காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 39

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அலுவலகத்தில் உள்ளே நுழைந்த கார்த்திக் கேஷவின் அறைக்குள் விளக்கு எரிவதை கண்டு அறைக்குள் போக அவன் கண்ட காட்சியில் அதிர்சியாய் நின்றவன் நொடியும் தாமதிக்காமல் அவனிருந்த இடம் நோக்கி விரைந்தான்.

காயம்பட்ட கையை தொங்கவிட்டபடி மற்றொரு கையை தலைக்கு மேல் வைத்துக்கொண்டு படுத்திருந்தவனின் தோற்றத்தைக்கண்டு அருகில் வந்தவன் கேஷவ்... டேய் கேஷவ்... என்று சப்தமிட்டு எழுப்ப சுயம் இன்றி அப்படியே படுத்திருந்தவனை பார்க்க வயிற்றில் பயபந்து உருள கார்த்திக்கின் மனம் அடித்துக்கொண்டது.

அருகில் சுற்றி பார்க்க ஏசியின் குளுமை அறை எங்கும் வியாபித்து இருந்தது. பதட்டமுடன் வெளியே சென்றவன் ஒரு பாட்டில் குளிர்ந்த நீரைக்கொண்டு அவன் முகத்தில் தெளிக்க மெல்ல கண்களை திறந்த கேஷவ் தலைசுற்றலுடன் கார்த்திக்கை பார்த்ததும் யோசனையுடனே எழுந்து அமர முயன்றான்.

கேஷவ் உட்கார உதவி செய்த கார்த்திக்" என்னடா இது கையெல்லாம் ரத்தம் ஹாஸ்பிட்டல் போகாம இங்க வந்து உட்காந்து இருக்க "என்று காய்ச்சினான்.

வெற்று பார்வை ஒன்றை கார்த்திகை நோக்கி வீசிய கேஷவ் அவனை பிடித்திருந்த கையை உறுவிக்கொண்டு "விடு கார்த்திக்... என்னை என் போக்கிலே விட்டுடு.. நீ எங்க இங்க வந்த .. உன்னை யார் வரசொன்னது" என்றான் தன் விரல்களை பார்த்தபடி

அவன் சொற்களை கோர்க்க ஆரம்பித்தவுடனே அவனை விட்டு எழுந்த கார்த்திக் சுவர் அலமாரியில் இருந்து கதவை திறந்தவன் அவனுக்கு தேவையான முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு அவன் அருகில் வந்து ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு அவன் முன்பு அமர்ந்தான்.

எதுவும் பேசாமல் அவன் சொல்வதையே அமைதியாய் கேட்டுக்கொண்டு வேலையை தொடர்ந்தவன் "நீ இப்போ என்ன சொல்ல வர்ர அவ கேட்டதுக்கு இப்படி உன் கோவத்தை காட்டுற... கூட பழகி இருந்தவனே நீதான் குற்றவாளின்னு முத்திரை குத்தும் போது அப்போ எங்கே போச்சி உன் கோவம் வெறும் கோவத்துல ஒரு லாபமும் இல்லை கேஷவ் நஷ்டம் முழுக்க உனக்குதான் நீ சந்தோஷமா இருக்கக்கூடாதுன்னு அவன் நினைச்சான் இப்போ அதையே உன மனைவி மூலமா உண்மை ஆக்கிட்டான்.

என்னை பொருத்தவரை கணவனுக்கு மனைவிக்கும் மட்டும் தான் ரகசியம் கணவனுக்கு தெரியாம மனைவியும் மனைவிக்கு தெரியாம கணவனும் வைச்சி இருக்க ரகசியத்துக்கு பேரு துரோகம் இவ்வளவு நாள் நீ பண்ணதுக்கு பெயர் இதுதான். ஒழுங்கா வீட்டுக்கு கிளம்புற வழிய பாரு" என்று அவனை எழுப்ப

கண்களை இறுக்க மூடி சோபாவில் சாய்ந்தவன் "பிளீஸ் கார்த்தி தயவு செய்து என்னை தனியா விடு" என்று மறுபடி முதலில் இருந்து ஆரம்பிக்க

"டேய் அந்த பொண்ணு அங்க தனியா இருக்காடா வீட்டுல யாரும் இல்ல அதை மனசுல வைச்சி பேசு மரியாதைய வீட்டுக்கு கிளம்பு" என்று திட்டிஅவனை விரட்டினான்.

"அவ என்னை பத்தி நினைக்காம இருக்கலாம் கார்த்திக். எனக்கு எல்லாமே அவ தான் அவள நினைக்காம நான் இருந்ததே இல்ல இனி இருக்கவும் மாட்டேன்" என்றவனின் மொபைல் போன் ரீங் ஆனது அதை மேசை மீது இருந்து எடுத்து பார்த்தவன் காரத்திக்கிடம் நீட்டி அட்டன் செய் என்றான்.

அவன் முகத்தில் குழப்ப ரேகைகள் ஓட காலை சுவைப் செய்து காதில் பொருத்தி இருந்தான் கார்த்திக்

"ஹாலோ சார் ... " என்ற குரல் எதிர்முனையில் இருந்து ஒளித்தது.

ஆண் குரல் ஒலிக்கவும் சாருகேஷாக இருக்கோமோ என்ற எண்ணத்தில் ஹலோ என்றான் கார்த்திக்

"ஹலோ சார் லைலன்ல இருக்கிங்களா நான் செக்கீயூரிட்டி அமர் பேசுறேன் சார்" என்றவர் அவர் போன் பண்ணியதற்கான.காரணம் கூறவும் கேஷவினை வியாப்பாய் பார்த்த கார்த்திக் ஒரு நிமிஷம் என்று அவனிடம் பேசியை நீட்டினான்.

செக்யூரிட்டியிடம் சில தகவல்களை கூறி கவனமாய் இருக்க சொன்னவன் முக்கிய வேலையாய் வெளியே வந்திருப்பதாக கூறி செல்போனை அமரத்தினான்.

கேஷவ் என்று குரல் எழுப்ப

"பீளீஸ் கார்த்திக் எனக்கு சுந்தமா மனசு சரியில்ல அந்க வந்த என்னையும் மீறி அவ கிட்ட முரட்டுதனமா நடந்துடுவேனோன்னு பயமா இருக்கு நீ தான் சொன்னியே கோவம் எனக்கு நஷ்டத்நை தான் கொடுக்கும்னு அவ சொன்ன ஒவ்வொரு சொல்லும் தாங்கால... அஸ்வீன்... அஸ்வீன்... அவன் மட்டும் என் கையில கிடைச்சான் செத்தான்டா முகமே தெரியாத ஒருத்தனால எனக்கு உயிரனவங்கள என்கிட்ட இருந்து பிரிஞ்சி போறாங்க முதல்ல ஒரு பாவமும் அரியாத உத்ரா.... என் உயிருக்கு உயிரான நண்பன் சாருகேஷ் இப்போ என் வாழ்க்கலயே அவதான்னு நினைச்சிட்டு இருக்க பாரு நிச்சயம் இதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகனும்" என்று காயம் கொண்ட கையால் மேசையை ஓங்கி அடிக்க

அவன் டேபிளில் கையால் அடிக்க அவன் கைகளை பற்றிய கார்த்திக் "டேய் டேய் முட்டாள் ஒரு தரம் சொன்ன கேக்க மாட்டியா அடிபட்ட கையாலையே மறுபடியும் அடிக்கிற உன்னை எப்படி டா தனியா விடுறது உனக்கு வர்ர கோவத்தை பார்த்த எனக்கு பயமா இருக்குடா" என்று தன் போக்கில் புலம்பியபடி அவனுடைய வீட்டிறக்கு போன் செய்தவன் விஷயத்தை சுருக்கமாக கூறி இரவு அவனுடன் தங்குவதாக கூறிவிட்டு கேஷவுடன் கார்த்திக்கும் அலுவலகத்தில் தங்கினான்.

~
மாலை 6 மணியை போல் வீட்டை விட்டு சென்றவன் இரவு மணி பத்தை நெருங்கிக்கொண்டு இருக்க வாசலை பார்த்து கிடையாய் கிடத்தவளின் கண்கள் சிவந்து போய் இருந்தது. இரவு நேரம் கடக்க கடக்க நெஞ்சில் பாரம் ஏறுவதை போல் உணர்ந்தாள். தலையை பிடித்து கண்கள் கலங்கி கணவன் வருகைக்காக காத்திருந்தாள் பார்கவி..

அந்நேரம் வீட்டு தொலைபேசி தன் இருப்பை உணர்த்தி ஒலிக்க அவனாய் இருக்குமோ என்று மனதில் நினைத்தவள் இரேண்டே எட்டில் போனை எடுத்து காதிற்கு கொடுத்து ஹலோ என்றாள் அவசரமாக

"ஹலோ... கவிமா... நான் அப்பா பேசுறேன் டா 'என்று மாணிக்கம் கூற

அப்பா என்று தெரிந்ததும் தன் நிலையை மறைத்து மறுபடியும் கண்கள் கலங்க தொண்டை அடைத்துக்கொண்டது.

"ஹலோ... ஹலோ' என்று அவர் குரல் கொடுக்க மூச்சை இழுத்து பிடித்தவள் கண்களை அழுந்த துடைத்தபடி பேச ஆரம்பித்தாள் 'அப்பா அப்பா கேக்குதா என்றவள் லைன்ல ஏதோ பிரிச்சனை என் போன் வேற சார்ஜ் இல்ல சொல்லுங்க பா" என்று சாதரணமாக பேச மிகவும் முயற்சித்தாள்.

"அப்படியா கவிமா.... நான் லைன் கட்டாகிடுச்சோன்னு நினைச்சேன் நல்ல இருக்கியாடா? கேஷவ் நல்லா இருக்காரா?" என்று நலம் விசாரிக்க

அதுவரை கவனமாய் இருந்தவள் பதில் பேச முடியாமல் திக்கி திணறினாள். 'நல்லா நல்லா இருக்கோம் பா நீங்க அம்மா தியா எல்லாம் எப்படி இருக்கிங்க ?" என்றாள்.

"நல்லா இருக்கோம் டா" எனும் போதே வாசலில் அழைப்பு மணி ஒலிக்க அப்பா அவரு வந்துட்டாருன்னு நினைக்கிறேன் வந்து கால்பண்றேன் என்று தந்தையிடம் பேசி தொலைபேசியை அவசரமாக வைத்தவள் வேகமாக ஓடி வந்து கதவை திறக்க வாசலில் நின்றிருந்தவரை பார்த்து குழம்பி போனாள் பார்கவி.

"அக்கா நீங்க.." இப்போ எப்படி என்றாள் பார்கவி சமையல் செய்யும் பெண்மணியை பார்த்து.

வாசலில் இருந்து உள்ளே வந்த சமையல் செய்யும் பெண்மணி "தம்பி இப்போதான் போன் பண்ணாங்க பாப்பா அவங்க வெளியே போனாங்களாம் நைட்டு வர தாமதமாகுமாம் அதான் உங்களுக்கு துணையா என்னை இருக்க சொன்னாங்க பாப்பா" என்றவர் அடுக்கலை அருகே செல்ல

அவர் சொன்ன விஷயத்தை கேட்டதும் சிலையாய் சமைந்தவள்
இயந்தரத்தனமாய் அறைக்கு வந்து மெத்தையில் பொத்தென அமர அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் உடைந்து மார்பை நனைத்தது. கார்த்திக் அவளது தொலைபேசியும் மூலம் விஷயத்தை விவராமாய் விளக்கி நாளை காலை அழைத்து வருவதாக வாக்குறுதி கொடுத்து நிம்மதியாய் இருக்குமாறு கூறிவிட மங்கையவள் கணவனிடம் செய்த பிழையை எண்ணி தவித்து போனாள்.

"நான் பண்ணது தப்புதான் அதுக்கு என்னை ஏன் இப்படி அவாய்ட் பண்றிங்க கேஷவ். என்னால சத்தியாமா உங்க விலகலை தாங்க முடியல... நீங்க எனக்கு எனக்கு மட்டுமே சொந்தமானவரா இருக்கனும்னு நினைச்சதுனாலதான் இப்படி கேட்டுட்டேன் பீளிஸ் டா என்னை விட்டு போயிடாதடா பீளிஸ்' என்று அவன் புகைபடத்தை எடுத்து மார்போடு அனைத்தவள் அவனின் கண்களை முத்தமிட்டு என்னை மன்னிச்சிடுடா பீளிஸ்.என்று அழுதபடியே உறங்கி போனாள். மறுநாள் காலை 5 மணியை போல் வீட்டிறக்கு வந்தவன் தன் அறைக்குள் நுழைய மனைவின் கையனைப்பில் தன் புகைப்படமும் அழுது வீங்கிய கண்களும் கலைந்திருந்த அவள் கற்றை கூந்தல் முகத்தில் படர்ந்து ஒரு கைதேர்ந்த ஓவியனின் ஓவியத்தை நியாபகபடுத்தி அவனை வாட்ட அருகில் சென்று அவளின் தலையை அவள் அறியாவண்ணம் மெல்ல வருடியவன் " நீ என்னை புரிஞ்சிக்கிட்டது அவளோதானாடா.... நமக்குள்ள புரிதலே இல்லையா.... ?" என்று வருத்தபட்டு அவள் முகம் பார்த்த படியே நிமிடங்கள் கரைய கண்களில் இருந்து தானாய் கண்ணீர் இறங்கியது... அவளின் அசைவினை உணர்ந்து அவளின் நெற்றியில் தன் இதழொற்றி "உன்னை விட்டும் என்னால இருக்க முடியாது டா... எனக்கு உன் மேல கோவம் இல்ல என் மேலையே எனக்கு கோவம் உன் கிட்ட சொல்லி இருக்கனும் சொல்லாம விட்டது என் தப்புதான் கார்த்திக் சொல்லவும் தான் நான் எவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்கேன்னு எனக்கே தெரியுது சாரி டா இது எனக்கான தண்டனை தான் இனி இப்படியொரு தப்பு எப்பவும் நடக்காது உனக்கு தெரியாத ரகசியம் எதுவுமே என்கிட்ட கிடையாது அப்படி சொல்லனும் மாமாவோட முக்கியமான வேலையா இருக்கேன் சீக்கிரமே எல்லாம் நார்மல் ஆகிடும் டா அப்போ ஒரு ரகசியமும் இல்லா மனுஷனா உன் புருஷன் வருவான்" என்று கூறி கவி கண் விழிக்கும் முன் கிளம்பி அலுவலகம் சென்று விட்டான்.

இடையில் அவன் வந்ததையோ இல்லை அவளிடம் பேசியதையோ அறியாதவள் அவனை நினைத்து கவலைக்கொண்டாள்.

~
மலேஷியா

ஜெய் அழைத்ததின் பேரில் அவனுடைய தாய் தந்தையருடன் இருநாட்கள் மலேஷியாவை சுற்றி காட்ட சம்மதித்தவளை வீட்டில் இறக்கிவிட்டவர்கள் அவர்கள் தங்கி இருந்த பிளாட்டிற்கு வந்து சேர்ந்தும் ஜெய்யின் தோழியான அந்த பெண் யார் என நினைத்து குழம்பி போயிருந்தனர் பெற்றவர்கள்.

வந்த சில வாரங்களிலேயே தங்களுக்கு அறிமுகப்படுத்தும் அளவிற்கு நெருக்கமான மதுவை பற்றி நினைத்தவருக்கு அவள் இயல்பான பேச்சும் நடவடிக்கையும் அவளின் அமைதியான குணமும் அவரை வெகுவாக கவர்ந்து இருந்தது. ஜெய்யே பேச்சை ஆரம்பிக்கட்டும் என்று காத்திருந்தவர். அவனுக்கான பாலை எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு சென்றார்.

"ஜெய்... பால் பா " என்று அவனுக்கு கொடுக்க

இரவு உடையுடன் குளியலறையில் இருந்து வந்தவன் நீங்க ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானேமா நானே உங்களுக்கு எடுத்துட்டு வரனும்னு இருந்தேன் என்றபடி அவரிடம் இருந்து வாங்கி கொண்டவன்.. அம்மா என்று அவரை அழைத்து பக்கத்தில் இருத்திக் கொண்டு மடிமீது தலைவைத்துக் படுத்துக்கொண்டான்.

'என்னடா கண்ணா" என்றபடி அவன் தலையை வருடிக்கொடுக்க "உங்களையெல்லாம் ரொம்ப மிஸ் பண்ணேன் மா... கொஞ்ச நாள் தான் உங்களை விட்டு பிரிஞ்சி இருந்தேன்... இதுவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி.... இன்னைக்கு நீங்க மீட் பண்ணிங்களே மதுவந்தி அவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே அப்பா அம்மா இரெண்டு பேருமே இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க" என்று வருத்தத்துடன் கூறிய ஜெய் அவருக்கு புதிதாய் தெரிந்தான் எதற்கும் இவ்வளவு வருத்தப்பட்டு பாரத்திராதவர் மதுவந்தியின் நிலை அவனை வருத்தியதை மனதில் குறித்து கொண்டார்.

அவனின் முகத்தையே பார்த்திருந்த ஆதி லேசாய் அவனின் தோலில் கைவைத்து தட்டிக்கொடுக்க அவன் மேலும் தொடர்ந்தான் அவனுக்கு தெரிந்த அவளை பற்றிய விஷயங்களை கூறியவன் "அவங்களோட மனமாறுதலுக்காக தான் உங்க கூட அவள இருக்கும் படி செய்தேன். நீங்கதான் அவங்களோட பேசி அவங்க மனச மாத்தனும் வாழனும்னு தைரியம் கொடுக்கனும்மா" என்று அவரிடம் கூற

அவனின் தலையை கலைத்து விட்டு "என் மகன் எது பண்ணாலும் கண்டிப்பா அதுல ஒரு காரணம் இருக்கும் நினைச்சேன் ஜெய்... என் மனசு குளிர்ந்து போயிருக்கு உன்னை நினைக்கும் போது என்றவர் எனக்கும் அந்த பொண்ணே பார்த்துமே பிடிச்சி இருந்தது... நான் பாத்துக்கேறேன் ஜெய் " என்று அவனுக்கு உறுதி கூறிய ஆதி மறுநாள் காலையே முதல் வேலையாய் மதுவை அழைத்துவர ஜெயந்தை அனுப்பி வைத்தார்.

"மதுபேபி ரெடியா கிளம்பளாமா " என்றவாறு கையில் வாட்சை கட்டியபடி அறையில் இருந்து வெளியே வந்தாள் சீமா.

அழகிய வெளீர் நீலநீற ஜீன்சும் அதற்கு தோதாய் கரும்பு நிற வெஸ்டன் டாப்பும் அணிந்து இருந்தவள் பட்டுபோன்ற தோல்வரை புரண்ட கூந்தலை தன் கிளச்சில் அடக்கி இருக்க மிதமான ஒப்பனையில் கிளம்பி வந்து நின்ற மதுவந்தியை பார்த்ததும்

"ஹேய் பேபி யூ லுக் பிரிட்டி டியர் " என்று அவள் அழகை புகழ்ந்து இறுக்க அணைத்து விடுவித்தாள் சீமா.

தோழியின் புகழாரத்திற்கு கீற்று புன்னகையை பரிசாக உதிர்த்தவள். "நான் எப்பவும் போலதான் இருக்கேன் டீயர் உனக்கு இன்னைக்குதான் தெரியுதா என்று ஹேன்ட் பேகில் உள்ள பொருட்களை சரிபார்த்தவள் நான் ரெடி டியர் அவங்க வைட் பண்ணுவாங்க போலாமா பேபி" என்றிட்டாள் மது.

ஜெய்யுடன் பேசிய பிறகு கொஞ்சம் தெளிவு பிறந்து இருந்தது மதுவந்திக்கு இது நமக்கான வாழ்க்கை நாம் தான் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையை பற்றிக்கொண்டவளின் முகத்தில் அது தந்த மாற்றத்தில் தான் இன்று சீமாவின் கண்களுக்கு கவலையை மறந்த அழகிய தெரிந்தாள் மதுவந்தி.

தன் உதட்டை பிதுக்கி ம் என்ற ஜாடை காட்டிய சீமா "ஜஸ்ட் மினிட் பேபி" என்று அவளுடைய பேகையும் எடுத்துக்கொள்ள இருவரும் வீட்டை பூட்டிக்கொண்டு அப்பார்ட்மென்டை விட்டு கிழே இறங்கி வந்தனர்.

அவர்கள் நடந்து வரவும் அவர்களை உரசுவது போல் ஒரு கார் வந்து நிற்காவும் அதில் இருந்த ஜெய்யின் உருவத்தை பார்த்தத சீமா "ஹை.... ஹேன்சம் " என்று ஊரே பார்க்க கத்தி அவனை கூச்சபட வைத்தாள்....

"என்னை ஒருவழி ஆக்கமா விடமாட்டிங்க " என்று முகத்தை இருபுறமுமா ஆட்டி வருத்தப்படுவது போல் சீமாவை பார்க்க.

"நீங்க எப்படி பார்த்தாலும் ஹேன்சமா இருக்கிங்க நான் என்ன பண்ணட்டும் வேணா இப்படி செய்யலாமா நான் மை டியர் ஹீரோன்னு கூப்பிடுவா ஹேன்சம்."

அவள் அழைப்பில் அதிர்ந்தவன் "நீங்க ஹேன்சமுன்னே கூப்பிடுங்க .அதுக்கு இதுவே பெட்டர்" என்று கூறி மதுவிடம் திரும்பி "நவ் ஹவ் டூ யூ பீல்" என்றான்.

இவர்களின் பேச்சை புன்னகையுடன் பார்த்திருந்தவள் ஜெய்யின் கேள்விக்கு 'பெட்டர் ஜெய்" என்று அவனுக்கு பதில் கூறி "நானே வந்து இருப்பேனே" என்றாள்.

"அட நீங்க வேற மது ... அம்மா என்னை தூங்க விடவே இல்லை ... உங்கள கூட்டிட்டு வரசொல்லிட்டே ஓரே தொந்தரவு பண்ணிட்டு இருந்தாங்க அவங்க கைங்கரியம் தான நான் இங்க வந்தது" என்றிட அழகாய் புன்னகை பூத்தது அவள் ரோஜ நிற அதரங்களிள்.

"ஓகே டார்லு நீ ஹேன்சம்கூட போ நான் நானும் கிளம்புறேன்". என்று அவளுக்கு பை சொல்லியவள் தன் பைக்கில் சென்றுவிட ஜெய் தன் தாய் தந்தையரை காண மதுவை அழைத்துச் சென்றான்.

அவர்களுடனான இந்த பயணம் அவளுக்கு இனிமையை சேர்க்குமா அதற்குமாறாய் அமையுமா விடை காண அடுத்த பதிவில் சந்திப்போம்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 39
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN