எனை மீட்டும் இயலிசையே -8

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
8


இனியன் கிட்ட பேசிய சத்யாவின் நினைவுகள் அன்று மண்டபத்தில் நடந்ததை நோக்கி சென்றது...

பெண்ணே நீ என்னவள்

எனக்கானவள் !!!

என் கோபத்திலும்

தாபத்திலும்

நீயே நீ மட்டுமே என் சொந்தம் !!!!

என் கோவம் என்னும்

புயல் காற்றில் உன்னை

சுழற்றி அடித்து விட்டேன் !!!

என் வாழ்வென்பதும்

சாவென்பதும்

உன்னால மட்டுமே !!!!

உன் கோவத்தில்

பல முறையேனும் செத்தாலும் !!!!

உன் காதலில் ஒரு முறையேனும்

வாழ்ந்துவிட வேண்டுமடி !!!!


திருமணத்திற்கு முதல் நாள் மாடியில் இயலிடம் பேசிவிட்டு தன் அறைக்கு வந்தான் சத்யா... அப்பொழுது அங்கு ஒரு கவர் இருப்பதை பார்த்தான்...

"இதென்ன கவர்... நான் போகும்போது இல்லையே... என்னவா இருக்கும் "என்று அதை பிரிக்க முற்பட்ட போது அலைபேசி அழைக்க அதை காதில் பொருத்தினான்....

"ஹலோ சத்யா சார் என்ன இன்னும் அந்த கவரை பார்க்கலயா.... "

"ஏய் யார்ரா நீ.... ""அது அந்த கவரை பிரிச்சு பார்த்தா தெரிஞ்சுட போகுது... "

வேகமாக அதை பிரித்தவன் அதில் இருந்த போட்டோக்களை பார்த்ததும் சிரிப்புடன் ....

"டேய் தினேஷ்.... நீ என்ன நெனச்ச இந்த போட்டோவ எல்லாம் பார்த்தால் இயலை தப்பா நினைப்பேன்னு நினைச்சியா... போய் வேற ஏதாச்சும் ட்ரை பண்ணு.... "

"ஹாஹா... என்ன சத்யா சார்... இதெல்லாம் பொய்யா நான் ரெடி பண்ண போட்டோஸ்னு நினைச்சியா... அப்படி நெனச்சா நீ ஏமாந்து தான் போவ.... உனக்கு தைரியம் இருந்தா அந்த போட்டோஸ் எல்லாத்தையும் டெஸ்ட் பண்ணி பாரு...."

"உன்னை மாதிரி பிராடு சொல்றத எல்லாம் கேட்க நான் என்ன லூசா... போனை வைடா முதல்ல... "

"அப்ப உனக்கு பயம்னு ஒத்துக்கோ.. எங்க அந்த போட்டோஸ அனுப்பினா அது உண்மையானது ஆகிரும்னு உனக்கு பயம்... "

"என் இயல் உன்னை மாறி ஒருவன் கூட இப்படி போட்டோ எடுத்திருக்க மாட்டா... அத டெஸ்ட் பண்ணி தான் தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்லை..."

"உனக்கு தான் பொய் சொன்னா பிடிக்காதே... அன்னிக்கு அதனால தான என்னய அத்தனை பேர் முன்னாடி என்னை அவமானப் படுத்தி என்ன வேலைய விட்டு தூக்குன...இப்போ உன் ஆளு பொய் சொல்றான்னு சொல்றேன்.. நம்ப மாட்டிங்கிற... உண்மைய தெரிஞ்சுக்கணும்னா டெஸ்ட் பண்ணி பாரு...."

என்று விட்டு போனை வைத்துவிட்டான்.... இதை இசையிடம் பேச வேண்டும் என்று அவள் அறைக்கு சென்றான்..

அங்கு அவளின் அறையின் முன் அந்த தினேஷ் நின்று கொண்டிருந்தான்... இவனை நோக்கி வந்தான்...

"என்ன சத்யா சார்... உங்க ஆள பாக்க வந்தீங்களா... அவ நான் குடுத்த போக்கேய ரசிச்சுகிட்டு இருக்கா... அதுவும் அவளுக்கு புடிச்ச ரெட் ரோஸ்.. " என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்..

இசையை பார்த்த பொழுது அவள் கையில் அந்த பூங்கொத்து இருந்தது...

அதை பார்த்த சத்யா குழப்பத்துடன் தன் அறைக்கு சென்றான்.... திருமணத்திற்கு வந்தா தன் நண்பன் ஒருவனை அழைத்து அந்த போட்டோக்களை கொடுத்தான்...

மறுத்து பேசிய நண்பனை அடக்கி அனுப்பி வைத்தான்...

பிறகு பரிசம் போடும் சடங்கிற்க்கு சென்ற போது கூட இயல்பாய் இருக்க முடியவில்லை....

மீண்டும் தன் அறைக்கு வந்த போது அவன் நண்பன் போன் செய்தான்...

"சொல்லுடா கதிர்.... அது பொய்யான போட்டோஸ் தான... "

"அது.... அது.. வந்து.... "

"சொல்லித்தொலை.... "

"அதுல மடில படுத்துருக்கற மாதிரி இருக்கற போட்டோ ஒரிஜினல் தான் டா.."

"அப்ப மத்தது... "அவன் குரல் இறுகி இருந்தது....

"அதுவும்...... ஆனா..."அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே போனை வைத்து விட்டான்.. மிகுந்த கோவத்தில் இருக்கும் போது போட்டோ எடுக்க அழைத்து சென்றனர்...

அங்கு அவனால் இயலோடு இருக்க முடியவில்லை... இயலை பார்க்கும் போது அவள் பொய் சொல்பவள் போன்று தோன்றவில்லை... ஆனால் அந்த போட்டோவும் பொய்யில்லை..

நேரடியாக இயலிடமே கேட்டும் விட்டான்.. ஆனால் அவளின் மழுப்பலான பதிலில் கோவம் கொண்டவன் தலையும் வலிக்க புகைப்படம் எடுப்பவரிடம் சொல்லிவிட்டு அறைக்கு வந்தான்....

அன்று இரவு முழுதும் கோவத்திலும் வேதனையிலும் தவித்து போனான்.. ஆனாலும் இசையின் மீது வைத்த நம்பிக்கையை முழுதும் இழக்கவில்லை.... காலை அவளிடம் நேரடியாக கேட்டு விடலாம் என்று முடிவு செய்தான்...

திருமணநாளும் விடிந்தது... தேவதையாய் வந்த இயலை பார்த்தவன் இவள் என் இயல்... உண்மை எதுவாக இருந்தாலும் தன்னால் இயலை பிரிய இயலாது என்பது மட்டும் நன்கு புரிந்தது...

கடைசியாக இயலிடம் கேட்டான்..

"நீ லவ் பண்ணியா"

"சொன்னா தான் தாலி காட்டுவீங்க போலவே... ஆமா நான் லவ் பண்ணேன்.... " அவ்வளவு தான் அதன் பிறகு அவன் செவிகளில் எதும் விழவில்லை... கோபத்தில் அனைத்தையும் மறந்தான்.... அய்யர் தாலி கட்ட சொன்னதும் ஒரு முடிவோடு அவள் கழுத்தில் மாங்கல்யத்தை கட்டினான்...

அப்போது இயலின் கண்ணீர் துளி அவன் கைகளில் பட உடல் விறைத்து போனான்... அது ஆனந்த கண்ணீர் என்று தெரியாமல் வேதனையால் வந்த கண்ணீர் என்று நினைத்து கொண்டான்..

அதன் பிறகு நடந்தது தான் நமக்கு தெரியுமே....

மண்டபத்தை விட்டு வெளியே வந்தவனை எவ்வளவு சமாதானம் செய்தும் முடியவில்லை... அவன் மனதில் கோவம் ஆத்திரம் கொழுந்து விட்டு எறிந்தது...கொஞ்சம் சாரலாய்

கொஞ்சும் தூறலாய் !!!!

நெஞ்சை அள்ளிடும்

காதல் கவிதையாய் !!!!

கண்ணில் நீ விழுந்து

இதயத்தில் பிம்பமாய் !!!

விரல் நுனிகளில்

உன்னை மீட்டிட

இனிய ரகமாய்

இதம் தரும் சங்கீதமே !!!!


அன்று வெள்ளிக்கிழமை......

கோவிலில் அவ்வளவாக கூட்டம் இல்லை... அர்ச்சனை கூடையை வாங்கி கொண்டு கோவிலின் உள்ளே சென்றாள் இசை.....

பழக்க தோஷத்தில் எப்பொழுதும் போல கால்கள் அடிபிரதட்சணம் செய்ய கண்களோ தன்னையும் மீறி கோவில் வளாகத்தை ஒரு வலம் வந்தது....

"ச்சி... மானங்கெட்ட மனசே... எவ்வளவு பட்டும் இன்னும் அவரையே தேடுகிறாய்... "என்று தனக்கே ஒரு குட்டு கொடுத்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்...

மூன்று சுற்று முடித்து அன்னையிடம் வந்து கண்மூடி நின்றாள்... என் வாழ்க்கையில் என்னமா நடக்குது.. என்னால எல்லாரும் கஷ்ட படறாங்க.. என்னாலும் எதும் பண்ண முடில...

எனக்காக இன்னும் எத்தனை சோதனைகள் தான் வச்சிருக்க.. அதை தாங்கிக்கற சக்திய எனக்கு கொடும்மா..

என்று வேண்டி கொண்டிருக்கும் போது யாரோ தன் நெற்றியில் குங்குமம் வைப்பதை உணர்ந்தவள் கண் விழிக்கும் போது அவள் நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்து விட்டான் சத்யா....

ஒரு நிமிடம் நடப்பது கனவா என்று திகைத்தவள் பிறகு சுட்டெரிக்கும் விழிகளால் அவனை எரித்தாள்... விடுவிடென்று விலகி நடந்தவள் கை பிடித்து நிறுத்தினான்...

"ப்ளீஸ் இயல் நான் தப்பு பண்ணிட்டேன்... அதுக்கு எனக்கு மன்னிப்பே கிடையாதாடா... நான் என்ன செஞ்சா என்ன மன்னிப்ப சொல்லு இயல்.... "

"உங்களை மன்னிக்க எனக்கு எந்த தகுதியும் இல்லை... இது நீங்க பிச்சை போட்ட வாழ்க்கை தானங்க... அதுவும் தண்டனையா... அதை அனுபவிச்சுட்டு போறேன்... தயவு செஞ்சு கையை விடுங்க... "

"ப்ளீஸ்டா... நான் என்ன பண்ணா என்ன மன்னிப்ப... "

"உங்களை மண்ணிக்கற அளவுக்கு எனக்கு தகுதி இல்லை... கையை விடுங்க... "என்று கூறியும் அவன் கையை விடாமல் ஏதோ கூற வர வெடுக்கென கையை உருவிக் கொண்டு தண்ணீர் குழாய் அருகில் சென்றாள்...

நெத்தியில் இருந்த குங்குமத்தை தண்ணீர் கொண்டு அழிக்க... அருகில் இருந்த பெண்மணி "என்னமா பண்ற... வெள்ளிக்கிழமை அதுவுமா நெத்தில இருக்கற குங்குமத்தை அழிக்குற... இது அபச குணம்மா... உன் புருசனுக்கு நல்லதில்லைமா... "

இயல் திரும்பி சத்யாவை பார்க்க அவனும் இவள் பதிலையே எதிர்பார்ப்பது புரிந்தது... அப்போது இருந்த கோவத்தில்

"யாருக்கு என்ன ஆனாலும் எனக்கு எந்த கவலையும் இல்லை.. செத்தாலும் கூட... "என்று கூறிவிட்டு வேகமாக சென்று விட்டாள்.. அந்தம்மாவும் ஏதோ புலம்பிக் கொண்டே சென்று விட்டார்..

இயலின் இந்த பதிலை எதிர்பாராத சத்யா வேதனையுடன் வெளியே சென்றான்...

"ப்ச் கடவுளே கோவத்துல என்ன பேசிட்டேன்... "என்று தன்னையே நொந்து கொண்டு கோவிலின் வெளியே சென்றாள்.... அப்போது தூரத்தில் கூட்டம் கூட யாருக்கோ விபத்து என்று அனைவரும் ஓடினர்..

"அச்சோ இப்பதான்பா கோவில்ல இருந்து போனா பையனுக்கு அக்சிடேன்ட் ஆகிருச்சு... "என்று அருகில் இருந்தவர் சொல்ல இயல் வேகமாக அவ்விடம் சென்றாள்...

சத்யாவிற்கு தான் அடி பட்டிருந்தது... இயல் பேசியதை நினைத்து கொண்டு வந்தவன் எதிரில் கார் வருவதை கவனிக்காமல் செல்ல காரும் கடைசி நிமிடத்தில் கவனித்து விலகினாலும் அவன் மீது கார் மோதிவிட்டது...

இயல் பதட்டத்துடன் சத்யாவின் அருகில் சென்றாள்....

"சத்யா.... சத்யா.... என்னாச்சு... ப்ளீஸ் யாராச்சும் ஆட்டோ கொண்டு வாங்க... "என்று அழுதுகொண்டே கூற...

சத்யாவை இடித்த அந்த கார்காரரே அழைத்து சென்றார்...

மருத்துவமனை வரும் வழியில் காரின் பின் சீட்டில் சத்யாவின் தலையை தன் மடிமீது வைத்திருந்தாள்....

"ப்ளீஸ் கடவுளே.. எல்லாம் என்னால தான்... சத்யா நான் கோவத்துல தான் சொன்னேன்.. உங்களுக்கு ஏதாச்சும்ன்னா நான்.... நானும் இல்லை சத்யா... "என்று அழுது கொண்டே கூறினாள்...

"இ....இசை.... நான்..... செத்தாலும் உனக்கு..... ஒன்னும் பிரச்சனை இல்லை தான....."

"ப்ச்.... என்னை ஏமாத்துகாரி ஆக்கிட்டீங்க... இப்ப கொலைகாரி ஆக்க பாக்கறீங்க.... "

அவன் ஏதோ சொல்ல வந்தான்... ஆனால் பேச முடிய வில்லை...

இறுதியில் மருத்துவமனை வந்து சேர்ந்தனர்....

அவனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்....

வெளியே இயல் இனியனுக்கு அழைத்து விவரம் சொல்லி சத்யாவின் வீட்டிற்கும் சொல்ல சொன்னாள்...

சத்யாவின் அறையில் இருந்து வெளியே வந்த செவிலி இயலின் அருகே வந்தார்....

"மேடம் நீங்க கூட்டிட்டு வந்த பேஷண்ட் ட்ரீட்மென்ட்க்கு ஒத்துழைப்பு தர மாட்டிங்குறாரு... நீங்க கொஞ்சம் உள்ள வாங்க... "என்று கூறி அவளை அழைத்து சென்றாள்....

"என்ன சத்யா.... ஏன் இப்படி பண்றீங்க... "

"நான் செத்துட்டு போறேன்.. யாருக்கு என்ன கவலை.. "

"என்ன....எதுக்கு இப்ப தேவை இல்லாம பிடிவாதம் பிடிக்குறீங்க... "

"மேடம் அவருக்கு ரொம்ப ரத்தம் போய்ட்டு இருக்கு சீக்கிரம் ஏதாச்சும் பண்ணுங்க... "

"சத்யா நான் தெரியாம சொல்லிட்டேன்...நான் என்ன பண்ணனும் "

"நீ என்னை மன்னிக்க வேண்டாம்... ஆனால் என்கூட எங்க வீட்டுக்கு வரணும்... என்னை மன்னிக்க வேண்டாம் எந்த உரிமையும் வேண்டாம்... நானும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்.. ஆனால் என்னை விட்டு போக கூடாது...."

திகைத்து நின்றாள் இயலிசை.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN