கோடையில் கொட்டித்தீர்த்த மழையாய் ஆதியின் வார்த்தைகள் அங்கு நின்றிருந்த மதுவின் பெரியம்மாவிற்கு நிம்மதியையும் ஆறுதலையும் தன் தங்கை மகளுக்கு நல்ல உறவுகள் கிடைத்து விட்டது என்ற நம்பிக்கையும் தர, அதற்கு நேர்மாறான அமிலத்தை கொட்டியதுபோல இருந்தது அவரின் கணவரின் மனநிலை.
அதிர்ந்து போய் இருந்தவளின் செவிகளில் தீண்டிய சொற்களின் வீரியத்தில் கட்டுண்டு இருந்தவள் தன் சுயத்தை அடைய சில நாழிகைகளை எடுத்துக்கொண்டாள் தனக்காக இப்படி ஒரு முடிவை எடுத்த ஆதிக்கு ஒரு நன்றி பார்வையை செலுத்தியவள் தன் மனதில் இருப்பதை இந்த கோவிலிலேயே சொல்லிவிட நினைத்து தனது மௌனத்தை கலைத்தாள்.
ஆதியின் கைகளை பற்றிக்கொண்டவள் "என் மேல நம்பிக்கை வைச்சி உங்க பையனுக்கு என்னை கல்யாணம் செய்து வைக்க, நினைச்ச உங்க பெரிய மனசு யாருக்கும் வராது". ஆனா இப்போ இந்த சூழ்நிலையில என் கல்யாணம் நடக்கறதை நான் விருமபல... என்னை பெத்த அம்மாவும் இதை விரும்பி இருக்க மாட்டாங்க". என்றாள் மன்னிப்பை யாசிக்கும் பார்வையாலேயே.
"மது உன் வாயை மூடி சும்மா இரு எதுவும் எதிரா பேசிடாதே" என்று பெரியம்மா கூறினாலும். உள்ளுக்குள் இவர் யாரோ எவரோ எப்படிப்பட்ட குடும்பமோ பையன் எப்படி என்று நாலும் ஆராய்ந்து தங்கை மகள் நலமாய் வழவேண்டுமே என்று அந்த முருகனை வேண்டினார்.
அவளின் பேச்சை கவனித்த படி இருந்த அவளின் பெரியப்பா "நான் சொல்லல இது எல்லாம் கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா ஒத்துக்காது அதுகளுக்கு ஒருத்தர் கட்டுபாட்டுல இருந்தாலே புடிக்காது... இதுல நீங்க வேற கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்றிங்க" என்று இளக்காறமாய் சிரிக்க
அவரின் சிரிப்பு ஜெய்யிற்கு எரிச்சலையும் ஏற்படுத்தி கோவத்தையும் உண்டுபண்ணியது அதே தீ பார்வையுடன் மதுவை இவ என்ன சொல்ல வர்றா என்று பார்த்திருந்தான்.
ஜெய்யின் பார்வையை சந்தித்தவள் அவனது கோபம் புரிய அவனை பார்ப்பதை நாசுக்காய் தடுத்து தனக்கு உதவிய ஒரு நல்ல உள்ளம் தன்னால் இந்த கட்டாய கல்யாணத்தில் தள்ளபடுவதை விரும்பாதவள் "எனக்ககாக அவரோட லைஃப் ஸ்பாயில் பண்ணிடாதிங்க ஆண்டி" என்று அவனுக்காய் பேசிட
புருவம் சுருக்கி அவளின் பதிலில் தாயிடம் கண்ணை காட்டியவன் மதுவிடம் திரும்பி "இப்யூ டோன்ட் மைன்ட் உங்ககிட்ட பேசனும்" என்றவாறு அவளை பார்க்க "நான் என் முடிவ சொல்லிடுறேன்" என்றாள் மது
"நான் பேசிய பிறகு நீங்க எந்த முடிவு எடுத்தாலும் நான் சம்மதிக்கிறேன் இப்போ என்னோட வாங்க" என்று அவளை அழைக்க
சற்று தூரம் தள்ளி நீன்று அவளிடம் பேச ஆரம்பித்தான் ஜெய், "மது உங்களுக்கு இப்போ கல்யாணத்துல விருப்பம் இல்லையா? இல்லை என்னை கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லையா?" என்று அவள் கண்களை பார்த்து நேரடியாக விஷயத்திற்கு வந்திருந்தான்.
அவனின் நேரடி தாக்குதலில் சிக்குண்டவள் "ஜெய் இது மேரேஜ் ஒருத்தரோட நிரபந்தத்தால நடந்த இப்போ சந்தோஷமா தெரியிர வாழ்க்கையில், ஏதாவது பிரச்சனை வந்தா நாம எடுத்த முடிவு தப்போன்னு தோனிச்சினா அந்த இடத்துல நாம வாழ்க்கை தோற்றுவிடும் ஜெய்" என்றாள் அவனின் விளக்கும் வேகத்தில்.
"உன் கைகளை பிடிக்கலாமா?" என்று அவன் அனுமதி கேட்க அவன் முதல் கேள்வி, இதில் தவறு இருப்பதாய் தோன்றாமல் போக ம் என்று தலை அசைத்தாள் மது, அவள் சம்மதத்தை பெற்றவன் மதுவின் கரங்களை தன் கரங்களில் வைத்து சிறிது அழுத்தம் கொடுத்து "எந்த சந்தர்பத்திலும் நீ சொன்னமாதிரி எனக்கு நினைக்க தோனாது... ஏன்னா இது அம்மாவோட முடிவு மட்டும் இல்ல என்னிலும் இந்த முடிவு தான் இருந்தது அம்மா என் மனம் அறிஞ்சி உன்கிட்ட கேட்டாங்க" என்றான் உள்ளார்ந்து.
அவனே தன் மனதினை திறந்து கூறியதும் "ஜெயந்த் என்று அவனுடைய பெயரை மென்மையாக உதிர்க்க
"உனக்கு சம்மதமா மது" என்றான் அவள் மனதினை அறிய
ம் என்று தலை அசைத்து அவனை பார்க்க வெட்க்கப்பட்டு தலைகுனிய "இன்னும் உன் மனசுல ஏதாவது இருக்கா?" என்றான் அவளின் நாடியை நிமிர்த்தி
அவனின் கண்களை நோக்கியவள் "என் படிப்பு முடியனும்.எனக்குன்னு ஒரு அங்கீகாரம் கிடைத்த பிறகு நாம் கல்யாணம் பண்ணிக்கலாம்... ஆனா இதுக்கு ஆண்டி சம்மதிப்பாங்களா?" என்றாள் சந்தேகமாக.
அவளின் செய்கையில் உள்ளம் கனிய "நிச்சயம் டா உன் விருப்பப்படி தான் நடக்கும்". என்று உறுதி அளித்து அவளை அழைத்து வந்தான்.
"என்ன உனக்கும் டிமிக்கி கொடுத்தாச்சா?"
என்று ஏளன குரலில் அவளின் பெரியப்பா கூற 'இவருக்கு என்ன துரோகம் செய்தோம். ஏன் என் மேல் இத்தனை வஞ்சத்தை வைத்துக் கொண்டு அலைகிறார் நானும் அவர் வளர்த்த பெண் அல்லவா அந்த ஒரு பச்சாதாபமாவது என் மீது இருக்காதா?' என்று மனம் நொந்து பார்த்த பார்வையில் பெரியம்மாவின் கண்களில் குளம் கட்டியது.
மகளின் வாழ்விற்கு ஏதாவது நல்லது நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தவர் கணவரின் அமிலவார்த்தைகள் கிடைக்கும் வாழ்வை தட்டி பறித்துவிடும் என்று சினம் கொண்டவர் "கண்டபடி பேசாதிங்க சொன்ன வாயில புழு பூத்திடும் நல்ல பெண்ணை கலங்கபடுத்தி சொன்னா உங்க பெண்களை தான் அது சேரும். அவ என்ன பண்ணினா உங்கள எதுக்கு இவ்வளவு குருர எண்ணத்துல இருக்கிங்க? அவ அம்மா சாயல்ல இருக்கான்னு உங்களுக்கு அவள பிடிக்கல.. உங்க ஈன புத்தி பத்தி தெரியாதா? என்னமோ உத்தம சிகாமணிபோல அவள குறை சொல்லிட்டு இருக்கிங்க..."உன்னை பற்றிய எல்லா விஷயங்களும் எனக்கு தெரியும் என்று பொங்கிவிட மனுஷனுக்கு முகத்தில் ஈ ஆடாத குறைதான் இத்தனை வருடத்தில் தன் மனைவி ஒரு வார்த்தைகூட எதிர்த்து பேசியது இல்லை ஏன் என்று காரணம் இன்று புரிந்தது மதுவிற்காக இத்தனை ஆண்டுகள் சகித்து குடித்தனம் நடத்தி இருக்கிறாள்.
"என்னைய்யா வாயவைச்சிக்கிட்டு சும்மா இருக்கியா இல்லை என் பிள்ளைகளை கூட்டிட்டு நான் போகவா?" என்று அவருக்கு பயத்தை கொடுக்க கொஞ்சம் ஆடித்தான் போனார் அவர். இந்த வயதிற்கு மேல் தனிகுடித்தனம் செல்வதில் அவருக்கு விருப்பமில்லதாதே முதல் காரணம் கப்சிப் என்று அடங்கிபோனர் அவர்.
இதுவே அவருக்கு தக்க பதிலடியாய் இருக்க அவன் சொல்ல வந்த விஷயத்தல மட்டும் சுருக்கமாய் கூறி மதுவின் படிப்பு முடிஞ்சதும் தான் எங்க திருமணம் என்று கூறி அனைவரின் இதயத்திலும் அமிர்தத்தை வார்த்தான் அந்த மதுவந்தியின் மணாளனான ஜெயந்த்.
ஆதிக்கும் அவரின் கணவர் ராஜராமனுக்கும் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி மருமகளை அணைத்து உச்சிமுத்தமிட்டு முருகன் சந்நிதியில் இவர்களின் நிச்சயம் நடந்தேரியதாக எடுத்துக்கொண்டனர். மதுவந்தி மனநிலை சொல்ல முடியாத அளவு சந்தோஷத்துடன் இருந்தது பெரியமமாவின் கரங்களில் குடிபெயர்ந்தவள் அவரின் கால்களில் விழுந்து வணங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் டா... "உன் நல்ல குணத்துக்கு நீ ராணி மாதிரி வாழ்வ" என்று ஆசி வழங்கி அணைத்து கொண்டார்.
~
கோயம்பத்தூர்.
"என்னடா சோழியன் குடுமி சும்மா ஆடுதேன்னு பார்த்தா..
இதுதான் உன் ரகசியமா!!! அந்த கருமத்தை சொல்லி தொலைக்கறதுக்கு என்னடா உனக்கு???" என்று அவனை உலுக்கி எடுத்து விட்டான் கோபி.
இவன் கண்களின் பரிபாஷைகளை பார்த்துக்கொண்டு தானே இருந்தான் அவனின் காதல் சொட்டும் பார்வையும் பேச்சையும்... பேச்சுக்கள் முழுவதும் கவி இடத்தில் இருந்தாலும் பார்வை மொத்தமும் தியாவிடம் தானே இருந்தது. அதிலேயே தெரிந்துவிட்டதே நண்பனின் மனதில் கள்ளதனம் புகுந்து காதலில் கரைந்துகொண்டு இருக்கின்றது என்று
"இந்த மாற்றம் எப்போதுல இருந்து... அவ குழந்தைன்னு சொல்லி முறுக்கிட்டு திருஞ்ச உன் கண்ணுக்கு குமரியா எப்போ மாறினா" என்று நக்கல் பாதியும் கடுப்பு மீதியுமாய் கேட்டான் கோபி
அவன் கேட்ட வினாவிற்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்று விழிகள் திறந்து இருந்தாலும் கனவில் அவளுடன் டூயட் பாடுவதாக நினைத்து கொண்டு இருவந்தவனின் தோளை பிடித்து உலுக்கினான் கோபி டேய் டேய் என்று கத்தி அவனை கனவில் இருந்து மீட்டவனின் முகத்தை அசடு வழிய பார்த்த பார்வையை சகிக்காமல் "டேய் வேணா என்னை வெறி ஏத்தாத" என்று அவனை தலையணையை கொண்டு அடித்தான்.
"மச்சி... இருடா ஒரு அப்பாவிய அடிச்சி நீ கொலைகாரனா ஆகிடாத டா" என்று தன்னை காத்துக்கொள்ள சில வேடிக்கைகளை காட்டி அவனை ஆஸ்வாசபடுத்தி இருந்தான் சித்தார்த்.
நண்பனிடம் எதையும் மறைக்கும் உத்தேசம் இல்லாத சித்து மனதில் அவள் நுழைந்த அந்த அழகான தருணத்தை கூற ஈ கூட நுழைவது தெரியாமல் வாயை பிளந்து காதல் கதையை கேட்டுக்கொண்டு இருந்தான்.
கதையை சொல்லி முடித்து அவனின் தாடையில் கைவைத்தவன் "டோர்லாக்" என்று வாயை மூடி அவனை கேலி செய்ய
"மாப்ள ஒரேடியா கவுந்துட்டியேடா" என்று சிரியாமல் கூறி ஆமா "நீ விறப்பா இருந்தப்போ அவ உன் பின்னாடி சுத்தி சுத்தி வந்து லவ் பண்ணா இப்போ நீ சுத்தி வர உன் ஆள் உன்னை கண்டுகிட்டா மாதிரியே தெரியலையே டா!" என்று தன் சந்தேகத்தை கூற
"அதான் மச்சி தெரியல நான் பேச போனாலே தள்ளி ஓடுறா.. போன்ல கூட பேசமாட்றா மச்சி.. முகத்தை கூட பாக்கமாட்டுறா இன்னைக்கு போனதே அவளை பார்க்கதாண்டா.. பாத்தல்ல அவ பேசாமா போறா.. என்னை படுத்துறா மச்சி முதல்ல பேசியே கொன்னுட்டு இருந்தா இப்போ பாக்கமலேயே உயிற எடுக்குறா டா" என்று தன் மனதில் இருந்த வேதனையை புலம்பலாக நண்பனிடத்தில் இறக்கி வைத்தான்.
"அதான் மச்சி ஒரு பொருள் ஈசியா கிடைச்சப்ப அதோட மதிப்பு தெரியல இப்போ அது உன் கைக்கு வரலன்னுபோது வலிக்குதுல இப்படிதானே அவளுக்கும் இருந்து இருக்கும்... மாப்ள நீ கலங்கதடா அவளை தனியா மீட்பண்ணி பேசு அவ ஏன் உன்னை அவாய்ட் பண்றான்னு தெரிஞ்சிக்க அது தெரியாம அடுத்த அடி வைக்க முடியாது..."என்று அவனுக்கு சில யோசனைகளை கூறியவன் தன் அலைபேசியை எடுத்து அவளுக்கு போன் செய்து சித்துவின் கரங்களில் திணித்து இருந்தான் "உன் போன்ல வேண்டாம் இந்தா இதுல பேசு தனியா மீட்பண்ணனும்னு சொல்லு" என்றான்.
கோபியின் எண்ணாக இருந்ததனால் அதை அட்டன் செய்து செவிக்கு கொடுத்து இருந்தவள் "சொல்லு எருமை எதுக்கு இப்போ போன் பண்ண" என்றாள் கோபி என்று நினைத்து.
அவளின் அதிரடி பேச்சை ரசித்தவன் இது போல ஏன்டி பேசமாட்டுற என்கிட்ட மட்டும் பேசா மடந்தையா இருக்க என்று மனதில் பேசியவன் ஒரு நிமிடம் ஆழ மூச்செடுத்து தன் கமரிய தொண்டையை சரிசெய்தவன் "வதுமா" என்றான். பளிங்கு தரையில் சிதறிய வெள்ளி நாணயங்களாய் இருந்த பேச்சு ஸ்விட்ச் போட்டதை போல தடைபட்டு போனது.
அவன் தான் என்று எதிர்பாறாமல் பேசியவள் சித்து என்று தெரிந்ததும் விரைத்து நின்றது அவள் உடல் 5 நிமிட மௌனம் கொள்ளாமல் கொன்றது போனை வைக்க சில நொடிகளில் யோசித்து அதை வைக்க இருந்தவள் மனதை அறிந்தானோ என்னவோ அவள் போனை காதில் இருந்து பிரிக்கவும் "வதுமா வைச்சிடாத" என்று அழைக்கவும் சரியாக இருந்தது.
"நீ ஏன் பேசமாட்டுறன்னு சத்தியமா தெரியல டி .. ஆனா நீ இல்லாம நான் இல்லன்னு மட்டும் புரிஞ்சிடுச்சி வதுமா உன்னை நான் பாக்கனும்" என்றான்.
அகன்று விரிந்தது விழிகள் இமைகொட்ட மறந்து அப்படியே நின்றாள் அந்த மான்விழியாள். அவன் வாய்மொழி அறிந்து அவன் இதயம் கவர்ந்தவள் இவள் தான் என்று தெரிந்ததும் லட்சம் பூக்கள் பூத்தது கைப்பிடி இதயத்தில்... மனம் உறுகி அவனை காண விம்மி வெடித்து உதடுகள் அழுகைக்கு தயராக இருக்க... மனமே இல்லாமல் வர முடியாது என்று ஒத்தை வார்த்தை உதிர்த்து உதட்டை இறுக்க மூடிக்கொண்டு நின்றாள்.
அவளின் பதிலில் சிறு கோபம் துளிர்க்க "எனக்கு உன்னை பார்க்கனும் சாயந்தரம் சரியா 5 மணிக்கு உனக்காக கோபி வீட்டுல வெய்ட் பண்ணுவேன் நீ வர... வரனும் அப்படி இல்ல உன்னை பார்க்க நான் வருவேன் உங்க வீட்டுக்கு.. என்ன நானே வரவா?" என்றான் கொஞ்சம் குரலில் அழுத்ததத்தை கூட்டி
அவன் கூறிய செய்தியில் திருதிருவென விழித்து பேசிய அலைபேசியை கைகளில் இருந்து தவறவிட இருந்தாள் அவனின் அதிரடி மாற்றத்தால். வருவானோ வந்தால் என்ன செய்வான் சபையில் போட்டு உடைச்சடுவானா போயாகனுமோ போனா என்ன சொல்லுவனோ என்று மனதில் பல எண்ணங்கள் ஓடியது.
அவள் அமைதியாக இருக்க மிரட்டியது வேலை செய்யுது என்று நினைத்தவன் இதழ் ஓரம் சிறு இளநகை பூக்க "என்ன யோசிக்கிற நீ வர, வெய்ட் பண்றேன் கரெக்ட்டா 5 மணிக்கு வந்துடு" என்று மீண்டும் நியாபகபடுத்தியவன் பேசியை அணைத்தான்.
~
பிரபல நகைகடையில் நுழைந்த கேஷவும் சக்தியும் நேராக மேனேஜரை சந்தித்தனர். "இல்லை சார் இது எங்களோடது இல்லை" என்று இரண்டு மூன்று இடங்களில் கூறிவிட கடைசியாக கேரளா ஜூவலர்ஸ் என்ற கடையில் அனுகினர்.
"வாங்க வாங்க சார் என்ன மாதிரி நகை வேனும் என்ன மாடல் வேண்டும்" என்று வியாபாரிதியாக அந்த நபர் பேசிட வெய்ட் வெய்ட் என்று அவரை நிதானிக்க வைத்த சக்தி தன்னை அறிமுகபடுத்திக் கொண்டு "என் கேஸ் விஷயாமா ஒரு தகவல் வேண்டும் இதை பாருங்க" என்று அவன் பாக்கெட்டில் பத்திரபடுத்தியதை எடுத்து அவரிடம் காட்டினான்.
அதை வாங்கியவர் அந்த முத்திரையையும் டிசைனையும் பார்த்தவர் "இது இது எங்க கடை நகைதான் சார் அதுவும் இந்த மாடல் ரீசண்டா தான் இன்ட்ரடீயூஸ் பண்ணோம் இது விஷயமா உங்களுக்கு என்ன தகவல் வேணும்" என்று கேட்டார்.
"ஓ... அப்போ ரொம்ப நல்லதா போச்சி என்று கூறிய சக்தி இதை வாங்கியவங்க டீடெய்ல் வேனும்" என்றான்.
"சார் தினமும் ஆயிரம் பேர் வந்து போற இடம் இதுல யார் இதை வாங்கினான்னு கேட்டா என்ன சொல்ல முடியும்". என்று கையை விரித்து கூறியவருக்கு நியாபகம் வநதவராக "பட் ஒரு வழி இருக்கு சார் இப்போ எல்லாம் நிறைய ப்ரோஸ்யூஜர் கொண்டு வந்துட்டாங்க வியாபரத்துல சோ எங்க வியாபரத்தை விரிவுபடுத்த நகை வாங்கினா கண்டிப்பா அவங்கள அட்ரஸ் வாங்கி பாய்ண்ட்ஸ் சேர்த்துட்டு வருவோம் சோ வாங்கினவங்க 90 பார்ஸன்ட் மெம்பர்ஸ் ஸோட அவங்க டீட்டயல்ஸ் கண்டிப்பா இருக்கும்" என்று கடந்த மூன்று மாதங்களில் நகை வாங்கியவர்களின் பட்டியலை கம்ப்யூட்டரென்னும் கடவுளிடம் கேட்க அதில் வந்த பெயரையும் முகவரியையும் பார்த்தவர்களுக்கு சுற்றி சுற்றி ஒரே இடத்தில் நிற்பது போன்று தோன்றியது
"என்னடா இது கதிர் பெயரை காட்டுது. ஒருவேல அவனோட அட்ரசா இருக்குமோ" என்று கேஷவ் சக்தியிடம் வினவ
"அவன் அட்ரஸே தான் மச்சி அந்த ஸ்டெல்லாவுக்கும் இவனுங்கும் என்ன சம்மந்தம். இவன் இதை வாங்கி இருந்தா அவ வேற ஏதாவது" என்று இழுக்கும்போதே ஸ்டெல்லா என்னும் பெயரில் மோதிரம் வாங்கியதற்கான பில் அவர்களின் கண்ணில் பட்டது ..... குழப்புதே என்று சக்தி நினைக்க
இப்போது நேராக அவர்களின் பைக் கதிரின் வீட்டை நோக்கி பறந்தது நடுத்தர வர்க்கத்தின் சாயலில் இருந்த வீட்டின் முன் போய் நின்றவர்கள் அழைப்பு மணியை ஒலித்திருக்க 50 வயதை கடந்த பெண்மணி கதவை திறந்திருந்தார்.
"கதிர் வீடா" என்று சக்தி வினவியதும்
"ம் ஆமா இதுதான் என்று கூறி அவன் என் பையன் தான்" என்றவர் அவர்களை யார் என்பதை போல் நோக்கினார் அந்த பெண்மணி.
தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள் "உங்களுக்கு ஸ்டெல்லா யாருன்னு தெரியுமா?" என்று ஸ்டெல்லாவை பற்றி விசாரிக்க ஆராம்பித்தனர்.
"ஸ்டெல்லா ஸ்டெல்லாவா அந்த பொண்ணு கதிர்கூட படிச்ச பொண்ணுங்க... இரண்டு ஒரு முறை வீட்டுக்கு கூட வந்து இருக்கு" என்று கூறியவர் அவர்கள் கல்லூரியில் எடுத்துக்கொண்ட புகைபடத்தையும் காண்பித்து "வீட்டுக்கு ஓரே புள்ளைங்க அவனை எப்படியாவது கண்டுபுடிச்சி கொடுங்க அய்யா பெத்த வயிறு கலங்கி நிக்கிறேன்" என்று முந்தானையால் வாயை பொத்திக்கொண்டார்.
"அழாதிங்கம்மா உங்க மகனை கண்டுபிடிக்கத்தான் இத்தனையும் செய்யுறோம் எங்கேயாவது ஓரு துப்பு கிடைக்காதான்னு தேடுறோம்" என்ற கேஷவ் அதை வாங்கி பார்த்து "கதிர் ரூம் பாக்கலாமா?" என்று கேட்க
"வாங்க" என்று அவர்களை அழைத்து சென்றவர் கதிரின் அறையை கட்டினார். அறையின் உள்ளே சென்றவர்கள் அவனின் புத்தகம் அடங்கிய பகுதி, பீரோ, கணினி என்று அனைத்தையும் பார்வையிட சில கீரிட்டிங்கார்டுகள் அடங்கிய பைல் கிடைத்தது.
அதை திறந்துபார்க்கவும் வித் யுவர் லவ் என்று எழுதி கீழே உதட்டு முத்திரையும் ஸ்டெல்லா என்று பெயரும் அதில் எழுதப்பட்டு இருக்க இன்னும் சில புகைப்படங்கள் கதிருடன் நெருங்கியபடி பிடிக்கப்பட்டிருந்தது கிடைக்க கதிரின் காதலி ஸ்டெல்லா என்பது உறுதியானது.
அது கோவைமைய பகுதியில் அமைந்துள்ள பெரிய அப்பர்மெண்ட் கதவை திறந்தது 25 மதிப்புடைய நவநாகரிக மங்கை முடியை ஆண்கள் போல் கிராப் செய்து மார்டன் யுவதியாக எதிரில் நின்றிருந்தவள் கதிருடன் புகைபடத்தில் இருந்த பெண்ணே
"மிஸ் ஸ்டெல்லா". என்றான் சக்தி
"எஸ்" என்று கூறியவள் யாரை பார்க்கனும் என்றாள்.
"உங்களைத்தான்" என்றதும் "நீங்க" என்று எதிர் கோள்வி கேட்டவளை "கதிர் பத்திய விஷயங்களை மாணிக்கம் சார்கிட்ட மட்டும் தான் சொல்விங்களா மிஸ் ஸ்டெல்லா" என்றவர்கள் தங்களையும் மாணிக்கத்திற்கு யார் என்று கூறி வீட்டிற்குள் சென்றார்கள்.
~
மாமியரின் புதிய மாற்றம் ஷீலாவிற்கு புதிராகவும் அதே சமயத்தில் மனதுக்கு ஆதரவாகவும் இருக்க ஏன் எதற்கு இந்த மாற்றம் என்று எல்லாம் ஆராயும் மனநிலையில் இல்லாது இருந்தவள் இப்படியே போகவேண்டும் என்று மனதில் நினைத்தபடி மாலை எப்போதும் போல் வீட்டு வேலைகளில் மூழ்கி இருந்தாள்.
"அண்ணி... அண்ணி..." என்றவாறு கண்ணன் பின் கட்டிற்கு ஷீலாவை தேடி வர துணிகளை துவைத்த வண்ணம் இருந்தவள் இங்க இருக்கேன் கண்ணா என்று குரல் கொடுத்து இருந்தாள்.
"இங்க இருக்கிங்களா? உங்களை எங்கெல்லாம் தேடினேன்" என்று தண்ணீர் தொட்டியின் மேல் விளிம்பில் வந்து அமரந்தான்.
"என்னையா தேடினிங்க.. எதுக்கு கண்ணன்?" என்றாள் ஷீலா
"அண்ணி கிளம்புங்க ஷாப்பிங் போகனும். நாளைக்கு பேர்வெல் பங்கஷன் இருக்கு நல்ல டிரெஸா ஒன்னு ச்சூஸ் பண்ணும்" என்றான் கண்ணன்.
"நானா... எனக்கு வேலை இருக்கு கண்ணன் நீங்க அவரை கூட்டிட்டு போங்களேன் அதுவும் எனக்கு செலக்ட் பண்ணவே தெரியாது.. நான் சுத்த வேஸ்ட்" என்றாள் ஷீலா
"பொய் சொல்றிங்க அண்ணி... எங்க அண்ணனையே செல்க்ட் பண்ணி இருக்கிங்க உங்களுக்கு ஒரு ஷர்ட் செலக்ட் பண்ண தெரியாத?? சும்மா சொல்லாமா வாங்க அண்ணி" என்றான் விடாப்பிடியாக
'கஷ்டகாலம் எல்லாம் எப்படி தான் ஏமாறுறிங்களோ நான் உங்க அண்ணனை முடியலடா சாமி உங்கண்ண பண்ண அலுப்பறைக்கு சரி ஓகே பன்னேனே தவிர நான் எங்கடா செல்க்ட் பண்ணன் நல்ல கூத்து போ' என்று உள்ளுக்குள் கணவனை வறுத்தவளுக்கு கண்ணை இறுட்டுவது போல் வந்தது கொஞ்சம் தலை கிறுகிறுத்தது. கண்ணை மூடி நிதான நிலைக்கு வருவதற்குள் அப்படியே சரிந்து தண்ணீர் நிரப்பிய பக்கெட்டை தள்ளியபடி தரையில் விழுந்தாள்.
அவள் விழப்போவது தெரியாதவன் கையில் இருந்த கற்களை ஒவ்வொன்றாக எடுத்து குறிபார்த்து செடிகளில் எரிந்து கொண்டிருந்தவனுக்கு கிழே விழும் சப்தம் கேட்கவும் ஷீலாவின் பக்கம் திரும்பி பார்க்க அவன் கண்ட காட்சியில் அம்மா அம்மா என்று உள்ளுக்கு நோக்கி குரல் கொடுத்தவன் செய்வதறியாது அதிர்ச்சியில் நிற்க
என்னவோ ஏதோ என்று சாவகாசமாக வந்தவருக்கு ஷீலா தரையில் விழுந்து இருப்பதை பார்க்கவும் பதறி பிள்ளையை பார்க்க செய்வதறியாது நின்றிருந்தவனை தட்டி அவளை தூக்குடா பனம்மரம் மாதிரி நிக்குற என்னடா ஆச்சி என்றபடி அவள் அருகில் வந்து அவளை தூக்க கண்ணனுக்கு உதவியவர் அவள் படுக்கை அறைக்குள் நுழைந்து அவளை படுக்க வைக்க தாங்கிபிடித்தார்.
அவள் எப்படி விழுந்தாள் என்று கேள்வியை மகனிடம் கேட்க "பேசிட்டே இருந்து மயக்கம் போட்டு விழுந்துட்டாங்கம்மா" என்று கூறி என்னம்மா என்ன ஆச்சி என்று பதற்றமாக கேட்க
"உங்க அண்ணனுக்கு போன் போட்டு சொல்லிடு டாக்டர வர சொல்லு கல்யாணம் ஆகி இரண்டு மாசம் ஆகுது நல்ல செயதியா கூட இருக்கலாம். பயம் இல்ல மசக்கையில கூட இப்படி நடக்கும்' என்று தன் பாட்டிற்க்கு கற்பனையில் கோட்டை கட்டினார் ராஜீவின் அன்னை.
அன்னை சொன்ன செய்தியில் மனம் துள்ளியவன் ராஜீவிற்கு கால்செய்து "ஹாய் அண்ணா எங்க இருக்க" என்றான் மகிழ்ச்சியான குரலில்
"பக்கத்துலதான்டா பிரெண்ட்ஸ் கிட்ட" என்றதும்.
"அப்படியா நீ உடனே வா வரும்போது ஒரு டாக்டரையும் கூட கூட்டிக்கிட்டு வா"
"என்னடா என்ன ஆச்சி அம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவது முடியலையா?" என்றான் பதட்டமாக
"அடச்சி பயப்படாத... எல்லாம் நல்ல விஷயம் தான் டா... கங்க்ராட்ஸ் அண்ணா வரும் போது நீ ஸ்வீட் வங்கிட்டு வர மறந்துடாத.. என்று கூறியவன் செம ஹாப்பி நம்ம வீட்டுக்கு புதுசா ஒருத்தர் வரப்போறாங்க" என்று அவன் பாட்டிற்கு பேசியபடி இருந்தவன் "அம்மா கூப்புடுறாங்க சீக்கிரம் டாக்டர கூட்டிக்கிட்டு வா" என்று போனை அனைத்துவிட்டான்.
ராஜீவிற்கோ ஒரே குழப்பம் 'டேய் என்னடா நடக்குது அங்க ஒன்னுமே புரியல!!! எதுக்கு கங்கராட்ஸ் சொல்றான். டாக்டர கூட்டிட்டு வா சொல்றான்... என்னடா இது எல்லாம்... இருடா வறேன்...' என்று குழப்பமாகவே மருத்துவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றான்.

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 43
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.