7
"சத்யா அதான் சொல்லிட்டேனே.. அப்புறமும் என்ன கோவம்.... அப்படி கோவம் இருந்தாலும் இப்படியா எழுந்து போகறது... "
அவளிடம் இருந்து தன் கையை உருவிக் கொண்டவன் அடுத்து பேசிய வார்த்தைகளில் சிலையாய் சமைந்து போனாள்...
"இதோ பாரு உனக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை.....அவள் கழுத்தில் இருந்த மாங்கல்யதை சுட்டி காட்டியவன் இது நான் உனக்கு போட்ட பிச்சைனு நினைச்சுக்க இல்லை தண்டனைனு நினைச்சுக்கோ.... இத தவிர என்கிட்ட இருந்து உரிமை அன்பு பாசம் குழந்தை எதையும் எதிர் பார்க்காதே... என்னய ஏமாத்துனதுக்கு வாழ்கை பூரா தண்டனை அனுபவி... என் சாவை தவிர வேற எந்த விடுதலையும் உனக்கு கிடையாது...
உன் முகத்தை பார்க்க கூட விரும்பல... தயவு செஞ்சு எங்கயாவது போய் தொலைஞ்சுறு.. "அனைவரும் உறைந்து போய் நின்றனர்...
"ஏய் சத்யா என்ன பேசறேன்னு தெரிஞ்சு தான் பேசறயா... அப்படி என்ன தப்பு பண்ணா என் மருமக..."
"இவ வேற ஒருத்தன லவ் பண்ணிருக்கா.... என்கிட்ட மறச்சு இல்லனு பொய் சொல்லி என்னை ஏமாத்திருக்கா.... "
அவனது சட்டையை கொத்தாய் பற்றிய இனியன் "என்க குட்டிமாவ பத்தி அநியாயமா பேசாதடா.... அப்படி அவள் யாரையாவது விரும்பி இருந்தா உன்னை கல்யாணம் பண்ண ஓத்துட்டு இருக்கவே மாட்ட... "
"இதோ பாரு இனியா எனக்கு அவ காதலிச்சது பத்தி எந்த பிரச்சனையும் இல்லை... ஆனால் அவ அதை மறச்சு இல்லனு பொய் சொன்னதை என்னால மன்னிக்கவே முடியாது... "
"அண்ணா இப்ப எத வச்சு அண்ணி இன்னொருத்தரை விரும்புனாங்கனு சொல்ற... "
"இதை பாரு.... "என்று சில போட்டோக்களை விசிறியடித்தான்... அதில் ஒன்று இசையின் காலடியில் விழ அதை பார்க்கும் நினைவில் எல்லாம் இசை இல்லை... அவள் பார்வை சத்யாவை விட்டு அகலவில்லை.. அவன் பேசிய.. பேசிக்கொண்டிருந்த பேச்சுக்கள் எல்லாம் அவள் நினைவை தடுமாற வைத்து கொண்டிருந்தன...
அந்த போட்டோக்களை பார்த்த சுமித்ரா இசையின் அருகில் சென்றார்...
"என்ன குட்டிமா இதெல்லாம்... "
அவள் தான் செயல் இழந்து நிற்கின்றாளே... பேசுவதற்கான தெம்பு கூட மனதில் இல்லை...
"சத்யா போட்டோக்களை வச்சு நீ இப்படி நடந்துக்கறது சரியில்லை.... "
"இந்த போட்டோவை நான் நேத்தே என் ப்ரண்டுக்கு அனுப்பி செக் பண்ண சொன்னேன்... அவன் உண்மையானதுனு சொல்லிட்டேன்... அப்பவும் கூட நான் நம்பாம இவ கிட்டயே கேட்டேன்... பதில் சொல்லல.. இப்ப தாலி கட்டும் முன்னாடி கூட கேட்டேன்.. அப்ப தான் லவ் பன்னேனு சொல்றா.... என்னய பத்தி உங்களுக்கு நல்லாவே தெரியும்.... நான் எதையும் மன்னிப்பேன்.. ஆனால் பொய் சொல்றத மட்டும் என்னால ஏத்துக்கவே முடியாது..."
"இசை மாப்பிளை சொல்றதெல்லாம் உண்மையா... "
அவள் மேலும் பேசாமல் இருக்க சுமித்ரா மாறி மாறி இரு கன்னங்களிளும் அடிக்க ஆரம்பித்து விட்டார்... பேசுடி..... ஏன் அமைதியா இருக்க....
"அம்மா என்ன பண்றீங்க "
"சுமித்ரா அமைதியா இரு... "
"அத்தை அண்ணிய அடிக்காதீங்க "
"சம்பந்தி.... "
என்று ஆளாளுக்கு சுமித்ராவை சமாதானம் செய்தும் அவர் அடிப்பதை நிறுத்தவில்லை...
இசையும் தடுக்க வில்லை.... உடம்பில் விழுந்த அடிகளை விட மனதில் பெரிய அடியை வாங்கியிருந்தாள்... அது மனதையும் உடலயும் மரத்து போக செய்திருந்தது....
இசையை அடித்துக் கொண்டிருந்த சுமித்ராவின் கையை பிடித்து தடுத்தான் சத்யா...
"நீங்க இவளை அடிக்கறதுல நான் மனசு மாறி இவளை மன்னிக்க போறதில்லை.... என்னோட முடிவை நான் மாத்திக்க போறதும் இல்லை... "
என்று கூறிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேற...அனைவரும் அவன் பின்னே அவனை தடுக்க சென்றனர்...
இசையின் தோழிகளும் அதிர்ச்சியில் சத்யா சென்ற திசையிலேயே பார்த்து கொண்டிருந்தனர்...
இசை தனியே மண்டபத்தை விட்டு வெளியேறியிருந்தாள்.... மனதில் சத்யா பேசிய வார்த்தைகளே ஓடி கொண்டிருக்க அழக்கூட தோன்றாதவளாக சுற்று புறம் மறந்து சாலையில் சென்று கொண்டிருந்தாள்..
அப்பொழுது கார் ஒன்று இடிப்பது போல் வர உதயா அவளை பிடித்து இழுத்தாள்...
"இசை.... இசை.... என்ன பாரு இசை..."
அவளது உலுக்களில் உணர்விற்க்கு வந்தாள்....
"குட்டிமா...... "என்று இசையை கட்டி கொண்டான் இனியன்...
"உன்னை காணாம பயந்துட்டேன்டா.. அவனை நான் சும்மா விட மாட்டேன்டா..வாடா வீட்டுக்கு போலாம்..."
"நான் வரல... "
"ப்ளீஸ்டா குட்டிமா... "
"வேண்டாம் அண்ணா.. என்ன நம்பாதவங்க முகத்தை பார்க்க கூட விரும்பல.... "
"அம்மா ஏதோ கோ..... "
"வேண்டாம் பேசாத........ "என்று காதை பொத்தி கொண்டு கத்த ரோட்டில் அனைவரும் அவர்களையே பார்த்தனர்...
"அண்ணா நான் இசையை என்கூட கூட்டிட்டு போறேன்.. கொஞ்சம் நாள் அவ போக்குலேயே விட்டுருங்க... "
"ஆனால் இப்ப எப்படிமா... "
"ப்ளீஸ்ண்ணா இவ மெண்டல்லி ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்கா... கொஞ்சம் நாள் புது எடத்துல இருந்தா சரி ஆகிடுவா.... எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்ண்ணா... "
அவனும் இசைக்காக சம்மதித்தான்.... பிறகு இனியன் காரை எடுத்து வர அதில் சென்று இசைக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு வந்தனர்... காரில் இருந்து கொண்டே உதயா அவள் அலங்காரத்தை எல்லாம் கலைத்து சாதாரணமாக மாற்றினாள்....
பின்னர் ரயிலில் கோவை வந்தாள்... இசையை ஓரளவு சரி ஆக்கினர் .... ஆனால் முன்பு இருந்த இசையை கொண்டு வர முடிய வில்லை...
அவள் அம்மா அப்பாவை மன்னிக்கவே இல்லை.. இனியன் மட்டுமே அவ்வப்போது வந்து பார்த்து செல்வன்..
சத்யா பற்றிய பேச்சை யாரும் எடுக்கவே இல்லை...
இசையும் வேலைக்கு சேர்ந்தாள்....நாட்களும் ஓடிவிட்டது....
பழைய நினைவுகள் கொடுத்த அழுத்ததில் அந்த ஆல்பத்தை தன் மீதே சாய்த்தவாரு தூங்கிவிட்டாள்.....
சென்னையில் பெசன்ட் நகர் பீச்..... வெண்ணிலவு கண்சிமிட்டும் இரவு நேரம்... மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில்... மணல் விரிப்பில் மல்லாக்க படுத்து கொண்டு வானத்தை வெறித்திருந்தவன் மனதில் நிறைந்திருந்தவள் இயலிசை மட்டுமே...
அது நம்ம சத்யா தான்....
அன்று நண்பனின் நிச்சயத்திற்கு அவன் வற்புறுத்தி அழைத்ததால் வேறு வழியின்றி கோவை சென்றான்... அங்கு அலுவலக விஷயமாக ஒருவரிடம் போனில் பேசிக்கொண்டு இருக்கும் போது ஏதேச்சையாக காரின் கண்ணாடியில் தெரிந்த இயலின் முகத்தை பார்த்தவனால் அந்த நேரத்தில் அவன் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை...
அவன் அவளை தேடி அலையாத இடமில்லை.... இயலின் குடும்பத்தினரிடம் எவ்வளவோ மன்னிப்பு கேட்டும் அவர்கள் மன்னிக்கவில்லை.. இவனிடம் பேசவும் இல்லை... இயலை பற்றி எந்த ஒரு தகவலும் தெரியாமல் அவளை கண்டு பிடிக்கவும் வழியிலாமல் திண்டாடி போனான்...
குறைந்தபட்சம் அவளிடம் மன்னிப்பாவது கேட்க வேண்டும் என்று நினைத்தான்...
கோவையில் இயலை பார்த்ததும் ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் அவளை எதிர்கொள்ள தயங்கினான்....
எப்படியோ அவளை சந்தித்து மன்னிப்பு கேட்டும் விட்டான்... அதற்கு இயல் நடந்து கொண்ட முறையும் ஓரளவு எதிர் பார்த்ததே...
இப்பொழுது இயல் அவள் வீட்டிற்கு வந்து விட்டது கூட தெரியும்... எப்படியாவது அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்று அதற்கான வழிமுறைகளை யோசித்து கொண்டிருந்தான்...
அப்பொழுது அவனின் கைபேசி அலைக்க அதை எடுத்து காதில் பொருத்தினான்...
"ஹலோ சத்யா.....நான் இனியன் பேசறேன் "
டக்கென எழுந்து அமர்ந்தவன் கையில் இருந்து கைபேசி நழுவியது... அதை எடுத்து காதில் பொருத்தியவன்....
"ஹலோ..... என்னாச்சு மச்சான்.... இயல் நல்லார்க்கா தான? "
"அவ எப்படி சத்யா நல்லார்க்க முடியும்.. நீ அவளை எப்படி ஆகிட்ட தெரியுமா...அவ வெளிய சிரிக்கற மாதிரி தெரிஞ்சாலும் உள்ளுக்குல்ல ரொம்ப வேதனை படறா.. எங்கனால தாங்க முடியல.... நீ என்ன பண்ணுவியோ தெரியாது.....உன்னால தான் என் குட்டிமா இப்படி இருக்கா... அவளை பழைய படி மாத்தி தா.... "
"ஹ்ம்ம்..... நா....... நான் விவாகரத்து..... குடுத்தறேன்.... அவ வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோசமா இருக்கட்டும் ... இல்லையா நான் இப்பவே செத்து போயிடறேன்.... "அவன் குரல் கரகரத்தது.... "
"நீ எப்பவும் அவளை விட்டுட்டு போறதுலய்யே இரு..... ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ நீ செத்த மறு நிமிடம் இசையும் உயிரோட இருக்க மாட்டா.... இந்தா பாரு சாக போறேன் விவாகரத்து தரேன்னு சொல்லிட்டு திரிஞ்ச நானே வந்து கொன்றுவேன்... நீ என்ன பண்ணுவியோ தெரியாது அவளை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போகணும்...உன்னோட சந்தோசமா வாழ வைக்கணும்... "
"அவளுக்கு புடிக்காம நான் எதும் செய்ய மாட்டேன்.. "
"இப்ப மட்டும் வக்கனையா பேசு... என்ன பேச வைக்காத சொல்லிட்டேன் ... அவளை உன்னால மட்டும் தான் மாத்த முடியும்... உன் கூட மாட்டும் தான் அவ சந்தோசமா இருப்பா.... அவ கால்ல விழுவயோ இல்லை கடத்திட்டு போவயா எனக்கு தெரியாது.. எனக்கு என் குட்டிமாவ உண்மையான சந்தோசத்தோட இருக்கனும்... "
சிறிது நேரம் அமைதி நிலவியது...
"என் பொண்டாட்டிய சந்தோசமா வச்சுக்க வேண்டியது என் பொறுப்பு மச்சான்.. சீக்கிரம் என் வீட்டுக்கு அழைச்சிட்டு போறேன்...
"சீக்கிரம் அத செய் "
"மச்சான்.... உங்களுக்கு என்மேல கோவம் இல்லையா... திரும்பவும் எப்படி என் மேல உங்களாலே நம்பிக்கை வைக்க முடியுது... "
"எனக்கு உன் மேல கோவம் இல்லைனு சொல்லவே இல்லையே.... இப்பவும் உன்மேல நிறைய கோவம் இருக்கு... ஆனால் உன் மேல நம்பிக்கைய நான் எப்பவும் இழக்கல.... உனக்கு இசை மேல அவ்ளோ கோவம் இருந்தும் நீ அவளுக்கு தாலி கட்டின... என்னா உன்னால எந்த கோவத்துலயும் இசையை விட முடியாது... நீ நெனச்சிருந்தா தாலி கட்டாமயே போயிருக்க முடியும் நீ அப்படி செய்யல..
அதுக்காக நீ செஞ்சத நான் சரின்னு சொல்ல மாட்டேன்... ஆனால் அந்த சூழ்நிலை உன்னை அப்படி செய்ய வச்சிருக்கு... எங்க குட்டிமாவ கஷ்டப்படுத்தினப்ப நீயும் ரொம்ப வேதனை பட்டிருப்ப... எங்கம்மா இசையை அடிச்சப்ப நான் உன்னை பார்த்தேன்...
அவ்ளோ கோவத்துலயும் உன்னால இசை அடிவாங்கறத பாக்க முடில... அதனால் தான் நீ அவங்கள தடுத்த.... அதுக்கும் மேல அங்க இருந்தா எங்க சமாதானம் செஞ்சிருவாங்கன்னு நீ போய்ட்ட....
இசை எப்படியும் உங்க வீட்டுக்கு தான் வருவான்னு நினைச்சிருப்ப...ஆனால் இப்படி ஊரை விட்டு போவான்னு நினச்சு கூட பாத்துருக்க மாட்ட....
நீயும் நல்லவன் தான் சத்யா... இப்படிலாம் நடக்கும்னு விதி.... இனிமேல் நடக்க போறத மட்டும் யோசி.... "
அவனால் பேச முடிய வில்லை... தோண்டையை கனைத்து கொண்டு பேசினான்... ஏனென்றால் அவனின் அன்றய நிலைமையை எண்ணத்தை புரிந்து கொண்ட ஒருவர் இனியன் மட்டும் தான்... அவன் குடும்பத்தினர் கூட புரிந்து கொள்ள வில்லையே...
"ரொம்ப நன்றி மச்சான்...... உங்க நம்பிக்கைய கண்டிப்பா காப்பாத்துவேன்... "
"ஆனால் குட்டிமாவ அவ்ளோ சீக்கிரம் சமாதானம் பண்ண முடியாது சத்யா "
"ஹாஹா.... என் பொண்டாட்டிய சமாதானம் செய்ய எனக்கு தெரியும் மச்சான்... "
"எப்டியோ எல்லாம் சரியான சரிதான்..." என்று பேசிவிட்டு வைத்து விட்டான் இனியன்...
இனியனின் இந்த திடீர் அழைப்புக்கு காரணம் இசை தான்... அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த இனியன் இசையின் அறைக்கு சென்றான்...
அங்கு இசை ஆல்பத்தை அணைத்தவாறு.... கன்னங்களில் கண்ணீர் காய்ந்து போயிருந்தது.... அப்படியே தூங்கியும் போயிருந்தாள்..
இசையை அப்படி பார்த்தவன் மனம் மிகவும் வேதனை அடைந்தது... அதன் பிறகு தான் சத்யாவிடம் பேச முடிவு செய்தான்.....