ஈரவிழிகள் 7

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிறந்த ஊரே அவனுக்குத் துணை நிற்காமல் தூற்ற... உடன்பிறப்புகள் அவனுக்காக தோள் கொடுக்காமல் போக... பெற்ற தந்தையிடம் அடி வாங்கி... எதிரியான முத்தரசியின் ஏளன பார்வைக்கும்... குத்தல் பேச்சுக்கும் இடையில் தன் திருமணம் நடந்தேறும் என்பதை கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை குமரன்.

இப்படி ஒரு திருமணம் நடக்க ஒரே காரணம் அவனைத் தாயாய் வளர்த்த மீனாட்சி மட்டும் தான். தமக்கையைப் பற்றி நினைக்க நினைக்க அவனுள் கோபம் என்னும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. தமக்கையின் செயல் இவனுக்கு அறிவீனமாய் பட்டது. இல்லை இல்லை.. வடிகட்டின முட்டாள் தனம்... இல்லை இல்லை அப்படியும் இல்லை…. சுத்த பைத்தியக்காரத்தனம்.

‘இப்படி ஒருத்தர் இருப்பாங்களா? இருப்பாங்களா என்ன... அதான் என் கண்ணெதிரிலே என் கூடப் பொறந்த பொறப்பு இருக்கே!’ அவனே கேள்வியும் கேட்டு... இப்படி தான் அவனுக்குள் பதிலும் கொடுத்துக் கொண்டான் குமரன்.

பொய் சொல்லி என் கல்யாணத்தைக் கெடுத்து என் வாழ்க்கைல நுழைஞ்சிருக்கற அந்த பொண்ணுக்கு ஏதோ பிரச்சனையாம்.. அது என்னான்னு தேடிக் கண்டுபிடிச்சி.. அந்த குழந்தைக்கும் அந்த பொண்ணுக்கும் நான் துணையா இருந்து அதை சரி செஞ்சி.. அவங்க வாழ்க்கை நல்லா இருக்க நான் பாடுபடணுமாம்... இதெல்லாம் என் அக்கா சொல்றது.

இங்க என் வீட்டுலயே ஆயிரத்தெட்டு பிரச்சனை கெடக்கு. அத சரி செய்யவே என்னாலே முடியல... என் அக்காவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் குடுக்க என்னால் முடியல.. இதுல வந்த பொண்ணோட கடமையை வேற நான் பாக்கணுமாம்...” குமரனுக்குள் இருந்த வலிக்கு வீட்டை விட்டு வந்த பிறகு தனிமையில் இப்படி எல்லாம் வாய் விட்டே புலம்பினான் அவன். என்ன புலம்பி என்ன.. அக்காவை அவனால் வருத்திப் பார்க்க முடியாதே... இது தானே அவனின் வளர்த்த பாசம்.

அக்காவிடம் இருக்கும் கோபத்தைப் போல் கொஞ்சமும் குறையாத கோபம் இன்னொருவரின் மேலும் அவனுக்கு இருந்தது.. அவர் தான் பரஞ்சோதி வாத்தியார். தந்தையை இவன் சீண்டவும்... அவருக்குள் இருந்த ஈகோவால் எதையும் தீர விசாரிக்காமல்... அதை விட பெற்ற மகனை நம்பாமல் இவனைத் தாலி கட்ட அவர் சொன்னார் என்றால்... அதை பரஞ்சோதி ஐயா பார்த்துக் கொண்டு தானே இருந்தார்.

அதிலும் தனி மனிதன் என்று செல்லும் ஒருவரின் வாழ்வு... பொதுவில் வந்தால் அதை நான்கு… ஐந்து ஊர் தலைகள் அமர்ந்து பேசி தான் முடிவு எடுப்பார்கள். அந்த தலைகளில் பரஞ்சோதி வாத்தியாரும் ஒருவர். ஆனால் அவருமே தந்தையைத் தடுக்கவில்லையே. தடுக்கவில்லை என்ன.. இந்த திருமணம் வேண்டாம் என்று இவனுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லையே... அதை எல்லாம் நினைக்க நினைக்க இவனுக்குள் வருத்தம் படர்ந்தது. ஆமாம் வருத்தம் மட்டும் தான்.. கோபம் எல்லாம் பட மாட்டான். ஏனென்றால் குமரன் சுபாவம் அப்படி.

இங்கு இவன் இப்படி இருக்க... அங்கு வீட்டில் அவன் மனைவியோ... அனைவரிடமும் ராசியாகி இருந்தாள். குமரன் வீட்டை விட்டு கிளம்பிச் சென்ற சற்று நேரத்திற்கு எல்லாம்... உறவு முறைகள் எல்லாம் கோவிலிலிருந்து வந்து விட... வீடு முழுக்க பேச்சும்… சலசலப்பும்… இரைச்சலாகத் தான் இருந்தது.

கோவிலிலேயே குமரன் செய்ததைப் பற்றி அலசி.. ஆராய்ந்து பேசியவர்கள்... அதையே இங்கேயும் தொடர... மீனாட்சிக்கு தான் அச்சோ என்று இருந்தது. வந்திருக்கும் பெண்ணை ஏதாவது பேசிவிடுவார்களோ என்ற பயம் அவளுக்கு. ஆனால் இப்படியான பயம் எதுவும் இல்லாமல்.. வந்தவளோ இயல்பாகத் தான் அங்கு வலம் வந்து கொண்டிருந்தாள்.

குமரனுக்கு அப்பத்தா முறை உள்ள பெருசுகள் எல்லாம்.. பேரன் மனைவியின் பல் வரிசை சரியாக இருக்கிறதா என்பதில் ஆராய்ச்சியை முதலில் ஆரம்பித்து பின் அவள் கால் நகம் வரை ஆராய... அதற்கு குமரன் மனைவி பொம்மை போல் அவர்கள் முன் நின்றாளே தவிர எதற்கும் முகம் திருப்பவில்லை அவள்.

அவர்களிடம் மட்டுமா.. அவளுக்கு மாமியார் முறை உள்ளவர்கள் இவளிடம் முகம் திருப்பினாலும்.. இவள் சகஜமாகவே அவர்களிடம் நடந்தாள். அதைக் கண்டவர்கள்... ஒரே நாளிலேயே பெண் நல்லவள் தான் போல என்ற பட்டத்தை வந்தவளுக்கு வழங்கினார்கள்.

யாரையும் பார்க்க பிடிக்காமல் பிகு செய்து அறைக்குள்ளேயே முடங்கி இருக்கவில்லை அவள். அதற்காக எல்லோரிடமும் வழிந்து நெளிந்து பேசவில்லை. யார் எது கேட்டாலும் டான்... டான் என்று பதில் கொடுத்தாள்.. கூப்பிட்ட குரலுக்கு வந்து நின்றாள்.. உறவுகளை அன்பாய் உபசரித்தாள். எல்லாவற்றையும் விட... அவள் முகத்தில் வாடா சிறு புன்னகை ஒன்று எப்போதும் தவழ்ந்து கொண்டே இருந்தது.

இதனால் அங்காளி பங்காளிகள் கூட...
“ஏதோ நம்ம புள்ள தப்பு செய்துடுச்சு... அதுக்காக நம்ம பிள்ளைய விட்டுட முடியுமா.... நீ செஞ்சது தான் சரி கார்மேகம்...”

“அட... பணம் என்ன பணம்.. பொண்ணு குணமா இருக்கு இத விட வேறென்ன வேணும் ஒரு பொண்ணுக்கு...”

“பொண்ணுக்கு யாரும் இல்லன்னு நெனைக்காத... அதான் நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல... குமரன் பொஞ்சாதிக்கு ஒண்ணுன்னா வுட்டுடுவோமா என்ன...” இப்படியான வார்த்தைகள்... அங்கு கார்மேகத்திடமும்... மற்றவர்களிடமும் தவழ்ந்து கொண்டே இருந்தது. வந்த உறவுகளில் சிலர் கிளம்பி விட... அங்கிருந்தவர்களில் இன்னும் சிலர் அசதியில் உடலை நீட்டி படுத்து விட்டார்கள்.

குமரனின் மனைவியும் சிறிது நேரம் தூங்கி எழவும்... அந்நேரம் கையில் மாலை நேர சிற்றுண்டியுடன் உள்ளே நுழைந்தாள் மீனாட்சி.

“எழுந்துட்டியா... அந்தி சாய்ஞ்சிடுச்சே... உன்னைய எழுப்பலாமேன்னு வந்தேன். போய்... முகம் கழுவிட்டு வா... சாப்புடலாம்...” என்று வந்தவள் சொல்ல

“ம்ம்ம்.. சரிங்க அண்ணி...” சின்னவள் விலக எத்தனித்த நேரம்

மீனாட்சி அவளிடம் ஏதோ கேட்க நினைத்தவள்... வந்தவள் பெயர் தெரியாததால்... ‘இந்தா புள்ள’ என்று தம்பி மனைவியை அழைக்க விருப்பம் அற்றவளாக திணறியவள்... பின் எட்டி சின்னவளின் கையைப் பிடித்துக் கொள்ள

“என்னங்க அண்ணி...” சின்னவள் கேட்க

“ஆமா... உன் பேரு என்ன?” மீனாட்சி கேட்க

“உங்களுக்கு தெரியாதா... அது வந்து...” என்று பெயர் சொல்ல வந்தவள் பின் விழிகள் பளிச்சிட... “உங்க தம்பி பேரு குமரன்... அப்போ என் பேரு என்னவா இருக்கும் நீங்களே சொல்லுங்க...” தலையை சரித்து இவள் எதிர்பார்ப்புடன் கேட்கவும்

சின்னவளின் செயல் பெரியவளைக் கவர்ந்தாலும்... அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்... அதையும் நீயே சொல் என்பது போல் மீனாட்சி அவளைப் பார்க்கவும்... அதில் கொஞ்சமும் பிகு செய்யாமல் இவளோ,
“என் பேர் வள்ளி...” என்று அறிவித்தாள் குமரனின் மனைவி. பின் நினைவு வந்தவளாக,
“எதுக்கு அண்ணி என்னை நிறுத்தினிங்க?” என்று கேட்க

“அதுவா... வந்ததுல இருந்து நானும் பாக்கறேன்.. அஸ்மிக்கு புட்டி பால் தான் குடுக்கற... தாய்ப்பால் கூட இல்ல. ஏன்.. வேற எதுவும் ஊட்ட ஆரம்பிக்கலையா...” தான் அவளை நிறுத்தியதற்கான காரணத்தை இவள் சொல்லவும்

“பட்டுக்கு ஒரு வயசு இருக்கும் போதே தாய்ப்பால் நிறுத்தியாச்சு அண்ணி... இப்போ அவளுக்கு ஒன்னரை வயசு. பருப்பு சாதம்.. இட்லி.. வேகவெச்ச ஆப்பிள் எல்லாம் குடுப்பேன். நடு நடுவுல பூஸ்ட்... ஹார்லிக்ஸ்ன்னு இப்படியும் குடுப்பேன் அண்ணி...”

“என்னது.. ஒரு வயசுக்கு மேல குடுக்கலையா! நீங்கெல்லாம் என்ன தான் பொண்ணுங்களோ... நீ சொன்ன அந்த பூஸ்ட் ஆர்லிக்ஸ்னு எதையும் இனி அவளுக்கு குடுக்காத. அதான் வயசுக்கு ஏத்த வளர்த்தியே அவ கிட்ட இல்ல. சத்துமாவு கஞ்சியிலிருந்து அவளுக்கு வேண்டியது எல்லாம் நான் செஞ்சு தரேன். போ... இப்ப போய்... மொகம் கழுவிட்டு வா...” என்று சொல்லி சின்னவளை அனுப்பியவள்... பின் கட்டிலில் அமர்ந்து அஸ்மியை மடியில் அமர்த்திக் கொண்டாள் மீனாட்சி.

வள்ளி வந்ததும் அவளை சாப்பிட சொல்ல...
“நீங்களும் சாப்பிடுங்க அண்ணி...” இவள் மீனாட்சியை உண்ண அழைக்க

“அஸ்மி... எந்திருச்சிட்டா... நான் அவளைப் பாத்துக்கிறேன்... நீ சாப்புடு...” பெரியவளின் பதிலில் இவள் உண்ண ஆரம்பிக்க

வள்ளி உண்ணும் வேகத்தையும் அவள் தின்பண்டத்தை ரசித்து உண்ணும் பாங்கையும் கண்ட பெரியவள்,
“என்ன வள்ளி... உனக்கு இதெல்லாம் சாப்ட ரொம்ப புடிக்கும் போல...” என்று கேட்க

வள்ளி, “புடிக்குமாவா... நீங்க வேற... முதல் முறையா இதெல்லாம் திங்கறதால... ருசி... அது பாட்டுக்கு என்னைய தானா இழுக்குதுங்க..”

“அப்டியா! அப்போ இதெல்லாம் நீ சாப்டதே இல்லையா வள்ளி... அட இதெல்லாம் என்னன்னு உனக்கு தெரியாதா...” கேள்வி என்னமோ சாதாரணமாக இருந்தாலும் மீனாட்சியின் குரலோ அப்படி இல்லை.

அதை உணர்ந்து கொள்ளாத வள்ளி... “ம்ஹும்... ஏதோ பழ ஜூஸ்... அப்புறம் உடலுக்கு சத்து தர்ற பொருளுங்கன்னு மட்டும் தெரியுது. ஆனா இதுக்கு எல்லாம் என்ன பேர் சொல்லுவாங்கன்னு கூட எனக்கு தெரியல அண்ணி. ஆமா.. இதுக்கெல்லாம் என்ன பேர் அண்ணி?” சுவாரசியமாக கையில் இருந்த பக்கோடாவை வாயில் திணித்துக் கொண்டே சின்னவள் கேட்க

மீனாட்சி, “நுங்கு பாயாசம்... கேப்பை மாவு லட்டு.. கம்பு மாவில் வெங்காயம் கலந்து செய்த பக்கோடா...”

அவ்வளவு தான்.. வள்ளியின் கையில் இருந்த தட்டுக்கும்... வாய்க்கும் இடையில் சென்று வேலை கொடுத்துக் கொண்டிருந்த அவள் கை ஒரு நொடி நின்றதோ... ஆனால் அதை மீனாட்சி உணரும் முன், “அட.. இதெல்லாம் உங்க தம்பிக்கு... அதான் என் மச்சானுக்கு புடிச்சது. பாருங்களேன்.. உங்க கை பக்குவத்து ருசியில்... எனக்கு இது தான் அதுன்னு தெரியல பாருங்க. அவர் கூட எப்போதும் நான் செய்ததை சாப்டுட்டு சொல்லுவார்... என் அக்கா செய்ற மாதிரி இல்லன்னு... அது நெசம் தான் அண்ணி...” என்று மிக இயல்பாய் இவள் மொழிய...

கேட்ட மீனாட்சிக்கு தான் தலை சுற்றியது. அந்நேரம் கையில் பூவுடன் பூரணி அங்கு வந்தவள், “அக்கா பூ கேட்டீங்களே...” என்று மீனாட்சியிடம் சொல்ல

மீனாட்சி, “வள்ளி... உனக்காக தான் கட்டச் சொல்லியிருந்தேன். அத வாங்கி தலையில வச்சிகிட்டு வந்து விளக்க ஏத்திடு...”

சரி என்றபடி பூவைக் கையில் வாங்கிய வள்ளி, “பூரணி... பூ இவ்வளவு தான் இருக்கா... இல்ல இன்னும் இருக்கா...” என்று கேட்க

பூரணி, “இன்னும் இருக்குங்க சின்னம்மா...” என்று சொல்ல.. ஆமாம், வள்ளி இங்கு உள்ளவர்களுக்கு சின்னம்மா தான். குமரனை எல்லோரும் சின்னவர் என்று தான் அழைப்பார்கள். அதனால் இவளும் சின்னம்மா என்றாகிப் போனாள்.

“அதையும் எடுத்துட்டு வாயேன்...” வள்ளி சொல்ல

பூரணி எடுத்து வந்ததும்... அதை வாங்கி அழகாய் அவரவருக்கு ஏற்ற படி பல துண்டுகளாய் நறுக்கியவள், “இந்தா பூரணி.. இதை நீ வச்சிக்கோ. இது கல்பனா அக்கா... உமா அக்காவுக்கு குடுத்துடு. இன்னும் இருக்கற பெரியவங்களுக்கு நான் குடுத்திடுடறேன்... நீ போ..” என்று பூரணியிடம் சில துண்டு பூச்சரங்களைக் கொடுத்து அவளை அனுப்பியவள்

“அண்ணி இது உங்களுக்கு..” என்று மீனாட்சியிடமும்... பூவை நீட்டியவள் “அப்புறம் இது என் பட்டுக்கு...” என்றவள் அஸ்மிக்கு தலை வாரி இரண்டு பக்கமும் சிண்டு போட்டு அவளுக்கு பூ வைக்கும் நேரம்

“அத்த, இவன் என்ன அடிச்சிட்டே இருக்கான்...” என்ற புகாருடன் அங்கு வந்து நின்றாள் வாணி.

“வாணி.. நீயே வந்துட்டியா... இந்தா பூ வச்சிக்கோ...” வள்ளி சொல்ல

வள்ளியை முறைத்தவள்

“எனக்கு எதுவும் வேணாம்.. உன் கிட்ட பேச கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க...” வாணியோ முகத்தில் அடித்தாற்போல் பதில் தர..

மீனாட்சி வாணியை அதட்ட... அங்கு நடப்பவை எதையும் கண்டு கொள்ளாமல் வசந்த்... அஸ்மியிடம் நெருங்கியவன்... அவளிடம் கொஞ்சி பேசி விளையாட... அதைக் கண்ட வள்ளி, “வசந்த்... உனக்கு அஸ்மி பாப்பாவ புடிச்சிருக்கா... அவளை நீ நல்லா பார்த்துப்பியா?” என்று கேட்க

வசந்த், “ம்ம்ம்... சித்தி.. நல்லா பார்த்துப்பேன். கல்பனா சித்தி, ஷாலினியை என் கூட விளையாடவே விட மாட்டாங்க. நீங்க பாப்பாவை என் கூட விளையாட விடுவீங்க தானே?” ஆசையாய் கேட்க

“ஓ… விடுவேனே.. பாப்பா இங்க தான் இருப்பா. நீ எப்போ வேணா வரலாம்.. பாப்பா கூட வெளையாடலாம்...” வள்ளி வசந்துக்கு பச்சை கொடி காட்ட

“அப்போ என் கிட்ட பாப்பாவை தர மாட்டீங்களா சித்தி?” வாணி மெதுவாய் கேட்க

“நீ தான் என் கிட்ட பேச மாட்டேன்னு சொல்லிட்டியே... வசந்த் கிட்ட கூட தான் உங்க அம்மா சொல்லியிருப்பாங்க... ஆனா அவன் என் கிட்ட பேசுறான் இல்ல? அப்போ நான் யாரு கூட பாப்பாவ வெளையாட விடுவேன் சொல்லு?.” வள்ளி மென்மையாய் கேட்க

“இல்ல... இல்ல... இனி நானும் உங்க கூட பேசுறன்... பூ வச்சு விடுங்க சித்தி...” சின்ன பிள்ளைகளுக்கே உள்ள குணத்தில் வாணி மனம் மாறி சமாதானத்தில் இறங்கி விட...

நடந்த எல்லாவற்றையும் ஒரு நிறைவுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி. இருந்தாலும் வள்ளியைப் பற்றி முழுதாக தெரியாது என்பதால் ஒரு நெருடல் அவளுக்குள் இருந்து கொண்டு தான் இருந்தது.

இரவு ஆனதும் அவரவர் உடல் களைப்பில் உணவை உண்டு விட்டு... உறக்கத்திற்குச் சென்று விட... மீனாட்சி தான் வாசலுக்கும் வீட்டு படிக்கும் நடை பயின்று கொண்டிருந்தாள். பின்ன.. காலையில் வீட்டை விட்டுச் சென்ற அவன் அருமை தம்பி இரவு ஒன்பது ஆகியும் இன்னும் வீடு வந்து சேரவில்லையே... அதான் இந்த நடை. காலையிலிருந்து குமரனுக்கு அழைக்கிறாள்... அவன் போனை எடுத்த பாடில்லை. இப்போதாவது அவன் எடுக்க வேண்டுமே என்ற வேண்டுதலுடன் இவள் அவனுக்கு அழைக்க... இம்முறை போனை எடுத்தவன்,

“சொல்லு க்கா” என்க

“எங்க இருக்க? வீட்டுக்கு வா குமரா...”

“அக்கா, நான் தோட்ட வீட்டுல இருக்கேன்... நீ தூங்கு க்கா...” அவன் பதில் தர

“சரி தான்… அப்போ நீ சாப்புட நான் ஏதாவது எடுத்து வரேன்...”

“இந்த நேரத்துலயா... நான் சாப்டேன்... என்னைய கொஞ்சம் நிம்மதியா தூங்க விடேன் க்கா...” இவன் சுள்ளென்று சொல்லி விட

மீனாட்சியிடம் மவுனம்... இந்த மவுனம் எதற்கு என்று தெரிந்ததால், “உடனே மூஞ்சிய கசக்காத க்கா... போ போய் தூங்கு...” இவன் மறுபடியும் அதையே படிக்க...

“நீ சாப்புட்டு இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் டா... ஒரு எட்டு வீட்டுக்கு வந்து சாப்புட்டாவது போ... இல்லனா என்னாலே நிம்மதியா தூங்க கூட முடியாது பட்டு...” இவள் கெஞ்ச

“சரி, போன வை... வரேன்...” என்றவன் அடுத்த நொடி வீட்டை நோக்கி கிளம்பியிருந்தான். இவர்கள் வீடு ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருக்கும் தோட்டத்துடன் கூடிய பண்ணை வீடு என்பதால்.. அங்கிருந்து இவன் தங்கியிருக்கும் மோட்டார் வீடு கொஞ்ச தூரம் தான். அதனால் இவன் சொன்னபடியே அடுத்த சில நிமிடங்களில் வாசலில் வந்து நிற்கவும்...

தூங்குபவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் அவசரமாய் தம்பிக்காக வாசல் கதவைத் திறந்த மீனாட்சி, “நீ உன்னோட அறைக்குப் போ டா... நான் சாப்பாடு குடுத்து அனுப்பறேன்...” பெரியவள் அதே அவசரத்துடன் சொல்லவும்... ஏதோ சரியில்லையே என்ற எண்ணத்தில் குமரனின் புருவங்களோ நெரிந்தது.

ஆனால் மேற்கொண்டு எதைப் பற்றியும் அவனை யோசிக்க விடாமல்... கூடத்தில் உள்ள சாய்வு நாற்காலியில் தூங்கிக் கொண்டிருந்த வள்ளி அவன் கண்ணில் படவும்... ஒருவித உஷ்ண மூச்சுடன்... வேக நடையுடன் இவன் தன் அறைக்கு விரைய...

அங்கு அவனுடைய பாசக்கார அக்கா செய்து வைத்திருந்த கூத்தைக் கண்டவனுக்கு.. கட்டுக்கடங்காமல் அவனுக்குள் கோபம் எழ, “இதுக்கு தான் வரச் சொன்னியா?” என்று முணுமுணுத்தவன் தன் இயலாமையால்... அங்கிருந்த சுவற்றில் தன் தலையை முட்டிக் கொண்டான் இந்த பாசக்கார தம்பி.
 
Sujijohn

New member

Very nice siss
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN