காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 63

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உத்ராவின் திருமணத்திற்கு சாருகேஷ் தன் சம்மதத்தை கூறியதும் சந்தோஷக்கடலில் மிதந்தவள் அறைக்கு சென்றதும் முதல் வேலையாக கோபியினை அலைபேசியில் அழைத்து காத்திருந்தாள்.

அவளிடம் இருந்து இதுநாள் வரை அழைப்பு வந்ததில்லை, இன்று கோபிக்கு உத்ராவிடம் இருந்து அழைப்பு வரவும் முதல் அழைப்பிலையே அலைபேசியை இயக்கி காதில் வைத்தவன் கேட்ட முதலில் வார்த்தை "ஒரு பிரச்சனையும் இல்லையே உத்ரா!! நீ நல்லா இருக்கல?" என்பதுதான்.

அவன் அன்பில் நெகிழ்ந்தவள் இருந்தும் அப்படி ஏன் கேட்டான் என்று தெரிந்துக்கொள்ள "ஏன் நான் ஃபோன் பண்ணா இந்த கேள்வி கேக்கிறீங்க? உங்களுக்கு ஃபோன் பண்ணக்கூடாதா??? பிரச்சனை இருந்தா தான் பண்ணனுமா?" என்று கேட்க

"நீ எனக்கு ஃபோன் பண்ணக் கூடாதுன்னு சொல்லல, ஆனா நீ உன் வீட்டுக்கு போய் எனக்கு பண்ற முதல் ஃபோன். அதான் கொஞ்சம் நர்வஸ் ஆகிட்டேன். உனக்கு ஏதாவது பிரச்சனையோன்னு, அதுவும் இந்த நேரத்துல கூப்பிடவும் அப்படி கேட்டுட்டேன்" என்று கூற

அவனின் அக்கரையில் மனம் சிறகடிக்க "இல்ல, இல்ல கோபி எனக்கு ஒன்னும் இல்ல... அயம் ஆல்ரைட்" என்று அவசரமாக கூறி முடித்தவள் "உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்" என்றாள்.

அவ்வாறு உத்ரா கூறியதும் "ஒரு, ஒரு நிமிஷம் இரு.... நீ எனக்கு பேசனும்னு கால் பண்ணி இருக்கியா !!! இது கனவு இல்லையே... இப்போன்னு பார்த்து பக்கத்துல யாரும் இல்லையே!" என்று வருத்தப்பட

"ஏன் யாரவது இருக்கனுமா?' என்று சந்தேகமாக கேட்க.

"அப்போதானே அவங்கள கிள்ளி பார்த்து நீ எனக்கு ஃபோன் பண்ணி இருக்கன்றத நம்பமுடியும்" என்றான் அவள் செய்தது அதிசய செயல் போல்.

"ரொம்ப கொழுப்பு அதிகமாகிடுச்சி நான் சீரியசா பேசினா நீங்க காமெடி பண்ணிட்டு இருக்கீங்க?" என்று அவள் கடுப்பாக பேசவும்.

"கொஞ்சம் ஓவராகிடுச்சில்ல" என்று கோபி அவளிடமே கேட்க.

"கொஞ்சம் இல்ல ரொம்பவே மொக்கையாகிடுச்சி" என்று உறைத்த உத்ராவின் கேளியில் சிரித்தவன்

"அம்மு நிஜமா சொல்றேன்.. நீ எனக்கு ஃபோன் பண்ணி இருக்கிரதை இப்பவரையும் என்னால நம்ப முடியல அம்மு" என்று உள்ளார்ந்து அவன் எண்ணத்தை கூறவும் அதில் கரைந்தவள் "நீங்க இப்படியே நினைச்சிக்கிட்டு இருங்க நான் ஃபோனை வைக்கிறேன்" என்று வேண்டுமெனக் கூறி ஃபோனை வைக்க போக.

அவசரத்தில் "அம்மு அம்மு" என்ற கோபியின் அழைப்பில் அலைபேசியை அணைக்காமல் நிறுத்தியவள் சொல்லுங்க" என்றாள் கெத்தாக

"அது... நீ எதுக்கு கால் பண்ண? எதுவுமே சொல்லாம வைச்சிட்ட!!! பேசனும் சொன்ன பேசவே இல்லையே!!" ஏதாவது முக்கியமான விஷயமா"

அதை தான் சொல்ல வர்றதுக்குள்ள மொக்க போட்டே கடுப்பேத்தரீங்களே" என்றவள் உரிமையாக அவனிடம் சண்டையிட "செல்லம், செல்லம்... ப்ளீஸ் ஏதோ வாய் தப்பி சொல்லிட்டேன் இனி பேசவே மாட்டேன்.. சொல்லு சொல்லு" என்ற கெஞ்ச.

அவனின் கெஞ்சல் கொஞ்சல் என அனைத்தையும் ரசித்தவள் அவனை வெறுபேற்றும் நோக்கில "இன்னைக்கு சொல்ற மூட் இல்ல... நாளைக்கு காலைல பத்து மணிக்கு கிருஷ்ணர் கோவிலுக்கு வாங்க அங்க சொல்றேன்" என்று கூறியவள் அலைபேசியை அடைத்து விட்டு தனக்கு தானே அவனை நினைத்து சிரித்தபடி மெத்தையில் கனவுகளுடன் படுத்தாள்.

'என்னவா இருக்கும் இப்படி குழம்ப விட்டுட்டாளே. ஒருவேல இனி என் பின்னாடி அலையாதே என் அண்ணன் கண்டுபிடிச்சாட்டான்னு சொல்ல கூப்பிட்டு இருப்பாளோ!!! சே சே அப்படி இருந்தா அதை ஃபோன்லையே சொல்லி இருப்பாளே.. அதுக்கு தனியா ஏன் கூப்பிட்டு சொல்லனும்... இல்ல இப்படி இருக்குமோ நாம கலங்கிடுவோம்னு நம்மள சமாதானப்படுத்தி இதமா பதமா சொல்லுவாளோ... என்னடா இது அவ பேசுறன்னு சொன்னதும் மனசு தப்பு தப்பா யோசிக்குது....

" கண்ணாடி முன் நின்று தன் பிம்பத்தை பார்த்து தூ என துப்பியவன் "எரும எரும ஏண்டா உனக்கு இந்த வாயி அவ சொல்ல வந்ததை ஒழுங்க சொல்லி இருப்பா அவளை சிரிக்க வைக்கிறேன்னு ஏடாகூடமா பேசி உனக்கு நீயே ஆப்பு வைச்சிக்கிட்டியேடா' என்று பேசியவன் விறுவிறுவென சாமி படம் முன் நின்று "அய்யா கருப்பண்ண சாமி என் குல தெயவமே. அவ வாயில இருந்து நல்ல வார்த்தையா வரனும்யா" என்று வேண்டியவன் நெற்றியில் பட்டையாய் விபூதியை பூசி எப்போதடா விடியும் என்று சோஃபாவில் அமர்ந்தபடி திக் திக் இதயத்துடன் கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

😂😂😂😂

இளங்காலை சூரியன் தன் செங்கதிர்களால் பூமியினை அணைத்து கொள்ளும் வேலையில் வெளியே கிளம்ப தயாராகி கொண்டிருந்தாள் தியா, "அம்மா என் வெள்ளை சுடி எங்கமா வைச்சி இருக்க?" என்று தேடிக்கொண்டு அலப்பரையை ஆரம்பித்து இருந்தாள்.

பூஜை அறையில் இருந்தவர் 'இவளுக்கு... ஒழுங்க சாமி கும்பிட கூட விடமாட்டறாளே' என்று மனதில் வைதவர் கந்த கஷ்டி கவசத்தை சொல்லியபடியே இருக்க "அம்மா என் முத்து செட் கம்மல் எங்கம்மா வைச்ச?" என்று மறுமுறை குரல் வர இப்போதும் வேறு வார்த்தை பேசாமல் பூஜையை தொடர "அம்மா... என் பைக் கீ எங்கமா?" என்று அடுத்த பொருளுக்கான தேடலை தொடர பொறுத்து பொறுத்து பார்த்தவர் மடமடவென பூஜையை முடித்து அவளிடம் சென்றவர்

"ஏய் என்னடி பிரச்சனை உனக்கு இது எங்க அது எங்கன்னு கத்திக்கிட்டு கிடக்க??? சரி இவ்வளவு அவசரமா காலங்காத்தால எங்க போற!" என்றார் கோபமாக.

"ச்சே...." என்று சலித்துக் கொண்டவள் அங்கேயே இருந்த நாற்காலியில் அமர்ந்து "அம்மா போக சொல்லவே யாராவது எங்க போறேன்னு கேட்பாங்களா?' என்று சுணங்கினாள்

"உனக்கு வாய் மட்டும் இல்லடி, கொழப்பும் கூடி போச்சி... கல்யாணம் நிச்சயம் ஆன பொண்ணு வெளியே போறதே தப்பு... இதுல எங்கபோறேன்னு வேற சொல்லாமலேயே கிளம்புவியா?!?! திமிறு டி... உடம்பு முழுக்க திமிறு... பாவம் அந்த புள்ள உன்னை எப்படி தான் வைச்சி மாறடிக்க போறானோ!!! எல்லாம் தெரிஞ்ச என்னையே இந்த பாடு படுத்துறியே அந்த புள்ளைய என்ன செய்ய போறியோ?!?" என்று சித்துவுக்காக பரிதாபம் கொண்டார்.

இதற்கு மேல் மஞ்சுவிடம் வாயாடினால் மூளையில் இருக்கும் விளக்குமாறு தன் உடலில் வரிவரியாய் கவிதைகளை எழுதும் என்று தெரிந்து வைத்திருந்தவள் முகத்தை சுளித்தபடியே 'அவனை பத்தி முழுசா தெரியாமையே இந்த அம்மா ஏன் அவனுக்கு பரிதாபபடுதோ' என்று நினைத்து "நினைப்புதான் அவன் என்னை வச்சி செய்யாம இருக்கனும்" என்று முனுமுனுக்க

"என்னடி சொன்ன சத்தமா சொல்லு உள்ளுக்குள்ளயே பாதி வார்த்தைய முழுங்குற!!!" என்று திட்டிவிட்டார்.

அறையிலிருந்து வெளியே வந்த மாணிக்கம் மனைவியின் சத்தம் காதில் விழ "என்ன மஞ்சு குழந்தைக்கிட்ட காலையிலையே சத்தம் போட்டுகிட்டு இருக்க???" என்று கேட்டுக்கொண்டே சோஃபாவில் அமர்ந்தார்.

"அதானே பொண்ணை ஒன்னு சொல்லிட கூடாதே எப்படி தான் உங்க காதுல விழுதோ உடனே வந்துடுறீங்க சப்போர்ட்டுக்கு" என்று அவருக்கு காஃபியை கலக்க சமயலறைக்குள் செல்ல மகளிடம் சைகையிலையே என்னவென்று கேட்க பைக் கீயை காண்பித்து 'வெளியே போகனும்' என்று தியா சமிக்ஞை செய்ய "வெய்ட் வெய்ட் டா" என்று கூறி 'நான் பார்த்துக்கெள்கிறேன்' என்று சைகை செய்தார் மாணிக்கம்.

தியா, "அப்பா சீக்கிரம்" என்று வாட்ச்சை பார்த்து சைகை செய்ய அவர் நீ தொடங்கு என்று வாயசைத்து அவளை பேச சொன்னார்.

"அம்மா என் ஃப்ரெண்ட் பூரணி கூட வெளியே போயிட்டு வறேன் மா, அப்பா பாய்" என்று வெளியே கிளம்பிட்டாள்.

"ஏய் ஏய் தியா இருடி எங்க எங்க போற???" என்று அவசரமாக மஞ்சு வெளியே. வருவதற்குள் தியா ஸ்கூட்டியில் பறந்து விட்டாள்.

மாணிக்கத்திடம் முறைப்பை காட்டிய மஞ்சுவிடம் "அவ எங்க போறா மஞ்சு ஃப்ரெண்ட்ஸ்ங்க கூடதானே போறா. என்கிட்டயும் உன்கிட்டயும்

செல்லிட்டுதானே போறா சாய்ந்தரம் வந்துட போறா" என்று மகளுக்கு ஆதரவாய் பேச

"ஒருத்திய பேச வைச்சி வேடிக்க பாத்தீங்க... இவளை வெளியே போக விட்டு வேடிக்கை பாக்குறீங்களா!! நல்லா இல்லைங்க இதெல்லாம்.... நிச்சயம் ஆனா பொண்ணு இப்படிதான் வெளியே சுத்துறதா" என்று எரிந்து விழுந்தார்.

"எந்த காலத்துல இருக்க மஞ்சு. இது இருபதியொராம் நூற்றாண்டு இங்க எல்லாமே மாறிடுச்சி. பொண்ணுனா இதை செய்யாத அதை செய்யாதன்னு ரெஸ்ட்ரிக்ஷன் பண்றத விட்டு அவளை சுகந்திரமா விட்டு பாரு, தைரியமா எதையும் எதிரித்து துணிச்சலோட இருப்பா" என்று எடுத்து கூற.

"உங்ககிட்ட பேசி என்

பிராணனைதான் போகுது... எது எப்படி இருந்தாலும், பொண்ணு பொண்ணு தான். தலையில இரண்டு கொம்பு முலைக்கல. முன்னை விட இப்ப காலம் மாறிப்போச்சிதான் இல்லன்னு சொல்லல... அதை விட கெட்டுப் போச்சின்னு சொன்னா இன்னும் நல்லா இருக்கும். அவளுக்கு ஃபோனை பண்ணி சாய்ந்தரம் 6 மணிக்குள்ள வீட்டுக்கு வரனும்னு சொல்லி வைங்க இல்ல நான் பொல்லாதவளா மாறிடுவேன் சொல்லிட்டேன்". என்று கூறியவர் அவருக்கு காஃபியை வைத்துவிட்டு முனுமுனுத்தபடி அடுத்த வேலையை செய்ய சென்று விட்டார்.

🙄🙄🙄🙄🙄

காலையில் கிருஷ்ணர் கோவிலுக்கு கோபியை வரச் சொன்னவள் அனுக்காக பார்தது பார்த்து அலங்காரம் செய்து இருந்தாள். ரோஜா வண்ணத்தில் மெல்லிய சரிகையிட்ட புடவையில் அங்காங்கே சிறு பூக்களாய் தெரித்திருந்த இருந்த சேலையை உடுத்தியவள் அதற்கு தோதான குடை ஜிமிக்கியும் கழுத்தினை ஒட்டிய சின்ன கழத்தணியையும் அணிந்து அதிக ஒப்பனையின்றி கண்களில் கனவுகளுடன் காதலனை காணப்போகும் ஆசையில் தேவதையாய் இருந்தாள்.

காலை உணவை அண்ணானுக்கு பறிமாறியவள் தானும் சாப்பிட

'அமர்ந்த தங்கையின் முகமலர்ச்சியையும் அவளின் அலங்காரத்தையும் கண்டவன் தானே யூகித்தவனாக "கோபியை பார்க்க கிளம்புறியா உதிமா" என்றான்.

அவளை கண்டுபிடித்தவனாக.

'அண்ணன் கண்டுவிட்டானே' என்று நாணியவள் "ஆமா ண்ணா இன்னைக்கு தான் என் சம்மதத்தை சொல்லபோறேன்' என்று கூற.

"சரிடா அவங்க அம்மா வந்ததும் நான் அவங்ககிட்டயே பேசிடுறேன்... அதுக்கு முன்னாடி நான் கோபிய பாக்கனுமே நீ வரும் போது வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுறியா" என்றான் சாருகேஷ்.

"சரி ண்ணா" என்றவள் உணவினை அளந்தபடி இருக்க அதனை பார்த்த சாருகேஷ் "என்னடா இன்னும் என்ன யோசனையா இருக்க"

"அண்ணா... என் மனசுல இருக்கரதை உங்ககிட்ட சொல்லறதுக்கு முன்னாடி கவி அண்ணிகிட்டதான் சொன்னேன். அப்போதான் நீங்க எனக்கு தேவா அண்ணவோட தம்பிய மாப்பிள்ளையா பார்த்து இருக்குரதை சொன்னாங்க... நான் இப்போ கோபிய விரும்புவது தெரிஞ்சா... உங்களோட ஃப்ரெண்ட் ஷிப் என்னால போயிடுமோன்னு பயமா இருக்கு" என்றாள் கவலையாக

"அட... இதுக்கு போய் தான் நீ இவ்வளவு யோசிச்சியா? அவன் இந்த சம்மந்தத்தை பேசியதே உனக்காக தான்... நீ நல்லா இருக்கனும்னு தான்..." என்று கூறிட

"அண்ணா சாரி ண்ணா... எனக்காக நீங்க இவ்வளவு யோசிச்சி இருக்கிங்க நான் தான் அவசரப்பட்டு மனசுல ஆசைய வளத்துக்கிட்டேன்" என்று தலை குனிய

"அப்படி இல்ல உதிமா... நீயும் இரண்டு மூணு முறை நிர்மலை பார்த்திருக்க... ஆனா இப்படி ஒரு எண்ணம் உனக்கு வரலைனா அவன் உன் மனசை பாதிக்கலன்னு தானே அர்த்தம். இதுக்கு நீயேன் மன்னிப்பு கேக்குற இன்ஃபேக்ட் நான் நைட்டே உன்னோட முடிவை தேவாக்கு சொல்லிட்டேன் அவன் ரொம்ப சந்தோஷப்பட்டான்... உனக்கு பிடிக்கனும் அதுதான் எங்களோட முதல் குறிக்கோள். அப்புறம் தான் மத்தது" என்றவன்

"அப்புறம் கோபியை வேண்டாம்னு சொல்ற அளவுக்கு எதுவும் இல்லையே பார்க்க நல்ல இருக்கார், சொந்த தொழில், நல்ல குடும்பம் , இதுக்கெல்லாம் மேல என் தங்கச்சிக்கு பிடிச்ச பையன். இந்த குவாலிஃபிக்கேஷன் போதுமே நம்ம வீட்டு மாப்பிள்ளையா வர்றதுக்கு" என்றான் சிரித்தபடி.

"தேங்கஸ் ண்ணா" என்றவள் "அண்ணா ஒன்னு சொன்னா திட்டமாட்டியே" என்றாள்

"சொல்லு டா என்கிட்ட சொல்ல என்ன தயக்கம்" என்றான்.

"அது உனக்கும் பொண்ணு பாக்கலாமா?? நீயும் எவ்வளவு நாள் தான் தனியா இருப்ப??"

"பண்ணலாமே!!! அதை யாரு வேண்டாம்னு சொன்னா... ஆனா இப்போதைக்கு உன் கல்யாணம் முதல்ல பண்ணலாம். அதுக்கு அப்புறம் என் கதைய பாக்கலாம்" என்றான் சாருகேஷ்.

"அப்புறம்" என்று பேச தொடங்கியவளை இடைமறைத்தவன்

"உனக்காக ஒரு ஜீவன் என்னவோ, ஏதோன்னு, நிலைமை தெரியாம தவிச்சிக்கிட்டு நிக்கும்... ஆனா இங்க என்னை கோர்த்து விடுறதுல ரொம்ப மும்முரமா இருக்க... கிளம்புமா கிளம்பு பாவம் பையபுள்ள" என்று தங்கையை எழுப்பி அனுப்பி வைத்தவன் தானும் கிளம்பி அலுவலகத்துக்கு சென்றான்.

😁😁😁😁😁

'ச்சே.... ஓரே நைட்டுல என்னை இப்படி திண்டாட விட்டுட்டனுங்களே' என்று தன் நிலையை நினைத்து ஆளவந்தானின் மேல் கடுங்கோபத்துடன் வண்டியை செலுத்திக்கொண்டு இருந்தான் அஷ்வின்.

'அவனவன் திருந்திட்டேன்னு சொல்றானுங்க!!!... திருந்தறது எவ்வளவு பெரிய வேலை அசால்டா செஞ்சிட்டேன்னு சொல்றானுங்களே... இந்த நிர்மல் பைய இத்தனை வருஷம் என் கூட இருந்தான்... அவனும் இந்த உத்ராவ பாரத்ததுல இருந்து உத்தமன் ரேஞ்சிக்கு கப்சா விடுறான்...' என்று அலுத்தவன் டேய் ஆளவந்தான் 'ஓவர் நைட்ல இப்படி புலம்ப வைச்சிட்டியேடா உன்னை அனுஅனுவா சித்தரவதை பண்ணாக்கூட என் ஆத்திரம் அடங்காது. இதுல அந்த கிருக்கிக்கு கொக்கி போட்டா என்னடா நாயன்னு கூட சட்டபண்ண மாட்டறா. எனக்கு நீ வேணும்டி நீ வேணும் என்னால உன்னை, உன் அழகை மறக்க முடியல, உன்னை மறக்க முடியல... எப்படி நீ என் கையில மாட்டாம தப்பிக்கிறன்னு நானும் பாக்குறேன்டி...." என்று அவளை அடையும் வெறியில் ஸ்டீயரிங்கை குத்தியவன் தன்பாட்டிற்கு வாயில் சரக்கை ஊற்றி நண்பனையும் ஆளவந்தானையும் உத்ராவையும் மாறி மாறி வசைபாடிக்கொண்டு வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தான்.

"கொலைகார பாவிங்க கையால தான் அடிச்சானுங்க... அதை தூக்க கூட முடியல டேய் உங்கள எல்லாம் விட மாட்டேன் டா நான் யாருன்னு காமிக்கிறேன் டா... இந்த அஷ்வின் ஒரு ஹீரோ டா... அவனை வில்லன் ரேஞ்சிக்கு கொண்டு வந்துட்டிங்கடா... என் அழகு என்ன.... என் ஸ்டைல் என்ன... என்னை அடிச்சி அவமான படுத்திட்டிங்கடா" என்று கையை அழுத்தி விட்டு வலியை மட்டுபடுத்தியபடி வண்டியை ஓட்ட முன்னால் சென்ற பைக்கின் மேல் மோதிவும் அது க்ளச் என்ற சத்ததுடன் வண்டி நின்றது.

குடித்த போதை வேறு கொஞ்சம் கொஞ்சமாய் மூளையை மழுங்கடித்து கொண்டு இருக்க தெளிவை இழக்கும் முன்னறே வண்டியில் இருந்து இறங்கி என்ன என்று பார்த்தான் அஷ்வின்.

கொஞ்சம் ஜனதிரல்கள் இல்லாத நேரம் தான் அதனால் அவ்வளவாக கூட்டம் இல்லை பார்த்த ஒன்று இரண்டு பேர்களும் அவனை திட்டி ஆரம்பிக்கவும் "வெய்ட் வெய்ட்" என்று அடிபட்டு மயங்கி இருந்த நபரை பார்த்ததும் மரத்தில் இருந்த மாங்கனி தன் மடியில் விழந்ததை போல் சந்தோஷப்பட்டவன் மனதிலையே கணக்கிட்டபடி "எனக்கு தெரிஞ்ச பெண்ணுதான்... என் ஃப்ரெண்ட் தங்கச்சி" என்று அவளின் பெயரை சொல்லி "உத்ரா உத்ரா எழுந்திரிமா" என்று அழைத்தான்.

அவளோ கார் மோதி கீழே விழந்த வேகத்தில் மயக்க நிலைக்கு தள்ளபட்டிருக்க எழுத்துக்கொள்ள முடியாமல் படுத்திருந்தாள். இதையே காரணமாக எடுத்துக்கொண்டவன் "பக்கத்துலதான் தெரிஞ்ச ஹாஸ்பிட்டல் இருக்கு நான் பாத்துக்குறேன்.. எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான்.. வேணும்னா நீங்க யாருனா கூட வாங்களேன்." என்று பேச்சிக்கு அருகில் இருந்த நபரை அழைக்க அவரோ விட்டால் போதும் "மணி ஆகிறது" என்று கிளம்பிவிட்டார்.

கோவிலில் காத்திருந்த கோபி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவள் வருகையை எதிர்பார்த்து காத்திருக்க அவள் வந்தபாடுதான் இல்லை உத்ராவிற்கு ஃபோன் செய்து பார்க்க அது இரண்டு மூன்று முழு அழைப்புக்கு பின் ஸ்விச் ஆப் என்று செய்தியை அறிவித்தது...

உத்ரா இன்னும் வராமல் இருப்பது கோபிக்கு பயத்தை அளிக்க இதற்கு மேல் தாங்காது என்று நினைத்தவன் நேரே அவள் வீட்டிற்கே செல்வது என்று முடிவு செய்து கிளம்பி இருந்தான்.

அவனை கண்டதும் வீட்டு காவலாளி "சார், சார் வெளியே போயி இருக்காங்க மேடமும் வெளியே கிளம்பிட்டாங்களே" என்று தகவலை அறிவிக்க அவனுக்கு மனதில் அபாயமணி அடித்தது. சரி இருந்தும் தெளிவாக காவலாளியை விசாரிக்க சாருகேஷூம் உத்ராவும் ஒன்றாக கிளம்பவில்லை என்று தெளிவாக அறிந்து கொண்டவன் எதுவானலும் சரி சாருகேஷிற்கு ஃபோன் செய்து விசாரிக்கலாம் என்று அவனுக்கு ஃபோன் செய்ய கோபியின் எண் ஏற்கனவே தெரியும் என்பதினால் எடுத்தவுடனே "சொல்லுங்க மாப்ள" என்று மகிழ்வுடன் தன் சம்மதத்தையும் மறைமுகமாக அறிவிக்க

அவன் அழைத்தது கூட மூளைக்குள் எட்டா நிலையில் இருந்தவன் "சார் உத்ரா காலையில் எங்க போறதா சொல்லிட்டு போனங்க" என்றான் தட்டுதடுமாறி

அவன் கேள்வியை விளையடுவதாக எடுத்துக்கொண்ட சாருகேஷ் "கோபி என்ன ஏதாவது ப்ளே பண்றீங்களா ரெண்டு பேரும்" என்றான் கொஞ்சம் சிரிப்பாகவே

"இல்ல, இல்ல சார்... நிஜமாதான் கேக்குறேன். அவ என்னை பாக்குறத்துக்கு முன்னாடி வேற எங்காவது போறேன்னு சொன்னாளா???" என்றதும் சாருகேஷிற்கு தூக்கி வாரி போட்டது

"இல்லையே கோபி உன்னை, உன்னை பார்க்கத்தான் கோவிலுக்கு கிளம்பினா நான்தான் அவளை காலையில அனுப்பி வைச்சேன் அவ கோவிலுக்கு வரலையா" என்றான்.

"இல்லையே.. வரலையே... அவளுக்கு அவ்வளவு நேரம் வெய்ட் பண்ணி போன் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வருது எங்க போனான்னு தெரியல?அதான் உங்களுக்கு கால் பண்ணேன் ." என்றதும் "இருங்க நானும் வர்றேன்" என்றவன் தங்கையை தேடி பறந்தான்.

😱😱😱😱

வெளியே சென்ற தியாவோ ஃப்ரெண்ட் பூரணியின் வீட்டை நோக்கி வண்டியை விரட்டி போக வழியில் ஒரு சிக்னலில் நன்றாக அகப்பட்டு கொண்டு நின்றிருந்தாள்.

அவள் அருகிலேயே மிகவும் அதிநவீன பைக் ஒன்று அவள் வண்டியை உரசியபடி வந்து நிற்க அதில் அமர்ந்து இருந்தவனோ ஹெல்மெட்டால் முகத்தை மூடி இருந்தான்.

அவன் தோரணையும் வண்டியை உரசியபடி நின்ற விதத்திலையுமே சுரு சுருவென தியாவிற்கு கோபம் எழ அவனை தீ பார்வை பார்த்தவள் "ஸ்டைலா பைக்க புடிச்சிட்டா ஃப்ளைட் ஓட்டுறதா நினைப்பு... டூர்டுர்னு ரேஸ் ஓட்டுறா மாதிரி உதார் காமிச்சிக்கிட்டு இருக்கான்... சரியான திமிரு புடிச்சவன்... இடிக்கிறா மாதிரி வந்து நிக்கிறான்". என்று முனுமுனுத்து அவனை விட்டு சற்று தள்ளி வண்டியை நகர்த்திக்கொண்டு போனாள்.

அவள் பேசுவது துள்ளியமாக காதில் விழபெற்றவன் இதழ் குறுநகை பூக்க அவள் தள்ளி சென்ற இடத்திற்கு தானும் வண்டியை நகர்த்தி இப்போதும் உரசியது போல் நின்று அவளை நன்றாக பார்த்தபடி பைக்கில் மேல் கைகளை வைத்து அமர்ந்து இருக்க.

அவன் செய்கையில் மேலும் கோபம் வரபெற்றவள் இவனை இதுக்கு மேல சும்மா விடக்கூடாது என்று பைக்கை விட்டு இறங்கியவள் "என்னடா என்ன... மேனர்ஸ் இல்ல... ஒரு பொண்ணு ரோட்டுல போக விடமாட்டிங்களா... கொஞ்சம் அழகா இருந்தா பின்னாடியே அலைவிங்களா..... ஏன்டா இப்படி முறைச்சி பார்த்துக்கிட்டு நிக்கிற... அப்படி பாக்காதடா கண்ணை நோண்டி கையில கொடுத்துடுவேன்" என்று திட்டிக்கொண்டு இருக்க அவளை வளைத்து பிடித்து ஹேல்மெட்டினை கழட்டி "இப்போ பேசுடி" என்று சித்தார்த் கூறவும்.

அவன் அதிரடியில் கண்கள் இரண்டும் நட்சத்திரங்களாக ஓளிவீச தங்களை சுற்றி உள்ளவர்களின் பார்வைகள் அவர்களை துளைப்பதை அறிந்தவள் கைகளை அவனிடம் இருந்து விடவித்துக்கொண்டு சிக்னல் விழவும் விட்டென்று அந்த இடத்தை விட்டு அகன்று விட்டாள்.

கோபம் இருக்கும் என்று தெரியும் ஆனால் இவ்வளவு கோபத்துடன் பார்த்தும் பேசாமல் போவாள் என்று எதிர்பாராதவன் "வது.. வதுமா..." என்று கூப்பிட்டும் நிற்காமல் சென்றவளை பின் தெடர்ந்து சென்றவன் அவள் முன் சென்று பைக்கை நிறுத்தி இறங்கி இரு காதுகளையும் பற்றியவாறு "" என்று மன்னிப்பை வேண்டி பைக்கில் மறைத்து வைத்திருந்த சிவப்பு ரோஜாக்கள் அடங்கிய பூ கொத்தையும் மண்டியிட்டு நீட்டிட.

முதலில் பிகு செய்து அவனை பார்க்காமல் நின்றவள் மலர் கொத்தை நீட்டவும் கன்னங்கள் சிவக்க அதை வாங்கிக்கொண்ட தியா "நான் இதை வாங்கிகிட்டது உங்களுக்காக இல்ல... எனக்காக" என்றபடி அதை நெஞ்சோடு அனைத்து முத்தம் வைக்க "அங்க வைச்சதை இங்க டிரான்ஸ்ஃபர் பண்ண முடியுமா?" என்று பாவமாய் சித்து கேட்டதும்

"முடியாது என்னை ஏமாத்திட்டிங்கல்ல போன வாரமே வரன்னு தானே சொன்னீங்க எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?!? உங்கள பார்க்க நான் வரேன்னு சென்னாலும் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வேண்டான்னு சொன்னினீங்க இப்பக்கூட கவி பார்க்க தானே வந்திங்க... உன்னை யாருடா வரசொன்னது போ போ நான் உனக்கு வேண்டாம் தானே வரல. போ போ" என்று முதலில் மரியாதையுடன் ஆரம்பித்து கடைசியாக போடாவென்று அழுபவள் போல் பேசியவளை சுவாரஸ்யமாக பார்த்து இருந்தான் சித்தார்த்

அவள் இதழ்களையும் கோவத்தில் சிவந்த கன்னங்களையும் அங்கும் இங்கும் அலைபாய்ந்த கண்களையும் பேசுகையில் நுனி சிவந்த கூர்மூக்கின் அழகையும் ரசித்தவன் உள்ளுக்குள் 'அழகான ராட்சசியே' என்று சொல்லிக் கொண்டு "ஹோ..." என்று கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியபடி "அப்புறம்" என்று சாவகாசமாக கதை கேட்பது போல் கேட்டான்.

"ம்கூம் அப்புறம் என்ன அப்புறம் சரியான தில்லாலங்கடி தானே நீ... பொண்ணு ஓகே சொல்ற வரையும் பின்னாடி சுத்த வேண்டியது... ஒரு நாள் கூட உன்னை பாக்காம இருக்க முடியலன்னு டையலாக் பேச வேண்டியது... அதுவே 'எஸ்' சொல்லிட்டா, டாட்டா காமிச்சகட்டு ஊருக்கு பொட்டிய கட்டி போகவேண்டியது... இங்க ஒருத்தி பைத்தியம் மாதிரி உங்க நினைப்பிலையே லூசு மாதிரி திரியனும்" என்று சொல்லி அங்கிருந்து செல்ல அவள் கையை பிடித்து நிற்க வைத்து "நான் செல்றத கேப்பியா?? கேட்கமாட்டியா டீ?? எண்ணெய்ல போட்ட அப்பளம் மாதிரி பொரியறியே" என்றான் கூர்பார்வையுடன்.

அவன் பார்வை கண்கள் வழி ஊடுறுவி இதயம் தொட அவன் கையை விளக்கியவள் "சொல்லுங்க" என்று நின்றாள். பைக்கின் மீது கை வைத்து "உன் கண்ணு முன்னாடி புது பைக்கோட நிக்கிறேன். அதை பத்தி ஒரு வார்த்தையாவது கேக்குறியாடி?. வரல, வரல, வரல... ஏன் வரலன்னு கொஞ்சமாவது யோசிக்கிறியா!?" என்றான் சட்டென்று.

"அட ஆமால்ல முதலியே பார்த்தேன். இதை எப்படி கேக்க மறந்தேன்." என்று நினைத்தவள் "நீ பைக்கு புதுசா வாங்கி இருக்க... அதை கூட என்கிட்ட சொல்லல" என்று அதற்குமேலும் ஒரு சண்டையை வளர்க்க "அட அறிவுஜீவியே சொல்றதை எங்கயாவது முழுசா கேக்குறியா??? ஆளு தான் நல்ல புள்ளையார் கணக்கா இருக்க... ஆன மண்டையில இருக்க வேண்டிய மசலாவை வீட்டுலையே வைச்சிட்டு வந்துட்டியா?!?!" என்றான் சித்தார்த் கடுப்புடன்

கடுப்புடன் வினவியவனை "என்கிட்ட சொல்லாமலே செஞ்சிட்டு என்னையே திட்டுரியா போடா போ..." என்றவள் அழுவது போல் முகம் துடைக்க அவளின் தலையில் செல்லமாய் கொட்டியவன் "வண்டி புதுசுன்னு தெரியுதுல! அதுக்கு ரெஜிஸ்டேஷன் அது, இதுன்னு வேலை இருந்து இருக்கும்னு அதெல்லாம் யோசிக்க மாட்டியா???

வேலை முடிஞ்சவுடனே சர்ப்ரைஸா, வண்டிய காட்ட நேரா உன்னை பார்க்க தான் வந்தேன் அராத்து.... இதை சொல்றதுக்குள்ள அவ்வளவு அவசரம்... ஒரு நாள் முழுசும் இந்த வண்டியில உன்னை வச்சிக்கிட்டு சுத்தனும்னு ஆசையா இருந்தேன்... அதுக்குள்ள ஆயிரத்து எட்டு கேள்வி கேட்டு மனுஷனை கடுபேத்திக்கிட்டு இருக்கடி" என்று சொல்லி இடுப்பில் கைவைத்து திரும்பி நின்றிருந்தான்.

அனைத்தையும் கேட்டவள் மெல்ல பூனைநடையிட்டு அவன் பின் பக்கம் வந்து கட்டிக்கொண்டு "சாரி மாமா ... சாரி... நான்தான் அவசரப்பட்டு திட்டிட்டேன்... இப்போ மட்டும் என்ன நீங்க நினைச்சா மாதிரியே வாங்க இன்னைக்கு முழுசும் சுத்தலாம்" என்று அவனை சமாதனபடுத்த முயல

இடுப்பை சுற்றி இருந்த அவளின் வளைகரங்களை பிரித்து "ஒன்னும் வேண்டாம் போ தயவு செய்து போ... எப்பவும் சண்டை, சண்டை... சரியான சண்டைக்கோழி டி நீ... எப்போ நல்லா பேசுவ ,எப்போ நல்ல சண்டை போடுவன்னு... உனக்காவது தெரியுமாடி" என்று நக்கலாக கேட்டவனின் கரங்களில் கிள்ளியவள்

"உன்கூட சண்டை போடவும் உன்னை கொஞ்சவும் எனக்கு மட்டும் தானே உரிமை இருக்கு" என்று முகவாயை பற்றியவளின் கண்களில் விழந்தவன் எழமனமின்றி அவளையே விழுங்கினான்.

😍😍😍😍
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 63
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN