காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 65

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அதிகாலை சூரியன் கிழக்கில் தன் ஆதிக்கத்தை செலுத்த, அழகாக பொழுது புலர்ந்தது இருந்தது. கோபி தனக்காக போட்டிருந்த காஃபியில் ஆடை படர்ந்து மேசையின் மேல் இருக்க. இளையராஜாவின் இசை தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டு இருந்தது. மனம் எதிலும் லயிக்கவில்லை கண்களை மூடி மெத்தையில் சாய்ந்து அமர்ந்து இருந்தான் கோபி.

அவளுக்கு என்ன ஆனதோ என்று மனம் பதறி துடித்தாலும் அங்கு செல்ல அவனுக்கு தைரியமில்லை... ஒருவேலை பழைய ஞாபகங்கள் திரும்பி தற்போதைய நினைவுகள் இல்லாமல் இருந்து தன்னை யார் என்று கேட்டுவிட்டால் மனம் சுக்குநூறாய் சிதறிவிடும் என்று அவளை சார்ந்த அனைத்து விஷயங்களையும் தவிர்த்து வந்தான். இன்றும் அவளின் நினைவில் இருந்தவனுக்கு மூடிய விழியில் வழிந்த நீரைக் துடைக்க கூட தோன்றாமல் அப்படியே அமர்ந்து இருந்தான்.

விடாது ஒலித்த வீட்டு அழைப்பு மணியில் தன்னிலை அடைந்தவன் சோர்வாகவே கதவைத் திறந்தான். எதிரில் நின்றிருந்த நபரை கண்டதும் “வாடா” என்ற ஒற்றை சொல்லுடன் வந்தவரை அழைத்தவன் உள்ளே சென்று விட அவன் பின்னேயே வந்த சித்தார்த் தான் நண்பனின் நிலைக் கண்டு வருந்தினான்.

“ஏன்டா ஏதோ மாதிரி இருக்க??? இரண்டு நாளா எங்க போய் இருந்த??? ஃபோன் பண்ணா எடுக்கவும் இல்ல, உத்ராவையும் பார்க்கவும் வரல, உன் மனசுல என்ன தான் ஓடுது அதையாவது சொல்லேன்!!!” என்றான் கொஞ்சம் காட்டமாக.

“ப்ச் ஒன்னும் இல்லடா. சும்மா தான்” என்றான் கோபி.

“எது இது ஒன்னும் இல்ல!!!!. என்னை நம்ப சொல்ற உன் கூடவே இருந்தவன் டா. என்கிட்டயே பொய் சொல்றியா???” என்றான் சித்து.

“என்னன்னு சொல்ல சொல்ற டா!!! அவளை பார்க்கவே பயமா இருக்கு. மனசு கிடந்து அடிச்சிக்குது. ஆனா நீ யாருன்னு கேட்டுட்டா சத்தியமா என்னால தாங்கமுடியாது டா” என்றவன் தலையை பிடித்து கொண்டான்.

“நீ ஏன் கண்டதையும் நினைக்கிற வா போலாம போய் பாக்கலாம்... அவளுக்கு பழைசு ஞாபகம் வந்துடுச்சின்னா உன்னை மறந்துடுவான்னு ஏன் யோசிக்கிற??? உன் பயம் அர்த்தம் இல்லாதது மாப்ள. இன்னும் நானும் உத்ராவை பாக்கல வாடா போலாம்” என்றான்.

“நான் எங்கேயும் வரலடா” என்று சோஃபாவில் படுத்துக் கொண்டான்.

“எதையும் நினைக்காம வாடா மாப்ள” என்று அவனை கைப்பிடித்து எழுப்ப.

“இல்ல மச்சி நான் வரல. நீ போய் அவளை பார்த்துட்டு வா. சத்தியமா எனக்கு தைரியம் இல்லை. அவளை பார்த்ததும் என்னையும் அறியாம என் ஃபீலிங்க்ஸ் வெளியே வந்துடும் டா. என் நேச்சர் அவளை பார்த்ததும் வெளிப்பட்டுடும் அது இன்னும் தப்பாகிடும்” என்றவன் கண்களை மூடி படுத்து விட்டான்.

“டேய் மச்சான். நீயா இப்படி எல்லாம் யோசிக்கிற!!!. உனக்குள்ள இவ்வளவு பண்பட்ட மனுஷன் இருக்கானா...!!!!” என்று அவனை பார்த்து ஆச்சரியத்தை காட்டியவன் “உத்ராவுக்காக பாத்து பாத்து ஒவ்வொரு முடிவையும் எடுக்குறடா உன் மனசுக்கு நல்லதுதான் நடக்கும்” என்று கூறியவன் அவளை காண்பதற்கு சென்றான்.

விழியை மூடி படுத்தவனுக்கோ கோவிலுக்கு வருகிறேன் என்று சொன்னவளின் வார்த்தைகளே செவிகளில் ஒலித்துக் கொண்டு இருந்தது. இரு நாட்களாக அவள் நினைவுகள் அதிகம் தாக்க, கடைசியாய் அவள் வர சொன்ன இடத்திற்கு கிளம்பி விடுவதும் காலை முதல் இரவு வரை அங்கேயே இருக்க, படுக்க மட்டுமே வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தான் இன்றோ சித்து வந்து அவனை கூப்பிடவும் அவள் நினைவு படுத்த உடனே கோவிலுக்கு கிளம்பிவிட்டான்.

அன்று மாலை வீட்டிற்கு வந்தவன் மனம் கொஞ்சம் தெளிந்து இருந்தது. “ச்சே... என்ன ஃபீலிங்க்ஸ் டா இது மனுசனை அனு அனுவா சாகடிக்குது” என்று ஏகத்திற்கும் காதலை சாடியவன் ‘இது எல்லாம் எனக்கு செட் ஆகாது டா. அவ எனக்கு இல்லன்னு நினைச்சாவது இதை எல்லாம் மறக்க ட்ரை பண்ணனும். இல்ல அவளை வழிக்கு கொண்டுவர்ற சாமர்த்தியமாவது வேணும்...’ என்று மனதோடு பேசியவன் ‘அவ தான் உன்னை யாருன்னு தெரியலன்னு சொன்னாக்கூட நான் தான்டா உன் காதலின்னு சொல்ற அளவுக்கு கூடவாடா உனக்கு சாமர்த்தியம் இல்ல’ என்று தனக்கு தானே பேசியவன் சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு சோஃபாவில் அப்படியே படுத்து விட.

வீட்டு அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. விடாமல் சத்தம் கேட்கவும் “வரேன் வரேன். கொஞ்சமாச்சும் மனுசனை நிம்மதியா யோசிக்க விடுறாங்களா!!!” என்று கடுப்புடனே எழுந்து சென்றவன் வெளியே நின்றிருந்த நபரை கண்டு கண்கள் நிலை குத்தி நின்றது.

“தள்ளு” என்று ஒரு விரலை அவனின் நெஞ்சில் வைத்து தள்ளி நிறுத்தி உள்ளே நுழைந்தவள் வேறு யாரும் இல்லை, இத்தனை நாள் கனவிலும் நினைவிலும் தவிக்க விட்ட அவன் காதல் பைங்கிளி உத்ராவேதான்.

இது உண்மையா பிரம்மையா என்று உறுத்து விழித்தவன் தன் கைகளால் கன்னத்தில் மாற்றி மாற்றி தட்டி தெளிய வைக்க முனைய ‘இது எல்லாம் பத்தாது. இரு’ என்பது போல் அவன் அருகில் வந்து கோபியின் கைகளை மெல்ல விலக்கியவள் பளார் என்று விட்ட அறையில் அனைத்தும் தெள்ள தெளிவாய் அவனுக்கு விளங்கி இருந்தது. இது அவன் காதல் தேவதை போன்ற உருவில் வந்து ரத்த காட்டேரி என்று...

இன்னும் அவன் அருகில் வந்தவள் அவன் நினைத்ததை உண்மையே என்று நிரூபிப்பது போல் அவன் கழுத்தில் கை வைத்து “கழட்டி விட்டு கை கழுவ ப்ளான் பண்ற!!!! சாவு டா” என்று கோபத்துடன் நெருக்க “அய்யோ கொலை பண்றாங்க கொலை பண்றாங்க காப்பாத்துங்க” என்று கத்திட.

“மூச் வாய தொறந்த கொன்னு போட்றுவேன். அங்க ஒருத்தி மயங்கி விழந்தாளே என்ன ஆச்சு ஏதாச்சுன்னு பாக்க வந்தியா??? இங்க தேவதாஸ் போல உக்காந்துட்டு தத்துவமா பேசிக்கிட்டு இருக்க!!!” என்று அர்ச்சனைகளை ஆரம்பிக்க, ஸ்தம்பித்து போனான் கோபி. ‘அப்போ இவளுக்கு பழசு ஞாபகம் வரலியா என்னை அடையாளம் தெரியுதா!!!’ என்று சந்தோஷப்பட்டவன் அவளின் ஒவ்வொரு திட்டிற்கும் சந்தோஷத்தில் மெய்மறந்து அவளை ரசித்துக்கொண்டு இருந்தான்.

அவனை விடாது அடித்து கலைத்தவள் “போடா” என மூச்சு வாங்கியபடி திரும்பி கொள்ளவும் அவள் அருகில் வந்தவள் அப்படியே அவளை இறுகி அணைத்து கொண்டான்.

“டேய் விடு. விடு என்னை இன்னும் எந்த சமாதானமும் பண்ணல. அதுக்குள்ள கட்டிபிடிக்கிற???” என்று அவனின் கைகளை விலக்கி விட

“ப்ச்” என்று அவளின் எதிர்ப்புகளையும் சமாளித்து அவளை இரு கைகளாலும் அள்ளி சுற்றியவன் “இப்போ இப்போ தான் அம்மு உயிரே வந்து இருக்கு. நான் காதலிச்சிட்டு பட்ட பாடு இருக்கே. சத்தியமா இன்னொரு முறை இந்த காதலை நினைச்சி கூட பாக்க கூடாதுன்னு நொந்து போனேன்” என்று கூறிட.

அதுவரை அவனின் செயலில் வெட்கத்தில் முகம் சிவந்தவள் இப்போது கோபத்தில் நின்று இருந்தாள் “என்ன அம்மு அதுக்குள்ள மோட் சேஞ்ச் பண்ணிட்ட!!!” என்று அறியா பிள்ளைபோல் கேட்க

“நான் கூட இருக்கும் போதே உனக்கு இன்னொரு காதல் கேக்குதா???” என்று கோவமாக கேட்க.

தலை சுற்றி போனது அவனுக்கு “அது வந்து... அது காதல்...... நான் என்ன சொல்ல வரேன்னா....!!!!” என்று தாளம் போட அடக்கிய சிரிப்புடன் அவனை நோக்கியவள் “சோ ஸ்வீட்” என்று அவன் கன்னம் வழிந்து முத்தம் வைக்க.

சிலிர்த்து போனான் கோபி இதுவரையிலும் இந்த மாதிரி பழகாதவள் இன்று உரிமையுடன் அவனிடம் சண்டையிடுவதும் கொஞ்சுவதும் கோபப்படுவதும் அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. இதுநாள் வரை அமைதியாய் வலம் வந்தவள் இன்றைய மாற்றத்திற்கான காரணம் தான் புரியாமல் திருதிருவென விழித்தான். கேட்கவும் பயமாக இருந்தது. வந்த முதல் கொண்டு எதை பேசினாலும் தவறாக எடுத்துகொண்டு அடிபின்னுவதும் முறைப்பதுமாக இருந்தவளை பார்த்து.

அவன் பார்வையின் மாற்றம் வைத்து மனதில் யூகித்தவள் “இப்படியே எவ்வளவு நேரம் தான் பார்த்துட்டு இருப்பீங்க. பசிக்குது ஏதாவது கொடுக்குற உத்தேசம் இருக்க இல்லையா???” என்று அவனுடைய கவனம் கலைத்திட.

‘இது எல்லாம் கேக்குறா ஆனா நடந்தது எதுவும் சொல்லமாட்டுறா!!!’ என்று மனதில் நினைத்தவன் அவளுக்கு சாப்பிடுவதற்கு கொண்டு வர சமையல் அறைக்குள் சென்றான். சமையல அறையில் இருந்து எட்டி அவளை பார்ப்பதும் அவளுக்கு காஃபி கலக்குவதுமாக இருக்க சோஃபாவில் அமர்ந்திருந்தவள் அவனை கவனித்து விட அவன் இருந்த இடத்திற்கே சென்று அவன் தோளை தொட அதிர்ந்து திரும்பினான் கோபி.

அவன் அதிரவும் இவளும் பயம் கொண்டு “என்ன என்ன!!!!” என்று கேட்க “அது திடீர்ன்னு பின்னாடி வந்து நின்னதும் தடுமாறிட்டேன்” என்றவனை பார்த்து “நான் செய்ய வேண்டியது எல்லாம் நீங்க செய்றீங்க நீங்க செய்ய வேண்டியதை எல்லாம் நான் செய்றேன். கஷ்டகாலம் டா சாமி” என்று மேலே கையை காட்டி சொன்னவள், “இப்போ என்ன நான் எப்படி இங்க வந்தேன்னு தெரியனுமா. அதைதானே யோசிச்சிட்டு இருந்தீங்க???” என்று கேட்கவும் உடனே தலையை ஆட்டி அசடுவழிய நின்றவனை “என்கிட்ட கேக்குறதுக்கு என்ன!!!” என்றாள்.

“அது வந்து நீ....” என்றதும் “பயந்திட்டிங்களாக்கும்” என்றவள் “என் நேச்சரே இதுதான் கோபி அதை காட்டத்தான் இப்படி அதிரடியா வந்தேன்” என்றாள் உத்ரா

அவள் இவ்வாறு கூறியதும் “அம்மு உனக்கு ஞாபகம் வந்துடுச்சா???” என்றான் அதிர்ச்சி விலகாமல்.

“ம்... அன்னைக்கு நடந்த சம்பவத்துலையே எனக்கு பழைசு ஞாபகம் வந்துடுச்சி கோபி ... மறுநாள் தான மயக்கம தெளிஞ்சிது... தயா அப்பா அண்ணி அண்ணா பாப்பா எல்லாம் வந்தாங்க. என்னை பார்க்க இருந்தும் என் மனசு உங்கள தேடுச்சி நீங்க வரலன்னதும கொஞ்ம் ஏமாற்றமா இருந்தது... என்னோட பாஸ்ட் எனக்கு உறுத்தலாவும் இருந்தது. சரி உங்க ஃலைப்ல என்னை விட பெஸ்ட்டா ஒரு பொண்ணு வரனும்னு நினைச்சி என்னை நானே சமாதனம் பண்ணிக்கிட்டேன்...

சாரி. உனக்கு கால் பண்றேன்னு சொன்னபோது கூட வேணாம்னு சொல்லி மறுத்துட்டேன். காலைல சித்து அண்ணா வந்த பிறகுதான் நீ... அயம் சாரி நீங்க பட்ட கஷ்டம் எனக்கு புரிஞ்சுது... இதுக்கு மேல என்னால அங்க இருக்க முடியல” என்று கூறி மெல்ல அருகில் வந்தவள் தலை சாய்த்து இரு கை விரல்களையும் இதய வடிவில் வைத்தவள் “ஐ லவ் யூ கோபி” என்றதும்.

“இப்படி ஒரு ப்ரப்போஸல் நான் எதிர்பாக்கவே இல்ல. அதிரடியாவும் இருந்துச்சி அழகாகவும் இருந்துச்சி... நீ சொன்னியே உறுத்தல் அது எப்பவும் உனக்கு இருக்கவே கூடாது. எனக்கு உன்னை விட யாரு பொருத்தமா இருப்பா அம்மு” என்று அவளின் கைகளை தன் நெஞ்சில் வைத்து புதைத்துக்கொண்டான் கோபி.

அஷ்வின் இன்ஸ்பெக்டர் சக்தியினால் கைது செய்து சிறையில் அடைக்கபட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதில் கையும் களவுமாக அஷ்வினை பிடித்து இருந்தாலும் அதில் உத்ராவின் பெயர் எந்த இடத்திலும் வந்து விட கூடாது என்பதில் உறுதியாய் இருந்த கேஷவும் சாருகேஷும் அவன் நகைக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கள்ளக்கடத்தல் தங்கமும் கணக்கில் வராத வைரங்களும் அரசு அதிகாரிகள் மூலம் சிக்கவைத்து அதனை வைத்தே அவனுக்கு தண்டனையும் கிடைக்க செய்து இருந்தனர்.

இதற்கிடையில் ஆளவந்தானும் கதிரின் இறப்பிலும் அஷ்வினின் பெரும் பங்கு இருப்பதாக வாக்குமூலம் அளிக்க அந்த குற்றத்திற்காக அவனுக்கு 7ஆண்டுகள் சிறை மற்றும் அரசினை ஏமாற்றிய குற்றத்திற்காக சுமார் 50லட்சம் அபராதம் விதித்து இருந்த நீதிமன்றம் ஆளவந்தானுக்கு 4 ஆண்டுகள் சிறையும் விதித்து தண்டனை அளித்தது.

ஆளவந்தானும் அஷ்வினும் ஒரே சிறையில் அடைத்து இருந்தாலும் ஆளவந்தானுக்கு அஷ்வினை பார்க்கப் பார்க்க ரத்தம் கொதித்துக்கொண்டு இருந்தது தன் செல்ல மகளின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கியவனை அவ்வளவு சுலபத்தில் விட்டு விட அவர் மனம் ஒப்பவில்லை.

அவர் எதிர்பார்த்ததை போல் ஒரு நாள் சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட கலவரத்தில் எதிர்பாராமல் தெரியாத்தனமாய் சிக்கிய அஷ்வினுக்கு கழுத்தில் கத்தி குத்து எற்பட்டு பேச முடியாமலும் கை கால்கள் இழுத்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். அக்கத்திக்குத்து எதேச்சையாய் நடந்ததா அல்லது ஆளவந்தானின் வேளையா என்பது கடைசி வரை அஷ்வினுக்கு கேள்விக் குறியாகவே போயிற்று..

இரு வாரங்கள் கடந்த நிலையில் கண்வழித்த அஷ்வின் பேச முடியாமல் தவிக்க வாய் ஒரு பக்கம் கோணிய நிலையில் குழளறாக வார்த்தைகள் வெளியே வந்து விழந்தது. அதில் முதல் வார்த்தை “நான் வார்ஷாவை பார்க்க வேணும்” என்பதாய் இருந்தது. காவல் துறை ஏற்பாட்டின் பேரில் வந்து பார்த்தவள் அவன் நிலையை பார்த்து கல் போன்றே நின்றாள் ஒரு பரிதவிப்போ இல்லை பாவம் என்ற நினைப்போ அவள் மனதில் சுத்தமாய் இல்லை ஒரு அந்நிய நன்மையாய் சுமந்து நின்றது அவள் விழிகள்.

வந்து நின்றவளை ஏறிட்டு பார்த்த அஷ்வினுக்கு அவள் மேடிட்ட வயிறை பார்வையில் பட்டது “வா.. வர்ஷா” என்று திக்கி திணறி நா குழறி அழைத்தான்.

இரண்டு எட்டு வைத்து முன் சென்றவள் ;என்ன..... என்னை ஏன் வரச்சொன்னாய்!!!’ என்பது போல பார்த்தாள் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேச அவளுக்கு விருப்பம் இல்லை.

“எ.. எப்...ப..டி.. இ..ரு..க்க.. வ.. வ வர்... ஷா???...” என்றான்.

“இன்னும் சாகல. உயிரோட ஒரு உயிரை சுமந்துக்கிட்டு நல்லா இருக்கேன்..” என்று அனலாய் வார்த்தை வெளியே வந்தது.

அவள் கூற்றில் வாய் அடைத்த போதிலும் அதை வைத்து ஒன்றும் நாக்கை வழிக்க முடியாது இறங்கி போய்தான் காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு தான் நினைத்ததை சொல்லி விட வேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தவன் “நா....ன்... வெ..ளி...யே வர...னு...ம்” என்றான்... திணறி திணறி

“அதுக்கு நான் என்ன பண்ணனும்... நான் ஒன்னும் நீதிபதி இல்லையே!!! அவர் எழுதின தீர்ப்பை மாத்தி எழுத” என்று நக்கலாக வார்த்தைகளை விசினாள்.

அவனை பார்க்கவே அவளுக்கு அருவருப்பாக இருந்தது ‘இவனை போய் எல்லாமுமாக நினைத்தேனே!!!’ என்று ஒவ்வொரு நாளும் கண்ணீரை வடித்தவள் அல்லவா, இன்று அது வற்றி போய் உடலும் மனமும் மறத்து போய் இருக்க அதன் வெளிப்பாடே இதெல்லாம்.

அவளின் உதாசினத்தில் சோர்ந்து போய் மூச்சி வாங்கியவன் இனியும் தாமதிக்காது பேச எண்ணம் வைத்து “உ... ன்... அப்...பா...கிட்ட.. பே..சி என்..னை.. வெ..ளி...யே.. எடு” என்று கூற.

அவன் கூறிய வார்த்தைகளை ஒன்றுக்கொன்று பிணைத்து உருவகப்படுத்தி புரிந்து கொண்டவள்

“நீயெல்லாம் வெளியே இருக்கவே கூடாதுடா. உன் காத்து பட்டாலும் கல்லும் கலங்கமாகிடும். நீ உயிரோட இருக்க அருகதையே இல்லாதவன் டா. எந்த முகத்தை வச்சிக்கிட்டு என்னை பாக்குற... உன்னை வெளியே எடுக்க சொல்லி என்னை கேக்குற.... உன் உடம்பு கூசல... அதானே நீ யாரு மனுஷனா இருந்தா தானே இது எல்லாம் இருக்கும்!!!” என்றவள் “இதுவே கடைசி முறையா இருக்கட்டும். இனி என்னை கூப்பிடுற வேலை எல்லாம் வைச்சிக்காத” என்றவள் திரும்பியும் பாராமல் சென்று விட்டாள்.

வாழ்நாள் கடைசி வரையிலும் படுக்கையில் இருக்க வேண்டும் என்பது அஷ்வினின் தலையில் கடவுள் தான் ஏற்கனவே அவன் தண்டனையின் தீர்ப்பை எழுதி விட்டாறே. பல பெண்களை விளையாட்டு பொம்மையாய் பயன்படுத்தி எறிந்து வந்தவன் இன்று அவனே கை கால்கள் நடமாட்டம் இல்லாத பொம்மையாய் ஆனான்.

😏😏😏😏😏😏

ஆகாயத்தில் வெண்பஞ்சு மேகங்களை கிழித்துக்கொண்டு தரை இறங்கியது மலேஷியா விமானம். இரண்டு மாதங்கள் கழித்து இந்தியா திரும்பி இருந்தான் ஜெயந்த். அவன் அருகில் கூடுதல் அழகுடன் கண்களில் காதல் மின்ன அவன் என் காதலன் நாளை என் கணவன் என்ற பெருமித்துடன் நடந்து வந்தாள் மதுவந்தி.

மதுவந்தியின் படிப்பு முடிந்த நிலையில் இவர்களின் திருமணத்தை உடனே முடித்திட வேண்டும் என்று ராஜராமனும் ஆதியும் கூறிட மதுவந்தியின் பெரியம்மாவின் குடும்பத்தையும் தன்னுடன் அழைத்து வந்திருந்தான் ஜெயந்த்.

மதுவின் பெரியப்பா தான் கொஞ்சம் முறுக்கிக்கொண்டு இருந்தார். மற்றபடி அவளின் குடும்பத்து ஆட்கள் அனைவருக்கும் ஜெயந்தினை மிகவும் பிடித்து இருந்தது. மலேஷியாவில் இருந்து வந்த பத்து நாட்களில் இருவருக்கும் முகூர்த்த தேதியினை குறித்து விட திருமண வேலையும் துரித கதியில் நடந்தது கொண்டு இருந்தது... மதுவந்தியின் அண்ணன் கிருபா மட்டும் தங்கையின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக வருவதாக கூறி இருந்தான்.

நாட்கள் காற்றை போல் அடித்து செல்லப்பட்டது. மண்டபம் பார்ப்பது அழைப்பிதழ்கள் அச்சடிப்பது குலதெய்வ வழிபாடு என அனைத்தும் இந்த திருமணத்தில் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்ட ஆதி அனைத்தையும் சந்தோஷத்துடன் செய்தார்.

கவியின் வயிறு இப்போது ஓரளவு தெரிய ஆரம்பித்து இருந்தது. வாந்தி தலைசுற்றலும் சேர்த்து படுத்தியபாட்டில் அவ்வப்போது கேஷவினையும் அவனுடைய மனையாள் படுத்திக் கொண்டிருந்தாள். இதற்கிடையில மதுவந்திக்கும் பார்கவிக்கும் நல்ல புரிதல் இருந்தது அக்கா தங்கை என்ற உறவை தாண்டியும் நல்ல தோழிகளைப்போல் பழகினர்.

வரவேற்பு இரு ஜோடிகளுக்கு என்ற பேச்சு வருகையில் கேஷவ் தான் பார்கவியின் நலனை கருத்தில் கொண்டு வேண்டாம் என்று கூறி விட

ஆதி தான் மகனை சமாதானம் செய்து சம்மதிக்க வைத்து இருந்தார்.

‘மஞ்சு மற்றும் மாணிக்கத்தின் வீட்டில் நடந்த முதல் கல்யாணம் கொஞ்சம் மனசங்கடத்துடனே நடந்தது அதனால் இப்போது வரவேற்பு கூட இல்லாமல் போனால் உங்களுக்கு என்று நினைத்து பார்க்க கூட எதுவும் இருக்காது.. அதுவும் இல்லாமல் அவள் கர்பமாக இருப்பது நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்றுதானே அது மற்றவர்களுக்கு தெரிந்தாலும் பிரச்சனை இல்லை எங்களுக்கும் சரி அவர்களுக்கும் சரி உங்கள் இருவரின் மன திருப்திதான் முக்கியம்’ என்று கூறி அவனின் வாயை அடைத்து விட்டார்.

ஜெயந்த் மற்றும் மதுவின் கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கையில் ஜவுளி எடுப்பது நகைகளை தேர்வு செய்வது என்று நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.

“காலையிலையே இந்த வண்டி வேற சதி பண்ணுது. ஒழுங்கா தானே வந்துட்டு இருந்தது எப்படி தான் பஞ்சர் ஆகி தொலச்சிதோ நேரம் வேற போயிட்டு இருக்கு” என்று தனது ஸ்கூட்டியை பார்த்த வண்ணம் புலம்பிக்கொண்டு இருந்தாள் ஸ்டெல்லா.

சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள் அருகில் எந்த பஞ்சர் கடையும் இருப்பது போல் தெரிய வில்லை சரி கொஞ்சம் தூரம் தள்ளி செல்லலாம் என்று ஸ்கூட்டியை தள்ளிக்கொண்டு செல்ல பக்கத்தில் “மிஸ் ஸ்டெல்லா” என்று குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினாள்.

இதுவரையிலும் காக்கி உடையிலையே இருந்த சக்தி இன்று சாதரண உடையில் பைக்கில் இருந்தபடி அழைப்பது கண்டு திடுக்கிட்டவள் தெரிந்த முகமாக இருக்கவும் புன்னகைத்து “குட் மார்னிங் சார். எங்க இந்த பக்கம்!!!” என்றாள்.

“மேடம் அதை நான் கேட்கனும். என்ன இந்த பக்கம் அதுவும் பைக்கை தள்ளிக்கிட்டு!!!” என்றான் ஏதோ பிரச்சனையோ என்று.

“அதுவும் சரிதான் ஊரையே சுத்துறது உங்க கடமையா இருக்க நான் கேக்குற கேள்விய பாருங்க” என்றவள் தன்னை தானே கிண்டலடித்துக் கொண்டவள் “அது கேஷவ் சார் அண்ணா கல்யாணம் இன்வைட் பண்ணார். அதான் கிளம்பினேன் பைக் பாதியில பஞ்சர்” என்றாள் உதட்டை பிதுக்கி.

“ஹோ... நோ...” என்று அவளுக்காக வருத்தப்பட்டவன் உடனே ஃபோனை எடுத்து “எனக்கு தெரிஞ்ச ஒரு கடை இருக்கு உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க” என்றவன் அவர்களை அழைத்து தாங்கள் இருந்த இடத்தையும் கூறி உடனே வர சொன்னான்.

“ரொம்ப நன்றி சார். உங்களுக்கு எதுக்கு வீண் சிரமம் நீ போங்க ஆள் வந்த நான் பைக் கொடுத்துட்டு கிளம்புறேன்” என்றாள் நன்றியாக..

“இருக்கட்டும் இருக்கட்டும் மிஸ் ஸ்டெல்லா... ஆள் வர்ற வரையும் இருக்கிறேன். தெரிஞ்சவங்க வேற எப்படி தனியா விட்டுட்டு போறது???” என்றவன் “சொல்லுங்க ஸ்டெல்லா. வர்ஷா எப்படி இருக்காங்க???” என்றான்.

“அவ மீண்டுட்டா சார். அது அவ வாழ்க்கை இல்ல குழந்தை தான் எல்லாம்னு தீர்மானம் பண்ணிட்டா. அதுவும் இல்லாம அவங்க அப்பா விட்டுபோன எல்லாத்துக்கும் பொருப்பேத்துகிட்டு சரியான முறையில் நடத்திட்டும் வர்றா” என்றதும்.

“அவர் உனக்கும் அப்பா தானே” என்று கூறிட.

“ப்ச் ப்ச். அவளுக்கு மட்டும் தான். யாரோட பாசத்தையும் நான் பங்குபோட விரும்பல சார். அதை விடுங்க என்கூட நின்னு பேசிட்டு இருக்கீங்களே உங்க வேலை கெட்டு போகுதே” என்று வருத்தப்பட.

“இது வருத்தப்படுறது போல இல்லையே. ஏன்டா மடையா இந்த பேச்சு உனக்கு முக்கியமாடான்னு கேக்குறா மாதிரி இருக்கே!!!” என்று போலியாய் கூறிட.

“அய்யோ சார் நான் அப்படி சொல்லல. நீங்க எங்கயோ வெளியே போறா மாதிரி இருந்துச்சு. அதான் சொன்னேன்” என்றிட.

அவள் பதறலில் சிரித்தவன் “நானும் கேஷவ் அண்ணா கல்யாணத்துக்குதான் போறேன்” என்றிட.

“நீங்க மட்டுமா உங்க வொஃய்ப் பசங்க யாரும் வரலையா??? என்று கேட்க.

“இதுக்கு நேரடியேவே உனக்கு கஷ்யாணம் ஆகிடுஞ்சான்னு கேட்டு இருக்கலாம் ஸ்டெல்லா” என்று குறைபட்டவன் “நான் இன்னும் கல்யாணம் ஆகாதா சுத்தமான பிரம்மச்சாரி” என்று கூறிட.

இதுவரலயிலும் சாதாரணமாக பேசிக்கொண்டு வந்தவள் இம்முறை கொஞ்சம அழுத்தத்துடனே “ஹோ சாரி சார். நான் அப்படி கேக்க வரல ஏதோ தெரிஞ்சவரா இருக்கவும் கேட்டுட்டேன்” என்று கூறவும் சக்தி ஃபோன் செய்த மெக்கானிக் வரவும் சரியாய் இருக்க.

“நீ வண்டிய பஞ்சர் ஒட்டிக்கிட்டு மகாலட்சுமி மண்டபத்துக்கு வந்திடு” என்றவன் “வாங்க ஸ்டெல்லா போலாம்” என்றான். சாதாரணமாக.

“எங்க சார்???” என்றாள் கேள்வியாக.

“சக்தி கல்யாணத்துக்கு தான்” என்றிட.

“நான் போயிக்குறேன் சார்” என்று அவள் கூறிட.

“ப்ச் வாங்க வாங்க போகலாம்” என்றிட “இன்னும் 15 நிமிஷம் தான் இருக்கு கல்யாணத்துக்கு. இனி நீங்க வண்டிய புடிச்சி கிளம்பிட லேட் ஆகும். வாங்க உட்காருங்க” என்று அவசரப்படுத்த.

“இருக்கட்டும் சார் பாக்குறவங்க தப்பா நினைப்பாங்க” என்று தவிப்புடனே கூறியவள் மடமடவென்று நடக்க தயாராக.

“ஹோ.. இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க. வாங்க” என்றவன் விடாப்பிடியாக அவளை பைக்கில் அமரவைத்து மண்டபத்துக்கு அழைத்து சென்றான்.

ஒரு வித இருக்கத்துடனே பைக்கில் ஏறி அமர்ந்தவளின் முகத்தை பார்க்க பார்க்க அவனுக்கு சிரிப்புதான் வந்தது. சங்கடமான முகத்துடனே அமர்ந்திருந்தாள். எவ்வளவு நவநாகரிமாக இருந்தாலும் சமூகம் என்ற கட்டமைப்புக்குள் வரும் போது அடுத்தவர் கூறும் ஒவ்வொரு சொல்லுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டி உள்ளது என்று மனதில் நினைத்தான். அவனும் மனதில் எந்த வித கலங்கமும் இன்றிதான் அவளை அழைத்துக்கொண்டு வந்து இருந்தான்.

மண்டப வாசலிலேயே ஸ்டெல்லாவை இறக்கி விட “நன்றி” என்று கூறியவள் மடமடவென்று உள்ளே சென்றுவிட்டாள்.

வந்தவர்களை வரவேற்க என வாயில் முகப்பில் நின்றிருந்த கேஷவிற்கு இக்காட்சிகள் தெளிவாக விழுந்தது.

“வா வா மச்சான். உள்ள வா” என்று அவனை அழைத்தவன் “என்னடா லேட்... ஸ்டெல்லா கூட வந்து இருக்க???” என்று கேட்க

சிரித்தபடியே “அது ஒரு கதை மச்சி அப்புறம் சொல்றேன். நீ வந்தவங்கள கவனி நான் உள்ளே போறேன். கவி எப்படி இருக்காங்க உள்ளதானே இருக்காங்க???” என்றிட “ஆமா டா உள்ளே இருக்கா நீ போ. இன்னும் சில பேர் வரவேண்டி இருக்கு. சாருகேஷை வெளியே வர சொல்லு நான் உள்ளே வரனும்” என்றிட, “ஓகே மச்சான் நான் அனுப்புறேன்” என்றவன் அங்கிருந்து அகன்று விட்டான்.

சாருகேஷை வெளியே அனுப்பி விட்டவன் ஓரிரு வார்த்தைகள் கவியின் தந்தையிடம் பேசிவிட்டு ராஜாராமனிடமும் சம்பிரதாயமாக பேசியவன் சேரில் அமர்ந்து விட்டான் ஏனோ இன்று ஸ்டெல்லா நடந்து கொண்டது மனதில் சுழன்றது அடிக்கொரு தரம் அவளின் முகத்தை பார்த்தான்.

மனம் இன்னும் என்னவோ அவளிடம் சொல்ல வேண்டும் என்று பரபரத்தது தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று தெரிந்ததும் தன்னிடம் பேசுவதை நாசுக்காக தவிர்த்தை நினைத்தான். தான் ஏன் அவளை திருமணம் செய்து கொள்ள கூடாது என்று நினைத்திட அந்த எண்ணம் தோன்றவே இதழோரம் சிறு புன்னகை ஒளிர்ந்து.. அவளது முதல் சந்திப்பில் இருந்து ஒவ்வொரு முறையும் அவளை சந்திக்கும் போது எல்லாம் வித்தியாசமாக தெரிந்தாள். பரபரத்த மனது கொஞ்சம் ஓய்ந்தது. ‘இதை தான் என் மனம் இத்தனை நாள் என்னிடம் உறைக்க காத்திருந்ததா!!!’ என்று மனதில் அவனுடன் பேசி இதற்கு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று நினைத்தான். காலம் எல்லா வடிக்களுக்கும் ஒரு மருந்தினை வைத்திருக்கும் ஸ்டெல்லாவிற்கான மருந்து சக்திவேல்.

திருவெங்கட மலையானுடன் தாயாரும் நின்றிருந்த ஓவியத்தின் கீழே அழைத்த திருமணப்பந்தலில் மயில் வண்ண பச்சையில் தங்க இழையோடி அங்காங்கே தாமரை பூ வேந்திருந்த திருமண புடவையில் அழகே திருவுருவாய் வந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தார் மதுவந்தியின் பெரியம்மா. தன் தங்கையின் பெண்ணை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க போகின்றோம் என்ற மகிழ்ச்சியில் கண்கள் கலங்கி இருந்தார்.

மேடை நோக்கி வந்தவளை உச்சி முகர்ந்து முத்தம் வைத்தவர் மணப்பந்தலுக்கு அழைத்து வர வெண்பட்டு உடையில் கர்ம சிர்த்தையுடன் அய்யர் கூறியதை செய்து கொண்டு இருந்தவனுக்கு தன்னில் சரிபாதியாய் வர இருப்பவளின் அரவம் மிக அருகில் கேட்க தலை உயர்த்தி பார்த்தவன் அவளை கண்களில் அப்படியே சிறை எடுத்துக் கொண்டான். அவள் கொண்ட நாணத்தில் தன்னை தொலைத்தான்.

அன்னமென நடந்து மெல்ல அடியெடுத்து அவன் பக்கத்தில் அமர்ந்து சபையோருக்கு வணக்கத்தை தெரிவித்தவள் தலைத் தாழ்த்தி அவனுடன் இணையப்போகும் அந்த நிமிடத்தை அனுபவித்து இருந்தாள் மதுவந்தி.

“அம்மா ப்ளீஸ் மா. இவளை எங்கேயும் விடாதிங்க. எங்க இந்த தியா பொண்ணு கூப்பிடுங்க. அவளை இதை எடுக்குறேன் அது எடுக்குறேன்னு வெய்ட்டை தூக்கி கையில வைச்சிக்கிட்டு நிக்குறா” என்று பார்கவியினை அமரவைத்து அன்னையின் காதை கடித்துக்கொண்டு இருந்தான் கேஷவ்.

ஒரு நல்ல மாமியாராய் மருமகளை முறைத்தவர் “ஏன்டா உனக்கு இந்த வேலை. எதுவா இருந்தாலும் நானும் அம்மாவும் பாத்துக்க மாட்டோமா!!! நீ வேலை செஞ்சே ஆகானுமா???” என்று அனுசரணையாய கேட்க.

மாம்பழ வண்ணத்தில் மெல்லிய கரும்பச்சை வண்ண கரையிட்ட அதிகம் உடலை உறுத்தாத புடவையை அணிந்து இருந்தவள் பழக்கூடையை தூக்கிக்கொண்டு போனதை பார்த்தவனுக்கு கோபம் குடிகொள்ள “அத்த......” என்று பேச வந்தவளை தடுத்தவன் “மூச். ஒரு வார்த்தை பேசாத. அவங்களை தாஜா செய்தே உன் வேலைய எல்லாம் செஞ்சிக்கிற” என்றவனுக்கு தூரத்தில் கவியின் தோழி ஷீலாவும் ராஜூவும் வருவது தெரிய சித்துவை குரல் கொடுத்து அவளை பார்க்க சொல்லி விட்டவன் ஷீலாவை வரவேற்க சென்றான்.

“அத்த அவர் அப்படித்தான் நீங்க போங்க. அதான் இந்த புல்டவுசர நிக்க வைச்சிட்டாரே. இவன் பாத்துப்பான் நீங்களாவது சந்தோஷமா வேலை செய்யுங்க” என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டு சொன்னவளை சரித்தபடி பார்த்தவர் “உன்னை திட்ட கூட மனசு வரமாட்டங்குது. உன் சேட்டைய பாத்து என் பேரனோ பேத்தியோ இதே போல துரு துருன்னு இருந்தா போதும்” என்று கூறியவர் “பாத்துக்கப்பா இவ பண்ற வேலைக்கு உன்னைத்தான் எகுறுவான்” என்று சித்துவிடம் எச்சரிக்கையாக கூறிவிட்டு மேடையை நோக்கி சொன்றார்.

“இந்த மலையேரும் மங்க்கிய நான் பாத்துக்குறேன். நீங்க போங்க மா” என்றிட்டவனை கூர் பார்வை பார்த்தவள் “எங்க டா உன் ஆளு சுத்தி சுத்தி பாக்குறேன். அவளை காணோம். இன்னைக்கு உன் மூஞ்சில வேற 500வாட்ஸ் கம்மியான மாதிரி இருக்கு”.

“உன் தங்கச்சி தானே எந்த மலைமேல ஏறி இருக்கோ!!!” என்றவன் “எல்லாம் அப்படியே தான் இருக்கு. உன் நொல்ல கண்ணுக்குதான் வேற மாதிரி தெரியுது” என்றிட.

“ஹோ... நீ சொல்லலைனா என்னால கண்டுபிடிக்க முடியாதா!!! நீ இங்கேயே இரு. நான் ஒரு பத்து நிமிஷத்துல வரேன்” என்று எழுந்து செல்ல இருந்தவளை பார்த்து பெரிய கும்புடு ஒன்று போட்டவன் “உங்க இரெண்டு பேருக்கும் மனுஷங்க மேல இரக்கமே வராதா டீ!!! எப்போ பார்த்தாலும் அடுத்தவனை இம்ச பண்றதே வேலை” என்று சிடுசிடுத்தவனை பரிதாபமாக பார்க்க, “வேணா கவி அழுதுடுவேன். இப்படி மட்டும் எக்பிரகஷன வைக்காதே” என்று கூறியவன் “சகல பாவம் டீ” என்றான்.

“அவர் பாவமா இல்லையா. நான் சொல்றேன் மொதல்ல உன் ஸ்டோரிய சொல்லு” என்றிட “எல்லாம் என் நேரம் உன்னை பேச வைக்குது” என்று கடுப்பாய் பேசியவனை ஆர்வமாக பார்த்த கவி ‘சீக்கிரம் சொல்லேன்' என்பது போல் “ம் மேல மேல” என்று எடுத்து கொடுக்க

“ம்.... ரொம்ப ஆர்வம்” என்று அவள் தலையில் குட்டு வைத்தவன் “காலையில வந்ததுல இருந்து ஒருத்தி கையிலையும் சிக்கல கண்ணுலயும் படல” என்றான் கோவமாய்.

“என்ன தியாவ நீ பாக்கலையா???” என்றாள் அதிர்ச்சியாக “வேணா கவி. செம காண்டுல இருக்கேன் காலைல இருந்து எனக்கு தண்ணிய காட்டுறா கண்ணுலையே படாம. நான் என்ன அவளை அப்படியே முழுங்கவா போறேன்” என்றான் அவளை காணாத ஏக்கத்தில்

“ப்ச் ப்ச். இல்ல இல்ல அவ உன்னை பாக்கத்தானே காலையில இருந்து அவ்வளவு அலங்காரமும் பண்ணிக்கிட்டு இருந்தா” என்றவளை வியப்பாக பார்த்தவன், “என்னை பார்க்கவா அவ உன்கிட்ட சொன்னாளா!!!” என்றான அதை உண்மையா என்று அறிந்து கொள்ளும் ஆசையில்.

“அட என் உயிர் தோழனே. உன் கிட்ட நான் ஏன் பொய் சொல்லனும்!!! அவ உன்னை பார்க்கத்தான் காலைல இருந்து குறுக்கும் நெக்குமா விரலை கடிச்சிக்கிட்டு நடந்துட்டு இருந்தா. எனக்கு தெரியாதா அவ எப்போ என்ன நினைப்பான்னு.

இப்ப கூட அவ மாடிக்கு போனதை நான் பார்த்தேனே உன்னை பார்த்துட்டு தான் போறான்னு தானே நானா நெனச்சேன்” என்றிட, “அய்யோ கவி. கவிமா தேங்கஸ் டா” என்று அவளின் கைப்பிடித்து தன் சந்தோஷத்தை பகிர்ந்தவனை நக்கலாய் பார்த்தவள் “உன் தேங்கஸை இரண்டு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கூட சொல்லலாம்” என்றிட “சோ சாரி மா உன் ஆளுகிட்ட என்னால மிதி வாங்க முடியாது வேணும்னா நீ அவன் கிட்டயே கேட்டு வாங்கிக்க” என்று சொல்லும்போதே ஷீலாவையும் ராஜீவையும் அவளை நோக்கி அழைத்து வந்த கேஷவை பார்த்தவன் “உன் ஆளு உன்கிட்ட ஏதோ கேக்கனுமாம் சகல. என்னான்னு கேளு” என்றவன் விடு விடுவென மாடி ஏற,

திரு திருவென முழித்தவளை “என்ன பாரு” என்றிட “அது…… அது ஒன்னுமில்லை” என்றவளை சந்தேகமாக பார்க்க போகிற போக்கில் “சகல உன் ஆளுக்கு இரண்டு ஐஸ்கிரீம் வேணுமாம்” என்று சித்து கத்தி விட்டு செல்ல அவளை முறைத்துக்கொண்டு நின்றவனின் பார்வையை தவிர்க்கும் பொருட்டு தன்னை நோக்கி வந்து நின்றவர்களை வரவேற்கும் சாக்கை வைத்து “ஹேய் ஷீலா வா வா. ராஜு நீங்களும் வாங்க” என்று அவர்களை அழைத்து செல்வது போல் அவனிடம் இருந்து தப்பித்து சென்றாள்.

அவள் செய்கையில் புன்னகை அரும்பினாலும் அவள் அறியாமல் அதை மறைத்தவன் “சிக்காமையா போவ” என்று நினைத்தபடி அவள் மேல் ஒரு கண்ணை வைத்து பார்த்துக்கொண்டு இருந்தான்.

“என்னடி இரண்டு பேர்கிட்டயும் பேசலாம்னு பார்த்தா தனியா கூட்டிட்டு வந்துட்ட” என்று ஷீலா குறைபட

‘இவ வேற நேரம் காலம் புரியாம' என்று நினைத்தவள் “அவர்கிட்ட அப்புறம் பேசலாம் முதல்ல நீங்க வாங்க. வந்து உட்காருங்க” என்று அவர்களை அமரவைத்தவள் சிறிது நேரம் தானும் அவள் உடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.

ஷீலாவிற்கு இப்போது 3மாதம் அம்மா வீட்டிலும் சரி மாமியார் வீட்டிலும் சரி தாங்கு தாங்கென்று தாங்கி கொள்கின்றனர். ராஜீவின் தம்பியும் மேல்படிப்பிற்கு டெல்லி சென்றவிட. இப்போதெல்லாம் மாமியரின் கவனிப்பில் கொஞ்சம் பூசினாற்ப்போல் இருந்தாள் ஷீலா.

😍😍😍😍

மாடிக்கு சென்றவனோ மனம் கொய்த மாயக்காரியை தேடிக்கொண்டு இருந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான் கடைக்கோடியில் மாடியின் சுவற்றினை இருக்க பற்றியபடி ஊதா நிற பட்டு புடவை பாந்தமாய் உடலை தழுவி இருக்க தளர்வாய் பின்னலிட்ட ஜடையில் மல்லிகை குடியிருக்க திரும்பி நின்றிருந்தவளின் எழில் அவன் மனதை சிதறடித்தது.

தியாவின் அருகில் சென்றவனின் கைகள் அவளின் மென்கரத்தினை தொட அதிர்ந்து திரும்பியவளின் விழிகள் காட்டிய படபடப்பில் அவளின் பால் மொத்தமாய் விழுந்தான். சற்று நேரம் பேச்சற்ற அமைதி. அவள் அழகில் மெய்மறந்து அவளையே பார்த்த வண்ணம் இருந்தவன் உதடுகள் மெல்ல “வது” என்று அவள் உதடுகளை அளந்தது.

இயற்கையாய் உண்டான நாணத்தால் கண்மூடி நின்றவளின் கன்னம் அந்தி வனமாய் செம்மை நிறத்தை பூசிக்கொள்ள “வதுமா” என்றான் காதலாய் அதில் தன்னிலை அடைந்தவள். அவனை தள்ளி விட்டு திரும்பி நின்றுகொள்ள

“ஏய் என்ன புதுசா என்ன என்னமோ பண்ற???” என்று அவளை தன்புறம் திருப்ப

“ப்ளீஸ் சித்து இங்க இருந்துது போயேன்” என்று இறஞ்சுவது போல் பேச தியாவின் இந்த புது அவதாரத்தில் குழம்பி அவளையே பார்த்த வண்ணம் இருந்தான்.

அவன் பார்வை தன்னை துளைப்பதை அறிந்தவள் “போன்னு சொல்றேன்ல போடா” என்று அவனை தள்ளி விட

“ஏய் என்னடி கிட்ட வந்தா தள்ளிவிடுற. பாக்கமாட்டன்ற காலைல இருந்து ஆட்டம் காட்டுற???” என்று சற்றே குரலை உயர்த்த

“அது….. அது உன்னை பார்த்த என்னமோ படபடன்னு வருது. ஏன்ன புரியல காலையில இருந்து இப்படி தான் இருக்கு” என்றிட,

“அதுவா…. அது வந்து கிட்ட வாயேன் சொல்றேன்” என்று அவள் கைப்பிடித்து தன் அருகில் இழுத்தவனின் வேகத்தில் தள்ளாடி அவன் மீதே பூவாய் விழுந்தாள்.

அவன் நெஞ்சில சாய்ந்தபடி கண்மூடி இருந்தவளின் காதுகளுக்கு அவன் இதயத்தின் ரீங்காரம் இன்னிசையாய் இருந்தது.

இந்த ஆண்டு கல்லூரி படிப்பு முடிந்ததும் இருவரின் திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களின் திருமணத்திற்கு இன்னும் சில மாதங்களே இருக்கையில் ஒருசில நாட்களாக தியா மனதில் அவனை நினைத்து வந்த குறுகுறுப்பு இன்று சுத்தமாய் அவன் முகம் பார்க்க தவித்து போய்விட்டாள் பாவை...

அதிலும் இந்த புடவையை அவனை நினைத்தே கட்டி இருந்தாள் அவனை காண ஆசை கொண்ட மனது அவனை பார்க்க முடியாமல் ஓடி ஒளிந்து கொண்டது இப்போது அவன் மேலேயே சாய்ந்து இருந்தவளின் மனது ஏதோ ஒன்றை பெற்றது போன்ற சந்தோஷத்தை அனுபவித்தபடி அந்த நிமிடத்தை ரசித்து கொண்டு இருந்ததை

“அடபாவிகளா” என்ற கோபியின் வார்த்தைகள் நிகழ் உலகிற்கு கொண்டு வந்து இருவரும் விலகிவிட. பின்னாடியே வந்த உத்ரா “என்ன இன்னும் இங்கேயே ஷாக் அடிச்சா மாதிரி நிக்கறீங்க??? எங்கே சித்து அண்ணா??? அங்க மஞ்சு மா கூப்பிடுறாங்க. இன்னும் என்ன சிலை போல நிக்கிறிங்க???” என்றாள்.

மேலே வந்தவள் இருவரையும் பார்த்துவிட்டு “இங்கதான் இருக்குறீங்களா உங்கள மஞ்சு மா கூப்பிட்டாங்க” என்று கூறியவள் “தியா நீ இந்த சாரில செம அழகா இருக்க. இன்னைக்கு கல்யாணம் உனக்குன்னு சொன்னா கண்டிப்பா நம்புவாங்க அவ்வளவு கீயூட்டா இருக்க” என்று அவளுக்கு சான்றை வழங்க வெட்கம் கொண்ட தியாவோ அவர்களை தாண்டி கீழே இறங்க சின்ன சிரிப்போடு சித்துவும் அவள் பின்னையே இறங்கினான்.

இதில் பார்வையாளராய் இருந்த கோபி மட்டும் சிலைபோல் சமைந்து இருக்க உத்ராவின் உலுக்கலில் சுயம் பெற்றவன் தன் காதலியும் அதே போல் அணைக்க அவல் கொண்டு கையை எடுத்த செல்ல கோபியின் செல் அடிக்கவும் சரியாய் இருந்தது.

‘அதானே எனக்கும் மட்டும் ஏன்டா ஏண்டா இப்படி அமையுது. என்னமோ போடா எதுவும் நினைக்கிறாப்போல நடக்கல' என்று மனதாங்களுடன் அதை எடுத்து பார்க்க உத்ராவின் அண்ணன் தான். ‘மச்சான் நீயுமாடா. எனக்கு வில்லன்' என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு தன் காதலியை பார்க்க அவள் எப்பவோ கீழே இறங்கி இருந்தாள்.

😍😍😍😍😍

மேளதாள வாத்தியங்கள் முழுங்க பொன் வண்ண மஞ்சள் தாலியினை மதுவந்தியின் கழுத்தில் கட்டியவன் தன்னில் சரிபாதியாய் ஆக்கிக்கொள்ள இரு துளி நீர் அவன் கரங்களை நனைத்து சென்றது. பெண்ணவளின் பிறை நெற்றியிலும் வகுட்டிலும குங்குமத்தை சூடியவன் கரங்கள், அவள் விழிகளில் வழிந்த நீரை துடைத்து கண்களை மூடி அவள் கை பற்றி அழுத்தம் கொடுத்தவன் “இனி எதற்கும் உன் கண்கள் கலங்க கூடாது” என்று கண்டிப்பாய் கூறிவிட சிறு புன்னகையுடன் அதை ஏற்றவள் அக்னியை சுற்றி வந்து தன் மன்னவன் பொற்கரங்களால் மெட்டியினை அணிய கோவில் சிற்பென நின்றிருந்தவள் வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

எல்லா சடங்கும் சம்பிராதயங்களும் முடிந்து கோவில் சென்று வந்தவர்களுக்கு சிறிது ஓய்வுகொடுத்தவர்கள் இரவு வரவேற்புக்கு என வேலைத்தொடங்கி விட்டு இருந்தனர்.

மாலை 7 அந்த பெரிய மண்டபமே நட்சத்திர விலக்குளால் களைகட்டி இருந்தது விருந்தினர்களும் சொந்த பந்தங்களும் நட்பு வட்டாரங்களும் என ஆட்களுக்கு குறைவில்லாமல் வந்து கொண்டு இருந்தனர். கார்த்திக் மற்றும் சாருகேஷின் கவனிப்பில் அனைவரும் திருப்திகரமாக மணமக்களை வாழ்த்தி சென்று கொண்டு இருந்தனர். ரோஜ வண்ணத்தில் முழுக்க கற்கள் பதித்த லெகங்காவை அணிந்து இருந்த மதுவந்திக்கு இணையாய் கோட் சூட்டுடன் கம்பிரமாய் நின்றிருந்தான் ஜெய்ந்த். பார்க்கவே கொள்ளை அழகுடன் இருந்தவர்களை பெற்றவர்கள் கண் நிறைந்து மனம் நிறைந்து வாழ்த்திட தன் தங்கை மகளின் வாழ்க்கை இனியாவது எந்த வித இடையூரும் கஷ்டங்களும் இல்லாமல் இருக்க வேண்டும் என்று மானசீகமாய் வேண்டிக்கொண்டார் மதுவந்தியின் பெரியம்மா....

கிருபாவும் அருகில் வந்து அணைத்து தன் தங்கையின் கைகளில் ஒரு வைர மோதிரத்தை அணிவித்தவன், ஜெயந்திற்கும் அதே போல இன்னொன்றை அணிவித்து “நல்ல பாத்துக்கோங்க மாப்ள” என்றிட கிருபாவை அணைத்துக் கொண்டவன் “அவ இல்லாம நான் இல்ல மச்சான்” என்றிட்டான் ஜெயந்த். இனி அவள் வேறு நான் வேறு இல்லை என்பது போல் கூறிட மனதார கைக்குலுக்கி தன் மகிழ்ச்சியை வெளிபடுத்தினான்.

அவர்களுக்கு பக்கத்திலேயே சந்தன நிற டிசைனர் புடவையில் அங்காங்கே மரகதபச்சையில் கற்கள் பொறிக்கப்ட்டு உடலை அதிகம் உறுத்தாத டிசைனர் புடவையில் மெல்லிய ஒப்பனையுடன் பார்கவி நின்றிருக்க தன் மனைவிக்கு ஏற்றார்போல பச்சையில் சட்டையும் சந்தனநிற கோட் பேண்டையும் அணிந்திருந்த கேஷவ் இருவரும் சிரித்து பேசியபடி ஃபோட்டோக்களுக்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தனர்.

ராஜாராமன் ஆதி தம்பதியர் தங்கள் புதல்வர்கள் தம்பதிசமேதராய் காண மனதும் வயிறும் நிறைய வாயார வாழ்த்தி மனதார வேண்டிக் கொண்டனர். இதுபோலவே எப்போதும் சந்தோஷமும் நிம்மதியும அவர்கள் வாழ்வில் என்றும் நிறைந்து இருக்க வேண்டும் என

மாலை வரவேற்பிற்கு தன் அன்னை தந்தையுடன் வந்த சக்தியின் கண்கள் இப்போது அவசர தேடலில் ஈடுபட்டு இருந்தது. அவனின் தேடலை வீணாக்காமல் வந்தாள் ஸ்டெல்லா காலையில் பந்தமாய் உடலை தழவிய புடவையை அணிந்து வந்தவள் தற்போது நாகரீக உடையில் வந்திருந்தாள் கண்களை உறுத்தாமல் இருந்தது... தாய்தந்தையரிடம் அவளை காட்டியவன் அவர்களின் சம்மதத்திற்காக நிற்க பெற்றவர்களின் கண்களில் அவ்வளவு திருப்தி “அம்மா” என்றிட “நல்லா இருக்காப்பா. அவளுக்கு சம்மதம்னா எங்களுக்கு ஒரு அப்ஜக்ஷன் இல்ல” என்று தங்கள் சம்மதத்தை கொடுக்க அவர்களை அழைத்துக்கொண்டு மேடை ஏறியவன் மணமக்களை வாழ்த்திவிட்டு இறங்கிய நொடி அவளை நெருங்கி இருந்தான்.

“ஹாய் ஸ்டெல்லா” என்று அழைத்தவன் அருகில் இருந்த தாய் தந்தையரை அறிமுகப்படுத்தி வைத்தான். அழகாய் வணக்கம் சொன்னவளை அவருக்கு பிடித்துவிட “நீ ரொம்ப அழகா இருக்க மா” என்று பேசிக்கொண்டே அவளையும் அழைத்து சென்றுவிட்டார்.

தாய் அவளை தனியே அழைத்து சென்றுவிட, தந்தையை அவஸ்தையாய் பார்த்தவனை தோள்தட்டி சமாதானம் செய்தவர் “பயப்படாத இந்நேரம் அங்க அம்மா விஷயத்தை பேசி இருப்பா எப்படியும் வீட்டுக்கு போகறத்துக்குள்ள விடை கிடைச்சிடும்” என்று கூறிட இவனுக்கு தான் கொஞ்சம் பதட்டமாய் இருந்தது.

--------------------

Hi frienda ud ku rombha nall wait panna vechiten sorry sila personal problems ennala write panna mudiyala and edhu story yoda last part ethoda epilogue kudiya sekiram poturen ungaluku endha story pudichi irukumnu nambugiren thanks friends
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 65
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN