காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 38

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹாய் டியர்ஸ் flashback கடைசி அத்தியாயத்துடன் முடிந்து விட்டது... இப்போது நிகழ்காலத்து பகுதி.... விடைகிடைக்காத உங்களின் பல கேள்விகளுக்கு அடுத்த அடுத்த அத்தியாயங்களில் பதில் கிடைத்தவிடும் நன்றி இப்போ கதைய படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ள வேண்டுகிறேன். 😍😍😍😍😍😍❤️❤️❤️❤️


எங்கே தனது கோபம் தன் மனையாளை காயப்படுத்தி விடுமோ என்று அஞ்சியவன் அவள் அருகில் வருவதை தவிர்க்க எண்ணி தள்ளி நிறுத்தி இருந்தான்.

அவன் என்ன கடுஞ்சொற்கள் பேசினாலும் காதில் வாங்கதவளின் மனம் கேஷவ்வின் கைகளில் இருந்து வழியும் ரத்தத்தைக் கண்டு பதைபதைத்து இருந்து.

காயப்பட்டு கண்முன்னே நிற்கும் கணவனுக்கு ஆறுதல் வார்த்தை கூறுவதா இல்லை இதயத்தில் வடுவாய் நிலைத்திருந்த காயத்தை கீறி அவனை நிலைகுலைய செய்ததை நினைத்து வருந்துவதா....

காதலாய் பேசிடும் கேஷிவின் வாய்மொழியை மட்டுமே அறிந்து இருந்தவள் அருகில் வராதே எட்டநில் என்று தன்னை தவிர்க்கும் கணவனை நினைத்து பேச்சிழந்து நின்றிருந்தாள் அவனின் கண்மணி. வலியின் மிகுதியிலும் அதிகமாய் இரத்தம் வெளியேறியதாலும் கலைத்து இருந்தவன் மெதுவாய் தலைசாய்த்து இருந்தான். அவனின் நிலை மனதை குத்தி கிழிக்க தன்னால் தானே இந்நிலை என்று வருத்தப்பட்டு கண்கலங்கி மீண்டும் கால்கள் நடுங்க அவன் அருகில் சென்றாள்.

'என்னங்க பீளீஸ் உங்க கையில ரத்தம் வருது.. பீளீஸ் வாங்க" என்றாள் அவன் அருகில் சென்று

அவள் பிடித்த கையினை எடுத்து விட்டவன் "என்னோட மனச புரிஞ்சிக்கவே இல்லையாடி நீ... எதோ ஒரு லெட்டரை பார்த்து கேட்ட வலியைவிட என்னோட நண்பன் என்னை பார்த்து கேட்ட வலி எல்லாம் ஒன்னுமே இல்லடி.. வலிக்குது டீ... இங்க வலிக்குது..." என்று இதயத்தை சுட்டி காட்டியவன் அமர்ந்தே இருந்தான்.

"நான் கேட்டது தப்புதான்... பீளீஸ் நீங்க இப்படி உட்காந்து இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குங்க.. உங்கள நம்பாம கேக்கல நீங்க எனக்கு மட்டுமே சொந்தம்ன்ற உரிமையில கேட்டுட்டேன்... என்னை மன்னிச்சிடுங்க... கையில ரத்தம் வேற நிக்காம வருது வாங்க ஹாஸ்பிட்டல் பேகலாம்" என்று அவனை அழைந்தாள்.

விரக்தியாய் சிரித்தவன் அவளை விடுத்து வேகமாய் அறையை விட்டு வெளியேறி பைக்கை உயிர்பித்து இருந்தான். சாலையில் இறங்கிய அவனது வண்டி தூரத்தில் ஒரு புள்ளியாய் மறைந்து போனது அவன் அறையை விட்டு வெளியேறியதும் அவன் பின்னே பரபரக்க ஓடியவள் காயபட்ட கையுடன் பைக்கை எடுக்கவும் பதறியபடி அவன் அருகில் வர அதற்குள்ளாகவே அவன் கிளம்பி இருந்தான். வானத்தை பார்க்க கரியை பூசியதை போன்ற இருட்டு மிதமாய் இருந்த காற்று மழை வருவதற்கான அறிகுறியாய் சில்லென்ற ஈரப்பதத்துடன் வீசி மேனியை தழுவியது...

'அய்யோ இதென்ன இப்படி வேகமா போறாறே' என்று நினைத்தவள் அவனை தொடர்பு கொள்ள முழுமையாக அலைபேசி அடித்து நிறுத்தியதே தவிர அவன் அலைபேசியை எடுத்தப்பாடில்லை கிட்ட தட்ட 5,6 முறைகள் அழைத்தவளின் மனது அச்சத்துடன் நடுங்கியது.

காலை அலுவலகம் கிளம்பும்போது "பார்கவியிடம் நான் எடுக்காத பட்சத்தில் அவசரம் இருந்தால் இந்த எண்ணிற்கு அழை" என்று கார்த்திக் எண்ணை கொடுத்திருக்க உடனே அவனுக்கு அழைத்தவளின் மனது இப்போது அவனிடத்தில் என்ன சொல்வது என்று கலங்கியது ஒருவாறு திடத்துடன் அவனுக்கு அழைக்க முதல் அழைப்பிலையே போனை எடுத்து விட்டான் கார்த்திக்.

"ஹலோ... கார்... கார்த்திக் அண்ணா..." என்றாள் பயகுரலில்

அவள் குரலில் இருந்த பேதமையை உணர்ந்த கார்த்திக் "என்ன பார்கவி... என்ன ஆச்சி... ஏன் அழுகுற மாதிரி பேசுற" என்றான். ஏதேனும் ஆபத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறாளோ என்று சாப்பிட்டுக்கொண்டு இருந்தவன் சாப்பாட்டை விட்டு பாதியில் எழுந்து விட்டான்.

"அவர்... அவர்.. கையில அடிபட்டிருக்கு அண்ணா கோவமா வண்டில வேற போய் இருக்காரு என் போனும் எடுக்க மாட்டேன்றார்" என்று அழுகையுடன் கூறினாள்.

"யாரு கேஷவுக்கு காயமா..." என்று சந்தேகமாக கேட்ட கார்த்திக் அவன் "அவன் சந்தோஷமா தானேமா வீட்டுக்கு கிளம்பி வந்தான்... என்னமா என்ன ஆச்சி" என்று புரிபடாமல் கேட்டான்.

"அண்ணா பீளீஸ் அவர் எங்க இருக்காருறன்னு பாருங்க அண்ணா நான் எல்லாமே சொல்றேன்" என்றவள். சுருக்கமாய் அவன் கோபத்தின் காரணத்தை மட்டும் கூறினாள்.

"என்ன மா இப்படி கேட்டுட்ட" அவனை என்றவனை இடைமறைத்தவள் "தப்புதான்ணா தப்புதான் என் தப்புதான் கேட்டு இருக்க கூடாது இப்படி அவரு ரியக்ட் பண்ணுவாருன்னு எதிர்பாக்கமா கேட்டுட்டேன். அவர் கோவமா வேற போனாரு அவர் எங்க இருக்காருன்னு பாருங்க" என்றவள் அழுத அழுகையில் அவளை திட்டவும் முடியாமல் அவளுக்கு ஆறுதல் வார்த்தை கூறியவன் கேஷவனை தேடி சென்றான்.

வான்மகனுக்கும் நிலமகளுக்கும் இடையே பிறந்த மழலையாய் பூமிதனில் வெள்ளிகம்பியினை உருக்கி இணைத்தார் போல சிறுக ஆரம்பித்த மழை தூறல்கள் இப்போது வலுப்பெற்று பேரிரைச்சலுடன் பெய்ய தொடங்கி இருந்தது.

"இந்த நேரத்துல எங்க போயி இருப்பான் வழக்கமா அவன் எங்கயுமே போறது இல்ல வீடு ஆபீஸ் இப்படிதானே இருக்கான் வேற வேற" என்று தன் மனதிற்குள்ளே கேள்வியும் பதிலுமாய் அலைந்து திரிந்தவன் இறுதியாக வந்தது அலுவலகத்திற்கு தான் இரவு நேர செக்யூரிட்டி காவலில் இருக்க கேஷவின் பைக்கையும் பார்த்தவன் நேராக அலுவலகத்திற்குள் நுழைந்தான்.

-----------------------------------------------–-------------

கோயம்பத்தூர்.

அனுவனுவாய் ரசித்து ரசித்து அவளின் இதயத்தில் காதலின் உருவமாய் வடித்தவனை இனி காணவும் முடியாமல் அவனுடன் சேரவும் முடியாமல் போன சூழ்நிலையை நினைத்து கலங்கிபோய் இருந்தவளின் மூடிய விழிகளுக்குள் இருந்து வழிந்த கண்ணீர் கன்னத்தில் உருண்டு ஓடியது...

தன் இதயத்தில்கூட்டில் சம்மட்டியை கொண்டு தாக்கியதற்கு நிகரான வலியை உணர்ந்துகொண்டே இருந்தாள் தியா... அவனை நினைத்தாலே தன்னுள் ஆயிரம் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறப்பதை போல் ஒரு சிலிர்ப்பு இன்றும் ஏற்படுவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவன் வேண்டாம்…. வேண்டவே வேண்டாம் என்று உதறுவதற்கு இன்று நேற்று என்று முளைத்த காதலா??? அப்படியே இருந்தாலும் எவரேனும் செய்ய முடியுமா?? வருடக்கணக்காய் தன் இதயத்தில் பொத்தி பொத்தி பாதுகாத்த பொக்கிஷத்தை இன்று ஒரே நாளில் அவனின் தாயிற்காக தொலைத்து விட்டாளே.. அவள் கட்டிய மாபெரும் காதல் கோட்டை இடிந்து தூள்தூளாய் சின்னா பின்னமாய் அவள் கண்முன்னே வெடித்து சிதறியதே...

ராதாவின் கூற்றை எதிர்த்து அவனை திருமணம் செய்வது அத்தனை பெரிதான விஷயமல்ல ஆனால் இத்தனை ஆண்டுகளாய் உறவுகளின்றி இருந்த உள்ளங்கள் தன் சொந்த கூட்டுக்குள் இளைப்பாற நினைப்பது நியாமான ஆசைதானே... அந்த ஆசையை தடுக்க அவள் மனம் இடம் கொடுக்காமல் அவனை விட்டு பிரியும் விபரீதமான முடிவையே எடுத்திருந்தாள் தியா.

ஒருவேளை அவன் தன்னை காதல் செய்து இருந்தாலும் கூட யோசித்து இருக்கலாம் அவனே ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தன் ஒருதலை காதலை வைத்து என்ன செய்வது... தன் காதல் சிறுக சிறுக செத்துக்கொண்டிருப்பதை பார்த்தும் அவள் உயிரோடு இருப்பது பெரும் வியப்பு தான் தியாவிற்கு... வந்து இரு தினங்களாக வெறுமையை தத்து எடுத்துக்கொண்டவள் போல் கையில் புத்தக்கத்துடன் தோட்டத்தில் அமர்ந்து இருந்தாள்.

கைகளில் மட்டுமே புத்தகம் இருந்தது மனமும் மூளையும் அவள் கட்டுபாட்டையும் மீறி அவனையே நினைத்துக்கொண்டு இருந்தது.
அப்போது தியாவின் தந்தை மாணிக்கத்தின் கார் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தது.

காரின் ஹார்ன் சத்தத்தில் தன் சுயத்திற்கு வந்தவள் திரும்பி பார்க்க தந்தையின் கடின முகம் அவளுக்கு வியப்பை தந்தது. இதுவரையிலும் அப்படி ஒரு கடினமுகத்தைத்தை அவரிடம் கண்டதில்லை... ஒரு இருக்கம் எதன் மீதோ கோபம் கொண்டவரை போல காரில் இருந்து இறங்கியவர் காரை அறைந்து சாற்றி உள்ளே சென்றார். தந்தையின் கோபத்தை இதுவரை பார்த்திராத தியா அவரின் பின்னோடு இவளும் சென்றாள்.

கணவரின் வருகையை ஹார்ன் சத்தத்தை வைத்தே அறிந்த மஞ்சுளா அவருக்கு தண்ணீரை கொண்டு வந்து நின்றிருந்தார்.

கணவரின் முகம் கண்டவருக்கு அத்தனை உவப்பான செய்தியாக இருக்கும் என்று படவில்லை "என்னங்க ஏன் ஒருமாதிரி இருக்கு உங்க முகம்" என்று கேட்டுக் கொண்டே கையில் இருந்த தண்ணீரை நீட்டினார்.

என்னவென்று மனைவியிடம் கூறுவது தான் மேற்கொண்டுள்ள முயற்சியை பற்றி கூறினாள் பயந்துவிடுவாளே … அதும் இன்று எதிரியை கண் முன்னே அல்வா கண்டுவிட்டு வந்து இருக்கிறேன். என்று சிந்தனைக்கு உட்பட்டது அவரது எண்ணம்.

என்னங்க உங்களதானே... என்ன ஏதோ மாதிரி இருக்கிங்க" என்றவர் அவரின் அருகில் அமர்ந்து "உடம்பு ஏதும் என்று ஆரம்பிக்கவும்".

"சே...... மனுஷனை கொஞ்ச நேரம் அமைதியா விடுறியா வெளியே போயிட்டு வர்றவனுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதிலும் வக்கீலுக்கு இருக்க பிரச்சனை எல்லாம் உன்கிட்ட சொல்லுவாங்களா" என்று கடுமையாக கூற அப்படியே உறைந்து விட்டார் மஞ்சு கணவரின் போக்கு, கோபம், பயத்தை கூட்ட எழுந்து நின்று விட்டார்.

"என்னங்க ஏதாவது பிரச்சனையா எனக்கு மனசு கிடந்து அடிச்சிக்குதுங்க... இதுவரையிலும் நீங்க இப்படி இருந்தது இல்ல உங்க பேச்சு எனக்கு பயத்தை கொடுக்குது என்னங்க உண்மைய சொல்லுங்க" என்றார் பயம் விலகாத குரலில்

"பச் .. ஒன்னுமில்லாத விஷயத்தை பெரிசாக்காத மஞ்சு போயி சூடா ஒரு கப் காபி கொடு தலைய வலிக்குது" என்று பேச்சை மாற்றி மனைவியை உள்ளே அனுப்ப முயன்றார் மாணிக்கம்.

"தலைவலியா... வேற ஏதாச்சும் பண்ணுதா... இருங்க ஒரே நிமிஷம் இஞ்சி போட்டு சூடா டீ கொண்டு வறேன்". என்று கூறிக்கொண்டு தான் கேட்ட கேள்வியை மறந்து அடுக்களைக்குள் சென்றார் மஞ்சு.

மஞ்சு உள்ளே சென்று விட்டதை எட்டிபார்த்து உறுதி செய்துகொண்ட தியா தந்தையின் அருகில் வந்து அமர்ந்தாள். "அப்பா" என்றாள் மெதுவாக

ஏதோ யோசனை முகமாகவே இருந்த
மாணிக்கம் 'என்னடா?" என்றார் . தன்மையாக

"அப்பா, அம்மாவோட பேச்சை மாத்தி உள்ள அனுப்பலாம் ஆனா நீங்க ஏதோ பிராப்ளத்துல இருக்கிங்கன்றத உங்க டென்ஷன் காட்டிக்கொடுக்குது பா எதுவா இருந்தாலும் சொல்லுங்க பா" என்றாள் பரிவுடன்.

"சே.. சே.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா... ஒரு கேஸ் பத்தி நினைச்சிட்டு இருந்தேன் வேற ஒன்னும் இல்லடா... உங்க அம்மாவ இப்படியே விட்டா கண்டதையும் மனசுல போட்டுக்கிட்டு பயந்துடுவா அதான் அவகிட்ட பேச்சை மாத்தினேன்.. டா இந்த டென்ஷன் கொஞ்ச நேரம் தான் வெளியே போயிட்டு வந்தேன் ல அதான் கொஞ்ச நேரத்துல சரியாகிடும்" என்றவர் மகளின் தலையை வருடிவிட்டவர் பெரிய மகளின் நியாபகம் வர "கவிகுட்டி போன் பண்ணாளா டா" என்றார்.

"இவினிங் பண்ணேன் போன் என்கேஜ்டா இருந்துச்சி.. அப்புறம் ரீங் போய்டே இருந்தது.. அவ போன் எடுக்கவே இல்ல பா" என்றதும் அப்படியா என்றவர் உடனே மகளின் எண்ணிற்கு அழைத்தார்.

_________________________________________

ஊட்டி

மனதில் காதலையும் கண்களில் அவன் தேடலையும் சுமந்து சென்றவளின் காதலின் சுவடுகளை சுகமாய் உணர்ந்தான் சித்தார்த்.

ஒரு நிமிடம் கூட அவள் நினைப்பு இல்லாமல் நகர்வேனா என்றது அவனின் நாளின் தொடக்கம் கூட, தனக்கு தானே சிரித்துக்கொண்டான் அவனின் நிலையை எண்ணி...

அவளை தள்ளி நிறுத்தி வேடிக்கை பார்த்தவன் நான் தானா?? அவள் இருக்கும் இடம் தெரிந்தாலே அந்த இடத்தை தவிர்த்து தெரித்து ஓடியவன் நான்தானா?? உள்ளுக்குள்ளே எனக்கே தெரியாம நுழைஞ்சிட்டியே டி....

'நீ பேசமாட்டேன் பேசமாட்டேன்னு சொல்லி உன்னை பத்தி மட்டுமே பேச வைச்சிட்டியே... உங்க அத்தை அடிக்கடி ஒரு பழமொழி செல்லுவாங்க கட்டு சோத்துக்குள்ள விட்ட எலிய பத்தி அதுபோல நீ எனக்குல்ல குடையுறடி . உன்னை எப்போ விரும்ப ஆரம்பிச்சிது இந்த மனசு'

'உன் மேல எனக்கு இருக்க அன்பு காதல்னு தெரிஞ்ச பிறகு உன்னை ஒரு நொடிக் கூட பிரியக் கூடாதுன்னு தவிக்குது... இப்படிதான் இந்ததா டீ உனக்கும்... இது ரொம்ப சுகமாவும் இருக்கு நீ இல்லையேன்னு கொஞ்சம் வலியாவும் இருக்கு டி...' என்று அவளை நினைத்து பார்த்துக்கொண்டு மெத்தையில் படுத்து இருந்தான் சித்தார்த்.

"டேய் சித்து... சித்து கண்ணா.. கதவை திறடா" என்று வாயிலில் இருந்து குரல் கொடுத்துக்கொண்டு இருந்தார் ராதா.
கண்களை மூடி கனவில் அவளுடன் மிதந்துகொண்டு இருந்தவன் தாயின் குரல் செவிகளில் தீண்ட "கதவு திறந்துதான் இருக்கு வா மா" என்றபடி எழுந்து அமர்ந்து இருந்தான்.

மணி 6 தாண்டி இருக்க அவனை ஆச்சர்யமாய் பார்த்தா ராதா " கிழக்கால உதிக்கும் சூரியன் மேற்கால உதிச்சாமாதிரி ஆச்சர்யமால இருக்கு"... என்று அவன் அமர்ந்து இருப்பதை கண்டு ஆச்சர்யமாய் பேசியவர் அவன் கண்களை கண்வும் என்னடா கண் எல்லாம் சிவந்து இருக்கு நைட்டு தூங்கினியா இல்லையா" என்றார் அக்கரையாய்.

தாயின் உதாரணம் சிரிப்பை வரவழைக்க "கொஞ்ச வேலை மா" என்றான் வாட்ரோபில் இருந்து துவாளையை எடுத்தபடி

"இந்த நேரத்துக்கு எல்லாம் ஜாகிங் போயி இருப்பியே ரூமை விட்டு வெளியலே வரலைன்னுதான் நானே வந்துட்டேன்" என்றபடி அவனுக்கான காபி கப்பை நீட்ட

பூ துவாளையுடன் குளியலறை சென்று வந்தவன் ராதா நீட்டிய காபி காப்பை வாங்கி ஒரு மிடறு உறிஞ்சியபடியே "இன்னும் கொஞ்சம் இன்டீரியர் வொர்க் இருக்கு மா...அதை எல்லாம் நைட் யோசிட்டு இருந்தேன் அதை பத்தி டிஸ்கஸ் போயிட்டு இருந்தது அதான் எந்திரிக்க லேட் ஆகிடுச்சி மா" என்று வாய்க்கு வந்ததை கூறி அவர் பார்வை வட்டத்தில இருந்து விடுபட்டவன் மெல்ல பால்கனியின் சுவர்ப்பக்கம் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் மலர்ந்திருக்கும் மலர்களின் மேல் பார்வையை பதித்து இருந்தான்.

"உடம்ப போட்டு ரொம்ப வருத்திக்காத சித்து... பார்த்து பண்ணு அவசரபடாத" என்று ஒரு அன்னையாய் அவனுக்கு பரிவுடன் பேசியவர் "குளிச்சிட்டு வா டா நான் டிபன் செய்றேன், உங்க அப்பாவும் வந்துடுவாரு" என்றபடி அவன் மீது பார்வையை செலுத்தி அறையில் இருந்து வெளியேறினார் ராதா.

அவன் தேவதையின் வாசம் பூக்களின் நறுமணமாய் மாறி காற்றில் கமழ்ந்து வருவது போல் உணர்ந்தான். 'என்னடி செஞ்ச என்ன ஒரே நாள்ல ஆளையே மாத்திட்டியேடி என்று மொபைலில் இருந்த அவளின் புகைப்படத்தை எடுத்து பார்த்தான். அவள் கண்கள் அவனை பார்த்து கண் அடித்தது போல் இருந்தது. அவன் விரல் பட்ட மாதுளை அதரங்களின் மென்மையை அவன் விரல்கள் உணர்ந்தது போல் மெல்ல சிரித்தான். முக்கு நுனியில் கைவைத்த போது சீ என்னை தான் வேண்டாம்னு சொன்னயே உன் மேல நான் கோவமா இருக்கேன்' என்பது போல் நுனி சிவந்து இருந்தது. இத்தனையும் தன் கற்பனையே என்று தெரிந்தும் அந்த கற்பனையை நினைத்து நினைத்து பூரித்து போயிருந்தான். அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை உந்த அதே நேரத்தில் சித்தார்தின் அலைபேசி தன் அழைப்பை உணர்த்த அதுஅலறிய வேகத்தில் பேசியை கிழே தவறவிட்டான்.

அதை எடுத்து பார்த்தவனின் முகத்தில் இவனா என்று ஆயாசமாக இருந்தது. விழந்த வேகத்தில் கை விரல் பட்டு அது இயங்கிவிட ஹலோ ஹலோ என்ற கோபியின் குரலில் கோபம் குடிகொண்டு இருந்தது.

அவன் கத்திய காட்டுகத்தலில் செல் போனை காதுக்கு வெகு தூரத்தில் பிடித்து இருந்தான் சித்தார்த்.

கோபி அவனுக்கு தெரிந்த அனைத்து மொழி கேட்டவார்த்தைகளையும் திரட்டி நார்நாராய் கிழித்து தோரணமாய் கட்டி தொங்கவிட்டிருந்தான்.

காதுக்குள் யாரோ ரயில் இஞ்சினை ஓடவிட்டதை போன்ற நிலையில் இருந்தவன் டேய் டேய் நிறுத்துடா காதுல ரத்தமே வந்துடும் போல என்றான் பாவமாக

"நீ எல்லாம் இன்னும் உயிரோடதான் இருக்கியாடா?" என்றான் கோவத்துடன்

"ஹீ ஹீ செத்த எப்புடி மாப்பு உன்கிட்ட பேசிட்டு இருக்க முடியும். அதுசரி காலையிலையே செம மூடுல இருக்க போல இருக்கு" என்றான் கிண்டலான குரலில்.

"கிண்டலு ரொம்ப ஓவரதான்டா போர இந்த ஈர வெங்காயத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... செல்போன் இருக்கரது பேசரத்துக்கு வைச்சி அழகுபாக்குறதுக்கு இல்ல ரெண்டு நாளா எத்தனை வாட்டி கால் பண்ணேன்" என்றான் கோபி கடுப்பாக

"என்ன மச்சி என்னென்னவோ பேசுற?? நீ எப்படா கால் பண்ண? நான் எப்போட எடுக்காம போனேன்?" என்றான் ஒன்றுமே தெரியாதவன் போல

"அய்யோ சாமி வேண்டண்டா நீ நடிக்கிர நடிப்புல அந்த சிவாஜியே தோக்கடிச்சிடுவ போல இருக்கு... இரெண்டு நாள உன் போனுக்கு டிரை பண்றேன் எடுக்கமா ஆட்டம் காட்டிட்டு இப்போ என்ன ஆச்சின்னு கேக்குரியா" என்றான் கடுகடுவென. "இன்னிக்கி மட்டும் நீ எடுத்து இருக்காம இருந்து இருக்கனும் மவனே இந்த கோபி யாருன்னு தெரிந்து இருக்கும் டா" என்றான்

அவன் கோபத்தில் தூபம் போடுவது போல "மச்சி இப்போவே நீ யாருன்னு தெரியுமேடா... ஏதாவது டிடயல்ஸ் மிஸ் ஆகி இருந்தா வந்து சொல்லிட்டு போவியா?" என்று சந்தேகம் கேட்பதை போல கேட்க

அவன் சந்தேகத்தில் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்ட "கோபி மச்சி வார்த்தைக்கு வார்த்தை நீ அடிக்கிற லூட்டிய தாங்க மூடியல தெரியாம காலையிலையே உன்கிட்ட வந்து சிக்கிக்கிட்டேன் போல" என்றான்.

அவன் கூற்றில் இருவருமே சிரித்துவிட என்ன "மாப்ள ரொம்ப ஜாலி மூட்ல இருக்கால போல இருக்கு என்ன மேட்டர்" என்று சரியாய் விஷமத்தை பிடித்து விட்டான் கோபி.

அது.. வந்து... மச்சி என்ன மேட்டர் என்றான் வெட்கபடுவதை மறைத்துக்கொண்டு

"மாப்ள நீ வெக்கபடுறியா... அய்யோ... அய்யோ... அந்த கண்கொள்ள காட்சிய என்னால பாக்கமுடியலையே" என்று வருத்தபடுவது போல் தனக்குதானே கூற

"டேய்... என்னடா உளறுற யார் வெக்கவடுறாங்க" என்று கோபியை அடக்க வழி தெரியாமல் சத்தமிட

"நீ அடங்கு மச்சி.. முதல்ல விஷயத்துக்கு வா..." என்றிட

"என்ன விஷயம்" என்றான் ஏதும் தெரியாத அப்பாவியை போல்

உன் பேச்சே ஒரு தினுசா இருக்கு வார்த்தைக்கு வார்த்த கவுண்டர் கொடுக்குற வித்தியாசமா சிரிக்கிற என்ன என்ன நடக்குது அங்க
" என்றான்.

அய்யோ இந்த மங்குஸ் மண்ட கண்டுபுடிச்சிடானே என்ன பண்றது சமாளிப்போம் என்று நினைத்தவன். ஆடு நடக்கது கோழி நடக்குது இது இல்லமா இரண்டு கால் மனுஷங்க வேற நடக்கறாங்க என்று எரிச்சலுடன் பேசுவது போல பேசி தன்னை மறைத்து கொண்டான் நண்பனிடத்தில்.

நண்பனின் பேச்சை கண்டுவிட்ட கோபி மச்சி நீ நடத்து நடத்து.... டேய் கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்தே ஆகனும் நீ எப்போ வரன்னு நானும் பாக்குறேன்" என்றான் விஷமமாக

"இதுக்குதான் போன் பண்ணியா?? டெய்லி அது வந்துட்டுதான் இருக்கு இனி என்ன புதுசா வர போகுது போய் வேலையா பாருடா ஹோட்டல் வேலையே இழுத்தடிக்குது நீ வேற வைடா போனை இவினிங் பண்றேன்" என்று அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் போனை வைத்துவிட கோபிக்குதான் சந்தேகம் வலுவடைந்தது.

இவன்கிட்ட மாட்டிக்கிட்டேன் போல தெரிஞ்சா கிண்டல் பண்ணியே ஒரு வழி ஆக்கிடுவானே என்று நினைத்தவன் அடுத்து அவன் அம்மா வந்து குரல் கொடுக்கவும் குளியலறைக்குள் புகுந்தான்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 38
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN