அத்தியாயம் 24

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அந்த அலுமினிய வானூர்தி காற்றை கிழித்து கொண்டு வானில் பறந்து கொண்டு இருந்தது. கையில் சாம்சங் நோட்டும், காதில் ப்ளூடூத் ஹெட்செடுமாக அமர்ந்து, கார் ரேசில் மிகவும் ஆர்வமாக பங்கெடுத்து கொண்டு இருந்தான் 'அவன்'...
இரண்டு கார்களை முந்தி மூன்றாவது காரை முந்தும் முன், முன்னால் சென்றவன் ‌சட்டென்று இடப்புறம் சற்று திரும்பியதால், அதில் இடித்து அவனின் கார் இரு சுற்று சுற்றி, கரப்பான் பூச்சி போன்று கவிழ்ந்து விழுந்தது.
திரையில் மின்னிய "கேம் ஓவர்..." என்ற செய்தியை படித்தவன் "ச்ச... அவசரபட்டுட்டியே ஆதி..." என்றவாறு அவ்வளவு நேரம் போனில் மூழ்கியவன் நிமிர்ந்து பார்க்க, அவனின் அருகில் அர்ஜூன் அமர்ந்து இருப்பதை கண்டு இன்பமாக அதிர்ந்தான் ஆதித்யா...
'அவளுக்கு இன்னும் பதினெட்டு வயது கூட ஆகவில்லை. அதற்குள் என்ன காதல்.... கல்லறைக்கு போக...' என மனதில் அர்ச்சனாவை வருத்துக்கொண்டு இருந்த அர்ஜூன் "அர்ஜூன்..." என்ற அழைப்பில் தன்னிலை அடைந்தான்.
இதே பழைய தோழன் அர்ஜூனாக இருந்திருந்தால் "ஹே அர்ஜூன் நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா...?" என்று கேட்டு இருப்பான் ஆதி. அவர்களுக்குள் ஏற்பட்ட சிறு சண்டை, அதை தொடர்ந்து வந்த பிரிவினை ஆதியை கொஞ்சம் அடக்கியே வாசிக்க வைத்தது.
"ஆதி...?"
"எஸ்... நானேதான்... உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷம்... வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க..." ஆதி.
"ம்... நல்லா இருக்காங்க... உங்க வீட்டுல எல்லாரும் நலமா... நீ என்ன கோவை ஃப்ளைட்ல... எங்க இருக்க... என்ன பண்ணற..." அடுத்தடுத்த கேள்விகளை வைத்தான் அர்ஜூன்.
"வீட்டுல எல்லாரும் நலம். பெங்களூர்க்கு ஒரு கான்பிரஸ்காக வந்தோம். இப்போ கோயமுத்தூர்ல பாட்டி வீட்டுக்கு போறோம்.... நீ...?" என்றான். அவன் பன்மையில் பேசுவதை அர்ஜூன் கவனிக்கவில்லை.
"என்னுடைய தங்கச்சிக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம். அதான் பெங்களூர் வந்தோம். நாளைக்கு கோயம்புத்தூர் பக்கத்துல ஒரு ஊர்ல என்னுடைய மச்சான்க்கு எங்கேஜ்மன்ட். அதுக்கு ஸ்ரைட்டா போறோம்..."
"ம்... சரி சரி..." என்றவன் 'அடுத்து என்ன பேசுவது... இதற்கு மேல் பேசலாமா வேண்டாமா...' என்று அமைதியாகிட சில நிமிடங்கள் அங்கே மௌனம் நீடித்தது. திடீரென நினைவு வர பெற்றவனாக ஆதி அர்ஜூனிடம் "மச்சானா...?" என்றான் கேள்வியாக.
"ம்... ஏன்?"
"மச்சான்னா... எப்படி சொந்தம்...?"
"என்னுடைய ஒய்ஃபோட ப்ரதர்..."
"ஓ... ஸ்ரீ-க்கா...?" என்று ஆதி கேட்க, அவன் ஸ்ரீதரை கூறுகிறான் என்று எண்ணிய அர்ஜூன் "நோ... நோ... சக்திக்கு..." என்றான்.
"சக்தியா...? சுபத்ராக்கு சக்தின்னு ப்ரதரா...? கசின் ப்ரதரா?" என்றான். இப்போதுதான் அர்ஜூனுக்கு, ஸ்ரீக்கு நிச்சயதார்த்தமா என்ற ஆதியின் கேள்வி புரிந்தது. அர்ஜூனின் முன்னாள் காதலி சுபத்தாவின் தம்பி பெயர் ஸ்ரீராம்.
"நோ ஆதி... எங்களுக்குள்ள ப்ரேக்கப் ஆகிடுச்சி. நான் வேற ஒரு பொண்ணை கல்யாணம் பன்னிகிட்டேன். அதோ... அங்க அர்ச்சனா பக்கத்துல இருக்காலே ரெட் டாப்... அவதான். சிவரஞ்சினி..." என்று கைகாட்டிய திசையில் பார்த்த ஆதி அவளை சட்டென்று கண்டுகொண்டான்.
"டிக்- டாக் பன்னுவாங்களே... அவங்க தான? சிவா..." என்று கேட்க, அர்ஜூனுக்கு தான் அவளின் டிக்- டாக் பற்றி தெரியவில்லை.
அவன் முழிப்பதை பார்த்து விட்டு ஆதியே தொடர்ந்தான். "என்னுடைய தங்கச்சி திவ்யா இருக்கா இல்ல... அவ சரியான டிக்டாக் பைத்தியம். இப்போ டிக்டாக்க பேன் பன்னதால கொஞ்சம் பைத்தியம் தெளிஞ்சு இருக்கா... உன்னுடைய ஒய்ஃபோட டிக்டாக் பார்த்துட்டு அதுபோல செய்யனும்னு உயிர வாங்குவா..." என்றவன் அவன் போனில் அவனின் சகோதரி திவ்யா, சிவரஞ்சனியுடன் செய்த டூயட்களை போட்டு காண்பித்தான்.
அதை பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. பல கேள்விகளுக்கு விடை கிடைத்தாற் போன்று இருந்தது அர்ஜூனுக்கு.
"இதுமட்டும் தான் என்ட்ட இருக்கு..." என்றவனுக்கு நன்றியுள்ள பார்வையை பார்த்தவன், ஒரு குறிப்பிட்ட வீடியோவை மட்டும் திரும்ப திரும்ப பார்த்தான்.
அதில் கேமராவை திருப்பி நிரஞ்சன் தன் முகத்தை காண்பித்து விட்டு, கையில் கொஞ்சம் குங்குமத்தை எடுத்து கொண்டு, பிறகு சிவரஞ்சனியிடம் சென்று அதை அவளின் நெற்றியில் இட, அவளின் பின்னால் இருந்து வந்த சக்தி, அவளின் இடையில் கையை கொடுத்து மேலே தூக்க, டிக்டாக் செயலியில் சிம்பா... என்ற ஒலி எழுப்பப்பட்டது. அருகில் இருந்த டூயட்டில் அதே போன்று திவ்யாவும் ஆதியும் அவன் தம்பி அகிலும் செய்து கொண்டு இருந்தனர்.
அதை திரும்ப திரும்ப போட்டு பார்த்தவன் அப்போதுதான் கவனித்தான் சிவரஞ்சனி, நிரஞ்சன் குங்குமத்தை நெற்றியில் பூச வருவது தெரியாமல் தலை குனிந்ததால் தான் அது நெற்றி வகிட்டில் வைத்து இருக்கிறான் என்று.
அடுத்த வீடியோவை பார்க்க அதில் நிரஞ்சனுடன் சேர்ந்து சிவரஞ்சனி வா வா டியரு ப்ரதரு... என்ற பாடலுக்கு நடனம் ஆடி இருந்தாள். இருவரும் அண்ணன் தங்கை போல் தான் ஆடி இருந்தனர்.
நிரஞ்சன் ஒருமுறை அவனிடம் காண்பித்த அனைத்து வீடியோக்களிலும் சத்தம் கட் செய்ய பட்டு இருந்தது. ஒலி இல்லாமல் பார்க்கும் போது தவறாக தெரிந்தது எல்லாம் தற்போது சரியாக தெரிந்தது. நிரஞ்சன் ஏன் தங்கை போல் பழகும் ஒருத்தியின் நடத்தையை பற்றி தவறாக கூறினான் என்று அர்ஜூனுக்கு புரியவில்லை.
ஆதியின் போனை அவனிடம் திருப்பி கொடுத்தவன் நிரஞ்சனை பற்றி மூச்சு விடவில்லை.
"அர்ஜூன்... நான் ஒன்னு சொன்னா தப்பா நினச்சுக்காத... கோவப்படாத... மும்பை உனக்கு மாமியார் வீடா அமையாதது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு..." என்ற ஆதி மனம் நிறைந்த புன்னகையை செலுத்த அவனுக்கு பதிலாக ஒரு மெல்லிய புன்னகையை பதிலாக அளித்த அர்ஜூன்,
"சுபத்ராக்கு வேற ஒருத்தன் கூட தொடர்பு இருந்துச்சு... நானே அவளை எப்படி கழட்டி விடறதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன். அப்போ அவளே வந்து உனக்கு குழந்தை பெத்துக்குற தகுதியே இல்லை... நீ ஆம்பிளையே இல்லை... அப்படின்னு என்னென்னவோ பேசனா... நான் அதுனால என்னன்னு குழந்தை தான் பிரச்சினைனா தத்தெடுத்துக்கலாம்னு பேசனேன்.... அவ செக்ஸ் தான் வாழ்க்கைங்குற மாதிரி பேசனா... சோ ஹாஸ்பிடல் போய்ட்டு‌ டெஸ்ட் எடுத்து எனக்கு எந்த பிரச்சனையும் இல்லைன்னு ரிசல்ட்டை வந்ததும் நேர அவ மூஞ்சுல ரிப்போர்ட்ட தூக்கி வீசிட்டு, அவளுக்கும் அந்த நாட்டுக்கும் ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டு வந்துட்டேன்..."
"அர்ஜூன்... உனக்கு அவ மேல லவ்வே இல்லை தேரியுமா... அவளுடைய நேம் மேல்தான் உனக்கு லவ்... அர்ஜூனுக்கு ஏத்த சுபத்ரான்னு நினச்சு ஏமாந்துட்ட..." என்று சிரிக்க, அர்ஜூனும் உண்மைதான் என்று கூறி சிரித்தான்.
"இப்போ கல்யாணம் முடிஞ்சு எத்தனை நாள் ஆகுது..."
"நான்கு மாசம் ஓடிபோச்சு... சரி உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா..."
"எனக்கு கல்யாணம் ஆகி ஐந்து வருஷம் ஆகிடுச்சி..."
"ஐந்து வருஷமா... நம்பவே முடியல..."

"நம்பித்தான் ஆகனும்... என் பையன் ஸ்கூலுக்குப் போகவே ஆரம்பிச்சுட்டான்..."
"என்ன... டேய் என்னடா சொல்லர... லவ் மேரேஜா அரேஜ்ஜா..."
"எனக்கு லவ்... அவளுக்கு அரேஞ்ச்..." என்றவன் அவர்களது காதல் கதையை கூறினான். இப்படியே நேரம் செல்ல ஜன்னல் சீட்டில் இவ்வளவு நேரம் போர்வையால் முகத்தை மூடி தூங்கிக்கொண்டு இருந்த ஒரு பெண், போர்வையை விலக்கிவிட்டு, ஆதியின் தோல்மேல் சாய்ந்து, "எனக்கு வாமிட் வரமாதிரி இருக்கு..." என்று கூற ரெஸ்ட் ரூம் போகலாமா என்று ஆதியின் கேள்விக்கு அவள் தலையாட்டினாள்.
"அர்ஜூன் கொஞ்சம் எழுந்துக்கோ..." என்ற ஆதி அவன் எழுந்ததும் அப்பெண்ணையும் பிடித்து எழ வைத்தான். அப்போதுதான் அர்ஜூன் அவளின் நிறைமாத வயிற்றை கவனித்தான். அவர்கள் இருவரும் கழிவறை சென்றுவிட்டு, திரும்பிவந்து அவள் திரும்ப ஆதியின் தோல்மேல் சாய்ந்து, விட்ட தூக்கத்தை தொடர்ந்தாள்.
"உன்னுடைய ஒய்ஃப்பா...?" என்ற அர்ஜூனின் கேள்விக்கு ஆம் என தலையாட்டிய ஆதி‌யிடம், "எதுக்கு ப்ரெக்னன்டா இருக்கும் போது அவங்கள டிராவல் பன்ன வைக்கிற..." என்று கேட்க
"டேய்... நான் கால்லயே விழுந்துட்டேன்... என் கூட வராத... நானே சமாளிச்சுக்கிறேன்னு... கேட்டா தான... ஆனா பாரதி வந்ததால தான் இந்த ப்ராஜெக்ட் ஈசியா கிடைச்சது... நான் மட்டும் போய் இருந்தா சிரம பட்டு இருப்பேன்..." என்று மனைவியின் புராணம் பாடியவன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து "ஐ லவ் யூடி..." என்று கூற பாரதி கண்களை திறக்காமல் "லூசு..." என்று மட்டும் கூறினாள்.
"சண்டாளி... அரை போதையில கூட டயலாக்க மாத்தமாட்டிங்குறா... கல் நெஞ்சக்காரி... இதுவரைக்கும் ஒருதடவை கூட இவ எனக்கு ஐ லவ் யூன்னு சொன்னது கிடையாது தெரியுமா..." ஆதி வருத்தமாக கூற,
"அவங்களுடைய லவ் அந்த ஒரு வாக்கியத்துல அடக்கமுடியாதோ என்னவோ..." என்று அர்ஜூன் கூற "ஐயோ.... கடவுளே.... செம்ம போ..." என்று ஆதி சிரித்தான்.
"உன் ஒய்ஃப் மேல செம லவ் போல..." என்று ஆதி கேட்க "அப்படியா தெரியுது..." என்று அர்ஜூன் கேட்க, அவர்களின் பேச்சு அவர்களின் கல்லூரி அதற்கு பிறகான வாழ்க்கை என்று நீண்டுகொண்டே சென்றது.
விமானம், கோவை விமான நிலையத்தில் தரையிரங்கியதும் ஆதி பாரதிக்கு, அர்ஜூனையும் சிவரஞ்சனி மற்றும் அர்ச்சனாவையும் பற்றி அறிமுகம் செய்து வைத்தான். பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு அனைவரும் வீட்டிற்கு புறப்பட்டனர்.
அர்ஜூன் சிவரஞ்சனி மற்றும் அர்ச்சனாவை அழைத்துச் செல்ல ஸ்ரீதர் வந்திருந்தான். அனைவரும் வீட்டை அடைய இரவு ஆகி இருந்தது. அனைவரும் பேசிவிட்டு, சாப்பிட வெகுநேரம் ஆக, அர்ச்சனா உடல் அசதியாக இருக்கிறது என்று படுக்க சென்றுவிட்டாள். அவ்வளவு நேரம் அவள் இருக்கும் இடத்தின் பக்கம் கூட திரும்பாமல் இருந்த சக்திக்கு இப்போதுதான் சரியாக மூச்சே விட முடிந்தது.
விமானத்தை விட்டு இறங்கியதில் இருந்து அர்ஜூனுக்கு ஓர் எண்ணில் இருந்து அழைப்பு வந்துக் கொண்டே இருந்தது. அதை அலுவலக கால் என்று நினைத்து கொண்டு, அழைப்பை புறக்கணித்துக் கொண்டே இருந்தான். வீட்டை அடைந்த பிறகும் அந்த அழைப்பு வந்து கொண்டே இருக்க, எடுத்து பேசியவன் முறுமுனையில் கேட்ட சுபத்ரா என்ற பெயரால் ஸ்தம்பித்து நின்றான். 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 24
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN