ஈரவிழிகள் 12

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அனைத்தும் முடித்து வள்ளியை காரில் வீட்டுக்கு அனுப்பிய குமரன் பிறகு அங்கிருந்த காபி ஷாப்புக்கு வந்து அமர...

“என்ன மச்சான்... தங்கச்சியையும்... குழந்தையையும் பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டியா?” என்று எதிரே அமர்ந்து இருந்தவன் கேட்க

“என்ன டா... கொழுப்பா... அவ உனக்கு தங்கச்சியா...” குமரன் உஷ்ணமாய் கேட்க

“of course என் தங்கச்சி தான்...” முன்னே இருந்தவன் மறுபடியும் அதையே படிக்க..
‘என்னத்தையோ சொல்லித் தொலை' என்பது போல் அவனை முறைத்தவன், “முதல்ல போலீஸ்காரன் மாதிரி பேசு டா” என்று குமரன் எதிரில் அமர்ந்து இருந்தவனை அதட்ட

“கூல்... மச்சான் கூல்...” என்று நண்பனை தாஜா செய்தான் போலீஸ் நண்பனான சூர்யாவும்.. குமரனும் நண்பர்கள். சூர்யா போலீஸ் துறையில் ஒரு செக்டாரில் உயர் அதிகாரியாக இருக்கிறான்.

“ஒரு போலீஸ்காரனா என் பார்வையில் வள்ளியைப் பற்றி நான் சொல்றதை கேட்டுக்கோ... வள்ளியைப் பார்த்தா அக்கியூஸ்ட் மாதிரி தெரியல... may be பெயர் கூட வள்ளியும் இருக்கலாம் அது இல்லாமலும் இருக்கலாம். ஆனா என் தங்கச்சி ரொம்ப அமைதி... அநியாயத்துக்கு நல்ல பொண்ணு. அது மட்டும் நிச்சயம்...” சூர்யா இன்னும் அடுக்கிக் கொண்டே போக

“டேய்... அடங்கு டா... அந்த களவாணிய நீ வீட்டுல வச்சு சந்திச்சா... வீட்டுல உள்ளவங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்... அந்த புள்ளையும் உஷாராகிடுமேன்னு உன்னைய இங்க வரச் சொல்லி அதையும் இங்க கூப்டுகிட்டு வந்தா... தங்கச்சியாம் தங்கச்சி... இதுல நல்லவ வல்லவன்னு பட்டம் வேற குடுத்துகிட்டு இருக்கியா நீ... என் கிட்ட நீ உதை வாங்காம போக மாட்ட போலயே...”

“நீ அடங்கு டா மச்சான்... நான் சொன்னது எல்லாம் நிஜம். இப்போ சீரியஸாவே சொல்றேன். நான் பார்த்த வரைக்கும் அந்த பொண்ணு ரொம்ப இயல்பா உன்னோட பொருந்தி நடந்துக்குது. எங்கேயும் ஒரு துளி கூட நடிப்புன்னு இல்ல. உன் கிட்டவும் குழந்தை கிட்டவும் உண்மையான அக்கறையோட தான் நடந்துக்குது. வள்ளி யார் யாருக்கெல்லாம் டிரெஸ் எடுத்ததோ... அவங்க எல்லோருக்கும் முழுமனசா விருப்பப்பட்டு தான் எடுத்தது. வேண்டா வெறுப்போ... நிர்பந்தமோ... இப்படி எதுவுமே அந்த புள்ளகிட்ட இல்ல. இது எல்லாத்தையும் விட...” சூர்யா சற்றே நிறுத்த

“என்ன டா... அதையும் சொல்லித் தொலை...”

“என் தங்கச்சிக்கு உன் மேலே காதலோ காதல் டா... அதிலும் கரை காணாத காதல் டா” போலீஸ்காரன் போட்டுடைக்க..

“ச்சீ... வாய மூடு... நீ எல்லாம் போலீஸ்காரன்னு வெளியே சொல்லிடாத...” குமரன் கோபப்பட

“எனக்கும் சில பல குழப்பங்கள் இருக்கு தான் குமரா. என்ன சொல்ல... தொன்னூற்றி ஒன்பது சதவீதம் என்னால் வள்ளி மேல் சந்தேகப் பட முடியல. மீதி ஒரு சதவீதம்... உன் வாழ்வில் அவ நுழைந்தது தவறான முறை என்றதால் தான் யோசிக்கிறேன். வள்ளியை சில போட்டோஸ் எடுத்து வச்சிருக்கேன். நீ சொன்ன மாதிரி இந்த விஷயத்தை சீக்ரெட்டா டீல் பண்றேன். இது சம்பந்தமா உனக்கு நான் எல்லா வகையிலும் துணையா இருப்பேன் டா... கவலைப்படாத.

நான் மட்டும் உன் கல்யாணத்துக்கு வந்திருந்தா இதற்கு எல்லாம் அன்னைக்கே முடிவு கட்டியிருப்பேன். உன் நேரம் ஒரு கேஸ் விஷயமா வெளியூர் போய்ட்டேன்...” என்று நண்பனுக்கு ஆதரவாகப் பேசியவன் இறுதியாக,

“மறுபடியும் சொல்றேன்னு கோபப்படாத மச்சான்... வள்ளி உன்னை லவ் பண்ணுது... அந்த காதல் கூட இப்படி செய்ய வச்சிருக்கலாம் இல்ல?” என்று இவன் தீவிரமாய் கேட்க

“பெரிய காதல்… புடலங்கா காதல்… இதை என்னால் ஏத்துக்கவே முடியல. அப்படியே நீ சொன்ன மாதிரி அவ காதலிச்சிருந்தா... அதை என் கிட்டவே சொல்லி இருக்கலாமே.. எதுக்கு இந்த களவாணித் தனம்..” ஒரு துளி கூட குமரனுக்கு நம்பிக்கை இல்லை... அதே கோப முகத்துடன் தான் படபடத்தான்.

“எப்படி டா அந்த புள்ள சொல்லும்.. நீ என்ன கல்யாணம் செய்துக்கிற மன நிலையிலா இருந்த? கல்லையும் மண்ணையும் ஆராய்ச்சி செய்துகிட்டு... சதா அக்கா புராணம் இல்ல படிச்சிட்டு இருந்த... ஆனா ஒண்ணு டா... இந்த மாதிரி நாடகத்தை எல்லாம் நான் சினிமாவுல தான் டா பார்த்து இருக்கேன். அது கூட காதலிச்ச பொண்ணுக்காக ஹீரோக்கள் தான் டா இப்படி எல்லாம் நாடகம் நடத்துவானுங்க. இங்க என்னனா எல்லாம் உல்டாவா இருக்கு..” நண்பனான சூர்யா சலித்துக் கொள்ள

“ச்சு... போதும் டா... சும்மா சும்மா அதே சொல்லாத. எனக்கு தெரியாத காதல் அந்த புள்ள கிட்ட உனக்கு மட்டும் எங்கடா தெரிஞ்சது... முதல்ல அதைச் சொல்லு...”

நண்பன் இப்படி கேட்கவும், “யப்பா சாமி! நீ இன்னும் திருந்தவே இல்லையா... அப்படியே தான் இருக்கியா... அந்த புள்ள உன்னைய லவ் பண்ணுதுன்னு நான் சொல்றேன்... நீ என்னனா தியரிக்கு நோட்ஸ் எடுக்கறவன் மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்க. அந்த புள்ள கிட்ட நீ எப்படி எல்லாம் சிடுசிடுன்னு நடந்துக்கிற... கோபப்படுற... அப்போ எல்லாம் அந்த புள்ள உன்ன எவ்வளவு அனுசரித்துப் போகுது... உங்களுக்கு இது எடுப்பா இருக்கும்னு சொல்லுது... எனக்கு இது அழகா இருக்குமான்னு கேட்குது... அப்போ அது கண்ண நீ பார்க்கலையா?” சூர்யா நொந்து போய் கேட்க

“ப்ச்சு... ஏன் டா நீ வேற... நான் அந்த புள்ள கிட்ட என் கோபத்தையே முழுசா காட்டல... அதுக்கே நீ கோபத்த காட்டுனேன்னு சொல்ற. நான் கோபத்தை காட்டி.. பெறகு அந்த புள்ள முறுக்கிகிட்டு போய்ட்டா... நம்ம பிளான் எல்லாம் வீணா போயிடுமேன்னு... பல்லைக் கடிச்சிகிட்டு... நானே எல்லாத்துக்கும் ஆமா சாமி போட்டுகிட்டு இருந்தேன் டா...” குமரன் உண்மையை உரைக்க

“சத்தியமா சொல்றேன் டா... கடவுளுக்கு கண்ணே இல்ல டா. சிட்டி ரோபோ மாதிரி இருக்கிற உனக்கு எல்லாம் ஐஸ்வர்யா ராய் மாதிரி காதலியை கொடுத்திருக்கார் பாரு... அதிலும் உன்னைய துரத்தி துரத்தி காதலிக்கிற காதலி வேற...” சூர்யா சலிப்போடு நண்பனை வார... அதில் குமரன் அவனை மொத்த... இதில் வள்ளியிடமிருந்து எந்த ஒரு விஷயத்தையும் சரியாய் வாங்கவில்லையே என்ற கவலை கூட அந்நேரம் குமரனிடம் இருந்து பறந்து போய் இருந்தது.

குமரன் வீட்டிற்கு வந்து தமக்கையைத் தேட.. அவளோ வள்ளியின் அறையில் இருந்தாள்... இவன் அங்கு செல்லவும்... தம்பியைக் கண்டவள் “என்ன தான் டா... உன் மனசுல நெனச்சிகிட்டு இருக்க... நீ இப்படி அந்த புள்ளைய படுத்துவன்னு தெரிஞ்சிருந்தா... பூரணியை உங்க கூட அனுப்பியிருப்பேன்... இப்போ பாரு வள்ளி கை வீங்கி கெடக்கு.. அவளுக்கு உடம்பும் செத்த அனலா கொதிக்குது...” வந்தவனைப் பேச விடாமல் மீனாட்சி சாட...

முதலில் யாருக்கோ என்னமோ ஏதோ என்று பயந்தவன் உள்ளுக்குள் பதற.. அடுத்து தமக்கை வள்ளி என்று அவள் பெயர் சொல்லவும் இவளுக்கு தானா ‘இப்டி கொஞ்சமாச்சும் வலிக்கட்டும்னு தானே.. குழந்தையோட வரச் சொன்னேன்…’ என்ற எண்ணத்தில் நிதானமானவன்.. அங்கிருந்த புடவை பைகளைக் காட்டி,

“உனக்கு புடிச்சிருக்கா க்கா?” என்று ஆர்வமாய் கேட்க

“நான் இன்னும் எதையும் பிரிச்சுப் பாக்கல டா... அவ சோர்ந்து வந்ததுல... எனக்கு அப்படி எதையும் பாக்கணும்னு கூடத் தோணல... இரு உனக்கு குடிக்க ஏதாவது எடுத்துகிட்டு வரேன்...” என்றவள் பேச்சின் ஊடே விலக எத்தனிக்க

அதில் கணவனின் முகம் வாடுவதைக் கண்ட வள்ளி, “அண்ணி... நான் பூரணி கிட்ட சொல்லி நமக்கு குடிக்க எடுத்துட்டு வரச் சொல்லிட்டேன்... அவ எடுத்து வருவா. உங்களுக்காக கை வலிக்க பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்திருக்கேன்... அதுவும் முதல் முறையா. கொஞ்சம் பிரிச்சுப் பார்த்து எனக்காக எப்படி இருக்குனு சொல்ல மாட்டீங்களா?” பெரியவளிடம் சின்னவள் கெஞ்சலாய் கேட்கவும்

“அட ராசாத்தி! இதுக்கு ஏன் கெஞ்சற. செத்த இரு.. தோ இப்பவே பாத்துட்டு சொல்றேன்” என்றவள் ஒவ்வொன்றையும் பிரித்துப் பார்க்க... தமக்கையின் முகத்தைத் தான் ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தான் குமரன்.

மீனாட்சிக்கு அதிக சதைப் பற்றுடன் கூடிய பூசினார் போல் உடல் வாகு. குமரனுக்கு விவரம் தெரிந்து.. அவள் சாதாரண நூல் புடவையைத் தான் எப்போதும் வீட்டில் உடுத்துவாள். அதே எங்கு வெளியே செல்வதாக இருந்தாலும் அம்மன் சிலைகளுக்கு எல்லாம் உடுத்துவது போல் பெரிய கரை வைத்த பட்டுப் புடவையைத் தான் உடுத்துவாள். அதனால் இன்று வள்ளி வாங்கி வந்ததை எல்லாம் அக்காள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாள் என்ற படபடப்புடன் கூடிய எதிர்பார்ப்பு இவனுக்கு.

ஆனால் அவன் நினைத்தது போல் இல்லாமல் முகம் மலர... சின்ன குழந்தையைப் போல்,
“ஆத்தாடி... இது அம்புட்டும் எனக்கா!” பூரிப்பும் சந்தோஷமும் போட்டி போட ஆர்ப்பரிக்க அவள் கேட்ட தினுசில்... ஒரு தாயைப் போல் வாஞ்சையுடன் தமக்கையைப் பார்த்து நெக்குருகிக் கொண்டிருந்தான் குமரன்.

“ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு வள்ளி. என் வயசுக்கு தோதா... உடுத்துற மாதிரி இருக்கு...” சந்தோஷத்தில் மீனாட்சி வாய்விட்டே தன் மகிழ்ச்சியைச் சொல்லி விட...

அதில் இவன் வள்ளியைக் காண... அவளோ, “இப்போ சந்தோஷமா மச்சான்?” என்று அவனிடம் உதட்டசைவால் கேட்க

அதில் சந்தோஷப் படாமல்.. வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறியது போல் இவன் அவளை முறைக்க... அதற்கு எல்லாம் அசராதவள் கணவனைப் பார்த்து கண்ணை அடிக்க... அதில் இவன் மறுபடியும் அவளை முறைக்க... அவள் திரும்ப கண்ணடிக்க... இப்போது இவன் “ஏய்...” என்று பல்லைக் கடிக்க

புடவையில் லயித்துப் போயிருந்த மீனாட்சியை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் கணவனை நெருங்கிய வள்ளி, “என்ன ஏய்.. சும்மா மிரட்டாதீங்க… இனி நீங்க எப்போ எல்லாம் என்னைப் பார்த்து முறைக்கறீங்களோ அப்போ எல்லாம் நான் உங்களைப் பார்த்து கண்ணடிப்பேன்... நான் அப்படி செய்யறது உங்களுக்குப் பிடிச்சிருந்தா... இனி தாராளமா என்னை முறைக்கலாம்... ளாம்… ஆம்… ஆம்… ஹாம்…” என்று ராகத்தோடு இவள் கணவனை சீண்ட

அதில் இன்னும் கோபம் தலைக்கு ஏற... அவனோ, “இப்படி எல்லாம் என் கிட்ட நடந்துக்கிறியே உனக்கு வெக்கமா இல்ல?” சிறு குரலில் உறும

“எனக்கு என்ன வெக்கம் மச்சான்... நான் என் புருஷனைப் பார்த்து தானே கண்ணடிக்கிறேன்... உங்களுக்கு ஒண்ணு தெரியுமா... என்னைய தான் உங்களுக்கு தெரியாது.. அதே எனக்கு உங்களை நல்லாவே தெரியும்..” என்று வாய் மொழியாக ஒத்துக் கொண்டவள்.. ‘தெரியும் இளா...’ என்ற வார்த்தைகளை மட்டும் மனதிற்குள்ளே சொல்லிக் கொண்டாள் பெண்ணவள்.

இரவு படுக்கையின் போது கூட குமரனுக்கு.. இன்று நாள் முழுக்க நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் தான் ஓடியது.
‘அக்காவுக்கு அந்த புடவைங்க எல்லாம் எம்புட்டு புடிச்சிருக்கு... ஆனா ஏன் இம்புட்டு நாளா வாங்கிக்கல.. நானும் தானே வாங்கித் தரல..’
இப்படியாக சிந்தித்தவனின் எண்ணம் வள்ளி சொன்ன..
‘என்னை தான் உங்களுக்கு தெரியாது.. ஆனா உங்களை எனக்கு தெரியும்’ என்பதில் வந்து நிற்க..

“அப்போ இந்த புள்ளைக்கு என்னைய முன்னயே தெரியுமா?” என்று வாய் மொழியாக கேட்டுக் கொண்டவனின் எண்ணங்களோ காலையில் நண்பன் சொன்ன வார்த்தையில் வந்து நின்றது.

‘அந்த புள்ள உன்னைக் காதலிக்குது...’ இந்த வார்த்தைகளில் சட்டென எழுந்து அமர்ந்தவன்

‘அதெப்படி கையில ஒரு குழந்தையோட இருக்கிற புள்ள என்னைய காதலிச்சி இருக்கும்.. இப்பவும் என்னைய காதலிக்குது தான் சொல்றான்..’ யோசித்ததில் முன்னுக்குப் பின் முரணாய்... இந்த விஷயம் அவனைக் குழப்பியது. அதில் யோசிக்கப் பயந்தவனாக அதை நினைப்பதையே விடுத்தான் இவன்.

நாட்கள் தன் போக்கில் நகர... சேரன் – கல்பனாவின் மகள் ஷாலினிக்கு மொட்டை அடித்து காது குத்தும் நிகழ்வை... இரு பக்க வீட்டாரும் பேசி முடிவு செய்ய எத்தனிக்க.. அதற்காக முறைப்படி கலந்தாலோசிக்க கார்மேகத்தின் வீட்டிற்கு வந்திருந்தார்கள் கல்பனாவின் குடும்பம். கல்பனாவுக்கு கூடப்பிறந்தவன் என்று ஒரே ஒரு அண்ணன் தான்.. பெயர் ஸ்ரீதர்.

இவர்கள் செய்து வரும் தொழிலை ஜெர்மனியில் நிறுவச் சென்றவன்... அதை எல்லாம் அங்கு முடித்து இரண்டு வருடம் கடந்து தற்போது தான் இந்தியா வந்திருக்கிறான். அவன் மனைவி ஒரு வெட்டுண்ணி. பிறந்த வீட்டுடன் அவனை யாரிடமும் ஒட்ட விடமாட்டாள்... பாரபட்சம் பார்க்காமல் வெட்டிவிடுவாள். இப்போது வந்த மகன் திரும்ப ஜெர்மன் சென்றால் எப்போது வருவானோ... இந்த பயம் கல்பனாவின் தாய்க்கு இருக்கவும்... பேத்திக்கு மொட்டை அடித்து காது குத்திப் பார்க்க நினைத்த அவர்… தாய் மாமனான தன் மகன் மடியில் தானே ஷாலினியை அமர வைத்து முறை செய்யவேண்டும்... என்று நினைத்தவர் அதற்காக இப்போதே அந்த நிகழ்வை நடத்த முனைந்தார் கல்பனாவின் தாய்.

ஆண்கள் கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க.. பின்கட்டுக்கு வந்த தாயும் மகளும் அங்கிருந்த வள்ளியைக் கண்டு விட்டு ஏளனத்துடன் தங்களுக்குள் ஏதோ கிசுகிசுப்பாய் பேசிக்கொள்ள.. இதெல்லாம் துரத்தில் இருந்த குமரனின் பார்வையில் விழுந்தது.

அப்போது கல்பனா, “அம்மாவுக்கு கேரட் ஜுஸ்னா ரொம்ப பிடிக்கும்... அண்ணாவுக்கும் அண்ணிக்கும்... ஸ்ட்ராபெர்ரினா ரொம்ப இஷ்டம். அப்பா வாங்கிட்டு வந்த கூடையில் ஸ்ட்ராபெர்ரி இருக்கு... எடுத்து நான் சொன்ன இந்த இரண்டு ஜூஸையும் போட்டு எடுத்துட்டு வா வள்ளி...” என்று கல்பனா வள்ளியிடம் நேரடியாகவே சொல்ல.. இல்லை உத்தரவு இட

வள்ளியோ முகம் கறுக்க கல்பனாவுக்கு பதில் ஏதும் தராமல்... பூரணியைக் காண... புரிந்து கொண்ட அவளோ, “இதோ நீங்க கேட்ட ரெண்டையும் எடுத்துகிட்டு வரேன் மேடம்...” என்று பவ்வியமாய் சொல்லவும்

“ஏய்... கூட்டி பெருக்குற அந்த கையால்... நீ போட்டு குடுக்கிறத நாங்க குடிக்கணுமா? unhygienic fellow. ஏன்.. வீட்டுக்கு புதுசா வந்திருக்கற இந்த மகாராணி நான் சொன்னதை செய்ய மாட்டாங்களோ?” கல்பனா கோபப்பட

இப்போது எதார்த்தமாக அங்கு வருவது போல் வந்த குமரன்.. கல்பனாவின் தாயைப் பார்த்து, “வாங்க அத்த... எப்படி இருக்கீங்க.. எப்போ வந்தீங்க... பயணம் எல்லாம் சவுகரியமா இருந்ததா..” என்று முதலில் நலம் விசாரித்தவன்...

“நீங்க என் கல்யாணத்தப்போ ஜெர்மனியில இருந்தீங்க இல்ல... இருங்க...” என்றவன் தூரமாய் நின்றிருந்த வள்ளியைப் பார்த்து இங்கே வா என்று கண்ணசைவினாலே அழைக்க.. அதில் அவளும் மந்திரித்து விட்டவள் போல் கணவனிடம் வர..

“இவ என் மனைவி.. பேரு வள்ளி... என் பொண்ணு தூங்கறா.. இல்லனா அவளையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி இருப்பேன். சரிங்க அத்த... எனக்கும் என் மனைவிக்கும் ஒரு வேலை இருக்கு... இருந்து சாப்டுட்டு போங்க... பெறகு பாக்கலாம்.. வரோம் அத்த...” என்று மனைவிக்கும் சேர்த்து அவரிடம் சொன்னவன்... வள்ளியின் கையைப் பற்றி உள்ளே இழுத்துச் செல்லவும்... சுகமான அதிர்ச்சியில் திளைத்திருந்தாள் வள்ளி.

அதில் வாய் விட்டே, “தாங்க்ஸ்...” என்று இவள் சொல்ல

‘இது எதுக்கு?’ என்பது போல் இவன் அவளைக் காண...

“முதல் முறையா உங்க வாயாலே என்னை உங்க பொஞ்சாதின்னு சொல்லியிருக்கீங்க..” என்று கண்ணில் சந்தோஷத்துடன் அவள் சொல்லவும்

அதில்.. அவள் கழுத்திலிருந்த மஞ்சல் சரடை பட்டும் படாமல்.. தன் விரல்களின் ஊடே தூக்கிக் காண்பித்தவன்,

“இது உன் கழுத்தில் இருக்கிற வரைக்கும்... நீ என் பொஞ்சாதி தான்... நான் உன் புருஷன் தான். என் அக்கா அடிமையா இருக்கிறதே எனக்கு புடிக்காது.. இதுல அடுத்த அடிமையை அவங்க உருவாக்குனா... அதிலும் பேருக்கு என் பொஞ்சாதியா இருக்கிற உன்னைய அவங்க உருவாக்க நெனச்சா... நான் சும்மா இருப்பனா.. அதான் அங்கயிருந்து உன்னைய இழுத்துகிட்டு வந்தேன்.

இதெல்லாம் நீ என் அக்காவ கவனிக்கிறதால தான்... மத்தபடி நீ கண்டபடி கற்பனை குதிரையை ஓட விடாத...” என்று அழுத்தம் திருத்தமாய் அறிவித்தவன் அங்கிருந்து விலகியிருக்க... வள்ளிக்குப் புரிந்தது...

எத்தனையோ முறை குமரன் கண்ணெதிரேயே கல்பனா.. வள்ளியிடம் வேலை ஏவி இருக்கிறாள். அப்போதெல்லாம் அவன் அமைதியாக கண்டும் காணாத மாதிரி சென்று விடுவான். ஆனால் இன்று கல்பனா அவள் பிறந்த வீட்டார் முன் இவளை ஏவவும்... அது பிடிக்காமல் தான் இன்று இப்படி நடந்து கொண்டான். ஆனால் அதுவே பெண்ணவளின் மனதிற்கு இனித்தது. இந்த மகிழ்வு எல்லாம் அவனின் நண்பனான கீர்த்திவாசன் குமரன் வீட்டிற்கு வரும் வரை தான் நீடித்தது.

கீர்த்திவாசன் ஊருக்கு வந்ததும்... நண்பர்கள் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் குமரனை சந்தித்தவன், “என்ன டா இது அநியாயம்... உனக்கு ஏற்கனவே கல்யாணம் நடந்து... ஒரு குழந்தை இருக்குன்னு பொய் சொல்லிட்டு ஒரு பொண்ணு உனக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்திட்டு உன் வீட்டுலேயே சட்டமா உக்காந்துகிட்டு இருக்கு... அதுவும் நான் சாட்சி கையெழுத்து போட்டதா பொய் சொல்லிக்கிட்டு!

உனக்காக பேச யாரும் இல்லனு நெனச்சிட்டாங்களா... வா டா... நான் பேசறேன் உனக்காக... நான் இருக்கேன் டா உனக்கு. எல்லாருக்கும் நீ யாரு.. என்னன்னு நான் சொல்றேன்...” என்று கோபத்துடன் மீசையை முறுக்கிக் கொண்டு கிளம்பினான் அவன். பின்னே.. இருவருடைய நட்பும் தான் எப்படி பட்டது!..
 
V

Veera

Guest

Enna aga pogutho
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Suspense தாங்க லியே.என்ன நடந்திருக்கும்,
அடுத்த பதிவில் தெரிஞ்சிடும் ங்க ம்மா..🥰🥰 அன்புகள் ம்மா... heart beat heart beat
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN