காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 40

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நேற்று விடாமல் அடித்து பெய்த மழையில் தார் சாலைகளின் குண்டு குழிகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, கனரக வாகனங்களின் உபயத்தால் தண்ணிரை பீய்ச்சி அடித்து சென்று கொண்டிருந்தது அந்த ஹைவேயில். காரில் இருந்தபடி தலையை பின்புறமாக இருக்கையில் சாய்த்து அமர்ந்திருந்தான் கேஷவ்.

மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே...
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே...!
இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
பகலில் இருப்பது சூரியனா
என் அழகே உன் இரு பார்வைகள்தான்

சன்னகுரலில் காரின் ஆடியோ பிலேயரில் ஜீ.வி பிரகாஷின் இசையில் பாடல் ஒலித்து கொண்டிருக்க அந்த தனிமையும், பாடலின் வரிகளும் மனைவியை நியாபகபடுத்தியது. கேஷவின் நினைவடுக்கில் மனதை கொள்ளை கொண்டவளின் அழுத முகம் உலா வர அவளை தொடர்பு கொள்ள அலைபேசியை எடுத்தவன் என்ன நினைத்தானோ மீண்டும் தலையை இடவலமாக அசைத்து வேண்டாம் என்று முடிவுசெய்து எடுத்த இடத்திலையே அதனை வைத்துவிட்டு சக்தியின் வருகைக்காக காத்திருந்தான். அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத இடம்... சர் சர் என்று கனரகவாகனங்கள் பறந்து கொண்டிருந்தது.

காலை வீட்டுற்கு வருகிறேன் என்று சக்தி கூறியிருக்க அதை வேண்டாம் என்று மறுத்த மாணிக்கம். "வீட்டில் வைச்சி இந்த விஷயத்தை பேச வேண்டாம் ஏற்கனவே என்னவோன்னு மஞ்சுவும் தியாவும் பயப்புடுறாங்க அதனால வெளியே மீட் பண்ணி பேசுறது தான் நல்லது " என்று கருதியவர் சக்தியை பொள்ளாச்சி ஹைவேயில் காத்திருக்க கூறினார். சக்தியும் கேஷவை வைத்துக்கொண்டு பேசுவது சரி என்று பட கேஷவையும் அங்கே அழைத்திருந்தான்.

அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் கேஷவ் வந்த 15 நிமிட இடைவேளையில் சக்தியும் மாணிக்கமும் அடுத்தடுத்தாக வந்திருந்தனர். மாணிக்கத்தின் முகத்தில் தெரிந்த இறுக்கம் அவனுக்கு அவர் இயல்பாய் இல்லை என்பதை உணர்த்தியது.

அருகில் வந்த சக்தியிடம் என்ன டா மச்சா திடீர்ன்னு புறப்பட்டு வான்னு சொன்ன கூடவே மாமாவையும் வேற அழைச்சிட்டு வந்து இருக்க... கதிர் விஷயமா எதாவது தகவல் கிடைச்சி இருக்கா... என்று யூகமாக கேட்டவன் தன் மானாருக்கும் மாரியாதை நிமித்தமாக வாங்க மாமா என்று அழைத்து இருந்தான்.

சக்தியின் அமைதியையும் மாமனாரின் அமைதியையும் பார்த்தவன்... என்ன மாமா ஏன் அமைதியா இருக்கிங்க... அந்த மந்திரி யார்? யார் அவன் ம்.. ஆளவநதான் அவன் ஏதாவது என்று கூற
அதை அமோதிப்பதாய் இருந்தது சக்தியின் தலையாட்டல்

"ம் இப்போ என்ன பிராபளம் மாமா நம்ம லீலகலா போனா ஜெயிக்க முடியுமா இல்ல இல்லிகலா போறமாதிரி இருக்குமா?.. " என்று தடாலடியாய் பேச வியப்பாய் பாரத்தார் மாணிக்கம்.

சக்திக்கு இது பெரிய வியப்போ, இல்லை தெரியாத விஷயமோ இல்லையே !இவனுக்கு கேஷவின் கோபம் பழகிப்போன ஒன்றுதானே. அதனால் எந்தவித அதிர்ச்சியும் இன்றி அவனையே பார்த்திருந்தவன்.

"சொல்றத பஸ்ட் கேளு மச்சான்... இனி நமா வெய்ட் பண்ணாலும் வேஸ்ட் தான் இன்னும் ரெண்டு வாரத்துல அந்த பேக்டீரிய ஓபன் பண்ண போறாங்க சோ அவங்களுக்கு முக்கியமா சார்கிட்ட இருக்க டாக்குமென்ட் அவசியம் அந்த இடத்தை அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்டு இவங்க கட்டலன்னு நம்ம நீரூபிச்சா அதை கேன்சல் பண்ண முடியும் சோ அந்த டாக்குமென்ட் இப்போ அவங்களுக்கு நிச்சியமா வேணும்" என்றான் பீடிகையுடன்.

"சொல்லவந்ததை ஏன் பாதில நிறுத்திட்ட சொல்லு" என்று மாமனாரை பார்த்தவன் சக்தியினை ஊக்க

"நானே சொல்றேன் சக்தி" என்று கூறியவர் விவரமாக கூற ஆரம்பித்தார்.

"நேற்று மாலை நீதிமன்றத்தில் இருந்து கிளம்பும் போது ஒரு போன் வந்தது..."

இதுவரை பதிர்ந்து இராத எண்ணில் இருந்து வரவே கொஞ்சம் யோசனையோடு தான் போனை ஆன்செய்து பேசலானார் மாணிக்கம்.

"ஹலோ..." என்றவர் பதிலுக்காக காத்திருக்க

"ஹ...லோ.. ஹலோ" என்றது பதட்டமான ஒரு பெண்ணின் குரல்.

"எஸ்... நான் லைன்ல இருக்கேன் மா நீங்க யாரு? உங்களுக்கு யார் வேனும் ?"என்றார் யாரென தெரிந்துக்கொள்ளும் நோக்குடன்.

"ஹலோ சார்... நான் என் பெயரெல்லாம் முக்கியம் இல்ல சார். கதிர் கதிர் பத்திய விஷயம் தான் முக்கியம்". என்றாள் அழைகையின் ஊடே..

"கதிரா கதிரை பத்தி உனக்கு என்ன தெரியும் நீ என்கிட்ட உண்மை பேச தான் போன் பண்றத என்பதை எப்படி நம்பறது என்று கேட்டார். " கேட்க சொன்னது அவரின் வேலை... நான்கு பக்கமும் சிந்தித்து செயல்பட வேண்டி முக்கிய சுழ்நிலையில் அவர் இருப்பதால் அதனை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ள கேள்விகளையும் தன் சந்தேகத்தையும் வெளிபடுத்தினார்.

"என்னை நம்புங்க சார் கதிர் பத்திய சில தகவல்கள உங்ககிட்ட சொல்லனும் சார் கமாரஜர் ரோடு பக்கம் இருக்க பழைய கட்டடத்துக் கிட்ட இருந்து பேசுறேன் சார். எப்போ எனமேல சந்தேகம் வருன்னு தெரியாது" உங்கள நான் உடனே பாக்கனும் சார் என்று அவள் விசும்பலுடன் கூறிட

"ம்... ஒரு 20 நிமிஷத்துல அங்க இருப்பேன் என்றவர். தனது காரில் அந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்க கருப்பு நிற ஜாகுவார் ஒன்று இடித்து அவரின் காரையும் அவரையும் நிலைகுலைய வைத்து இருந்தது. எதிர்பாராத இந்த தாக்குதலில் சற்று சுதாரித்தவர் சடன் பிரேக்கிட்டு காரை நிறுத்தி இருந்தார்.

காரில் இருந்து இறங்கிய நல்ல உடல்வாகுடன் நான்கு அடியாட்களில் ஒருவன் அவரின் காரின் அருகில் சென்று "என்ன வக்கீல் சார் அடி பலமோ?" என்று ஏளன பேச்சுடன் தொடங்கியதும்.

முதலில் எதிர்பாரத விபத்து என்று நினைத்திருந்தவர் அவனின் பேச்சும் உடல் மொழியை கவனிக்கவும் அனைத்தும் திட்டமிட்ட வேலையே என்று புரிந்து கொண்டு காரில் இருந்து சாவகசமாக இறங்கியவர் அந்த போன்பேசிய பெண்ணும் அவர்கள் ஏற்பாடு செய்த ஆளாய் தான் இருக்கும் என்ற முடிவிற்கு வந்திருந்தார்.

'ஊருக்கு சற்று தொலைவில் இருக்கும் இந்த இடத்திற்கு வரவழைத்து என்ன செய்துவிட போகிறான். ஒன்னு பேசனும் இல்லை சாகடிக்கனும்.. முதல் ஒன்னு நடக்க வாய்ப்பே இல்லை. இவனுக்கும் பேச்சிற்கும் சம்மந்தம் இருந்தார் போல தெரியலை... இரண்டாவது கொலை செய்யனும் இவனுங்கள பார்த்தா அந்த வேலைக்கே கை தேர்ந்தவர்கள் போல் தான் இருந்தனர்'. இருந்தும் எந்த இடத்திலும் தன் பயத்தை காட்டிக்கொள்ளாமல் வெளியே தைரியமுடன் தான் பேசினார். "உங்களுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல உங்கள அனுப்பி வைச்சவங்க கிட்டதான் நான் பேசனும். அவனுக்கு போனை போடுங்க" என்றார் சற்றும் பிசிறு தட்டாத குரலில். அவரின் தைரியத்தையும் குரலில் உள்ள கம்பீரத்தையும் பார்த்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் அதிர்ந்து போய் பார்த்துக்கொள்ள

"ஹலோ உங்களைத்தான் என்னடா அனுப்பிவச்சவங்க யாருன்னு மறந்து போச்சா... வயசானவன சாகடிக்க இத்தனை பேரை அனுப்பி வைச்சவன்கிட்ட நான் பேசியே ஆகனும்.. மந்தரி ஆளவந்தான் தானே உங்களை அனுப்பினது ... நம்பர் வைச்சி இருக்கிங்களா இல்லை நானே போட்டு தரவா..." என்று மொபைலை எடுத்துக் கொடுக்க அந்த அடியாட்களில் ஒருவன் அவனிடம் இருந்த செல்போனில் மந்திரியின் எண்களை அழுத்தி காதிற்கு பொருத்தி இருந்தான்.

"ஹலோ என்னடா முடிச்சிட்டிங்களா?" என்றது ஒரு கரகரப்பாக குரல்.

"தலைவா இந்த ஆளு உங்ககிட்ட தான் பேசனும்னு ஜபூர் காட்டி நிக்கிறான்" என்றான் அலட்டல் இல்லாத குரலில்

"முட்டாள் முட்டாள் அவன் பேசனும்னு சொன்னவுடனே போனை போட்டு இந்த தான்னு தருவியா நாதாறி பயலே துப் உன்னையெல்லாம்" என்று பல்லை
கடிக்க

"தலைவா அந்த கிழம் நீ போட்டு தறியா இல்ல நான் போன் போடவான்னு சீன் போடுறான்" என்றதும்

"வக்கீல்ல கொஞ்சம் தெனாவட்டா பேசதான் செய்வாறு சரி போனை கொடு" என்றதும் அதை கொடுத்து விட்டு நின்றான் அந்த அடியாள்

"என்ன வக்கீலு என்னமோ பேசனும்னு சொன்னியாமே அதுக்கு முன்னாடி நானே ஒரு ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன். ஏய்யா வக்கீலு நாலு கிரிமினல் கேஸ எடுத்தோமா கையில காச பாத்தோமா கல்லா கட்டினோமான்னு இல்லாம ஏய்யா என்னையே நோண்டிக்கிட்டு இருக்க... இவனுங்க பூரா மாட்டு பயலுக ஒன்னு சொன்னா பத்தா செய்வானுங்க பாத்து பதுசா நடந்துக்க" என்றதும்

ஒரு நக்கல் சிரிப்பு சிரித்தவர் "நான் மோதுர ஆள் யாருன்னு தெரிஞ்சிதானே மோதுறேன்... என்னை மிரட்ட இத்தனை பேரா... அப்போ நீ பயந்துட்ட தானே அர்த்தம். இதுவே எனக்கு கிடைச்ச வெற்றி இல்லையா?" என்றார் சாதரணமாக

"யோவ் யோவ் வாயில வந்துட போகுது உன்னை போட்டு தள்ளிட்டு போக ரெண்டு நிமிசம் ஆகாது... இந்த வேலைக்கு மிரட்டலே போதும்னு நினைச்சதாலதான் நீ இன்னும் உயிரோட இருக்க... ஒரு தீ குச்சி போதும் உன்னை குடும்பத்தோட கொளுத்த ஒரு எவிடன்சும் இல்லாம ஹாயா என் வேலைய முடிச்சிட்டு போய்டுவேன். எதுக்கு அனாவசிய உயிரிழப்புன்னுதான் விட்டு வைச்சி இருக்கேன்". என்றவன் "கொடுக்குற காசு வாங்கிக்கிட்டு பொத்திக்கிட்டு போற வழிய பாரு ஒரு நாள் டையம் உனக்கு அதுக்குள்ள நல்ல முடிவா சொல்லு" என்று மிரட்ட

"உன் குடுமி என் கையிலு இருக்கு அதை மறந்துடாத ஆளவந்தான். எனக்கு ஏதாவது ஒன்னு நடந்தா மொத்த எவிடன்சும் சேரவேண்டிய இடத்துல சேர்ந்துடும் உன்னால முடிஞ்சத பாரு எனக்கு கொடுத்த அதே கெடு தான் உனக்கும் இந்த ஃபாக்டீரிய ஓபன் பண்ண கூடாது... காணாம போன கதிர் எங்கன்னு தெரியனும் அவன் உயிரோடதான் இருக்கானா இல்லையான்னு?" என்றதும் ஒரு நிமிடம் பலத்த அமைதி ஆளவந்தானிடம் "என்ன பதிலையே கானும் சீக்கிரம் பதில் சொல்ல தயாரா இருங்க" என்றவர் போனை அடியாட்களிடம் கொடுக்க அவர்களுக்கு என்ன ஆணை கொடுத்தானோ அடுத்த 5 நிமிடங்களில் ஆட்கள் சென்றிருந்தனர்.

இவை ஆனைத்தும் கேஷவிடம் கூறியதும் கோவத்தில் கை முஷ்டியை முறுக்கி "நீங்க இதுவரைக்கும் அவனை விட்டு வைச்சே இருக்க கூடாது மாமா.. அரசியல்வாதின்னு அதிகாரத்துல ஆடுறான்" என்றான் சீற்றத்துடன்

"கேஷவ் இப்போ அவனை எதுவும் செய்ய முடியாது.. நிலம் மட்டுமேனா காசை விட்டு எறிந்து வாயை அடக்கிடுவான் கீழே இருக்குறவன்ல இருந்து மேல இருக்கறவன் வரையிலும் அவன் கை பொம்மைங்க... இப்போ காணமபோன கதிர் பத்திய தகவல் வேனும் அதை வைச்சி தான் மேற்கொண்டு போகமுடியும்". என்றவர் தன் பேக்கட்டில் இருந்து இரண்டு பென்டிரைவ்வை எடுத்து ஒன்றை கேஷவிடமும் மற்றொன்றை சக்தியிடமும் கொடுத்து பத்திர படுத்தி வைத்தார்.

"மாமா இது என்றான்" கையில் வாங்கி பார்த்து.

"என்கிட்ட இருக்க ஆதாரத்தோட இன்னொரு காப்பி இதுல ஸ்கேன் பண்ணி வைச்சி இருக்கேன் நாளைக்கு எனக்கே ஒன்னு ஆனாலும்" என்றதும்

"மாமா" என்றவர் பேச்சை தடை செய்த கேஷவ் "எதுவும் ஆகாது மாமா நாங்க இருக்கோம்". என்று தைரியம் கூறியவன்

"ஆனா மாமா உங்களுக்கு அன்னைக்கு வந்தது பேக் கால்தான்னு நிச்சயம் தெரியுமா?" என்றான் கேஷவ் சந்தேகமா

"அது நிச்சயமா தெரியல கேஷவ் அந்த குரல்ல உண்மை இருந்தது.. ஆனா இந்த சம்பவமும் நடந்ததால மறுபடியும் அதை உண்மையா இருக்கும்னு நினைக்கல" என்றவர் அந்த எண்ணையும் எடுத்து கொடுத்தார்.

"சக்தி இந்த நம்பர் பத்திய தகவல்.எனக்கு கேதர் பண்ணி தா" என்றதும் அதை வாங்கியவன் cyber crime department தன் நண்பணிடம் பேசி அரை மணி நேரத்தில் விஷயத்தை வாங்கி விட்டான் சக்தி.

"கேஷவ் இந்த நம்பர் ஒரு பொண்ணோடது பெயர் ஸ்டெல்லா நேத்தியலிருந்து இந்த போன் ஸ்விச் ஆப்ல இருக்கு அவங்க சொன்ன அதே இடத்துலதான் ஸ்விச் ஆப் ஆகி இருக்கு ஒரு வேல இது சார் நினைக்கிறா மாதிரி அவங்க வேலையா இருக்குமோ" என்றான்.

"ம். இப்போ எந்த முடிவும் ஏடுக்க முடியாது சக்தி... மாமா சொன்ன இடத்துல போய் பார்ப்போம்" என்று சக்தியிடம் உறைத்தவன். மாமனாரிடமும் சில தகவல்களை பெற்று கொண்டு அங்கிருந்து புறப்பட்டு இருந்தான்.
~.

காலை முதல் கணவனின் வருகைக்காக காத்திருந்தவள் நேரம் கடக்க கடக்க வாடிய கொடியாய் துவண்டு போய் வாசலையே பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் . நேரத்தை பார்ப்பதும் வாசலை பார்ப்பதுமாய் இருந்தவள் நேரம் 9 நெருங்க கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு இப்பவோ அப்பவோ என்று உதிர தயார் நிலையில் இருந்தது.

"பாப்பா டிபன் ஆச்சி எடுத்து வைக்கவா?" என்றார் சமையல்கார பெண்மணி

"அக்கா கொஞ்சம் இருங்க அவர் வந்துடுவாரு.. அப்புறம் சூடா எடுத்து வைச்சிக்கலாம்". என்று அவருக்கு கூறியவள் அவன் வரும் வழியையே பார்த்திருந்தாள்.

சமையல்காரம்மா சங்கடத்துடனே "பாப்பா தம்பி காலையில சீக்கிரமாவே கிளம்பி போயிட்டாங்க" என்றதும் விழி விரித்து அவரை பார்த்தவள் "எப்போ வந்தாரு" என்றாள்.

"விடிஞ்சிதான் பாப்பா தம்பி வந்தாரு வந்த கொஞ்ச நேரத்திலையே கிளம்பி போயிட்டாரு" என்றவர் அடுத்த வேலை அவரை அழைக்க உள்ளே சென்று விட்டார்.

'அவர் வந்தாரா? ஏன் என்னை எழுப்பல? நான் இனி அவருக்கு வேண்டாமா? என்னை வெறுத்திட்டியா கேஷவ்? என்னை பிடிக்காம போயிடுச்சா?' என்று கண்களில் உதிர இருந்த நீர் துளிகள் உடைப்பு தகர்ந்து உருண்டு ஓடியது. கரத்தில் இருந்த அலைபேசியில் கணவனுக்கு அழைக்க அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்பதை கூறியது முயன்று முயன்று பார்த்தவள் கடைசியாய் கார்த்திக்கு அழைத்தாள்.

"ஹலோ..... கார்த்திக் ஹியர்".

"அண்ணா நான் கவி பேசுறேன்"

"சாப்பிட்டியா கவிமா... பையன் என்ன செய்றான் இன்னுமா தூங்கறான் ?"என்றான் அவள் கேள்வி கேட்பதற்கு முன்னதாகவே

"அவர் ஆபிஸிக்கு வரலையா?" என்றாள் சந்தேகமாக

"இல்லையே மா காலையிலையே சீக்கிரம் கிளம்பி வீட்டுக்குதான் வந்தான். இன்னும் ஆபிஸ் வரலையே" என்றவன்.
"என்னமா மறுபடியும் ஏதாவது பிரச்சனையா" என்றான்

"இல்ல இல்ல ணா" என்று அவசரமாக அதை மறுத்தவள் தொலைபேசியை வைத்து விட்டு காலைக் கட்டிக்கொண்டு அப்படியே அதில் தலையை கவிழ்திருந்தாள்.

என்ன சமாதனம் கூறிக்கொண்டாளும் அவனின் பாரா முகம் அவளை பலகினமாக்கியது. காணும் எதையும் வெறுத்தாள். தன்னையே திட்டிக்கொண்டாள். ஏதோ ஒரு அட்ரஸ் இல்லாத லெட்டரை வைச்சி உன் புருஷனையே நீ தப்பா நினைப்பியா அவன் சொல்ல வந்தத நீ பொறுமையா கேட்டியா.. நீ அள்ளி கொட்டின வார்த்தை அவனை எப்படி சுட்டு இருந்தா உன்னை தவிர்க்க நினைச்சி இருப்பான். என்று உறைத்தது.

என் அவசரபுத்தி என் வாழ்க்கைக்கே உலை வச்சிட்டுதே என்று நினைத்து நினைத்து கலங்கியவள் அந்த முகம் தெரியாத சாருகேஷின் மேல் கோவம் கொண்டாள் 'உண்மை என்னன்னு தெரியம இன்னுமும் என் புருஷன் மேல வன்மத்தையும் பழியையும் சுமத்திக்கிட்டு திரியுற.. உன் தங்கையும் பத்தி தெரியல உன் நண்பனை பத்தியும் தெரியல.... என் புருஷனை பத்தி நான் தெரிஞ்சிக்கிட்டேன் அவர் எப்படி பட்டவர் உன் தங்கைகூட அவர் அண்ணானாதான் பழகினார்னு உனக்கும் புரிய வைப்பேன் இதோட உனக்கு ஒரு முற்று புள்ளி வைக்கிறேன்டா.. எங்க விஷயத்தில் நீ தலையிடாம செய்றேன் டா' என்றவள் ஒரு முடிவோட வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறி அமர்ந்தாள்

டிரைவரிடம் சாருகேஷ் வீடு தெரியும்ல என கேட்க அவர் திகப்புடன் கவியை பாரக்க சாருகேஷ் வீட்டுக்கு போங்க அண்ணா என்று கூறியவள் அவனிடம் பேச வேண்டிய வார்த்தைகளை தேடி பிடித்துக்கொண்டு இருந்தாள்.

வெளியே இரண்டு காவலாளிகள் புதிதாய் அவளை பின் தொடர்வதை கவனித்தவள் டிரைவரிடம் கூறி வண்டியை நிறுத்தி அவர்களிடம் யார் என்று விசாரிக்க கணவனின் ஏற்பாடு என்று அறிந்தவள் தனக்கு தெரியாமலையே தன்னை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தன்னை பாதுகாத்தவன் மேல் இன்னும் காதல் கொண்டாள்.

30 நிமிட பயணத்தில் கார் ஒரு பெரிய பங்களாவின் கேட்டின் முன் நின்றது
ஹார்ன் அடித்து கேட்டை திறந்து விட சொல்லி டிரைவர் கூற அவன் அருகில் வந்த செக்கீயூரிட்டி "இங்க யாரும் இல்ல" என்று மறுக்க டிரைவர் விடாமல் பார்க்க வேண்டும் என்றிட அவர் இருப்பதை ஒத்துக்கொண்டவன் இப்போ சார் யாரையும் பார்ப்பது இல்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்ப முயற்சித்தான்.

காரில் இருந்து இறங்கியவள் விடுவிடுவென சிறிய கேட்டின் வழியே உள்ளே நுழைந்தாள். இருபக்கமும் பெரிய தோட்டம் இருக்க நடுவில் சென்ற பாதை வழியாக வீட்டை அடைந்தவள் வாசலில் நின்றாள்.

மனதில் எழுந்த கோவத்திலும் வேகத்தில் இதுவரையிலும் வந்து விட்டவள் சற்று தயங்கி ஒரு நிமிடம் தான் நின்றாள். தன் கணவனின் நேற்றை வலி கண் முன் விறிய சற்றும் தாமதிக்காமல் உள்ளே நுழைந்தவள் "சாருகேஷ் ... சாருகேஷ்"என்று சத்திமிட்டு அழைக்க அது வீடு முழுவதும் எதிரோலித்து இருந்தது.

வீட்டு வேலைகாரன் ஒடிவந்து "யார் மா யார்மா நீங்க?? ஏன் உள்ள எல்லாம் வந்திங்க ??உங்களுக்கு யார் வேணும்?? என்று கேட்க

"எங்க யா?? எங்க உள்ள முதாலாளி?? அவர தான் பார்க்கனும். கூப்பிடு..கூப்பிடு.." அவர என்று சற்றும் குறையாத கோவத்துடன்
நின்றிருந்தாள்.

வீட்டு முகப்பில் இருந்து கடைசி வரையும் பணக்கார செழுமை நிறைந்து இருந்தது ஆட்கள் எவரும் இல்லை போலும் அவ்வளவு சத்தம் கொண்டு பேசியும் சாருகேஷ் மட்டுமே வெளியே வந்திருந்தான்.

ஜிம்மில் இருந்து டிராக் பேண்ட் மற்றும் பனியனுடன் வெளியேறியவன் கையில் இருந்த சிறிய துண்டுடில் முகத்தில் இருந்த வியர்வை துளிகளை துடைத்தவாறே ஹாலுக்கு வந்தான்.

நல்ல ஆரோக்கியமான தேகம் கொஞ்சம் முரட்டு தன்மை கொண்டது போல் இருந்தது அவனின் முகம்... கண்களில் மருந்துக்கும் உயிர்ப்பில்லை தாடியுடன் இருந்தவன் மொத்தத்தில் அவன் பழைய சாருகேஷாக இல்லை.

"வாவ்... ஆர் யூ... பார்கவி ஹாய் எப்படி இருக்க.... வாட் ய சர்பிரைஸ்..." என்றான் அவளை எதிர்பாரமல் சந்தித்ததை மனதில் வைத்து வினவியபடியே எதிரில் இருந்த சோபாவை அவளுக்கு கை காட்டி அவனும் அமர

அவள் அலட்சிய பார்வையுடன் "உன்கூட உட்காரந்து கதை பேச வரல.." என்று அவனை நக்கலாக பார்த்தவள் "எப்படி நல்லா இருப்பேன்... உன்னை போல ஒரு முட்டாளை என் புருஷன் நண்பனா வைச்சிருந்தா, நாங்க எப்படி நல்லா இருங்கரதாம்" என்றாள் எரிமலையாக

"ஒற்றை புருவத்தை உயர்த்தி வாட்" என்றான் அவளை முறைத்து

"வாட் ஐ சே நீ ஒரு வடிகட்டின முட்டாள்..." என்றாள் இன்னும் கூடுதல் சத்தம் கொடுத்து அவள் கூறிய சொற்களில் கோபம் கொண்டவன் ஆத்திரத்துடன் ஒரே தாவலில் அவள் கழுத்தை நெறுக்கி சுவரோடு நிற்க வைத்திருந்தான்.

அவனிடம் இருந்து போராடி கைகளை உதறிவிட்டு தள்ளி வந்தவள் "பின்னே என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்காமலே இத்தனை வருஷமும் என் புருஷன் மேல பகைய வளர்த்து அவரை பழிவாங்க பாக்குற உன்னை என்னன்னு சொல்றது... உன் தங்கச்சி எப்படி இறந்தான்னு தெரியுமா? அவ யாரை காதலிச்சான்னு தெரியுமா?" என்றவள் அவளுக்கு நடந்ததை கூற

ஒரு உச்சி கொட்டியவன் "ஓ.. உன்கிட்ட நல்லவனா நடிச்சி உன் புருஷன் உனக்கு இப்படி ஒரு கதை கட்டி விட்டானா?" என்றான் அவனை நம்பாமல்

"தூங்கரவங்கள எழுப்பாலாம் தூங்குறாமாதிரி நடிக்கிறவங்கள???நெவர்" என்றவள் "உனக்கு ஆதாரத்தோட நிரூபிச்சி என் புருஷன் நல்வன்னு உன் வாயால சொல்ல வைக்கல, இந்த தாலிய அவர் கையால வாங்கினதுல அர்த்தமே இல்ல" என்றவள் அங்கிருந்து புறப்பட்டு சென்றாள்.

அவள் செல்லும் வழியையே பார்த்துக்கொண்டு இருந்தவன் சில்லி கேர்ள் என்றபடி எழுந்து சென்று விட்டான்.
~

இந்த காதல் கதைகளில் தான் எத்தனை எத்தனை வேடிக்கை வினோதங்கள். வேண்டும் என்று நெருங்கியபோது வேப்பங்காயாய் கசந்த காதல் இன்று அவள் வேண்டாம் என்று ஒதுக்கும் போது அவனுக்கு தேனாய் தித்திப்பாய் இனிக்கின்றது.

காதல் ஒருவனை சுயம் இழக்க வைப்பதில் வல்லமை கொண்டது அதற்கு சித்துவும் விதிவிலக்கல்லவே அன்று அவளிடம் சொல்ல மறுத்த காதலை இன்று சொல்லிவிட துடித்துக்கொண்டு இருக்கிறான்.

"சார்... சார்..." இந்த என்று ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவர் வந்து அவனை அழைக்க

கனவில் இருந்து எழுந்தவன் "ம் சொல்லு சுஜித்" என்றான் அந்த சர்வரிடம்.

"சார் கோயம்பத்தூர் காலேஜ்ல இருந்து வந்து தங்கினாங்களே அவங்களுடைய புக் ஒன்னு மெத்தைக்கு அடியில இருந்தது.. நேத்துதான் பார்த்தேன். கொடுக்க மறந்துட்டேன் இந்தாங்க சார்" என்று கொடுக்க

"அப்படியா..." என்று வாங்கியவன் அதை பிரிக்காமல் "ரூம் நம்பர் என்ன?" என்றான்.

"47 ல இருந்தவங்க சார் அவஙக கூட உங்க கூட வீட்டுக்கு வந்து இருந்தாங்களே அவங்க ரூம்ல இருந்தது சார்" என்றான்.

அவன் கூறியதுமே ஆர்வமாக புத்தகத்தை புரட்டியவன் வித்தியா என்று அவின் பெயர் எழுதிய பேப்பரை தன் விரல் கொண்டு வருடியவன் அவனை போகுமாறு சைகை செய்து இருந்தான்.

விதுமா நீ என்ன நினைச்சியோ ஆனா உன்னை மட்டுமே என்னை நினைக்க வைச்சிட்ட... உன் பெயர் கூட எனக்கு ஒரு அழகான ஓவியம் போல தெரியுது... உன்னை நேசிக்க ஆரம்பிச்சதுல இருந்தே எனக்கு எல்லாம் ஆழாக தெரியுது டி செல்லம்.. உன்னை பார்க்கனுமே உன் கூட பேசனுமே என்று தனக்குள்ளே பேசி

புத்தகத்தை புரட்டியவன் கண்களை கட்டி போட்டது. அவள் விரல் செய்த மாய வித்தைகளில்... காதலை கொண்டு கவிதை வடித்தவளின் கைவிரலை பற்றி முத்தம் கொடுக்க வெகுவாய் அவன் மனம் ஏங்கியது அவள் கொடுத்த முதல் முத்தத்தினை நினைத்து பார்த்தவன் மனம் இன்னும் அவளை தேடியது.

அவனை மட்டுமே நினைத்து வடித்த கவிதைகள் கண்ணீர் பட்டு அழிந்தது இருந்தது சில இடங்களில்... ஒரு சில இடங்களில் சிரித்தாள்... ஒரு சில இடங்களில் அழுதாள்... சில சிடங்களில் கோபம்.. சில இடங்கலில் சிணுங்கல்கள்... என்று அவனை பற்றியே வரித்திருந்தாள்.

இனியும் அவள் குரல் கேட்காமல் இருக்க மூடியாது போக அவளுக்கு அழைத்திருந்தான்.

கல்லூரியில் மதிய இடைவேலையில் தனது தோழிகளுடன் அமரந்திருந்தவளுக்கு சித்துவிடம் இருந்து அழைப்பு வரவும் ஒரு நிமிடம் தன்னை கிள்ளி பார்த்துக்கொண்டாள். முழு அழைப்பு முடிந்து மறுபடியும் அடுத்த அழைப்பு வர முக்கியமான விஷயமாய் இருந்தால் ஒழிய இவன் எனக்கு போன் பண்ண மாட்டான் இப்போ தவிர்ப்பதும் சரியல்ல என்று தோன்ற இரண்டவது அழைப்பின் இறுதியில் பேசியை எடுத்தாள்.

"ஹலோ" என்றவள் குரலில் தவிப்பு வெறுமை என்று எதையும் கண்டறியமுடியா ஒரு சாதரண விளிப்புடன் அழைத்திருந்தாள்.

அவளின் குரலை கேட்டதும் அவன் உடலிலும் மனதிலும் ஏதோ குளிர்ச்சியாய் பரவியது போல சிறு நிகழ்வு நடந்து அவனை புத்துணர்ச்சி கொள்ள வைத்தது. "வது" என்று அவன் குரலில் அவனது மொத்த சந்தோஷத்தையும் கரைத்து அன்புடன் அழைத்தான்.

அவளால் அவன் குரலின் மாறுபாட்டை அறிந்துக்கொள்ள முடிந்தது. இருந்தும் இது எதற்கான அழைப்பு என்பதுதான் விளங்கவில்லை சிறிது நேர ஆராய்ச்சிக்கு பின் தன்னை சமன்படுத்தியவள் "ஹலோ" என்றாள் அடுத்த வார்த்தை அவனிடத்தில் பேச முடியாமல் தொண்டையில் சிக்கியது போல் தவித்தாள்.

"வதுமா எப்படி இருக்கடா?"என்றதும் முற்றிலும் உடைந்து போய் தரையில் அமர்ந்து வார்த்தைகள் ஏதுமின்றி அழுகையையே பதிலாய் கொடுத்தவள் இனியும் அவனிடம் பேசினாள் பலகீனப்பட்டு உடைந்து போய் விடுவோம் என்று கையில் இருந்த போனை கட் செய்து பேகில் விட்டு எரிந்தாள்.

அவளின் அழுகை கோபம் எதற்கு என்று புரியாமல் மறுபடி மறுபடியும் அவளுக்கு அழைக்க அது சுவிச் ஆப் என்ற செய்தியை தாங்கி வந்தது.

அவளின் நிலை என்ன? ஏன் அழுதாள்? ஏன் பேசவில்லை?என்று மண்டை குழம்பியவன். இனியும் அவளை பார்க்காமல் இருக்க முடியாது என்ற எண்ணம் வலுக்க மறுநாளே கோயம்பத்தூர் பறக்க தீர்மானித்து விட்டான்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 40
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN