எனை மீட்டும் இயலிசையே -3

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
3

நீ மாயமோ மந்திரமோ....

என்னை மயக்கிய வெண்ணிலவோ..

உன்னை எந்தன் கண்ணோடு

கட்டி வைத்து பொத்தி வைப்பேன்

நெஞ்சுக்குள்ளே......


"என்னடா குட்டிமா.... எங்க கிளம்பிட்ட.. "

"கோவிலுக்கு ஸ்வீட்டா "

"நீ மட்டுமா போற "

"ஆமாடா.... அம்மாவும் வரதா தான் இருந்தாங்க... நம்ம சுமதி சித்திக்கு உடம்பு சரியில்லைனு போன் பண்ணாங்க.... அவங்கள கூட்டிட்டு ஹாஸ்பிடல் போயிருக்காங்க... "

"சரி பாத்து போய்ட்டு வா குட்டிமா...

நான் இன்னைக்கு ஒருத்தர பிசினஸ் விஷயமா பாக்க போகணும்... இல்லனா நானே கூட வந்துருப்பேன்... "

"பரவாயில்லை ஸ்வீட்டா,.... நான் போய்ட்டு வந்துறேன்.. பை..... "

"பை குட்டிமா "

இசை ஆட்டோவில் கோவிலுக்கு வந்தாள்... அர்ச்சனை கூடையை வாங்கி கொண்டு கோவிலுக்குள் வந்தவள் அடிபிரதக்சனம் செய்ய ஆரம்பித்தாள்...

தன் பாதத்தில் கவனம் வைத்து வந்தவள் திருப்பத்தில் கவனியாது எதிரில் வந்தவன் மேல் மோதி விட கீழே விழ பார்த்தவள் தாங்கி பிடித்தான் சத்யன்....

சுதாரித்து நின்றவள் அப்போது தான் சத்யனை பார்க்க அங்கு அவனை எதிர்பாராத சந்தோஷத்தில் மீண்டும் தடுமாற கை பிடித்து நிறுத்தினான் சத்யன்

"என்ன இயல் என்னை பார்த்தா பூதம் மாதிரியா இருக்கு....இப்படி கையெல்லாம் நடுங்குது.... "

"அப்படியெல்லாம் இல்லை.... திடீர்னு உங்களை இங்க பார்த்ததுல ஒரு சின்ன ஷாக்... அவ்ளோதான்.... "

"ஹ்ம்ம்.... அதான பார்த்தேன்... என்னடா காலையில் தான் கண்ணாடில பார்த்தோமே.... ஆறடில ஆஜானுபாகுவான தோற்றத்துல அடர்த்தியானா முடிக்கற்றைகள் நெத்தில புரள இந்த சந்தன கலர் சட்டையில் அம்சமா இருக்கோம்னு நினச்சேன்.... நீ சொல்லு நான் எப்படி இருக்கேன்... "

இவ்வளவு நேரம் அவன் சொல்ல சொல்ல அவனை ரசித்த கொண்டிருந்தவள் அவளையும் அறியாமல் "ம்ம்.... நீங்க ரொம்ப ஹண்ட்ஸம் தான்..." என்று மனதில்

நினைத்ததை வாய் விட்டே கூறி விட்டாள்....

"ஹுர்றே.... "என்ற கத்தலில் தான் இயல்க்கு தான் பேசியது உறைத்துவிட மெல்ல நாக்கை கடித்து கொண்டாள்.

"ஓகே ஓகே.... சரி என்ன அடிப்பிரதக்சனம் எல்லாம் ஏதாச்சும் வேண்டுதலா "

"அப்டிலாம் இல்லை... எப்ப வந்தாலும் மூணு தடவை செய்வேன்... நீங்க எங்க இங்க.. "

"நீ இங்க வரேன்னு ஒருத்தங்க சொன்னாங்க ... அதான் ஓடி வந்துட்டேன்.. "

"ம் ம்.... சொல்லிருப்பாங்க சொல்லிருப்பான்க... "

அவள் பேசிக்கொண்டு இருக்கும் போது தான் அவள் காலை கவனித்தான்... அவள் அடிப்பிரதக்சன நிலையிலேயே நிற்பதை...

"ஓ.... சாரி இயல்.... நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன்.... கால் வலிக்குதா... "

"வலி எல்லாம் இல்ல.... நீங்க உக்காருங்க.... இன்னும் ரெண்டு சுத்து தான்... சுத்திட்டு வந்துறேன்.. "என்று அவள் சொல்ல சொல்ல கேட்காமல் சுற்றி முடிக்கும் வரை கூடவே வந்து அம்மனை தரிசித்து விட்டு பிரசாதம் வாங்கி கொண்டு வெளியில் வந்து அமர்ந்தனர்...

"நான் வச்சி விடவா இயல் "

இசை வைத்து விடுங்கள் என்பது போல நெற்றியை காட்ட குங்குமத்தை வைத்து விட்டான்...

அதே போல் இசையும் சத்யனுக்கு வைத்து விட்டாள்...

உன் நெற்றியில் நான்

குங்குமம் இட

உன் நாணச் சிவப்பை

என் கைகளில் பூசிக் கொண்டேன்


ஏனோ அந்த ஏகாந்த நேரம் இருவரின் மனதோடு நெருக்கமான உணர்வை ஏற்படுத்தியது....

"நீ யாராவது லவ் பண்ணிருக்கியா இயல் "

"ஏன்... நான் ஆமாம்னு சொல்லிட்டா அவங்களோட என்னை சேத்து வைக்கற பிளான்லா இருக்கீங்களா... "

ஒரு நிமிடம் திடுகிட்டவன் இசையின் கண்களில் தெரிந்த குறும்பில் அவன் சுவாசம் சீரானது....

"அப்பிடிலாம் என்னோட இயலை யார்க்கும் விட்டு தர மாட்டேன் "என்ற உறுதியான குரலில் உரைத்தவனை கண்டு இயலின் மனது கர்வம் கொண்டது...

"அப்புறம் எதுக்கு அப்டி ஒரு கேள்வி.. இருந்தாலும் பதில் சொல்றேன்... எனக்கு இந்த லவ் மேல இருக்கற நம்பிக்கையை விட அப்பா அம்மா மேல அதிக நம்பிக்கை இருக்கு... அவங்க எனக்கு கொடுத்திருக்க சுதந்திரத்தை மிஸ்யூஸ் பண்ண இஷ்டம் இல்லை.. அது மட்டும் இல்லாம சின்ன வயசுல இருந்தே அறேஞ்ஜ் மேரேஜ்ல தான் ஒரு ஆர்வம்..."

" சரி இப்ப என்னை லவ் பண்ணலாமே.... "

"அதான் பண்றேனே... "

"அதை என்கிட்ட எப்ப சொல்லுவ..."

என்று கேட்டு கொண்டே இயலை நெருங்கி அமர

அவள் விலகி கொண்டே...."சொல்லிக்கலாம்... சொல்லிக்கலாம்.... "

சத்யன் மீண்டும் நெருங்கி அமர்ந்து அவள் நகராதவாரு அவள் கையை பிடித்து தன் மடியில் வைத்துக் கொண்டான்....

"சரி உனக்கு பிடிச்சப்பவே சொல்லு... நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் "

"சொல்லுங்க "

"எனக்குன்னு ஒரு கொள்கை இருக்கு இயல்..... எனக்கு பொய் என்கிற விஷயம் பிடிக்காது..... நானும் பொய் பேச மாட்டேன்... பொய் பேசறவங்கல நான் மன்னிக்க மாட்டேன்... அதுவும் எனக்கு பிடிச்சவங்க என்கிட்ட பொய் சொன்னா அவங்கள எப்பவும் மன்னிக்க மாட்டேன்... அவங்கள விட்டு நிரந்தரமா விலகிருவேன்... "

"நானா இருந்தா கூடவா... "

"நிச்சயமா... "

அவனின் இந்த பதிலில் அவள் சிலையாகி போனது ஒரு நிமிடம் தான்... மறுநிமிடம் அவனின் இந்த குணமே இசைக்கு சத்யனை மேலும் பிடிக்க வைத்தது....

"இப்பவும் என்னை உனக்கு பிடிச்சிருக்கா இயல்.. "

"இப்பதான் உங்களை ரொம்பவும் பிடிச்சிருக்கு சத்யா... "

"ஹேய் என்ன சொன்னா "

"அது..... உங்களை... பிடிச்சிருக்குனு... "

"ம்ஹும்... என்னை எப்படி கூப்பிட்ட.."

"அது..... சத்யா.....னு..... சாரி... உங்களுக்கு பிடிக்கலைன்னா கூப்பிடல.. "

"ம்ஹும்.... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இயல்.... "

"ம்ம்ம்.. டைம் ஆகிட்டு... போலாமா.. "

"ம்ம்.... "

சத்யன் இயலை வீட்டிற்கு கூட்டி சென்றான்...

"கடைசி வரைக்கும் நீங்க எப்படி வந்தீங்கனு சொல்லவே இல்லை "என்று காரில் போகும்போது கேட்டாள்...

சத்யனும் சிரித்து கொண்டே " உங்க அண்ணன் கிட்ட உன்னோட நம்பர் வாங்க பேசினேன்... அப்பதான் எதுக்கு மாப்பிளை என்கிட்ட கேக்கறீங்க.. எங்க குட்டிமா கிட்டயே கேட்டுக்குங்கனு சொல்லி விவரம் சொன்னாரு... என் மச்சான் சூப்பர்ல "

"ரொம்பவே..... "என்று சொல்லிவிட்டு இருவரும் கைபேசி எண்ணை பரிமாறிக் கொண்டனர்....

சத்யன் இசையை அவள் வீட்டில் இறக்கி விட்டு தனியாய் இருப்பதால் பாதுகாப்பாக இருக்க சொல்லிவிட்டு சென்று விட்டான்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN