அத்தியாயம் 26

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரவின் இருளை விரட்டும் விதமாக அந்த பெரிய வீட்டில் வண்ண விளக்குகள் மின்னின... எங்கும் பூக்களின் வாசம் நிறம்பியிருந்த அந்த அழகான வீட்டில், ஊசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அமைதி நீடித்து இருந்தது... அவள் கூறிய ஒற்றை வரியால்...
"இந்த நிச்சயதார்த்தம் நடக்காது..." உற்றார் உறவினர் சூழ, நிக்கிதாவின் விரலில் மோதிரத்தை அணிவிக்க வந்த சக்தியின் கையை தட்டிவிட்ட நிக்கிதா, அனைவர் முன்னிலையிலும் இதை அறிவிப்பாக கூறினாள்.
சிறிது நேரம் அங்கு அமைதி ஆட்கொண்டு இருக்க, மெல்ல அந்த அமைதி கலைந்து சிறு சலசலப்பு சத்தம் கேட்க ஆரம்பித்தது.
" நிக்கி... என்ன ஆச்சு..‌." அவளின் அன்னை அவளை பிடித்து தன்புறம் திருப்பி கேட்க, அவரின் கையை தட்டிவிட்டவள் "எல்லாரும் என்னை மன்னிச்சிடுங்க... எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் இல்லை..." என்றாள்.
"உன்ன கேட்டுட்டு தானடி இந்த கல்யாணத்தை முடிவு பன்னோம்... இப்ப என்ன இப்படி பேசற... ஒழுங்குமரியாதையா நான் சொல்றதை கேட்டு நடந்துக்கோ...." அவளின் அன்னை அவளிடம் கோபமாக கத்தினார்.
"இவன மாதிரி ஒரு பொம்பளை பொறுக்கிய என்னால கல்யாணம் செய்துக்க முடியாதும்மா... அவனுடைய அக்கா நாத்தனார் கிட்டயே இவ்வளவு ஆட்டம் ஆடரான்... மத்த பொண்ணுங்கள சும்மாவா விட்டு வச்சிருப்பான்...." என்று நிக்கியும் பதிலுக்கு கத்த,
இவ்வளவு நேரம் நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சக்தி, "ஏய் வெயிட் வெயிட்... என்ன சொன்ன... என்ன சொன்ன... நான் பொம்பளை பொறுக்கியா...? குட் ஜோக்..." என்றவள் அவளுக்கு மட்டும் கேட்குமாறு "அஸ்வின் நியாபகம் இருக்கா... சரி அவன் எதுக்கு... அது அறியாத வயசு... அவன விடு... ராபர்ட்ட மறந்து இருக்க மாட்டியே..." என்று அவன் புருவம் உயர்த்த, அவன் கூறியதை சற்றும் எதிர்பார்க்காத நிக்கி கூனிக் குறுகி போனாள்.
அஸ்வின் அவளின் பள்ளிப்பருவ காதலன். பள்ளி முடியும் போதே அவர்களின் காதல் கதையும் முடிவடைந்திருந்தது... ராபர்ட் அவளின் இந்நாள் காதலன்... அவன் மும்பையில் புகழ்பெற்ற மாடல்.
"ஆறு மாசமா நீங்க லிவ்விவ் ரிலேஷன்ஷிப்ல இருக்கீங்களாம்... என்ட்ட எப்பவும் ஏட்டிக்குப் போட்டியா நிக்கிறவ எதுக்கு கல்யாணத்துக்கு ஒத்துகிட்டான்னு அப்பவே எனக்கு டவுட் வந்துச்சு... அதான் டிகக்டிவ் மூலமா உன்ன கண்கானிச்சு எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டேன்...‌" என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறியவனை அதிர்ந்து பார்த்தாள்.
"உன் பேரை சபைல அசிங்கப் படுத்துறதுக்குள்ள கிளம்பு..." என்று சக்தி கூறியதும் தான் தாமதம், நிக்கி வேக எட்டுக்களை எடுத்து வைத்து அங்கிருந்து சென்றாள்.
அதற்குள் அங்கே சலசலப்பு அதிகமாகிட, சக்தியின் தந்தை முன்வந்து கைக்கூப்பி அனைவரிடமும் மன்னிப்பு வேண்ட, சக்திக்கு மனதிற்குள் எரிச்சல் மூண்டது. செய்யாத தவறுக்கு எதற்கு இவர் அனைவர் முன்னிலையிலும் கைக்கூப்பி மன்னிப்பு வேண்ட வேண்டும் என்று...
கையில் நிக்கிக்காக அணிவிக்க இருந்த மோதிரத்தை பார்த்தவன் கோபமாக அதை தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்றான். அந்த மோதிரம் நேராக உருண்டு வந்து அர்ஜூனின் காலடியில் விழ, அதை குணிந்து எடுத்தவன், அருகில் வீல் சேரில் அமர்ந்து இருந்த அர்ச்சனாவின் கையில் அதை திணித்து விட்டு, சக்தியை பின்தொடர்ந்தது சென்றான்.
அர்ச்சனாவுக்கும் தான் அர்ஜூனின் செய்கை புரியவில்லை. எதற்கு நம்மிடம் கொடுத்தார்... என் காதலுக்கு சம்மதம் சொல்கிறாரா... என குழம்பியவள் சிவரஞ்சனியைப் பார்க்க, அவளும் அர்ச்சனாவை தான் பார்த்து கொண்டு இருந்தாள்.
நேற்று இரவிலிருந்து அர்ஜூனின் போக்கே சரியில்லை என்று நினைத்தவளுக்கு மனம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. முதல் காரணம் சக்தியின் நிச்சயதார்த்தம் நின்றதால்... மற்றொன்று, இன்று முழுவதும் அர்ஜூன் அவளை நிழல் போல் பின்தொடர்ந்தது கொண்டு இருப்பதாலும் தான்...
ஆம்... இன்று முழுவதும் சிவரஞ்சனி எங்கு செல்கிறாளோ அங்குதான் சென்றான் அர்ஜூன். எங்கு நிற்பதானாலும் அமர்வதானாலும் சிவாவை ஒட்டி உரசியபடியே இருந்தான்... சுபத்ராவின் மீது புதிதாக ஏற்ப்பட்ட பயத்தினாள்...
சுபத்ரா அவ்விழாவிற்கு வந்திருந்தாள்... சிவரஞ்சனி எங்கு சென்றாலும் அவளின் பார்வை தொடர்ந்து கொண்டே இருந்தது. அவளிடம் பேச சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து கொண்டே இருந்தவள், அர்ஜூன் சக்தியை பின்தொடர்ந்தது சென்ற சமயத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டாள்.
**********
" ச்சே...நான் ஒரு மடச்சி... நீங்க என் பின்னாடியே சுத்தும் போதே புரிஞ்சுட்டு இருந்திருக்கனும்.... நீங்களும் என்ன லவ் பன்ன ஆரம்பிச்சுட்டீங்கன்னு ஏமாந்துட்டேன்... நான் சரியான பைத்தியம்..." சுபத்ரா என்ன கொளுத்தி போட்டாளோ, அர்ஜூனுக்கு தெரியவில்லை... வீட்டிற்கு வந்ததிலிருந்து சிவரஞ்சனி ஒரே அழுகை.
"ரஞ்சி... நான் உன்ன லவ் பன்னறேன் தான்டி..."
"கடவுளே..‌. வேணாம்பா... சந்தேக புத்தி இருக்குற உங்கக்கூட என்னால வாழ முடியாது... நாளைக்கு நமக்கு குழந்தை பிறந்த பிறகு, இந்த குழந்தைக்கு அப்பா யாருன்னு என்கிட்டயே கேட்பீங்க...."
"ஏய்... பைத்தியம் மாதிரி பேசாத... அப்போ உன்னபத்தி எனக்கு ஒன்னும் தெரியாது... அதான் சூடுகண்ட பூனை மாதிரி நிரஞ்சன் சொன்னதை நம்பிட்டேன்...‌ இப்ப என்ன... நான் தான் என்னுடைய தப்பை ஒத்துகிட்டேன் இல்ல... என்ன செய்யனுங்கிற..."
"நீங்க சந்தேகப்பட்டு, என்னை அடிமை மாதிரி நடத்துவீங்களாம்... எதுக்கெடுத்தாலும் என்ன இன்சல்ட் பன்னுவீங்களாம்... மட்டம் தட்டுவீங்களாம்... கோபப்படுவீங்களாம்... நீங்க சாரி கேட்டா நாங்க மாமான்னு ஓடி வரனுமாம்... இது நல்லா இருக்கே.... ஆம்பிளைங்கிற திமிரு..." கோபத்தில் முகம் சிவக்க கத்தினாள்.
"அப்படிலாம் இல்ல ரஞ்சி... நான் வேணும்னா உன் கால்ல விழவா..."
"தயவுசெய்து என்பக்கமே வராதீங்க... என்கூட தயவுசெய்து பேசாதீங்க..." என்றவள், விறுவிறுவென அறையை விட்டு வெளியேறினாள். இரவு பதினோரு மணி ஆனதால் அனைவரும் உறங்கியிருந்தனர்.
இரவு இருவரும் சாப்பிடாததாலும், அழுது அழுது களைத்திருந்ததாலும் சிவரஞ்சனிக்கு பசி எடுத்தது. அதனால் சமையலறைக்குள் புகுந்தாள். அவள் பின்னாலேயே வந்த அர்ஜூன் அவள் அடுப்பை பற்றவைத்து தோசைக்கல்லை அடுப்பில் வைப்பதை பார்த்துவிட்டு, அமைதியாக வெளியே இருந்த டைனிங் டேபிளில் அமர்ந்தான்.
சுபத்ராவிடம் அர்ஜூன் ப்ரேக்கப் என்று கூறிவிட்டு வந்தபோது, அவளின் மற்றொரு காதலனும், அவனின் நண்பர்களும் அங்கு இருந்திக்கிறார்கள். அர்ஜூன் கோபத்தில் எதையும் கவனிக்காமல் அவளை திட்டிவிட்டு வந்திருக்கிறான். சுபத்ராவின் உண்மை முகம் தெரியப்பெற்றதால் அந்த புதியவனும் அவளை கழட்டிவிட்டிருக்கிறான். அவன் பெரிய பணக்காரன்... அது தெரிந்து தான் அவனுக்கு சுபத்ரா வலை விரித்து இருக்கிறாள். அன்று அர்ஜூன் தன் கோபத்தால் செய்த காரியத்தால், அவளுக்கு கிடைக்கவிருந்த நல்ல வாழ்க்கை தடைப்பட்டு போனது. அவளின் வாழ்க்கையை கெடுத்த அர்ஜூன், பணக்கார பெண்ணை திருமணம் செய்யவிருப்பது பிடிக்காமல் சுபத்ரா நடத்திய நாடகம்தான் இதெல்லாம்...
சுபத்ராவும் நிரஞ்சனின் தங்கை நிக்கியும் தோழிகள். மும்பையில் நிக்கி சுபத்ராவின் வீட்டில் தான் வாடகைக்கு தங்கி படித்தாள். எனவே யாரிடம் எப்படி பேசி சாதிக்க முடியும் என்று அறிந்து வைத்திருந்த சுபத்ரா, நிரஞ்சனையும் நிக்கிதாவையும் நூலிலாடும் பொம்மைகள் போன்றாக்கினாள். நிரஞ்சன் வழியாக இவற்றை அறிந்த அர்ஜூனும் சக்தியும், சுபத்ராவை என்ன செய்வது என்று யோசிக்க, சுபத்ரா தானாக வந்து வலையில் விழுந்தாள்.
போதை மருந்து உட்கொள்ளும் பழக்கமுடைய அவள், தமிழ்நாட்டில் இருக்கும் போது தேவைப்படும் என்று இருநூறு கிராம் அளவிலான போதை மருந்தை விமானத்தில் வரும்போது ஒளித்து வைத்து எடுத்துவந்து இருக்கிறாள். "மன அழுத்தம் போக கொக்கைன் வேண்டுமா...." என்று அர்ஜூனிடம் கேட்டவள் பலமாக சிரிக்க, அர்ஜூனும் பலமாக சிரித்துவிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தான். அவர்களும் கைது செய்து ஆறுமாதம் சிறைத்தண்டனை வழங்கியதோடு அவள் திமிராக பேசிய பேச்சில் நல்ல அடியும் தாராளமாக வழங்கப்பட்டது. பல மாதம் தகவல் தெரிவிக்காமல் வேளைக்கு வராத காரணத்தால், அமெரிக்காவில் அவள் ஒரு அலுவலகத்தில் செய்த வேலையும் பறிபோனது...
நடந்ததை நினைத்து பார்த்த அர்ஜூன் தனக்குள் சிரித்துக் கொண்டு இருக்க, அவனின் அருகே குட்டி சித்தார்த் வந்து நின்றான்.
"மாமா... சித்துக்கு தொப்பை பசிக்குது...." என்று கூற "அச்சச்சோ... சித்து குட்டிக்கு தொப்பை பசிக்குதா... அம்மாவ எழுப்பி இருக்கலாம் இல்ல... இப்போ நாங்க இருக்கோம்... நாங்க இல்லன்னா என்ன செய்து இருப்பீங்க...." என்றவன், அவனை தூக்கி கொண்டு, சிவரஞ்சனியிடம் வர சரியாக அந்த நேரம் பார்த்து சித்து "அம்மாக்கு ரொம்ப கால்வலி... அப்பா தான் பிடிச்சு விட்டு தூங்க வச்சாரு... அதான் அவங்கள டிஸ்டர்ப் பன்ன வேண்டாம்னு நான் மட்டும் வந்துட்டேன்..." என்று அவன் தெளிவாக நடந்ததை கூற, சிவரஞ்சனி அர்ஜூனை முறைத்தாள்.
முறைக்கும் போதே அவளின் கண்கள் கலங்கியது. திருமணம் ஆகி இத்தனை வருடங்கள் ஆகியும் அண்ணன் அண்ணியின் காதல் மட்டும் குறையவேயில்லை... எனக்கு மட்டும் எதற்கு இப்படி ஒரு காதல் இல்லாத வாழ்க்கை... என்று நினைத்தவள், சந்தோஷ் அர்ஜூனிடம் இருந்து கீழே இறங்கி கிச்சனில் இருக்கும் பொருட்களை கலைப்பதை பார்த்து விட்டு, அர்ஜூனிடம் அவனை வெளியே கூட்டி செல்லும் படி கூறினாள்.
சித்து வெளியே செல்லும் போது விளையாட்டாய் கேஸ் அடுப்பின் வால்வில், ஆன் என்று வைத்துவிட்டு செல்ல சிவரஞ்சனியும் அர்ஜூனும் அதை கவனிக்கத்தவறினர்...
அழுததால் சிவரஞ்சனி மூக்கு அடைத்துக் கொண்டு இருந்தது. அதனால் கேஸ்ஸின் வாசனை அவளின் நாசியை சென்றடையமுடியாமல் போனது... அர்ஜூனுக்காக செய்த டீயை அவனிடம் கொடுத்து விட்டு, அந்த பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டு, சித்துக்காக குளிர்சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்து அந்த பாத்திரத்திலேயே ஊற்றி பற்றவைக்க, அதிலிருந்து குபீரென எழுந்த நெருப்பு அவளின் கையை லேசாக பதம் பார்த்தது... அதோடு அந்த இடம் தீப்பிடிக்க ஆரம்பித்தது.
டீயில் சர்க்கரை போடவில்லை என்று சமையல் அறைக்குள் நுழைந்த அர்ஜூன் அச்சம்பவத்தை பார்த்து விட்டு பதறிவிட்டான்.
வேகமாக சிவரஞ்சனியிடம் சென்றவன் அவள் கையை பார்த்தவாறே அவளை சமையல் அறையில் இருந்து வெளியே தள்ளிவிட்டு, அவசரமாக கேஸை அதன் அடுப்பில் இருந்து தணியாக கழட்டியவன், கீழே கிடந்த மிதியடியை எடுத்து நெருப்பின் மேல் போட்டுவிட்டு வெளியே வரவும், சக்தி சித்துவின் அழுகுரல் கேட்டு கீழே வரவும் சரியாக இருந்தது.
"ஷிவ்... என்னடி இது..." என்று அவளின் கையை பார்த்து கடிந்து கொண்டவன், வேகமாக தனது அறைக்கு சென்று ஆயின்மெண்ட் எடுத்து வந்து அவளின் கைக்கு போட்டுவிட்டான். அதற்குள் மொத்த குடும்பமும் கூடியிருந்தது. அனைவரும் சிவரஞ்சனியை கண்டிக்க அவளோ பிரம்மை பிடித்ததை போன்று அமர்ந்து இருந்தாள்.
"அத்தை... மாமா... நாளைக்கு பேசிக்கலாம்... எல்லாரும் போய் ரெஸ்ட் எடுங்க..." என்று அனைவரையும் அனுப்பிய அர்ஜூன், சிவரஞ்சனியை கூட்டிக்கொண்டு தங்களது அறைக்கு சென்றான்.
அறைக்குள் நுழைந்ததும் சிவா முதலில் அர்ஜூனிடம் கேட்ட கேள்வி "நான் செத்து போய் இருந்தா நீங்க சந்தோஷப்பட்டு இருப்பீங்க இல்ல..." என்று கேட்டதும் தான் தாமதம் அர்ஜூன் கோபத்தில் ருத்ர மூர்த்தியாக மாறியிருந்தான். அதன் விளைவு சிவரஞ்சனியின் கண்ணத்தில் அவனின் கைத்தடம் பதிந்து இருந்தது.
"ஏய்... இன்னொரு தடவை இப்படி பேசன... நானே உன்னை கொன்னுடுவேன்... இப்ப என்ன உன் பிரச்சினை... எனக்கு உன்மேல லவ் இல்லைன்னா... யாருடி உனக்கு சொன்னது நான் உன்ன லவ் பன்னலன்னு... இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உனக்கு என்ன ஆச்சோன்னு நான் துடிச்ச துடிப்பு உனக்கு தெரியலையா... என் உயிரே என்கிட்ட இல்லை... அவ்வுளவு உன்னை லவ் பன்னறேன்.. ஏன் அது உனக்கு புரியலை... உன்மேல முட்டாள்தனமா கோபப்பட்டுட்டனேன்னு தினமும் நான் கவலை பட்டுட்டு இருக்கேன்... அதனால நீ என் பக்கத்துலயே இருந்தும் உன்ன நெருங்க முடியாமல் நான் படர கஷ்டம் எனக்கு தான் தெரியும்... ஏன்டி புரிஞ்சுக்கமாட்டிங்குற..." என்றவன் அவளையே கட்டிப்பிடித்து கொண்டு கண்ணீர் வடிக்க, அவனின் கண்ணீரை கண்டவள் மனம் பதறினாள்.
"நாம் தான் புரிந்துக்கொள்ளவில்லை..." என்ற உண்மை புலப்பட ஒருவழியாக அவனை சமாதானம் செய்தவள், அவன் கணவன் என்ற உரிமையை நிலைநாட்ட முயல, அவளும் முழுமனதுடன் அவனுக்கு உடன்பட்டாள்... குழம்பிய குட்டையில் தான் மீன் பிடிக்க இயலும் என்பது போல, பல குழப்பங்களுக்கு பிறகு தான் அவர்களின் இல்லறம் இனிதாக ஆரம்பித்தது.
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 26
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN