எனை மீட்டும் இயலிசையே -10

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
10


ஆலுமா டோலுமா ஐசாலங்கடி மாலுமா.....

தெறிச்சு கலீச்சுன்னு கிராக்கி விட்டா சாலுமா.....

அறிக்கல்லு கரிக்கல்லு கொத்துவுட்டா கலக்கலு....

பளுச்சுனு பளபளக்குது மிட்டா மேல லோக்கலு.....


தன்னருகில் சத்தமாக ஒலித்த பாடலால் அடித்து பிடித்து எழுந்தான் சத்யா... தன் கைபேசி தான் பாடிக் கொண்டிருந்தது... மணியை பார்த்தான் மூன்றை காட்டியது... பல்லைக் கடித்தான் சத்யா....

"யார் இந்த வேலையை பார்த்தாங்கனு தெரியலய்யே... "

அப்போது கதவு தட்டப் பட... போய் கதவை திறந்தான்....

"என்னடா புகழ் அறிவே இல்லையா... இந்த நேரத்துல இப்படி பாட்ட போட்டுட்டு ஆடுனா மத்தவங்கலாம் தூங்கறதா வேண்டாமா... "

"ம்க்கும் ஆடுனவன விட்டுட்டு என்ன திட்டு... "

அப்போது கண்ணை கசக்கி கொண்டே வந்தாள் இசை...

"என்னாச்சு அத்தை.... ஒரே பாட்டு சத்தம்.... தூங்கவே முடில... என்ன புகழ் ஏன் இந்த நேரத்துல இவ்ளோ சத்தமா பாட்ட போட்டுருக்க... "

சத்யா கண்ணை சுருக்கி அவளை பார்த்தான்...

"ஐயோ அண்ணி நான் போடல... எல்லாம் சத்யா தான்.. "

"என்ன அத்தை இதெல்லாம் "

"டேய்ய்... புகழ் இனிமேல் இந்த மாதிரி ஏதாச்சும் கிறுக்கு தனம் பண்ணுணா அவ்ளோ தான்.... "

"அடேய் நல்லவனே கேட்டுக்கோ... உனக்கு தான் சொல்ராங்க...ஆஆஆஆவ்வ் .... ஸ்ஸப்பா... கொஞ்சம் தூங்க விடுடா.... "என்று சொல்லி விட்டு தூங்க போய்விட்டான்..

"இசைமா... நீயும் போய் தூங்குடா..வாங்க போகலாம் " என்று சொல்லிட்டு அவரும் தூங்க சென்றார்...

தன் அறையின் உள்ளே சென்ற இசை பாடிக் கொண்டே ஆட ஆரம்பித்தாள்...

பின்னே அவள் தானே அர்த்த ராத்திரியில் எழுந்து பூனை போல் அவன் அறைக்கு சென்று அவனுடைய போனை எடுத்து அலாரம் வைத்து.... அலாரம் ரிங்டோனாக பாட்டை வைத்து விட்டு வந்துவிட்டாள்...

சரியாக மூன்று மணிக்கு பாட்டு சத்தம் கெட்டதும் எழுந்து ஆட்டம் போட்டு விட்டு... துளசியின் சத்தம் கெட்டதும் ஒன்னும் தெரியாத பிள்ளை போல வெளியே வந்தாள்...

இப்பொது மீண்டும் ஆடிகொண்டே திரும்பியவள் கதவின் மீது சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு தன்னையே பார்த்து கொண்டிருந்த சத்யாவை பார்த்து திகைத்து நின்றது ஒரு நிமிடம் தான்...

"ஹலோ இங்க என்ன பண்றீங்க... மொதல்ல இங்கிருந்து போங்க... "

அவனும் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றான்.....

"பெரிய புன்னகை மன்னன்னு நெனப்பு... ப்ச் இதெல்லாம் பத்தாது.. வேற ஏதாச்சும் பண்ணணுமே... "என்று யோசித்தவாறே உறங்கி போனாள்..

தன் அறைக்கு சென்ற சத்யா.... பெட்டில் படுத்து கொண்டு இயலின் புகைப்படத்தை பார்த்து கொண்டே...

"என்னடி புஜ்ஜிமா... பார்முக்கு வந்துட்ட போலயே... ஆனா உன்கிட்ட இன்னும் எதிர் பாக்கறேன் புஜ்ஜி..... "என்று கொஞ்சிக் கொண்டே தூங்க ஆரம்பித்தான்...

காலை ஆறு மணி.....

ஜன்னல்களின் திரை விளக்கி பார்வையை வெளியில் விட்டாள் இசை... காலை நேர குளுமை தந்த புத்துணர்ச்சியில் தன் வேலைகளை முடித்து கொண்டு கீழே வந்தாள்... சமையல் அறையில் இருந்த துளசியை கட்டிக் கொண்டாள்....

"காலை வணக்கம் அத்தை... "

"காலை வணக்கம் செல்லம்மா...இந்தா காபி.... "

"நீங்க அத்தை..... "

"நான் ஆச்சும்மா... "

"அம்மு எனக்கு காபி... "என்றவாறு வந்தான் புகழ்......

"பல்லு விளக்குனீங்களா கொழுந்தனாரே... "

"வேணும்னா ஊதிக் காமிக்கட்டுமா அண்ணி "

"ஹிஹி ... நான் நம்பிட்டேன் புகழ் ....ஆள விட்ரு சாமி ....." என்று ஓடி வந்தவள் சத்யாவின் மீது மோதி விட்டாள்... தடுமாறி விழ பார்த்தவனை தாங்கி பிடித்தான்.....

அவன் பிடியை விடுவித்தவள்.....

"கண்ணை என்ன முதுகுலயா வச்சிருக்கீங்க.... ஓடி வரது தெரியுதல்ல... ஒதுங்கி நிக்க வேண்டியது தான... எப்ப சான்ஸ் கிடைக்கும்னு பாத்துட்டே இருந்தீங்களா.... "என்று பொறிந்துவிட்டு சென்றாள்....

"பார்ரா... இவ ஓடிவந்து என்மேல விழுந்துட்டு... நான் வேணும்னே இடிச்ச மாதிரி பேசிட்டு போறா.... " என்று தனக்குள் முணுமுணுத்தவன் தன் அறைக்கு சென்றான்...

வெளியே கொஞ்ச நேரம் உலவி விட்டு வந்த இசை சமையல் அறைக்கு சென்றாள்...

அங்கு பிளாஸ்க்கில் காபி இருந்தது...

"யாருக்கா இருக்கும்.... எல்லாரும் காபி குடிச்சுட்டமே... ஓ.... சார்க்கா.... அப்ப ஏதாச்சும் பண்ணனுமே என்று நினைத்தவள் உப்பை எடுத்து அதில் கொட்டினாள்...

பிறகு ஒன்றும் பேசாமல் குளிக்க சென்றாள்...

உடற் பயிற்சி செய்து விட்டு வந்த சத்யா சமையல் அறைக்கு சென்று பிளாஸ்க்கில் இருந்த காபியை ஊற்றினான்...

"சத்யா எனக்கும்.... " அப்போது தான் உடற்பயிற்சி முடித்து வந்த புகழ் சத்யாவிடம் சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தான்...

தான் ஒரு கப் எடுத்துக் கொண்டு புகழ்க்கு ஒன்றை தந்தான்....

ஒரு மிடறு குடித்தவன் லேசாக முகத்தை சுழித்து ஒரு நொடி யோசித்தவன் மீண்டும் குடிக்க ஆரம்பித்தான்...

"அய்ய.....உவ்வ்வ்வ்வாக்........ச்சி.... யார்டா இந்த காபில உப்ப போட்டது... நான் அப்போ குடிச்சப்ப நல்லா தான இருந்துச்சு.... "என்றவன் அப்போது தான் படியில் நின்று கொண்டிருந்த இசையை பார்த்தான்.... அப்படியே சத்யாவை பார்த்தான்.. எல்லாம் புரிந்து போயிற்று..

புகழின் அருகில் வந்த இசை...

"நீங்க ஏன் இத குடிச்சீங்க... "

"நான் என்னத்த கண்டேன்...... நீங்க இதுல உப்ப கலப்பீங்கன்னு.... இனிமேல் எதுக்கு பண்றதா இருந்தாலும் சொல்லிட்டு செய்ங்க அண்ணி... மீ பாவம் அண்ணி... "

"என்ன பண்ணி என்ன யூஸ்.... உங்க அண்ணன் ரசிச்சு ரசிச்சு குடிக்கறாரே... "

"ம்ம்ம்...... அம்புட்டு லவ்வு..... "

"ஆமா பெரிய லவ்வு..... பாக்கறேன் இன்னும் எவ்ளோ நாள் தாங்குதுன்னு.. "

"அண்ணி அவன் நிஜமாலும்..... "

"ப்ச் வேண்டாம் புகழ்..... "என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு வந்தாள்....

"லவ்வாம் லவ்வு.... எரிச்சல கிளப்பிட்டு... "

அப்போது அங்கு வந்த சத்யாவை கண்ட இசை

"இங்க உங்களுக்கு என்ன வேலை வெளியே போங்க... "

"காபி ரொம்ப உப்பா இருந்துச்சு செல்லம்.. இனிப்பு சாப்பிட்டா சரி ஆகிடும்ல... அதுக்கு தான் வந்தேன்...

என்று அவளை இழுத்து.... இதழ் இனிப்பை சில நிமிடங்கள் சுவைத்தவன்

"செம ஸ்வீட்....... "

என்று சொல்லி முடிக்கும் முன் விட்டாள் ஒரு அறை..... சத்யாவின் கன்னத்தில்....

இதற்கு அசந்தால் அது சத்யா இல்லையே...

"இது கூட சூப்பர்டி செல்லக்குட்டி.. " வரட்டுமா..... என்று சொல்லிவிட்டு சென்று விட்டான்...

"ராஸ்கல்.... பொறுக்கி.....உனக்கு இருக்கு.... முத்தமா குடுத்த உன் வாயில தீய வச்சு தேய்க்கறேன்.... என்று அவனை திட்டி தீர்த்தாள்...



மறுநாள் அனைவரும் காலை உணவு உண்ட பின் புகழ் கல்லூரிக்கு சென்று விட்டான்.. துளசியும் சந்திரனும் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்....

இசை சமையல் அறைக்கு சென்றாள்...

"முத்தமா குடுக்கறீங்க உங்க வாய வேக வைக்கிறேன்... "

காலையில் இட்லியும் சாம்பாரும் சட்னியும் செய்திருந்தார் துளசி....

சாம்பாரில் மிளகாய் பொடியை நிறைய அள்ளி போட்டு விட்டு.... சட்டினியில் பத்து பச்சை மிளகாயை அரைத்து கொட்டி விட்டாள்....

பிறகு ஒன்னும் தெரியாத பிள்ளை போல சமையல் அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்...

அலுவலகம் தயாராகி வந்த சத்யா சாப்பிட அமர்ந்தான்...

தட்டில் இட்லியையும் சட்னி சாம்பாரை ஊற்றி போர்க்கால் பிட்டு இட்லியை சட்னியிலும் சாம்பாரிலும் நனைத்து வாயில் வைத்தவன் முகம் அதீத காரத்தால் சிவந்து போயிற்று....

தண்ணீர் தேடி கைகள் விரைய.... அதை தான் இசை எப்பவோ எடுத்து சென்று விட்டாளே...

காரத்தால் கண்கள் கலங்கியது... தண்ணீர் குடிக்க எழுந்த சத்யா தன்னருகில் நின்ற இசையை பார்த்தான்....

"நீங்க அன்னைக்கு பேசுன பேச்சு கூட இப்படி தான் என்னய எரிச்சுது.... இத விட அதிகமா நான் துடிச்சு போனேன்.. நான் அனுபவிச்ச வேதனையை விட இது ஒன்னும் பெருசில்ல... " என்று சொல்லிவிட்டு கலங்கிய கண்களை மறைக்க தன் அறைக்கு சென்றாள்...

பாதி வழியில் திரும்பி சத்யாவை பார்க்க.... அவன் அமர்ந்து அந்த காராமான உணவை சாப்பிட்டு கொண்டிருந்தான்....

இசையும் எனக்கென்ன என்பது போல் சென்று விட்டாள்...

இங்கு சத்யாவோ " நீ சொன்னது சரி தான் இசை உன் வேதனைய விட இந்த காரம் பெருசா இல்லை.... "

அவனும் சாப்பிட்டு முடித்து துளி நீர் கூட அருந்தாமல் அலுவலகம் கிளம்பி சென்று விட்டான்..

மாலை புகழ் இசை துளசி சந்திரன் அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்...

" செல்லம்மா.......உங்க வீட்டுக்கு பேசுனியாமா... "

"காலையில் பேசினேன் அத்தை.. "

"அம்மு எனக்கு இன்னொரு வடை... "

"டேய்... இன்னும் ஒண்ணா.... இப்படி சொல்லியே எத்தனை வடைய காலி பண்ணிட்ட நீ.... "

"என் செல்லம்ல இன்னும் ஒன்னு மட்டும்... "

"இந்தா புகழ்... என்று தன் தட்டை நீட்டினாள் இசை...

"சோ.....ஸ்வீட்... " என்று ஒன்றை எடுத்து கொண்டான்...

"அது ஸ்வீட் இல்ல மகனே... கார வடை.."

"காமெடி.... நான்... அப்பறமா சிரிச்சுக்கரேன்... "

"செல்லம்மா.... சமைக்க தெரியுமாடா.."

"அம்மு உனக்கு தெரியாத... அண்ணி சூப்பரா காபி போடுவாங்க... அதுலயும் இன்னைக்கு போட்ட காபி இருக்கே "

"தடியா...இன்னைக்கு இசை காபியே போடல.... "

"உனக்கு தெரியாது அம்மு... ஸ்பெஷல் காபி... அதுவும்..... "

"புகழ் வேண்டாம்.... "

என்று அவனை துரத்த அவன் அங்கும் இங்கும் சுற்றி போக்கு காட்டி விட்டு துளசியிடம் சென்று...

"அதுவும் உப்பு போட்டு காபி... அதையும் உன் பையன் ரசிச்சுகிட்டே குடிக்கறான்... பாவம் அண்ணி பிளான் தான் சொதப்பிருச்சு.... " என்று ஓட இசை அவனை துரத்தினாள்...

"டேய் நில்லு..... "

"அண்ணி மரியாதை மரியாதை... "

"சரி நில்லுடா கொழுந்தா... "

"ம்க்கும்.... இதுக்கு அதுவே தேவலாம்.."

"டேய் இப்ப நீ நிக்கல அப்பறம் உனக்கும் ஏதாச்சும் கலந்துருவேன்.. "

"அய்யயோ... திரும்பவும் உப்பு காபியா "

"இல்ல கொழுந்தா.... அதுக்கும் மேல.." என்று ஐ பட விக்ரம் பாணியில் சொல்ல

"ஆத்தாடி.... நான் சரண்டர்.... " என்று தலை மீது கை வைத்து கீழே அமர்ந்து விட்டார்...

அவன் காதை பிடித்து திருகிய இசை

"என்ன கொழுந்தனாரே... மரியாதை வேணுமா... "

"எந்த மடையன் அப்படி சொன்னது.."

"ஹும் இந்தா மடையன் தான்.. " என்று அவன் தலையில் தட்ட

"அது போனா நிமிஷம்...இந்த செகண்ட்ல இருந்து என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்க முழு உரிமையும் தர படுகிறது... ஆனால் அண்ணியாரே என் உணவில் மட்டும் கை வைத்து விடாதீர்கள்.... "

"உன் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டது கொழுந்தா.... "

"நன்றி அண்ணியாரே.... "

இவர்களின் விளையாட்டை மேலே இருந்து ரசித்து கொண்டிருந்தான் சத்யா.... என்னதான் ரசித்தாலும் மனதில் ஏக்கம் படர்வதை தடுக்க முடியவில்லை....

எதேச்சையாக மாடியை பார்த்த இசை சத்யாவின் முகத்தை பார்த்து திகைத்து போனாள்...

என்னதான் கோவம் இருந்தாலும் அவனை அப்படி பார்க்கும் பொழுது மனதுக்குள் ஏற்படும் உணர்வை தவிர்க்க முடியவில்லை....

புகழிடம் சென்றவள்...

"புகழ் உங்க அண்ணா ஏன் எப்பவும் தனியா இருக்காரு... ஒண்ணா சாப்பிடறது கூட இல்லை.... "

"அது உங்க கல்யாணத்தப்ப அண்ணன் பண்ண தப்பை யாரும் மன்னிக்க தயாரா இல்ல அண்ணி... ஒரே வீட்டுல இருந்தாலும் அவன் கிட்ட பேசாமல் விலகியே இருந்தோம்.. அப்புறம் நடந்த சில விஷயங்கள்னால நானும் அப்பாவும் ஓரளவு அவனோட பேசுவோம்.... ஆனா அம்மா சுத்தமா பேசறது இல்ல... அவன் இருக்கற இடத்துல இருக்க கூட மாட்டாங்க.... அதான் அவனே விலகி இருக்க ஆரம்பிச்சுட்டான்.... "

"ம்ம் அத்தைய நினச்சா பெருமையா இருந்தாலும்.... எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு புகழ்.... "

"இதுல உங்க தப்பு என்ன அண்ணி இருக்கு... பண்ண தப்புக்கு தண்டனை அனுபவிக்கறான்.. விடுங்க அண்ணி.... "

"ஆனாலும்.... "

"ஸ்வீட் அண்ணியாரே.... இது உங்க கேரக்டர்க்கு செட்டே ஆகல.... இன்னும் உங்க பழி வாங்கல் படலம் முடியலை... அதுக்கு ரூம் போட்டு யோசிக்கலாம் வாங்க.... முதலில் உப்பு காபி.... அப்புறம் மிளகாய் பொடி சாம்பார்.... பச்சை மிளகாய் சட்னி.. அடுத்து என்ன... "

"ஹேய் உனக்கு எப்படி தெரியும்.. "

"நான் ஐடி கார்டு எடுக்க வந்தேன்... அப்போ உங்க கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.... நான் வந்ததை கூட கவனிக்காம சின்சியரா வேலை செஞ்சுட்டு இருந்தீங்க.... என்னடான்னு பாத்தா ஆத்தாடி அம்புட்டு காரம்.... சத்யா என்ன பண்ணான்.... "

"என்ன பண்ணுவாரு... எப்பவும் போல சாப்பிட்டு போய்ட்டாரு..... "

"ஐயோ அவனுக்கு காரம்ன்னா சுத்தமா ஆகாது.... வயிறு வலி வந்துரும்.... "

அவள் வருத்தத்துடன்... "சாரி புகழ் சாப்பிட மாட்டாருனு நினச்சேன்...."

"விடுங்க அண்ணி.... நான் போய் மாத்திரை வாங்கிட்டு வரேன்.... "

"என்கிட்டயே குடு புகழ் நானே குடுத்தறேன்.... "

"சரி அண்ணி..." என்றுவிட்டு சென்று விட்டான்...

இரவு அனைவரும் சாப்பிட்டு படுத்து விட்டனர்.... சத்யா சாப்பிடவில்லை... இசைக்கும் தெரியும்....

தயிர் சாதம் பிசைந்து சத்யாவின் அறைக்கு சென்றாள்....

அறைக்கதவை திறக்க ஸிரோ வாட்ஸ் பல்பு மட்டும் எரிந்தது.... விளக்கை போட்டாள்...

கட்டிலில் சுருண்டு படுத்திருந்தான் சத்யா....

"சத்யா.... எழுந்திருங்க.... "

அவன் முனகி கொண்டே வயிறை அழுத்தி சுருண்டு படுத்தான்..

"சத்யா எழுந்திருங்க... கொஞ்சம் சாப்பிட்டு மாத்திரை போடுங்க... "

"முடியலை இயல் ரொம்ப வலிக்குது.. "

"நான் கோவத்துல பண்ணிட்டேன்.... உங்களை யார் அவ்ளோ காரத்தை சாப்பிட சொன்னது......... "

"உன் வேதனைய கொஞ்சம் அனுபவிச்சு பாக்க நெனச்சேன்.... "

"கிழிச்சீங்க... எனக்கு நல்லா வந்துரும் வாயில..... எழுந்து உட்காருங்க.. "

அவன் மெதுவாக எழுந்து அமர்ந்தான்..... இசை கொடுத்த உணவை சாப்பிட்டு மாத்திரை சாப்பிட்டான்..

"சரி படுத்துக்குங்க..... சரி ஆகிடும்.. "

"இன்னும் வலிக்குதே..... ப்ளீஸ் கொஞ்ச நேரம் இங்க இரு இயல்... "

"இங்க பாருங்க.... என்னால தான் இப்படி ஆகிருச்சுனு தான் இவ்வளவு செஞ்சேன்... நீங்க இதான் சாக்குன்னு ரொம்ப அட்வான்டேஜ் எடுத்துக்க வேணாம்... "என்று அவள் திரும்பி போக முற்பட

"அச்சோ ரொம்ப வலிக்குது இயல் "

என்று அவன் கத்த...

அவன் அருகில் வேகமாக சென்றவள் "சத்யா வாங்க ஹாஸ்பிடல் போகலாம்..."

என்று அவனை எழுப்ப

அவள் கை பிடித்து இழுக்க அவன் மேலே வந்து விழுந்தாள் இசை... ஒரு கையால் அவளை வளைத்தவன்.... மற்றொறு கையால் அவள் முகத்தை தங்கினான்..

அவனின் இந்த திடீர் செய்கையால் நிலை குலைந்து போனாள்... நெஞ்சு படபடவென அடித்து கொண்டது..

அவள் முகம் நோக்கி குனிந்தவன் நானும் எவ்வளவோ முயற்சி பண்றேன் புஜ்ஜி... ஆனால் முடியல... என்னோட காயமும் நீதான்.... மருந்தும் நீதான்... என்று கூறு மூடிய விழிகளில் முத்தெடுக்க ஆரம்பித்து முகமதில் ஒரு இடம் விடாமல் வலம் வந்து இறுதி பயணத்தை இதழ் கொண்டு முடித்திட..

கண்மூடி கிரங்கியவள் மனதில் சட்டென்று அன்று அவன் பேசிய பேச்சுக்கள் மனதில் எதிரொலிக்க தீயில் விழுந்தவள் போல துடித்து எழுந்தாள் இயல்....

"என்னை மேலும் மேலும் ரொம்ப சித்திரவதை படுத்தறீங்க... இன்னொரு முறை இப்படி நடந்தா என்ன பண்ணுவேனே தெரியாது.. "என்று கண்ணீருடன் சென்று விட்டாள்...

எழுந்து அவள் பின்னாடியே சென்றான் சத்யா... "இயல்.. சாரிடா.... இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டேன் ப்ளீஸ் அழாத.. "என்று கூறிகொண்டிருக்கும் போதே கதவை முகத்தில் அறைந்தார் போல் சாத்தி விட்டாள்...

சத்யா சிறிது நேரம் நின்று விட்டு தன் அறைக்கு சென்றான்..

இசை அழுகையுடனே தூங்கியும் போனாள்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN