ஈரவிழிகள் 5

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
படிக்கும் காலத்தின் போதே... பெண்ணைப் பாரு டா என்றால் மண்ணைப் பார்த்து நடப்பவன் குமரன். அப்படிப் பட்ட அவன் மேல் இன்று ஒரு பெண் வைத்திருக்கும் குற்றச்சாட்டு பெரியது. வெளியூரில் மட்டுமில்லை உள்ளூரில் கூட பெண்களிடம் அவனின் நடவடிக்கைகள் கண்ணியமாகத் தான் இருக்கும்.

அது தாயாய் வளர்த்த மீனாட்சியின் வளர்ப்பு அப்படி. அதுவும் இல்லாமல்... விவரம் தெரிந்த பிறகு தன் தந்தையின் போக்கைப் பார்த்தவனுக்கு... அவரை மாதிரி நடத்தையில் பெயர் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவன் அவன். ஆனால் அப்படிப் பட்டவனின் மேல் இன்று களங்கத்தை சுமத்துகிறாள் யாரோ ஒரு பெண்.

அதுவும் குழந்தையோடு... அந்த குழந்தை தற்போது அவன் காலைக் கட்டிக்கொண்டு.. “ப்பா... ப்பா...” என்ற அழைப்புடன் தூக்கச் சொல்லி... தன் இரு கைகளையும் அவனை நோக்கி உயர்த்தவும்... சுத்தமாக அதிர்ந்தே போனான் குமரன். அந்த அதிர்ச்சி அப்பட்டமாய் அவன் முகத்தில் தெரிந்தது.

அவன் தூக்கவில்லை என்றதும் குழந்தை இன்னும் வீறிட்டு அழுதது. அதில் தன் அதிர்ச்சியிலிருந்து தெளிந்தவன், “ஏய்... இந்தா முதலில் உன் பிள்ளையத் தூக்கு...” இவன் கர்ஜிக்க

அவன் கர்ஜனையில் பால் புட்டியைத் தேடிக் கொண்டிருந்தவளுக்கே தூக்கி வாரிப் போட்டது என்றால்... அவன் காலைக் கட்டிக் கொண்டிருந்த குழந்தை எல்லாம் எம்மாத்திரம்... குழந்தையின் உடல் குலுங்கவும்.. தாவிச் சென்று குழந்தையைத் தூக்கி பெண்ணவளிடம் தந்தார் முதலில் பேசிய போலீஸ் அதிகாரி.

“என்ன.. உன் கூட சேர்ந்து உன் பிள்ளையையும் நடிக்க வைக்கிறியா?” கேட்டது குமரனே தான்.

“அது எப்டி பச்ச குழந்தைய நடிக்க வெக்க முடியும் அப்பு?” குரலில் சிறு நையாண்டியுடன் இப்படி கேட்டது முத்தரசி தான்.

கார்மேகம், குமரன் பிரச்சனை செய்வதாகச் சொல்லி.. முத்தரசியையும்... தங்கராசுவையும் சிறிது நேரம் கோவில் சந்நிதானத்தில் இருக்கச் சொல்ல... வேறு வழியில்லாமல் சென்ற இருவரும்... தற்போது போலீசைப் பார்க்கவும்.. அவர்கள் பின்னே உள்ளே வந்து விட்டார்கள்.

முத்தரசியின் குரலில்.. ‘எல்லாம் இந்த நாய்ங்களோட வேலையா தான் இருக்கும்’ மனதிற்குள் கடுகடுத்த குமரன்,
“என்ன.. விட்டா பொய்யா அடுக்கிகிட்டே போற... யாரு உன்னைய வாடகைக்கு எடுத்து வச்சா? நானா?.. எங்க எந்த இடத்திலே யார் கிட்ட பேசி குடுத்தனம் வச்சேன்.. அந்த ஆள கூட்டிகிட்டு வா...” வந்தவளிடம் கேள்வி கேட்டான்

“அது எப்படி மச்சான் வருவாங்க? நீங்க பண்ண கூத்த சொன்னதும்... உங்க குடும்ப சங்காத்தமே வேணாம்னு சொல்லி என்னையும்... பட்டுகுட்டியையும் வெளியே தள்ளி இல்ல வீட்டைப் பூட்டிகிட்டாங்க.. இதுல சாட்சிக்கு வேற வருவாங்களாக்கும்...”

இதுவரை வாயே திறக்காமல் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மணப்பெண்ணின் தந்தை, “நான் மதுரக்காரன் தான். எங்க.. அந்த பத்திரத்தை என் கிட்ட குடுங்க நான் பாக்கறேன்...” என்றவர்.. பத்திரத்தைப் பார்த்து விட்டு, “இவர எனக்கு தெரியும் நல்ல மனுஷன்... இருங்க இவர் கிட்ட நானே போன்ல பேசறேன்....” என்றவர்.... அதன்படியே அந்த வீட்டு உரிமையாளருக்கு அழைத்துப் பேசியவர்... ஒரு உஷ்ண மூச்சுடன்...

“என்ன கார்மேகம் இதெல்லாம்... இது தான் உன் மகனோட லட்சணமா... இதனால தான் இவன் என் மகளை பொண்ணு பாக்க கூட வரலையா... பேசினவர் எல்லாம் ஆமான்னு சொல்லி புட்டு புட்டு வெக்கிறாரு... என்ன இதெல்லாம்?” பெண்ணைப் பெற்றவர் எகிற

“என்னையப் பத்தி யாரோ சொன்னா நம்புவீங்களா?” என்று பெண்ணைப் பெற்றவரிடம் பதிலுக்கு எகிறினான் குமரன்.

“வட்டி சோற வீட்டுல மறைச்சி வச்சிட்டு... எலிய போய் தோட்டத்துல தேடுனானாம் கள்ளன்.. அப்படி இல்ல இருக்கு இவன் பவுசு.. இவன் பவுசுக்கு எங்ககிட்ட இல்ல எகிறினான்...” தங்கராசு.. சமயம் பார்த்து ஜபர்தசாய் பேச

“ராசு... செத்த நேரம் அமைதியா இரு...” கார்மேகத்தின் குரலுக்கு அவன் கட்டுப்படவும்...

“இருங்க ப்பா... ஆளாளுக்கு பேசிகிட்டே போறீங்க.. பெறகு நாங்க எதுக்கு இருக்கோம்... குமரா... அந்தப் பொண்ணு கல்யாணத்தை பதிவு செய்யும் போது உன் கூட்டாளி தான் கையெழுத்து போட்டதா சொல்லுது. கூப்புடு அவனை.. நிசமான்னு விசாரிச்சிடுவோம்...” பரஞ்சோதி வாத்தியார் இடையில் நுழைந்து உத்தரவு இட

“ஐயா... அவன் இங்க இல்லங்க.. வேலை விஷயமா நேபாளம் போயிருக்கான்... அதனால தான் இந்தப் பொண்ணு கட்டுக் கதையா கட்டி விடுது...” குமரன்

“என்னப்பா இப்படி சொல்லிட்ட!” என்றவர் “இங்க பார் ம்மா... வெறும் காகிதத்துல இருக்க அத்தாட்சிய வச்சி நாங்க ஒண்ணும் செய்ய முடியாது. வேற ஏதாச்சும் சாட்சி இருந்தா சொல்லு. குமரன் எப்படி பட்டவன்னு இந்த ஊருக்கே தெரியும். அவன் பால் சொசைட்டிக்கு தலைவனா இருக்கிறதால தான்... ஊர் பொம்பள பிள்ளைங்க கூட தைரியமா சொசைட்டிக்குப் போய் பால் கொடுத்திட்டு வருதுங்க. ஏன்னா.. அவனை மாதிரியே. மத்தவங்களையும் நடத்தையில் இருக்க வெக்கிறவன் இவன்...” பரஞ்சோதி ஐயா முடிப்பதற்குள்

“அப்போ குழந்தைக்கு DNA சோதனை எடுத்துப் பார்த்துடுங்க...” வந்த பெண்.. தான் எல்லாவற்றுக்கும் தயார் என்பது போல் நிற்க

இவ்வளவு தூரம் நடப்பதை எல்லாம் கவலை படிந்த முகத்துடன் ஒரு ஓரமாய் நின்று பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சியை நெருங்கிய அவள் தாத்தா, “அம்மா மீனா... அங்க என்ன பிரச்சனை...” என்று கேட்க

“அது... நம்ம குமரன் மேலே ஒரு பொண்ணு புருஷன்னு பிராது கொடுத்திருக்கு... அதான் அங்க ஒரே சத்தம் தாத்தா”

“என்னது... நம்ம குமரன் மேலையா? அவன் மண்ணப் பாத்து நடப்பவனாச்சே... ஈஸ்வரா! இதென்ன என் பேரான்டிக்கு வந்த சோதனை!” அவருக்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை என்றாலும்... இப்படி நின்று வேடிக்கை பார்க்கவும் மனசு வரவில்லை என்ன செய்வார் வயதான காலத்தில் அவர்...

வந்தவள் DNA பரிசோதனை பற்றி பேசவும்.. குமரனுக்கும் அதுவே சரி என்று பட்டதும் அவன் ஏதோ சொல்ல வருவதற்குள்,

“இங்க பாரும்மா... உன் இஷ்டத்துக்கு எல்லாம் இங்க நடந்துக்க முடியாது. ஊர் கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்கு. இங்க எங்க ஊருல நீ சொல்ற விஞ்ஞானத்தை எல்லாம் புகுத்த மாட்டோம்..” என்று பரஞ்சோதி ஐயா முடிக்கவும்

“அப்போ இதுக்கு என்ன தான் முடிவு?” போலீஸ் அதிகாரி கேட்க

“எதையாவது பேசி உங்களுக்குள்ள நீங்களே ஏதாவது முடிவு எடுத்துக்கோங்க.. இனி என் மகளை இவனுக்கு கொடுக்கறதா இல்ல... போதும்… நம்ம சாதி சனம் உறவு முறைங்க எல்லாம் கெளம்புங்க ப்பா... என்னடி மசமசன்னு நின்னுகிட்டு இருக்க? நம்ம மகளை கூட்டிகிட்டு கெளம்பு...” மகாலஷ்மியின் தந்தை தன் முடிவில் உறுதியாய் இருந்து அனைவரையும் விரட்ட

யாரும் தடுக்கும் முன்னே மகாலஷ்மியின் மொத்த உறவும் அங்கிருந்து கிளம்பியது. பின்ன.. பெண்ணைப் பெற்ற எந்த தகப்பனும் இதைத் தானே செய்வார்?

அவர்கள் விலகவும்... “என்ன டா செஞ்சி வச்சிருக்க... இப்படி எல்லார் முன்னாடியும் என்னைய அசிங்கப்படுத்த தான் நீ பொறந்தியா...” இவ்வளவு நேரம் மகனை நம்பிய கார்மேகம் பெண்ணின் தந்தை பேசிவிட்டு சொன்ன விஷயத்தை வைத்து சத்தமிடவும்

“என்னவோ இவன் ஒருத்தன் தான் யோக்கியனாட்டும் நான் நல்லவன் நல்லவன்னு... அதிகமா சவடால் விட்டுகிட்டு திரியும் போதே எனக்கு தெரியும்... இப்டி தான் எதையாவது இழுத்துகிட்டு வருவான்னு...” இது தான் சமயம் என்று முத்தரசி நேரம் பார்த்து எடுத்துக் கொடுக்கவும் தவறவில்லை.

இப்போ இதற்கு என்ன தான் டா தீர்வு என்று புரியாமல் ஆளாளுக்கு குழம்பி நிற்க... இந்த திருமணத்திற்கு வந்திருந்த அந்த ஊர் கவுன்சிலர்... வந்திருந்த SI இடம் தனியாகச் சென்று ஏதோ தீவிரமாகப் பேசியவர்... பின் கார்மேகத்திடம் வந்தவர், “கார்மேகம்... நம்ம குமரன் மேலே கேஸ் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு... அந்தப் பொண்ணும் விட்டுக் கொடுத்து போற மாதிரி தெரியல... அதனாலே ரெண்டு பேருக்கும் இப்பவே கல்யாணத்தை முடிச்சி... உன் வீட்டுக்கு உன் மருமகளையும்... பேத்தியையும் அழைச்சிட்டுப் போ. நாங்க எல்லாரும் இருக்கங்காட்டி தான் குமரன் இங்க சொல்ல தயங்குறான் போல... வீட்டுக்கு கூப்டுகிட்டு போனதும் எல்லாம் சரியாகிடும்... நான் சொன்னதை செய்... ” என்று அவர் குமரனைக் குற்றவாளி ஆக்கி விஷயத்தை முடிக்க வழி சொல்ல

“என்னது! யாருமே இல்லாத அனாதை... பாக்க அன்னாடங்காச்சி மாதிரி இருக்கிற இந்தப் பொண்ணு என் மருமகளா? இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்..” அந்த கவுன்சிலர் என்னமோ சன்ன குரலில் கார்மேகத்திடம் மட்டும் தான் சொன்னார். ஆனால் கார்மேகத்தின் குரல் கோபத்தில் இப்படி ஓங்கி ஒலிக்கவும்...

அங்கிருந்தவர்களில் குமரன் தான் அதிகமாய் அதிர்ந்தவன்... “என்னது... இந்த பொண்ண நான் கல்யாணம் கட்டிக்கிறதா.. இந்த ஜென்மத்துல மட்டுமில்ல.. என் கனாவுல கூட அது நடக்காது...” என்று தன் உறுதியில் அவன் நிற்க

“என்னது.. என்ன கட்டிக்க மாட்டீங்களா! அப்போ இவருக்கும் இந்த ஜென்மத்துல வேறு யாரோடவும் கல்யாணம் நடக்க கூடாது... அரஸ்ட் பண்ணுங்க சார் இவரை...” மனைவி என்று சொல்லி வந்த பெண்ணின் வார்த்தைகள் தான் இது. இவ்வளவு நேரம் அவளிடம் இருந்த தொனியே மாறி... ஒரு ஆங்காரம் அவள் குரலில் வந்து அமர்ந்திருந்தது.

“நீ சொன்ன இதுவும் நடக்காது.. இப்போ உன்னால் என்னைய என்ன செய்ய முடியும்?” குமரனின் குரலில் தெனாவெட்டு வந்து அமர்ந்திருந்தது.

“ரெண்டுமே நடக்காதுன்னா.... அப்போ உன்னைய ஊர விட்டு தள்ளி வச்சிட வேண்டியது தான்...” இதை தன் தந்தையோ.. பரஞ்சோதி வாத்தியாரோ அல்லது ஊர் தலைகளோ சொல்லி இருந்தால்.. குமரன் அமைதியாக இருந்திருப்பான். இதை சொன்னது முத்தரசி என்றதும்... அவனின் தொனி மட்டுமல்ல அவனே மாறிப் போனான். அவனுக்கு இந்த பெண்ணையே கூட முத்தரசியும்... அவன் தம்பியும் தான் அனுப்பி இருப்பார்களோ என்று சிறு சந்தேகம் இருந்தது.

அதாவது இவர்களின் நோக்கம்.. வந்த பெண்ணுடன் தனக்கு திருமணம் முடிக்க திட்டம் என்று அவன் நினைக்கவில்லை. இப்படி ஒரு குற்றச்சாட்டை தன் மேல் வைத்து தான் ஜெயில் உள்ளே போனால்... பின் தன் அக்காவை நெருங்குவது இவர்கள் இருவருக்கும் சுலபம் என்று நினைத்து தான் இப்படி எல்லாம் செய்திருக்க வேண்டும் என்பது இவன் நிலைப்பாடு. அதை அவன் உறுதியாகவே நினைத்த நேரம்... அதற்கு ஏற்றார் போல் முத்தரசி வாயைத் திறக்கவும் இவனோ,

“நாய்ங்களா... இதெல்லாம் உங்க ரெண்டு பேரோட வேலை தானா... பன்னி கூட்டத்தை சேர்ந்த நீங்க எல்லாம்... பன்னியோட தான் புழங்கணும்... நான் உசுரோட இருக்கற வரை... என் வீட்டையோ... என் அக்காவையோ நெருங்க முடியாது...” என்ற கர்ஜனையோடு வேட்டியை மடித்துக் கட்டிய படி.. அக்கா தம்பி இரண்டு பேரையும் அடித்து துரத்தும் நோக்கில்.. பல்லைக் கடித்த படி அவர்களை குமரன் நெருங்க எத்தனிக்க

அவன் முன்னே வந்து ரவுத்திரத்துடன்... மகனை ஓங்கி அறைந்திருந்தார் கார்மேகம். அதில் அங்கு குழுமி இருந்தவர்களை விட... குமரன் தான் அதிகமாக அதிர்ந்தான். பின்ன.. கார்மேகம் என்ன தான் கொஞ்சம் காட்டமாக சின்ன வயதிலிருந்து பெற்ற பிள்ளைகளிடம் பேசி இருந்தாலும்... யாரையும் இதுவரை அவர் கை நீட்டி அடித்தது இல்லை. இன்று இத்தனை பேர் முன்னிலையில் மகனை அடித்து விடவும்...

“கார்மேகம்..” என்று பரஞ்சோதி வாத்தியாரும்...

“அப்பா...” என்று மீனாட்சியும்... அவரை அடக்க முற்பட

அதில் தன் மீசை துடிக்க, “மீனாட்சி இதென்ன புது பழக்கம்... சபையில் நம்ம வீட்டுப் பொண்ணுங்க குரலை உசத்தறது..” என்று தன் குரலால் மகளை அடக்கினார் அவர். ஆமாம்.. அந்த வீட்டில் இது ஒரு வழமை. வீட்டிலோ சபையிலோ... பெண்கள் காட்சி பொம்மைகளாகத் தான் நிற்க வேண்டும். ஆண்கள் மட்டும் தான் தங்களின் வாய் சவடாலை காட்டுவார்கள்.. அப்படி ஒரு கட்டிப் பெட்டி குடும்பம்… ஆனால் ஒட்டிக் கொண்ட முத்தரசி மட்டும் சபையில் பேசலாம்.

“என்ன டா சொன்ன... பன்னி கூட்டத்தோட பழகறவங்களா... அப்போ உன் அப்பன் என்ன பன்னியா.. அப்படி பாத்தா நீயும் பன்னி மவன் தான் டா... உனக்கு அவ சித்தி முற ஆகுறா... அவள போய் நாய்ன்னு சொல்ற.. சரி டா இந்த பன்னியும்... அந்த நாயும் தான் சேர்ந்து குடும்பம் பண்றோம்.. உன்னைய மாதிரி ஒளிச்சு மறைச்சி இல்லையே... நீ செஞ்சத விடவா டா நான் செஞ்சிட்டேன்?”

அப்பப்பா! கார்மேகத்துக்கு இவ்வளவு கோபம் வருமா என்பதை இன்று தான் அந்த ஊரே பார்த்தது. மனைவிக்கு அடுத்த படியாய் அந்த இடத்தில் முத்தரசியை வைத்திருந்தவருக்கு.. மகன் சபையில் ஒரு வார்த்தையை விடவும்.. தன்னையும் மீறி ரோஷம் வந்து விட்டது. இது பேர் ரோஷமாம்… அதாவது அவர் வைத்திருக்கும் உறவை மறைத்து செய்யவில்லையாம்… அப்படி செய்யாததால் கௌரவமான நல்ல உறவாம் இது. இப்படி எல்லாம் தனக்கு தானே.. சொல்லி கொண்டு திரிந்த மனுஷனை மகன் சபையில் கேட்கவும் ரோஷம் வந்து விட்டதாம்…

கார்மேகம் மகனை நம்பினார் தான்... ஆனால் மகனா இல்லை மனைவி ஸ்தானத்தில் இருப்பவளா என்று ஒரு சூழ்நிலை வரும் போது... அவருக்கு மகன் அவரை வைத்து பேசிய வார்த்தைகளே முன்னிறுத்த.. அதனால் முத்தரசியின் கவுரவமே அவர் முன் நின்றது.

மகனும் தான் ரோஷக்காரனாயிற்றே... அவர் அடித்ததை விட தந்தை சொன்ன வார்த்தையில் ‘அப்போ ஒரு பொண்ண மறச்சு வச்சி குடும்பம் நடத்தி இருப்பேன்னு இவர் நம்புறாரா?’ என்று நினைத்தவன்.. போலீஸ் பக்கம் திரும்பி,
“என்னைய அரஸ்ட் செய்ங்க சார்..” இவன் எது நடந்தாலும் பரவாயில்லை என்ற நிலையில் அறிவிக்க

ரோஷத்தைப் பார் இவனுக்கு என்று அதற்கும் கோபப்பட்ட கார்மேகம் “அதெல்லாம் ஊர் கட்டுப்பாட்டை மீறி எங்க அனுமதி இல்லாம நீங்க யாரையும் கைது செய்ய முடியாதுங்க சார்” என்று போலீஸ்காரரிடம் உரைத்த கார்மேகம் பின் மகனிடம்,

“இப்போ நான் உன் முன்னாடி உன் அப்பனா நிக்கல... இந்த ஊர் நாட்டாமையா நிக்கறேன். உன் மேல வந்திருக்கற பிராதுக்கு.. நாட்டாமையா நான் குடுக்குற தீர்ப்பு என்னனா.. நீ அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டணும்...” குமரன் மறுத்து ஏதோ சொல்ல வர..

“பொறு... இது தான் காலங்காலமா இந்த ஊர் வழக்கம்.. ஒரு பொண்ணு எதுல வேணா பொய் சொல்லுவா. ஆனா பொய்யா கூட இவன் என் புருஷன்னு... தெரியாதவன கை காட்ட மாட்டா... அதனாலே இது தான் இந்த ஊர் வழக்கம். இதுக்கு நீ கட்டுப் படலனா.. உன்னைய இந்த ஊரை விட்டு சாகற வரை ஒதுக்கி வச்சிடுவோம். எந்த நல்லது கேட்டதுக்கும்... நீ இந்த ஊர்ல புழங்க கூடாது. வேற எங்கயாச்சும் போய் பொழச்சிக்கலாம்.. இது தான் இந்த நாட்டாமையோட தீர்ப்பு. உனக்கு ரெண்டு வாய்ப்பு தான். குத்தவாளிங்களுக்கு வேற வாய்ப்பு நாங்க தர மாட்டோம்....” கார்மேகத்துக்கு தான் தந்தை என்ற ஈகோ வெளியே வரவும்... நாட்டாமை என்ற பதவியால் கையில் சாட்டை கொண்டு தன் மகனை விளாசினார் அவர்.

யாராலும் அங்கு வாய் திறக்க முடியவில்லை. ஏன்.. குமரனாலே கூட வாய் திறக்க முடியவில்லை. ஆனால் இதை இப்படியே விட முடியாதே..

பரஞ்சோதி வாத்தியார் மட்டும், “கார்மேகம்... அவசரப்படாத... நம்ம குமரன்...”

அவர் வார்த்தையை முடிக்க விடாமல் கார்மேகம், “நான் ஒண்ணும் புதுசா ஏதும் தீர்ப்ப தரலீங்களே ஐயா... காலங்காலமா நம்ம ஊர்ல குடுக்கற தீர்ப்பு தானே... அது என் மகனா இருந்தாலும் இது தான்...” கார்மேகம் தன் உறுதியில் நிற்க

குமரன் பரஞ்சோதியைக் காண.. அவரோ தலை கவிழ்ந்து நின்றிருந்தார். குமரனுக்குப் புரிந்தது.. அவனும் இந்த ஊரில் தானே பிறந்து வளர்ந்தான். அவனுக்கு நிரூபிக்க அவகாசம் கொடுத்தால் கூட.. அவன் தன் மேல் உள்ள களங்கத்தை துடைக்க... வேண்டியதைச் செய்வான். ஆனால் முத்தரசியை… குமரன் சொன்ன வார்த்தையால் கொதிநிலையில் இருக்கும் கார்மேகம் அவனுக்கு அவகாசத்தைக் கொடுப்பாரா என்ன..

பரஞ்சோதி ஐயாவிடம் இருந்து இவன் பார்வை முத்தரசி... தங்கராசுவிடம் பதிந்தது. அதில் அவர்கள் இருவரும் தெனாவெட்டாய் நின்றிருப்பது தெரியவும்.. பல்லைக் கடித்தவன் அடுத்து இவன் தன் பார்வையை தன் அக்காளிடம் செலுத்த... தம்பி அரை வாங்கியதிலிருந்து கண்ணில் கண்ணீர் வழிய ஒரு வித தவிப்புடன் நின்றிருந்தவளின் கண்களோ சொன்ன செய்தியில் நிலை குலைந்து போனான் குமரன்.

அப்படி தமக்கையின் விழிகள் சொன்ன செய்தி இது தான்.. ‘பட்டு அந்த பொண்ணு கழுத்துல தாலிய கட்டு டா…’ இதை உத்தரவாக கூட இல்லாமல் கெஞ்சலாக தம்பி முன் வார்த்தைகளை வைத்தாள் அவள்.

அதைக் கண்டவனோ..
அடுத்த நொடியே... எதைப் பற்றியும் யோசிக்காமல் விறுவிறுவென்று மேடை ஏறியவன்.. ஒரு முடிவுடன் அங்கிருந்த தாலியைத் தன் கையில் எடுத்தவனோ... திரும்பி அக்காளைக் காண.. இப்போது அவளின் உதடுகளோ… “கட்டு பட்டு…” என்று மெல்ல முணுமுணுத்தது.

அதில் அடுத்த நொடி கண்கள் மூடி எதையோ தன்னுள் நிறுத்தியவன்.. அதே வேக நடையுடன் பிராது கொடுத்த பெண்ணை நெருங்கியவன்... அவள் முகத்தைக் கூட பார்க்கப் பிடிக்காதவனாக தன் அக்கவைப் பார்த்த படி... அதாவது உனக்காக தான்.. க்கா… என்ற படி அவள் கழுத்தில் தன் கையால் மாங்கல்யத்தை ஏற்றி... மூன்று முடிச்சைப் போட்டான் இந்த அடங்காத காளை.

பி. கு : vaccine போட்டு கொண்டதால்... போன வாரம் அத்தியாயம் தர முடியவில்லை ப்பா.... கதையின் அடுத்த பதிவை தேடிய தோழமைகள் 🙏🙏🙏
 
Last edited:
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இது என்னடா சோதனை , தன்னிலை உணர்த்த வாய்ப்பு கூட கொடுக்காமல் பலி ஆடு போல் நடத்துவது
நன்றிங்க சிஸ்... :( :( :(
 
P Bargavi

Member

Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN