2
எட்டு மாதங்களுக்கு முன்பு.........
ஒத்த சொல்லால
என் உசிரெடுத்து வச்சுக்கிட்டா
ரெட்ட கண்ணால
என்ன தின்னாடா
பச்ச தண்ணி போல் அட
சொம்புக்குள்ள ஊத்தி வச்சு
நித்தம் குடிச்சே
என்ன கொன்னாடா.........
சென்னை மாநகரில் ஒரு வீட்டின் மாடியறையில் ஸ்பீக்கரில் பாடல் அலறிக் கொண்டிருந்தது......
கீழே அறக்க பறக்க தன் வேலைகளை செய்து கொண்டிருந்த சுமித்ரா வரவேற்பறையில் இருந்த தன் கணவர் நாதனை பார்த்து....
" என்னங்க.....இவள இன்னைக்கு பொண்ணு பாக்க வராங்க... இவ என்னடானா இன்னும் சின்ன புள்ள மாதிரி ஆடிக்கிட்டு இருக்கா.... "
"நம்ம குட்டிக்கு இதுல ஒரு சந்தோசம்.... கேட்டா... காலைல எழுந்து இப்படி ஆடறது கூட ஒரு எக்ஸர்சைஸ்னு சொல்றா... விடுமா.... அவளுக்கு எங்க எப்படி நடந்துக்கணும்னு தெரியும்... "
"அது சரிங்க.... மாப்பிளை வீட்டுக்காரங்க இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவாங்க... கொஞ்சம் போய் சீக்கிரம் ரெடி ஆக சொல்லுங்க.... "
"நான் போறேன்மா..... இந்தாங்க இதுல ஸ்வீட் காரம் எல்லாம் இருக்கு..."என்று தான் வாங்கி வந்த பொருட்களை கொடுத்தான் கொடுத்தான்... இனியன்....
"யாரு நீதானே... அண்ணனும் தங்கச்சியும் சேர்ந்தா இன்னும் ஒரு மணி நேரத்துக்கு உங்க ஆட்டத்தை நிறுத்த மாட்டீங்க.... "
"ஹாஹாஹா..... அதெல்லாம் இல்லமா.. நான் சீக்கிரம் நம்ம குட்டிமாவ ரெடி ஆக சொல்றேன்..... "என்று சொல்லி விட்டு பாடல் அலறிக்கொண்டிருந்த அறைக்கு சென்றான்...
துப்பட்டாவை இடையில் கட்டிக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தவள் இனியனை கண்டதும்
"ஹேய் ஸ்வீட்டா வா வா... "என்று இழுத்து சென்று இனியனின் கையை பிடித்து கொண்டு ஆட ஆரம்பித்தவளை இடை மறித்தான்....
"ஏய் சாங்கி...... அம்மா உன்னை ரெடி ஆக சொன்னாங்க.... "
"ஆகிக்கலாம் ஆகிக்கலாம்...... "
"ப்ளீஸ்டா சாங்கி...... "
"ரொம்ப கெஞ்சாத ஸ்வீட்டா.... இதோ போய் ரெடி ஆகறேன்... "என்று சொல்லிவிட்டு குளிக்க சென்றாள்....
இனியனும் தன் மிச்ச வேலைகளை கவனிக்க சென்றான்....
சுமித்ரா எல்லா வேலைகளையும் முடித்து விட்டு மகளின் அறைக்கு சென்றார்..
புடவை கட்ட தடுமாறிக்கொண்டிருந்த தன் மகளை கண்டவர் புன்னகையுடன் அருகில் சென்றார்....
"குடு நான் கட்டி விடறேன் "
"ஸ்ஸ்ஸப்பா... எப்படி தான்மா இத டெய்லியும் கட்டறீங்க..... "
"அதெல்லாம் கட்டிகிட்டே இருந்தா பழகிடும் குட்டிமா..... "
இள ஆரஞ்சு நிற டிசைனர் காட்டன் புடவையில் ஆங்காங்கே வெள்ளை மற்றும் கருநீல முத்துக்கள் பதித்து இருந்தது.... அழகாய் பொருத்தமாய் இருந்தது..... லேசாக சுருண்ட கூந்தல் முதுகு வரை படர்ந்திருந்தது..... நடுவில் கிளிப் மட்டும் போட்டு முடியை சுதந்திரமாக விட்டிருந்தாள்......
காதில் ஜிமிக்கியும் கழுத்தில் வட்ட வடிவ சிறிய ஆரமும் மூக்கில் சிறிய ஒற்றைக்கல் மூக்குத்தியும் சேர்ந்து பேரழகு மிளிர்ந்தது.......
சுமித்ரா தன் மகளை கண்டு நெட்டி முறித்தார்.... கீழே கார் வரும் சத்தம் கேட்டு சுமித்ரா கீழே சென்றார்... அவர் சென்றபின் தனிமையில் இருந்தவளுக்கு படபடப்பாக இருந்தது....
சுமித்ரா இனியன் நாதன் அனைவரும் வந்தவர்களை வரவேற்று அமர வைத்தனர்... கூடவே வந்த தன் நண்பர் ராஜனை தனியே அழைத்து சென்றார் நாதன்....
"ராஜா நீ திடீர்னு சொன்னதால பெருசா ஒன்னும் ஏற்பாடு பண்ண முடில...."
"பரவாயில்லை நாதா...
அவங்களும் ஜாதகம் பாத்துட்டு பொருந்திருக்கவும் இன்னைக்கே போலாம்னு சொல்லிட்டாங்க... அவங்களுக்கு நம்ம குட்டிமாவ ரொம்ப புடிச்சு போச்சு.... அதான் இந்த அவசரம்... சரி உள்ள வா.... "
"நாதா இவரு சந்திரன்.......அவங்க துளசி..... பையனோட அப்பா அம்மா.... என்று அறிமுகப்படுத்தினார்... பின்னர் ஒரு இளைஞனை காட்டி இது சத்ய ரூபன்.. உங்க பொண்ணுக்கு பார்த்திருக்கிற மாப்பிளை..."
"வணக்கம் அங்கிள்..... "
"வணக்கம்ப்பா...."
"அப்பறம் இன்னோறு பையன் இருக்காரு... பேரு புகழ் செல்வன்..... MBA கடைசி வருஷம்..... இன்னைக்கு முக்கியமான எக்ஸாம்னு வரல.... "
"அம்மாடி சுமி..... போய் நம்ம குட்டிமாவ கூட்டிட்டு வா.... "
அவரின் குட்டிமா என்ற அழைப்பில் சத்யனின் உதடுகள் குறுநகை புரிந்தன...
சுமித்ரா குட்டிமாவை அழைத்து வந்தார்...
"தம்பி பொண்ண நல்லா பாத்துக்க .. போட்டோவுல பக்கமாட்டேன்... நேருல தான் பாப்பேன்னு சொன்னியே.... பேரு இயலிசை.... BE முடிச்சுட்டு இங்க ஒரு கம்பெனில 2 வருசமா வேலை பாக்குது.. "
அவர் என்ன பார்க்க சொல்லி சொல்லுவது...... அவன்தான் கண்களை கூட சிமிட்டாமல் பார்த்து கொண்டிருக்கிறானே ..... அவர் சொன்னது கூட அவன் காதில் விழுந்திருக்கும் என்பது கூட சந்தேகமே.....
இசை அனைவருக்கும் வணக்கம் வைத்தவள் கடைசியாக சத்யா வை பார்க்க அவன் பார்வையை கண்டு தலையை குனிந்தவள் நிமிரவே இல்லை...
"இவர் என்ன இப்படி பாத்து வைக்கிறார் " என்று தனக்குள் நினைத்து கொண்டாள்.... சுமித்ரா டீ ட்ரேவை கொண்டு வந்து அனைவர்க்கும் கொடுக்குமாறு சொல்லவும்.. அதை வாங்க போனவளின் கை நடுக்கத்தை கண்ட துளசி....
"எதுக்குமா போர்மாலிட்டீஸ்.... நானே கொடுக்கறேன் நீ உட்காரு "என்று இசையை உட்கார வைத்துவிட்டு மறுக்க வந்த சுமியையும் அமர்த்திவிட்டு அனைவருக்கும் அவரே குடுத்தார்....
பிறகு பொதுவாக அனைவரும் பேசிக்கொண்டிருக்க சத்யன் இசையிடம் தனியாக பேசவேண்டும் என்று சொல்ல இருவரையும் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு அனுப்பி வைத்தனர்...
நிறைய பூச்செடிகளுடன்..... பன்னீர் ரோஜா செடிகள் கோடிகள் போல மேலே படர்ந்திருக்க கீழே இரண்டு பென்ச் போடப்பட்டிருந்தது....
இசை அதில் அமர்ந்திருக்க..... செடிகளுக்காக போட பட்டிருந்த பந்தலின் கம்பத்தில் சாய்ந்து நின்றவாறு இசையை பார்த்து கொண்டிருந்தான்.....
பதட்டத்தில் இருந்ததனால் கைகள் லேசாக பிசைந்து கொண்டிருந்தாள்..... தலை குனிந்துஇருந்தது.....
" என் காலை உனக்கு அவ்ளோ புடிச்சிருக்கா "அதில் நிமிர்ந்தவள்
"ஹா....... அது........ஆமா...... ஆ..... இல்லை "என்று தடுமாற
"இல்லை ரொம்ப நேரமா அதையே பாத்துட்டு இருந்தியா..... அதான் கேட்டேன்... "
"பின்ன இப்படி பாத்துட்டே இருந்தா நாம எப்படித்தான் நிமிந்து பாக்கறதாம்... "என்று நினைத்தவள் அதை அவனிடம் சொல்லவில்லை..... மீண்டும் அவன் முகம் பார்க்க முடியாமல் கண்ணை அங்கும் இங்கும் உருட்ட... அதை கண்டு நகைத்தவன்
"சரி சரி ரொம்ப கஷ்ட படாத " என்று அவளின் அருகே அமர்ந்தான்...
அதில் மீண்டும் படபடப் பானவளை கண்டவன் இசையின் கையை எடுத்து தன் கைகளுக்குள் பொருத்தி கொண்டான்.....
ஏனோ அந்த செயலில் அவள் ஆசுவாசமாக உணர்ந்தாள்... அது அவளுக்கே கூட ஆச்சிரியம் தான்...
"இயல்..... "என்றழைக்க அவள் ஆச்சிரியமாக பார்த்தாள்....
"ஏன் அப்படி பாக்கற..... அப்படி கூப்பிடலாம் தானே..... "
கூப்பிடலாம் என்பது போல் தலையசைத்தாள் இசை.....
"என்ன உனக்கு பிடிச்சிருக்கா இயல் "
இதென்ன கேள்வி.....
அவளுக்கு தான் பார்த்த முதல் கணமே பிடித்து விட்டதே..... அதனால் தானே இத்தனை படபடப்பும்.....
முகம் நோக்க இயலாத தவிப்பும்....
அதனால் இசையும் ஆமென்று தலையசைத்தாள்......
அவளின் கைகளை இறுக பற்றி தன் சந்தோசத்தை தெரிவித்தான்......
"எனக்கும் உன்னை ரொம்ப புடிச்சிருக்கு இயல்..... அதுவும் இந்த மூக்குத்தி இருக்கே... என்னை ஏதேதோ செய்யுது... என்று கூறி பிடித்திருந்த இயலின் கையில் மெதுவாய் முத்தமிட்டுவிட்டு கன்னத்தை லேசாக வருடிவிட்டு சென்றான்.....
பிறகு வந்த இனியன் "குட்டிமா உனக்கு புடிச்சிருக்காடா "
"ம்ம்ம்..... ரொம்ப ஸ்வீட்டா... "என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.... இனியனும் சந்தோசத்தோடு அவள் பின்னே சென்றான்......
பின்னர் துளசி இசைக்கு பூ வைத்து விட்டு நிச்சயத்திற்கு நாள் குறித்து விட்டு சென்றனர்.... போகும்போது இசையிடம் கைபேசி எண்ணை கொடுத்துவிட்டு மனமே இல்லாமல் சென்றான்..........