காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 50

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அழுது அழுது கலைத்து தலைவலியில் அப்படியே உறங்கி இருந்தவளை பார்த்தவனின் மனமும் சேர்ந்து கஷ்டமாய் இருந்தது... மதியம் நேரம் ஆக அவள் சாப்பிடாமல் தூங்கிக்கொண்டு இருக்க ஷீலாவை எழுப்ப அறைக்குள் சென்றவன் அவள் அருகில் அமர்ந்து தலையை வருடி விட அவன் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் அப்படியே அவன் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டு இடுப்பை கட்டிக்கொண்டாள்.

அவள் மேல் கோபம் இருந்தும் தனது வருடலை நிறுத்தாமல் இருக்க அவன் வயிற்றில் முகம் புதைத்தவள் கண்களின் ஈரத்தை உணர்ந்தவன் அவள் கைகளை விலக்கி எழுப்பி அமரவைத்து அவள் முகத்தினை ஒற்றை விரலைக்கொண்டு நிமிர்த்தி அவன் முகம் பார்க்க வைத்தான்.

ஷீலாவின் அழுது வீங்கிய முகம் பார்க்கவே பாவமாய் இருந்தது. "எதுக்கு ஷீலு இப்படியே அழுதுட்டு இருக்க பீளிஸ்டா அழாத மாமா நம்மல புருஞ்சிக்கிற நேரம் வரும் மா அதுவரை கொஞ்சம் பொருத்து தான் போகனும் டா" என்று ஆறுதல் கூற அவன் மார்பினில் முகம் புதைத்து அழுதவள் "என்னை ஏத்துக்கலனாலும் பாரவாயில்லை ராஜீ நான் சொல்றதை கூட கேக்க மாட்டேன்றாரு நாம செய்தது மன்னிக்க முடியாத தப்பா காதல் அவ்வளவு பெரிய குற்றமா?" என்று கேட்க

அவள் தலையை நிமிர்த்தி அவள் கண்களை பார்த்தவன் "என்னால தான்டா நீ கஷ்டப்படுற உன்னை துறத்தி துறத்தி காதலிச்சவன் நானு ஆனா கஷ்டம் அனுபவிக்கறது எல்லாம் நீ எனக்கே என் மேல கோவமா வருதுடா." என்று கலங்க அவனின் இதழை கை கொண்டு மூடியவள் "நீங்க என்ன பேசுறிங்க ராஜீ நீங்க இல்லனா நான் என்ன ஆகி இருப்பேன் ராஜீ... இனி இப்படியொரு வார்த்தை சொல்லாதிங்க என்னால தாங்கமுடியாது." என்றிட்டவள் அவன்மீதே சாய

அவள் முதுகை நீவி விட்டு அஸ்வாசபடுத்தியவன் சமாதானம் செய்து அறையை விட்டு வெளியே சாப்பிட அழைத்து வர கார் சத்தம் கேட்டு வாசலை பார்த்தவர்கள் விழிகள் ஆச்சிரியத்திலும் அதிசயத்திலும் விரிந்தது இருவருக்கும்.

கம்பீரமாக ஷீலாவின் தந்தை, தாய் மற்றும் பாட்டியும் வர வேலையாள் பழவகைகளோடு இருக்கும் கூடையை கொண்டு வந்து வீட்டினுள் வைத்து விட்டு சென்றான்.

வாசலில் நின்ற தந்தையையும் தன் குடும்பத்தினரையும் பார்த்து சந்தோஷத்தில் வாயடைத்து நின்றவள் கணவனின் உலுக்கலில் நடப்பிற்கு வந்து சிரிப்பும் அழகையுமாக தந்தையிடம் ஒண்டியவளை அவரும் கண்களில் நீர் நிறைய மகளை அணைத்து தலை வருடி கண்ணீர் விட்டார். "அப்பாவை மன்னிச்சிடுடா உன்னை புருஞ்சிக்காம போயிட்டேன்." என்று கூற "நீங்க தான்ப்பா என்னை மன்னிக்கனும்." என்றவள் அவர்களை உள்ளே அழைக்க ராஜீவும் அனைவரையும் அழைத்து இருக்கையில் அமர வைத்தான் அதற்குள் ராஜீவின் தாயும் வர முகம்மன்னாக வரவேற்று காபியை கொண்டு வர செல்ல "நீங்க இருங்க அத்த நான் போறேன்." என்றவள் 10 நிமிடத்தில் காபி டிரேயுடன் அனைவர் முன்னிலும் ஆஜரானாள். பேசி பழக்கமில்லை தான் இருந்தும் பெண் எடுத்தவர் என்ற முறையில் உறவினர்கள் ஆன பின்பு முகத்தை தூக்கி வைத்துககொள்வதும் மௌனம் சாதிப்பதும் அழகல்ல என்று தெரிந்த ராஜீவின் தாயும் அவர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தார்.

"என் பொண்ணுக்கு சமைக்க எல்லாம் தெரியுமா?" என்று ஆச்சரிப்பட்ட டேவிட் மருமகனிடம் வாய்விட்டு கேட்டுவிட "அதையேன் மாமா கேக்குறிங்க? அவ சோதனைக்கு நாங்கதான் எலி." என்று மருமகன் மகளை வாரிட அங்கே சிரிப்பொலி எழுந்தது. அவள் கொண்டு வந்ததை பார்த்தவர் "இன்னைக்கு நாங்க தான் மாப்புள எலி." என்று கூற அப்பா என்று சிணுங்கியவள் அனைவரும் காபியை வழங்கிவிட்டு தந்தையின் பாதத்திற்கு கீழே அமர்ந்து அவர் மடியினில் தலை வைத்து கொண்டே "இப்போவாவது என்னையும் அவரையும் ஏத்துக்கிட்டங்களே ரொம்ப சந்தோஷம்பா. இந்த நிமிஷம் உலகத்திலையே அதிக சந்தோஷத்துல இருக்க ஆள் நான் தான் இருப்பேன் தங்க்ஸ் பா தங்க்ஸ்." என்றாள். "ஆனா எப்படிப்பா என் மேல உள்ள கோவம் போச்சி?" என்று தன் சந்தேகத்தையும் கேட்க

அவரும் மகளின் செய்கையில் மனம் கனிந்தவர் இதுவரையிலும் இவளை தள்ளி வைத்துவிட்டோமே என்று சஞ்சலத்துடன் பார்த்து மகளின் கேள்விக்கு வீட்டில் நடந்ததையும் தன் மனம் மாறியதையும் மகளுக்கும் தன் மருமகனுக்கும் கூற முனைந்தார் "உங்களை பார்த்துட்டு நான் ரொம்ப கோவமதான் போனேன் டா உன்னை வெட்டிபோடுற அளவு கோவம்... ஆத்திரம் என் கண்ணை மறைச்சிடுச்சி." என்றவர் வீட்டில் நடந்ததை விளக்க ஆரம்பித்தார்.

ஷீலாவின் தாய் கண்ணீருடன் வீட்டிற்குள் நுழைந்ததும் அழுதுக்கொண்டே வந்த மருமகளை பார்த்தவர் "என்ன மா ஏன் அழுகுற?" என்று விசாரிக்க சர்ச்சில் நடந்த விஷயத்தை கூறியவர் கணவரை பார்த்து ஆதங்கம் தளாது "இவருக்கு மக இருக்குன்னு பாசம் வேண்டாம் நாலு பேரு முன்னாடி அடிக்கிறோம்னு எண்ணமாச்சி இருக்கனும்ல அத்த... நம்ம வீடா.. இல்லை அவ வீடா... ஒரு பொது இடத்துல இப்படி நடந்துகிட்டா அவளுக்கும் அவ புருஷனுக்கும் என்ன மரியாதை இருக்கு அத்த நாம யாருக்காக வாழறோம்... இன்னைக்கு இல்ல நாளைக்கு வந்து சேர போறா இப்படி அவமானபடுத்தி அடிச்சா அவ பொறக்கலன்னு ஆகிடுமா இல்ல நாம பாசம் வைக்கலன்னு ஆகிடுமா இவர் செய்றது ரொம்ப பாவம் அத்த." என்று தன் மனதில் இருந்ததை கொட்டியவர் விடுவிடுவென சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்.

"ஏய் என்னடி வாய் நீளுது பெத்த பாசம் கண்ணை மறைக்குதோ... நாலு பேர் முன்னாடி அவள அடிச்சது கௌரவ குறைச்சலா போயிடுச்சோ இதுக்கும் மேல அவ திருட்டுத்தனமா தாலிய கட்டிட்டு வந்து நின்னப்போ எனக்கும் மானம் மரியாதை கௌவரம் எல்லாம் காத்துல பறந்துச்சிடி... இப்போ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்ட மன்னிச்சி ஏத்துக்கனுமா?" என்று கர்ஜித்தவர் அப்படியே அருகில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்தார்.

"அந்த ஓடி போனவளைப்பத்தி பேசின நீயும் இந்த வீட்டுல இருக்க முடியாது." என்று மீசையை நீவி விட்டு "இத்தனை வயசுக்கு அப்புறம் வாழாவெட்டியா அப்பன் வீட்டுக்கு மூட்டை முடிச்சி கட்டிக்கிட்டுதான் போக வேண்டிவரும்." என்று எச்சரிக்க...

இதை கேட்டுக்கொண்டிருந்த டேவிட்டின் தாய்க்கு கோபம் வர "என்ன வார்த்தையா பேசுற மனுஷன்னா நாக்குல நரம்பு வேணும்யா இப்படி பட்டுபட்டுன்னு நெருப்பை அள்ளி அந்த புள்ள மேல கொட்டுற இப்போ என்ன அவளுக்கு சப்போட்டு பண்ணா வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுவிய அனுப்பறதுனா என்னைய அனுப்பு நான் தான் அவளை வெளியே அனுப்பி வைச்சி அந்த புள்ளைய கல்யாணம் பண்ணிக்க சொன்னேன்...

அதிர்ச்சியாய் தாயை பார்த்தவர் உஞ்சலில் இருந்து எழுந்தே விட்டார். என்ன அப்படி பாக்குற நான் தான் இது எல்லத்துக்கும் காரணம் என்று தீர்க்கமாய் பேசிய தாயை முறைத்தவரை என்ன முறைக்குற உன் முறைப்புக்கெல்லாம் பயந்தவ நான் இல்ல உன்னையே பெத்தவ நான் உனக்கும் மேல எனக்கு தைரியம் அதிகம் என்று சற்றே இருமாப்புடன் சொல்ல

அவரை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் கண்களில் கோவத்துடன் நின்றுந்தார்... அப்போ என் பேச்சை மீறி இந்த கல்யாணம் நடக்க நீங்க தன் காரணமா என் சோத்தையே திண்ணுட்டு எனக்கே கேடு நினைச்சிங்களா என்று உறும

என்ன உன் சோறா... என் புருஷன் சம்பாதிச்சி வைச்சிட்டு போனதைதான் நான் திங்குறேன் இந்த வீடு என்னை கட்டினவன் கட்டிவைச்சது அவரோட சுய சம்பாத்தியம் என்றவர் யாருய்யா கேடு நினைச்சது உன் புள்ளைக்கு, நடக்க இருந்த கேடுல இருந்து காப்பத்தி அந்த புள்ளைய கல்யாணம் பண்ணி வைச்சி நல்லது தான்யா நடத்தி இருக்கேன்... நீ பார்த்தவன் யாரு சுத்த அய்யோக்கியன் இன்னைக்கு ஏதோ தங்கம் கடத்தினான்னு ஜெயில்ல இருக்கான் அவனுக்கு தங்க சிலையாட்டம் இருக்க புள்ளைய கொடுத்து அவளை பாழுங்கிணத்துல தள்ள இருந்தியே படுபாவி அவ நீ பெத்த பொண்ணு தானே அருமை பெருமையா வளர்த்துட்டு ஒரு குரங்கு கையில புடிச்சி கொடுக்க எப்படிடா மனசு வந்துச்சி என்று மகனை வார்த்தையால் அடிக்க

அதுவரை தனக்கு துரோகம் செய்ததாக அனைவரின் மேலும் கொலை வெறியில் இருந்தவர் கடைசி வாக்கியத்தில் அப்படியே ஊஞ்சலில் தலையை பிடித்தபடி அமர்ந்தார். இது போதாது இன்னும் வேண்டும் என்பது போல் நம்ம பொண்ணை கட்டினவனுக்கு என்ன குறை நீ போட்டு வந்த எதுவும் வேண்டாம்னு சொல்லி கழட்டி கொடுத்துட்டு தானே போனான் இதுவரை கண்கலங்காம தானே வைச்சி வாழறான் இப்பேற்பட்டவனை நீயா தேடி எடுத்தாலும் கிடைச்சி இருக்க மாட்டான் என்று லெப்ட் அன்ட் ரைட் வாங்கி இருந்தார்.

உண்மைதானே பணம் அந்தஸ்த்து என்று தானே அவனை மாப்பிளையாய் பார்த்து வைத்தேன்... படித்த பொண்ணுன்னு பாக்கலையே அவளுக்கு பிடிக்குமான்னு கேக்கலையே என் இஷ்டப்படி தானே இதை நிச்சயம் செய்ய நினைச்சேன் இன்னைக்கு அவன் ஜெயில்ல இருக்கான் அவனை கட்டி இருந்தா என் பொண்ணு நிலமை கடவுளே என்ன பாவத்தை பண்ண இருந்தேன் என்னை காப்பாத்திட்ட என்று மானசீகமாய் பேசிட்டவரின் அருகில் வந்த அவரின் தாய் "எப்பா சாமி இப்பவாச்சும் நான் சொல்றத கேளுய்யா நமக்கு இருக்கரது ஒத்த புள்ள அவ வாழ்க்கையும் சந்தோஷமும் தான் நமக்கு முக்கியம்யா." என்றதும் உடைந்து போனவர் அடுத்து வந்து நின்ற இடம் தன் மகளின் புகுந்த வீட்டில் தான்.

மருமகளே பாத்தியா உன் மகளை, தொண்ட தண்ணி வத்த அவன் கிட்ட பேசி இங்கன கூட்டியாந்த உன் பொண்ணு நம்மள கண்டுக்குறாளா அவன் அப்பன் கூடவே இருக்கா என்று பாட்டி சத்தமாகவே கூற

உன்கிட்ட எப்பயும் பேசிக்கிட்டு தானே இருக்கேன் அப்பத்தா இத்தனை மாசம் கழிச்சி இன்னைக்கு தான் அப்பா என்கிட்ட பேசுறார் என்று நா தழதழக்க கூறியவள் இது கூட உன் பேத்திக்கு செய்யலான அப்பறம் என்ன அப்பத்தா நீ என்று நொடித்தாள்.

மாப்பள நீங்களும் என்னை என்று வரும்போதே பீளிஸ் மாமா என்னை பெரிய மனுஷன் ஆக்காதிங்க எப்பவும் நான் உங்கள தப்பா நினைச்சது இல்லை பொண்ணை பெத்தவரோட கோவம் மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிஞ்சது மத்தபடி வேற எதுவும் தப்பா தெரியல எல்லாம் மாறும்னு நம்பிக்கையோட இருந்தோம் இப்ப அதுவும் நடந்துடுச்சி என்று மலர்ச்சியாக கூறிய மருமகன் பெரிய மனிதனாய் அவர் மனதில் உயர்ந்து நின்றான். ஷீலாவின் புகுந்த வீடும் பிறந்தவீடும் அவளுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தமாய் இருந்தாள். ஆனால் இதற்கு நேர்மாறன மனநிலையில் சென்னையில் ஒருத்தி மனதில் பாரத்துடன் அமர்ந்திருந்தாள்.

சித்தார்த் உத்தராவின் கடந்த காலத்தை பற்றி கூறிய செய்திகள் யாவும் அவளுக்கு உவப்பானதாக இல்லை எவ்வளவு பெரிய முட்டாள் தனத்தை பண்ணிட்டு ஒருத்தர் மேல அந்த பழியையும் போட்டு வந்து இருக்கேன்... சே என்ன மடத்தனமான காரியம் பண்ணிட்டு வந்து இருக்கேன்.. என்று தன்னை பற்றி சிந்தித்து இருந்தவள் மனதில் பெரிய கேள்வி ஒன்று இருந்தது யார் இந்த அஷ்வின் ஒரு ஊர் பெயர் இல்லாதவனையா ஒருவனையா நான் லவ் பண்ணேன்... அவனுக்கான விலாசம் கூடவா தெரியாது.. நான் தற்கொலை செய்துக்கொள்ளும் அளவு கோழையா இருந்துருக்கேனே... என்று தன்னை பற்றி சிந்தித்துக்கொண்டு இருந்தவள் குழந்தையை தூக்கி செல்வதற்காக வந்த தயாபரனின் மருமகள் அவள் யோசனையாய் அமர்ந்திருப்பதை பார்த்து அருகில் அமர்ந்தார்.

மகி... ஏய் மகி என்ன ஆச்சி... என்ன யோசனையா இருக்க போல

ஆஹ்... அக்கா என்ன என்றதும் புருவம் உயர்த்தி என்ன யோசனையா இருக்கேன்னு கேட்டேன் என்றாள் தயாபரனின் மருமகள் அது வந்து அக்கா என்று தடுமாறினாள் உத்ரா.

அவள் தயக்கத்தை பார்த்தவர் ஏன் தயங்குறா விஷயத்தை சொல்லு என்ன யோசனை என்றாள் அவள்

அது வந்து உங்ககிட்ட வந்து நான் சேர்ந்தப்போ என்னை முழுசா பரிசோதனை செய்திங்களா என்றாள் தயங்கி தயங்கி தன்மனதில் இருந்த பெரிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளும் நோக்கில்

"ம் ஆமாடா கம்பீளீட் செக்கப் பண்ணோம் ஒன்டே முழுக்க அப்சர்வேஷன்ல வைச்சிருந்தோம் உன் முகத்தில கை விரல் தடம் பதிஞ்சி இருந்தது உன் கழுத்திலையும் நககீரல்கள் இருந்துச்சி உன்னை யாரோ பலமா தாக்க முயற்சி பண்ணி இருக்காங்க என்று கூற கூற கேட்டவளுக்கு அடிவயிறு கலங்கி தொண்டை வரண்டது

"அப்புறம் அக்கா?" என்றிட

வேற எதுவும் இல்லடா என்றதும் அக்கா நான் என்ன கேட்க வறேன்னா நான் நான் நானாதானே இருக்கேன் என்று திணறியபடி கேட்க

அவளின் கேளிவிக்கான அர்த்தம் புரிந்தவள் ம். புரியுது மகி நீ இன்னும் நீயாதான் இருக்க ஐ திங்க் இந்த ஒரு போரட்டத்துல தான் ஏதோ சம்திங் நடந்து இருக்கு அதோட அதிரிச்சியில தான் நீ பழசை மயக்கநிலைக்கு வந்து இருக்க பட் யூ வில் ஆல் ரைட் டா உனக்கு ஒன்னும் ஆகல என்று அவளின் கைபிடித்து கூற

அவள் கைகளை முகத்தில் பொத்தியவள் மலர்ச்சியுடனே தெங்க்ஸ் கா தெங்க்ஸ் என்று கூறி சந்தோஷத்தை பகிர்ந்துக்கொள்ள ஹேய் மகி என்ன இதுக்குத்தான் இத்தனை யோசனையா இருந்தியா நத்திங் டா இனி எல்லாம் உனக்கு சந்தோஷமாதான் முடியும் சரி நீ எல்லாம் பேக் பண்ணிட்டியா நாளைக்கு எத்தனை மணிக்கு பிளைட் எப்போ வர்ராரம் சித்தார்த் என்றிட்டார்.

"நாளை மார்னிங் பிளைட் 9.30 கா எனக்கு தான் கொஞ்சம் படபடன்னு இருக்கு அதே நேரம் என் சொந்தத்தை பார்க்க போறேன்னு சந்தோஷமாவும் இருக்கு சித்தார்த் அண்ணா சொன்னதை எல்லாம் வைச்சி பார்க்கும் போது என் மேல தான் தப்பு நான் எப்படி பேசுவேன் எப்படி நடந்துப்பேன்னு எதுவும் நியாபகம் இல்லக்கா." என்று கூற

அவள் படபடபேச்சை கேட்டு புன்னகையை உதிர்த்தவர் "டோன்ட் வொரி பேபி நர்வஸ் ஆகாதே நல்லபடியா நடந்துக்கோ அடிக்கடி வந்து போகனும் நம்ம வீட்டோட நம்பர் எப்பவும் நியாபகம் இருக்கட்டும் அண்ட் உன் மொபைலை மறக்காதே அதே போல நீயும் பயப்படாதே உன் சேப்டிக்கு ஸ்டேஷன்ல இன்பார்ம் பண்ணி இருக்காரு மாமா அப்படியே யாரோ வந்தாலும் உன்னை அனுப்பி வைச்சிட பாட்டோம் நல்லா விச்சாரிச்ச பிறகுதான் அனுப்புறாரு சரியா நீ எதுக்கும் கவலைபடாதே பேபி" என்று உத்தராவை தேற்றியவள் மகளை அறையில் இருந்து எடுத்துக்கொண்டு சென்றாள்.

"அம்மா நான் ஊருக்கு கிளம்புறேன் நாளைக்கு காலைல பிளைட்." என்றான். தாய் தந்தையரிடம் ஒரு தகவலாக நவனீதனுக்கு கண்ணை கட்டியது இவன் தாமரை இலை தண்ணீர் போல உறவுகளுடன் ஒட்டாமல் இருப்பது பலர் கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பலாய் பதில்களை கூறி சமாளித்து இருந்தார். நாளை தந்தையும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிறார் உடன் இல்லாமல் கிளம்புகிறேன் என்றவனிடம் என்ன கூறி நிறுத்துவது என்றிருந்தவர் மனைவியிடம் மெல்ல சைகை செய்தார்.

"சித்து நாளைக்கேவா போகனும்? ஒரு இரண்டு மூனு நாள் கழித்து போகலாமே... தாத்தாவும் உன் கூட இருக்க பிரியப்படுறார்." என்றவரின் பேச்சை இடைவொட்டி நிறுத்தியவன் "மா என்னமா? அவர் நம்ம ஊருக்கு வருவார் தானே அப்போ போய் பார்த்துக்கலாம் எனக்கு உடனே எல்லாம் ஒட்டி உறவாட முடியாது புரிஞ்சிக்குங்க நாளைக்கு காலைல 9.30 மணிக்கு பிளைட் நான் ஹோட்டல்ல இருந்து கிளம்பி நேர ஏர்போர்ட் போயிடுவேன் உங்களுக்கு ஏதாவது வேணுமா மா?" என்றவன் தந்தையிடம் "அப்பா உங்களுக்கு செலவுக்கு வைச்சி இருக்கிங்களா கார்டு இருக்குல?" என்றான்.

என்ன கூறினாலும் மகன் இங்கு தங்க மாட்டான் என்று தெரிந்துகொண்ட ராதா "எல்லாம் இருக்கு இப்போ எதுவும் வேண்டாம் சித்து நீ கிளம்பு தியாகுட்டிய கேட்டேன்னு சொல்லு இன்னும் இரண்டு ஒரு நாள்ள நாங்களும் அண்ணனை பார்க்க வருவோன்னு மஞ்சுக்கிட்ட சொல்லு தியாவ பாத்துக்க சின்ன பொண்ணு ரொம்ப பயந்து இருப்பா." என்றார்.

நவநீதனின் பதிலை எதிர்பார்த்து தந்தையிடம் திரும்ப "என்கிட்ட தேவையான அளவுக்கு பணம் இருக்குடா பத்தாததுக்கு கார்டும் இருக்கு பிராப்ளம் இல்ல அவ சொன்னதுதான் இன்னும் இரண்டு மூனு நாள்ல வந்துடுவோம். அதுவரையும் நீ கூட இருந்து மாணிக்கத்தை பார்த்துக்க தைரியம் சொல்லு இங்க இருக்க நிலமையையும் அவங்ககிட்ட சொல்லு நாங்களும் அத்தைவீட்டுக்கு கிளம்புறோம்." என்றவர் "ராதா வா போகலாம் மணி ஆகிடுச்சி." என்றிட்ட நவநீதனை தொடர்ந்து மகனிடம் கூறி கணவருடன் ராதாவும் செல்ல வழியில் எதிர்பட்ட தங்கையின் கணவர் நவநீதனிடம் பேச்சை வளர்த்தார்.

"என்ன மச்சா இன்னைக்காவது மாப்பளைய வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருக்கலாம்ல?" என்றிட்டவர் பின் அவரே பரவாயில்ல மச்சன் மாப்பிள்ளைக்கு கூச்சமாய் இருக்கத்தானே செய்யும் கட்டிக்க போற பொண்ணு எதிர்ல வைச்சிக்கிட்டு எப்படி சகஜமா இருக்க முடியும் நிச்சயம் ஆகிட்ட எதுவும் தெரியாது உரிமை அதிகம் ஆகிடும்.. சீக்கிரமே ஏற்பாடு பண்ணிடலாம்... உங்க தங்கச்சியும் ரொம்ப ஆவளா இருக்கா அண்ணன் மகனுக்கு பொண்ணை கொடுக்க மாமாவும் சுகமாகிட்டார் வீட்டுக்கு வந்ததும் முதல் நல்லதா இது நடத்திடலாம் வீட்டுல எல்லோரும் சந்தோஷபடுவாங்க என்று பேசிக்கொண்டே போக நவநீதனுக்கு தான் ஒன்றும் புரியாமல் பூமியே ஆட்டம் கண்டது. என்றாள் இதைகேட்ட ராதாவோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.

~

டேய் அவன்தாண்டா அந்த வக்கிலோட மருமகன் போட்டு தள்ளுடா அவனை என்று ஆளவந்தனின் அடியாட்ஙளில் ஒருவன் பக்கத்தில் இருந்தவனுக்கு கூற மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவன் கார் பார்க்கிங்கிற்குள் நுழைந்த போது அவனை பலமாக தாக்க நிலைதடுமாறி கீழே விழாமல் சுவற்றை பிடித்தபடி நின்றான் கேஷவ்.

இவன் எத்தனை வாட்டி போட்டாலும் தப்பிச்சிடுறான் டா இன்னைக்கு இவனை சாககடிக்காம வெளியே போகக்கூடாது உள்ளே அந்த கிழவன் சாகனும் வெளியே இவன் சாகனும் அடிங்கடா அவனை என்று சுற்றிலும் ஆட்கள் வளைக்க

டேய் உங்க பிரச்சனை தான்டா என்ன உங்களுக்கும் எனக்கும் என்னடா சம்மந்தம் விடாது கருப்பு துரத்துரா மாதிரி துறத்திட்டு வறிங்கிங்க என்று கிண்டலுடன் சலுப்பு கலந்த குரலில் கூறியவன் வாங்கடா வாங்க இன்னைக்கு நீங்களா நானுன்னு பாத்திடனும் நானும் சண்டை போடறத எல்லாம் விட்டு ரொம்ப வருஷம் ஆகிடுச்சி இன்னும் அந்த ஸ்ரெந்த் இருக்க ஸீடமினா இருக்கான்னு பாக்கனும் வாங்க டா என்று அவர்களை அழைத்து சண்டைக்கு தயாராக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி அவன் அருகில் சென்றனர்.

ஓங்கிய ஒருவன் கையை முருக்கி மடக்கி பின்னால் வளைத்து அவனின் தலையில் ஒரு தட்டு தட்டி விட அப்படகயே மடிங்கிய வாக்கில் அமர்ந்து சரிய முன்னால் சென்ற நபர்கள் எல்லாம் பின்னால் அடித்து வைத்து பீதியாகினர்.

என்னமோ சொன்ன வாடா வா... என்று சத்தமாக அழைத்து ஒருவன் நெஞசில் மிதிக்க அவன் சுருண்டு கீழே விழந்தவன் தான் 10 நிமிடத்தில் அனைவரின் கை கால்களையும் உடைத்தவன் பரவாயில்லை டா பிரக்டிஸ் இல்லனாலும் ஃபைடிங்ல நாட் பேட்... நல்லாதான் இருக்கு ஸ்டேமினா... இன்னும் வேற யாராவது வர்ரதா இருந்த இந்த இதுதான் என் விசிடிங் கார்ட் அங்க வரசொல்லு என்றவன் மருத்துவமனைக்குள் வேகமாக சென்றவன் மாணிக்கம் இருந்த வார்டிற்கு செல்ல

அங்கு சித்துவும் கரடுமுரடான இரண்டு நபர்களுடன் கை கலப்பில் இருப்பதும் தியாவின் கன்னத்தில் அடித்தது உதடு கிழிந்து ரத்தம் வழிவதையும் பார்த்தவன் நடப்பதை ஒரளவு யூகித்து நொடியூம் தமதிக்காது அந்த இன்னொருவனையும் அடித்து கீழே தள்ளி ஏறி மிதித்து இருந்தான்.

சித்துவின் கையில் அகப்பட்டு இருந்தவனின் முகம் அவனிடம் சரமாரிக குத்துவாங்கியதில் கன்றி போய் இருக்க அவன் கைகளில் இருந்த கத்தியை பிடித்து கழுத்து நேர நீட்டி மரண பயத்தை காட்டியவன் கீழே தள்ளி கால்களை முறுக்கி இருந்தான்.

கேஷவின் கால்களுக்கு அடியில் சிக்கியவனை பார்த்து உன்னை அனுப்பினவன் இன்னேரம் ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருப்பான் அவனுக்கு துணையா நீயூம் போய் எண்ணு என்று உடனே சக்தி எண்ணிற்கு அழைக்க நான் அங்கதான்டா வந்துட்டு இருக்கேன். வக்கில் சாருக்கும் உனக்கும் கொலை முயற்சி செய்து இருக்காங்கன்னு ஸ்டெல்லா தகவல் சொன்னாங்க இதோ வந்துட்டேன் ஹாஸ்பிட்டல் வாசல்ல தான்டா இருக்கேன் உளளே வறேன் என்றவன் அவர்களை உடனே கைது செய்து ஜீப்பில் ஏற்றி அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றான்.

சித்து நீங்க எப்படி இங்க என்று கேஷவ் கேட்க நான் இப்போ தான் சென்னையில் இருந்து வந்தேன். அங்கிள் எப்படி இருக்காருன்னு பாக்கலாம்னு வரும்போதுதான் தியாவும் ஆண்டியும் இவனுங்கள தடுக்கரது தெரிஞ்சிது பார்த்த கத்தியோட நிக்கராங்க யார் இவங்க எதுக்கு அங்கிள கொல்ல பாக்குறாங்க என்று கேட்க

நடந்ததை சுருக்கமாக கூறியவன் நீங்க எப்போ கிளம்பினிங்க என்றிட மார்னிங் தான் கேஷவ் கவி எங்க அவளுக்கு எப்படி இருக்கு என்றிட கவிக்கு கால் இன்னும் வலி இருக்கரதால வீட்டுல இருக்கா சித்து அதான் அத்தைக்கு துணையா தியாவ இருக்கசொல்லி போனேன் கார் எடுக்கும்போதே ஆளவந்தனோட ஆளுங்க வந்துட்டானுங்க அவனுகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்ததுக்கு அப்புறம் தான் மாமாவையும் கொல்ல ஆள் அனுப்பினதையும் சொல்றானுங்க

அதான் என்னன்னு பார்க்க வந்தேன்.. நீங்க இன்னும் கொஞ்ச நேரம் தாமதிச்சி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும்னு நினைக்க முடியல நீ வந்ததால மாமாவுக்கு ஒன்னும் ஆகாம காப்பாத்த முடிஞ்சது என்று பெருமூச்சை வெளியிட அதை நினைக்கும் போதே மஞ்சுவும் தியாவும் தான் கொஞ்சம் கலவரமானார்கள்

தியாவின் பயந்த முகம் சித்துவை ஏதோ செய்ய அவளின் உதட்டின் ஓரத்தில் ரத்தம் கசிவதை பார்த்தவன் மஞ்சுவிடம் கூறிவிட்டு அவளுக்கு முதலுதவி செய்ய செவிலியரை அழைத்து வந்தவன் அவள் வலியில் ஸ் எனசுணங்கியதை பார்த்து அவளை அணைத்து ஆறுதல் கூற முடியாமல் இருப்பதை நினைத்து மனது வலித்தது. கைகளை இறுக்க மூடி தன்னை நிலைபடுத்தியவன் முகம் மட்டும் பாறை போல் இறுகி இருந்தது இந்த சூழ்நிலையையே அவன் முழுவதுமாக வெறுத்தான் தன்னில் பாதியானவளின் வருத்தத்தை கூட போக்கமுடியாமல் இருப்பது நினைக்க நினைக்க மனம் கணத்தது. இருக்கும் நிலையை மறந்து அவளை அப்படியே கண்காணத தேசம் தூக்கி செல்ல கைகள் பரபரத்தாலும் வரவேண்டுமே அவன் மனம் கவர்ந்தவள். தியாவை அள்ளி செல்ல முடியாமல் அவனும் அவனிடம் தஞ்சம் புகமுடியாமல் அவளும் மனதிற்குள்ளே தவித்தனர்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 50
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN