ஈரவிழிகள் 13

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இளங்குமரனும், கீர்த்திவாசனும் பால்ய கால நண்பர்கள். குமரனுக்கு எல்லா வகையிலும் பக்க பலமாய் நிற்பவன் கீர்த்தி. தாயின் அரவணைப்போடு... தந்தையின் அறிவுரையோடு... கஷ்ட காலத்தில் பலம் பொருந்திய சகோதரனாய்... இப்படி எல்லாமுமாக குமரனுக்கு கூடவே நின்று தோள் கொடுக்கும் தோழன் இவன்.

‘இதோ என் தோழன் வந்து விட்டான்... என்னை நம்பாமல் போன உங்கள் அனைவரின் முகங்களிலும் கரியைப் பூச வந்து விட்டான்’ என்ற மமதையுடன் தான்... அனைவரும் வீட்டில் இருக்கும் நேரம் கணக்கிட்டு நண்பனை அழைத்து வந்தான் குமரன்.

கீர்த்தி வந்ததும்… ஏதோ இப்போது தான் இருவரும் சந்தித்து கொண்டது போல்.. ஆர்வமாய் ஓடிச்சென்று நண்பனை ஆரத்தழுவி கட்டிக்கொண்ட குமரன்.. வாயெல்லாம் பல்லாக, “வா டா மச்சான்.. எத்தன மாசம் கழிச்சு இந்த வீட்டுக்கு வர.. இன்னைக்கு உனக்கு சாப்பாடு நம்ம வீட்டுல தான்.. உனக்குப் புடிச்சத எல்லாம் சமைக்க சொல்றேன்.. இருந்து சாப்டுட்டு தான் நீ போகணும்” என்று சத்தமாக அங்கிருக்கும் அனைவருக்கும் கேட்கும் படி இவன் சொல்ல

பதிலுக்கு கீர்த்தியோ, “அதெப்படி மச்சான் உன் வீட்டுக்கு வந்தா நான் சாப்புடாம போயிடுவேனா என்ன.. நம்ம அக்கா கை பக்குவம் இன்னும் நாக்குல நிக்குதே.. இதுக்காகவே நேத்துலயிருந்து வயித்த காயப் போட்டு வெச்சிருக்கேன்.. மூக்கு புடிக்க சாப்டா தானே அந்த பட்டினிக்கு ஒரு மருவாதி!” என்று குமரனிடம் சிரித்த படி அவன் சொல்லவும்..

“இதோ வந்துடான் இல்ல.. இனி பாசத்துல ரெண்டு பேரும் கட்டிப்புடிச்சு உருளுவானுங்க…” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள் அங்கிருந்த குமரனின் உறவுகள்.

பின் வீட்டில் உள்ளவர்கள் அவனிடம் சாதாரணமாக நலம் விசாரித்ததோடு சரி... வீட்டில் உள்ளவர்களும் சரி... வந்தவனும் சரி.. யாரும் வள்ளியைப் பற்றி பேச்சே ஆரம்பிக்கவில்லை.

அந்நேரம்.. “வாங்க வாங்க ணா... எப்படி இருக்கீங்க... நீங்க வந்திருக்கறதா சொன்னாங்க. அதான் உங்களுக்குப் பிடிச்ச பருத்திபாலோட வரேன்” மிக மிக இயல்பாய் அங்கு வந்த வள்ளி வந்தவனை வரவேற்று அவன் முன் டம்ளரை நீட்ட.. இவள் தான் குமரன் மனைவி என்பதை சொல்லாமல் சொல்லிய இந்த நிகழ்வில் அனைவரும்.. கீர்த்தி என்ன சொல்லப் போகிறான் என்பது போல் அவனையே காண..

அவனோ, “நல்லா இருக்கேன் ம்மா... நீ எப்படி இருக்க.. எப்படியோ உன்னோட புகுந்த வீட்டுக்கு வந்து சேர்ந்துட்ட போல... குமரன் உன்னையும் குழந்தையையும் நல்லா பார்த்துக்கிறானாமா? ஆமா அஸ்மி எங்க” என்று அவன் பாசமாய் விசாரிக்க

இதைக் கேட்ட படி குழந்தையுடன் அங்கு வந்த மீனாட்சி அதிர்ந்தாள் என்றால்... குமரன் திக்பிரமை பிடித்தது போல் திகைத்து நின்றான். அது சிறிது நேரம் தான்.. பின், ‘இவனும் மாறிட்டானா... இவனும் பொய் சொல்றானா... ஏன்... ஆனா எதுவா இருந்தாலும் இதை இவன் செய்யலாமா?’ என்று மனதிற்குள் அலை அலையாய் இப்படியான கேள்விகள் அவனுள் சுழன்ற நேரம்

“நல்லா இருக்கேன் ணா... பட்டு அண்ணிகிட்ட இருக்கா... இதோ அண்ணியே வந்துட்டாங்களே...” என்ற வள்ளியின் பதிலில்

“பட்டு.. மாமா கிட்ட வா டா” கீர்த்தி குழந்தையை அழைக்க

இவ்வளவு நேரம் இருந்த இலகு தன்மை மாற கண்கள் சிவக்க கோபத்தில், “டேய் துரோகி....” என்றபடி எட்டி தன் ஆருயிர் நண்பனின் சட்டையைப் பிடித்திருந்தான் குமரன்.

அதில் அங்கிருந்தவர்கள் திகைப்பில் குமாரனா இது... அவனா அவனின் உயிர் நண்பனின் சட்டையைப் பிடித்திருக்கிறான்... இன்று சூரியன் மேற்கு தான் உதித்துவிட்டானோ... அதான் இப்படி நடக்கிறதோ... இப்படி எல்லாம் தான் யோசித்தார்களே தவிர யாரும் குமரனைத் தடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.

ஆனால் வள்ளி மட்டும் தன்நிலையிலிருந்து முதலில் சுதாரித்தவள் கணவனை நெருங்கி கீர்த்தியின் சட்டையைப் பிடித்திருக்கும் அவனின் கையை அழுந்தப் பற்றியவள், “என்னங்க இது.. என்ன செய்துட்டு இருக்கீங்க... அவரு உங்க பால்ய கால நண்பருங்க... முதல்ல அண்ணன் மேலேயிருந்து கையை எடுங்க...” இவள் மனைவி என்ற உரிமையில் அவனிடம் மல்லுக்கு நின்றதும் இல்லாமல்.. கீர்த்திவாசனுக்காகவும் அவள் பரிந்து வர

அதில் கண்ணில் இன்னும் சிவப்பேற... “ஒழுங்கு மரியாதையா... விலகிப் போ..” என்று கர்ஜிக்க... கணவன் குரலில் வள்ளியுடைய மேனியோ அதிர்ந்தது... இருந்தும் அவள் பிடித்த பிடியைத் தளர்த்தாமல் நிற்கவும்...

இதுவரை தன் நண்பனைத் தடுக்காமல்.. ஏன் ஒரு வார்த்தை கூட பேசாமல் நின்ற கீர்த்திவாசன், “வள்ளி, நீ ஒதுங்கிப் போ ம்மா... எதுவா இருந்தாலும் நாங்க பேசிக்கிறோம்...” என்று அவன் வள்ளிக்கு சொல்லவும்

மறுநொடியே தான் பிடித்திருந்த கணவனின் கையை விட்டவள்... பேசாமல் போயிருக்கலாம். அவள் நாக்கில் அப்போது சனீஸ்வரன் இருந்தாரோ... “அவரு உங்களை அடிக்கிறாரு ணா... எதுக்கு அடிக்கணும்... இவரு என்னை காதலித்து தனியா வீடு எடுத்து வச்சு வாழ்ந்தது உண்மை தானே... பிறகு...” அவளை முழுதாக முடிக்க கூட விடவில்லை குமரன்.

“ஏய் வாய மூடு....” நண்பனை விட்டு விட்டு இவன் கையை ஓங்கிய படி அவளிடம் திரும்ப...

இப்பவும் அமைதியாக இல்லாமல், “நீங்க அண்ணன் மேலே கை வைக்க கூடாது... நீங்க செய்ததை சொன்னா உங்களுக்கு ஏன் கோபம் வருது...” விட்டால் இன்னும் பேசியிருப்பாள்.

ஆனால் “பளார்...” “பளார்...” என்று இரண்டு அறைகளின் சத்தம் கேட்கவும் தான் இவள் தன் பேச்சை நிறுத்தி விட்டு அரண்டு போய் அந்த அடிகள் யாருக்கு விழுந்ததோ என்பது போல் காண... அந்த இரண்டு அறையும் நண்பனான கீர்த்திவாசனுக்கு தான் தந்தான் குமரன். முதலில் அவள் பேச்சை நிறுத்த வள்ளியை அடிக்கத் தான் எத்தனித்தான். ஆனால் ஏனோ அப்படி அவளை அடிக்கக் கூட தொடப் பிடிக்காதவனாக... தன் நண்பனை அடித்திருந்தான்.

இரண்டு அறையோடு மட்டும் விடாமல் மூர்க்கத்தோடு இன்னும் வெளுத்து வாங்கியவன், “ஏன்டா டேய்... நாயே... நீ எல்லாம் எனக்கு நண்பனாடா... துரோகி... என் கழுத்த அறுக்க... என்னைய அசிங்கப்படுத்த இதோட கூட்டு சேர்ந்ததும் இல்லாம... என் கிட்ட என்னமோ நல்லவன் மாதிரி பேசிட்டு வந்தியே டா... துரோகி...” இப்படியான ஒவ்வொரு கேள்விக்கும்... நண்பனின் சட்டை கிழிய... மூக்கு உடைய... வாய் கிழிந்து ரத்தம் வர... அவனை அடி வெளுத்துக் கொண்டிருந்தான் இவன்.

குமரனை விட இரண்டு வயதே பெரியவன் கீர்த்திவாசன்... குமரனைப் போலவே திடகாத்திரமான உடல்வாகு உடையவன் தான். ஆனால் ஏனோ இன்று நண்பன் தரும் அடிகளை வாங்கிக் கொண்டிருக்கிறான்.. அதுவும் ரத்தம் வரும் அளவுக்கு.

“டேய் குமரா... அமைதியா இருடா... எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் டா ..” இப்படியாக அங்கு ஒலித்த எந்த ஒரு சமாதான வார்த்தையோ ஏன்... அங்கிருந்த யாராலும் குமரனைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவனுக்குள் அப்படி ஒரு வேகம், ஆக்ரோஷம், கோபம்.

வள்ளி பயந்தே விட்டாள்.. “அண்ணி... அண்ணி... அண்ணாவை அடிக்க வேணாம்னு சொல்லுங்க...” இவள் மீனாட்சியிடம் கண்ணீருடன் கெஞ்ச.. இந்த குரலே குமரனை இன்னும் வெறியனாக்கியது.

“உன்னைய அடிச்சா.. அவ அழறா.. நீ என்ன சொன்னாலும் அவ கேட்டுக்கிறா... அண்ணனாம் தங்கச்சியாம்... என் குடியைக் கெடுக்க கூட்டு சேர்ந்தியா டா...” என்றபடி நண்பனை வாசலுக்கு இழுத்து வந்தவன்

“இனி இந்த ஜென்மத்துக்கு என் மூஞ்சியில முழிக்காத டா பச்ச துரோகி...” என்றவன் அவனை இழுத்து ரோட்டில் தள்ளியிருக்க...

பதிலுக்கு ஏதும் பேசாத கீர்த்தி மனதில்.. ‘நானா டா துரோகி.. மச்சான் மச்சானு கூப்ட உன் வாயால இப்ப வார்த்தைக்கு வார்த்தை துரோகினு சொல்றியே டா.. நாம அப்டியா டா பழகுனோம்.. நம்ம சினேகம் அவ்வளவு தானா டா.. என் உயிர் நண்பன் நான் உனக்கு துரோகம் செய்வனா டா.. என்னைய நீ புரிஞ்சிகிட்டது அவ்ளோ தானா.. நீ அடிச்சது கூட எனக்கு வலிக்கல டா.. ஆனா நீ சொன்ன வார்த்தை தான் டா என் மனச அறுக்குது.. பரவாயில்லை டா.. ஒருநாள் என்னைய புரிஞ்சுக்குவ..’ என்று நினைத்த படி தட்டுத்தடுமாறி எழுந்து நிற்க முயல.. அதில் அவனைப் பார்த்து வள்ளி இன்னும் ஓவென்று அழ...

“ஷ்! செத்த அமைதியா இரு.. எல்லாம் உன்னால தான். இந்தா.. அஸ்மியைத் தூக்கிகிட்டு உள்ளே போ... நீ வாய தொறந்தாலே அவன் அடிக்கிறான்....” மீனாட்சி சின்னவளை அதட்டி உள்ளே அனுப்ப முயல... இவள் கீழே விழுந்து இருந்தவனைக் காணவும்...

அவன் கண்ணாலேயே “நீ போம்மா நான் போய்க்கிறேன்...” என்பது போல் சொல்லவும்... குழந்தையுடன் உள்ளே விரைந்தாள் வள்ளி.

இதோ இப்போது நடந்த இருவரின் சம்பாஷனையையும் கூட யார் அறிந்தார்களோ இல்லையோ... குமரன் அறிந்து கொண்டான். அதில் இன்னும் கோபம் ஏற.. மண் தரையை தன் பலம் கொண்ட மட்டும் எட்டி உதைத்தவன் மேற்கொண்டு அங்கிருக்க பிடிக்காதவனாக அவன் வெளியே சென்று விட.. வீடே போர்க்களம் நடந்து முடிந்தது போல் காட்சி அளித்தது... குமரனைத் தடுக்கப் போய்... அவனிடம் வாங்கிய அடிகளுக்கு வேறு முணுமுணுத்தபடி ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் வீட்டு ஆட்கள். அவன் தான் யாருக்கும் அடங்காத காளை ஆயிற்றே.

நடந்த களோபரத்தில் உணவைக் கூட தவிர்த்து விட்டு வள்ளி கண்ணீர் சிந்திய படியே இருக்க... “பிள்ளையைக் கூட கவனிக்காம... எதுவும் சாப்புடாம இப்போ நீ எதுக்கு அழுதுகிட்டே இருக்க... அவனுங்க ரெண்டு பேரும் எப்படி உயிருக்கு உயிரா இருந்தானுங்கனு எனக்கு தெரியும்... அப்படி இருந்தவனுங்கள இப்போ பிரிச்சிட்ட...” மீனாட்சி ஆதங்கத்தில் கத்தவும்...

ஏற்கனவே குற்றவுணர்வில் இருந்தவளோ இந்த வார்த்தைகளை கேட்டதில்... கேவலுடன் “அண்ணி...” என்றபடி பெரியவளைக் கட்டிக் கொண்டாள்.

“எழுந்துரு வள்ளி... எழுந்து சாப்டுட்டு குழந்தையப் பாரு... நீ பொய் சொல்லி என் தம்பி வாழ்க்கையில் வந்த.. அது எனக்கு தெரியும். அது தான் நெசம்.. நான் சொன்ன ஒத்த வார்த்தைக்காகத் தான் அவன் உன் கழுத்துல தாலி கட்டினான் அதுவும் நெசம். ஆனா கீர்த்திவாசன் விஷயம் பொய்யா இருக்கும்னு நெனச்சோம்... அது அப்டி இல்லன்னு இன்று தெரிஞ்சி போச்சு.

உன்னோட கூட்டாளி கீர்த்திவாசன்னா.. அப்போ நீ யாரு... நிச்சயம் நீ இங்க வந்த விஷயம் பெருசு... இல்ல உன்னைய யாராவது மெரட்டி இங்க அனுப்பி வெச்சாங்களா.. அந்த மெரட்டலுக்கு பயந்து தான் என் தம்பி மேல பழி போட்டுட்டு இங்கு உட்கார்ந்துட்டு இருக்கியா..” மக்கான மீனாட்சிக்கு கூட இன்று நடந்த விஷயத்தை வைத்து மூளை வேலை செய்ய... அதில் இவள் இப்படி கேட்க... சின்னவளோ எந்த பதிலும் தராமல் அவளைக் கட்டிக் கொண்டு இன்னும் அழுது கரைந்தாள்.

இங்கு குமரனுக்கும் இதே எண்ணங்கள் தான்... ‘நீ எப்படி டா பொய்த்துப் போன... உன்னால எனக்கு எப்படி டா துரோகம் செய்ய முடிஞ்சது... எனக்கு நீ அதை செய்யலாமா’ இப்படி அவனுக்குள் அவன் பல முறை கேட்டும் பதில் இல்லை.

“எதுக்கு டா... இங்க வந்த... என்னைய பார்க்காம... எங்கையோ கண்காணாம இருந்திருக்க வேண்டியது தானே... என் கிட்ட நடிச்சு... இங்க வீட்டுக்கு வந்ததும் மாத்தி பேசுறேன்னா உன்னைய என்ன சொல்ல... நான் இம்புட்டு அடிச்சும் நீ வாயே திறக்கலன்னா... அப்போ நெசத்தை சொல்லக் கூடாதுங்கிற முடிவுல தானே இருக்க... அப்டியே இருந்துக்கோ டா. இனி நான் உன் கிட்ட கேக்கல... ஆனா நானே அதை என்னனு தெரிஞ்சிக்கிக்கிறேன்...” என்று வாய் மொழியாகவே உறுதியை எடுத்துக் கொண்டான் அவனின் உயிர் நண்பன்.

அதன் பிறகு குமரன் வீட்டுக்கு வரவில்லை. தோட்டத்து வீட்டிலேயே இரண்டு நாளும் தங்கி கொண்டான். இருவரின் நட்பின் ஆழத்தை அறிந்தவள் இல்லையா மீனாட்சி... அதனால் வம்படியாக தம்பியை வீட்டுக்கு அழைக்கவில்லை அவள். அவனுக்காக மனது எப்போது சமாதானம் ஆகிறதோ.. எப்போது வருகிறானோ அப்போது வரட்டும் என்று அவன் போக்கிலேயே விட்டு விட்டாள் பெரியவள்.

ஆனால் அடுத்து இரண்டு தினங்களில் ஷாலினிக்கு காது குத்து என்ற நிகழ்வு வரவிருக்கவும்.. இவனைத் தேடி வந்த சேரன், “என்னடா வீட்டுக்கே வராம இங்கயே தங்கிட்ட... நாளைக்கு பாப்பாவுக்கு காது குத்து வச்சிருக்கேன்... நீ தானே ஒரு சித்தப்பன்காரனா முன்னயிருந்து எல்லாத்தையும் எடுத்து செய்யணும்... நீ வரலனா என் மாமியார் வீட்டுல எனக்கு அசிங்கமாகியிடும் டா...” என்று முதலில் அதட்டலில் ஆரம்பித்து பின் அவன் கெஞ்சலில் முடிக்க...

“ஆமா.. யார் என்ன மனநிலையில் இருந்தாலும் உனக்கு நான் வந்து வேலை செய்யணும்.. அப்படி என்ன இத்துப்போன கவுரவமோ... நான் இருக்கேன் வா டா வீட்டுக்கு.. எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்னு ஒரு வார்த்தை சொல்லி கூப்பிடுறியா டா...” இவன் வெறுப்பாய் கேட்க

“டேய் உனக்கும் உன் பிரெண்டுக்கும் பிரச்சனைனா நாங்க என்ன செய்ய முடியும்...”

அவன் பேச்சில் இவனுக்குள் கோபம் குமிழ்ந்தது.

அதில் தமையனை முறைத்தவன், “யப்பா டேய்... நாளைக்கு நான் வரேன்... இப்போ நீ கெளம்பு... போ.. போ.. போய்… உன் பொஞ்சாதிக்கு மட்டும் இல்ல.. உன் மாமனார்.. மாமியாருக்கும் சேர்த்து கூஜா தூக்கு.. போடா ” இவன் வார்த்தையில் நக்கல் நையாண்டியோடு.. வந்தவனைத் துரத்த.. அவனோ சின்னவனை முறைத்தவன்… பின் நம்பாமல் அங்கேயே நிற்க, “வருவேன் டா... போ டா...” இவன் உறுதி அளிக்க... அதன் பிறகே அங்கிருந்து நகர்ந்தான் சேரன்.

இதே ஊரில் இருக்கும் அவர்கள் குல தெய்வ கோவிலில் தான் காது குத்து வைபவம். அதிக பேரை அழைக்காமல்.. இரு வீட்டார் உறவுகளில் உள்ள அங்காளி பங்காளிகளை மட்டும் அழைத்து விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. குமரனுக்கு வர விருப்பம் இல்லை... ஷாலினிக்காகத் தான் வந்தான். சித்தப்பா என்ற முறையில் தன் மகளின் வைபவத்தைக் காண அவனுக்கும் ஆசை.

ஆனால் அவனை அங்கு நிம்மதியாக இருக்க விடாமல் அவனை சோதித்துக் கொண்டே இருந்தார்கள் அவனின் வீட்டார்கள். யார் ஏவினாலும் ஓடி ஓடி வேலை செய்யும் அவன் தமக்கை மீனாட்சி ஒரு புறம் என்றால்... மறுபுறம் இந்நிகழ்வில் வள்ளி புன்னகை முகமாய் பவனி வர.. அவன் எங்கு சென்றாலும்… கல்பனாவின் பிறந்த வீட்டு உறவுகள் சில பேர் அவனை முன்னே விட்டு பின்னே கிசுகிசுப்பாய் தங்களுக்குள் பேசவும்... இதையெல்லாம் கண்டவனுக்கோ… அவனுக்குள் இருந்த பொறுமை எல்லையைக் கடந்தது… இதெல்லாம் சேர்ந்து இறுதியாய் தன் நண்பன் செய்த துரோகத்தில் அவன் வந்து நிற்க... இறுதியில் அவன் கோபம் எல்லாம் வள்ளி மேல் திரும்ப.. அவனுக்கு இருந்த வெறிக்கு.. என்ன செய்கிறோம்.. ஏது செய்கிறோம்... என்பதை யோசிக்காதவனாக மூளை மழுங்கியவனாக... அப்படி ஒரு செயலை செய்தே விட்டான் குமரன்.

வள்ளியைப் பழிவாங்க.... கட்டிய மனைவி என்றும் பாராமல் அவன் செய்த அச்செயல்... அது... அது... அவன் தமக்கையையே எரிமலையாய் வெடிக்க வைக்கப் போகின்றது என்பதை அவன் அறியவில்லை. அதன் விளைவாக பிறகு நடந்த நிகழ்வுகள் நன்மையா தீமையா...
 
Last edited:

P Bargavi

Member

Nice
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN