எனை மீட்டும் இயலிசையே -12

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
12


நாட்கள் அதன் வேகத்தில் செல்ல இசை சத்யா உறவில் எந்த மாற்றமும் இல்லை.. காலையில் புகழுடன் ஆடுவதில் தொடங்கி துளசியுடன் சமையலில் அதகளம் செய்வது.... சந்திரனுடன் சிறிது நேரம் தோட்ட வேலை செய்வது.... மாலையில் எல்லோரும் ஒன்றாக எதாவது விளையாடுவது என்று பொழுதுகள் கழிந்தாலும் சத்யாவுடன் தள்ளியே இருந்தாள்....

அந்த நிலையில் தான் உதயா வினய் திருமண நாளும் வந்தது....

சென்னையில் இருந்து கோவை சென்றனர்.. புகழ் ப்ராஜெக்ட் இருப்பதால் வரவில்லை... துளசியும் சந்திரனும் வேறு திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று அவர்களும் வரவில்லை..

இசை சத்யா மட்டுமே சென்றனர்...

ரயிலில் இரவு நேர பயணம் என்பதால் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை....

மறுநாள் நேராக மண்டபத்திற்கே சென்றனர்....

இரு வீட்டாரும் இவர்களை வரவேற்றனர்.... சத்யா வினயுடன் சென்றுவிட.... இசை மணமகள் அறைக்கு சென்றாள்....

"ஹேய்.... இசை...."என்று கத்திய தோழிகள் அவளை அணைத்து கொண்டனர்....

"எல்லாரும் எப்படிடி இருக்கீங்க...

" நாங்க எல்லாரும் நல்லாருக்கோம் இசை... நீ எப்படி இருக்க.... "

"நல்லாருக்கேன்..... "அப்போது அகியை பார்க்க ஏதோ மாற்றத்தை உணர்ந்தவள்.... "ஹே... அகி.... மேரேஜ் ஆகிருச்சாடி... "

"சாரிடி.... உன் மேரேஜ் முடிஞ்ச அடுத்த மாசத்துலயே மேரேஜ் ஆகிருச்சு.. உன்கிட்ட அந்த சமயத்துல.... ப்ச்... சாரி இசை... "

"இதுக்கு எதுக்குடி சாரிலாம்.... சரி பையன் யாரு... "

"அதான் டி.... அந்த வீணா போனவன்.. "

"கொல்லப் போறேன் பாரு... அவர் தான் இசை எங்க மாமா பையன்... "

"உனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லிட்டு இருந்த.... "

"அது.... அப்ப தெரியலடி... எங்க வீட்ல வேற மாப்பிளை பாக்க ஆரம்பிச்சாங்க.. அப்ப தான் எனக்கும் அவரை பிடிச்சிருக்குன்னு புரிஞ்சுது... அப்புறம் அம்மாகிட்ட சொல்லிட்டேன்... அவர் ஜாதகப்படி சீக்கிரம் மேரேஜ் செய்யணும்னு சொல்லிட்டாங்க... ஒரு வாரத்துல மேரேஜ் முடிஞ்சிருச்சு... அதோட..... இப்ப மூணு மாசம்....." என்று அவள் வெட்க பட்டு கொண்டே சொல்லி முடித்தாள்...

"சூப்பர்டி... "என்று அனைவரும் வாழ்த்து கூறினார்கள்....

பிறகு ரிசப்சன்க்கு ரெடி ஆகினர்...

இள ஊதா வண்ண டிசைனர் புடவையில் அழகோவியமாய் தன் தோழிகளுடன் நின்றவளை விட்டு சத்யாவால் கண்களை விலக்க முடிய வில்லை...

ஆனால் இசையோ அதற்கு நேர் மாறான மன நிலையில் இருந்தாள்....

"நானும் இதே சந்தோசதோட தானே இருந்தேன்... எவ்வளவு ஆசைகள்... எல்லாம் காற்றில் கரஞ்ச கற்பூரம் மாதிரி போயிருச்சு... ஏன் சத்யா அப்டி பண்ணீங்க... "என்று மனதிற்குள் புழுங்கினாள்...

அப்போது வினயின் நண்பர்கள் ஆளுக்கொரு இசைக் கருவிகளுடன் அங்கு இருந்த சிறிய மேடையில் நிற்க சத்யா மைக்குடன் நின்றிருந்தான்...

"ஹலோ பிரண்ட்ஸ்ஸ்.... எங்க நண்பனுக்காக சின்ன சர்ப்ரைஸ்...." என்று அவர்கள் இசைக்கருவிகளை ஒலிக்க சத்யா பாட ஆரம்பித்தான்...

வேறெதுவும் தேவை இல்லை

நீ மட்டும் போதும்

கண்ணில் வைத்து காத்திருப்பேன்

என்னவானாலும்

உன் எதிரில் நான் இருக்கும்

ஒவ்வொரு நாளும்

உச்சி முதல் பாதம் வரை

வீசுது வாசம்

தினம் ஆயிரம் முறை

பார்த்து முடித்தாலும்

இன்னும் பார்த்திட சொல்லி

பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தான்

தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

என் உயிரே வா

அவன் பாட ஆரம்பித்த அந்த நிமிடத்தில் இருந்து சேர்ந்த இருவரின் பார்வையும் ஒருவரை விட்டு ஒருவர் விலக வில்லை...

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம் என்பதை அவன் கண்கள் சொன்னது....

சத்யாவோ இசையின் கண்ணில் ஏக்கத்தை மட்டுமே கண்டான்... அவளை கைகளில் எந்த துடித்த உள்ளத்தை உருக்கி குழைத்து தன் குரலில் கலந்தான்....

மேலும் கீழும் ஆடும் உந்தன்

மாயக் கண்ணாலே

மாறு வேடம் போடுது என்

நாட்கள் தன்னாலே

ஆயுள் ரேகை முழுவதுமாய்

தேயும் முன்னாலே

ஆளும் வரை வாழ்ந்திடலாம்

காதலின் உள்ளே

இந்த உலகம் தூளாய்

உடைந்து போனாலும்

அதன் ஒரு துகளில் உன்னை

கரை சேர்ப்பேன்

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தான்

தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

என் உயிரே வா

கண்ணீர் கண்களில் நிறைந்து நிற்க... இருக்கும் இடத்தில் நிலை கொள்ளாது தவித்தாள்...

இசையின் விழி நீர் துடைத்து ஆதரவாக தோள் சாய்த்து அரவணைக்க துடித்த கைகள் மாறாக மைக்கை இருக்கி பிடித்தது....

நீ நீங்கிடும் நேரம்

காற்றும் பெரும் பாரம்

உன் கைத்தொடும் நேரம்

தீ மீதிலும் ஈரம்

நீ நடக்கும் பொழுது

நிழல் தரையில் படாது

உன் நிழலை எனது உடல்

நழுவ விடாது

பேரழகின் மேலே ஒரு

துரும்பும் தொடாது

பிஞ்சு முகம் ஒரு நொடியும்

வாடக் கூடாது

உன்னை பார்த்திருப்பேன்

விழிகள் மூடாது

உன்னை தாண்டி எதுவும்

தெரிய கூடாது

தாரமே தாரமே வா

வாழ்வின் வாசமே வாசமே

நீ தான்

தாரமே தாரமே வா

எந்தன் சுவாசமே சுவாசமே

என் உயிரே வா

இசை அதற்கு மேலும் அங்கு இருக்க முடியாமல் செல்ல.... சத்யாவும் அவள் பின்னே சென்றான்.... அடுத்த பாடலை வேறு ஒருத்தர் பாட இவர்களை யாரும் கவனிக்க வில்லை...

மாடிக்கு சென்ற இசை அதற்கு மேலும் கட்டுப்படுத்த முடியாமல் மடிந்து உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்...

பின்னால் வந்த சத்யா கீழே அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான்..

"புஜ்ஜிமா அழாதடா... உன் கோவம் தீரும் மட்டும் என்ன அடிச்சுக்கோ... இனிமேலும் நீ கஷ்டபடறத பாக்க முடியல... "

"ஏன் சத்யா அன்னிக்கு அப்படி பேசுனீங்க... ஒரு போட்டோவ வச்சு எப்படி என்ன தப்பா நினைக்க முடிஞ்சது... நா......நான்... எவ்ளோ ஆசையோட நம்பிக்கையோட இருந்தேன் தெரியுமா... எல்லாத்தையும் உங்க வார்த்தைகள் சிதச்சிருச்சு..... இப்ப நீங்க வந்து மன்னிச்சிரு மன்னிச்சிருன்னா எப்படி முடியும்... உங்களை கஷ்ட படுத்தவும் முடில உங்களோட சேரவும் முடியாம நரக வேதனை அனுபவிக்கறேன் தெரியுமா... என்று அவள் விம்மி வெடிக்க அவளை மார்போடு அணைத்துக் கொண்டான்...

"நீ..... நீங்க இப்ப பாடின பாட்டு ஒரு பக்கம் என்ன கரைக்குது... நீங்க பேசுன பேச்சு உயிரை வதைக்குது... என்னால மன்னிக்கவும் முடில மறக்கவும் முடில சத்யா... செத்து போகணும் போல இருக்கு... "

"என்னடி பேசற.... நீயில்லாம நான் மட்டும் எப்படி இருப்ப... உனக்கு சாவறது தான் விருப்பம்ன்னா சொல்லு வா ரெண்டு பேரும் செத்து போய்றலாம்.. "

அவன் வாயை பொத்திய இயல் "அப்டிலாம் சொல்லாதீங்க சத்யா.... என்னோட சத்யா எப்பவும் நல்லா இருக்கனும்... "

"நீ இல்லாம நான் ஒண்ணுமே இல்லை புஜ்ஜிமா....உனக்கு எப்ப என்கூட பேச தோணுதோ அப்ப பேசு.... இனிமேல் நீ வருத்தபட்டா இதான் மருந்து... என்று அவள் இதழை கொய்தவன்... அவள் கண்களின் கண்ணீரை தன் முத்தத்தால் வற்ற செய்தான்...

அவன் நெஞ்சோடு தன்னவளை அணைத்தான்....

இருவருடைய மனதும் அமைதியடைய அப்படியே உறங்கியும் போயினர்....



அதிகாலை நேரம்

பணி தூவுது ஈரம்

நெஞ்சோடு நீ....

இணை பிரியா

இமை இரண்டும்

இறுகி பிணைந்து கிடக்க

கலைந்த கார்குழலோ

முழு மதி முகம் மறைக்க.....

கலையாத தூக்கத்தில்

கவி புரளும் ஓவியமாய்

நெஞ்சத்தை மஞ்சமென்று எண்ணி

துயில் கொண்டாயா !!!!!


காலை நேரத்தில் கேட்ட குருவிகளின் சத்தத்தில் எழுந்தான் சத்யா... மணியை பார்க்க நான்கை காட்டியது...

தன் மீது சாய்ந்து தூங்கி கொண்டிருந்த இயலை பார்த்தான்.. எழுப்ப மனம் வரவில்லை... கல்யாணத்திற்கு தயாராக வேண்டும்... வேறு வழியின்றி எழுப்பினான்...

"புஜ்ஜிமா... எழுந்திரு.... லேட் ஆகிடுச்சு.... "

"ப்ச் போங்கப்பா.. இன்னும் கொஞ்ச நேரம்... "என்று அவனை மேலும் அணைத்து கொண்டு உறங்க...

"இப்படி பண்ணா நான் எப்படிம்மா நல்லவனா இருக்கறது... செல்ல புஜ்ஜில. எழுந்திரு... "என்று அவள் கன்னம் தட்டி எழுப்ப...

சோம்பலாய் எழுந்தவள் சுற்று புறம் பார்க்க.... அப்போது தான் உறைத்தது அவள் இருந்த நிலையும் இருக்கும் இடமும்...

நெஞ்சம் படபடக்க விலகி அமர்ந்தவள்

"சாரி....."இசையால் சத்யாவின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடிய வில்லை... தலையை குனிந்தவாறே இருந்தாள்...

"நான் தான் தேங்க்ஸ் சொல்லணும் இயல்.... அதெல்லாம் பொறுமையா பேசிக்கலாம்.. இப்ப லேட் ஆகுது போய் கிளம்பு.... "

அவளும் சரியென தலையாட்டிவிட்டு கீழே வந்து விட்டாள்...

மற்ற தோழிகள் தயாராகி கொண்டிருக்க இசையும் தயாராகி வந்தாள்....

" ஏய் அகி நேத்து மொட்டை மடில செம காத்தாமா... "

"ஆமா சொன்னாங்க சொன்னாங்க.. "

இசைக்கு புரிந்தது... தன்னை தான் கேலி செய்கின்றனர் என்று...

"ஏய் நித்தி உனக்கு தெரியுமா.... "

"ஏன் தெரியாம.... நானும் மகியும் தான் படிலயே உக்காந்து இருந்தோமே.. "

"கிண்டல் பண்ணா கொன்றுவேன்... "என்று இசை சிணுங்க....

"கிண்டல் பண்றோமா.... அடிப்பாவி... சரி புள்ள ஏதோ அழுதுட்டே போகுதேன்னு பின்னாடியே வந்தா... சத்யா எங்களுக்கும் முன்னாடி உன்னை தேடி வந்தாரு... சரி பயபுள்ளைங்க சமாதானம் ஆகட்டும்னு நாங்களும் படிலயே வுக்காந்து இருந்தா.... ரெண்டு பேரும் வரவே இல்லையே... அப்புறம் ரெண்டு பேரும் அங்கேயே தூங்கி இப்ப தான் நீங்க பேசற சத்தம் கேட்டு நாங்க கீழ வந்தோம்... "

"அது.......... சாரி....... "

"லூசு..... இதுக்கு எதுக்கு சாரி.... நீ ஹாப்பியா இருந்தா போதும்டி....."

பாச மழைக்கு பிறகு ஒரு வழியாக அனைவரும் தயாராகினர்.....

பச்சை வண்ண பட்டு புடவை.... பச்சை கல் பதித்த அட்டிகை..... காதில் குடை ஜிமிக்கி..... மூக்கில் அதே சிறு வைரம் பதித்த மூக்குத்தி......

அவளின் ஒவ்வொரு அசைவில் ஆடும் ஜிமிக்கியும் மின்னும் மூக்குத்தியிலும் தொலைந்து போனான்.....

அவனும் வேட்டி சட்டையில் அழகாய் இருந்தான்......

அவனறியாமல் ரசித்தாள்.... அப்படித்தான் இயல் நினைத்தாள்..

அவன் தான் கள்வன் ஆயிற்றே....அவளின் கள்ளப் பார்வை கண்டு மனதுக்குள் இதமான சாரல் அடித்தது.....

ஆனால் தாலி கட்டும் நேரத்தில்.... ஏனோ மனதில் வேதனையாகவே உணர்ந்தாள்....

அவள் அருகில் சென்ற சத்யா இயலின் கையை ஆதரவாக பற்றிக் கொண்டான்....

சத்யாவின் மனதிற்குள் வலித்தது...

"என்னுடைய தவறு உன்னை இந்த அளவுக்கு பாதிச்சிருக்குன்னு நினைக்கறப்ப என் மேலேயே வெறுப்பா இருக்குடா.... " என்று மனதிற்குள் வருந்தினான்.....

திருமணம் முடிந்து இயலும் சத்யாவும் சென்னை புறப்பட்டனர்...

கோவை ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் ரயிலில் ஏறினர்... சத்யா இருக்கையை பார்த்து அமர போக எதிரில் இருந்தாவனை பார்த்து திகைத்து.... கோபத்துடன் திரும்ப.... பின்னால் வந்த இசையோ....

"ஹேய் தினேஷ்.... எரும..... எப்படி இருக்க.... " என்று மகிழ்ச்சியுடன் கத்தினாள்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN