தாலி கட்டிய மறு நொடி... யாரையும் பார்க்க விரும்பாதவனாக... தன் தோள் மேலிருந்த துண்டை கோபத்தில் விசிறி எறிந்தவனாக.. அங்கிருந்து விலகியிருந்தான் இளங்குமரன்.
மகன் விலகியதும் தன் மீசையை முறுக்கிய கார்மேகம்.. “புருஷோத்தமா... சேரா... ரெண்டு பேரும் வந்தவங்களை உபசரிச்சு அனுப்புங்க...” என்று மகன்களுக்கும் “மீனாட்சி... உமா... கல்பனாவோட நம்ம வீட்டு புது மருமகளை கூப்டுகிட்டு வீட்டுக்குப் போய் என்ன முறை செய்யணுமோ... அதச் செய்...” என்று மகளுக்கு உத்தரவு இடவும் அவர் தயங்கவில்லை.
அதாவது கார்மேகத்துக்கு வந்திருக்கும் பெண்ணைப் பிடிக்கவில்லை தான்.. அதற்காக தன் வீட்டு மருமகள் என்று ஆன பிறகு அவளுக்கு செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவர் தயங்கவுமில்லை.
தந்தைக்கு வார்த்தையாய் இல்லாமல் “சரி..” என்பதாய் தன் தலையை அசைத்தவள்... பின் அங்கு தான் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஐயரிடம் வந்த மீனாட்சி, “ஐயர் மாமா... தம்பி நல்ல நேரத்திலே தானே தாலி கட்டி இருக்கான்... நடந்த கலாட்டாவுல நேரம் ஏதாவது தப்பி போயிடுச்சிங்களா...” பெற்றவளுக்கு நிகராய் வளர்த்தவள் ஆச்சே.. அவளால் இப்படி கேட்காமல் இருக்க முடியவில்லை.
ஐயர், “நல்ல நேரம் முடியறதுக்குள்ளதான் தாலி கட்டி இருக்கான்.. குமரன் ஷேமமா இருப்பான் குழந்த.. நீ கவலைப் படாத...” அவர் ஆறுதலாய் சொல்லவும் இவளுக்குள் நிம்மதி குடிவந்தது.
கையில் குழந்தையுடன்.. சற்று நேரத்திற்கு முன்பு கழுத்தில் தாலி வாங்கியவள்.. மேற்கொண்டு என்ன செய்வது என்பது தெரியாமல் நின்றிருக்க.. அவளின் கையைப் பிடித்து மணமகன் அறைக்கு அழைத்துச் சென்ற மீனாட்சி... அவள் குடிக்க தண்ணீர் கொடுத்து... அவளுக்குத் தலை நிறைய பூவை வைத்து விட்டவள்... பின் மணப்பெண்ணுக்கு என்று வாங்கியிருந்த கண்ணாடி வளையல்களை அவளுக்குப் போட்டு விட்டு... இறுதியாய் தன் கழுத்திலிருந்து தங்க சங்கிலியைக் கழற்றி அவள் கழுத்துக்கு கொண்டு செல்ல...
“அண்ணி... வளையல்.. பூ எல்லாம் சரிதான்... இது வேணாம்...” அந்த பெண் கண்களாலேயே சங்கிலியை சுட்டிக் காட்டி மறுக்க
அதை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் பிடிவாதத்துடன்.. அவளுக்கு சங்கிலியை அணிவித்தாள் இவள். பின் அனைவரும் கிளம்ப... இவர்கள் காரில் வீடு வந்து சேரும் அதே நேரம்... தனக்கு தெரிந்தவரின் பைக்கில் வீடு வந்து சேர்ந்திருந்தான் குமரன்.
அவன் வந்த வேகத்திற்கு பூரணி வாசலில் ஆரத்தி தட்டுடன் நிற்பதைக் கண்டவன்.. தன் ஆத்திரத்தை எல்லாம் அதில் காட்டி அவன் தட்டைத் தட்டி விட... “நங்...” என்ற சத்தத்துடன் அந்த ஆரத்தி தட்டு உருண்டோடவும்.. தாயின் தோளிலிருந்த குழந்தையோ மறுபடியும் சிணுங்கி அழுதாள். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவன் உள்ளே செல்ல...
“பட்டு.. அப்பா வீடு வந்துட்டோம் டா... இதோ நாம உள்ள போயிடலாம்... நீ சமத்து இல்ல” பெண்ணவள் மகளை சமாதானம் செய்யவும்... மீனாட்சி, பூரணியிடம் வேறு ஒரு ஆரத்தி தட்டை எடுத்து வரச் சொல்ல... அவள் வந்ததும்... யாரை ஆரத்தி எடுக்க சொல்வது என்று இவளுக்கு குழப்பம்.. பூரணிக்கோ சிறு வயது.. அவளுக்கோ தயக்கம்… அதனால் இவள் உமா.. கல்பனா என்று இருவரையும் காண... அவர்களோ ஒரு உஷ்ண பார்வையுடன்.. இருவரும் ஒருசேர கழுத்தை ஒரு வெட்டு வெட்டி விட்டு உள்ளே சென்றார்கள். அதாவது.. இருவருக்கும் நடந்த இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லையாம். மீனாட்சி செய்வதறியாது தயங்கி நிற்கவும்... அவள் கையைப் பிடித்த பெண்ணவள்
“அண்ணி... எனக்கும் என் மகளுக்கும் நீங்களே ஆரத்தி எடுங்க... உங்க மனசுக்கு நாங்க நல்லா இருப்போம் அண்ணி...” இன்முகமாய் சொல்ல.. தயக்கம் விலக, மீனாட்சியே ஆரத்தியை எடுத்தவள் உள்ளே அழைத்து வந்து.. பூஜை அறையில் விளக்கேற்றச் சொல்லி... இன்னும் சில சம்பிரதாயங்களைச் செய்ய வைத்தவள்... பின் அவளுக்கு உணவு பரிமாறி... அவள் உண்டு முடிக்கும் வரை காத்திருந்தவள் பின் அவள் உணவை முடித்ததும்... இதுவரை அவளிடம் ஒரு வார்த்தையைக் கூட பேசாதவள்
“நீ என்ன மாதிரி சுழல்ல தானா வந்து சிக்கியிருக்க தெரியுமா... பொய்யில கட்டுற மாளிகையே நிலைக்காதுன்னு சொல்லுவாங்க... ஆனா நீ வாழ்க்கைங்கிற கோட்டையையே பொய்யாலேயே கட்டி இருக்க... இது எங்க போய் முடியும்னு நீ யோசிச்சுப் பாக்கலையா...” உன் பொய்யை நான் ஏற்கவில்லை என்பதாய் மீனாட்சி கேள்வி கேட்கவும்
பெண்ணவளோ கொஞ்சமும் அச்சம் இல்லாமல், “அண்ணி... நான் சொன்னது பொய்யே இல்ல... அம்புட்டும் நெசம்... உங்க தம்பிய பத்தி உங்களுக்கு தான் இன்னும் சரியா தெரியல... சீக்கிரம் தெரிஞ்சிக்குவீங்க...” என்று பதில் கொடுக்கவும்
மீனாட்சி, “ரொம்ப துணிச்சல் தான் புள்ள உனக்கு...”
“அப்படி இருக்கறதால தான் அண்ணி... அடங்கா காளையான உங்க தம்பிய சமாளிச்சேன்... இதுக்கப்புறமும் சமாளிக்கப் போறேன்...” இவள் மிடுக்காய் பதில் தர.. மீனாட்சி தான் வாயடைத்துப் போனாள்.
உடனே, “சரி.. நீ ஏதாவது உடுப்பு மாத்தனும்னா என் அறையில் மாத்திட்டு அங்கேயே தூங்கி செத்த நேரம் ஓய்வு எடுத்துக்கோ...” என்க
“நான் தூங்கப் போகல அண்ணி... பட்டுவை மட்டும் தூங்க வெக்கிறேன்....”
“அது என்ன பட்டு பட்டுன்னு சொல்ற... பாப்பா பேரே பட்டு தானா?” மீனாட்சி ஆர்வம் இல்லாதவள் போல் சாதாரணமாய் கேட்க
“உங்களுக்கு ரொம்ப குசும்பு தான் அண்ணி. பாப்பா பேரு அஸ்மி... ஆனா நீங்க உங்க தம்பிய பட்டு பட்டுன்னு கூப்பிடற மாதிரி... அவரும் அவர் மகளை அப்படி தான் கொஞ்சுவார். அதான்.. எனக்கும் அது அப்படியே தொத்திகிச்சு....”
“என்னது என் தம்பிய நான் பட்டு.. பட்டுன்னு கொஞ்சுவனா... இதென்ன புது கதை?” மீனாட்சி சற்று போலி வியப்புடன் கேட்க
“புது கதை எதுவும் இல்ல அண்ணி... எல்லாம் பழைய கதை தான். ஒரு வயசு வரைக்கும் அவரை நீங்க பட்டுன்னு தானே கூப்டீங்க... அதே அவர் வளரவும்... அதுபோல கூப்பிடனாலும் இப்பவும் தனிமையில உங்க மகனை அப்படி தானே கூப்பிடுவீங்க...”
“அது..” பெரியவள் இழுக்க
“அண்ணி, இதையும் அவர் சொல்லலனா எனக்கு எப்படி தெரியும் சொல்லுங்க.. எல்லாம் அவர் தான் சொன்னாரு. சரி.. உங்க அறைய காட்டுங்க... பட்டு தூங்கிட்டா...” என்றவள் அசந்து நிற்கும் பெரியவளைக் கையோடு இழுத்துச் சென்று அவள் காட்டிய அறையில் குழந்தையைப் படுக்க வைத்தவள்,
“அண்ணி, இங்க பின்புறம் தோட்டம் பெருசா இருக்குமாமே... நான் கொஞ்ச நேரம் அங்க இருக்கவா... அப்டியே நீங்க வளர்க்குற சுந்தரியையும் நான் பார்க்கணும் அண்ணி. என்ன சமத்தா உங்க கிட்ட சுந்தரி அடங்கிப் போவாளாமே! எனக்கும் அவளைப் பழக்கி விடுங்க அண்ணி. அவ கொடுக்கற பால் எல்லாம் அவ போட்ட கன்னுங்களுக்கே கொடுத்துடுவீங்களாமே... உங்களுக்கு பெரிய மனசு அண்ணி...” இன்னும் வந்தவள் அடுக்கிக் கொண்டே போக
“இதையும் என் தம்பி தான் சொன்னானா?” சலிப்பாய் கேட்டாள் பெரியவள்
“பின்ன.. அவரைத் தவிர்த்து வேற யார் அண்ணி சொல்லி இருப்பா...”
“ஒரு பொய்யை மறைக்க எத்தன விதமான பொய்ங்கள நீ அடுக்கிகிட்டே போற... எங்க அப்பாரு சொன்னதால தான் நாங்க உன்னைய இந்த வீட்டுல ஏத்துகிட்டோம்... என் தம்பி உன் கழுத்தில் தாலி கட்டுனதும் அவரால தான்... மத்தபடி உன்னோட பொய்யை யாரும் இங்க நம்பல. அப்புறம்.. அதென்ன பார்த்த மொத நாளே என்னைய அண்ணி... அண்ணின்னு இம்புட்டு உரிமையா கூப்பிடற...” கோபமே வராத மீனாட்சி கூட தற்போது சிறிதே அதட்டல் குரலில் தான் கேட்டாள்.
“நான் சொன்னது எல்லாம் பொய்யே இல்ல அண்ணி.. எல்லாமே நெசம். ஒரு நாள் அது உங்களுக்குப் புரியும். அப்புறம் மாமா சொன்னதாலே உங்க தம்பி என் கழுத்துல தாலி கட்டல. அத்தனை பேர் சபையில் இருக்க.. நீங்க தாலி கட்டுன்னு ஒரு வார்த்தை சொன்னதால தான் அவர் என் கழுத்துலே தாலியே கட்டுனார்னு எனக்கு தெரியும் அண்ணி.
அப்பறம் அதென்ன பார்த்து பழகுனா தான் உரிமை வருமா... உங்க தம்பி உங்கள பத்தி சொல்லி சொல்லி... நீங்க என் மனசுல ஆழமா பதிஞ்சிட்டிங்க... அதனாலே நீங்க எனக்கு அண்ணி தான்... நீங்களும் உங்க தம்பிய பட்டுன்னு கூப்பிடற மாதிரி என்னையும் கூப்பிடறீங்களா...” வந்தவள் குழந்தையைப் போல் கேட்கவும்... மீனாட்சி ஸ்தம்பித்துப் போனாள்.
‘இவளைப் பாம்பு என்று அடிக்கவோ பழுது என்று விலகவோ முடியவில்லையே... இந்த அளவுக்கு இந்த வீட்டையும்... வீட்டில் உள்ளவர்களையும் தெரிந்து வச்சிருக்கா... அப்போ இவ பின்னால யாரு இருக்கா... இவ இங்க வந்த நோக்கம் என்னவா இருக்கும்..’ இப்படியாக பலதும் சிந்தித்தும்... ஏனோ மீனாட்சிக்கு வந்தவளைப் பற்றி ஒரு முடிவுக்கு தான் வர முடியவில்லை...
பின் இவள் தம்பியைத் தேடிச் சென்று அவன் அறை கதவைத் தட்ட... அவனோ திறக்கவில்லை... “பட்டு நான் தான்... கதவ தொற...” இவள் சொன்னதும் மறுநொடி... கதவு திறந்தது. இவள் உள்ளே நுழைய.. குமரன் பெட்டிக்குள் உடமைகளை அடுக்கிக் கொண்டிருந்தான்.
அதை கண்டவள், “என்ன டா... எதுக்கு துணிமணிங்க எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்க...” என்று சாதாரணமாக கேட்க
அவனோ, “நீயும் உன் துணிங்க எல்லாம் எடுத்து வச்சிக்கோ க்கா... இந்த நிமிஷமே நாம சென்னை போறோம்.. போய் கெளம்பு...” என்று அக்காவுக்கு வார்த்தையால் உத்தரவு இட்டாலும் கை என்னவோ அதன் வேலை பார்த்துக் கொண்டு தான் இருந்தது...
“என்ன டா திடீர்ன்னு...”
“அக்கா நீ தெரியாம தான் கேக்குறியா... என்ன நம்பாத இந்த வீட்டுல நான் ஏன் க்கா இருக்கணும்... நான் கெளம்பறேன்.. நீயும் கெளம்பு”
“நீ ஏன் டா.. வெளியே போகணும்...”
“பின்ன வேற யார வெளியே அனுப்ப சொல்ற... என் மனைவின்னு சொல்லி வந்திருக்கிற அந்த பொண்ணையா.... அதுக்கு தான் நீ ஆரத்தி எடுத்து வரவேத்து வீட்டுக்குள்ள உக்கார வச்சிட்டியே... அந்த பொண்ண நான் வெளியே அனுப்ப முடியுமா... நீ சொன்ன ஒரே காரணத்துக்காக தான் நான் தாலி கட்டுனேன்.. அவ்வளவு தான் முடிஞ்சது கிளம்பு...”
“இப்டி சொன்னா எப்டி டா... கல்யாணம் நடந்த மொத நாளே தம்பிய வாழவிடாம... பிரிச்சிட்டான்னு என்ன இந்த ஊர் காரி துப்பாதா டா?”
“அக்கா.. இந்த ஊர் உலகத்துகாகவே கடைசி வரை வாழ்ந்துட்டு இருக்கப் போறியா... இந்த ஊர் வாயை அடைக்க என்னைய தாலி கட்ட சொன்ன... கடைசி வரைக்கும் இந்த தம்பியை நீ நெனைக்கவே இல்ல தான க்கா... என் மனசை பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா....” இவ்வளவு நேரம் அவனுக்குள் இருந்த ஆதங்கத்தைக் சீற்றமாய் கொட்டினான் குமரன்.
“குமரா என்ன டா இப்டி சொல்லிட்ட... உன்னைய சந்தேகப்பட்டோ... ஊர் வாயை அடைக்கவோ... நான் இப்படி செய்ய சொல்லல டா.... முழுக்க முழுக்க உனக்காக... என் தம்பிக்காக தான் டா அப்படி செய்யச் சொன்னேன்..” என்று சொல்லிக் கொண்டு வந்தவள் சற்றே தயங்கி.. “அது வந்து...” என்றவள்... “உன் ஜாதகப் படி இந்த வயசுலே அதாவது இப்போ உனக்கு நடந்துட்டு இருக்குற இந்த வயசுலே நடக்க இருக்குற உன்னோட கல்யாணம் பல சிக்கல் பிரச்சனைகளுக்கு நடுவுல தான் நடக்குமாம். அத தவற விட்டா உனக்கு கல்யாணமே நடக்காதுன்னு நம்ம ஜோசியக்காரர் சொன்னாரு டா... அதான்......”
“ஓஹ்... அதனால தான் என்னைய தாலி கட்ட சொன்னியாக்கும்.... உன் தம்பிக்கு எங்க கடைசி வரைக்கும் கல்யாணம் நடக்காம போயிடுமோன்னு பயந்து.... எவனோ பெத்த பிள்ளைக்கு என்னைய அப்பன் ஆக்கிட்ட. ஏன்... க்கா உன் தம்பி ஒரு பிள்ளைக்கு தகப்பன் ஆகாம கூட போயிடுவானோன்னு நெனச்சிட்டியா...” குமரன் இப்படி எல்லாம் கேட்க வேண்டும் என்று கேட்கவில்லை... அவனுக்குள் எரியும் எரிமலை இப்படியான வார்த்தைகளாய் வெளிவந்தது.
“பட்டு....” தமக்கை தான் துடித்துப் போனாள்.
“அப்பாரு அடிச்சது கூட எனக்கு வலிக்கல க்கா... அத்தன பேரு முன்னாடி நான் பட்ட அசிங்கம்... அதிலும் நீ தாலி கட்ட சொன்னது. எனக்கு கல்யாணம் நடக்கணும்கிறதுக்காக நல்லவளா... கெட்டவளான்னு தெரியாத ஒரு பொண்ண... இப்படி உன் பட்டு மனைவியா ஆக்கி இருக்க. இது சரியா.. நீயே சொல்லு...”
“உனக்கு எப்டியாவது கல்யாணம் நடக்கணும்னு எனக்கு மனசு அடிச்சிகிச்சு. இன்னொன்னு.. நீ எங்கள விட்டு இந்த ஊர விட்டு எங்கேயும் போகக் கூடாது. அப்புறம்.. அந்த பொண்ண பார்த்தா... எனக்கு தப்பானவளா தெரியல குமரா. அந்த குழந்த... அவளுக்கு ஏதோ பிரச்சனை.... அத நீ சரி செஞ்சிட்டா எல்லாமே சரியாகிடும் பட்டு..” மீனாட்சி ஊர்க்காரிக்கே உள்ள குணத்தில் வெள்ளந்தியாய் மனதில் நினைத்ததை சொல்லி விட
இவனுக்குள் உஷ்ண மூச்சு கிளம்பியது. அதைக் கட்டுப் படுத்தியவன், “உன்னைய மாதிரியே இந்த உலகத்துல இருக்கறவங்க எல்லாரும் நல்லவங்களா இருப்பாங்கன்னு நெனைக்கிறியா க்கா... என் மேலே பொய்யா பிராது குடுத்து அந்த பொண்ணு தாலி வாங்கியிருக்கு. பெறகு எப்படி நல்ல பொண்ணா இருக்கும்...” இவன் கேட்டுக் கொண்டிருந்த நேரம்
பின்புறம்.. வேப்ப மர நிழலில் கட்டியிருந்த சுந்தரியை நெருங்கிய அவன் சொன்ன பெண், “ப்பாஆ.... ப்பாஆ... ஓஓ… ப்பாஆ.. ப்பாஆ.. ஓ ஓ.. இங்க பார் சுந்தரி... உனக்கு வேணா என்னைய தெரியாம இருக்கலாம்... எனக்கு உன்னைய நல்லா தெரியுமாக்கும். என் மச்சான் உன்னைய பத்தி நெறைய சொல்லியிருக்கார்... அதனால… தா… இந்தா… இங்க பாரு… எதுவும் சண்டித்தனம் செய்யாம... என் கூட ராசி ஆகிடு சொல்லிட்டேன்...” என்று சுந்தரியிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.
இவனுடைய அறை மாடி அறை என்பதால்… அவள் குரல் கேட்டதும்... அக்கா தம்பி.... இருவரும் அந்த அறை ஜன்னலின் வழியே அவளைக் காண... கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் வந்தவளின் பேச்சாலும்... நடவடிக்கையாலும்... சுந்தரியோ அவளிடம் ராசியாகி இருந்தாள். இதை கண்டவன் என் குடியையே கெடுத்துட்டு... என் வீட்டு உருப்படிகள்லயிருந்து... ஐந்தறிவு சுந்தரிவரை என்னமா ராசி ஆகுது இந்த பொண்ணு!..” தாலி என்ற ஒன்றை கட்டி விட்டதால் இன்னும் அவளை மனைவி என்று நினைக்க முடியவில்லை இவனால். அது எப்படி முடியும்..
ஏனோ அந்த பெண்ணைக் காண காண... அவன் அசிங்கபட்டு நின்றதே அவனுக்குள் தோன்றி அழுத்தவும்... அவனுக்கு மூச்சு முட்டுவது போல் இருக்கவும்... பாதி பேச்சிலேயே அங்கிருந்து விலகியிருந்தான் குமரன். ஆனால் மனைவி என்று சொல்லி வந்தவளோ.. தன் விளையாட்டை இந்த வீட்டில் விளையாட ஆரம்பித்திருந்தாள்.