எனை மீட்டும் இயலிசையே -11

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
11


டண்டணக்கா நக்கா நக்கா நக்கா

டண்டணக்கா நக்கா.....

டண்டணக்கா நக்கா நக்கா நக்கா

டண்டணக்கா நக்கா.....

எங்க தல எங்க தல டி ஆறு.....

செண்டிமெண்டுல தருமாறு....

மைதிலி காதலி இன்னாரு.....

அவர் உண்மையா லவ் பண்ண

சொன்னாரு.....

மச்சா அங்க தாண்டா தல நின்னாரு...


காலையில் கேட்ட பாட்டின் சத்தத்தில் எழுந்தவன்.....

"போச்சு இன்னைக்கும் மாட்டி விட்டுட்டா போலயே " என்று நினைத்து தன் போனை தேட அது அமைதியாக ஒரு ஓரத்தில் கிடந்தது....

மணியை பார்த்தான்... ஏழு ஆகிருந்தது... அப்போது தான் கவனித்தான் பாட்டு சத்தம் இயலின் அறையில் இருந்து வந்தது...

அங்கு சென்று பார்த்தவன் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது...

டண்டணக்கா நக்கா நக்கா நக்கா

டண்டணக்கா நக்கா...

டண்டணக்கா நக்கா நக்கா நக்கா

டண்டணக்கா நக்கா.....

இசையும் புகழும் தான் ஆடிக்கொண்டிருந்தனர்.... இருவரும் இவன் வந்ததை கூட கவனிக்காமல் ஆட்டத்தில் மூழ்கி இருக்க....

இசையை இது வரை இப்படி பார்த்திராத சத்யா சுவற்றில் சாய்ந்து கன்னத்தில் கை வைத்தபடி பார்த்து கொண்டிருந்தான்....

அவன் இதயம் எக்குத் தப்பாய் ஆட்டம் போட்டது.... இரவு நிகழ்வுகளும் கண்முன்னே தோன்ற இன்ப அவஸ்தையில் தவித்து தான் போனான்...

இனிமேல் இங்க இருந்தா அவ்ளோ தான் சத்யா ஓடிரு.... என்று அவன் மனசாட்சி எடுத்து சொல்ல...

தன் அறைக்கு வந்தவனுக்கு அப்போது தான் மூச்சே வந்தது....

"அம்மாடி என்ன ஆட்டம் போடறா... ஆனால் நைட் நடந்த விசயத்துக்கு கோவமா இருப்பான்னுல்ல நினச்சேன்.. எப்படி இந்த மாற்றம்.... ஒன்னும் புரியலையே...... ஆனாலும் புஜ்ஜிமா நீ இப்படி இருக்கறது தான் புடிச்சிருக்கு... "

ஆனால் அவனுக்கு தெரியாது...புகழ் தான் காரணமென்று.....

காலையில் புகழ் எழுந்து வரும் போது இசை சோபாவில் அமர்ந்திருந்தாள்.. கண்கள் அழுது சிவந்து இருந்தது... எதோ பிரச்சனை என்பதை உணர்ந்தான்... என்ன செய்வது என்று யோசித்தவனுக்கு அன்று இனியன் பேச்சு வாக்கில் சொன்னது நியாபகம் வந்தது... இசையின் அருகில் சென்றான்..

"காலை வணக்கம் அண்ணி... "

"காலை வணக்கம் புகழ்... "என்று அவள் குரலில் சுரத்தே இல்லை..

"டியர் அண்ணி எனக்கு ஒரு காபி கிடைக்குமா... ""இதோ கொண்டு வரேன் புகழ்...."என்று கொண்டு வந்து தர.... அதை வாயருகே கொண்டு சென்றவன்

"அண்ணி உப்பு போடலையே.... "என்று கேட்க

"உன்னை.... "என்று சோபா தலையணையால் அவனை அடித்தாள்..

"ஓகே ஓகே.... சமாதானம்.... "

"என்ன புகழ் எக்ஸர்சைஸ் பண்ணலயா.... "

"ஒரே போர் அண்ணி.... ஒரு ஐடியா.... டான்ஸ் ஆடலாமா...."

"ம்ம்.... நல்ல எக்ஸர்சைஸ் தான்....போய் ஆடு..... "

"தனியா ஆடுன லூசு மாறி இருக்கும்.. நீங்களும் வாங்க.... "

"நானா..... "

"அண்ணி ப்ளீஸ்... ப்ளீஸ்.... "

"சரி..... சரி..... வரேன்... "

"உங்க ரூம்க்கு போயிறலாம்... இங்க அம்மா அப்பாக்கு டிஸ்டர்ப்பா இருக்கும்.."

பாடிய வாயும் ஆடிய கால்களும் சும்மா இருக்குமா.... பாட்டை போட்டவுடன் தானாக ஆட ஆரம்பித்தாள்...

மனதும் சரியானது....

காலை அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்..... புகழ் சத்யாவையும் அழைத்து வந்து ஒன்றாக அமர வைத்தான்...சத்யா துளசியை பார்க்க அவர் ஒன்றும் சொல்லவில்லை.....

ஆனால் துளசி வேண்டுமென்றே புகழ்க்கு ஊட்ட சத்யா தலையை நிமிர்த்தாமலே சாப்பிட்டு முடித்தான்...

இசைக்கு வருத்தமாக இருந்தது... புகழுக்கும் என்ன செய்வதென தெரிய வில்லை... சந்திரன் ஒன்றும் கூற வில்லை....

சத்யா சீக்கிரம் எழுந்து விட்டான்... இயல்னாலும் சரியாக சாப்பிட முடிய வில்லை....

அப்போது உதயாவும் வினையும் வந்தனர்.... தங்கள் நட்புகளை கண்டு மகிழ்ந்தனர்....

எல்லாரும் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு ..... கல்யாண பத்திரிகை கொடுத்தனர்.... கண்டிப்பாக அனைவரும் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்து விட்டு சென்றனர்....ஒரு வாரம் போல் சென்றது.... தினமும் ஒன்றாக அமர்ந்தாலும் சத்யாவை கவனியாது புகழுக்கும் மற்றவர்களுக்கும் மட்டும் பார்த்து பார்த்து பரிமாற சத்யாவின் பொறுமையும் எல்லை மீறும் நாளும் வந்தது....

அன்று காலை வழக்கம் போல் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.... பூரி செய்திருந்தார் துளசி...

"அத்தை எதுக்கு பூரி பண்ணாங்க... இவர்னால சாப்பிட முடியாதே.... "என்று எண்ணிக் கொண்டே சத்யாவை பார்க்க அவனும் அதை போர்க்கால் பிக்க முடியாமல் தடுமாறினான்...

"அம்மா பூரி ஏன் பண்ணீங்க.. சத்யாக்கு இன்னும் கை சரியாகல... அவனால எப்படி சாப்பிட முடியும்... "

"உனக்கு புடிக்கும்னு பண்ணேன்டா.... மத்தவங்கள பத்தி யோசிக்காம ஒழுங்கா சாப்பிடு.... "

"என்ன துளசி..... "

"உங்களுக்கும் சேத்து தான் சொல்றேன்... சாப்பிடுங்க... என்னடா இன்னும் அளந்துகிட்டு இருக்க... ஆளு தான் தடிமாடு மாறி வளந்துருக்க... இன்னும் பூரிய கூட ஒழுங்கா பிச்சு சாப்பிட தெரில.... "

என்று சொல்லி புகழுக்கு ஊட்ட ஆரம்பித்தார்.....

அந்த நேரம் சத்யாவின் தட்டு காற்றில் பறந்து சுவற்றில் மோதி விழுந்தது....

"நான் தப்பு பண்ணிட்டேன் தான்.... அதுக்கு மன்னிப்பே வேண்டாம்... ஆனால் இன்னொரு முறை என் மனசை இப்படி கூறு போடாதீங்க..... அதுக்கு பதிலா விஷம் கொடுத்து கொண்ருங்க.. புடிக்காத பையனா..... வேண்டாத புருஷனா என்னால இதுக்கும் மேல வாழ முடியும்னு தோணல.... " என்று கூறி விட்டு காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்...

அனைவரும் அதிர்ச்சியில் சிலையாகி போனார்கள்....

துளசி தன் அறைக்கு சென்று விட்டார்...

இசையும் அவர் பின்னே சென்றாள்... அவளை பின் தொடர்ந்து போகப் போன புகழை சந்திரன் தடுத்தார்....

அறையில் துளசி கட்டிலின் மீது அமர்ந்திருக்க இசை கீழே அமர்ந்து அவர் மடியில் தலை வைத்து படுத்தாள்...

"அத்தை உங்க பிள்ளைய மன்னிச்சுடுங்க.... அவர் எதோ ஒரு சூழ்நிலைல தப்பு பண்ணிட்டார்.... இன்னமும் அதுக்காக வருத்தப் பட்டுட்டு தான் இருக்கார்.... நீங்கன்னா அவருக்கு ரொம்ப பிடிக்கும் அத்த..... உங்களை விட்டு இவ்ளோ நாள் விலகி இருந்ததே அவருக்கு பெரிய தண்டனை தான்....அது மட்டுமில்லாமல் என்னால அவரை இப்படி பார்க்க முடியலத்த.... என்னதான் அவர்மேல கோவம் இருந்தாலும் அவரை ரொம்பவும் நேசிக்கிறேன்.... என்னால அவரை மன்னிக்க முடியுமான்னு தெரில.... ஆனால் நீங்க எனக்காக அவரை மன்னிச்சுடுங்கத்த.... "

அவள் விழிகளில் நிறைந்த நீரை துடைத்த துளசி.... நெற்றியில் முத்தமிட்டார்....

"முயற்சி செய்யறேன் செல்லம்மா..... "

பதிலுக்கு அவர் கன்னத்தில் முத்தமிட்டவள் "தேங்க்ஸ் செல்லத்தை.. "

என்று சொல்லிவிட்டு சிட்டாய் பறந்தது நம் செல்ல சிட்டு..

இரவு பத்து மணிக்கு சத்யா வீடு திரும்பினான்...

வீட்டில் அனைவரும் தங்கள் அறையில் இருக்க துளசி மட்டும் சமையல் மேஜையின் முன் அமர்ந்திருந்தார்..

அவர் அருகில் சென்ற சத்யா....

" நான் காலையில் அப்படி பேசி இருக்க கூடாது..... என்ன மன்னிச்சிருங்க ம்மா.. "

என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகல முயன்றவனை கை பிடித்து தடுத்தார் துளசி..

"உட்காந்து சாப்பிடு.... "

"அம்மா..... "

"உக்காரு சத்யா.... "

சத்யாவும் அமர.... அவரும் எதுவும் பேசாமல் பரிமாற ஆரம்பித்தார்... பின் சாதத்தை பிசைந்து அவன் வாயருகே கொண்டு செல்ல.... அவனோ துளசியை கட்டி கொண்டான்..

தன் வயிற்றில் ஈரம் உணர்ந்தவர் பதறினார்.....

"கண்ணா அழாதடா... அம்மா உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்... என்ன மன்னிச்சுரு கண்ணா.. "

அவன் தலை நிமிர்த்தி துளசியை பார்த்தான்... அவர் கண்களும் கலங்கி இருந்தன...

"நீங்க எந்த தப்பும் பண்ணலமா... எந்த அம்மா வும் முக்கியமா செய்ய வேண்டிய ஒன்ன தான் செஞ்சுருகீங்க... தப்பு பண்ணது பெத்த புள்ளையா இருந்தாலும் தயங்காமல் தண்டிச்சிருக்கீங்க... "

"சரி சரி.... நேரமாச்சு... சாப்பிடு... "

"ஆஆஆஆ "

அவரும் மறுக்காமால் ஊட்டி விட்டார்..

"அம்மா எனக்கும்..... ஆஆஆஆ..."என்று புகழ் கேட்க....

அவன் வாயிலயே போட்ட துளசி

"போடா அங்கிட்டு... "

"ஹ்ம்ம் அம்மா ..... "என்று சிணுங்க

"சரி.... சரி... இந்தா.. "என்று அவனுக்கும் ஊட்டினார்...

சந்திரன் நீண்ட நாள் கழித்து கிடைத்த அந்த காட்சியை சந்தோசத்துடன் பார்த்து கொண்டிருந்தார்....

இசையும் மாடியில் இருந்து நடந்தவற்றை பார்த்து கொண்டு தான் இருந்தாள்... மனதில் நிம்மதியாக இருந்தது.... அந்த நிம்மதி கொடுத்த சந்தோசத்தில் உறங்க சென்றாள்...

தங்கள் அறைக்கு வந்த துளசியிடம் சந்திரன்... "எப்படிமா இவ்ளோ நாள் அவன் மேல கோவமா இருக்க முடிஞ்சுது... அதுவும் நீ அன்னைக்கு அடி பட்டப்ப கூட பாக்க வரல.. அவனுக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் அவன் முன்னாடியே புகழ்க்கு ஊட்டி விட்ட... இப்ப இசை பேசுன உடனே சத்யா கிட்ட சமாதானம் ஆகிட்ட...."

"எல்லாம் அவன் நல்லதுக்கு தாங்க... சத்யா கிட்ட நான் காட்டுற வெறுப்பு இசையை அவனோட சேர்த்து வைக்கும்னு தோணுச்சு... அதே மாதிரி இசையும் ஓரளவு மனசு மாற ஆரம்பிச்சுருக்கா....இன்னிக்கு இசையே வந்து சொல்லும் போது இனியும் இதை தொடர வேண்டாம்னு தோணுச்சு... அதான் என் கோவத்தை விட்டுட்டேன்... கூடிய சீக்கிரம் இசையும் சத்யாவ மன்னிச்சு அவங்க வாழ்க்கையை ஆரம்பிக்கனும்.. அதாங்க என்னோட வேண்டுதல்... "

"எல்லாம் நல்ல பாடிய நடக்கும் கவலை படாத......."

"ம்ம்.. சரிங்க.. "

அதே நேரம் இசையின் அறைக் கதவை தட்டினான் சத்யா....

அப்போது தான் உறங்க ஆரம்பித்த இசை திடுக்கிட்டு கண் விழித்தாள்... இந்நேரத்தில் யார் என்று யோசித்து கொண்டே திறந்தவளை இருக அணைத்திருந்தான் சத்யா...

"ரொம்ப தேங்க்ஸ் புஜ்ஜிமா.... "

என்று தோள் வளைவில் முகம் பதித்தவன் நீண்ட நேரம் விலக வில்லை.. இசையும் அவனை விலக்க முடியாமல் அந்த நிலைமையில் சொல்ல முடியாத உணர்வில் தவித்தாள்..

உனை ஆரத்தழுவி உச்சி முகர்ந்து

கூந்தலில் முகம் புதைத்து

வாசனை நுகர்ந்தே

இடை தீண்டிட வேண்டுமடி !!!!

என் மேனி சிலிர்த்து

செம்மேனி தீண்டிட

விரல் பத்தும் திருக்கோலம்

போடவே ஏங்கியே போனதடி !!!!

உன் செவ்விதழும்

என் முகம்தனை தீண்டிட

நாடி சிலிர்த்து

உன் மெய்யுடல் பருகி

என் தாகம்தான் தீர்த்திட

பேராசையும் கொண்டதடி !!!!


ஆசைகள் பல தோன்றிய போதும் இயலின் நிலை கருதி அவளை விடுவித்து தோய்ந்து போய் நின்றவளை படுக்க வைத்து போர்த்தி விட்டான்...

"தூங்குடா புஜ்ஜி... "என்று நெற்றியில் முத்தமிட்டு விட்டு தன் அறைக்கு சென்றான்..

அங்கு நிழலாக உள்ள அவள் புகைப்படத்தை அணைத்துக் கொண்டே உறங்கினான்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN