இறுதி பகுதி

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சரியாக ஒரு வருடத்திற்கு பிறகு..

புழல் சிறையில் தன் தந்தையை காண காத்துக்கொண்டு இருந்தாள் வர்ஷா. மகளையும் தன் பேரப்பிள்ளையையும் காணும் ஆவளில் விரைந்து வந்தவர் பேரனை கண்களால் நிறைத்துக்கொண்டு ஆசை மகளை பார்த்தார்.

முன்பு போல் எல்லாம் மிடுக்காக இல்லாமல் தளர்ந்து போய் இருந்தார் ஆளவந்தான். ஏதோ ஒன்று அவரை வாட்டியது இரண்டு மகள்களின் வாழ்க்கையும் ஒன்றுமில்லாமல் போயிற்றே என்ற கவலையும் கூடவே சேர்ந்து வாட்ட. தன் முன்னால் நின்றிருந்த மகளின் கையில் இருந்த பேரன் வாயில் கை வைத்து மழலை மொழியில் பிதற்றுவதையும் அவன் அழகையும் ரசித்தவர் "எப்படிடாம்மா இருக்க???" என்றார் தோய்வாக.

தந்தையின் கம்பீரம் மறைந்து தளர்ந்து இருக்க அவரை பார்க்க பாவமாய் இருந்தாலும் என்ன செய்வது தான் எதுவும் செய்ய முடியாமல் தடை செய்து வைத்து இருக்கிறாரே என்ற மனத்தாங்கல் இருந்தாலும் "நல்லா இருக்கேன் ப்பா" என்று கூறியவளின் குரலில் இருந்த கம்பீரமும் ஒரு நிமிர்வையும் அவரால் காண முடிந்தது.

தான் பணத்திற்காக நடத்திய பள்ளி கல்வி நிறுவனங்களை ஏற்று நடத்துபவள். இன்று அனைத்தையும் ஏழை மாணவமாணவியருக்கு குறைந்த கட்டணத்தில் நல்ல முறையில் நடத்தி வருவதும் சீராண ஒழுக்கத்திற்கும் கட்டுத்திட்டத்திற்கும் முன்னோடியாக இருக்கிறாள் என்று நினைக்கும் போதே பெருமையாக தான் இருந்தது அவருக்கு

தன் கையில் இருந்த கவரை அவரிடம் காட்டியவள் "இந்தாங்க ப்பா" என்று அவரிடம் கொடுக்க காவல் இருந்த போலீஸ் அதை ஆளவந்தானிடம் நீட்டினார். அதை வாங்கி பிரித்து படித்தவரின் முகமும் அகமும் மலர நிம்மதியிலும் சந்தோஷத்திலும் கண்கள் பணிக்க "ரொம்ப சந்தோஷம் டா" என்றார் தழுதழுத்த குரலில்.

"நீங்க வரீங்களா ப்பா. நான் ஜாமீனுக்கு அப்ளை பண்றேன்" என்றாள் ஆவளாக.

"இல்ல வேண்டாம்" என்று தலை ஆட்டியவர் "என் பொண்ணுங்க மனசு கஷ்டப்படுறா மாதிரி நான் எதுவும் பண்ண மாட்டேன். நான் இங்கேயே இருக்கேன்" என்றவரின் மனம் உள்ளுக்குள் வெம்பியது.

"அப்பா" என்றாள் தந்தையின் மனதறிந்து இந்த ஒரு வருடத்தில் எவ்வளவோ முறை அவள் பேசி பார்த்துவிட்டாள் ஜாமின் எடுப்பதற்கு அவர் 'நான் செய்த பாவத்திற்கு இதை அனுபவிச்சிதான் ஆகனும்' என்றதோடு வெளியே வர மறுத்துவிட, இப்போதும் அதையே கூறினார்.

அவரின் முகம் பார்த்தே நின்றாள். "இருக்கட்டும் டா. அவ முழுசா என்னை வெறுத்துட்டா. கொஞ்ச நஞ்சமா அவளுங்கு நான் பண்ணதுக்கு எல்லாம் இது சாதாரணம் டா. என் பொண்ணோட கண்ணு முன்னாடி போகவே உடம்பு கூசுது.... எனக்கு தைரியம் இல்லா டா. என் தப்பை உணர்ந்துட்டேன்" என்றவர் "நல்ல நாள் அதுவுமா என்னை பார்த்து சங்கடப்பட வேண்டாம் டா" என்றிட.

"சரி" என்று தானாய் தலையாடியது பெண்ணவளக்கு. "சரிப்பா உடம்பை பார்த்துக்கோங்க. நான் கிளம்புறேன்" என்று திரும்பிட.

செல்லும் தன் மகளை "அம்மாடி" என்று அவசரமாய் அழைத்தார்.

"என்னப்பா" என்று நின்றவளை.

"நீ ஏன்டா உன் முடிவை மாத்திக்க கூடாது!!!" என்றதும் புரியாமல் தந்தையின் முகம் பார்ததுக்கொண்டு இருந்தாள். மகளிடம் சொல்லிவிடும் நோக்கத்தில் "நீ இன்னொரு கல்யாணம்......" என்றிட அதை நிறுத்தியவள்

தந்தையை நேர்கொண்டு பார்த்து "இவன்.. இவன் மட்டும் போதும்" என்று கையில் இருந்த குழந்தை நவின்கிருஷ்ணாவை இறுக்கி நின்று "இவன் தான் என் வாழ்க்கை... என் எதிர்காலம்... என் மூச்சு எல்லாமே.. எந்த கெட்டவனோட உயிர் அணுவுல என் கருவுல உதிச்சானோ அந்த கீழ்தரமான நாய போல இல்லாம ஒழுக்கமான பண்பாடான பெண்களை மதிச்சி நடத்துற நல்ல மனுஷனா வளர்க்கிறது தான் நான் இந்த சமூகத்துக்கு நான் செய்ற நல்ல காரியம். தயவுசெய்து இதோடு இந்த பேச்சை விட்டுடுங்க" என்றவள் திரும்பி நடந்தாள்.

** ** ** ** ** **

தம்பதி சமேதமாய் வள்ளி தெய்வானையுடன் அருள் புரியும் சிங்காரவேலவன் திருக்கோயில். அழகே உருவாய் ஆறுமுக ஆண்டவன் தன் பண்ணிரு கரத்தால் அபயமளித்து ஆட்கொள்ள தெய்வ சந்நிதானத்தில் வண்ண மலர்களால் அமைத்த திருமண பந்தலில் மணகோலத்தில் வடிவாய் நின்றிருந்தாள் ஸ்டெல்லா.

பக்கத்தில் வேட்டிசட்டையுடன் மாப்பிள்ளையின் தோரணையுடன் பொருத்தமான ஜோடி என காண்போர் கண்படும்படி நின்றிருந்தான் சக்திவேல் இருவரும் கைக்கூப்பி வணங்கி மனையில் அமர சுற்றங்களும் நட்புகளும் சூழ அக்னியை சாட்சியாய் வைத்து வேதம் ஓத இருவரும் இல்லறம் என்னும் நல்லறத்தில் ஒருமித்த தம்பதிகளாய் மாறினர்.

ஜெயந்த் மதுவந்தியின் வரவேற்பின் போது தன் எண்ணத்தை வெளிப்படுத்திய போது அவஸ்தையிலும் படபடப்பிலும் இருந்தாலும் இதற்கு உடனே சம்மதம் கிடைத்து விடும் என்றெல்லாம் நினைக்கவில்லை. அன்னை தன்னைப் பற்றி சொல்லும் போது அவள் என்னமாதிரி தன்னை நினைப்பாள் என்றே படபடப்புடன் இருந்தான்.

எனினும் அவன் விடாப்பிடியான அன்பிற்கும் காத்திருப்பிற்கும் பலனாய் ஒருவருடம் அவனை நிராகரித்து தவிக்கவிட்டவளை கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழியை உண்மையாக்கிய பெருமை அவனையே சாரும். அவனின் ஒவ்வொரு அடியையும் தகர்த்து கதிர் தன் மனதில் எவ்வளவு பெரிய இடத்தை ஆக்கிரிமித்து இருக்கிறான் தெளிவுப்படுத்தியும் கூட இறந்தவனை நினைத்தும் அவள் காதலை நினைத்தும் பெரிதும் வருத்தம் கொண்டவன் எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்டு அவளை காண வராமல் இருக்க, எதையோ தொலைத்ததை போல உணர்ந்தாள். அவனை வேண்டாம் என்று வார்த்தையாக சொல்லவில்லை உள்ளார்ந்த கதிரின் மேல் இருந்த காதலாலும் தான் கூறி இருந்தாள். ஆனால் ஒரு வாரமாக அவன் வராமல் இருப்பதற்கான காரணம் தெரியாமல் இருந்தவள் தவறுதலாக நாளிதழின் மூலம் அவன் விபத்தைப் பற்றி தெரிந்துக்கொண்டாள்.

ஏதோ மனது உந்த அவனை அனுமதித்து இருந்த மருத்துவமனைக்கு விரைந்தாள். மனம் அடித்துக்கொண்டது. எவ்வளவோ இவள் மனம் மாற வேணடும் என பேசி இருக்கிறான் ஆனால் ஒரு தவறான பார்வை என்று இதுவரை அவன் கண்களில் கண்டதில்லை. கண்ணியமான அவன் நடவடிக்கை என்றும் அவளை கவர்ந்து தான் இருந்தது.

அரக்கபரக்க ஓடிவந்தவள் அறையின் வெளியே கண்ணிர் வடித்தபடி சோகமாய் அமர்ந்திருநத அவன் அன்னையை கண்டாள் "ஆண்ட்டி.... ஆண்ட்டி...... அவருக்கு..... சக்தி....." என்று திக்கித் திணறி கண்களில் நீர் திரள கேட்க, கண்கள் கலங்க உள்ளே கைகாட்டி கண்களை மூடிக்கொண்டார் ஏனோ அவர் அழுவதை மனம் கேளாமல் அவருக்கு என்று தவிப்பாய் சக்தியின் தந்தை வந்துவிட்டார். "உள்ளதான்மா இருக்கான்" என்று அவர் சொல்லும்போதே கண்கள் கலங்கியது போல் இருந்தது அவளுக்கு. "போய் பாரு" என்று கூறியவர் மனைவியினை அமரவைத்து சமாதானப்படுத்திக்கொண்டு இருந்தார்.

கைகள் நடுங்க கதவை திறந்தவள் குற்றுயிராய் இருந்த சக்தியை தான் கண்டாள். மறுநொடி ஓடிச்சென்று அவன் அருகில் நின்றவள் "ச... ச... சக்தி.. பாரு... பாரு சக்தி. என்னை பாரு" என்று அழுதவள் அவன் கைகளை பூவைப்போல் எடுத்தாள். அவன் சென்ற பைக் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாக, தலையில் அடிபட்டு கால் உடைந்த நிலையில் உடல் முழுவதும் அடியுடன் சுயநினைவு இல்லாமல் கோமாவில் படுத்திருந்தவனை காணக் காண அவளுக்கு இதயமே நின்றுவிடும் போல் இருந்தது. அவனை பார்க்க முடியாமல் கதறியவள் "சாரி.. சாரி சக்தி... சாரி என்னை மன்னிச்சிடுங்க. உங்க காதலை நான் ஏத்துக்குறேன். ப்ளீஸ் எனக்காகயாவது கண்ணை திறந்து என்னை பாருங்க. எப்பவும் சுத்தி சுத்தி வருவீங்களே இன்னைக்கு உங்கள பாக்க வந்து இருக்கேன். அய்யோ என்னால உங்கள இப்படி பாக்கமுடியலையே" என்று தவித்து துடித்து அழுதவளின் சத்தம் கேட்டு வந்த சக்தியின் தாய் அவளை அணைத்து ஆறுதல் தர "ஆண்ட்டி அவர வரசொல்லுங்க ஆண்டி. அவர் இல்லாமல் என்னால இருக்க முடியாதுன்னு சொல்லுங்க. அவர் லவ்வை புரிஞ்சிக்கிட்டேன் அவரை இப்படிபார்க்க முடியல" என்று கதற அவளின் நிலையறிந்து தேற்றினார்.

தினமும் அவனை காண வந்தாள் அவன் நினைவில்லாமல் படுத்திருந்தாலும் அவனுடன் பேச ஆரம்பித்தாள். அவன் கேட்கிறான் கேட்கவில்லை என்று எல்லாம் நினைக்கவில்லை. தான் அவனுடனே இருக்கிறோம் என்ற நிம்மதி மட்டும் அவள் முகத்தில் இருந்தது நாட்கள் பறந்தோட இரண்டு மாதங்களாக நினைவில்லாமல் இருந்தவனுக்கு மெல்ல மெல்ல கை கால்கள் அசைய கண்டாள்... மருத்துவரை அழைத்து கூற நல்ல முன்னேற்றம் என்று அவனை பரிசோதித்து விட்டு எப்போது வேண்டுமானாலும் சுயநினைவு திரும்ப வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கையை கொடுக்க அவள் தொடர்ந்து அவனுடனே இருக்க ஆரம்பித்தாள் கதிரின் அன்னைக்கு இதில் ஏக மகிழ்சசி எவ்வளவு சொல்லியும் கல்லாய் சமைந்திருந்த அவள் மனம் இன்று இன்னொரு ஜீவனுக்காக உயிர்கொண்டது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அவளின் விட முயறச்சியும் மருத்துவர்களின் பூரண கவனிப்பகல் இரீந்தவனுக்கு மெல்ல மெல்ல சுயநினைவு திரும்ப தன் கண்களையே தன்னால் நம்ப முடியாமல் சந்தோஷத்தில் திளைத்தான். உடல்நிலை பூரணகுணமாக அன்னை தந்தையின் முயற்சியிலும் நிச்சய நாளும் குறிக்கப்பட்டு இதோ இன்று திருமணமும் சுபமாய் நடந்தேறியது.

"அடடே வா... வா.... எவ்வளவு சீக்கிரமா வந்துட்டான்" என்று அருகில் வந்த கேஷவினை போட்டு தாக்கியபடி மனைவியிடம் சொல்லிக்கொண்டு இருந்தான் சக்தி.

"டேய் மாச்சான நான் கரெக்ட் டைமுக்கு வந்துட்டேன். நீ உன் ஆளை பார்த்த பார்வையில யார் வந்தா யார் போனான்னே உனக்கு தெரியல. இப்பதான் எங்கமேலயே பார்வை திரும்புது" என்றான் அவன் காலை வாரியபடி கேஷவ் அப்படி சொல்லவும் அவசரமாக தலைய குனிந்துக்கொண்டாள் ஸ்டெல்லா.

அவள் செயலை காதலாய் பார்த்த சக்தியின் சிந்தனையை "ம்கூம்" என்று தொண்டையை செருமி கலைத்த கேஷவை கவனித்த சக்தி தாங்கள் இருக்கும் இடம் உணர்ந்து "அப்புறம் மாப்ள எங்க பார்கவி???" என்று கேட்க.

"அவளா.... அதோ பாரு" என்று காட்ட தங்களது ஒன்றரை வயது குழந்தையான அம்ருதவர்ஷினிக்கு நீர் புகட்டி கொண்டிருந்தவளை காண்பித்தான்.

குழந்தை பிறந்து தாய்மையின் பூரிப்பில் இருந்தவள் இன்னும் அழகியாக இருந்தாள். பச்சை நிற மெல்லிய கரையிட்ட புடவை அளவான நகை மிதமான ஒப்பனை பூசினார் போல உடம்பு என அழகாய் இருந்தவளை காட்டியவன் வைத்த கண் வாங்காமல் தன் சகதர்மினியை பார்த்தபடி அவளின் நளினத்தையும் குழந்தையிடம் பேசி சிரிக்கும் அழகையும் ரசிக்க இங்கே மெல்லிய கனைப்பை நிகழ்த்தினான் சக்தி

"ஐயா என்ன சொன்னீங்க. நான் லுக் விடுறேனா!!! நான்லாம் இப்போதான்டா ஆரம்பிச்சி இருக்கேன் நீ ஒரு குழந்தைய ரிலீஸ் பண்ணி இப்பயும் ஆளை மூழுங்குறாமாதிரா பாக்கற!!!" என்று மனைவி அறியாதவாறு அவன் காதில் கிசுகிசுத்தவனை "தெய்வமே தெரியாம பாத்துட்டேன். இனி தெரிஞ்சாலும் கேட்கமாட்டேன்" என்று கூறிய கேஷவ் "இருடா அவள கூட்டிட்டு வர்றேன்" என்று கூறி மனைவியிடம் நகர்ந்தவன் குழந்தையை வாங்கிக் கொள்ள.

அவனுடன் எழுந்தவள் "மச்சி எனக்கு இன்னைக்காவது ஐஸ்கரீம் வாங்கி தருவியா???" என்றாள் ஏக்கமாக.

"இன்னும் ஆறுமாசத்துக்கு மேடம் கண்டதையும் நினைக்க கூடாது. அப்புறம் உனக்குதான் கஷ்டம்" என்றிட.

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவளை பார்க்க பாவமாகத்தான் இருந்தது. இருந்தும் என்ன செய்ய தங்களது மகளுக்கு தாய்பால் கொடுக்கும் வரையிலும் அவள் சாப்பிடாமல் இருப்பது தான் அவளுக்கும் நல்லது என்று நினைத்து அதற்கு தடை விதித்து இருந்தான்.

"மச்சி...." என்றாள் கெஞ்சலாக.

"ஒருமுறை நீ பட்டது ஞாபகம் இருக்கா பாரு???* என்றான்.

"அதுக்கு எப்பவும் அப்படியே நடக்குமா!!!" என்றாள் கொஞ்சம் காட்டமாக.

"ம். இதுக்கு நான் என்ன சொல்ல!!!" என்று சொல்லியவனுக்கோ மனைவியின் இந்த சின்ன ஆசையை தடுக்கிறோமே என்று பாவமாகத்தான் இருந்தது அவளை பார்க்க. ஒருமுறை அதை சாப்பிட்டு ஒரு வாரமாக குழந்தைக்கும் அவளுக்கும் மாற்றி மாற்றி உடல் நலம் சரியில்லாமல் போனதால் பால் கொடுக்கும் வரையிலும் அதை கொடுக்க வேண்டாம் என்று மருத்துவரின் அறிவுறுத்த இன்று மனைவியின் ஆசையை என்ன சொல்வது நொந்துகொள்வதை தவிர.

மணமக்களிடம் சென்று வாழ்த்தை கூறி அவர்களுக்குண்டான பரிசை கொடுத்தவர்தள் மாணிக்கம் ஒரு கேஸ் விஷயமா வெளியூர் சென்று உள்ளதால் அவரின் சார்பாகவும் பரிசை வாழங்கியவர்கள் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி இருந்தனர்.

காரில் ஏறியதிலிருந்து முகத்தை தூக்கி வைத்திருந்த பார்கவியின் செயல் அவனுக்கு சிறுபிள்ளையின் செயலாகவே தெரிந்தது. 'ஒரு ஐஸ்கீரிமூக்கு என்னமா சண்டை போட்டு மூஞ்சை தூக்கி வைச்சிக்குறா. நீ எல்லாம் ஒரு கம்பெனியோட மேனேஜர்ன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கடி ஆட்டோ பாம். வாய பாரு என்னமா என்னை வச்சி அரைக்குது' என்று அவளின் முணுமுணுப்பை வைத்து மனதில் நினைத்தவன் நேரே வீட்டிற்கு வந்திருந்தான்.

திருமணம் முடிந்து ஒருவருடத்திற்கு பிறகு தற்போது தான் பிள்ளை உண்டாகி நிறைமாதமாக இருந்தாள் மதுவந்தி. தாய்மை தந்த தேஜஸில் இன்னும் அழகாய் இருந்தவள் வாசலில் நடைப்பயின்று கொண்டு இருந்தாள். காரில் இருந்து இறங்கியவர்களை பார்த்தவள் "கல்யாணம் நல்லா நடந்ததா???" என்று கேட்க.

"ம்... பேஷ் பேஷ். நன்னா நடந்துச்சி" என்று விளம்பர பாணியில் கூறிய பார்கவி குழந்தையை எடுத்துக்கொண்டு மாடிக்கு செல்ல கவியின் நடவடிக்கையில் கோவமாய் இருப்பது தெரிய சைகையாலையே மச்சினனை என்ன வென்று கேட்டாள்.

அவளுக்கு தெரியாமல் காரில் மறைத்து வைத்திருந்த பேகை காட்டிட புரிந்தது என்பது போல் தலையை ஆட்டியவள் மறுபடியும் நடையை தொடர்ந்துகொண்டு இருக்க, இப்போது காட்டன் டாப்பும் அதற்கு ஜீன்ஸ் பேண்ட்டுடனும் கையில் லேப்டாப் சகிதம் படி இறங்கி வந்தவள் "அக்கா குழந்தை தூங்கறா. அத்தை ரூம்ல படுக்க வைச்சி இருக்கேன். நான் ஆஃபீஸ் கிளம்புறேன்" என்றவள் கணவனிடம் திரும்பி "நான் கிளம்புறேன்" என்று பார்த்தும் பார்க்கமலும் கூறி காரில் ஏறி சென்றுவிட்டாள்.

ஜெயந்தின் திருமணம் முடிந்ததுமே அலுவலக நிர்வாகத்தில் அவளை நகர்த்தி விட்ட கேஷவ், அதன் பிறகு தன் வைல்ட் லைஃப் போட்டோ ஷூட் எடுப்பதில் கவனத்தை பதித்து விட ஜெயந்தின் விடா பிடி முயற்சியில் அலுவலக பொறுப்பை ஏற்றாள் பார்கவி. குழந்தை பிறந்த மூன்றாம் மாதத்தில் இருந்து அலுவலகம் போய் வந்து கொண்டு இருக்கிறவளுக்கு. அங்கு விஷயம் ஒரளவுக்கு அத்துப்படியாகியது...

கவியின் கோபத்தில் அந்த இடமே சூடாய் மாறி பின் குளிர்ந்ததை போல் உணர்ந்தான் கேஷவ்.

"கேஷவ் வாங்கி வந்துட்டீங்க அவ கையில குடுக்கலாம்ல. எப்படி வருத்தமா போற பாருங்க" என்றாள் மது.

"அண்ணி அவளுக்கு சொன்னா புரியாது. விடுங்க அவள நான் பாத்துக்குறேன்" என்றவன், "நானும் கிளம்பனும் எனக்கும் ஷூட் இருக்கு" என்று கூறி அவனும் கிளம்பினான்.

அலுவலகம் முடிந்து வீடு வந்திருந்தவளுக்கு அலுவலகத்தில் நெட்டி முறுக்கிய வேலையில் ஐஸ்கிரீம் பற்றிய நினைப்பே இல்லாமல் போனது. செல்ல மகளுக்கு மாலை நேர உணவினை கொடுத்தவள் தோட்டத்தில் அவளுடன் விளையாடியபடி பார்கவியும் மதுவுந்தியும் அமர்ந்திருந்தனர்.

ஜெயந்தின் கார் வீட்டிற்குள் நுழைவதை பார்த்த மதுவந்தி எழுந்துகொள்ள பார்கவிக்கு வழக்கமான குறும்பு தலை தூக்கியது. "என்ன அக்கா உங்க லவ் வந்துடுச்சி போல" என்று கூறவும் மதுவிற்கு நாணம் வநது ஒட்டிக்கொள்ள, "உதை வாங்க போற வசமா உன் ஆளுகிட்ட" என்று கூறவும் "ஹா... ஹா.." என்று நகைத்தவள் "என் லவ்வுக்கு அணைக்க தெரியுமே தவிர அடிக்க தெரியாது" என்று கூறவும் "அடிப்பாவி" என்று வாயில் கை வைத்து கொள்வது இப்போது மதுவின் முறையானது.

பேசியபடி நின்றிருந்தவள் கணவன் காரிலிருந்து இறங்கவும் அவசரமாக அவன் அருகே செல்லவும் "மதுமா பாத்து. மெதுவா" என்றவன் "இவ்வளவு அவசரம் ஏன்டா???" என்றான் மனைவியின் கையை பிடித்துக்கொண்டே.

"அதுவா மாமா.. உங்கள பார்த்தும் அக்கா கால் தரையில நிக்கல. அதான் மான் கணக்கா அப்படியே துள்ளி துள்ளி ஒடி வர்றாங்க. என்னக்கா!!!" என்று ராகமாக கூறவும், "கொழுப்பு புடிச்சவடி நீ" என்று அவளை முறைத்த மதுவந்தி "இல்லங்க எப்பவும் போல தான நடந்து வந்தேன். அவதான் வேணும்னே கிண்டல் பண்றா" என்று அவள் மேல் குற்றப்பத்திரிக்கை வாசிக்க.

"எப்படி கேஷவ் தலைய பார்த்தும் கவி ஓடி வருவாளே. அதுபோலவா" என்று மனைவிக்கு சப்போர்ட் செய்ய "மாமா...." என்று செல்லமாக கடிந்து கொண்டவளை சிரிப்புடன் பார்த்தவர்கள் "ஓகே... ஓகே... சமாதானம்" என்றவன் அவள் அருகில் இருந்த அம்மிருவை தூக்கிக்கொண்டு "வாடா வாடா கண்ணம்மா. நாம உள்ளே போகலாம். உங்க அம்மா இப்போ பேபியா மாறிட்டாங்க" என்று குழந்தைக்கு சிரிப்புக்காட்டி கொஞ்சியவன் குழந்தையுடனும் மனைவியுடனும் உள்ளே சென்றான்.

தோட்டத்தில் இருந்த மல்லிக்கொடியில் வேறு மல்லிகைகள் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டு இருக்க அதுவரை அமைதியாக அமர்நதிருந்தவள் "சரி பூக்களையாவது பரித்து வைப்போம்" என்று நினைத்தவள் பூக்களை பறிக்க அடுத்த பக்கம் சென்றுவிட கணவன் சத்தமின்றி உள்ளே வந்ததை அறியாதவள் தன்வேலையில் மும்மரமாய் இருந்தாள். வரும்போதே அண்ணிக்கு ஃபோன் செய்து மனைவி இருக்கும் இடத்தினை தெரிந்து கொண்டவன் அவள் அறியாவண்ணம் பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். அவளுக்கு என்று வாங்கி வைத்திருந்த ஐஸ்கிரீம்களை எடுத்து தனது அறைக்குள் வைத்தவன் மீண்டும் வெளியே வந்து பைக்கை எடுத்து கேட்டிற்கு வெளியே சென்றவன் அப்போதுதான் வருவது போல பைக்கின் ஆக்ஸிலேட்டரை தன் மனைவி அறியும் படி முறுக்கோ முறுக்கென்று முறுக்கி உள்ளே வந்தான்.

அவனின் வண்டியின் சத்தத்தில் தோட்டத்தில் இருந்து வெளியே வந்தவள் கையில் மல்லி பூவை சுமந்தபடி நின்றிருந்தாள்.

சாதாரணமாய் அருகில் வந்தவன் அவள் கையில் பூவை பார்த்தவுடன் அதன் வாசத்தை உள் இழுத்து அவளை ஒருமாதிரியாக பார்த்தான் பின் ஏதோ சொல்ல வந்தவனாய் வாயை பசை போட்டது போல மூடிக்கொண்டவன் அமைதியாகி விட்டதும்

அவன் அமைதியையும் பார்வையையும் உணர்ந்தவள் அவனை குறுகுறுவென பார்த்தபடியே "என்ன" என்று புருவம் உயர்த்தி கேட்க.

"சும்மாடி.... சும்மாக்கூட பார்க்க கூடாதோ!!!" என்று தோளை குலுக்கி கொண்டவன் "என்ன கண்ணுடா அப்புடியே மூழ்கடிச்சிடுறா. ஒரு சர்பிரைஸ் கூட கொடுக்க முடியாது போல" என்று முனுமுனுத்தபடி வீட்டிற்குள் நுழைந்துவிட்டான் இன்னும் இருந்தால் என்னென்ன செய்திருப்பானோ!!!.

"ஆளு முழியே சரியில்லை ஏதோ திருட்டு தனம் பண்றாரா. என்னவா இருக்கும்!!! ஒரு மாதிரி பாக்குறாரு. டக்குன்னு அமைதி ஆகிட்டாரு கேட்டா சும்மான்னுட்டு போறாரு. சரியில்லை ...மச்சி வந்துக்கிட்டே இருக்கேன்.." என்று அவன் பின்னாடியே இவளும் செல்ல

கூடத்தில் அமர்ந்திருந்த ஆதி அவன் பின்னேயே சென்ற கவியை நிறுத்தி "அம்மிரு எங்க கவிமா???" என்றிட "மாமா வாங்கிட்டு போனாங்க அத்த" என்றிட்டாள்.

"ஓ.. சரிடா" என்றவர் "கவிமா ஒரு காஃபி தாடா" என்றிட, மாடி ஏறி செல்ல இருந்தவன் மனைவி கிழே தங்கி விட தானும் கீழே இருக்க எண்ணி அன்னையின் அருகில் வந்து அமர்ந்தவன் "பாரு எனக்கும் ஒரு காஃபி" என்றான்.

அன்னையிடம் திரும்பியவன் அன்றைய நாளின் கதைகளை வளவளத்தபடி அமர்ந்திருந்தான் காஃபியை கொண்டு வரும் அரவம் கேட்கவும், "மா மேல போய் ரெஃபிரெஷ் ஆகுறேன். பாருவ காஃபிய மேல கொண்டு வர சொல்லுங்க" என்று விறுவிறுவென மாடி ஏறி விட்டான்.

மருமகள் வரவும் அதை கூறி அவளை மேலே செல்ல சொன்னவர் கணவர் ராஜாராமன் வரவும் அவருடன் பேச்சில் இணைந்து கொண்டார்.

மேலே வந்தவளோ அறையில் அவன் இல்லாமல் போக குளியலறையில் இருப்பானோ என்று ஆழ்ந்து கவனித்து குளியலறையை பார்க்க அவன் அங்கே இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

'எங்க போய் இருப்பார்!!!' என்று யோசனையுன் திரும்பியவளின் பின்புறம் அவள் அருகிலேயே நின்றிருந்தவனின் மேலேயே மோத அவளை அப்படியே அணைத்துக் கொண்டான். "மச்சி என்ன விளையாட்டு இது ஒரு நிமிஷம் திக்குன்னு இருந்துச்சி" என்றவள் "என்ன ரொம்ப சந்தோஷமா இருக்க மாதிரி இருக்கு உங்க முகம்...!!! ரொமேன்ஸ்லாம் அதிகமா வருது" என்றாள் அவள் மீசையில் விளையாடியபடி.

அவளின் செப்பு இதழ் நோக்கி குனிந்தவன் "இது அடிக்கடி என்னை காந்தகம் மாதிரி இழுக்குதடி. அதான் இந்த விளையாட்டு" என்றுவிட்டு "சென்டிமீட்டர் ஸைசில இருந்துட்டு என்னமா பொறியுது" என்று அதை சிறை செய்தவன் விருப்பமே இன்றி அவளை விடுவித்தான்.

"உன் மச்சி எப்பவும் ரொமேன்டிக் தான். நீ தாங்க மாட்டியேன்னு தான் அடக்கி வாசிக்கிறேன்" என்று கண்ணடிக்க, கணவனின் காதல் பேச்சும் அவன் தந்த இதழொற்றலும் அவளை கவர்ந்திழுக்க விருப்பத்துடனே அவனின் மேல் சாய்ந்திருந்தவளுக்கு தான் கொண்டுவந்த காஃபியின் நினைவு வர அவனிடம் இருந்து விலகி அதை எடுத்து வர எழுந்தாள் இதுதான் நேரம் என்று அறிந்தவன் அவன் மறைத்து வைத்திருந்த ஐஸ்கீரிம்களை வெளியே எடுத்து பின்னாடி வைத்துக்கொண்டான்

அவள் அருகில் வந்து நின்றவள் "இந்தாங்க" என்று காஃபியை நீட்ட.

"இதை நான் வாங்கனும்னா நீ கண்ணை மூடி இந்த கையை நீட்டு" என்றான்.

"ப்ச் என்ன விளையாட்டு மச்சி காஃபி ஆறுது வாங்குங்க" என்றாள் சலிப்பாய்.

"சொல்றதை செய்யேன்" என்று மீண்டும் விடாப்பிடியாய் நிற்க "என்னவோ போங்க" என்று அதே சலிப்புடனே கையை நீட்டியவளின் கரத்தினில் சில்லென்று இருந்த ஐஸ்கீரிமை வைத்திட அதன் குளுமையில் இமைதிறந்தவள் அவனை வியப்பபுடன் நோக்கியபடியே "எனக்கா!!!!" என்றாள்.

அவள் முகபாவங்களை ரசித்தபடியே "ம்" என்று தலையாட்டியவனை "சாப்பிடவா???" என்று கேட்க அவள் தலையில் கை வைத்து ஆட்டியவன் "உனக்கு தான்டி சாப்பிடு" என்று சிரிப்புடனே சொல்ல அதன் மேல் இருந்த ஆசையில் இரண்டு வாய் வைத்தாள் அதன் பிறகு குழந்தை நினைப்பு வர "போதும் மச்சி என் ஆசைக்கு குழந்தை கஷ்டப்பட வேண்டாம்" என்று அதனை கீழே வைத்து விட.

"நீதானே சொன்ன ஒரு நாள் முடியாம போனா அதே போல எல்லா நாளும் ஆகுமான்னு. பாப்பாக்கு ஒன்னும் ஆகாது டா நீ சாப்பிடு" என்று அதை எடுத்து அவளுக்கு ஊட்டி விட ஆசையாகவே அவள் உண்ண, அவள் குழந்தைத்தனத்தில் மதிமயங்கிதான் போனான் அவள் காதல் கணவன். சந்தோஷமும் நிம்மதியும் ஒருங்கே நிறைந்திருந்தது அவன் சிரிப்பில்.

** ** ** ** ** **

தேவராஜின் தம்பி நிர்மலுக்கு அண்ணனின் பாராமுகம் அவனை அடியோடு புரட்டிபோட்டது. சொந்த ஊரில் அதுவும் தந்தையாக மதிக்கும் அண்ணன் முன்னால் வலம் வருவது அவனுக்கு மனசங்கடத்தையும் அவனின் ஒதுக்கம் மனவருத்தத்தையும் தர இனியும் இங்கிருக்க வேண்டாம் என்று முடிவு செய்தவன் நியூசிலாந்தில் விண்ணப்பித்து அங்கேயே மருத்துவம் பார்க்க சென்று விட்டான். உடன் பணிபுரியம் இந்தியா வம்சாவழியை சேர்ந்த பெண்ணை மணம் புரிந்தவன் என்றாவது ஒரு நாள் தன் அண்ணன் தன்னை மன்னிப்பான் என்ற நம்பிக்கையில் அங்கு வாழ்ந்து வந்தான்.

😎😎😎

உத்ரா காதலை சொல்லி கோபியை இன்ப கடலில் தள்ளியதில் இருந்து மூன்று மாத இடைவெளியில் ஒரு நல்ல சுபமுகூர்த்த நாளில் இருவரின் திருமணம் இனிதே நடக்க இப்போ அவர்களுக்கு ஹரி, ஹரன் எனும் இரட்டை பிள்ளைகள் பிறந்து ஆறு மாதங்கள் உருண்டோடி இருந்தது.

ஒரு நாள் இரவு குழந்தைகளை உறங்க வைத்திருந்தவள் தீவிர சிந்தனையில் பால்கனி சேரில் அமர்ந்திருக்க காற்றில் அசைந்தாடிய முடி கற்றைகள் அவள் பளிங்கு முகத்தில் படர்ந்து இரவின் குளுமையில் வானில் மின்னிய வெள்ளி நட்சத்திரைங்களை பார்த்திருந்தது கருவண்டு விழிகள்.

மனைவி நின்றிருந்த கோலம் அவள் மீது மையல் கொள்ள வைக்க, பாவையை பின்னிருந்து அணைத்தவன் "என்ன மேடம் சீரியஸ் திங்க்கிங்???" என்றான் மனைவியின் தோளில் முகம் புதைத்து கணவனின் செயலில் கூச்சம் வர தலையை லேசாக சாய்த்தவள் அவன் அருகாமையை அனுபவித்தபடியே "சாருவை பத்திதான் கோபி யோசிச்சிட்டு இருந்தேன்" என்றாள்.

'ஏன் பேபி அந்த சீவலப்பேரி பாண்டிக்கு என்ன ஆச்சு? ஏன் டீப் திங்க்கிங்???" என்றான் அவளை அணைத்து நின்றபடியே..

"சாரு கல்யாணம் பத்தி தான். காலைல கூட பேசினேன். பிடி கொடுக்கவே மாட்றான் அப்புறம் பாக்கலாம்னு சொல்றான். அவனை எப்படி ஒத்துக்க வைக்கறுதுன்னே தெரியல" என்றாள் கொஞ்சம் சோகமாக.

அவளின் முகவாட்டத்தை காணாத கோபியே "விதி வலியது மா யாரையும் விட்டு வைக்காது போல. ஏழரை எப்போ வரும்னு யாராலையும் சொல்ல முடியாது. இப்போ ஒரு ஜீவனோட லைஃப்ல விளையாட போகுதே" என்று சாருகேஷிற்காக கவலை பட.

ஒருகை முட்டியை அவன் வயிற்றில் பின்நோக்கி குத்திவிட, "ஆ... அம்மா" என்று வெடுக்கென விலகி நின்றவன் "ஏன்டி பிசாசே இப்படி குத்தின. இன்னும் கொஞ்சம் விட்டு இருந்தா சோலிய முடிச்சி இருப்ப போலவே" என்றான் வயிற்றில் கை வைத்தபடி.

இரு கோலிகுண்டு கண்களையும் உருட்டி அவனை முறைத்தவள் "என்ன சொன்னீங்க.. என்ன சொன்னிங்க.. இப்போ சொல்லுங்க" என்றாள் அதே கடுகடுவென முகத்தை வைத்தபடி.

"அது சீவல...ப்..பேரி.. என்னடா இவ இப்படி முறைக்குறா" என்று மனதில் நினைத்து பம்மியவன் "அய்யோ ஏய் இங்க பாரு" என்று அவளிடம் இருந்து விலகி சோஃபாவின் பின் நின்றவன் "நான் சொல்ல வர்றத முழுசா கேளுடீ. அப்புறமா என்ன பண்ணாலும் அக்செப்ட் பண்ணிக்கிறேன். அதுக்கு முன்னாடி வீணா ஒரு பாடிய பஞ்சர் ஆக்குன பாவம் உனக்கு வேண்டாம்" என்றவன் "அந்த கேரக்டர் மாதிரி பாடிபில்டர நல்ல ஹைட் வெய்ட் அன்ட் டிரிம்மா இருக்காரேன்னு மச்சானை சொன்னேன் அதை நீ சீரியசா எடுத்துக்கிட்டியா???" என்று அவளை சமாதானப்படுத்த முயல.

அவனை விடாமல் விரட்டியவள் "அதுக்கும் இருக்குடி மாப்ள உனக்கு. ஆனா அதுக்கு அப்புறம் என்ன சொன்னீங்க. விதி வலியது யாரையும் விட்டு வைக்காதுன்னு சொல்றீங்க. இப்போ அந்த விதி தான் உங்கள பாத்து கை கொட்டி சிரிக்க போகுது. உங்கள.... உங்கள....." என்று தலையனையை எடுத்து அவன் மேல் எறிந்தவள் "அப்புறம் என்ன.... அப்புறம் என்ன சொன்னீங்க!!!!" என்று கேட்க.

"அடியேய் அது ஏதோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன். அதையெல்லாமா ஞாபகம் வச்சி கேப்ப???" என்று கூறியவன் 'அய்யோ மறக்கமாட்டா போலயே. என்னடா சொன்ன கோபி. உனக்கு வாயில தான்டா ஏழரை இருக்கு' என்று நினைத்துக் கொண்டவன் "அய்யய்யோ ஏழரைன்னு சொல்லி இருந்தேனே. ஞாபகம் வந்து இருக்குமோ!!!" என்று பார்க்க கையில் அப்போதுதான் பெரிய ஜாடியை தூக்கி இருந்தாள் உத்ரா "அம்மா தாயே. தெரியாம சொல்லிட்டேன். மச்சானுக்கு கல்யாணம்ன்ற சந்தோஷத்துல கிண்டலா சொல்லிட்டேன். உன்னை நினைச்சி சொல்லுவேனா நீ என் செல்லாக்குட்டி ஆச்சே" என்று ஓடிச்சென்று அவளின் கைகளை பற்றிக்கொண்டவன் 'இந்த வாயால தான்டா இவ கிட்ட வாங்கி கட்டிக்கிற' என்று தனக்கு தானே திட்டிக்கொண்டவன் 'இனி சாப்பிடறத தவிற வேற எதுக்கும் வாயே துறக்க கூடாது' என்று மனதில் சபதம் ஏற்றவன் அவளை கொஞ்சி கெஞ்சி கையில் இருந்த ஜாடியை வாங்கி கீழே வைத்தவனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது. 'முதல்ல ஆபத்தான பொருள் எல்லாத்தையும் வெளியே எடுத்து போட்டுடனும். வெய்ட்டா மண்டை உடைஞ்சி ரத்தம் வராதமாரி இருக்கிற பொருள் வாங்கி வைக்கனும்' என்று வாயிக்குள் முனுமுனுக்க.

அவனின் கொஞ்சலிலும் கெஞ்சலிலும் கரைந்தவள் "ரொம்ப தான் போங்க. உங்களுக்கு நான் ஏழரையா???" என்று முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள.

"இங்க பாருடி உதி மா. அம்மு என் செல்ல பொண்டாட்டில. அது ஏதோ ஜாலிக்கு சொல்றது டா உன்னை கல்யாணம் பண்ண பிறகுதான் லைஃப்ல ஒரு திரில்லே வந்து இருக்கு. உன்னை கல்யாணம் பண்ண முடியாதோன்னு தவிச்ச போது உன்னை பார்த்துக்கிட்டேவாவது என் காலத்தை ஓட்டிடனும் நினைச்சவன் டா. இப்போதான் என் வாழ்க்கையே ஃபுல்ஃபில் ஆனா ஃபீல் பேபி மா" என்றான்

அவ்வாறு கோபி கூறியதும் கண்களில் நீர் துளிர்க்க அவன் நெஞ்சில் வாகாய் சாய்ந்துக் கொண்டவள் "சாரி சாரி கோபி. எனக்கு நீங்க சொன்னாதும் கோவம் வந்துடுச்சி" என்று அவனின் சட்டை பட்டனை திருகியடி சொல்ல.

அவளை மார்போடு அணைத்தவன் "ஹேய் விடு அம்மு நீ இப்படி எதையும் யோசிக்காம என்கூட எப்பவும் போல இருக்கறதுதான் எனக்கு புடிச்சி இருக்கு" என்றவன் "ஆனாலும் உங்க அண்ணன் திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா வாடான்னு கொடுக்குற எஃபக்ட்ட விட இது பெட்டர் பேபி" என்றிட

அண்ணனை சினிமா பாணியில் கூறியதும் களுக்கி சிரித்தவள் "நீங்க மாஸ்டர் பீஸ் கோபிமா. உங்கள மாதிரி யாரலையும் வர முடியாது" என்றவளின் ஆசை முகம் நோக்கி குனிந்தவன் அவனுக்கு தேவயானதை பெற்றுக்கொண்ட பிறகே அவளை விடுவித்தான். கஷ்டத்தையே சுமந்தவளுக்கு ஒவ்வொரு நாளையும் புதிதாய் உணர செய்து இருந்தான் கோபி. என்றும் அவள் வாழ்வின் இனிமை மட்டுமே அவளுக்கு திகட்ட திகட்ட கொடுத்துக்கொண்டு இருந்தான்.

** ** ** ** ** **

இங்கோ ஓராண்டு படிப்பு முடிந்து தற்போது தான் திருமணமாகி இருந்தது சித்து மற்றும் தியா தம்பதியருக்கு... தேன்நிலவிற்காக வெனிஸ் சென்றவர்கள் அங்கே தங்கள் இல்லறத்தை நல்லறமாக தொடங்கி இருந்தனர். பகலில் ஊரைசுற்றி அதன் அழகில் லயிப்பதும் இரவின் மடியில் தன் மனம் கவர்ந்தவளை தன்னுள் முகழ்கடித்து பல காதல் கவிதகளை எழுதுவதுமாக சென்றது அவர்களின் வாழ்க்கை. வெனிஸில் தேன்நிலவை முடித்து ஊர் திரும்பியவர்கள் இயல்பு வாழ்க்கையில் அடியெடுத்து வைத்து இருந்தனர்.

ஹோட்டலை விரிவுபடுத்தி தொழிலையும் நல்ல முறையில் நடத்தி வந்தான் சித்து. தந்தையின் தகப்பனாரை முழுதாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நிராகரிக்க முடியவில்லை. சொந்தங்கள் வேண்டும் என்று நினைப்பவனுக்கு அவரின் மேல் சிறு கோபம் மட்டுமே இருந்தது.

எப்போதும் போல ஒரு நாள் தனது காட்டேஜிற்கு கிளம்பி கொண்டிருந்த பொழுது தாத்தாவே அவர்களின் வீட்டிற்கு வர, முழுதாய் தங்களை ஏற்றுக்கொண்டதில் ராதா தம்பதியருக்கு அப்படி ஒரு ஆனந்தம். வந்தவரை வரவேற்று அமர வைத்து மகனும் மருமகளும் பேசி கொண்டு இருந்தாலும் அவருக்கு கண் எல்லாம் எதிரில் இருந்த சித்துவின் மேல் தான் இருந்தது.

'காலம் போன கடைசியில் கோபத்தை இழுத்து வைத்துக்கொண்டு என்ன எடுத்து செல்ல போகிறோம்... வெட்டி பந்தாவும் வரட்டு கௌரவமும் தனக்கு நெய்பந்தம் பிடிக்குமா...' மகன் மற்றும் மருமகளிடம் வாஞ்சையாய் பேசியவர் பேரப்பிள்ளை தன்னை ஏற்றுக்கொள்வதை ஏதோ தடுக்கிறது என்று உணர்ந்தவர் அவனை அருகே அமரவைத்து "உன் தகப்பனையும் தாயையும் நான் ஒதுக்கி வச்சதுக்கு என்னை நீ ஒதுக்கி வைக்க போறியா சித்து???" என்று தழுதழுத்த குரலில் வினவவும் தொண்டை அடைத்து பேச்சு வராமல் சிக்கி கொண்டது சித்துவிற்கு. தாத்தாவை பற்றி கேள்வி பட்டு இருக்கிறான் அவரின் ஆளுமையை செவி வழி செய்தியாக உள் வாங்கி இருக்கிறான் அப்பேற்பட்ட மனிதர் கலங்குவது கண்டு பேச்சு வராமல் அமர்ந்து இருந்தான்.

தன் கணவனின் நிலையை உணர்ந்திருந்த தியா சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு "தாத்தா அவர் உங்கள ஏத்துக்கலன்னு யார் சொன்னது!!! அங்க பாருங்க உங்களையே மிஷின்ல போட்டு ஜெராக்ஸ் எடுத்தா மாதிரி வந்திகருக்குறாரு. நீங்களே பேரேனே இல்லன்னு சொன்னாலும் யாரும் நம்ப மாட்டாங்க" என்று கூற மெல்லிய சிரிப்பலை அங்கே எழுந்தது. மனைவியின் செயலில் அவளை மெச்சிக் கொண்டு தன்னை சமன் படுத்தியவன் "எனக்கு கோவம் தான் என் தாத்தா இவ்வளவு பிடிவாதமா இருக்காரேன்னு சொந்த ஊரிலே இருந்தாலும் ஒருத்தரும் இல்லாம இருந்தது ஆதங்கம் தான்" என்று அவரை பார்த்தவன் அவரின் வருத்த முகத்தை கண்டு "இனியும் அப்படி இருக்க மாட்டேன் தாத்தா" என்றான் அவரின் கையை ஆதரவாய் பற்றி.

பேரனின் அன்பிலும் பேச்சிலும் நெகிழ்ந்தவரை கவனித்த தியா "தாத்தா என்ன இப்படியே தாத்தாவும் பேரனும் பேசிட்டு இருந்தா எப்படி இன்னைக்கே எல்லாம் பேசி முடிச்சிடலாம்னு நினைக்கறீங்களா!!! இன்னும் ஒரு மாசமாவது எங்களோட தங்கி இருக்கனும் ஆமா சொல்லிட்டேன். இப்போ சாப்பிடலாம் வாங்க உங்களுக்கு பிடிக்குமேன்னு அத்த இடியாப்பமும் குருமாவும் வைச்சி இருக்காங்க" என்றாள் சட்டமாக.

தியாவின் அதிரடி பேச்சில் ஆச்சரியம் கலந்த பார்வையை பார்த்தவர் "என் பேரனுக்கு ஏத்த பொண்ணுதான். அதிரடியாவும் பேசற, அன்பாவும் நடந்துக்கற. சீக்கிரமே உன்னைபோல சுட்டியா என் பேரனை போல அம்சமா எனக்கு ஒரு கொள்ளு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுத்துடுங்க. இவனுக்கு செய்யாததையெல்லாம் அவங்களுக்கு செஞ்சு பாக்கனும். அப்புறம் ஒரு மாசம் என்ன என் கட்டை கைலாசம் போற வரைக்கும் அதை கொஞ்சிக்கிட்டே என் சொச்ச காலத்தையும் இங்கயே கழிச்சிடுறேன்" என்று உணர்ச்சிகரமாய் கூற அங்கே பெருத்த அமைதி.

அந்த சுழ்நிலையை கொஞ்சம் சரிசெய்ய நினைத்தவள் "என்னை தேர்ந்தெடுத்த பெருமை எல்லாம் உங்க மருமகளையே சாரும்" என்று தன் அத்தையை கட்டிக்கொண்டவள் யாரும் அறியா வண்ணம் கணவனுக்கு கண்களால் தாத்தாவை கவனிக்குமாறு செய்தி சொல்ல,

அவனும் தட்டாமல் அவரை அமைதிபடுத்தியவன் "வாங்க சாப்பிடலாம்" என்று அழைத்து சென்றான்.

இரவு உணவை முடித்து தனிமையில் கண்மூடி படுத்து இருந்தவனுக்கு கொண்டுவந்த பாலை கொடுத்தவள். "என்னங்க அதுக்குள்ள வந்துட்டீங்க. கொஞ்ச நேரம் பேசி இருந்து இருக்கலாம்ல" என்றாள் அவன் அருகில் அமர்ந்து.

மெல்லியதாக அரும்பிய புன்னகையை சிந்தியவன் "ரொம்ப தேங்க்ஸ் டா" என்றான் அவளை பார்த்து.

"எதுக்கு இந்த தேங்க்ஸ்???" என்றாள் தலை சாய்த்து.

"தாத்தாவை இருக்க வச்சதுக்கு. மனசுக்குள்ள எனக்கும் அந்த எண்ணம் இருந்தாலும் ஏதோ ஒன்னு அதை தடுத்துச்சு. எங்க அம்மா அப்பாவை ஏத்துக்கல அவரை நான் ஏன் ஏத்துக்கனும்னு தான் வீம்புதான் என்னை அவர்கூட நெருங்க விடல. இன்னைக்கு நீ பண்ண விஷயத்தால எல்லாருமே சந்தோஷமா இருக்காங்க" என்றான்.

"அப்படியா. பார்த்தா தெரியலையே" என்றாள் அவனை பார்த்து.

"இல்லடா. இப்போதான் நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருக்கு. அம்மா முகத்தை பார்த்தல அவருக்கு என்ன புடிக்கும்னு பார்த்து பார்த்து செய்றாங்க. எவ்வளவு மிஸ் பண்ணி இருக்காங்க" என்றான்.

"அதுக்குதான் இப்போ பண்றாங்களே மாமா.. நீங்களும் அவரோட சகஜமா பேசுங்க சரியா. இந்த முகத்தை தூக்கி வைச்சிக்கிற பழக்கத்தை விடுங்க" என்றாள் கேலியாக.

"சரிம்மா தாயே அப்படியே செய்றேன். தாத்தா ஏதோ ஆசையா உன்கிட்ட கேட்டாரே அதுக்கு இப்போவே முயற்சி பண்ணி தான் டா பத்தாவது மாசத்துல அவர் கையில் அவர் கேட்ட கிஃப்ட கொடுக்க முடியும்" என்று அவளை நெருங்கிட.

"அதானே எங்க சுத்தினாலும் பேச்சு இங்க தான் வரும்னு தெரியும்" என்றவளின் குரல் காற்றில் கரைந்து அவன் காதுகளுக்கே கேட்காமல் போனது அவன் லீலைகளில். காதல் மனைவியின் ஒவ்வொரு செயலும் அவனை அவள் மேல் பித்தாக்கியது.

மேலும் சில வருடங்கள் கழித்து.

"தியா நீ கிளம்பிட்டியா. இன்னும் என்னதான் பண்றியோ???" என்றபடி உள்ளே வந்தான் அவள் சித்து

வந்தவன் அவள் இருந்த நிலையை கண்டு பக்கென்று சிரித்து விட.

அவனை முறைத்தவள் "போதும் உங்க பையன் லீலைய பாத்து பூரிச்சி போய் சிரிக்கறது" என்று முகவாயை தோள்களில் இடித்தவள் "இனி தான் நான் கிளம்பனும். எப்படி நனைச்சி வச்சி இருக்கான் பாருங்க. அவனுக்கு பவுடர் போட்டா எனக்கும் போடுறான். எப்படி பண்ணி இருக்கான் பாருங்க" என்று அவனை குற்றம் சாட்டியப்படியே தன் 3 வயது தவப்புதல்வன் மிதுனை தூக்கி அவன் கைகளில் திணித்தவள் தனக்கு தேவையான துணிகளை எடுத்து வைத்தபடி இருந்தாள்.

மனைவியின் கோபத்தை ரசித்தவண்ணம் பிள்ளையை கொண்டு சென்று தாயிடம் விட்டவன் "இதோ வந்துடுறேன் மா" என்று தனது அறைக்கு விரைந்தான். இன்னும் தனக்கு தேவையானவைகளை எடுத்த வைத்தபடி இருந்தவளின் முன்னே வந்து நின்றவன். அவள் முகத்தில் விரல்களால் கோலம் வரைந்திட "ப்ச் கையை எடுங்க" என்று தட்டியவள் "முதல்ல மிதுன் இப்போ நீங்களா. நான் எப்போதான் கிளம்பறது காலையிலையே இரண்டு முறை ஃபோன் பண்ணிட்டா கவி. இதுக்கு மேல நான் லேட் பண்ணேன் வாசல்லயே நிக்க வைச்சி தொலைச்சிடுவா" என்று கடுகடுத்தவளை அணைத்தவன் அவள் காதுமடல்களில் தன் இதழ்களால் உரசி "செம அழகா இருக்கடி" என்று கிறக்கமாக கூறிட, அவனையே கண்கொட்டாமல் பார்த்த தியாவின் கன்னத்தில் முத்தம் வைத்து விலகி "சீக்கிரம் வந்துடு" என்று கூறி வெளியே சென்றான்.

சிறிது நேரத்தில் ஊட்டியிலிருந்து கிளம்பியவர்களின் வாகனம் கோயம்பத்துரை நோக்கி பயணமானது.

பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த வீடே விழா கோலம் கொண்டது போல காட்சியளித்து, ரஷ்யா, சைனா, சௌத்ஆஃப்ரிக்கா, இந்தியா என்று முப்பதுக்கும் மேற்பட்ட பல நாடுகள் பங்கேற்ற வைல்ட் லைஃப் ஃபோட்டோக்ராஃபி போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற கேஷவிற்கு கோயம்புத்தூர் வாழ்மக்கள் சார்பில் பாராட்டு விழா ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது. ராஜாராமன் உள்ளம் மகனை நினைத்து பூரித்து போய் இருந்தது. தான் தவறாக நினைத்து மகனை கண்டித்தது எல்லாம் அவ்வளவு பெரிய மடத்தனம் என்று எண்ணி இருந்தார்.

அவரின் எண்ணம் முகத்திலும் தெரிய சோஃபாவில் அமர்ந்த வண்ணம் சிந்தனையில் இருந்தார். மதுவும் ஆதியும் கோவிலுக்கு சென்றிட வீட்டில் வேலை இருப்பதாக கூறி வீட்டில் இருந்தவள் வேலை அதிகமாக இருப்பதால் தன் இளைய மகன் சரணை மாமனாரிடம் விட வந்தவள் அவரின் வாடிய முகம் பார்த்து "என்ன மாமா உடம்புக்கு ஏதாவது பண்ணுதா???" என்று கேட்டிட.

"ஒன்னும் இல்லமா இது பழைய நினைப்புல வந்தது" என்று முகத்தை சாதாரணமாக வைத்து கொள்ள முனைந்தவர் "வா டா கண்ணா" என்று பேரனை வாங்கி கொண்டவரின் முகம் மறுபடியும் பழைய நிலைக்கு திரும்பிட.

சிந்தனையாய் அவரை பார்த்தாள் "என்கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க மாமா" என்று அவரை ஊக்கிட.

"எல்லாம் உன் புருஷனை பத்தி தான்மா நினைச்சிட்டு இருந்தேன். அவனை எவ்வளவு திட்டி இருக்கேன் தெரியுமா!!!. உன் அத்த தான் எல்லாத்துக்கும் அவனுக்கு துணையா நின்னா. அவன் தப்பே செய்து இருந்தாலும் அதிலும் நியாயம் இருக்குன்னு பார்த்தா. ஆனா நான் அவன் சரியே செய்தாலும் அவன் மேல இருந்த கோவத்தால் தப்பா தான் பார்த்து இருக்கேன். உத்ரா விஷயத்துல கூட முதல்ல மோசமாத்தான் நடந்துக்கிட்டேன் அவன்கிட்ட. எவ்வளவு கஷ்டப்பட்டுட்டான். அதுவும் இந்த ஃபோட்டோகிராஃப் ஒரு தொழிலா எடுத்துகிட்டது எனக்கு சுத்தமா பிடிக்கல ஆனா இது எல்லாத்துலையும் அவன் சாதிச்சிட்டான். எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா. ஆனா அவனை எவ்வளவு நோகடிச்சி இருக்கேன்னு நினைக்கும் போது தான் என்னை என்னாலேயே மன்னிக்க முடியல" என்று கூறியவரின் கீழே மண்டியிட்டு அமர்நதவள்.

"மாமா எல்லா தகப்பனாரும் செய்யறதை தான் நீங்க செய்து இருக்கீங்க. படிப்புக்கு இடம் கொடுத்த நீங்க அவர் எப்படி இருக்கும்னு ஆசை வைச்சி இருப்பீங்கல. அதுதான் கோவமா வெளிப்பட்டு இருக்கு. நாளடைவில் அதுவே கொஞ்சம் பெருசு அவர் மேல ஒரு அதிருப்தியை கொடுத்திருக்கு மத்தபடி நீங்க ஒன்னும் அவருக்கு எதிரி இல்லையே. உங்கள நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்திக்கறீங்க???" என்றாள் அவருக்கு தெளிவிக்கும் நோக்கில்.

மருமகளின் கூற்றில் சற்று தெளிந்தாலும் இன்னும் முழுமையாக தெளிவில்லாத முகத்தை பார்த்தவள், "மாமா நீங்க போய் உங்க மகன் கிட்ட மனசு விட்டு பேசுங்க. எல்லாம் சரியாகிடும். என்னை விட அவர் உங்களை நல்லா புரிஞ்சி வச்சிருக்கார். அவரோட ஹீரோ நீங்கதான் என் அப்பா போல வருமான்னு பாட்டு பாடுற அளவுக்கு உங்களை வச்சி இருக்கார்" என்றிட அவருக்கும் புன்னகை அரும்பி "கவிமா" என்று போலியாக மிரட்டினார்.

"அது.. பழைய மிலிட்டரி மேன் வந்தாச்சு" என்று கூறியவள் தன் வேலைகளை கவனிக்க சென்றுவிட்டாள். கணவனுக்கு தெரியாமல் சிலபல வேலைகளை செய்தவள் கேஷவ் அறைக்கு வருவதற்கு முன் பக்கத்து அறையில் அவனுடைய பொருட்களை வைத்துவிட்டு அறையை பூட்டி விட்டாள்.

"பாரு.. பார்கவி ரூம் சாவி எங்கமா??" என்று கேஷவ் கேட்க.

"மச்சி அம்ருவோட ஸ்கூல் ப்ராஜெக்ட் உள்ள இருக்கு. அருண் அதை எடுத்து கலச்சிடுறான் நாளைக்கு வரையும் தான் பாதுகாக்கனும். இந்த ரூம் யூஸ் பண்ணிக்கோங்க" என்றிட அவனுக்கு ஏதுவும் விகல்பமாய தோன்றாமல் "சரி" என்றவன் அடுத்து அறைக்கு சென்று மாலை விழாவிற்கு தயாராகி வந்தான். அடர் சாம்பல் நிற சட்டையும் அதற்கேற்ற வெள்ளை கோட் மற்றும் பேண்டை அணிந்து இருந்தவன் அலைபாய்ந்த கேசத்துடன் படியிறங்கும் அழகில் சொக்கித்தான் போனாள் அவன் மனையாள்.

அழகான டிசைனர் புடவை உடலை தழுவி இருக்க அம்ருதாவையும் அருணையும் தயார் செய்திருந்த பார்கவி கேஷவுடன் காரில் அமர, மதுவந்தி ஜெயந்த் தன் மகன் அரவிந்துடன் அடுத்த காரில் அமர்ந்தனர். அதற்கு அடுத்ததாய் ராஜாராமனும் ஆதியும் ஜெயந்துடன் கிளம்பி இருந்தனர்.

தாய் வீட்டிற்கு வந்த தியா, அன்னை தந்தையுடன் சித்துவை அழைத்துக்கொண்டு விழா நடக்கும் இடத்திற்கு வந்துட்டாள். அனைவரும் இருக்கையில் அமர்ந்து இருக்க, சக்தி தன் மனைவி ஸ்டெல்லா மற்றும் மகன் வினய் உடன் அமர்ந்திருந்தான்.

கோபி மற்றும் உத்ரா தன் இரு மகன்கள் ஹரி, ஹரனுடனும் சாருகேஷ் அவன் சகதர்மினி உமையாள் மற்றும் மகள் யாழிசை உடன் அமர்ந்திருந்தனர்.

கேஷவினை வாழ்த்தி அன்றைய தின முக்கியஸ்தர்களும் தொழிலதிபர்களும் பேசிய வண்ணம் இருந்தனர் இறுதியாய் அவனுக்கு மாலை அணிவித்து கௌரவ விருதையும் வழங்கியவர்கள் விழாவை இனிதே நிறைவு செய்து இருந்தனர்.

சிரித்து பேசி மகிழ்ந்து பொழுதை கழித்து இனிமையான நினைவுகளை சுமந்த வண்ணம் பயணம் செய்தனர். வரும் வழியில் குழந்தைகள உறங்கிவிட தூங்கிக்கொண்டு படியேறிய கேஷவையும் கவியையும் "அவங்கதான் தூங்கிட்டாங்கல பா. வா என் அறையில் படுக்க வை" என்று ஆதி கூற "அம்மா சின்னவன் எழுந்து உங்களை தொல்ல பண்ணிட்டா!!! எங்க கூடவே இருக்கட்டும்" என்றிட.

"நான் பாத்துக்குறேன்" என்றவர் "மதுமா நீயும் அரவிந்தை படுக்க வை" என்று அறையை காட்டினார். "சரிங்க அத்தை" என்று கூறியவள் குழந்தையைப் படுக்க வைத்துவிட்டு அறைக்கு சென்று விட்டாள்.

முதலில் அறைக்கு சென்ற பார்கவி விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு விட்டு இருக்க, மூடிய அறைக்கதவை திறந்த கேஷவிற்கு எதிர்பாராத பரிசாய் "மை லவ்" என்று எழுதி "வாழ்த்துக்கள்" என்ற சுடர்மணிகள் ஓளிவிட மெழுகு வத்தியை எற்றி வைத்தவள் அறை முழுவதும் தங்களுடைய வாழ்நாள் புகைப்படங்களை பெரிதுசெய்து மாட்டி இருந்தாள். மலர்களால் அலங்கரித்து இருந்த மேடையில் இருந்த கேக்கை அவன் முன் வைத்தவள் "ம்ம். கட் பண்ணுங்க" என்றிட இனிய அதிர்வுகளில் சிக்குண்டு இருந்தவன் அவளையே பார்க்க "மச்சி ம் வெட்டுங்க" என்றிட அவளை பார்த்தபடியே வெட்டியவன் அவளுக்கு ஊட்டி விட இன்னொரு துண்டை எடுத்து கணவனுக்கு ஊட்டினாள்.

அவளையே இமைக்காமல் பார்த்து இருந்தான். அழகாய் கன்னம் குழைய சிரித்தவளை கைகளில் ஏந்தியவன் தன்னோடு அணைத்துக்கொள்ள அவள் கழுத்தை சுற்றி மாலையாய் கோர்த்த கரங்களால் அவன் முகத்தினை அருகில் இழுத்து மூக்கோடு மூக்கை உரசினாள்.

"அயம் சோ சோ ஹேப்பிடா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" என்று உணர்ச்சியை வெளிப்படுத்தி அவள் முன் உச்சியில் முத்தம் வைக்க.

"இது என்னோட எத்தனை வருஷ ஆசை தெரியுமா. உங்களுக்கு இதுபோல சர்பிரைஸ் பண்ணனும்னு" என்றவளை ஆழ பார்த்தவனின் கண்களை மூடியவள்.

"அப்படி பாக்காதீங்க. சொல்ல வந்ததும் வரமாட்டிங்குது. உங்க கண்ணு என்னமோ கதை பேசுது" என்றவள் "முதல் முறை நீங்க இந்த அவார்டை வாங்கும் போதே கொடுக்க இருந்த சர்பிரைஸ் இது. ஆனா அன்னைக்கு என்னன்னமோ நடந்துடுச்சி அதை நினைச்சி நான் வருந்தாத நாளே இல்ல. இன்னைக்கு தான் என் பிராத்தனைக்கு பலன் கிடைச்சி இருக்கு மச்சி" என்று மூடிய அவள் கைகளை விடுவித்தாள்.

திறந்த அவன் கண்களில் பெண்ணவளின் மேல் கொண்ட காதல் மேலும் கூடியது முதலில் அவளை சந்தித்த காலத்தில் அவள் மேல காரணம் இல்லாமலே கோபம் வந்தது அவளுக்கு திருமணம் என்றதும் பாரம் ஏறிய மனது, அவளின் கரம் பிடித்து கல்யாணம் செய்து கொண்டதில் நிம்மதி கொண்டதும், ஊடல் முதல் கூடல் வரை அவளுடனான பயணங்களை மனக்கண் முன் கொண்டு வந்தவன் "எனக்கு தெரியாமலையே என்னை மாத்தின மாயக்காரி டா. நீ மட்டும் என் வாழ்க்கையில வரலன்னா இது எதுவுமே எனக்கு சாத்தியம் இல்லடா. ஐ லவ் யூ பாரு மா" என்று அவள் கண்மணிகளில் தன் அச்சாரத்தை பதித்தவனின் காதல் கண்களில் புகுந்து இதயம் நுழைந்து அவளை ஆசையாய் பார்த்தவன் அதன் பிறகு பாவையை பேச விடவே இல்லை. கொலுசொலியும் கைவலையும் இனிய சங்கிதம் இசைக்க இனிய இல்லறத்தை தெடங்கி இருந்தான்.

இன்று போல் என்றும் அவர்கள் வாழ்வு சிறக்க நாமும் வாழ்த்தி விடுபெறுவோம்.

சுபம்.

ஹாய் நண்பர்களே உங்களை எல்லாம் வெகு நாள் காக்கா வைச்சி இந்த கதையை முடிச்சி இருக்கேன் என்மேல செம காண்டுல தான் இருப்பிங்க தெரியும்.... ஆனா பாருங்க எனக்கு உங்களோட கருத்தை கேட்காம இருக்க முடியல திட்டியாவது உங்களோட மனசுல இந்த கதைய பத்தி இருக்கும் கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்குறேன்.

நன்றி நன்றி நன்றி
 

Author: Bhagi
Article Title: இறுதி பகுதி
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
N

Naveena

Guest
Hi sagi. Story semma. Keshav kavi pair really awesome rendu perum romba cute. Ethir paaratha thirumanam rendu perukum but sweet couples 😍💜. Ella pair yum spr. No words to describe ur story😍💖. All the best for your next stories 👍.
 
OP
Bhagi

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Hi sagi. Story semma. Keshav kavi pair really awesome rendu perum romba cute. Ethir paaratha thirumanam rendu perukum but sweet couples 😍💜. Ella pair yum spr. No words to describe ur story😍💖. All the best for your next stories 👍.
thank you so much sagi unga comments parthu rombha santhosam
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN