காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 9

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல இருளுதே பளிச்சிடும் விளக்குகள் பகல் போல் காட்டுதே .என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அந்திவானம் தன் செந்நிறஆடையை அணிய மாணிக்கத்தின் இல்லத்தில் பெண்பார்க்கும் வைபம் தடபுடலாய் அமர்க்களப்பட்டது."கந்தா இந்த சேர்லாம் அந்த பக்கம் போட்டுட்டு கர்ட்டன்ஸ் மாத்திடு" என்று மாணிக்கத்தின் குரல் ஒலிக்க"என்னங்க.... நீங்க ஏன் இதெல்லாம் பாத்துக்கிட்டு, இது எல்லாம் நல்லாதானே இருக்கு நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க". என்று கையில் காபியோடு வந்தார் மஞ்சுளா"மஞ்சுமா... நீ காட்டுர இந்த கவனிப்புல நான் முழு நேர நோயாளி ஆகிடுவேன் போல" என்று சிரித்தபடி காபியை வாங்கினார் மாணிக்கம்."வர வர என்ன பேசுறிங்கன்னு தெரிஞ்சிதான் பேசுறிங்களா?... நல்ல நாள் அதுவுமா ஏதேதோ பேசிக்கிட்டு ..." என்று சற்று காட்டமாய் பேசியவர் "நீங்க என்னமோ செய்யுங்க நான் எதுவும் சொல்லல, கேக்கல போதுமா" என்று புலம்பியபடி சென்றார் மஞ்சுளா."சார்... சார்..." என்று அழைத்தபடி கோவிந்தசாமி அய்யர் வாசலில் நிற்கவாசல் பக்கம் சென்ற தியா அவரை கண்டதும் முன்பே அறிமுகம் என்பதால்" வாங்க வாங்க" என்றவள் "அப்பா ஹால்ல இருக்காங்க வாங்க" என்று உள்ளே அழைத்து சென்றாள்."அப்பா கோவிந்தசாமி அங்கிள் வந்து இருக்காங்க" என்றதும் "ஹோ வந்துட்டாரா ?!?" சரி நீ போய் அம்மாகிட்ட சொல்லுடா" என்று மகளை அனுப்பி வைத்தவர் கோவிந்தசாமியை பார்க்க சென்றார்."வாங்க கோவிந்தசாமி" என்று அவரை வரவேற்ற மாணிக்கம் சோபாவை காட்ட"வணக்கம் சார்..." என்ற கோவிந்தசாமி சோபாவில் அமர்ந்தார்"இப்போதான் நினைச்சேன் டைம் ஆச்சேன்னு.... சரி நீங்க மட்டும் வந்து இருக்கிங்க மாப்பிள்ள வீட்டுல வரலியா?" என்று கேட்க"அவா வர்ர டையம் தான்... நம்ம வீட்டுக்கு நான் எப்போ வந்தா என்ன? அவாள நேர இங்கேயே வரசொல்லிட்டேன். இங்க இருந்தே வரவேற்றுட்டு போறேன். என்றவர் "அதும் இல்லாமா ஒரு வேன்ல வர்ரா எல்லாரும். அதான் நான் என் டூ விலர்ல வந்துட்டேன். என்றார் சிரித்தபடி"ஹா.. ஹா..." என்று சிரித்த மாணிக்கம் "சரி இருங்க வீட்டம்மாவ காபி எடுத்துட்டு வர சொல்றேன்." என்று கூற'இருக்கட்டும் சார், அவா வந்த பிறகு காபி குடிச்சிக்கிறேன். என்றவர் வீட்டு வாசலில் கண் பதித்தவாறு அமர்ந்திருந்தார் கோவிந்தசாமி.கவிக்கு தலைமுடியை தளர பின்னிவிட்டபடி இருந்த மஞ்சுளாவை கண்ணாடியில் பார்த்தவாறு அமர்ந்திருந்த கவி "ஏம்மா இப்படி புரிஞ்சிக்காம அவசர அவசரமா எல்லாம் செய்றிங்க" என்றாள்."இப்ப என்ன உன்னை புரிஞ்சிக்காம செய்துட்டேங்கர" என்றார் மஞ்சுளா"நான் எவ்வளவு முறை சொல்றேன் எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்ட்டம் இல்லன்னு, அதை கேக்காம எல்லா ஏற்பாடும் பண்ணா என்ன அர்த்தம்மா?" என்று அன்னையிடம் கேள்வி கேட்கஎன்ன கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லு, இன்னும் 3 மாசத்துல உன் படிப்பு முடிய போகுது அதுக்கப்புறம் பாத்து பண்ணதானே போறோம். இப்ப பாத்துட்டு போகப் போறாங்க அதுக்கு ஏன்டி இப்படி மூக்கால அழுகுற" என்று சமதானமாய் கூற"பார்த்தட்டு போகத்தான் வர்ராங்கல்ல அதுக்கு எதுக்கு இப்பவே வந்துக்குட்டு எப்போ கல்யாணமோ அப்பவே வந்து பாத்துக்க வேண்டியதுதானே" என்று ஏடாகூடமாய் பேச"அந்தால நேர உக்காந்து தலைய காட்டு உன்ன மாதிரியே எல்லாம் ஏடாகூடமாய் போகுது" என்று லேசாய் தலையை கைவைத்து ஜாடையாய் பேசி தலையை வாரம்கூம் எவ்வளவு சொன்னாலும் கேக்க மாட்டேன் என்கிறாங்களே என்று மனதில் நினைத்தவள் "அம்மா இப்போ எனக்கு என்னம்மா வயசு ஆகிடுச்சி?? படிப்பு முடிஞ்சி ஒரு இரண்டு வருசம்" என்றவள் தாயின் முறைப்பை பார்த்ததும் "அட்லீஸ்ட் ஒரு வருஷமாச்சும் வேலைக்கு போகனும் மா, ஃபிரியா ஜாலியா லைப் என்ஜாய் பண்ணணும் மா" என்று கண்களில் கனவோடு கூறியவள் இப்போ கல்யாணம் சடங்கு கமிட்மென்ட் ரெஸ்பாண்டிபலிட்டி அது இதுன்னு என்னைய மாட்டிவிடதம்மா பீளிஸ் மா என்று கெஞ்சலில் முடித்தாள்.என்ன வயசாச்சா உங்களயெல்லாம் சுதந்திரமா கேட்ட படிப்பு படிக்க வைச்சதே போதும். நமக்கு நீ வேலைக்கு போய்தான் சாப்பிடனும்னு அவசியம் இல்ல... உன் வயசுல எல்லாம் எனக்கு கையில ஒன்னு, இடுப்புல ஒன்னு தெரியுமா?? உன்னை இந்த அளவுக்கு விட்டதே பெரிய விசயம். பேசாம கொள்ளாமா இந்தா இந்த பூவ வச்சிக்கிட்டு, சொல்றத கேட்டு நடந்துக்க... என்ன புரியுதா??" என்று பேசிக்கொண்டு இருக்க"அம்மா" என்று அறைக்குள் நுழைந்த தியா "அம்மா கோவிந்தசாமி அய்யர் வந்திருக்கார் அப்பா உங்ககிட்ட சொல்ல சொன்னார்" என்று கூறவும்"ம்" என்று மகளுக்கு மறுமொழி பேசியவர் "இங்க பாரு கவி சொல்றத கேட்டுக்க எல்லாம் உடனே முடியபோறது இல்ல... அதுவும் இல்லாம நீ சின்னப்பொண்ணும் இல்ல... எல்லாம் காலகாலத்துல நடக்கவேண்டிய நேரத்துல நடக்கனும்னு ஆசைபடுறோம் கவிமா..." என்றவர் மகளின் அலங்காரம் கண்டு திருஷ்ட்டி கழித்து நெட்டி முறித்து கூப்பிடும்போது சிரித்த முகமா வரனும் என்று கூறி நீ அக்காக்கூட இரு தியா என்று தியாவை அறையில் விட்டு சொன்றார் மஞ்சுளா.....கவியின் சோகமுகத்தை பார்த்த தியா கவி ..... ஏன் இப்படி சோகமா முகத்தை வச்சிக்கிட்டு இருக்க உனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலன்னு தெரியும். ஆனா நீ இப்படி சோகமா இருக்கரது ரொம்ப கஷ்டமா இருக்கு கவி". என்று கவியிடம் வாஞ்சையாக கூறஎனக்கு எதுவுமே பிடிக்கல தியா ஏன் இப்படி அவசர அவசரமா எல்லாம் ஏற்பாடு பன்றாங்களோ ஒன்னும் புரியல என்று தங்கையிடம் புலம்பவேணா ஒன்னு செய்யலாமாஎன்ன தியா என்று ஆர்வமாய் கேட்கநீ அவங்களுக்கு கொடுக்கப்போர காபில பேதி மாத்திரை கலந்திடலாமாதியாவை முறைக்கபின்ன என்ன கவி சின்னபிள்ளையாட்டும் சொன்னதையே சொல்லிகிட்டு இருக்க இந்த கல்யாணம் நிக்கும் கான்பிடன்ட்டா இரு இப்போ நம்மால ஏதும் பண்ண முடியாத நிலையில இருக்கோம் அவங்க கூப்பிட்டதும் நீ சாதரணமா போய் நில்லு அவங்கள பாரு கல்யாணம் பேசி முடிக்க அம்மா சொன்னாபோல கொஞ்சம் நாள் ஆகும் ல நமக்கு இன்னும் டையம் இருக்கு கவி அதனால ஏதாவது செய்து இந்த கல்யாணத்த நிறுத்திடலாம் சரியா என்று கவியின் தாடையை பிடித்து கூறஎன்ன பண்ணி கல்யாணத்த நிறுத்தறதுன்னு ஒன்னும் புரியல தியா பச் என்று சலித்தவள் எரிச்சலா இருக்கு என்றபடி நெற்றியில் கை வைத்து அமர்ந்து விட்டாள் சிறிது நேரத்தில் கூடத்தில் சலசலக்கும் ஒசை கேட்கையில் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட்டனர்.என்று உணர்ந்து கொண்ட இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் கலவரத்துடன் பார்த்துக்கொள்ள கவியின் கைமீது தன் கையின் அழுத்தத்தை கொடுத்து சமநிலை படுத்தினாள் தியாஅறை திறக்கும் அரவம் கேட்க இருவரும் கதவையே பார்த்துக்கொண்டிருந்தனர் பளீர் புன்னகையுடன் வந்து நின்ற மஞ்சுளா கவிகன்னு அவங்கல்லாம் வந்துட்டாங்க சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குல சிரிச்சமுகமா வந்து நிக்கனும் வா மா என்று அவளை அழைத்து செல்ல உடன் வந்த தியாவை அறையிலேயே இருக்க வைத்து விட்டு சென்றார் மஞ்சுஇன்னும் அம்மா எந்த காலத்துலதான் இருக்காங்களோ நின்னா குத்தம் உக்காந்த குத்தம் அப்பாப்பா எவ்வளவு ரெஸ்ட்ரிஷன்ஸ் தாங்காதுடா பூமி என்று பெருமூச்சி விட்டவளின் கண்ணில் சித்து பரிசளித்த வீணை கண்ணில் பட அதை வருடியபடியே அவன் நினைவில் நின்றாள்.என் கண்களுக்குள் நுழைந்து என்னை கலவரபடுத்தும் காதலன் நீதானா?
என் இதழ்களில் ஒளிந்து என்னை மௌனமாக்கிய சங்கிதம் நீதானா?
என் இதயத்தில் நுழைந்து என்னை படபடக்கும் பட்டாம் பூச்சியாய் சிறகடிக்க வைப்பவன் நிதானா?
சொல்லி புரிபவய் காதல் அல்ல நீயே என் மனதினை உணர்ந்து என்னை தேடி வருவாயா? உனக்காகா காத்திருக்கிறேன் என் காதலா
இன்னும் என் பார்வை உனக்கு புரியலையா சித்து எல்லார்கிட்டயும் படபடக்கும் என்னால உன்கிட்ட சரளமா பேசமுடியலையே ஏன்னு உனக்கு புரியலையா எனக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சி வச்சி எனக்கு பரிசு கொடுக்குர உன்னால என் மனசுல நீதான் இருக்கன்னு புரிஞ்சிக்க முடியலையா என்று அவன் பிறந்த நாள் பரிசாய் கொடுத்த வீணையோடு பேசிக்கொண்டிருந்தவள் அன்றைய நாளின் நினைவில் முழ்கினாள்.சாயங்காலம் தோழியின் வீட்டில் இருந்து வந்த தியாவின் கள்ளவிழிகள் தேன் குடிக்கும் வண்டாய் மாறி தன் மனம் கவர்ந்தவனை தேட தன் பார்வை வட்டத்துக்குள் இல்லதவனை நினைத்து ஏமாற்றத்துடன் பெருமூச்சிவிட்டவள் சோபாவில் அமர்ந்திருக்கும் கவியை கண்டதும் என்ன ஷாப்பிங்லாம் முடிச்சிட்டு வந்துட்ட போல எங்கே உன்கூடவே ஒட்டிக்கிட்டு அலையுமே ஒரு கொரில்லா அதை காணும் என்று ஏதோ வேண்டாத ஆளை கேட்பது போல நக்கல் கொண்ட தோனியில் கேட்டு தன் நாயகனின் இருப்பை அறிய முயலநாங்க மதியமே வந்துட்டோம் சித்துக்கு டயர்டா இருக்குன்னு ரெஸ்ட் எடுக்க இதோ இப்போதான் போனான் என்று அவன் இருக்கும் அறையை காட்டஹோ பரவாயில்ல நம்ம ஆள் இன்னும் ஊருக்கு போகல... ம் பச் நான்தான் சந்தோஷபடுறேன் அந்த பக்கிக்கு என் மேல கொஞ்சமாச்சும் பீலிங்ஸ் இருக்கா ஏன்டா மட சாம்பராணி மாதிரி இருக்க கொஞ்சம் இந்த காலத்துக்கு வாடா என்று தியா உள்ளுக்குள் பேசிக்கொண்டிருக்கதியா தியா... ஏய் தியா. ஆனா வுனா பிரிஸ் ஆகிடுற என்ன யோசிக்கிரியா இல்ல நீயே ஏதாச்சும் மைன்ட் வாய்ஸ்ல பேசுக்கிறியா என்று அவளை ஊர்ந்து பார்த்து கேட்கஇவ என்ன இப்படி வேவு பாக்குறா நம்ம நடவடிக்கையெல்லாம் நாலு பேர் சந்தேகம் படும்படியாவா இருக்கு இனி இவகிட்ட வரும்போது நம்ம மைன்ட் வாய்ஸ்ச கட்பண்ணிடனும் என்று மனதிற்க்குள் முடிவெடுத்தவள்சே சே மைன்ட் வாய்ஸா அப்படியெல்லாம் எனக்கு பேச வராது கவி என்று அசடு வழிந்துக்கொண்டு கூறசரி அதை விடு நீ ஏன் இவ்வளவு லேட்டா வர்ரபச் என்று சலித்துக்கொண்டவள் கொஞ்சம் படிங்கவேண்டி இருந்தது அம்மாக்கு போன் பண்ணி சொல்லிட்டுதான் இருந்தேன் சரி நான் போய் ரிப்ரெஷ் ஆகிட்டு வர்றேன் என்று அறைக்கு சென்றாள் தியாஇரவு உணவு தயாரிக்க மஞ்சுளா ஆயுத்தமாகி கொண்டிருக்க சப்பாத்தியும் வெஜ் குருமாவும் செய்ய முடிவெடுந்திருந்தவர் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்தார்மகள்கள் இருவரும் தொலைகாட்சியில் வரும் பாடல்களில் லயத்த வண்ணம் இருக்க அறையில் இருந்து வந்த சித்து என்ன ரெண்டுபேரும் இங்க உட்காந்துகிட்டு இருக்கிங்க என்று கேள்வியாக அவர்களை பார்த்து கேட்கதுரை வேற என்ன செய்ய சொல்றிங்க என்று தெலைகாட்ச்சியில் இருந்து பார்வையை அகற்றாமல் கேள்வியை கேட்டாள் கவிசமையல் கூடத்தை எட்டி பார்த்தவன் மஞ்சுளா மட்டும் தனித்து வேலை செய்வதை பார்த்தவன் கஷ்டம்டி உங்களயெல்லாம் வைச்சிக்கிட்டுஎன்ன சார் கஷ்டம் வந்தது எங்களால உங்களுக்கு என்றாள் மீண்டும் அவள்ம் .... என்று ஒலியெழுபப்பியவன் அங்க பாருங்க ஆண்டி தனியா சமையல்கட்டுல கஷ்டபடுறாங்க இங்க உங்களுக்கு பாட்டுக்கு கேக்குதாரொம்ப ஃபிலிங்ஸ் னா நீயே கலத்துல குதிக்க வேண்டியதுதானே டா என்று கவி அவனை வாரிவிடஇப்படி கவியும் சித்துவும் ஒருவரை மாற்றி ஒருவர் விவாதித்து கொண்டிருக்க சித்துவின் மீது கண்களை நீந்த வீட்டிருந்த தியாவின் எண்ணங்கள் அவனின் ஒவ்வோரு அசைவையும் தன் மூளையில் சேமித்து வைத்துக்கொள்ளும் வேலையை கனகச்சிதமாக செய்துகொண்டிருந்தது.அவர்களின் விவாதம் முற்றி கையில் இருந்து ரிமோட்டை அவன் மீது எரிய அதில் இருந்து தப்பிக்க விலகியவன் சோபாவில் அமர்ந்திருந்த தியாவின் மறுபக்கத்தில் அவளை தள்ளியபடி வந்தமர்ந்தான்அவன் ஸ்பரிசத்தில் சிலிர்த்து இருந்தவள் அந்த நிமிடத்தை தன் மனப்பெட்டகத்தில் சேமித்து வைத்துக்கொண்டாள்.என்னடி இது ரவுடி ராக்கம்மா மாதிரி ஆயுதத்துல எல்லாம் எடுத்து அட்டாக் பண்ற நீ உண்மையிலேயே பொண்ணுதானா என்று சந்தேகமாய் கேள்வி எழுப்படேய் வேணா இப்போ ரிமோட்டோட போச்சேன்னு சந்தோஷப்படு மவனே இன்னொரு வார்த்தை பேசினா டைரக்டா கல்லுதான் அதும் மண்டைய குறி பாத்து வரும் ஜாக்கிரதை என்று எச்சரித்து விடதியா.... தியா... என்னடி என்னாச்சி இவன் என்னை வம்பிழுத்துக்கிட்டே இருக்கான் நீ அமைதியா இருக்க என்று அவளை தங்களோடு பேச வைக்க கவி தியாவை தங்களின் பேச்சோடு இணைக்கஓகே ஓகே லிவ் இட் ஆண்டி மட்டும் தனியா வேலை செய்றாங்க நான் போறேன் உங்க வேலைய கன்டீனியூ பண்ணிக்கிங்க என்றவன் அடுக்கலை நோக்கி நுழைந்தான்.சித்து இப்போதான் வரியா டீ போடட்டுமா என்று மஞ்சுளா கேட்கநானே போட்டுக்குறேன் நீங்க வேலைய பாருங்க ஆண்டிசித்து நீ டீயெல்லாம் போடுவியாடீ போடுவியாவா நான் படிச்சாதே ஹோட்டல் மெனேஜ்மென்ட் தானே ஆண்டி என்றான்.நீ படிச்சது அதான்டா பட் டீ நல்லா போடுவியா என்று கவி அவனை கலய்க்கசொல்லிட்டாங்க ஆல் இன் ஆல் அழகுராணி சரிதான் போடி என்றவன் அனைவருக்கும் அவன் கைவண்ணத்தில் டீயை போட்டு அதை கொடுக்கவும் செய்தான்அதை வாங்கி பருகிய மஞ்சுளா நிஜமாவே டீ பிரமாதம் பா என்று கூற நாட் பேட் ஏதோ பரவாயில்லை உன் பொண்டாட்டியா உட்காரவைச்சி வேலை செய்வஎங்க டி அதுக்கு ராதாகிட்ட கோஞ்சம் ரெக்கமென்ட் பண்ணேன் என்று இவனும் கேலி பேசஉனக்குலாம் இந்த ஜென்மத்துல யாரும் பொண்ணு தரமாட்டாங்கடா என்று அவனை கேலி பேசியபடி டீ யை பருகியவளின் தலையில் ஒரு குட்டு வைக்க போடா தடியா ஏன்டா அடிக்கிற என்று சண்டை போடஆமா ஆமா இந்தம்மாவுக்கு இங்கிலாந்து இளவரசர் வந்து கட்டிக்கிறேன்னு சொன்னாருபோட அவங்குளுக்கெல்லாம் கல்யணமாகி பிள்ளைங்களே இருக்கு வேற ஆள் பாத்து சொல்லு யோசிக்கிறேன் என்றாள் கவி விளையாட்டாய்.தியாவின் முன் டிரேயை நீட்ட அவன் விழிகளை ஊர்ந்து பார்த்தபடியே டீ எடுக்க இருந்தவளின் விழி மொழியை அறியாமல் இருந்தான். ஒரு பொண்ணு என்ன நினைக்குறான்னு கூட தெரியல நீயெல்லாம் சுத்த வேஸ்ட்டுடா மாமா என்று வாயில் முனுமுனுத்தவாறு டீயை எடுத்துக்கொள்ள அவன் காதில் விழாமல் இருக்க ஏதாவது சொன்னியா வது என்ற தியாவை கேட்கஇல்லையே நான் ஒன்னும் சொல்லலியே என்று கூற எனக்கு மட்டும் நீ ஏதோ சொன்னாமாதிரியே கேக்குது வது என்று தனக்குதானே பேசியபடி சென்றுவிடமக்கு மக்கு கொஞ்சமாச்சும் என்னை கவனிடா நான் என்ன சொல்ல வறேன்னு என் கண்ணே சொல்லும் என்னை பார்த்தாலோ இல்ல பேசினாலோதான் மழையே வந்திடுமே என்று உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தாள் தியா.இரவு உணவை முடித்துக்கொண்டு அனைவரும் உறங்க சென்றுவிட பாதி இரவில் திடிரென ஏதோ மேலே விழுவதை போல இருக்க எழுந்தவளின் அறை முழுவதும் இருட்டு கவி கவி என்று தமக்கையை அழைக்க அவளின் அழைப்பிற்க்கு பதில் இல்லாமல் போக சரி எழுந்து கொள்ள இருந்த தியாவின் மேல் மலர் தூவ அனைத்து மின்விளக்குகளும் ஒளிர்ந்து பூ குவியலின் நடுவில் இருந்தாள் தியாபிறந்தாளின் இன்ப அதிர்வாய் அனைவரும் வாழ்த்து கூற மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்தாள் தியா அதுவும் சித்தார்த் தனக்காவே இங்கு வந்துள்ளான் என்பதை நினைத்தவளின் ஆனந்தத்தை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாமல் இருந்தது. வாயில் கைவைத்து தன் சந்தோஷத்தின் உச்சத்தை அடைந்தவளின் வார்த்தை தடை பட மகளை அணைத்துக்கொண்டார் உடனே மேசையை அலங்கரித்த சித்துவும் கவியும் அதில் கேக்கை வைக்க கண்களில் சிரிப்புடன் கத்தியை கொண்டு அதை வெட்டி அன்னை தந்தை அக்கா சித்து என்று அனைவருக்கும் ஊட்டிவிட்டாள் தியா மாணிக்கம் தன் அன்பு பரிசாய் கோல்ட் வாச்சை மகளின் கையில் அணிவிக்க தேங்கஸ் பா என்று கூறியவள் அன்னையின் அன்பு முத்தத்தை பெற்றுக்கொண்டாள் தமக்கையின் தங்க மோதிரமும் விரலை அலங்கரிக்க அவளை அன்புடன் அனைத்து தனது நன்றியினை தெரித்தவள் சித்துவின் பரிசை காண ஆவளாய் இருக்க இவற்றிற்க்கெல்லாம் மகுடம் வைத்தார்போல் சித்தார்த் பரிசாய் கொண்டுவந்த வீணை அவளின் மனதை மயிலிரகாய் வருடியது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் வதுமா என்றவன் அவளின் கைகளில் விணையை கொடுக்க ஒரு மலர்சரத்தை இன்பமாய் ஏந்துவது போல் ஏந்தியவள் தேங்க்ஸ் சித்து என்றாள் தியாஎல்லாரையும் உன் துறு துறு பேச்சால கட்டிபோட்டு வைச்சிருக்கர உன்கிட்ட என்னால ஒரு வார்த்த கூட என் மனசுல இருக்கரத சொல்லமுடியலடா இந்த நாலு வருஷமா உன்னையே சுத்தி சுத்தி வர்ர என் மனச நான் எதை சொல்லி சமாதானப்படுத்துவேன் என்று வீணையில் விரலை வைத்து தந்தியினை மீட்ட டங் என்ற ஒலியுடன் அதிர்ந்தது நின்றது.தியாவின் கனவு சித்துவை சென்றடையுமா காத்திருப்போம்
........................................................................வீட்டிற்க்குள் வந்த கேஷவ்விற்கு அண்ணணின் அலுவலகத்தில் நடந்தையெல்லாம் நினைத்தவனின் கண்கள் எல்லையில்லாத கோவத்தில் கோவை பழமாய் மாறி இருந்ததுஎன்ன கேஷவ் இவ்வளவு கோபமா வர்ர என்ற தாயின் கேள்வியை காதில் வாங்கியவன் வர்ரான் பாருங்க ஒன்னுமே தெரியாத பச்ச புள்ளையாட்டும் அவன்கிட்ட கேளுங்க என்று விரைப்புடன் கூறியவன் அறைக்குள் சென்று கதவை டொம் என்று அறைந்து சாத்தினான்.என்னடா இது இப்படி போறான் என்ன நடந்தது ஜெய் என்று வினவ பின்னால வந்த ஜெய் அவன் அப்படித்தாம்மா இருப்பான் நாளைக்கு நான் ஊருக்கு போனதும் சரியாகிடுவான்.நீ ஊருக்கு போறதுக்கும் அவனுக்கு சரியாகரத்துக்கும் என்னடா சம்மந்தம்அதுவா இப்பா அய்யா நம்ம கம்பெனி md அதான் இவ்வளவு கோவம்என்ன ஜெய் சொல்ற நம்ம கம்பெனியௌட எம்.டி யா என்று ஆச்சர்யமாய் கேட்கஆமா மா என்று சாதரணமாய் கூறியவன்இவ்வளவு பெரிய பொறுப்ப அவன் தாங்குவானா பா எதுக்கும் என்று தொடங்குமுன் அவரை நிறுத்தியவன் அவனால முடியும் மா எனக்கு தெரியும் என்னைவிட அவனால இன்னும் நல்லா பாத்துக்க முடியும் சில சம்பவங்கள் அவனை நம்மகிட்ட இருந்து தள்ளியே வச்சிடுச்சி ஆனா இனியும் அவனை இந்த குடும்பத்துக்குள்ள இருந்து எக்காரணத்தை கொண்டும் வெளியே போகவே விடாதபடி பொறுப்பு கொடுத்திருக்கேன் சோ இனி அவன் இங்க தான் இருந்தாகனும் அப்பாவும் டென்சனாக தேவையில்லை என்றதும் கவலையும் குழப்பமும் பூசிய முகமாய் இருந்த நாரயணி சற்று புன்னகை பூசிய முகமாய் இருந்தார்.உன்கிட்ட ரொம்ப முறைச்சிக்கிட்டானாப்பா என்று பெரிய மகனிடம் கவலையாய் கேட்க அங்க இவன எம். டி ன்னு அறிமுகப்படுத்தம்போது முகத்தை உர்ன்னு வைச்சிக்கட்டவன் தான் இதுவரையும் சரியாகலை என்னையும் எதுவும் கேட்கல அவனோட ஸ்பீச்சிலயும் தன்கிட்ட வந்த இந்த பொருப்ப திறம்பட நடத்துவேன்னு தான் சொன்னான் சோ நடத்திக்காட்டிடுவான்மா என்ன அய்யனார் சாமி கனக்கா ருத்ரதாண்டவம் ஆடமாட்டான்னு நம்பலாம் அதுவரையும் நமக்கு நல்லதுதான் என்று சிரிக்க மாடியிலிருந்து இளையவன் இறங்கி வரும் அரவம் கேட்டதும் ஜெய் சிரிப்பை அடக்கியபடி அம்மா பிரெஷ் ஆகிட்டு வரேன் ஸ்ட்ராங்கா ஒரு காபி என்று அறைக்கு சென்றான்.இரவு உணவின்போதும் எதுவும் பேசமல் உண்டவன் அறைக்கு சென்றுவிட்டான் ராஜாராமனின் பார்வையில் தப்பாமல் இவன் நடவடிக்கைகள் விழ சந்தேகமாய் ஜெய்யை பார்த்தவரிடம் ஜெய் காலை நடந்ததை கூற பார்வையால் பெரிய மகனை மெச்சிக்கொண்டார்.உறங்க சென்றவனின் விழிகளில் நித்திராதேவி எனும் பெண்ணின் தழுவல் இல்லமால் இருக்க எழுதுகோலை கையில் எடுத்தான் கேஷவ் இதுபோன்ற இறுக்கமான மனநிலையில் தன்னை எதனுள்ளாவது புதைத்துக் கொள்ள ஏற்படுத்திய பழக்கம் தான் எழுதுவது அவன் தன் போக்கிற்க்கு மனதில் நின்றதை வார்த்தைகளாய் வடிக்க தொடங்கியிருந்தான்என் இருவிழிகளை மூடி மனமென்னும் ஆழ்கடலில் தத்தளிக்கிறேன் சொல்??? உன் கலங்கிய விழிகள் என்னிடம் உறைத்தது என்ன? அலைகள் பேசிய மொழிகள் தான் என்ன? வழிகள் கூற வந்த வார்த்தை தான் என்னவோ? இயற்க்கையை மட்டும் ரசித்தவனின் மனதில் இன்று உன் விழிகளின் பற்றிய சிந்தனை.....!!!அந்க நாளின் எண்ணற்ற நிகழ்வுகள் மனத்தினில் முட்டி மோதினாலும் கவியின் கலங்கிய இரு விழிகள் மட்டுமே கவிதையாய் வடிக்கப்பட்டது.கைகள் தன் போகிகில் எழத அதை முடி வைத்தவனின் மனம் சற்று தெளிந்திருக்க வந்து படுக்கையில் விழுந்தான்....மங்களாய் சிறு வெளிச்சம் போக போக தூரத்தில் ஒரு உருவம் எதன் பின்னாலோ ஒடுவது தெரிய கேஷவும் ஒடுகிறான் வேண்டாம் வராதிங்க வராதிங்க என்று குரலுக்கு சற்றும் செவிக்கொடுக்கமல் இவன் முன்னேற மலை முகட்டில் இருந்து அந்த உருவம் கிழே குதித்து விட்டதுஉத்ரா..... என்ற பெருஞ் சத்தத்தோடு படுக்கையில் இருந்து எழுந்தவனின் முகத்தில் வியர்வையின் முத்துக்கள் இதயத்தின் ஒசை காதுக்கு கேட்க அவ்வளவு படபடப்பாய் இருந்தான் தலையை இருக்கையால் பிடித்தவன் முடியை அழுத்த கோதி பக்கத்தில் இருந்த தண்ணீர் ஜாடியை சாய்த்து தண்ணீர் பருகினான்.... இன்னுமும் அவன் சமநிலை பெறவில்லை அன்றைய இரவின் தூக்கத்தை தொலைத்தவனின் வாழ்வில் அடுத்தடுத்து நிகழப்போகும் மாற்ங்களுக்கு காரணியாக இருக்கப்போவது யார் என்ற கேள்வியுடன் காத்திப்போம்
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 9
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN