காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 42

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கோயம்பத்தூர்

விடிந்தும் விடியாத காலைவேளை பறவைகள் கீச் கீச் சத்தம் காதுகளுக்கு இனிமையாகவும், மிதமான குளிர் உடலுக்கு இதமாகவும் இருக்க போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு தலையில் இடியே விழுந்தாலும் எந்திரிக்க கூடாது என்று கனவில் பல மாடல் அழகிகளுடன் உலாவிக் கொண்டிருந்தவனின் கையடக்க அலைபேசி கோபியின் தூக்கத்தை கெடுத்து இருந்தது.

ஜகிரி தோஸ்த்து ஜிகிரி தோஸ்து என்று இரண்டு மூன்று நிமிடங்களாக விடாது கூவி அழைத்து அவன் கனவுகளை கலைத்து எழுப்பியது.

இப்போதான்டா ஒரே ஃபாமுக்கே வந்துருக்கேன் அதுக்குள்ள எவன்டா இப்படி என்ட் கார்டு போடுறது என்று திட்டியபடியே போனை போர்வைக்குள் எடுத்துவந்து ஸ்வைப் செய்து தூக்க கலக்கத்திலேயே காதில் வைத்து பேச ஆரம்பித்தான்.

ஹலோ என்று கடுப்பு பாதியும் தூக்கம் மீதியுமாய் இருந்தது அவன் குரலில்

"டேய் தூங்குமூஞ்சி இன்னுமா தூங்கிட்டு இருக்க? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம." என்றான் சித்தார்த்.

"அந்த பாசி பருப்புலாம் எங்களுக்கும் தெரியும். நீ எதுக்கு மிட் நைட்ல கால்பண்ணிட்டு இருக்க?" என்றான் கடுப்புடனே

"என்னது மிட் நைட்டா!!!... கோழி கூவி ஒரு மணி நேரம் ஆகுதுடா தண்டசோறு" என்று அவனை நக்கலடிக்க

"அந்த கோழி, குழம்புல கொதிக்கும் போதுதான்டா எழுந்துரிப்பேன். இவ்வளவு சீக்கிரம் போய் என்னடா கழட்டனும்" என்று எரிச்சலாய் கூற

"இந்த ஈத்தர பேச்சிக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல... மவனே வந்தேன்னு வை மெரிமெரின்னு மெரிச்சிடுவேன்" என்று சித்து கூறும் போதே வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

'காலையிலயே இவந்தான் கடுப்பேத்துறான்னா.. வெளியே வேற எந்த கிரகம் வந்து நிக்குதோ தெரியல' என்றபடி வாசல் கதவினை திறக்க அங்கே சித்தார்த் நின்றுக் கொண்டிருந்தான்.

கண்களை கசக்கி தன்னை ஒருமுறை கிள்ளி பார்த்துக்கொண்டவன் வலியின் காரணமாய் ஸ்ஆ என்று அந்த இடத்தை தேய்த்துவிட்டபடி டேய் மாப்பள என்னடா ஒரு போன்கூட பண்ணல திடுதிப்புன்னு வந்து இறங்குற அதும் இவ்வளவு காலையிலேயே என்று கூறியவன் அவனை உள்ளே அழைத்து சென்றான்.

"உன்னை பாக்கனும்னு மனசு சொல்லிட்டே இருந்துச்சி அதான் மச்சி" என்று சாவகசமாய் சோபாவில் அமர்ந்தவனை முறைப்புடன் பார்த்து இருந்தான் கோபி.

"நீ எந்த பொய் வேனா சொல்லு மாப்ள, ஆனா என்னை பார்க்கத்தான் வந்தேன்னு அண்டபுலுகு புலுகாத.. நான் மட்டும் இல்ல இதை படிக்கிறவங்க கூட நம்ப மாட்டாங்க" என்று கூறி தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி அவனை ஆராய்ந்து கொண்டு இருந்தான் கோபி.

முகத்தில் எப்போதும் உறைந்து இருந்த கீற்று புன்னகையுடன், கண்களோ தன் கள்ளதனத்தை எங்கே நண்பன் கண்டுவிடுவானோ, என்று திருட்டுதனம் செய்து உதடுகள் பொய்களை உதிர்க்க தன்னை தயார்படுத்தி கொண்டிருந்தது.

"நீ சரியில்லையே ஒரு மார்கமா இருக்க முகத்துல தௌசன்வாட்ஸ் பல்பு எரியுது கண்ணுல திருட்டு முழி தாண்டவமாடுது மூஞ்ச பாத்த அப்படி ஒன்னும் காரணம் இல்லாம வந்தவன் மாதிரியே தெரியலையே!!" என்று தடையில் கைவைத்து உரக்க பேசி யோசித்து கொண்டிருக்க

"அடேய்,அடேய்... உன் அறிவுல தீய வைக்க, பிரெண்ட பாக்க நேரம் காலம் வேணுமா மச்சி?? என்னை ஆராய்ச்சி பண்ணினது போதும் எங்க டா வீட்டுல ஒருத்தரையும் காணும்?" என்று வீட்டில் பார்வையை சுழலவிட்டபடியே நண்பனின் துப்பறியும் வேலையயை கொஞ்சம் நிறுத்தி வைத்தான் சித்தார்த்.

"அம்மா, அக்கா வீட்டுக்கு போய் இருக்காங்க வர 1 வாரம் ஆகும் மச்சி என்றபடி வெளியே இருந்த பால்பெக்கட்டையும் செய்திதாளையும் உள்ளே எடுத்து வந்தவன் அவனுக்கு காபியை கலக்க சமையல் அறைக்குள் சென்றவன் அங்கிருந்து எட்டி பார்த்தபடியே அவனை பார்க்க

செய்தி தாளில் மூழ்கி இருந்தவன் "மச்சி ஒரு வாரம் இங்க தான் ஸ்டேயிங்" என்றவன் "என்ன டிபன் டா" என்றபடி பார்வையை அதில் பதித்து இருந்தான்...

"வந்த விஷயத்தை சொல்லாம எப்படி அலைக் கழிக்கிறான் பாரு.. டிபனா கேக்குற ஓரு பாட்டில் விஷத்தை வைக்கிறேன் டா" என்று உறக்க முனுமுனுக்க

"உன் சமையல் அந்த லட்சணத்துல தான் இருக்கும் எனக்கு தெரியும் மச்சி எல்லாத்துக்கும் தயாராதான் வந்து இருக்கேன். அந்த கருமத்தை சீக்கிரம் பண்ணி வை கொட்டிக்கிட்டு முக்கியமான ஒரு இடத்துக்கு போகனும்" என்று அசராமல் காலை வார

அவனுக்கும் தனக்குமாய் காபியை கலந்து எடுத்து வந்தவன் 'ரொம்ப ஓவரதான்டா போர என்று கூறி இன்னைக்கு தெரியும் டி உன் விஷயம் வில்லங்கமா இல்ல விவகாரமான்னு' என்று மனதில் நினைத்தான்.

~

இருவரி கவிதையாய் இருந்த இருவரும் காலை முதலே ஒருவர் பார்வையால் தொடர்ந்து இருந்தனர். மெத்தையில் அவன் அணைப்பின் இறுக்கத்தில் இருந்தவள் கண்விழித்தபோது அவனின் மார்பின் இளஞ்சூடுட்டின் கதகதப்பில் புரண்டு படுக்க அந்த அசைவில் கண்விழித்தவன் சட்டென அவளை விட்டு எழுந்து அமர்ந்தான்.

'இப்போ எதுக்கு இந்த ஓவர் ரியக்ஷன் டார்லிங் நீ இப்படி செஞ்ச கோச்சிக்கிட்டு என் பிரணநாதா உங்களை இம்சிக்க மட்டேன்னு சொல்லி உங்கள விட்டுட்டு அம்மாவீட்டுக்கு போய்டுவேன்னு நினைச்சி பண்றிங்களா?? பண்ணுங்க பண்ணுங்க உங்க ஆட்டம் எதுவரைக்கும் போகுதுன்னு நானும் பாக்குறேன் மிஸ்டர் கஞ்சி பவுடர்' என்றாள் மனதினுள்

காலையில் சீக்கிரமே கிளம்பிய கேஷவ் "எனக்கு முக்கியமான வேலை இருக்கு உனக்கு டிரைவர் அண்ணா வருவாங்க நீ பத்திரமா போயிட்டு பத்திரமா வா.. உனக்கு செக்கீயூரிட்டிக்கு ஆள் கூட வருவாங்க எதுனாலும் எனக்கு ஒரு கால் பண்ணு" என்று தன் வேலையே கண்ணாய் இருப்பது போல் அவள் பாதுகாப்பை பற்றி கூறியவன் தன் அலுவலக பையை எடுத்துக்கொண்டு கிளம்ப

'ரொம்பதான் சின்சியரு முகத்தை பார்த்து சொல்லமாட்டாரோ ம்கூம்' என்று அவன் அறியாமல் பழிப்பு காட்டி நொடித்தவள் 'ம் போன் அது உங்களுக்கும் தேவையே இல்லாத ஒன்னு... எப்போ நான் போன் பண்ணாலும் நாட் ரீச்சபல்ன்னு வந்து தொலைக்குது இதுல ஒரு கால் பண்ணி சொன்னா உடனே வந்துருவாரக்கும்' என்று அவனை மனதில் வறுத்து வெளியே சாதரணமாய் முகத்தை வைத்துக் கொண்டாள்.

'இவ ஏதோ மைண்ட் வாய்ஸ்ல பேசுறா போல எந்த பதிலும் தராமா என் முகத்தையே பாத்துட்டு இருக்கா மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறிடுமோ? நேற்று சாருகேஷ் வீட்டுக்கு சென்றுவந்தது போல மறுபடியும் ஏதாவது ஏடகூடமாய் செய்துவிடுவளோ? அவனிடம் வாளண்டிரியாய் போய் தலையை கொடுப்பாளோ!!' என்று நினைத்தவன் தன் அமைத்த செக்கீயூரிட்டிகளிடம் பேசியவாறு விறுட்டென கிளம்பி வெளியே சென்றுவிட்டான்.

அவன் சென்றுவிட்டான் என்பதை ஊர்ஜிதபடுத்திக் கொண்டவள் அவர்களது அறையில் இருந்த உத்ராவின் புகைபடத்தை எடுத்து தன் புத்தகத்துக்குள் மறைத்து வைத்துக்கொண்டவள் தானும் கிளம்பி கல்லூரிக்கு சென்றிருந்தாள்.

~

மாணிக்கத்திடம் இருந்து தகவல்களை பெற்ற கேஷவும் சக்தியும் பழைய காமராஜர் சாலை இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

கீரிச் என்று சத்தத்துடன் வண்டி வந்து நின்றதும் அதில் இருந்து இறங்கிய கேஷவும் சக்தியும் பைக்கை சைட் ஸ்டேன்டில் நிற்க வைத்துவிட்டு சுற்றிலும் பார்வையை ஓட்டி இருந்தனர்.

பழைய சாலை என்று பெயருக்கு மட்டும் இல்லை அதன் அமைப்பும் அப்படி தான் இருந்தது. குண்டும் குழிகளுமாய் ஆங்காங்கே தார் சாலை பெயர்ந்து கொஞ்சம் சேறும் சகதியுமாய் இருந்தது. மூன்று சாலைகளாக பிரியும் அந்த பகுதியில் சுற்றிலும் மக்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை முன்னொரு காலத்தில் நிச்சயம் விவசாய நிலங்களாக இருந்திருக்க வேண்டும் இப்போது பிளாட்டுகளாக மாறி இருக்கின்றன.

சக்தி என்னடா மாமாவ இந்த இடத்துக்கு அந்த ஸ்டெல்லா வர சொல்லி இருக்காங்க என்று அந்த இடத்தை பார்வையால் ஆராய்ந்தான்.

"கதிரை பத்திய ஏதோ ரொம்ப பெரிய விஷயம் அந்த ஸ்டெல்லாவுக்கு தெரிஞ்சி இருக்காலம் கேஷவ்... அதான் ரொம்ப ரகசியமா சந்திக்க வரசொல்லி இருக்கலாம் இல்ல அது ஆளவந்தனோட வேலையா கூட இருக்காலாம்." என்றவனின் பார்வையில் பக்கத்தில் சிறிது தூரத்தில் தள்ளி தெரிந்த பிளாட்டின் முன்னால் நாற்காலியில் அமரந்திருந்தவன் தெரிந்தான். அவனை நோக்கி சென்ற சக்தி நேத்து சாயங்காலம் ஆறு மணிக்கு மேல இங்க ஒரு பொண்ணு வந்தத பார்த்திங்களா என்றான்.

அவனது விரைப்பான உடலும் வெள்ளை சட்டை மற்றும் காக்கிபேண்ட் சகிதம் நின்றிருந்தவனின் தோரணைத் தான் ஒரு காவல் துறையை சேர்ந்தவன் என்று சொல்லாமல் சொல்லியது. சக்தியை பார்த்தும் தன் வணக்கத்தை முதலில் வைத்தவன் அவன் கேள்விக்கு பவ்யமாகவே "பாக்கலிங்க" என்று பதில் அளித்திருந்தான்.

'சே.. எந்த பக்கம் போனாலும் கேஸ் ஓபன் பாயிண்டை பிடிக்க முடியலையே' என்று நினைத்து வந்துகொண்டிருக்க கேஷவின் கரங்களில் ஹார்டின் வடிவத்தில் உருளை உருளையாய் மணிகளை கோர்த்ததுப் போல் பலபலத்து கிடந்த கைசெயினை முன்னும் பின்னும் திருப்பி பார்த்துக்கொண்டு இருந்த கேஷவ் சக்தி அருகில் வரவும் இங்க பார் சக்தி என்று அவனிடம் கொடுத்தான்.

இது எங்க கிடைச்சது கேஷவ் என்று அதை கைகளில் வாங்கியவனின் பார்வை அந்த செயினை ஆராய்ந்தது.

"அதோ அங்கு இருக்க அந்த பழைய கட்டடத்தின் பின் பக்கம் வேலி கம்பில மாட்டி இருந்துச்சி சக்தி" என்று அப்பகுதிக்கு அழைத்துக்கொண்டு போய் காண்பித்தான்.

அறுந்து போயிருந்த கைசெயினில் கடைசி பகுதியில் KS என்று ஹார்டின் வடிவில் கற்கள் பொறிக்கப்பட்டு இருக்க அது தங்கமாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்த சக்தி வேறு பொருள் ஏதாவது கிடைக்கின்றதா என்று சுற்றும் முற்றும் கால்களால் இலைச்சறுகுகளை தள்ளி பார்த்தான்.

'எதுவுமே இல்லாததிற்கு இது ஒன்றாவது கிடைத்ததே' என்று சக்தி நினைத்திருக்க சக்தி "இந்த கைசெயின் பார்த்த ஒரு பொண்ணோடுது மாதிரி தெரியுது உனக்கு என்ன தோனுது" என்று தன் எண்ணத்தை பகர்ந்தான் கேஷவ்

"என்னோட யூகமும் அதுதான் டா நிச்சயமா இது ஒரு பொண்ணோடது தான் கேஷவ்." என்றவன் மூளையும் மனதும் பலவாறாக கணக்கிட்டது.

இந்த கைசெயினை வைச்சி அந்த பொண்ணை கண்டுபிடிக்க முடியுமா சக்தி என்று தன் கேள்வியை சக்தியின் முன் நிறுத்தி இருந்த கேஷவின் தோள்களில் கையை வைத்து அமைதிபடுத்தியவன்

முடியை வைச்சே கேஸை கண்டுபிடிச்சிருவோம் டா போலீஸ். இந்த கேஸ்ல நமக்கு வலுவான ஆதாரமா இந்த கைசெயின் கிடைச்சிருக்கு டோன்ட் வொரி மச்சி இதோட முத்திரை வைச்சி நகைகடைய கண்டுபிடிக்கலாம் நமக்கு ஆள் சிக்காம போகாது என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்தவனின் வாகனம் பிரபல நகைகடையின் முன் நின்றது.

~

கவி, தியா மற்றும் ஷீலா மூவரும் கல்லூரி வளாகத்தில் மரத்தடி பெஞ்சில் அமர்ந்து கொண்டு ஆளுக்கு ஒரு சிந்தனையில் மூழ்கி இருந்தனர்.

முதலில் தன்னிலை பெற்ற ஷீலவே தன் பக்கம் அமர்ந்து இருந்த கவியையும் தியாவையும் பார்த்து 'நமக்குதான் மாமியார் வீட்டு கவலைனா இவங்களும் எதையோ யோசிக்கரது போல தீவிரமான யோசனையில உட்காந்து இருக்காளுக' "ஏய் ஏன்டி உன்னைத்தான் ஏய் கவி" என்று அவளை உலுக்கினாள் ஷீலா

"பச் என்னடி?" என்று ஷீலாவின் உலுக்கலில் அவளை சிடுசிடுத்தவள் "இப்போ எதுக்கு நைநைன்னிட்டு இருக்க?" என்று அவளை முறைத்தாள்.

"ஆமாடி கேக்கமாட்ட... நீ ஏதோ கோட்டையில கொடிய நாட்ட யோசிக்கிற அவ என்னடான்னா கப்பலே கவுந்தா போல உட்காந்து இருக்கா. மாமியார் வீட்டுல பல சிக்கலுக்கு நடுவுல இருக்க நானே கொஞ்சம் தெளிவா சுத்திட்டு இருக்கேன்!" என்று இருவரையும் பார்த்தவாறு கூற

"மேடம் உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று கேட்டுக்கொண்டே அவளை நக்கலாக பார்த்தாள் கவி.

அசடு வழிய சிரித்துக்கொண்டே "இப்போ இல்ல ஆனா இந்த மாற்றம் எதனாலன்னு எனக்கே தெரியவே இல்லை டி எப்படி எந்த சாமிவந்து நின்னதோ! பச்..." என்று தோளை குளுக்கியவள்... "ஒரே வீட்டுல இருந்தாலும் தனியா இருக்கா மாதிரி பீல் பண்ணேன். பட் இப்போ கொஞ்சம் பரவாயில்லை மூஞ்சை திருப்பி போறதுக்கு பதிலா பட்டும் படாமலும் பேசுறாங்க எப்படின்னு தான் தெரியல ஆச்சர்யமா இருக்கு போக போக இன்னும் மாறும் மாத்தனும்." என்றவறே தூரத்தில் இருவர் நடந்து வருவதை பார்த்தவள்.

கண்களை சுறுக்கி அவர்களை நன்றாக உற்று பார்த்தவள் கவி அங்க பாரு அந்த முகத்தை எங்கயோ பாத்து இருக்கேன். என்று அவர்களை கைகாட்ட

அங்கு வருபவர்களை பார்த்த இருவர் இருவிதமான மனநிலையில் இருந்தனர். தூரத்தில் இருந்த நபர் அருகில் வர வர கால்கள் வேறோடியது போல் உணர்ந்தாள் தியா. இவன் எப்படி இங்க அதுவும் நேத்து போன் பண்ணவன் இன்னைக்கு இங்க வந்து இருக்கான் இவன் தெரிந்து செய்றானா? தெரியாம செய்றானா? என்னை உயிரோட சாகடிக்கிறான்." என்று மனதினில் புலம்பியவள். அவன் அருகில் வர வர தியாவின் மனம் அவள் கட்டில் இருந்து நழுவியது.

கண்களை கட்டி இருட்டில் ஒளியை தேடுவது போல் திண்டாடி இருந்த கவிக்கு நண்பனின் வரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. "ஏய் அவனை தெரியலையா! அவன் சித்தார்த் டி..." என்று ஷீலாவிற்கு நியாபகபடுத்தியவள், "வா வா சித்து வா கோபி என்னடா காலையிலையே சர்பிரைசா ரெண்டுபேரும் ஒன்னா வந்து இருக்கிங்க?" என்றவாறு இருவரையும் வரவேற்றாள்.

"உங்களுக்கு பாடம் எடுக்குற வாத்தியாரு நல்லா இருக்காரா? இல்ல அரைமென்டால் ஆகிட்டாரான்னு பார்த்துட்டு போலாம்னுதான் வந்தோம்" என்று நக்கலடித்தவனை முறைத்த தியாவை பார்த்து அடங்கிய கோபி 'நீயே கேளு வந்ததுல இருந்து நானும் கேக்குறேன் சிரிச்சி சிரிச்சே மழுப்பறான்' என்று உள்ளுக்குள் நினைத்தவன் சித்துவின் பதிலை ஆவளுடன் எதிர்பார்த்து இருந்தான்.

அவள் கேள்வியில் ஒரு கையை பேக்கட்டில் நுழைத்து சிரித்தவன் "சும்மா ஒரு ரிலக்ஸேஷன் தான் டா... ரெஸ்டரண்ட் வொர்க் போயிட்டு இருக்கு பைனல் ஸ்டேஜ் எனக்கு உங்க எல்லாரையும் பார்க்கனும் போல இருந்துச்சு அதான் ஒரு விசிட் அடிச்சிட்டு போலாம்னு வந்தேன்." என்று கண்கள் இரண்டிலும் தன் உள்ளம் கவர்ந்த தேவதையின் உருவத்தை நிரப்பிக்கொண்டவன் இதழில் மென்னையாக இருந்த புன்னகை விரிந்து அவன் கன்னத்தில் குழி விழும் அளவு சிரித்தபடி கவிக்கு பதிலளித்தான்.

"காலைல கேட்டா உன்னைதான்டா பாக்கவந்தேன்னு சொன்னான் இங்க வந்து உங்களதான் பாக்க வந்தேன்னு சொல்றான்… இதுல எது உண்மை?" என்ற ஐயத்தில் அவனை பார்த்திருக்க அவன் பார்வை சென்ற திசையைவைத்து அனைத்தையும் அறிந்துக்கொண்டவன் 'ஒஹோ கதை அப்படி போகுதோ அங்க என்ன ரியாக்ஷன்' என்று பார்க்க அவள் படுசிறத்தையாக கீழே எதையோ போட்டுவிட்டு தேடுவதை போல் நிலத்தையே பார்த்திருந்தாள்.

"கவி எனக்கு அசைன்மெண்ட் சம்மிட் பண்ணனும் நான் போறேன்." என்றவள். விடுவிடுவென அங்கிருந்து சென்றுவிட சித்தார்த்தின் முகம் ஓளி இழந்ததை போல் இருந்தது. உதட்டில் நிலைத்திருந்த புன்னகை சட்டென மறைந்து போய் காணாமல் போய்விட கவி இருப்பதை உணர்ந்தவன் தன்னை இயல்பாக்கிக் கொண்டான்

'இது சரியில்லையே இடையில என்னமோ நடந்துருக்கே இவன் எப்படி மாறினான். இந்த எட்டாவது அதிசயம் எப்படி நடந்துச்சி?' என்று யோசித்துக் கொண்டிருந்த திடீர் கேட்ட தியாவின் குரலில் அவளை கவனித்தான்.

அந்த இடத்தை விட்டு அகன்றவளின் மனது அவனையே சுற்றி சுற்றி வந்தது. அவன் கன்னத்துகுழி சிரிப்பில் மயங்கிய இதயத்தை ஒரு கட்டிற்குள் கொண்டு வர படாத பாடுபட்டாள். அவன் பேச்சி நின்ற தௌரணை இது எல்லாம் அவளை இம்சித்தது அவன் குரல் கேட்க மாட்டோமா என்ற காலம் போய் ஏன் கேட்டு மனதை ரணபடுத்தி கொள்கிறோம் என்று தன் மீதே இறக்கப்பட்டுக் கொண்டாள். அவன் அங்க அசைவு ஒவ்வொன்றும் கவிதையாய் அவள் மனது வடிக்க, இனி இங்கிருந்தால் தன் வைராக்கியத்துடன் அவனை தவிர்த்தது எல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் விணாய் போய்விடும் என்று அஞ்சியவள் ஏதோ ஒரு காரணத்தை கூறி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

"கவி நீ பேசிட்டு இரு ராஜூ எங்கன்னு பார்த்துட்டு வறேன்" என்று கூறி ஷீலாவும் சென்றுவிட கவி சித்து மற்றும் கோபி மூவரும் மட்டுமே இருந்தனர்.

"அப்புறம் மேடம் வீட்டுல இருக்க மாட்டிங்க சோ உங்களையும் உங்க அருமை தங்கையும் பார்த்துட்டு போலாம்னு பார்த்தா இந்த ஓட்டம் ஒடுறா அந்த எலி?" என்று வாய் கூறினாலும் அவள் சென்றது மனதிற்கு வருத்தமாகத் தான் இருந்தது அவனுக்கு.

சித்து விந்துவிட்டான் நண்பனின் வரவில் யானைபலத்தை உணர்ந்தவள் விஷயத்தை முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று தடுமாற்றம் மனதில் அதனை நினைத்திருக்க அவன் கூறிய வார்த்தைகள் யாவும் காற்றில் கரைந்த கற்பூரமாய் ஆவியாகி இருந்தது.

அவள் ஏதோ யோசிப்பவாளாக நின்றிருக்க "ஏய் என்னடி உன்கிட்ட பேசிட்டு இருக்கேன். நீ வானத்தை பார்த்துட்டு இருக்க? என் நண்பன்கிட்டயும் இதே மாதிரி தான் இருக்கியா? மனுஷன் பாவம் தியாகி டி." என்று கேஷவுக்காக வருத்தபட அவனை முறைத்தாள் கவி "பார்ரா முறைப்ப உண்மைய சொன்னா கோவம் வருதோ?" என்று கோபியும் சேர்ந்து கொள்ள

"ம்... ரொம்பதாண்டா கொழுப்பு ஏறிப்போச்சி நாளுபோட்டா தெளிஞ்சிடுவிங்க, மூஞ்சிய பாரு. குரங்கே நானே எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம முழுச்சிட்டு நின்னா நீ பாட்டுக்கு அவருக்கு தியாகி பட்டம் கொடுத்துட்டு இருக்க?" என்று அவனை அருகில் இருந்த மரகுச்சியால் இருவரையும் ஆடிக்க துரத்தினாள்.

"ஹே... பிளீஸ் பீளீஸ்..." என்று அவளின் அடிக்கு பயந்தவர்கள் போல் கைகளால் தடுக்க அந்த பயம் இருக்கட்டும் என்றவளை சொல்லு கவி என்ன உன் பிராபிளம் என்று சித்தார்த் கேட்டவுடன் புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த உத்ராவின் புகைபடத்தை கட்டினாள்.

அதை பார்த்த இருவரும் "யார் கவி இந்த பொண்ணு? செம அழகா இருக்கா!" என்று ஆ வென வாயை பிளந்து பார்த்தான் கோபி ரொம்ப வாயை திறக்காத டா அவ இறந்து 4 வருஷம் ஆகுது என்றவளை அதிர்ச்சியாக பார்த்தனர் இருவரும்.

"அதுல என்ன கவி பிரச்சனை?" என்று சித்தார்த் கேட்க. "அவ செத்ததுல தாண்டா சித்து பிரச்சனையே." மடமடவென்று மடைதிறந்த வெள்ளமாக அனைத்தையும் கூறிவிட்டாள் கவி.

"வெரி டேஞ்சர் ஆளா இருக்கானே இந்த பாசக்கார அண்ணன்!" என்று திகைத்து நின்ற கோபி வாய்விட்டே கூறிவிட்டான்.

"என்னடி இவவளவு பெரிய சிக்கால இருக்கு.. எப்படி இதுல இருந்து நண்பனை விடுவிக்கறது உனக்கு என்னடி தோனுது?"

"நீ வர்ர வரைக்கும் ஒன்னுமே மைண்டுக்கு வரலடா அவரை எப்படியாவது இந்த பழியில் இருந்து வெளியே கொண்டு வரனும் அது மட்டும் தான் மனசுல இருக்கு." என்றவள் "ஆனா சித்து அந்த அஸ்வின் யாருன்னு கண்டுபிடிச்சிட்டா போதும் அவனை வைச்சி எல்லாத்தையும் வெளியே கொண்டு வந்துடலாம்." என்றாள்.

சரி அவன் வீடு எங்க இருக்கு என்றான் கோபி.

யார் வீடு கோபி என்றாள் கவி

"அதான் அவன் யாரு அந்த அஸ்வின்"

"டேய் கொள்ளத டா அவன் தான் யாருன்னே தெரியலையே அவன் வீடு மட்டும் எப்படி தெரியும்?" என்று எரிச்சலாய் மொழிந்தாள் கவி

"வேலிடு பாய்ண்ட் கவி நான் அதை கவனிக்கல." என்று தலையை தட்டியவன் "சரி அந்த சாருகேஷ் வீடு எங்க இருக்கு?" என்றான் கோபி

"அது கே. பி நகர்ல இருக்கு கோபி இப்ப அது எதுக்கு?"

"இல்ல அந்த அஷ்வின் பத்தி ஏதாவது க்ளு கிடைகாகுமன்னு உள்ள போய் பாக்கலாம்ல அதான்."

"டேய் ஏன்டா இப்படி இருக்க அவன் வாடா வந்த பாத்துக்கோடான்னு துறந்து வைச்சிருப்பானா? வீட்டை ஒரு ஈ எரும்பு கூட அவனுக்கு தெரியாம உள்ள போகமுடியாது வர மூடியாது." என்று கோபியின் தலையில் தட்டினாள்.

"டேய் ஐடியா கொடுக்குரேனு வெறுப்பேத்தாத." என்று கோபியை எச்சரித்தவன். "இது போலீஸ் கேஸ் வரை போயிருக்கு அதுவும் தற்கொலை. எப்படியும் அந்த பொண்ணு ரூமை கண்டிப்பா சர்ச் பண்ணி இருப்பாங்க. சோ அதுலாம் வேலைக்கு ஆகாத விஷயம்." என்று தன் அனுமானத்தை கூறினான் சித்தார்த்.

"வேற என்னடா பண்றது அந்த பொண்ணு போட்டோ மட்டும் தான் கையில இருக்கு வேற எதுவும் தெரியலயே." என்றாள் கவலையாக

"இரு இரு உத்ரா லவ் பண்றதே அந்த ஆக்ஸிடன்ட்லதான் தெரியும் கேஷவுக்கு. ஆனா உத்ரா லவ் பண்ணவனோட மொத்த தகவலும் எப்படி கிடைச்சது. எங்கயோ லாஜிக் மிஸ் ஆகுதுல இது யோசிக்க வேண்டிய விஷயம் கவி." என்று கூறினான் சித்தார்த்.

ம். என்று அதை அமோதித்த கவி "இது எப்படி கேஷவிற்கு தெரிஞ்சி இருக்கும் சித்து?" என்று அவளும் யோசித்தாள்.

"உத்ரா பத்திய விஷயம் தெரிஞ்ச யாரோ ஒருத்தர் கேஷவ்கிட்ட விஷயத்தை சொல்லி இருக்கலாம் அந்த ஒருத்தர் யார் அவங்க விஷயம் தெரிஞ்சும் ஏன் சாருகேஷ்கிட்ட சொல்லல இதுல நிறைய விடை தெரியாத கேள்விகள் இருக்கு கவி என்று கூறியவன் சரி நான் வீட்டுக்கு போறேன் சாய்நதிரம். உன்னை மீட் பண்றேன்." என்று கிளம்பிட "இருடா நானும் வறேன்" என்று உடனே கிளம்பினாள்.

"ஏய் உனக்கு கிளாஸ் இல்லையாடி என் கூட வர்ர?" என்றான் சித்தார்த்

"எக்ஸம்ஸ் தான் சித்து வீட்டுல இருந்த ஒரு மண்ணும் தோனல அதான் இங்க வந்துட்டேன்." என்று விளக்கம் கொடுத்தாள்.

"யூ டோன்ட் வொரி டா நான் பாத்துக்குறேன் நீ படி. பீ ரிலக்ஸ் எக்ஸம்ஸ் இருக்கு பாரு." என்று அவளுக்கு தைரியம் கொடுத்து "இவினிங் மீட் பண்ணலாம் நான் வறேன்." என்றவன் அவளிடம் இருந்து விடைபெற்று சென்றனர் நண்பர்கள் இருவரும்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 42
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN