எனை மீட்டும் இயலிசையே -13

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
13ஹேய் தினேஷ் எரும..... எப்படி இருக்க.. ஒரு போன் இல்லை... ஒரு மெசேஜ் இல்லை... ஸ்கூல் முடிஞ்சதும்.. அப்டியே ஓடி போய்ட்ட.... அப்படி என்ன என் மேல கோவம்.. " என்று அவள் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக சத்யாவோ அவனை பார்த்து முறைத்து கொண்டு இருந்தான்...

அப்போது தான் தினேஷ் பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்ணை பார்த்தவள்....

"ஏய் அழகி........ எப்படிடி இருக்க.... "என்று அவளை கட்டி கொண்டாள்...

"நீங்க ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிகிட்டீங்களா.... என்கிட்ட சொல்லவே இல்ல... அந்த அளவுக்கு நான் வேண்டாதவளா போய்ட்டேனா....

"ஏன்டா அவ தான் காரணமே சொல்லாம என்கூட பேசாமல் இருந்தா... உனக்கு என்ன கேடு.... நான் என் மேரேஜ் இன்விடேஷன் கூட உனக்கு மெயில் பண்ணேன்.. சரி அத விடு நீங்க எப்படி மேரேஜ் பண்ணிடீங்க...

ஏண்டி அழகி உனக்கு தான் இவனை பிடிக்காதே.... நான் பேசுனா கூட அப்டி திட்டுவ....

சத்யா இவங்க என்னோட ஸ்கூல் பிரண்ட்ஸ்... ரொம்ப கிளோஸ் பிரண்ட்ஸ் தெரியுமா...

ஒரு தடவ நாங்க டூர் போயிருந்தோம்.. அப்ப நான் அழகி தினேஷ்... மூணு பேரும் ஒண்ணாவே சுத்திட்டு இருந்தோம்... அத்தனை போட்டோ எடுத்தோம் தெரியுமா....

அப்ப இவன் தனியா போட்டோக்கு காலை நீட்டி உட்காந்து போஸ் குடுத்துட்டு இருந்தான்...

அப்ப என் கிளாஸ்மேட் ஒருத்தி என்ன தொரத்திட்டு வர நான் இவன் மேல போய் விழ அந்த டைம் பார்த்து அழகி போட்டோ எடுத்துட்டா...

அப்ப அழகிக்கு வந்த கோவத்தை பார்க்கணுமே அந்த பொண்ண போய் காச்சி எடுத்துட்டா...

அந்த போட்டோவ எந்த விசக் கிருமியோ எங்க பிரின்சிபால்க்கு அனுப்பிட்டாங்க...

அவர் எங்கள கூப்பிட்டு விசாரிச்சார்... நாங்களும் நடந்ததை சொன்னோம்... எங்களை பத்தி அவருக்கு தெரியும்... அதான் வார்னிங் குடித்து விட்டுட்டாரு...

ஆனால் அதுக்கு அப்புறம் அழகி தினேஷ் தான் அந்த போட்டோவ அனுப்பினானு சண்டை போட்டா... இவன் கிட்ட பேசவே கூடாதுன்னு சொல்லிட்டா...

நான் தினேஷ் அப்டிலாம் பண்ண மாட்டான்னு இவ கிட்ட சண்ட போட்டேன்..

அப்டியே சண்டை பெருசாகிடுச்சு... அழகி கொஞ்சம் கொஞ்சமா எங்க கிட்ட இருந்து விலகிட்டா... ஆனா இவன் என்கூட கிளோஸ்சா தான் இருந்தான்...

ஸ்கூல் லாஸ்ட் டேல வந்து என்னை லவ் பன்றேன்னு கொடுத்தான் பாருங்க ஷாக்கு.... இப்ப நெனச்சா சிரிப்பா இருக்கு..

அன்னைக்கு நான் எப்படி அழுதேன் தெரியுமா.. இவன் என்னோட பெஸ்ட் பிரண்ட்... அதோட எனக்கு லவ்னாலே பிடிக்காது... யாராவது வந்து என்கிட்ட லவ் பன்றேன்னு சொன்னா அவங்க கிட்ட லைப் லாங் பேச மாட்டேன்.. அதான் இவன் கூடையும் இனிமேல் பேச மாட்டேன்னு அழுகை..

அப்புறம் சொல்லுது இந்த பக்கி.. சும்மா விளையாண்டானாம்... அவனை மறக்கா கூடாதுனு பிரான்க் பண்ணானாம்..

அடி பிச்சுட்டேன்.... அப்புறம் எப்டியோ சமாதானம் செஞ்சுட்டான்...

ஆனால் அதுக்கு அப்புறம் என்கிட்ட இவன் காண்டாக்ட்டே வச்சுக்கலை...

இவங்க ரெண்டு பேருக்கும் பேச நான் எவ்ளோவோ ட்ரை பண்ணேன்... பட் முடியல...

என்று அவள் மூச்சு வாங்க பேசி முடிக்க.... தினேசும் அழகியும் தலை குனிந்து அமர்ந்திருக்க... சத்யாவோ எதும் பேசாமல் அவர்களை முறைத்து கொண்டே சென்று விட்டான்....

இசை குழம்பி போய் அமர்ந்திருந்தாள்...

"ஏன் இப்படி இருக்கீங்க.... என்ன பிரச்சனை.... சத்யாவை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா.... "

"சொல்லித் தொலைங்க என்ன தான் பிரச்சனை.... முதலில் நீங்க ஏன் என்கிட்ட இவ்வளவு நாள் பேசாமல் இருந்தீங்க.... "

அழகி எழுந்து வந்து இசையின் பக்கத்தில் அமர்ந்தாள்... இசையை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்...

"ஏய் அழகி எதுக்கு அழற....சரி சரி அழாத.... "என்று இசை ஆறுதல் படுத்த அவள் அழுது கொண்டே சொல்ல ஆரம்பித்தாள்...

"நான் தினேசை ஸ்கூல் படிக்கறப்ப இருந்தே லவ் பண்றேன் இசை... அது அவனுக்கு தெரியாது.... நாம மூணு பேரும் பழக ஆரம்பிச்சதுல இருந்தே அவன் மேல ஒரு பீலிங் இருந்தது...

அதை காதல்னு உணர்ந்தது டூர் போனப்ப தான்... ஆனால் அவன் உன் கிட்ட கிளோஸசா பழகவும் கொஞ்சம் உன் மேல பொறாமை வந்துச்சு...

அன்னைக்கு அவன் மடில நீ விழுந்தப்ப நிஜமா என்னால தாங்க முடில இசை.... அதுவும் அவன் கண்ணுல அப்ப தோணுன உணர்வு என்னை ரொம்பவும் பயமுறுத்துச்சு...

அதான் அன்னைக்கு பிரின்சிபால்க்கு அந்த போட்டோவை அனுப்பினேன்... நீ அவனை தப்பா நினச்சு அவன் கிட்ட இருந்து விலகிடுவேன்னு...

ஆனா நான் எவ்ளோ சொல்லியும் நீ அவனை ரொம்ப நம்பின... அதனால் நீயும் அவனை லவ் பன்றேன்னு நினச்சேன்... உன் மேல கோவமா வந்துச்சு... அதான் உன்கிட்ட பேசறத விட்டுட்டேன்....

நான் ஸ்கூல் கடைசி நாள் அப்ப உன்கிட்ட பேச வந்தேன்... அப்ப தான் தினேஷ் உன்கிட்ட லவ்வ சொல்லிட்டு இருந்தான்...

"அவன் என்கிட்ட பிரான்க் பண்ணிட்டு இருந்தான்.... "என்று இறுகிய குரலில் இசை சொல்ல...

"இல்ல இசை அவன் உண்மையாவே உனக்கு ப்ரொபோஸ் பண்ண தான் வந்தான்... "

"அப்ப அவன் என்னை லவ் பண்ணது முன்னமே தெரியுமா... "

"ம்..... அந்த டூர் போட்டோவை என்கிட்ட இருந்து வாங்க வந்தான்.... அப்ப என்கிட்ட உன்னை லவ் பண்றதை சொன்னான்.... அதுக்கு அப்புறம் தான் நான் உன்கிட்ட இருந்து முழுசா விலகிட்டேன்....

"சரி நீங்க சொல்லுங்க தினேஷ்... எப்ப இருந்து உங்களுக்கு என்மேல காதல் வந்துச்சு... "

அவன் பேசாமல் தலை குனிந்தவாறே இருந்தான்...

"உங்களை தான் கேக்கறேன்... "

"அது..... டூர் ல.... "

"உன் மடில விழுந்தனே அப்பவா... "

"என்னால அந்த நிமிஷம் ஏற்பட்ட மாற்றத்தை நான் காதல்னு தான் நினச்சேன்.... "

"ஏன் சார் என்கூட பேசும்போது என்கிட்ட பழகும் போது வராத காதல்... நான் மடில விழுந்ததும் வந்திருச்சா... ஒரு பொண்ணு தொட்டதும் காதல் வந்துரும்னா அதுக்கு பேர் காதலே இல்லை...

"சாரி இசை... எனக்கு அப்போ அது புரியல... நீ என்கிட்ட கிளோஸ்சா பழகவும் நீயும் என்னை லவ் பன்றேன்னு நினச்சேன்.... ஆனால் அன்னைக்கு உன்கிட்ட லவ் சொன்னப்ப நீ அழுதப்ப தான் நீ லவ் பண்ணலன்னு புரிஞ்சுது....

அப்போதைக்கு உன்னை பிரான்க்னு சொல்லி சமாளிச்சுட்டேன்...

ஆனால் ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்துச்சு... அதான் உன்கிட்ட பேசல...

அதுக்கு அப்புறம் தான் அழகிய ஏதேச்சையா சந்திச்சேன்... பழைய பிரண்ட்ஷிப் தொடர்ந்துச்சு... அழகியோட பழக பழக அவளோட மனசு ரொம்ப பிடிச்சுது... அவள் கிட்ட விருப்பத்தை சொன்னேன்.... அவள் ஸ்கூல்ல நடந்ததை சொன்னா... அப்ப தான் அவளோட காதலை புரிஞ்சுகிட்டேன்....

அப்புறம் ரெண்டு வீட்டு அம்மா அப்பா கிட்ட சம்மதம் வாங்கினோம்.... இப்ப தான் மேரேஜ் முடிஞ்சி ஒரு வருஷம் ஆகுது.....

தன் கண்களை துடைத்து கொண்ட இசை..... "நான் தான் உங்களை பெஸ்ட் பிரண்ட்டா நெனச்சிருக்கேன்... ஆனால் நீங்க அப்படி இல்லை.... என்கிட்ட இருந்து எல்லா விஷயத்தையும் மறச்சிருகீங்க... "

"அப்படி இல்ல இசை... "என்று இருவரும் பேச முற்பட.... அவர்களை தடுத்த இசை....

"இல்ல வேண்டாம் எதும் சொல்ல வேண்டாம்...... உங்களுக்கும் சத்யாவுக்கும் என்ன பிரச்சனை.... "

"அது.... உன்.. கல்யாணத்தை நாங்க தான் நிறுத்தினோம்... "

"என்ன..............."அதிர்ச்சியில் உறைந்து போனாள்.....

"ஏ.......ஏன்...... அப்படி பண்ணீங்க.... "

"நாங்க அன்னைக்கு பீச் ரெஸ்டாரெண்ட்க்கு வந்திருந்தோம் இசை.... உன் கிட்ட பேசலாம்னு வந்தோம்... அப்ப தான் சத்யா வந்தாரு.. சத்யா கிட்ட தான் தினேஷ் ஒர்க் பண்ணான்....

ஆசையா உங்க கிட்ட பேச வந்தப்ப.... அவர் உன்னை அடிக்கிறத பார்த்ததும் ஷாக் ஆகிட்டோம்... அப்புறம் நடந்த விஷயத்தை உன் பிரண்ட்ஸ் பேசுனத வச்சு புரிஞ்சுகிட்டோம்....

அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் உன் கிட்ட பேசாமயே வீட்டுக்கு வந்துட்டோம்..

தினேஷ் வேணுமின்னே அவர் கிட்ட பொய் சொல்லி அவர் ரியாக்ஷன் தெரிஞ்சுக்க ட்ரை பண்ணான்... அவரும் ரொம்ப கோவப்பட்டு இவனை எல்லார் முன்னாடியும் திட்டி வேலைய விட்டுட்டு அனுப்பிட்டாரு.... "என்று அழகி முடிக்க தினேஷ் பேச ஆரம்பித்தான்....

"உன் கூட பேசலைனாலும் நீ எங்க பெஸ்ட் பிரண்ட் இசை... நீ கஷ்ட படறத எங்களால பாக்க முடியாது....

நீ சத்யாவை கல்யாணம் பண்ணா சந்தோசமா இருக்க மாட்டீன்னு நினச்சு தான் உன் கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்தேன்... உன்கிட்ட நேரடியா சொன்னா நீ எப்படியும் ஒத்துக்க மாட்டினு தெரியும்.... அதான் இப்படி பண்ணோம்...

பிறகு அன்று நடந்ததை சொன்னான்... உன்கிட்ட அந்த போக்கேவை நான் ஒரு குட்டி பொண்ணு கிட்ட கொடுத்துட்டு சத்யா வரப்ப உன் ரூம்ல இருந்து வெளிய வர்ற மாதிரி காட்டிகிட்டேன்....

அதுக்கு அப்புறம் கூட சத்யா நம்பலை.. சரி அவர் உன்மேல ரொம்பவும் நம்பிக்கையும் காதலும் வச்சிருக்காருன்னு நம்பினோம்....

மேரேஜ் முடிஞ்சு சர்ப்ரைஸ் குடுக்கலாம்னு வீட்டுக்கு போய்ட்டு காலைல வர லேட் ஆகிடுச்சு...

வந்து பார்த்தால் சத்யா உன்னை திட்டிட்டு இருந்தாரு.... அவரு பேசுறதை கேட்டப்ப மீண்டும் அவர் மேல நம்பிக்கை போயிருச்சு... கொஞ்ச நாள் போச்சுன்னா நீ வேற யாரயாவது கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்கனும்னு நினைச்சி நாங்க வந்துட்டோம்...

ஆனால் அன்னைக்கு சாயங்காலம் சத்யா எங்க வீட்டுக்கு வந்தாரு....வந்து தினேசை அடிச்சப்பா நாங்க எல்லா விஷயத்தையும் சொன்னோம்..... அவர் எதும் பேசாமல் போய்ட்டாரு...

அதுக்கு அப்புறம் உன்னை பார்க்க முயற்சி பண்ணோம் முடில... இவனுக்கு கோவைல வேலை கிடைச்சு இங்க வந்துட்டோம்...

"இசை எங்களை மன்னிச்சுடு இசை....உன் நல்லதுக்குன்னு நாங்க செய்ய நினச்சோம்..."என்று அவன் முடிக்கும் முன் அவன் சட்டையை கொத்தாய் பற்றிய இசை அவனை மாறி மாறி அறைந்தாள்....

தடுக்க வந்த அழகியையும் அடித்தாள்..

உங்களை யார் என் வாழ்க்கைல தலையிட சொன்னது.... உங்களால் நான் எவ்ளோ வேதனை அவமானம் அடஞ்சேன் தெரியுமா.. "என்று மீண்டும் அவர்களை அடிக்க

அப்போது வந்து தடுத்த சத்யா "இசை அமைதியா இரு.... அவங்க உன் மேல இருக்கற அக்கறைல எதோ தெரியாம பண்ணிட்டாங்க... அதுக்கு வருத்த பட்டுட்டு இருக்காங்க.....

"என்ன வருத்த படறாங்களா... நான் அன்னிக்கு செத்து போயிருந்தா என்ன பண்ணிருப்பீங்க.... "

"அப்டிலாம் பேசாதடி..... "என்று அழகி வருத்தமுடன் கூற

"ஏய் பேசாத சொல்லிட்டேன்.... "

"ப்ளீஸ் இசை அவங்கள மன்னிச்சுடு..."

"நீங்க பேசாதீங்க... அன்னைக்கு ஒரு வார்த்தை என்கிட்ட அந்த போட்டோவை காட்டி பேசி இருந்தா நான் அவ்ளோ வேதனை பட்டுருக்க மாட்டேனே.... அப்பவெல்லாம் என்னை நம்பாத நீங்க இவங்க கிட்ட போய் உண்மை தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் என்மேல நம்பிக்கை வந்துச்சு அப்படித்தான...

அப்படி வந்த எந்த நம்பிக்கையும் எனக்கு தேவை இல்லை.... நீங்க பிச்சை போடற வாழ்க்கையும் எனக்கு தேவை இல்லை... உங்க வீட்ல இருக்கற பேயிங் கெஸ்ட் மாதிரி நினைச்சுக்குங்க... ஆனால் இந்த விஷயம் எங்க வீட்டுக்கும் உங்க வீட்டுக்கும் தெரிய வேண்டாம்.... அவங்க மனசை இதுக்கு மேல என்னால கஷ்ட படுத்த முடியாது....

நான் எப்பவும் போல இருப்பேன்.... நீங்க என்ன விட்டு கொஞ்சம் தள்ளியே இருங்க... அதான் நமக்கு நல்லது...

"அப்புறம் நீங்க... "என்று அழகி மற்றும் தினேசை பார்த்தவள்... "உங்க ரெண்டு பேரையும் எனக்கும் யாருன்னே தெரியாது... உங்களுக்கும் எனக்கும் ஓரு மூணாம் மனுசங்க கூட இருக்கற சம்பந்தம் கூட கிடையாது.. " என்று கூறியவள் ஜன்னலின் புறம் திரும்பி அமர்ந்தாள்....

யாராவது மனதிற்கு நெருக்கமானவர்களை கட்டிக் கொண்டு கதற வேண்டும் என்று துடித்த மனதை அடக்கி கொண்டாள்... ஆனால் கண்ணீரை கட்டு படுத்த முடிய வில்லை...

சட்டென்று காலை மடித்து கட்டிக் கொண்டு விசும்பி அழுத்தவளை திகைத்து சமாதானம் செய்ய முயன்றனர்....

அவர்களை தீக் கண்களால் விலக்கியவள் கண்களை துடைத்து கொண்டு ஜன்னலில் தலை சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள்....

சத்யா வேறு வழியின்றி சீட்டில் தலை சாய்த்து கண்களை மூடினான்...

அழுது கொண்டே வெளியே போன அழகியின் பின்னாடி சென்றான்.. தினேஷ்...

"நாம ரொம்ப தப்பு பண்ணிட்டோம்டா.. அவளை ரொம்பவும் கஷ்டபடுத்திட்டோம்.." என்று அழுத்தவளை "சத்யா எல்லாத்தையும் சரி பண்ணிடுவார் அழகி.... "என்று அணைத்து ஆறுதல் படுத்தினான்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN