காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 62

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அண்ணன் கூறிச் சென்ற செய்தியால் இரவு முழுவதும் உறக்கம் இன்றி தவித்தவன் விடிவதற்கு முன்னமே மருத்துவமனைக்கு தயாராகி விரைந்து விட்டான்.

கைகளில் ஸ்டியரிங்கை பிடித்து இருந்தாலும் கண்கள் இலக்கு இல்லாமல் சாலையை வெறித்தபடி இருந்தது. 'உத்ரா... உத்ரா...' என்ற பெயரோ அவனை அதிகம் வாட்டியது...

என்றோ ஒரு நாள் அவளை தொட ஆசைக் கொண்டதற்காக இன்று வெக்கப்படுகிறான் வேதனைபடுகிறான்.

அனலில் இட்ட உயிராய் வதைபடுகிறான், நண்பன் வடிவில் ராட்சதன் அவளை விழுங்க காத்திருக்க, அண்ணன் சொல்லிய செய்தி அமிலமாய் அவனை சுட்டது. தினமும் வந்து சென்ற பாதை என்பதால் கருத்தில் இல்லை என்றாலும் பழகிய கைகள் அவன் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து இருந்தது.

வெகு நேரம் ஆகியும் காரில் இருந்து நிர்மல் இறங்காமல் இருக்கவும் கார் கதவை தட்டிய காவலாளி "சார் சார்" என்று அழைத்ததும் நடப்புக்கு வந்தவன் காரில் இருந்து இறங்கி மருத்துவமனைக்குள் நுழைந்தான்.

ரிசப்ஷனை நெருங்கும் போதே "குட்மார்னிங் டாக்டர்" என்ற ரிசப்ஷனிஸ்டின் குரலுக்கு தலை சைப்புடன் "குட்மார்னிங்" என்று கடந்து போக "டாக்டர் ஒன் மினிட்" என்றாள் அந்த பெண்.

"யெஸ் சொல்லுங்க" என்று நின்றவன்.

"டாக்டர் உங்க ஃப்ரெண்ட் அஷ்வின் பிரசாத் அட்மிட் ஆகி இருக்கார். நீங்க வந்ததும் உங்கள பார்க்கனும்னு சொன்னார்" என்றதும் "வாட் அஷ்வின்..... அஷ்வினா!!!!" என்று ஆச்சர்யமாய் கேட்டவன் மனதில் "திங் ஆஃப் டெவில். எவனை பத்தி நெனச்சிட்டு வந்தேனோ அவனே இங்கேயும் இது எங்க போய் முடிய போகுதோ!!!" ன்ற நினைப்புடன் "எந்த வார்ட் எப்போ அட்மிட ஆனார்???" என்று கேள்வியை கேட்டான்.

""நேத்து நைட் சார்" என்றிட குழப்பதுடன் லெட்ஜரை பார்த்தவன் "இரவு 11" என்று எழுதி இருக்க "என்ன ஆச்சு இவனுக்கு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகுர அளவுக்கு???" என்று கேள்வியுடனே நண்பனின் அறைக்கு சென்றான்.

தலையில் இரண்டு மூன்று பேண்டேஜூம் கீழே விழுந்ததில் கை கால்களில் சிராய்ப்பும் அந்த தடியர்கள் அடித்ததில் உதடு கிழிந்து ரத்தம் வந்திருப்பதிற்கான அடையாளத்துடன் படுத்து இருந்தவன், "அஷ்வின்" என்று நிர்மலின் அழைப்பிற்கு கண்களை மெல்ல திறந்து அவனை பார்த்தான்.

"அஷ்வின்.... என்னடா எப்படி அடி பட்டது???.என்ன ஆச்சி??" என்றான் அவன் முகத்தினை ஆராய்ந்தபடி.

"ஜஸ்ட் டா, ஜஸ்ட்ல தப்பிச்சேன்" என்று கூறியவனின் குரலில் அத்தனை ஆத்திரம்.

"என்ன சொல்ற ஜஸ்ட்ல தப்பிச்சியா!!! இது ஆக்ஸிடென்ட் டா பார்த்தா அப்படி தெரியலையே எப்போ நடந்தது???" என்றான் நிர்மல் அவனின் மருந்துவ குறிப்புகளை பார்த்தபடி.

"ப்ச் கொல்ல வந்தானுங்கடா. உயிர் தப்பிச்சு வந்து இருக்கேன்".

"உன்னையா அடிக்க வந்தாங்க??? யாரா இருக்கும் ஒருவேல உத்ரா அண்ணனுக்கு விஷயம் தெரிஞ்சிடுச்சா???" என்றான் திடுக்கிட்ட குரலில்.

நிர்மலின் பேச்சு அஷ்வினுக்கு எரிச்சலை தர பெட்டை விட்டு வேகமாக எழுந்தவன் அவனை நோக்கி வந்து "உத்ரா.. உத்ரா.. உத்ரா டேமிட்" என்றான் மெத்தையில் அமர்ந்து. "பார்க்குற நேரம் எல்லாம் அவளை பத்திதான் பேசுவியா??? அவ இதுக்கு காரணம் இல்ல. எதுக்கு எடுத்தாலும் அவ பெயர் தான் முதல்ல சொல்ற அவ அண்ணன் என்னை சாகடிக்கலனாலும் நீயே பேசி பேசி காரியத்தை முடிச்சிடுவ போல இருக்கே" என்றான் கோவத்துடன்.

"டேய் எனக்கு இருக்க டென்ஷன்ல எதையும் யோசிக்க முடியலடா உன்னை அடிச்சகட்டாங்கன்னு சொல்லும்போதா நான் யாரை நினைக்கறது... மைன்டுக்கு வந்த ஒரே பேர் உத்ரா தான். சரி வேற யாரு உன்னை கொல்ல வந்துருப்பாங்கன்னு நினைக்கிற???" என்றான் நிர்மல்.

"என்னை கொல்ல வேற யாரு வருவா எல்லாம் அந்த பாழாபோன வர்ஷாவோட அப்பனாதான் இருக்கும். வேற யாருக்கு இன்டன்ஷன் இருக்கு என்னை கொல்ல... அந்த ஆளுக்குதான் இப்படி குறுக்கு புத்தி வேலை செய்யும். வந்தவன் கூட தலைவரு அப்படி இப்படின்னு பேசிட்டு இருந்தான்" என்றான் அஷ்வின்.

யோசனையோடு நின்று இருந்தான் நிர்மல் அவன் மனதில் வார்ஷாவை பத்திய எண்ணங்கள் ஓட அமைதியாய் இருந்தான்.

"அவன் அமைதியை பார்த்து என்னடா யோசிக்கிற???... "

"பச் ஒன்னுமில்ல டா... சொன்னா மட்டும் என்ன கேட்கவா போற.. எப்பயும் போல எடுத்தெறிஞ்சி பேசிட்டுதானே போக போற???" என்றான் தனக்கு தானே.

"ஹேய் சொல்றத புரியறாமாதிரி சத்தமா சொல்லேன்டா. அடிச்சவன் காதுமேலையே விட்டு இருப்பான் போல இருக்கு. ஏதோ குய்னு கேக்குது" என்றவன் காதில் கையை வைத்து வலியை மட்டுப்படுத்த.

'போட்டவன் அப்படியே இரண்டு அடி இறக்கி கழுத்து நரம்புலையே போட்டு இருக்க கூடாது இவனும் நிம்மதியா இல்லாம இருக்கவனையும் சாகடிக்கிறான் என்று உள்ளுக்குள் நினைத்தாலும் "அஷ்வின் நீ வார்ஷவை ஏன்டா வேணாம்னு சொல்ற???" என்றான்.

"கோபகுரலில் இப்போ எதுக்கு அவ பேச்சு???"

"வர்ஷா உன்னை உண்மையா தானேடா லவ் பண்ணா. நீயும் அவளை கல்யாணம் பண்ணிக்கிறதா தானே இருந்த உனக்கும் அவளை பிடிச்சி இருந்ததுல அவளோட அப்பா ஜெயிலுக்கு போனாருன்னு ஒரே காரணத்துக்காக இப்போ வயித்துல பிள்ளையோட இருக்க பொண்ண வேண்டாமுன்னு சொல்றியே...

இது தப்புடா... இப்பவாவது கொஞ்சம் மாற முயற்சி பண்ணுடா உனக்காக வேண்டாம் வர்ஷாவுக்காகவும் வேண்டாம் வயித்துல இருக்க இருக்க உங்க ரெண்டு பேரோட குழந்தைக்காகவாவது அவளை ஏத்துக்கடா" என்று கூற.

"என்ன நீ அவளுக்கு வக்காளத்தா சம்மன் இல்லாம ஆஜர் ஆகுற. எப்போதுல இருந்து இந்த வக்கீல் வேலைய பாக்குற!!!. என்ன உன்கிட்ட வந்து வாழ்க்கை கொடுக்க சொல்லி பேசினால இது மட்டும் தானா இல்ல வேற ஏதும் சைடுல மாமா வேலை பாக்குறியா???" என்று கேட்டதும் அவன் சட்டைய பிடித்த நிர்மல் "மைன்ட் யுவர் வேர்ட்ஸ் அஷ்வின். இவ்வளவுக்கும் நான் பொறுத்து போறது நண்பனா பழகுனா ஒரே தோஷத்துக்காக தான். நான் மனுஷனா மாறிட்டு வரேன். என்னை மிருகமாக்கிடாதே... இனி என் முகத்துலையும் முழிக்காதே... கெட் லாஸ்ட் ஆஃப் மை சைட்" என்று கத்தியவன் அங்கிருந்து செல்ல முயல.

அவனை முந்திக்கொண்டு வந்த அஷ்வின் "மனுஷனா... ப்ச் என்னடா புதுசு புதுசா சொல்ற நீ எப்படியோ போ. இனி எனக்கும் உனக்கும் செட் ஆகாது. லுக் நீ என்ன என்னை போக சொல்றது!!! இன்னையிலிருந்து நீ யாரோ நான் யாரோ. குட் பை" என்றவன் அங்கிருந்து சென்று விட்டான். இருந்த ஒரே ஆதரவான நண்பனையும் விட்டு செல்பவனை பரிதாபமாக பார்த்தான் நிர்மல். நாய்வாலை நிமிர்த்துவதும் அஷ்வினை திருத்துவதும் ஒன்று என்று தெரிந்த விஷயமாயிற்றே அவனுக்கு இருந்தும் நணாபனுக்காக வருத்தப்பட்டான்.

😢😢😢😢

வெளியே செல்ல கிளம்பி தயாராகி இருந்த கோபி யோசனையுடன் அமர்ந்திருந்தான். கையில் மொபைலுடன் தலையை தட்டி தட்டி யோசிக்க ஒன்றும் தோன்றாமல் நண்பனை அர்ச்சித்து கொண்டு இருந்தான்.

'இவனை யாரு இப்போ ஊருக்கு போக சொன்னது!!! அவன் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணேன்ல என் லவ்வ அம்போன்னு விட்டுட்டு போயிட்டான் பக்கி பய. உத்ராவை இப்போ எப்படி பாக்குறது.???? என்ன சொல்லி அவள வெளியே கூட்டிட்டு போறது???? என் கூட தனியா வருவாளா!!!!' என்ற சிந்தனையோடு அமர்ந்து இருக்க அவன் அம்மாவிடம் இருந்து ஃபோன் வந்தது.

யோசனை ஏதும் வராமல் இருக்க அதே சலிப்புடன் போனை எடுத்தவன் "சொல்லு மா" என்றதும்.

"என்னடா ஃபோனை எடுக்கவே ரொம்ப சலிச்சிக்கிர. இப்போ எல்லாம் ஃபோனும் பண்றதில்லை. என்ன நடக்குது அங்க???" என்று அவன் தாய் கேட்க.

"ஆமா அப்படியே இங்க ஜாலியா ஊரை சுத்தறேன் பாரு. ஏன் மா நீ வேற!!! சலிச்சிக்கலாம் இல்லமா. ஏதோ ஞாபகத்துல இருந்துட்டேன். நீ சொல்ல வந்தததை சொல்லு. குட்டி எப்படி இருக்கா. அக்கா உடம்பு பரவாயில்லையா. நீங்க எப்படி இருக்கிங்க. மாமா வீட்டுல இருக்காரா???" என்றான் அடுத்துடுத்து.

"என்னமோ போடா. வர வர உன் நடவடிக்கை ஒன்னும் மனசுக்கு சரியா படுறாபோல இல்லை. எதையோ சொல்ற ஏத்துக்குறேன்" என்றவரின் பேச்சை கத்தரித்த கோபி "இதுக்கு தான் ஃபோன் பண்ணியா. நான் சரியா இல்லன்னு சொல்ல!!!" என்றான் சற்று நக்கலாக.

"உன்கிட்ட மாட்டுறவ உன் வாயபாத்தே போதும் டா சாமின்னு பயப்படபோறா" என்றதும் மறுபடி உத்ராவின் ஞாபகம் வர "அது எல்லாம் நான் பாத்துக்குறேன். அந்த கவலையே உனக்கு வேண்டாம். நான் பேச பேச ரசிக்கிர ஒரு பொண்ணுதான் உனக்கு மருமகளா வருவா மா" என்று உளறி விட.

"அந்த கவலை எனக்கு வேண்டாமா??? அப்போ பொண்ணு எல்லாம் கூட பாத்து வைச்சுட்டேன்னு சொல்லு" என்று போட்டு வாங்க.

"என்ன மா. நீ ஒன்னு சொன்னா அதை அப்படியே பிடிச்சிக்கிற. இப்போ இப்போ உங்களுக்கு என்ன வேணும். எதுக்கு ஃபோன் பண்ணீங்க அதை சொல்லுங்க. பேச்சு எங்கேயே ஆரம்பித்து எச்கேயோ போய் முடியுது" என்று தாயிடம் அவசரத்தை காட்ட.

"அட புன்னாக்கு பயலே. அதுக்கு எதுக்குடா இந்த குதி குதிக்குற அவசரத்துக்கு பொறந்தவனே. ஏதோ தோனுச்சு கேட்டேன். இல்லன்னு சொல்லிட்டு போவியா பத்து ஊரு வேப்பிளைய ஒன்னா கட்டிக்கிட்டு குதிக்கிறானே" என்று கோபியினை வறுக்க.

ஃபோனை கீழே வைத்து கையெடுத்து கும்பிட்டவன் "என் பெத்த தாயே நீ கடுப்புல இருக்கறது தெரியாம உன் கிட்ட வாய கொடுத்தேன். இன்னைக்கு பூரா வைச்சி செய்ய முடிவே பண்ணிட்டியா???" என்று மானசீகமாக வேண்ட

"அருளினோம் பக்தா" என்று சாமியும் வரம் கொடுப்பதுபோல் அவனை பெற்ற அன்னையே உத்ராவை பார்க்க நல்ல ஐடியா ஒன்றை கொடுத்தார்.

"நாளைக்கு சாய்ந்தரம் கிரிஜா அக்காவோட பேத்திக்கு பிறந்த நாள் எனக்கு போன் பண்ணாங்க. நீ போயிட்டு வந்துடேன். அவங்க உன் அக்கா சீமந்தத்துக்கு வெள்ளி பாலாடை செஞ்சி இருக்காங்க பதிலுக்கு பதில் செய்யனும் இல்ல" என்றிட.

"அம்மா என்னமா நீ. இதுக்கு எல்லாம் என்னை அனுப்பி வைக்கிற எனக்கு ஓன்னும் வாங்க தெரியாது மா" என்றிட.

"அட அந்த புள்ள வித்தியா இல்ல பார்கவிய கூட்டிட்டு போ. உனக்கா ஃப்ரண்ட்ஸ்ங்க இல்ல இந்த ஒரே ஒரு வேலைய மட்டும் செஞ்சிடு ராஜா" என்று ஐஸ் மழையை பொழிய.

தியா கவியின் பெயரை சொல்லும் போதே மனதில் உத்ராவை நினைத்தவன் அவளை வெளியே அழைத்து செல்லும் உபயத்தை கண்டுபிடித்து விட்ட சந்தோஷத்தில் "உனக்காக தான்மா போறேன். ஏதோ நம்ம அக்காவுக்கு செஞ்சாங்களேன்னு பதிலுக்கு செய்ய போறேன்... ஆமா என்ன வாங்கறது...???" என்றவன் அவர் பேசுவதற்கு கூட இடம் கொடுக்காமல் "சரி சரி அதையும் நானே பாத்துக்குறேன். நீங்க ஏன் வீணா கஷ்டப்படுறீங்க" என்று அவசரமாக ஃபோனை வைத்தவன் அடுத்த நிமிடம் நின்ற இடம் உத்ராவின் வீடு.

பார்கவிடம் பேசி இரண்டு நாட்கள் ஆகிறது ஆனால் சட்டென்று அண்ணனிடம் உண்மையை உடைக்க தைரியம் இல்லாமல் இருக்கிறாள். தொலைக்காட்சியில் பாடல் ஓலித்துக்கொண்டு இருந்தாலும் மனம் அதில் லயிக்கவில்லை அண்ணனிடம் எவ்வாறு உரைப்பது என்பதிலேயே சுழன்று கொண்டு வண்டாய் குடைந்தது.

வீட்டு காலிங்பெல் அடிக்கவும் எழுந்து கதவை திறந்தவள் அவனை கண்டதும் ஒரு நிமிடம் மனம் பூரித்தாலும் அடுத்த நிமிடம் அண்ணன் முகம் கண் முன்னே வந்து போனது.

தேவதையின் தரிசனத்தை கிடைக்க பெற்றவன் முகம் முழவதும் சிரிப்பில் நிறைந்து இருந்தது "உள்ள கூப்பிட மாட்டியா உத்ரா???"

"இல்ல.... அது வந்து..... வாங்க வாங்க கோபி" என்று அழைத்து அமரவைத்து வேலைகாரரிடம் அவனுக்கு பழசாற்றினை கொண்டு வர சொல்லி இருந்தாள்.

அமைதியாய் இருந்தவள் அடுத்து என்ன பேசுவது என்று திருதிருத்தாள் 'இப்போ என்ன விஷயமா வந்து இருக்காரு??? இன்னும் அண்ணா கிட்ட விஷயத்தை சொல்லல. இவரே என்னை காமிச்சு கொடுத்துடுவாரு போல' என்று நினைத்தபடி சேலை நுனியை முடிப்பதும் அவிழ்ப்பதுமாக இருந்தாள்.

அவளின் பதட்டத்தையும் நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அவள் முகபாவனைகளும் அவனை வேறு உலகிற்கு அழைத்து சென்றது. தன்னை மறந்து அவளை பார்த்துக்கொண்டு இருந்தவனின் பக்கத்தில் ஒலித்த "சொல்லுங்க கோபி. சர்ப்ரைஸ் விசிட் பண்ணி இருக்கீங்க???" என்ற சாருகேஷின் குரலில் கனவில் இருந்து மீண்டு நிகழ் உலகிற்கு வந்தான்.

உத்ரா நின்றிருந்த இடம் வெறுமையுடன் இருக்க 'நல்ல வேலை அவளை காணோம் இல்ல என் தங்கச்சியையாடா பாக்கறன்னு கண்ணை தோண்டி கையில கொடுத்துருப்பான்' என்று அவனுக்கு மனதில் ஓடினாலும்,

இந்த நேரத்தில் சாருகேஷினை எதிர் பார்க்காதவன் அதிர்ச்சி அடைந்து நொடியில் சுதாரித்து "சும்மா உங்களையும் உத்ராவையும் பார்த்துட்டு போலாம்னு தான்" என்றிட்டவன் "வரலாம்ல!!!" என்றான் சந்தேகத்துடன் .

"வாட் கோபி கேட்கனுமா!!!. தாராளமா வரலாம் இது உங்க வீடு மாதிரி" என்று சாருகைஷா கூற.

"இப்போ நான் எதுக்கு வந்தேனா கிஃப்ட் கொடுக்க" என்று கோபி கூற சோபாவில் இருந்து முன்னால் வந்த சாருகேஷ் "கிஃப்டா யாருக்கு???" என்றிட்டதும்.

"தான்னுடைய உளறல் புரியஇல்ல இல்ல? கிஃப்ட் கொடுக்க இல்ல..... வாங்க.... ப்ச் ச்சே கிஃப்ட் செலக்ட் பண்ண" என்று கண்ணா பின்னாவென்று உளற இதுவரை வருத்தத்துடன் நின்றிருந்தவள் கோபி தன் அண்ணனிடம் மாட்டிக்கொண்டு படும் பாட்டை பார்த்து சிரத்துக் கொண்டு இருந்தாள்.

"இங்கேயா கிஃப்ட் இங்க என்ன கிஃப்ட் இருக்கு. அதை செலக்ட் பண்ணபோறீங்க கோபி???" என்று இப்போதும் கோபி சொல்வது புரிபடாமல் சாருகேஷ் கேட்க.

'இவன் வேற கேள்விக்கு பொறந்தவனா இருக்கானே... இந்தநேரம் பார்த்து தத்து பித்துன்னு உளற்றேனே. ஸ்டெடி ஸ்டெடி கோபி. கிளியரா சொல்லு அப்போதான் உத்ரா உன் கூட வர முடியும்' என்று மண்டையில் உறைப்பது போல் முளையில் ஏற்றியவன் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டு ஓரே மூச்சில் "அம்மாவுக்கு தெரிஞ்ச குழந்தைக்கு நாளைக்கு பிறந்த நாள். ஏதாவது கிஃப்ட் வாங்க சொன்னாங்க. எனக்கு கிஃப்ட் வாங்கி அவ்வளவா பழக்கம் இல்லை அதான் உத்ராவை ஹெல்ப் கேக்கலாமானு" என்றவன்.

"உத்...ரா... வ.. என்... கூட.... வெளியே... அனுப்ப முடியுமா???" என்று தயங்கி தயங்கி எங்கே திட்டிவிடப்போகிறானோ என்ற அச்சத்துடனேயே கேட்க.

"உஃப்... இவ்வளவு தானா.... நீங்க என்னமோ பெருசா கேக்க போறீங்கன்னு ரொம்ப உன்னிப்பா கவனிச்சிட்டு இருந்தேன்" என்ற சாருகேஷ் "உங்களை நம்பி உங்க ஃபிரண்ட் ஒரு வாரம் தனியா என் தங்கைய விட்டு போய் இருக்காங்க. அந்த அளவு இல்லனாலும், நம்பிக்கை இல்லனாலும் ஆட்லீஸ்ட் ஓரு 50 பர்ஸண்ட்டாவது உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கும் இல்லையா!!!" என்றவன் தங்கையிடம் திரும்பி "போய்ட்டு வா உதி மா. உனக்கும் ரிலாக்ஸா இருக்கும்" என்று அவளையும் அவனுடன் அனுப்பி வைத்தான்.

😍😍😍😍

இருளில் கண்ணுக்கு எட்டிய தூரத்தை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் வர்ஷா... அஷ்வினின் எண்ணத்தை அறிந்துக் கொண்டதில் இருந்து மனது ரணமாக இருக்க வலித்துக்கொண்டு இருந்தது, தன் எதிர்காலத்தை குறித்தும் தன் வயிற்றில் உதித்த சிசுவின் வாழ்வை நினைத்தும் மனதில் கிளிபிடித்து ஆட்டியது.

இரவு நேரம் வாசலை அடைத்து விட்டு கதிரின் தாயிற்கு மருந்துகளை கொடுத்துவிட்டு வந்த ஸ்டெல்லாவிற்கு வெளியே செல்லும் மாடிபடியின் வாசல் கதவு திறந்து இருப்பது கண்களில் பட்டது.

'இந்த நேரத்துல மாடிக்கு யார் போயிருப்பா ஒருவேல வர்ஷாவா இருக்குமோ???' என்ற சந்தேகத்துடன் மேலேறியவளின் கண்களுக்கு வர்ஷாவின் பின்பறம் தெளிவாக தெரிந்தது.

அவளை காப்பாற்றியதில் இருந்து உடன் வைத்துக்கொண்டு இருக்கிறாள். தாய் இல்லாப் பெண் அதிலும் பாசமாய் வளர்த்த தந்தை வேறு சிறையில் இருக்க, அவளின் மனநிலையை அறிந்ததில் இருந்து தனியே விட மனம் இல்லாதவள் வர்ஷாவை தன் வீட்டிலேயே இருக்க வைத்தாளே ஒழிய மற்றபடி அங்கே இருவருக்கும் இடையே சகஜமான பேச்சுக்கள் நிகழவில்லை.

எப்போதும் விட்டத்தை முறைத்து பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தவளின் வதனம் அவளுக்கு வருத்தத்தை தந்தாலும் எந்த உரிமையில் எப்படி அவளிடம் பிரச்சனையை பற்றி கேட்பது என்று அமைதியாய் இருந்தாள்.

இன்றோ அவள் வயிற்றிலிருக்கும் பிள்ளையை கூட எண்ணத்தில் வைத்துக்கொள்ளாமல் சாப்பிட்டேன் பேர் வழி என்று உணவை அலைந்து வைத்திவிட்டு வந்து இருளை வெறித்திருந்தவளை பார்க்க பாவமாய் இருக்க அருகில் சென்றவள் "வர்ஷா" என்று அழைத்தாள்.

மெல்ல திரும்பிய வர்ஷாவின் கண்கள் சிவந்து இருப்பதை வைத்து அவள் அழுதிருக்கிறாள் என்பதைனை அறிந்த ஸ்டெல்லா.

"வர்ஷா... உனக்கு என்னை பிடிக்காதுன்னு தெரியும். எப்பவும் நமக்குள்ள ஒரு சுமுகமான உறவு இருந்தது இல்லை வர்ஷா...

எனக்கு உன் மேலேயோ இல்லை உங்க அம்மா மேலேயோ எந்த விருப்பும் வெறுப்பும் இருந்தது இல்லை...

ஆனா எப்பவும் ஒரு வெறுமை இருக்கும். எல்லா குழந்தைகளுக்கும் கிடைச்ச அங்கிகாரம் எனக்கு கிடைக்கலையேன்னு... அந்த வெறுமை தான் எல்லாத்துல இருந்தும் என்னை தள்ளி வைச்சிடுச்சி ஏன் நம்ம பெத்தவருகிட்ட இருந்து கூட தள்ளி வைச்சிடுச்சு" என்றாள் குரல் கம்ம.

"உன் வாழ்க்கையில் சில அத்தியாயங்கள் முடிஞ்சிடுச்சி. அதை இனி மாத்தமுடியாது... போனது திரும்பவும் வராது. அதனால சிசுவா வந்த இந்த குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு!!!! இன்னும் வெளி உலகத்தை கூட பார்க்காத குழந்தைக்கு தான் நீ தண்டனையை கொடுக்குற??? நீ சாப்பிட்டு நல்லா இருந்தா தானே அது நல்லா இருக்கும்" என்றிட.

இவ்வளவு நேரம் தனக்கென்று அறுதல் சொல்ல கூட யாரும் இல்லை என்ற கழவிறக்கத்தில் நொந்து போய் முடங்கி இருந்த வர்ஷாவிற்கு ஸ்டெல்லா வந்து பேசியதும் அவளை சேர்த்து அணைத்துக்கொண்டு ஒருசேர அழுத்து முடித்தவள்.

"ஸ்டெல்லா எனக்கு வாழவே பிடிக்கல ஸ்டெல்லா... எனக்கு என் குழந்தைய நினைச்சா பயமா இருக்கு... இந்த நிலையில் உன்னை நான் நேர்ல பாரத்தவ. சமூகத்துல அப்பா இருந்தும் உனக்குன்னு ஒரு அங்கிகாரம் கிடைக்கல... என் குழந்தைக்கு அப்பன் யாருன்னு நான் சொன்னாலும் ஒத்துக்க மாட்றான். நான் என்ன செய்யறது பேசாம செத்துடலாம் போல இருக்கு ஸ்டெல்லா. நான் செஞ்ச குற்றத்துக்கு என் குழந்தை ஏன் கஷ்டப்படனும்" என்று தேம்பி தேம்பி கூறிமுடிக்க.

"ஹேய் நீ ஆளவந்தானுக்கு பொண்ணா பொறந்துட்டு இப்படி அழலாமா!!! அவர் மத்தவங்கள அழவைச்சிதான் பழக்கம். அவரோட தைரியம் அங்க போச்சு. அவர் பொண்ணு உனக்கு அந்த தைரியம் இருக்க வேண்டாம்!!!!" என்று அவளை தேற்ற.

"என் தைரியம் எல்லாம் அவன் முன்னால தோத்து போச்சு ஸ்டெல்லா" என்று அழுதவள், அன்று நகைக்கடையில் அஷ்வின் உத்ராவிடம் வழிவதையும், அவளிடம் அஷ்வின் நெருங்கி போனதையும் பார்த்தவளுக்கு அஷ்வினிடம் ஏதோ தவறு இருப்பதை போல உணர்ந்தவள் அவனை பின் தொடர தந்தையின் ஆட்களிடம் சொல்லிவைக்க.

அவர்கள் கூறிய செய்தியில் அவன் உத்ராவினை சுற்றி வருவது தெள்ளதெளிவாக அவளுக்கு விளங்கியதை ஸ்டெல்லாவிற்கு கூறினாள்.

"நீ பயப்படாத நான் இருக்கேன். இன்னொரு ஸ்டெல்லா இந்த சமூகத்துல வர விடமாட்டேன்... உன்னை காதலிச்சிட்டு வயித்துல குழந்தையும் கொடுத்துட்டு ஏமாத்த நினைக்கிறானா!!!

அந்த பொறுக்கியை அப்படியே விடலாமா!!! அவனை பொறட்டி எடுக்கறதை விட்டுட்டு நீ சாகுறதுக்கு ட்ரை பண்றியே நீயெல்லாம் ஆளவந்தானுக்கு எப்படித்தான் பொறந்தியோ.. அவர் குணத்துல ஒரு பர்சண்ட் இருந்தாலும் இந்நேரம் அவனை தட்டி தூக்கி இருக்கலாம்" என்று அவளுக்கு நம்பிக்கையும் அதே நேரத்தில் அவள் எடுத்த முடிவு தப்பு என்பதையும் அவளுக்கு எடுத்துக் கூறியவள், "அந்த குழந்தைக்கான அங்கிகாரம் கிடைக்காம விட மாட்டேன்" என்று அவளை சமாதானம் செய்து வீட்டிற்கு உள்ளே அழைத்து சென்றாள். 😢😢😢😢

நிஜல் நிஜமாகிறது.

இரவு 9 மணி அளவில் மொபைலில் பேசிக்கொண்டு இருந்த சாருகேஷிற்கு கதவை தட்டும் ஒலிகேட்க பேசிக்கொண்டே கதவை திறந்தவன் எதிரில் உத்ரா கையில் பாலுடன் நின்றிருந்தாள்.

இந்த நேரத்தில் வந்த தங்கையை அதிசயமாக பார்த்தவன் அவளுக்கு உள்ளே வர வழிவிட்டபடி "5 மினிட்ஸ்" என்று சைகை காட்டியவன் பேச்சை தொடர்ந்தான்.

"என்ன டா இவ்வளவு ஃபாஸ்டா இருக்க நீ எப்போ பேசினா??

"மூனு நாள் முன்னாடியா....!!"

" சரி சரி நான் இன்னும் பேசல...

என்ன சொல்வாளோன்னு தயக்கமா இருக்கு..." என்று அவளை பார்த்துக்கொண்டே கூறியவன் "நோ நோ தேவா. நீ பேச வேண்டாம்... நானே அவ கிட்ட இன்னைக்கு நைட் பேசுறேன்..." என்று கூறி ஃபோனை கட் செய்தவன் தங்கையிடம் இருந்து பாலை வாங்கி கொண்டான்.

அந்த பக்கம் என்ன விஷயத்தை பற்றி பேசினானோ ஆனால் அண்ணன் கூறிய பதிலில் இருந்து தன்னிடம் ஏதோ பகிர்ந்துக்கொள்ள போகிறான் என்பதை மட்டும் ஊகித்தவள் அவனை முந்தியவளாய் "அண்ணா" என்று அழைத்தாள்.

"என்ன உதிமா சொல்லு" என்று பாலை குடித்துக்கொண்டே கேட்க.

"நான் சொல்றேன்... ஆனா கோவபடாம கேளு ண்ணா..." என்று பீடிகையுடன் ஆரம்பித்தவளை யோசனையாக பார்த்தவன் நாஅ கோவபடுறது எல்லாம் மேட்டரே இல்ல நீ பயப்படாம மனசுல இருக்கரதை சொல்லு என்று அவளை அழைத்து வந்து நாற்காலியில் அமரவைத்தவன் "இப்போ சொல்லு"

என்று கூறவும்.

கையை பிசைந்தபடி தயக்கமாகவே "அண்ணா என் பாஸ்ட்ல என்ன நடந்ததுன்னு நீங்க எல்லாம் சொல்லி தான் எனக்கு தெரியும். அந்த லவ் தப்பு இல்ல ஆனா நான் தேர்ந்தெடுத்த ஆள் தப்பானவன்.... அந்த மாதிரி மறுபடியும் ஒரு தவறு நடக்க கூடாது. என்னால உனக்கு எந்த தலை குனிவும் வரக்கூடாதுன்னு தான் நான் ரொம்ப ஜாக்கிரதையா இருந்தேன்...

ஆனா எனக்கே தெரியாம கொஞ்சம் கொஞ்சம் என் மனசுல ஒருத்தர் மேல காதலை வளர விட்டுட்டேன். என்னை மன்னிச்சிடுண்ணா" என்று பட்டென அவன் கால்களில் விழுந்தவள் "நான் கோபியை லவ் பண்றேன்" என்று அவன் முகத்தை பார்த்து சொல்ல சங்கடப்பட்டு விழந்தபடியே கூறி முடிக்க.

நண்பனுடைய தம்பிக்கு தங்கையை பெண் கேட்டது சந்தோஷமே ஆனால் அவனை மணந்துகொள்ள அவள் விருப்பம் வேண்டுமே என்று சிந்தனையுடன் இருந்த சாருகேஷிற்கு தங்கை காதலிப்பது புது செய்திதான் ஆனால் அது அவனுக்கு சந்தோஷமாகவே இருந்தது.

எங்கே உத்ரா நடந்ததையே நினைத்து தனக்கு ஒரு வாழ்க்கையே வேண்டாம் என்று தனித்து இருந்து விடுவாளோ என்று கலங்கி நின்றவனுக்கு இன்று அவள் சொன்ன செய்தி தந்த மகிழ்ச்சியால் அவளை எழுப்ப கூட தோன்றாமல் அந்த ஆனந்தத்திலேயே சிலைப்போல் சமைந்து நின்றிருந்தான்.

கிழே அவன் பாதம் தொட்டு குனிந்திருந்தவள் அண்ணிடம் இருந்த எந்த சத்தமும் வராமல் போக மெல்ல தலை உயர்த்தி பார்த்தாள். அவன் கண்கள் கலங்கி முகம் மகிழ்ச்சியில் திளைப்பதை பார்த்தவள் அவன் தோல் தொட்டு "அண்ணா" என்று அழைக்க சுயம் பெற்ற சாருகேஷ்.

மகிழ்ச்சியின் விளிம்பிள் இருந்தவன் வார்த்தைகள் அற்று அவளை அணைத்து விடுவித்து அவள் தலையை வருடிவிட்டு "உதி உதிமா. உன்னை கல்யாணத்துக்கு எப்படி சம்மதிக்க வைக்கிறதுன்னு கவலையோட இருந்தேன் டா. அந்த நாய் பண்ண வேலையால உன் வாழ்க்கையில சந்தோஷமே இருக்காதோன்னு பயந்து போனேன். நல்ல வேலை தெய்வமா இருக்க நம்ம அப்பா அம்மா தான் உன் மனசை மாத்தி உனக்கு நல்லது பண்ணி இருக்காங்க" என்று அவர்களை பெற்றவர்கள் படத்தின் முன் நிறுத்தி பேசியவன்.

"உன்னை கல்யாணம் பண்ணிககிறவன் உனக்கு பிடிச்சமாதிரி உன் மனசை கவர்ந்தவனா இருக்கனும்னு தான் நான் நினைச்சேன் டா அது கோபியா இருக்கும் போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா உன் மனசுப்படியே உனக்கு கல்யாணம் நடத்தி வைப்பேன் டா" என்று வாக்கும் கொடுத்து தாய் தந்தையர் படத்தின் கீழே இருந்த விபூதியை எடுத்து தங்கையின் நெற்றியில் வைத்து "சீக்கிரமே கலகலன்னு நம்ம வீடு மாறனும். நாம தொலைச்ச சந்தோஷம் நிம்மதி சிரிப்பு எல்லாம் நம்மகிட்டயே திரும்பி வரனும்டா" என்று தங்கையை அணைத்து விடுவித்தான்.

அதே நேரத்தில் பார்கவி கேஷவின் அறையில் அவனை முறைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.

கவி வேண்டாம் என்று சொல்ல சொல்ல ஆப்பிளை வெட்டி வெட்டி அவளிடம் நீட்ட அதை வாங்காமல அடமாக இருப்பதை பார்த்து "ஹேய்... ராட்சசி.... சொல்றத கேளுடி ஆட்டோ பாம். நைட்டு சாப்பிட்டத எல்லாத்தையும் வாந்தி எடுத்துட்ட இப்போ அப்படியே படுத்தா பசிக்கும் டீ. இந்த இந்த சின்ன பீசை சாப்பிடு" என்று ஆப்பிள் துண்டை வாயருகில் நீட்ட.

"அவன் நீட்டவும்.உமட்டுவது போல் செய்தவள் வாயை முடியபடி எனக்கு வேண்டாம் மச்சி. வாய் கிட்ட எடுத்துட்டு பொகும்போதே குமட்டுது" என்று சிணுங்கியவளின் கைகளே பிடித்துக்கொண்டு அவளின் வாயருகில் கொண்டு செல்ல முகத்தை சுளித்தபடியே வாங்கிக்கொண்டாள்.

"புடிக்கவே இல்ல. என்னை ஏன் டார்ச்சர் பண்ற மச்சி!!!" என்று அவனிடம் சண்டையிட்டவளை சுவாரஸ்யமாக பார்த்தவனை முறைத்தவள் "நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் என்னை சைட் அடிச்சிட்டு இருக்க!!!" என்று எழுந்து கோபமாக சென்றவளை போகவிடாமல் கைபற்றி அமர வைத்தவன் "நீ செய்ற சேட்டையெல்லாம் வெளியே வந்தா என் பொண்ணும் செய்வா இல்ல" என்று முகம் மலர கூற.

அவனை அதிசயமாக பார்த்தவள் "பொண்ணுன்னு எப்படி சொல்றீங்க ஒருவேல உள்ள இருக்கரது என் செல்ல குட்டி பையனா இருந்தா என்ன பண்ணுவீங்க???" என்று புருவம் உயர்த்தி வம்பாய் கேட்க.

அவளின் கன்னத்தை பற்றியவன் "எனக்கு தெரியல ஆனா என் மனசு சொல்லுது உன்னை மாதிரியே இந்த கண்ணு இந்த மூக்கு இந்த வாய் இந்த கன்னம் இந்த துடுக்கு இது எல்லாம் கலந்த கலவையாதான் என் பொண்ணு இருக்கும்னு..." என்று அவள் கண்களில் தன் முத்திரையை பதிக்க.

"எனக்கு உங்கள மாதிரியே" என்று கூற வரும்போதே அவளின் உதட்டை தன் உதட்டால் தடைசெய்ய அவள் விழிகள் இரண்டும் இந்த அதிரடி தாக்குதலில் பட்டாம்பூச்சியின் சிறகாய் மாறி படபடவென அடித்துக்கொண்டது.

அவளை விடவித்து மென்மையாய் உதட்டை வருடியவன் "பீளிஸ் டா ஆப்போனென்ட்டா எதிவும் சொல்லிடாத எனக்கு உன்னை மாதிரியே துருதுருன்னு என் கைய பிடிச்சிக்கிட்டு சுத்தி வர பொண்ணு தான் வேணும்" என்று ஏக்கமாய் கூற அவள் தோள்களில் சாய்ந்தவள் அந்த நிமிடத்தை ரசித்தவளாய் அமர்ந்திருந்தாள்.

அவளுக்கு ஆப்பிளை ஊட்டியவாறே இருந்தவன் நியாபகம் வந்தவனாக "பாரு சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு உத்ராவ கோபியோட வெளியே பாத்தேன்" என்று கூற "அப்படியா எங்க? எப்போ?" என்று ஆர்வமாக எழுந்து அமர்ந்து கேட்டாள்.

இதுவரை சோர்ந்து போய் இருந்த கவி அவர்களை பற்றி சொல்லவும் அவள் எழுந்து அமர்ந்த தோணிலையும் கோபி இன்று நடந்தக்கொண்ட முறையிலும் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாக உணர்ந்தவன் "நீயேன் இவ்வளவு ஆர்வமா எழுந்து உட்கார்ந்து கேக்குற?? என்ன என்ன நடக்குது?" என்று தனது சந்தேகத்தை கேட்கவும் "அது வந்து அது அவன் எதுவும் சொல்லலியா" என்று சமாளிப்பாக அவனையே கேட்டக கேஷவின் பார்வையில் தெரிந்த தீவிரத்தில் "கோபி உத்ராவ சின்சியரா காதலிக்கிறான்" என்று உண்மையை உடைத்து விட்டாள்.

"ஹேய் சாருகேஷ் தேவா தம்பிக்கு தானேடி உத்ராவ பேசிட்டு இருந்தான். இது தெரிஞ்சும் நீ என்கிட்ட இதை சொல்லமா மறைச்சிருக்க" என்று கோப பட

"அவர் பேசினா போதுமா அவளுக்கு பிடிக்க வேண்டாமா... உன்கிட்ட மறைக்கனும்னு எண்ணம் இல்ல அவளே சொல்றேன்னு சொன்னதால நான் சொல்லாம இருந்தேன்" என்றிட

" ம் அவளுக்கு பிடிக்கனும் தான்டி இல்லன்னு சொல்லல ஆனா ஏற்கனவே அவ லவ் பண்ணதுனாலதானே பிரச்சனை வந்தது மறுபடியும் னா எப்படி அவன் ஒத்துக்குவான்" என்று கேட்டதும்

"கொஞ்சம் திருத்தம் பாஸ் லவ் பண்ணதுனால பிரச்சனை இல்லை... அவ லவ் பண்ண பரதேசியால தான் பிரச்சனை அவன் நல்லவன் நினைச்சி தப்பான ஆளை செலக்ட் பண்ணிட்டா இப்போ இருக்க புத்தி அப்போ இருந்து இருந்தா அவனை கட்டி வைச்சி தோலை உறிச்சி இருப்பா கூறுபோட்டு இருப்பா" என்றதும்.

"அவன் தேவா கிட்ட வாக்கு கொடுத்துட்டாண்டி இப்போ அவ சொன்னா அவன் சத்தம் தான் போடுவான் பிரச்சனை பெருசாகும் டி" என்று கூற

"வாழ போறது அவதான் சாருகேஷ் அண்ணா இல்ல கோபிக்கு என்ன குறை அவனை எதுக்கு வேணாம் னு சொல்லவாறு அதை விட உத்ரா மனசுக்கு புடிச்ச ஆளை கல்யாணம் பண்ணி வைச்சாதான் அவ சந்தோஷமா இருப்பா. அவ மனசு முக்கியமா இல்ல அவர் கொடுத்த வாக்கு முக்கியமா"? என்று கேஷவிடம் வாக்குவாதம் செய்யும் போது சாருகேஷிடம் இருந்து போன் வரவும் அவளை அமைதியாக இருக்க சொல்லி அதை இயக்கி பேச போனவன் சற்று நேரத்திற்கெல்லாம் மனைவியை தேடி வந்து அவளை தூக்கி சுற்றி முகம் முழுக்க முத்த தடத்தை பதித்து "உத்ரா கோபி கல்யாணத்தை நடத்த சாருகேஷ் சம்மதிச்சிட்டான்" என்று சந்தோஷத்துடன் கத்தி கூறி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்த அவளும் ஆனந்தத்தில் திக்குமுக்காடி போனாள்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 62
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN