ஏகத்துக்கு கடுப்பில் இருந்தான் குமரன். ‘அது யாரு என் மேல இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்த துணை போனது.. யாரா இருந்தாலும் வச்சு விலாசணும்’ என்று எண்ணத்தில் தயாராக இருந்தவன்.. வள்ளி நீட்டிய பத்திரத்தில் வீட்டின் உரிமையாளர் என்ற இடத்தில் இருந்தவரின் பெயரைப் பார்த்தவனின் உதடுகளோ அதிர்ச்சியில் “இவரா!?” என்று காற்றாகி ஒலித்தது.
அவர் மதுரை வட்டாரத்திலேயே மிகவும் நேர்மையான நல்ல மனிதர்.. அரசியலில் சில பேரிடம் நிறைய செல்வாக்கு உள்ளது இவருக்கு. ஆனால் அந்த பந்தா இல்லாமல் எல்லோரிடமும் பழகுபவர். ஏன், ஒரு முறை குமரனுக்கு தொழிலில் ஒருவனால் சில பிரச்சனைகள் வந்த போது... பிரச்சனை கொடுத்தவனை உண்டு இல்லையென்று பேசி... குமரனுக்கு ஆதரவாய் நின்றவர். அவர் எப்படி இந்த பொய்யில் உடந்தையாய் இருந்திருப்பார்? ஆனால் உண்மையாய் அவர் இருந்தார் தான்.
‘இப்படி ஒருவர் கொடுத்த வாக்கு மூலத்தால் தான் மகாலஷ்மியின் தந்தை என்னை நம்பவில்லையா? அவர் என்ன... என் தந்தையே என்னை நம்பவில்லையே... அதற்கு எல்லாம் இவர் தான் காரணமா?’ இப்படி எல்லாம் யோசித்தவன்... மேற்கொண்டு வீட்டில் இருக்க முடியாமல் அவரை நேரில் காண கிளம்பி விட்டான். அந்த பெரியவரோ இவன் பெயரைக் கேட்ட உடனே வீட்டிலும், அலுவலகத்திலும் இவனைக் காண மறுத்து விடவும்... இவனுக்கு ஒன்றும் புரியாத நிலை.
‘இதென்ன அராஜகம்! பொதுவில் என் பெயரை அசிங்கப்படுத்தியதற்கு நியாயம் கேட்க வந்தா... இப்படி பார்க்க மாட்டேனென்றால் என்ன அர்த்தம்? இவர் இப்படி செய்யக்கூடியவர் இல்லையே.. ஏதோ சரியில்லை’ என்று நினைத்தவன் வெளியே செல்லாமல் அங்கேயே அமர்ந்து விட... இதை தெரிந்தும் அந்த பெரியவர் இவனை அழைக்காமல் இருக்க... மாலை வரை பொறுத்தவன்... பின் அவர் அனுமதி இல்லாமல் அதிரடியாய் குமரன் அவர் அலுவலக அறைக்குள் நுழைய...
அந்த பெரியவர், “என்ன குமரா இது? கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாம... நான் தான் உன்னைய பார்க்க அனுமதிக்கல இல்ல... உனக்கு யார் கொடுத்த தைரியம் இது?” அவரோ பொரிய
“ஐயா... உங்க அனுமதி இல்லாம நான் உள்ளே வந்தது தப்புதான்... ஆனா எனக்கு சில விஷயங்கள் தெரியணும்...”
அவன் முடிப்பதற்குள், “என்ன தெரியணும்... நீ என்ன கேட்டாலும் என்கிட்டயிருந்து பதில் வராது. இப்போ கெளம்பு.. அதுக்கான நேரங்காலம் வரும் போது நீயாவே தெரிஞ்சிக்குவ....” பெரியவர் இன்னும் சூடாய் பதில் தர
“இது எந்த ஊர் நியாயம் ஐயா... என் வாழ்க்கையில ஒரு பொண்ணு புகுந்து... என்னை அசிங்கப்படுத்திட்டு இருக்கு... அதுக்கு நீங்க துணை… அதப் பத்தி கேக்க வந்தா.. இங்க நீங்க புதிர் போடறதும் இல்லாம என்னைய கெளப்புறதுலேயே குறியா இருக்கீங்க.. அப்படி என்ன தான் நடக்குது?” குமரனும் விடாமல் கேட்க
“எதுவும் சொல்றதுக்கு இல்ல…” அவர் அதையே படிக்க
கோபத்தில் ஓங்கி அவர் டேபிளை இவன் குத்தவும்… அதன் மேல் இருந்த பொருட்கள் எல்லாம்… அதிர்ந்து… கீழே விழுந்து சிதறவும்… “இப்படி உங்களை அடிச்சு நொறுக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது ஐயா. ஆனா நான் உங்களை என் அப்பாரு ஸ்தானத்துலே வச்சு இருக்கேன்.. அதனால தான் இதை நொறுக்கினேன்…” என்றவன் தீ பார்வையால் அவரை எரிக்க
அதில் அவர் தன்மானம் சீண்டப் பட “உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா... கெளம்பு. ஏய்.. யாருப்பா அங்க... அனுமதியில்லாம ஒருத்தனை உள்ளார விட்டுட்டு வேடிக்கை பாக்கறது.. இவனை வெளிய அனுப்புங்க...” பெரியவர் தன் அதிகாரத்தைக் காட்ட.. உள்ளுக்குள் ஆத்திரம் பொங்கினாலும் அதை வெளிக்காட்ட இயலாமல் ஒரு முறைப்புடன்
“உங்க மேல் ரொம்ப பெருசா மதிப்பும் மரியாதையும் வச்சிருந்தேங்க.. ஆனா நீங்களும் ஒரு சராசரி மனுச புத்தியைக் காமிச்சிட்டீங்க..” என்று கடித்த பற்களுக்கு இடையே சொன்னவனோ அங்கிருந்து கிளம்பியிருந்தான். அவனுக்கு மனசே ஆறவில்லை. அதில் அவனுக்குள் இருந்த கோபத்திற்கு அங்கிருந்த பூ ஜாடியைத் தூக்கிப் போட்டு உடைத்த பிறகே அவனால் சாதாரணமாக கிளம்பிச் செல்ல முடிந்தது.
இப்பாடியான அன்றைய நிகழ்விற்குப் பிறகு... இவன் தோட்ட வீட்டிற்கு வந்து தங்க... அந்நேரம் தான் மீனாட்சி அவனை அழைத்தது. இவனும் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. தமக்கை உணவைப் பற்றி சொல்லவும்... சரி போனை எடுக்காததற்கு... அக்காவைக் கொஞ்சம் சமாதானப் படுத்துவோம் என்று நினைத்து தான் இவன் வீட்டிற்கு வந்தது.
வந்தால் தமக்கையோ அவனின் மனநிலையை உணராமல் சில கேலிக் கூத்தை எல்லாம் அவன் அறையில் செய்து வைத்திருந்தாள். குமரன் சொல்வது போல் மீனாட்சி, பைத்தியம் தான்.. பாசம் வைத்த பைத்தியம். அதனால் தான் இன்றே தம்பி வாழ்வு மலர வேண்டும் என்ற வேண்டுதலில் அவன் அறையைப் பெரிதாக இல்லை என்றாலும் ஏதோ சிறியதாக மலர் தூவி அலங்கரித்து இருந்தாள். தம்பி இன்றே அவன் வாழ்வை இனிதே ஆரம்பிக்க வேண்டுமாம்.
தான் சொன்னதற்காக தாலியைக் கட்டி விட்டான்... அதனால் காலம் முழுக்க அந்தப் பெண் முகத்தைப் பார்க்காமல் இப்படியே இருந்து விடுவானோ என்ற கவலை அவளுக்கு. அவள் வளர்ந்த சூழ்நிலையால் தம்பியிடம் நேரடியாக இதைப் பற்றி பேசவும் அவளால் முடியவில்லை. ஒரு பூ மலர்வது போல் தான் காதல் மலரும் என்று சொல்வார்கள். அதிலும் இவர்களுக்குள் நடந்த திருமணத்தில் எங்கிருந்து காதல் மலரும்? அதுதான்.. அந்த பயம் தானே மீனாட்சிக்கும்!
கணவன் வீட்டுக்கு வந்தது கூட தெரியாமல் வள்ளி தூங்கிக் கொண்டிருக்கவும்... அவளை நெருங்கிய மீனாட்சி, “வள்ளி.. வள்ளி..” என்று எழுப்ப... அவளோ தூக்க கலக்கத்தில் புரண்டு படுக்க... அதில் கஷ்ட காலம் என்று தலையில் அடித்துக் கொண்டாள் பெரியவள்.
புகுந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து வள்ளி குமரனைப் பற்றிய பேச்சை எடுக்கவும் இல்லை... அவனைத் தேடவும் இல்லை. இரவு தூக்கத்தைக் கூட மீனாட்சியின் அறைக்குள் தூங்க என்று வந்தவளைக் கூட மீனாட்சி தான் குமரன் இன்னும் வீடு வந்து சேரவில்லை... அவன் வந்த பிறகு கதவைப் பூட்டிவிட்டு வந்து தூங்கு என்று அவளுக்கு வேலை கொடுக்கவும் தான்... கூடத்தில் வந்து உட்கார்ந்த நிலையில் தூங்கினாள் இவள். பொறுத்த மீனாட்சி சின்னவளை உலுக்கி எழுப்ப... அதற்கு சற்றே அசைந்தவள் இமை பிரித்து,
“என்ன அண்ணி...” என்க...
“குமரன் வீட்டுக்கு வந்துட்டான்...” இவள் அறிவிக்க
“ஆங்... வந்துட்டாரா... சரி வாங்க அண்ணி.. அப்போ நாம தூங்கப் போகலாம்...” என்ற வள்ளி மீனாட்சியின் படுக்கை அறையின் பக்கம் தன் நடையைப் போட...
“அவன் இன்னும் சாப்புடலயாம் வள்ளி..” பெரியவள் பட்டென்று சொல்லிவிட
“இவ்ளோ நேரங்கழிச்சு வந்தவருக்கு... வெளியேவே சாப்டுட்டு வரணும்னு அவருக்கு தெரிய வேணாம்... இந்த நேரத்துக்கு உங்களுக்கு வேலை வைக்கிறார் பாருங்க...”
சின்னவள் சலிப்பாய் சொல்லவும்.. அவளை முறைத்தவள், “அவன் பசியில வந்திருக்கான்னு சொல்றேன்... என்னமோ வியாக்கானம் பேசிட்டு இருக்க. ஏன்.. நீ அவன் பொஞ்சாதி தானே... நீ அவனுக்கு சாப்பாடு எடுத்துகிட்டு போ...” என்று இவள் முடிக்கவும்
“நானா...” சின்னவள் தயங்க... அந்த தயக்கம் கூட ஒரு நொடி தான்... பின் அதை உதறியவள்
“சரி குடுங்க அண்ணி... மாடியில் இருக்கிற முதல் அறை தானே அவருது.. நான் போறேன்...” என்க
இட்லி, சாம்பார், கொஞ்சம் பக்கோடா என்று இவள் கொடுத்து விட வள்ளி சாதாரணமாகத் தான் படி ஏறினாள். ஆனால் மீனாட்சிக்கு தான் பயத்தில் வயிற்றுக்குள் புளியைக் கரைத்தது.
வள்ளி அறைக்குள் நுழையும் நேரம், “இந்த அக்காவுக்கு வேற வேலையே இல்ல... ச்சு…” என்ற முணுமுணுப்புடன் கட்டிலில் இருந்த விரிப்பைச் சுருட்டி குமரன் தூர வீசவும்..
அது சரியாய் பெண்ணவளின் காலடியில் வந்து விழவும்.. “எதுக்கு இப்படி விரிப்பைத் தூர வீசறீங்க... அழுக்குன்னா இப்படி தான் கண்ட இடத்துலே வீசுவீங்களா...” வள்ளி கேட்க
அவளின் அதிகார தொனியில் திகைத்தவன், “ஹேய்... கொலைகாரி! உனக்கு இங்க என்ன வேல... எம்புட்டு தைரியம் இருந்தா என் ரூமுக்குள்ள வருவ நீ? மரியாதையா வெளியே போ... யார் வீட்டுக்கு வந்து யாரை அதிகாரம் பண்ற? பெரிய அல்லிராணினு நெனப்பா உனக்கு… பண்ணது எல்லாம் களவாணி தனம்… இதுல பேச்சைச் பார்…” மூச்சு மட்டும் இல்லை… வார்த்தையுமே அவனிடமிருந்து சூடாகத் தான் வந்தது
“என்னது கொலைகாரியா? நான் யாரைக் கொலை பண்ணேன் அதை நீங்க பார்த்தீங்க… நான் ஒண்ணும் களவாணியும் இல்ல கொலைகாரியும் இல்ல.. என் பேரு...” வந்தவளோ நேரங்காலம் தெரியாமல் அவனுக்கு பாடம் எடுக்க
“அடச்சே! வாய மூடு.. இனி ஒரு வார்த்தை பேசின மருவாதை கெட்டுடும்… யாரைக் கொலை செஞ்சேனா கேக்குற… ஏன், நீ என் வாழ்க்கையே கொன்னது உன் கண்ணுக்கு தெரியலையா… இதுல என்னைய வேற கொலை செய்யற நெனைப்புல வேற இருக்கியா… நீ எந்த மாரியாத்தாவா வேணா இருந்துக்க.. இப்போ வெளிய போ. நான் என்ன சொல்றனோ அதத் தான் நீ கேக்கணும். உன்னைய மாதிரி ஆளு எல்லாம் என் அறை வாசலை கூட மிதிக்க கூடாது. அதுக்கு எல்லாம் ஒரு அருகதை வேணும். ம்ம்.. வெளிய போ.. ச்சீ… போன்னு சொல்றேன் இல்ல...” ஏதோ நாயை விரட்டுவது போல் இவன் முகத்தை சுளித்துக் கொண்டு விரட்டவும்
இவளுக்குள் கோபம் துளிர்த்தது. இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்தியவள், “போன்னு ஒரு தடவை சொன்னா... போகப் போறேன்... எதுக்கு இப்படி விரட்டுறீங்க.. நானா ஒண்ணும் ஆசப்பட்டு உங்க ரூமுக்கு வரல.. அத முதல்ல தெரிஞ்சிகிட்டு பேசுங்க” என்றவள் தன் கையில் உள்ள உணவு தட்டுகளை மேஜை மேல் வைக்க உள்ளே எத்தனிக்க... உண்மையிலேயே அவள் உணவை மேஜை மேல் வைத்து விட்டுப் போகத் தான் நினைத்திருந்தாள்.
ஆனால் அவள் செயலில் அது எப்படி நான் சொல்ல சொல்ல இவள் உள்ளே வரலாம் என்று நினைத்த குமரன், “ஓஹோஹோ.. உனக்கே இம்புட்டு ஏத்தம் இருந்தா எனக்கு எம்புட்டு இருக்கும்? பொம்பள பிள்ளையாச்சேனு பார்த்தது தப்பு.. உனக்கெல்லாம் வாய்ப்பேச்சு சரிப்பட்டு வராது ” என்ற கர்ஜனையுடன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு... கூடவே நாக்கை மடித்தவன்... கண்ணை உருட்டியபடி இவன் அவளை அடிக்க எத்தனிக்க
அவன் கோலத்தைக் கண்டு மிரண்டவள் கையில் உள்ளதை கீழே போட்டு விட்டு, “ஐயயோ! அம்மா! இவர் என்னைய அடிக்கிறாரே....” தன் உள் நாக்கு அதிர இவள் போட்ட சத்தத்தில்... கருக்கலில் எழுந்து கூவ வேண்டிய சேவலே இந்நேரம் எழுந்திருக்கும் என்றால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் எழுந்திருக்க மாட்டார்களா என்ன.. வீடு அதிர, “என்ன... என்ன ஆச்சு...” என்ற பதைபதைப்புடன் அடுத்த நொடி அனைவருமே இவன் அறையில் கூடியதில்
“என்ன குமரா... இதென்ன பொம்பள பிள்ள மேல கை வெக்கறது...” ஒரு உறவுக்கார பெரியவர் கேட்க
“புருசன் பொஞ்சாதி சண்டை எல்லாம் நாலு சுவத்துக் குள்ள தான் இருக்கணும்... பண்றது எல்லாம் காவாலி தனம்... இதுல துரை அடிக்க வேற போறீங்களோ...” கார்மேகம் மகனுக்கு அறிவுரை சொல்ல
“என்ன டா குமரா இது? நம்ம குடும்பத்துல யாருக்கும் இல்லாத பழக்கம்... பொம்பள பிள்ளைங்கள அடிக்கிறது” சகோதரனாய் சேரன் அதட்ட...
“ச்சே... இந்த வீட்டுல நிம்மதியா தூங்க கூட முடியல... இதுங்க போட்ட சத்தத்துக்கு ஏழு கடல் தாண்டி இருக்கறவங்களே எழுந்திருப்பாங்க... இதுல நாங்க எல்லாம் எம்மாத்திரம்...” புருஷோத்தமன் முகத்தை சுளிக்க
தம்பியான சதீஷ் முதல்... பெரியவர்கள் வரை குமரனை ஒரு மாதிரி பார்க்கவும்... அவமானத்தில் குன்றிப் போனான் இவன். ஆனால் வள்ளிக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை போல... இந்த களேபரத்தில் மீனாட்சியின் கையில் வீரிட்டு அழும் அஸ்மியைக் கண்டவள், “அச்சோ... பட்டு ஒன்னும் இல்ல டா.... சும்மா டா...” இவள் குழந்தையை சமாதானப்படுத்த
அதை கண்ட கார்மேகம், “இனி எந்த சத்தமும் இல்லாம... அவன் குடும்பத்து பிரச்னையை அவனே பார்த்துப்பான். எல்லாரும் கெளம்புங்க.. மீனாட்சி, உனக்கு வேற தனியா சொல்லணுமா.. கெளம்பு தாயி...” என்றவர் அங்கிருந்து எல்லோரையும் கிளப்ப... ஒரு சில முணுமுணுப்புகளுடன்.… குமரனை முறைத்துக் கொண்டு தான் அனைவரும் கிளம்பினார்கள்.
அவர்கள் விலகியதும்… தொப்பென்று கட்டிலில் அமர்ந்தான் குமரன். நாள் முழுக்க பட்டினி இருந்ததால்… அவனுக்கு தலை வலி அதிகமாகியது. குமரனுக்கு இப்படி கத்தி கூச்சல் இடுவது எல்லாம் பிடிக்காது.. அவனுக்கும் அது வரவே வராது. தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தலை நிமிர்ந்து விரல் நீட்டி மிரட்டி விட்டு செல்பவன். ஆனால் இன்று முழுக்க ஊரார் முன்னிலையிலும்.. வீட்டார் முன்னிலையிலும் தலை குனிந்து நிற்கிறான்.
‘ஒரு வேளை அப்படி நிமிர்ந்து நின்னு தான் கேள்வி கேட்ட யாரோ ஒருத்தர் தான் இந்த புள்ளைய அனுப்பி இருக்கணுமோ...’ இதை நினைத்த நேரம் இவன் நிமிர்ந்து வள்ளியைக் காண... அவளோ... தோளில் குழந்தையை சுமந்து கொண்டு உணவு கொட்டிய இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்... அதுவும் சாதுவான முகத்துடன்.
‘இந்த களவாணியா அப்போ அந்த கத்து கத்துனா! அதுவும் நான் அடிக்கறதுக்கு முந்தியே! ஒருவேளை நான் மட்டும் அடிச்சிருந்தா.. என்னென்ன கூத்து பண்ணியிருப்பா?’ தலையை உலுக்கியவன்
“ஏய்... புள்ள... உன் மாய்மாலத்த எல்லாம் ஆரம்பிச்சிட்ட இல்ல… அடிக்காமலே… அடிச்சேனு என்னமா கூட்டம் கூட்டிட்ட. நீ எவனையோ காதலிச்சு ஏமாந்திட்டு உன் குழந்தையோடு இங்கே வந்து… பொய் சொல்லி என் வாழ்க்கையில் நீ நுழைஞ்சதை வச்சு நான் கொஞ்சம் உஷாராகி இருக்கணும். ச்சீ… நீ எல்லாம் ஒரு பொண்ணா… அந்த குலத்துக்கே வந்த அசிங்கம் நீ. நீ எதை நெனச்சு இங்கே வந்தியோ அதை நடத்திட்ட இல்ல? என் மானத்தை வாங்கிட்ட இல்ல? போதும்.. இனி நீ ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது. இப்போ எதையும் நீ சுத்தம் செய்ய வேணாம். அப்போ நான் உன்னைய அடிக்கல.. அதுக்கே ஊர கூட்டிட்ட.. நான் இப்ப கொல காண்டுல இருக்கேன். இப்போ உன்னைய நான் அடிச்சா கூட யாரும் என்னான்னு வந்து கேக்க மாட்டாங்க. ஆனா உன்னையை அடிக்க கூட என் கை படுறதுல எனக்கு இஷ்டம் இல்ல. ச்சீ! வெளிய போ...” பட்ட அவமானத்தால் ஒட்டு மொத்த வெறுப்பையும் தன் குரலில் காட்டி அவன் அவளை விரட்ட...
ஒரு நிமிடம் தான் செய்திருந்த வேலையை நிறுத்தி விட்டு அவனை நிமிர்ந்து பார்த்தவள்.. என்ன நினைத்தாளோ... உடனே குழந்தையை தூக்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள் பெண்ணவள்.
எவ்வளவு கோபம் என்றாலும் குமரன் இப்படி எல்லாம் பேசுபவன் இல்ல… ஆனால் இன்று அவன் இயல்பையே மாற்றி இருந்தாள் வள்ளி.
தற்போது... கோபம், ஆத்திரம், எல்லாம் விடுத்து காலையிலிருந்து இப்போது வரை நடந்த அனைத்து விஷயங்களையும் நிதானமாக யோசித்தவனுக்கு... இறுதியாய் ஒன்று மட்டும் புரிந்தது. இன்று அவன் வாழ்வில் நடந்து முடிந்த திருமண நிகழ்வில்... யார் யாரோ பெரிய தலைகள் சம்பந்தப் பட்டு இருக்கிறார்கள் என்பதும்.. அதனால் கோபப்படாமல் அவசரப்படாமல் விஷயத்தைப் பொறுமையாகத் தான் கையாள வேண்டும் என்று முடிவெடுத்தான் அவன். சிறுவயதிலிருந்து பொறுமையையும், நிதானத்தையும் கையாள்பவன் என்பதால் இந்த முடிவு ஒன்றும் சிரமமானதாக இருக்கப் போவது இல்லை குமரனுக்கு.
இப்படியான முடிவை எடுத்த பிறகு... இவன் தன் அறையை விட்டு வெளியே வர... அங்கு மாடி வராண்டாவில் குழந்தையுடன் தரையில் படுத்திருந்தாள் வள்ளி. அவளை அங்கு கண்டதும் கடுப்பேற, “உனக்கு எத்தன தடவ சொல்றது.. சொரனைனா கிலோ எவ்ளோனு கேட்பியா… உன்னைய நான் கீழே தானே போக சொன்னேன்?” இவன் கடுப்பு குரலில் கேட்க
அவன் குரல் இறுகி இருப்பதிலேயே... அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசுவதை உணர்ந்தவள், “கீழே உங்க உறவு முறைங்க எல்லாம்... தூங்கப் போகாம உட்கார்ந்து இருக்காங்க. இப்போ நான் போனா மறுபடியும் பிரச்சனையான்னு... என்ன எதுன்னு கேட்க வந்துடுவாங்க அதான்...” இவள் மென்மையாக பதில் தர
அவள் சொல்வது உண்மையா இல்லை வேறு ஏதாவது நாடகமா என்று ஒரு நொடி யோசித்தவன்.. பின் மாடி வளைவில் நின்று கீழே காண... அங்கு தூக்கம் கலைந்த நிலையில் சில உறவுகள் அமர்ந்து பேசிக்கொண்டும்... சில பெருசுகள் வெற்றிலை இடித்துக் கொண்டும் இருந்தார்கள். மேல் வராண்டாவிலும் ஒரு ஒற்றை சோஃபா இருந்தது. ஆனால் அதில் குழந்தையுடன் இவள் படுக்க முடியாது என்பதை உணர்ந்தவன் “இந்தா.. உள்ளே என் அறையில் போய் தூங்கு...” இவன் சொல்ல
அவளோ நின்ற இடத்திலிருந்து அசையவேயில்லை, “உன்கிட்ட தான் சொல்றேன்... காதுல விழல? நான் ஒரு தடவை தான் சொல்வேன்.. சும்மா சும்மா சொல்ல மாட்டேன்..” இவன் அழுத்திச் சொல்லவும்... படக்கென்று உள்ளே விரைந்தவள்... அவசர அவசரமாக அறையை சுத்தம் செய்து விட்டு வந்து வள்ளி குழந்தையைத் தூக்க... அதுவரையில் அங்கிருந்த சோஃபாவில் கண் மூடி தலை சாய்த்து அமர்ந்து இருந்தவன்... பின் அவளுடனே அறைக்கு வந்தவன் அவனின் பீரோவைத் திறந்து... கட்டில் விரிப்பையும் போர்வையையும் தந்தவன் “தரையில் போட்டு படு” என்றான். இதுதான் குமரன்.. என்ன தான் அவள் மீது ஆத்திரம், கோபம் இருந்தாலும் ஒரு குழந்தையுடன் அவளை அந்த நிலையில் பார்த்த போது மனம் இரங்கத் தான் செய்யும் அவனுக்கு.
அவன் கொடுத்ததை வாங்கியவள், அவன் சொன்னபடியே செய்து மகளை அதில் படுக்க வைத்தவள் நிமிர... அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான் குமரன். அவன் ஏதாவது பேசினால் வாய்க்கு வாய் சமாளிப்பவள் இப்படி அவன் ஆழ்ந்து பார்க்கவும்... உள்ளுக்குள் உதறல் எடுத்தது வள்ளிக்கு..
“எதுக்கு இப்படி வேசம் போட்டுட்டு வந்து பொய் சொல்லுவானேன்... அந்த ஆட்டம் ஆடுவானேன்... இப்போ பிச்சைக்காரி மாதிரி தரையிலே அப்படி சுருண்டு படுப்பானேன்...” இவன் குரலில் எள்ளலுடன் கேட்க, அவளிடம் மவுனம் மட்டுமே.
“நான் உன் கிட்ட தான் கேட்டேன் புள்ள...” இவன் கடித்த பற்களுக்கு இடையில் வார்த்தைகளைத் துப்ப
“அது.. நீங்க என்னைய அடிக்க வந்தீங்களா.. அதான்..”
“ஓ… பயமா உனக்கா…” என்று போலியாய் வியந்தவன்… “பெறகு.. நீ என் வாழ்க்கையை வச்சு செய்யறதுக்கு.. அடிக்காம உன்னையை கொஞ்சுவாங்களாக்கும்..” அவனிடம் அதே எகத்தாளம்.
இவளும் தற்போது தன் பழைய நிலைக்கு வந்திருந்தாளோ.. தூங்கும் மகளைத் திரும்பிப் பார்த்து கண்களால் அவனுக்கு சுட்டிக் காட்டியவள், “நீங்க என்னைய கொஞ்சாமா தான் நம்ம பட்டு வந்தாளா?” இவள் பட்டென்று கேட்டு விட
பல்லைக் கடித்தபடி... அவள் முகத்தை ஆழ்ந்து நோக்கியவன், “அப்படியா... நான் உன்னைய கொஞ்சி இருக்கேனா? அப்போ எனக்கு எல்லா உரிமையும் உன் கிட்ட இருக்குங்கிற. சரி, அப்போ இன்னைக்கும் உன்னைய கொஞ்சறேன் வா...” வலுக்கட்டயாமாய் சில அடிகள் எடுத்து வைத்து இவன் வள்ளியை நெருங்க
அவளோ எந்த வித அலட்டலும் இல்லாமல் சுவரோரம் ஒட்டி நின்ற படி... ‘நீ என் புருஷன் தானே... அதனாலே எனக்கு ஒண்ணும் பயம் இல்ல...’ என்பது போல் அவள் இயல்பாய் அவனைப் பார்க்க.. அதில் குமரனின் நடை தான் தடைபட்டது. சாதாரணமாகவே பெண்களிடம் நெருங்க மாட்டான் இவன். அதிலும் பொய் சொல்லி கழுத்தில் தாலி வாங்கிக் கொண்ட இவளையா நெருங்கி விடுவான். இவன் அவளிடம் உண்மையை வாங்கத் தான் நெருங்கியது. ஆனால் இதை அறிந்த அவளோ கில்லியாக இருந்தாள்.
“உனக்கு ரொம்ப துணிச்சல் தான் புள்ள… ஆனா பாரேன்… உன்னை மாதிரி ஆளுக்கு துணிச்சலுக்கு சொல்லவா வேணும்…” நின்றவன் சொல்ல
“அது… என்ன உன்னை மாதிரி… என்ன பற்றி உங்களுக்கு என்ன தெரியும்.. ஆஹ்…” இவள் கோபமாய் கேட்க…
“தெரிஞ்சிக்க விருப்பம் இல்ல.. நீ அந்த முத்தரசி மாதிரி.. சாக்கடையில் உருள்ற பன்னி தான்னு தெரியும்… அதிலும் நாத்தம் புடிச்ச சாக்கடையில…”
அதாவது இவளை காசுக்காக எது வேண்டுமானாலும் செய்கிற அந்த மாதிரி பொண்ணு என்ற அர்த்ததில் தான் அவன் சொல்கிறான் என்பது புரிந்ததும்.. “stop it… இங்க நீங்க என்றதால் தான் நான் அமைதியா இருக்கேன்… இதே வேற யார்னா என்னை இப்படி பேசி இருந்தா.. வெட்டி இருப்பேன்… நானும் இதே மண்ணுல பிறந்த தமிழச்சி தான்… உங்களை விட காரணம்… உங்க வாழ்க்கையில் நான் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் நுழைந்ததால் தான்… அதான் உங்களை வெட்டல… ஆனா இனி பேசினா பேசுற நாக்க இழுத்து வச்சு நறுக்கிடுவேன்…” இவள் எச்சரிக்க
“அஹ்.. வீரத் தமிழச்சியா! ஆனா பாரு இந்த வசனத்தை எல்லாம் நீ உனக்கு குழந்தையை கொடுத்துட்டு ஏமாத்திட்டு போனவன் கிட்ட இல்ல பேசி இருக்கணும்…”
“அட… நான் அவர் கிட்ட தானே பேசிட்டு இருக்கேன்…” உனக்கு சளைத்தவள் நான் இல்லை என்பது போல் இவள் பதில் தர..
அதில் பல்லைக் கடித்தவன்.. “உனக்கு துணிச்சல் அதிகம் தான்..” இவன் திரும்ப அதே சொல்ல
“உங்க மனைவி இல்ல மச்சான்.. அப்படி தான் இருப்பேன்.. இருக்கணும்...” இவளும் பதில் தர
“முதல்ல இந்த மச்சான்னு சொல்றத நிறுத்து. கேக்கவே நாராசமா இருக்கு. உனக்கு ஒண்ணு தெரியுமா... நீ என்ன தான் மச்சான்னு எங்க ஊரு பொண்ணுங்க கணக்கா பேசுனாலும்... நீ எங்க ஊர்க்காரி இல்ல. அதாவது நீ கிராமத்துல பொறந்து வளர்ந்த புள்ளையே இல்ல. உன் நடை உடை பேச்சுன்னு... அதைக் காட்ட நீ என்ன தான் மெனக்கெட்டாலும் இந்த மண்ணுல பொறந்து.. பல ஊர் புள்ளைகளோட பழகுன எனக்கு... யார் எங்க மண்ணு காரின்னு தெரியாதா... காலையில கோவில்லயே இதை நான் கண்டு புடிச்சிட்டேன்...” இவன் ஜபர்தசாய் சொல்ல
அதுக்கு என்ன என்பது போல் பார்த்த பெண்ணவளோ, “இதென்ன பெரிய விஷயமா.. அப்படி இருந்த உங்க பொண்டாட்டியான என்னை இப்படி மாத்தினதுல... நீங்க பெருமை தான் படணும்...” இவள் சிலாகித்துக் கொள்ள
“ஊருக்காக சொல்ற பொய்யை அப்படியே என் கிட்டயும் சொல்றியா?”
“ஊஹும்... இது நெசம். நேற்று வரை இல்ல... ஆனா இன்னைக்கு காலையிலிருந்து நான் உங்க பொண்டாட்டி...” இவள் தன் கழுத்தில் இருந்த தாலியைத் தொட்டுக் காட்டி சொல்ல
“ரொம்ப ஆடாத... நீ யாரு எதுக்கு வந்திருக்கனு... என் வீட்டில் உள்ளவங்களுக்கு உன் நிஜ முகத்தைக் காட்டி... என் அக்கா கட்ட சொன்ன இந்த தாலியை... அவங்களே சொல்லி.. என் கையாலயே... இந்த தாலியைக் கழட்டி... உன்னைய இந்த வீட்டை விட்டு தொரத்துறனா இல்லையான்னு பாரு...” இவன் சவால் விட
“சவாலா? சரி தான்.. உங்களுக்கு என் வாழ்த்துக்கள். அப்போ.. இளங்குமரன் மனைவியான நானும் அதான் இந்த வள்ளியும்... உங்க சவாலை ஏத்துக்கிறேன்னு அறிவிக்கிறேன். இந்த வினாடி உங்க தாலியை சுமக்கிற நான்... உங்க மனசுலயும் இடம் பிடிச்சு... இன்னொரு பட்டுவையும் பெத்து எடுக்கறேனா இல்லையான்னு பாருங்க” இவள் பதில் சவால் விட
‘ச்சீ! என்ன பேச்சு இது?’ என்ற நினைப்பில்... முக சுளிப்புடன் அங்கிருந்து விலகியிருந்தான் குமரன். அதன் பின் அவனின் இரவு படுக்கை வெளியில் இருந்த சோபாவில் தான் இருந்தது. என்ன.. அவனுக்குள் இருந்த புழுக்கத்திற்கு அவனை நித்திரா தேவி தான் நெருங்கவில்லை. இனி இவர்கள் இருவரும் விட்ட சவாலில்... யார் வெல்லப் போகிறார்கள் என்பதை வேறு நாம் பார்க்க வேண்டுமா?..