க முடியல. டென்த் பப்ளிக் எக்ஸாம் விஷயமா அலைஞ்சதுல நான் ஆல்ரெடி ஒழுங்கா தூங்கி ஒருவாரம் ஆகுது. நாளைக்கு வேற நிறையா வேலையிருக்கு... சுசியும் ரொம்ப சோர்ந்து போயிட்டா... அம்மாவும் டேப்ளட் போட்டுட்டு படுத்துட்டாங்க..." அவன் தயங்கி தயங்கி கூறிக்கொண்டே செல்ல அவனை இடையில் நிறுத்தியவள்,
"அண்ணா... நீங்க கவலையே படாதீங்க... நான் சித்துவ பார்த்துக்கறேன்...." என்றவள் அர்ஜூனிடம் கண்ணாலேயே விடைபெற்று சென்றாள்.
"சரிப்பா... நான் இங்க படுத்துக்கறேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க..." என்று ஸ்ரீதர் லிங்கத்தை அனுப்பி வைத்துவிட்டு, சிவரஞ்சனியின் அறைக்குள் புகுந்து கொள்ள, அவனின் பின்னாலேயே வந்த அர்ஜுன் "மச்சான் நீ என்ன கே.ஜி ஸ்டூடண்டா... இதுக்குலாம் அப்பாவ கூட்டிட்டு வர..." என்றவன் வெடித்து சிரிக்க,
"அர்ஜூன்... இங்க அவ்வளவு பெரிய காமெடிலாம் நடக்கல... நாங்க வந்த விஷயமே வேற. நாளைக்கு வீட்டுல பூஜை இருக்கிறதால கணவன் மனைவி கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டன் பன்னனுமாம். அதுக்காக உன்கிட்ட சொல்ல வந்தாரு. ஆனா தயக்கமா இருந்தது போல... அதான் இப்படி சொல்லி சிவாவ அனுப்பனேன்...." என்றவன் சிறிது இடைவெளி விட்டு "அர்ஜூன் நான் ஒன்று கேட்பேன். உண்மையான பதில் சொல்லனும். சிவா இங்கு வந்ததில் இருந்து எப்பயாவது அழுதாளா?..." என்று கேட்க அர்ஜூன் இல்லை என்று தலையாட்டினான்.
'எங்க பொண்ண எப்படி கண்கலங்காம வளர்த்து இருக்கோம் பாருன்னு சொல்லவரானா...' என நினைத்த அர்ஜூன் அமைதியாக ஸ்ரீதரை பார்க்க, ஏதோ யோசிப்பது போல் தாடையை தடவிக்கொண்டு இருந்தான் ஸ்ரீதர்.
"ஏன் அழுகை வரல..." என வாய்விட்டே கேட்ட ஸ்ரீதரை ஒரு மார்க்கமாக பார்த்தான் அர்ஜூன்.
"என் தங்கச்சி ஏன் அழுவலன்னு தங்கச்சி புருஷன் கிட்டயே கேட்ட முதல் ஆளு நீதான்... அழுதா எதுக்கு அழுதான்னு என்கிட்ட கேட்கலாம்... ஏன் என்கூட சண்டை கூட போடலாம்... நீ ஏன் இப்படி வித்தியாசமான கேள்வி கேட்கிற..." - அர்ஜூன்.
"இல்ல... அவளுக்கு பாட்டியோட நினைப்பு சுத்தமா இல்ல போல அர்ஜூன்... இப்போ தான் சந்தோஷமா இருக்கு... எல்லாம் உன்னாலதான் அர்ஜூன். ரொம்ப தேங்க்ஸ்... அவ ரொம்ப அழுவாளோன்னு கவலை பட்டுட்டு இருந்தோம். இப்போதான் நிம்மதியா இருக்கு... சரி நான் சக்தி ரூம்ல போய் படுத்துக்கறேன். நீ ஃப்ரீயா படு..." என்றவன் சிவரஞ்சனி போய்விட்டாளா என எட்டிப்பார்க்க சிவரஞ்சனி இல்லை. மாறாக சக்தி ஏதோ ஒரு புத்தகத்தை புரட்டிக்கொண்டே மாடிப்படியில் ஏறிக்கொண்டு இருந்தான்.
"இவன் இந்த நேரத்துல ஏன் மாடிக்கு போறான்னு தெரியலையே.... சரி அர்ஜூன் நீ ரெஸ்ட் எடு. ட்ராவல்னால டயர்டா இருப்ப..."
"இல்ல ஸ்ரீ... பரவாயில்லை. இந்த சக்தி தான் எக்ஸாம நினச்சு ரொம்ப கவலைபடரான் போல..."
"சக்திக்கு எக்ஸாம் பயமா... நீ வேற அர்ஜூன். எப்போ நீட் வரும்... எப்போ நான் பி.ஜி முடிச்சு... எப்போ நான் சர்ஜரி செய்ய ஆரம்பிச்சு... எப்போ ஆயிரம் பேர் கொன்னு அரை டாக்டர் ஆகி... எப்போ சிவாவோட மண்டையில இருக்கிற களிமண்ண ஆப்ரேஷன் பன்னி வெளியே எடுப்பேனோன்னு நினைச்சுட்டு இருக்கான். அவனுக்கு பயம்னு சொல்லற... நீ வேணா பாரேன். அவன் கைல இருக்கிறது கண்டிப்பா எதாவது நாவலாதான் இருக்கும்..." ஸ்ரீதர் கூறிய விதத்தில் அழகாக சிரித்தவனின் மனதில் சக்தி கையில் என்ன புத்தகம் உள்ளது என பார்க்க ஆவலாக இருந்தது அர்ஜூனுக்கு.
"அப்படியா... சரி வா என்னதான் பன்னறான்னு பாக்கலாம்..." என்றவன் சக்தியை பின்தொடர்ந்தனர்.‌
மொட்டை மாடியில் இருந்த ஒரு அறைக்கு சென்ற சக்தி, அங்கேயிருந்து ஒரு கித்தாரை எடுத்து வந்து தண்ணீர் தொட்டியின் மேல் ஏறி அமர்ந்து, கையில் கொண்டு வந்த அந்த புத்தகத்தை பார்த்து பார்த்து கித்தாரை வாசிக்கத்துவங்கினான்.
அதைக்கண்ட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு, பின்பு பூனைப்போல் அவனின் பின்னால் சென்று பே... என்று பயம்புறுத்த, அடித்து பிடித்து கொண்டு எழுந்தவன் கையை நெஞ்சில் வைத்தபடி இருவரையும் பார்க்க, இருவரும் ஐ-பை போட்டு கொண்டனர்.
"நாளைக்கு பூஜைய வச்சிட்டு இந்த நேரத்துல இங்க என்னடா பன்னற..." என்று ஸ்ரீதர் கேட்க, அந்த நேரத்தில் கித்தாரை கையில் எடுத்த அர்ஜூன், ஸ்ரீதர் கேட்ட கேள்விக்கு பின்னணி இசையை உருக்கும் பொருட்டு அதன் நரம்புகளை வேகமாக ஒருமுறை மீட்டினான்.
"தூக்கம் வரல ஸ்ரீ... அதான் சும்மா..." சக்தி இழுத்தபடி கூறி முடிக்கவும், அர்ஜூன் மீண்டும் பின்னணி இசையாக நரம்புகளை வேகமாக மறுமுறை மீட்டவும் சரியாக இருந்தது.
இருவரும் ஒருசேர அர்ஜூனை பார்க்க டொய்ங்...டொய்ங்... என அதை மீண்டும் மீட்டிக் கொண்டு இருந்தான்.
"மாமா... உங்களுக்கு கித்தார் ப்ளே பன்ன தெரியுமா..."
"கொஞ்சம் கொஞ்சம் சக்தி... நாம ஸ்கூல் படிக்கும் போது மியூசிக் சார் இருந்தாரு இல்ல... அவரும் நானும் ரொம்ப க்ளோஸ். அவருதான் கொஞ்சம் கொஞ்சம் சொல்லி கொடுத்தாரு. நான் காலேஜ்ல ஸ்டேஜ் பர்பாமஸ் கூட பன்னியிருக்கேன்..." என்றவன் கல்லூரியில் வாசித்த 'ராஜராஜ சோழன் நான்...' என்ற பாடலுக்கான பின்னனி இசையை மட்டும் அழகாக வாசித்து காட்டினான்.
"சூப்பர்... சிவாக்கு ராஜா சார் சாங்ஸ் எல்லாமே பிடிக்கும். அவளுக்காக எதாவது வாசி அர்ஜூன்..." என்று கேட்ட ஸ்ரீதரிடம் சரி என தலையாட்டியவன் 'என்ன பாடலாம்' என வானத்தை பார்த்து யோசிக்க, அவனுக்கு அந்த பாடல் பளிச்சிட்டது.

மாலை என் வேதனை கூட்டுதடி...
காதல் தன் வேலையை காட்டுதடி...
என்னை வாட்டும் வேலை ஏனடி...
நீ சொல்வாய் கண்மணி....
முகம் காட்டு எந்தன் பௌர்ணமி...
என் காதல் வீணை நீ...
வேதனை சொல்லிடும் ராகத்திலே...
வேகுதே என் மனம் மோகத்திலே...
அர்ஜூன் தன்னை மறந்து, இரசித்து வாசித்ததோடு, மெல்லிய குரலில் அழகாக பாடிய விதத்தில், சக்தியும் ஸ்ரீதரும் முதலில் மெய்மறந்து பார்த்து கொண்டு இருந்தவர்கள் பிறகு அவன் எதற்கு இந்த பாடலை தேர்வு செய்தான் என தெரிந்து அவனை ஓட்ட ஆரம்பித்தனர். உண்மையில் அர்ஜூன், பூஜை புனஸ்காரம் என்று கூறி வீட்டினர் தன்னிடம் இருந்து சிவரஞ்சனியை பிரித்ததால் தான், தன் மனதின் வெளிப்பாடாக இந்த பாடலை தேர்ந்தெடுத்தான்.
"பாட்ட நல்லா பாடனனா... அதோட விட்டுடனும்... எதுக்காக இந்த பாட்டு பாடனேன்னுலாம் ஆராய கூடாது... சரியா..." என்றவனை இருவரும் விடவே இல்லை. அதிகம் பேசாத ஸ்ரீதர் கூட அர்ஜூனை பயங்கரமாக ஓட்டினான்.
"ஸ்ரீதர் நீ அண்ணிய இந்த மாதிரி கீபோர்ட் வாசிக்கிறேன் பாட்டு பாடறேன்னுதான கரெக்ட் பண்ண... அப்புறம் எதுக்கு மாமாவ கிண்டல் பன்னற..." சக்தி ஸ்ரீதரின் காலை வார, அர்ஜூனும் அவனுடன் சேர்ந்து கொண்டான். அப்படியே அவர்களின் பேச்சு ஸ்ரீதர், சூசனின் காதல் விவகாரம் பற்றி திசைத்திரும்பியது.
-தொடரும்.
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 19
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN