காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 10

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
புத்தம் புது
காலை பொன்னிற
வேளை என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்..... என்ற பாட்டு சத்தம் ஏதோ ஒரு தெலைகாட்சியில் மெல்லிய வருடலாய் காற்றில் மிதந்து வரகையில் பைலுடன் மாடிபடிகளில் கேஷவ் இறங்கி வரும் அரவம் கேட்டு பூஜை அறையில் இருந்து வெளிபட்ட நாரயணி "கிளம்பிட்டியா கேஷவ்" என்றார்."ம்... கிளம்பிட்டே இருக்கேன் மா" என்றவாறு மொபைலை எடுத்து கார்த்திக்கின் எண்களை அழுத்தி காதில் பொருத்தினான் கேஷவ்."ஹலோ கார்திக்"..........."கார்திக் எத்தனை மணிக்கு நாம மீரட் ஆபீஸ்க்கு போகனும்??'............"ஹோ.... இன்னும் half hour தான் இருக்கு... நான் கிளம்பிக்கிட்டே இருக்கேன். ஜஸ்ட் 10 மினிட்ஸ் ல ஆபீஸ்ல இருப்பேன். பேக்டீரிய பார்த்துட்டு நாம கிளம்பிடலாம்". என்று கூறி போனை அணைத்தவனை
"டிபன் ரெடியா இருக்கு வா பா கேஷவ் சாப்பிடலாம்". என்றார் நாரயணி .அவரை ஏறிட்டுக்கூட பார்க்காமல் "இப்போவே டைம் ஆகிடுச்சி மா... நான் அப்டர்நூன் பாத்துக்குறேன்'.என்று வாயில் புறம் திரும்பினான் கேஷவ்."கேஷவ்.... காலையில வெறும் வயித்தோட போகக்கூடாது பா, ஒரு வாய் சாப்பிட்டு போ டா" என்று நாரயணி கூறியதை கேட்டுக்கொண்டே முன்னேறியவன். "மா 10 மணிக்கு இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்கு மா… எனக்காக கார்திக் அங்க வைட் பண்ணிட்டு இருப்பான்". என்று கூறி கொண்டே வாயில் புறம் இருந்து வந்துகொண்டிருந்த ராஜராமனை பார்த்த கேஷவ் சட்டென்று அவருக்கு வழிவிட்டு நிற்க.வெளியிலையே மனைவி மகனை கூப்பிடவது கேட்டுக்கொண்டே வந்தவர் "என்ன கேஷவ் அவ கூப்பிட்டுகிட்டே இருக்கா நீ போயிகிட்டே இருக்கே....?? சாப்பிட்டு போடா..." என்று தனக்கே உரிய கம்பீர குரலால் கூற"அப்பா அது வந்து லேட்" என்று கூறவும் "போடா போய் சாப்பிடு நேரம் காலம் பார்க்கமா உழைக்கரதுல தப்பில்ல... ஆனா அதுக்குன்னு உடம்ப வறுத்திக்கிட்டு வேலை பார்க்கனுமுன்னு அவசியம் இல்ல புரியுதா!! நல்லா சாப்பிட்டு உடம்பையும் மனசையும் தெம்பா வைச்சிக்கிட்டு வேலைய பாரு..." என்று கண்டிப்புடன் கூறினாலும் அதில் மகனின் மீது கொண்ட அக்கறை மறைந்தே இருந்தது.தந்தை கூறியதும் டைனிங் ஹாலை நோக்கி நடந்தவன் காலை உணவை உட்கொள்ள நாரயணிக்குதான் பெருத்த ஆச்சர்யம்.ஜெய் மலேஷியா சென்று இன்றோடு பத்து நாட்கள் கடந்த நிலையில் கணவரிடத்திலும் மகனிடத்திலுமே பெரும் மாற்றத்தை கண் கூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். நாரயணி. "நான் ஊருக்கு போனதும் சரியாகிடுவான் மா" என்று பெரிய மகன் கூறியது நினைவில் வர அப்பாவும் மகனும் ஒன்னா இருக்கனும். இனி எந்த பிரச்சனை என் குடும்பத்தை நெருங்காம இருக்கனும். என்று மனதார இறைவனை பிராத்தித்த நாரயணி தன் வேலைகளில் முழுகி போனார். கேஷவின் கார் அலுவலகத்தை நோக்கி பயணிக்க கேஷவின் மனம் ஜெயின் வார்த்தைகளை மீண்டும் அசைப்போட்டபடி அவனுடன் பயணித்தது.ஜெய் மலேஷியா செல்லும் அன்று கோயம்பத்தூர் விமானநிலையம்."டேய் ஊர்க்கு போறேன்டா இப்போவாவது முகத்தை சிரிச்சா மாதிரி வைச்சிக்கோ... ஏதோ பரிகொடுத்தவன் போலவே முகத்தை வைச்சிருக்க பாக்கவே சகிக்கல டா..." என்று எப்போதும் போல் கேஷவின் தோல்மீது கையை போட்டு அவனை கேலி செய்தபடி பேசினான் ஜெய்.அவனின் கையை தட்டிவிட்டு முறைத்து பார்த்த கேஷவ் " ஏண்டா உன் மனசுல என்ன நினைச்சிகிட்டு இருக்க முதல்ல கம்பெனிய பாக்கனும்ன்னு சொன்ன இப்போ நீதான் அதுக்கு எம்.டின்னு என்னை கேட்காம அனோன்ஸ் பண்ற... இதுல உன்னை மடியில உட்கார வைச்சி கொஞ்சுவாங்கலா?? நான் அங்கயே முடியாதுன்னு முறுக்கிட்டு வந்திருந்தா தெரிஞ்சிருக்கும் விஷயம்... இப்போ கெக்க பிக்கேன்னு என்னை வெறுப்பேத்திக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்க!!!!" என்று பற்களை கடிக்க"சரி ஒகே கூல் கூல் தப்பெல்லாம் என் பேர்ல தான்... சாரி, சாரி" என்று அவனை சமரசம் செய்ய முயன்றான்"சாரி கேட்ட முடிஞ்சிபோச்சா???" என்று காரமாக கேஷவ் கேட்டதும் சற்று இறுகியமுகத்துடன் "இப்போ என்ன செய்யனும்கிற இந்த கம்பெனிய பாத்துக்க மாட்டேன்னும் எம்.டி பொறுப்புக்கு நான் அருகதை இல்லாதவனும்ன்னு ஒரு வார்த்தை சொல்லிடு இப்போவே இந்த நிமிஷத்துல இருந்து அந்த பதவில இருந்து உன்னை விடுவிச்சிடுறேன்... என்றவன் அதே சமயம் சற்றும் பிசிறு அற்ற தொனியில் "பொறுப்பை தட்டிக்கழிக்க உனக்கு ஒரு காரணம் தேவை அதுக்குதானே இதெல்லாம் பண்ற, என்னால பண்ணமுடியாது, பண்ண மாட்டேன்னு வீண் பிடிவாதமும், வீம்பும் பிடிச்சிட்டு இருந்தா யாருக்கும் பயனில்லாமலும் பிடிக்காமலும் தான் போகும்". என்று அழுத்தமான குரலில் கூறினான் ஜெய்அந்த ஸ்தாபனத்தை கட்டி காக்கவும் திறம்பட நடத்தவும் அறுகதை இல்லாதவனா கேஷவ்... அண்ணனை விட ஒருபடி மேலே சென்று ஒய்வு இல்லாமல் உழைப்பவன் ஆயிற்றே இடையில் ஏற்பட்ட மன சஞ்சலத்தினால் இந்த ஊர் வேண்டாம், இங்க இருக்க வேண்டாம், என்று இருப்பவன் தானே தந்தையின் பாராமுகமும், தாயின் மனகுமுறல்களும், பார்க்க பார்க்க அவன் வேதனை அதிகமானதே தவிர குறையவில்லை பிரச்சனைகளில் இருந்து ஓடி ஒளிய வழி தேடினானே ஒழிய அவன் திறமையற்றவன் இல்லையே... இந்த போட்டோகிராபி அவன் விரும்பி எடுத்து இருந்தாலும் அதில் அவனின் எல்லா தேடல்களும் அடங்கிபோய் விடவில்லை மனிதமுகங்களின் ஏளன பார்வைகளில் இருந்து மறைந்து காடுகளிலும் மிருகங்களின் தேடல்களிலிலும் அவன் எடுத்துக்கொள்ளும் சிரத்தைகளில் தன் எல்லா சங்கடங்களையும் மன உளைச்சல்களையும் அடிமனதில் ஆழ புதைத்திருந்தான்.. . தன் தந்தையும் அண்ணனும் இருக்கும் ஸ்தாபனத்தில் தன்னையும் புகுத்திக்கொண்டு அங்கேயே இருந்து அவர்கள் முன்னால் வலம் வர அவனால் முடியாமல் இருக்கவே இதோ அதோவென நாளை கடத்திக்கொண்டிருந்தான் கேஷவ்.அதனாலேயே அண்ணனின் ஒவ்வொரு வார்த்தையிலும் பொதிந்திருந்த அர்த்தத்தை உள்வாங்கியவன் வார்த்தைகளின்றி மௌனமானான்."முதல்ல நான் என்ன சொல்ல வரேன்னு புருஞ்சிக்க கேஷவ். உன்னை இனியும் இந்த குடும்பத்தில் இருந்து பிரிஞ்சிருக்க விடமாட்டோம் நடந்த நிகழ்ச்சிக்கு உனக்கு நீயே எத்தனை நாள் தான் தண்டனை கொடுத்துக்குவ???" என்று ஜெய் கேட்டதும் அதிர்வாய் அண்ணனை பார்த்தான்"என்ன அதிர்ச்சியா இருக்கா? எனக்கும் எல்லாம் தெரியும் கேஷவ். நீ எதனால நம்ம குடும்பத்தோட ஒட்டாம இருக்கன்னு... போதும் டா போதும் எல்லாத்தையும் மறந்துடு இதோட எல்லாம் முடிஞ்சி போயிடுச்சின்னு நினைச்சிக்க". என்று ஜெய் கூறியதும்.
எதற்க்கும் கலக்கம் கொண்டிராத கேஷவின் நிலையில் கலக்கம் கொண்டு மௌனமாய் நின்றிருந்தான். அவன் தோல்களில் அழுத்தம் கொடுத்த ஜெய் ஆழ மூச்செடுத்து "எனக்கும் அந்த சம்பவத்தால மனசு கஷ்டமா இருக்கு கேஷவ்... ஒரு கட்டத்துல எல்லாத்தையும் கடந்துதான் ஆகனும் அதற்க்காக இந்த ஊர் வேண்டாம் உறவுகள் வேண்டாம்ன்னு தனியாவே இருந்துடுவியா??? அப்பா அம்மா நான்லாம் வேண்டாமா டா?? எதுக்காக டா இந்த வனவாசம்?? சொல்லு கேஷவ்?? என்று கேள்விகளால் அவனின் நிலையினை உணர்த்தஜெய் என்று குற்றஉணர்ச்சியுடன் அவனை அணைத்த கேஷவ் "எனக்கு தெரியுது ஜெய் நான் செய்யறது தப்புன்னு எனக்கு உறுத்தலா இருக்கு டா நடந்த தப்புக்கு நான்தான் காரணம்ன்னு...-இங்க இருந்தா அதோட சுவடுகள் என்னை ஒரு பைத்தியகாரனா மாத்திடும் ஜெய்... நான் கொஞ்ச கொஞ்ச மா மறக்க முயற்ச்சி பண்ணிட்ணுதான் இருக்கேன் ஆனா என்னால முடியலடா... அதன் காடு மேடுன்னு சுத்தி என்னை நான் தனிமைபடுத்திக்கிட்டு ஓடி ஒலியுறேன் டா"... என்று தன் கரகரத்த குரலில் கூற அவனின் குரலில் மற்றமே அவனின் இயலாமையை உணர்த்தியது."உன்னையும் உன் நிலமையும் பத்தி முழுசா தெரிஞ்சனாலதான் நாங்க இந்த ஏற்பாடே பண்ணினோம் கேஷவ்"கண்களில் கேள்வியுடன்" நீங்கனா_?"."நானு கார்த்திக் அன்ட் அப்பா"அப்பா என்றதும் அவன் முகத்தில் பெருத்த ஆச்சர்யம்மேலும் ஜெய்யே தொடர்ந்தான் "அப்பாவுக்கு உன்னை எப்படியாவது இந்த வீட்டுக்கு கொண்டுவரனும்னு ரொம்ப மெனக்கெட்டார். ஆனா நீ 3 மாதம் 6மாதம்ன்னு கெடு சொல்லிட்டு இருந்த எனக்கு இந்த சான்ஸ் வரவும் அப்பாகிட்ட கலந்து பேசி முடிவெடுத்துட்டேன்" என்று இதழ் விரிய கூறியதும்.அப்பா என்று ஓசையின்றி கூறி பார்த்தவன் ஒரு முறை கண்களை மூடினான் அவர் கம்பீர முகம் தெரிய 'சாரி பா சாரி என்னாலதான் அத்தனை பேர் முன்னாடியும் நீங்க அவமானபட வேண்டியாத போச்சி இனி என்னால உங்களுக்கு எந்த கெட்ட பெயரும் வராம காப்பத்துறேன் பா' என்று மனதாரா மன்னிப்பு கேட்டவன் சற்றுதிடமானான்."ஜெய் என்னால்" என்று கேஷவ் கூற"திரும்பவும் முதல்ல இருந்தா??" என்று தலையில் கைவைத்த ஜெய்யை பார்த்து சிரித்த கேஷவ் "சி முழுசா கேளுடா??" என்றான்"ம்.... நல்ல மரியாதை!!" என்று பெருமூச்சி விட்ட ஜெய் "சரி என்ன சொல்ல வந்ததத சொல்லு" என்றான் பெரிய மனதுடன்."ஜெய் என்னால நீங்க எல்லோரும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிங்கன்னு இப்போ நீ சொல்லிதான் தெரியுது. நடந்ததுக்கு காரணம் நான்தான்னு அப்பா என் மேல கோபமா இருப்பாருன்னு நினைச்சேன். ஆனா அவர் மனசும் என்னைதான் தேடி இருக்குன்னு நீ சொன்னதும் தான் புரியுது. தெங்க்ஸ் டா அண்ணா". என்று கூறஅவனை முதுகில் தட்டி கொடுத்தான் ஜெய்.ஒலிபெருக்கி தாங்கி வந்த பெண்ணின் குரல் மலேஷியா செல்லும் விமானத்திற்க்கு அழைப்பு விடுக்க தம்பியிடம் கூறி புறப்பட அண்ணனுக்கு வாழ்த்துக் கூறி அனுப்பினான் கேஷவ்.
........................................................................மாணிக்கம் இல்லம்.மாணிக்கத்தின் அலைபேசி ஒலி எழுப்ப அதை எடுத்து காதுக்கு கொடுத்தவர் அந்த பக்க நபரின் அழைப்பில் உற்சாகமானார்."ஹலோ.... சொல்லுங்க ராமசாமி எப்படி இருக்கிங்க ?........"எனக்கென்ன நான் அமோகமா இருக்கேன். உங்க மருமகளா ஹா... ஹா... அவங்களும் நல்ல இருக்காங்க "......"ம் நாள் பாத்து சொல்லியாச்சே !!! ஹோ டைமிங் தான் சொல்லல ல சரி சரி காலேஜ்ல இருந்து பொண்ணு வங்துடுவா... நாம ஒரு மூனு மணிக்கு கிளம்பினா சரியா இருக்கும் சரி வீட்டுல சொல்லிடுறேன். அங்கயும் எல்லாரையும் கேட்டதா சொல்லிடுங்க..."......."சரிங்க சம்பந்தி நானும் உங்க மருமகள ரொம்ப விசாரிச்சதா சொல்லிடுறேன்..." என்றவர் போனை வைத்துவிட்டு மனைவியை அழைத்தார்."என்னங்க கூப்பிடிங்களா?? ஏதாவது வேனுமா??""மஞ்சு இன்னைக்கு புடவை எடுக்க போகனும் ல?""ஆமாங்க சம்மந்தி விட்டுல நேரம் பாத்து சொல்றன்னு சொன்னாங்க... சொல்லிட்டாங்களா??,""இப்போதான் அரவிந்த்தோட அப்பா கால் பண்ணாரு... மதியதுக்கு மேல நாம முகுர்த்த புடவை எடுக்க போகனும். ரெடியா இரு""அப்படியா சரிங்க... என்னங்க கவி..."கவி இல்லாமலையாமா… கவிமா வந்ததும் ரெண்டுபேரையும் கூட்டிட்டுதான் போறோம்"."என்னங்க மாப்பள வீட்டுக்காரங்க கடைக்கு எத்தனை மணிக்கு வர்ரதா சொன்னாங்க?"."சாயங்காலம் 4மணிக்கு நேரா கடைக்கே வந்துரேன்னு சொன்னாங்க மஞ்சு.. மாப்பிள்ளையும் வர்ராரம்".என்றார் மாணிக்கம் கூடுதல் தகவலாக"அப்படியா!!! லீவ் இருக்காது கல்யாண நேரத்துல இரண்டு நாள் முன்னாடிதான் வருவாருன்னு சம்மந்தியம்மா சொன்னாங்க""நானும் கேட்டேன் மஞ்சு இன்னும் பதினைஞ்சி நாளுதானே இருக்கு... கல்யாணத்த முடிச்சிட்டு போறேன்னு லீவு வாங்கி இருக்காராம். ஆபீஸ் வேலையா வீட்டுல இருந்தே முடிச்சிக் கொடுக்குறேன்னு சொல்லிட்டாராம்" என்றார் மாணிக்கம்."என்னங்க மாப்பிள்ளைய பத்தி உங்க அபிப்ராயம் என்ன?! சொல்லவே இல்லையே??""இன்னும் கல்யாணம் முடிஞ்சபிறகு கேக்கரது தானேமா... சீக்கிரம் கேட்டுட்ட}}}பச் என்று கணவரை முறைத்தவர்"பின்ன என்னமா முகுர்த்த புடவை எடுக்குர வரையும் வந்திடுச்சி இப்போ போய் மாப்பிளையா பத்தி அபிப்ராயம் கேக்கிர நல்லா மாப்பிள்ளைய பத்தி விசாரிச்ச பிறகு_தானே இந்த சம்மந்தத்தையே சரின்னு சொன்னோம்"சரிதாங்க... ஆனா ஒரு மாசத்துக்குல்ல கல்யாணம்ங்கரது அதான் கொஞ்சம் நெருடலா இருந்துச்சி..."'அவங்க பையன் ஜாதகத்துல இந்த மாசத்துக்குள்ள கல்யாணம் முடியனும் இல்ல 3 வருஷத்துக்கு கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொன்னாங்களேமா... நாமளும் நமக்கு தெரிஞ்ச ஜோசியரை பாத்ததுல இந்த மாசம் நம்ம பொண்ணுக்கு நிச்சயம் கல்யாணம் நடந்திடும்ன்னு சொல்லி இருக்காரு ல அவரு சொன்னதுல 100 க்கு தொண்ணுறு சதவிதம் நமக்கு நடந்து இருக்கு இதுவும் நடக்கும் மா""ம்..." என்று ஆமோதித்தவர் தன் அடுத்த வேலை பார்க்க சென்றார்........................................................................கேஷவின் கார் மீரட் லெதர் ஃபேக்டீரிக்குள் நுழைந்ததும் காரிலிருந்து வெளிபட்ட கேஷவும் கார்த்திக்கும் அலுவலகத்தை நோக்கி சென்றனர் கேஷவின் வரவை கூறியதும் உள்ளே அழைத்தார் அந்த ஸ்தாபன உரிமையாளர்."அடடே வாங்க வாங்க மிஸ்டர் கேஷவ்"அவரின் அழைப்பை புன்னகையுடன் ஏற்று தனது இருக்கையில் அமர்ந்தவன் கார்திக்கையும் அமர கை காட்டினான்."ஹலோ மிஸ்டர் பங்கஜ்... உங்கள சந்திச்சதுல ரெம்ப சந்தோஷம"."கேஷவ் ஜி உங்களோட புதிய பெறுப்புக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..." என்று அவர் கூறியதும் அதற்க்கு நன்றி கூறியவன்."நான் இப்போ எதுக்கு வந்து இருக்கேன்னா நீங்க திடீர்ன்னு உங்களோட சரக்குக்கு இப்போ உள்ள ரேட்ட விட அதிகமாக்கி இருக்கிங்கன்னு கேள்விபட்டேன்""அப்படி ஒன்னும் அதிகமாக்கல சார்... பர் மீட்டர் 200 ல இருந்து 350 தான் ஜீ" என்றார் அவர்"இது உங்களுக்கே அதிகமா இல்லையா பங்கஜ் ஜீ??? மீட்டருக்கு 150 அதிகமாக்கி இருக்கிங்க?!""ஜீ இப்போ இருக்க மார்க்கெட் ரேட்டோட கம்பர் பண்ணி பாக்கும்போது இது ஜஸ்ட் மூனுல ஒரு பாகம் தான் நானும் நாலு காசு பாக்க வேண்டாமா??? நஷ்டத்துல ஃபேக்டீரிய நடத்த முடியுமா சொல்லுங்க?".. என்று கேட்க"நீங்க சொல்றது எல்லாம் சரிதான் ஜீ.. நீங்க நாலு காசு இல்ல எட்டு காசு கூட பாக்கலாம்.. நாங்க மூலப்பொருளே இவ்வளவு ரேட்கொடுத்து வாங்கினா அதை செய்து வெளியே அனுப்பரத்துக்குள்ள எங்களுக்கு எவ்வளவு ஆகுன்னு யோசிங்க...""ஹா... ஹா... அதனால தானே ஜீ நீங்க அது அதுக்குன்னு தனியா ரேட் பிக்ஸ் பண்ணி இருக்கிங்க.. எப்படியும் அதுல இதோட காசையும் சேர்த்து பாத்துடமாட்டிங்க" என்று சிரிக்க"அதெல்லாம் போகட்டும் ஜீ நீங்க சொன்ன ரேட்டுக்கு என்னால இதை கன்டின்யூ பண்ண முடியாது... முடிஞ்சா சொல்லுங்க இல்ல நாங்க வேற டீலர பாக்க வேண்டி இருக்கும்"."என்ன ஜீ நீங்க இப்படி திடீர்ன்னு சொல்லிட்டிங்க... சரி எனக்கு வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம் 300 தாங்க ஜீ."இது என்ன கத்தரிக்கா வியாபாரமா ஜீ?? பேரம் பேசிக்கிட்டு இருக்க... என்னோடது ஒரே முடிவு தான் மீட்டர் 250 தான் என்னால முடியும்... நல்லா யோசிங்க உங்களுக்கு சரின்னா கார்திக்க கான்டாக்ட் பண்ணி சொல்லுங்க என்றபடி தன் முடிவில் இருந்து சற்றும் பின் வாங்கமல் இருக்கையில் இருந்து எழுந்திரிக்க..கேஷவ் வேறு டீலரை பார்த்துக்கொள்வதாக சொல்லவும் தன் பாச்சா இவனிடம் பலிக்காது என்று யூகித்த பங்கஜ் "சரிங்க ஜீ இது எனக்கு நஷ்ட்டம் தான்.. ஆனா நீங்க எங்க ஓல்டு கஸ்டமர் என்பதால ஒத்துக்குறேன்"என்று ஏமற்றத்துடன் கூற"தட்ஸ் குட் நீங்க ஒன்னும் நஷ்டத்துக்காக ஒத்துக்க வேண்டாம் 275பைனல் பண்ணிக்கலாம்". என்று கூற அவன் கைபிடித்து குலுக்கிய அந்த ஸ்தாபன உரிமையாளர் வாயெல்லாம் பல்லாக சிரித்து அனுப்பி வைத்தார்.தனது அலுவலகத்திற்க்கு காரை ஓட்ட சொன்னவன் "என்ன கார்திக் ஏதும் பேசாம வர?""உன்னை பார்த்தா எனக்கு வியப்பா இருக்கு கேஷவ்.. விளையாட்டு பையனா இருந்தவன் இப்படி சக்கை போடு போடுற!!" என்று அவனை பாரட்ட"பத்தியா ஓட்டுற"டேய் நான் ஓட்டலடா... நம்ம முருகேசன் தான் கார ஓட்டுறான்"."எப்படி கார்திக் இப்பவுப் அப்படியே இருக்க".எப்படி இருக்கேன் கேஷவ் ஹேன்சமாவா"ஜோக்குன்னு சொல்லி கடிக்கிர பாரு... அதை சொன்னேன்" என்று சிரிக்க அவன் சிரிப்பில் கார்திக்கும் இணைந்து கொண்டான்."அது இருக்கட்டும் கேஷவ் பங்கஜ் ஏன் தீடிர்ன்னு இப்படி ரேட் ஏத்தனும்."/"அவன் சொன்னதுதான் நாலு காச பாக்க ஆசை பட்டுருப்பான்" என்று கூறியவன் "நான் இப்போதானே இன்டஸ்ட்ரிக்கு புதுசு பேசமாட்டான்னு நினைச்சி இருப்பான். நான் உறுதியா சொன்னதும் அவன் முகத்தை பார்த்தியா தான் நினைச்சது நடக்கலன்னு கடுகடுன்னு மாறினதை கவனிச்சியா""ம் கவனித்தேன் கேஷவ் இப்படி ஒரு வியாபாரி உனக்குள்ள ஒளிச்சிருக்கறதே மறச்சிட்டியே கேஷவ்". என்று நடிகர் திலகம் மாடுலேஷனில் சிரித்து பேசியபடி அலுவலகம் வந்து சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த வந்த அலுவலக வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர்.
.......................................................................காலேஜ் கேன்டீனில் யோசனையுடன் அமர்ந்திருந்த பார்கவியின் தோளை தட்டியபடி வந்து அமர்ந்தாள் ஷீலா அவளை பார்த்ததும் புன்னகைக்க ஷீலாவின் பக்கத்தில் வந்தமர்ந்தான் ராஜூ"ஏன் ராஜூ வீட்டுலதான் அவ கூடவே இருக்கிங்க... காலேஜ்லயும் எங்க கூட விட மாட்றிங்க எப்பவும் பொண்டாட்டி கூடவே இருக்கிங்க..." என்று அவனை வாரகணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள ஷீலா தலையை குனிந்துக்கொண்டாள்.அவளை பாவமாய் பார்த்தவன் "நீ வேற கவி மனுசன் கடுப்ப கலப்பிக்கிட்டு"
என்று ராஜூ ஈனஸ்வரத்தில் பேசஎன்ன என்பதுபோல் பார்த்த கவி ஷீலாவை கண்களால் கேட்க பொறு என்பது போல் கண் இமைகளை மூடி திறந்தாள் ஷீலா."வீட்ல நான் இருக்க பக்கம் கூட மேடம் வரமாட்டாங்க... கேட்டாக்கா அத்த கோவம் குறையட்டும் என்னை மருமகளா ஏத்துக்கட்டும் அப்படின்னு சினிமா டைலாக்ஸ் எல்லாம் விடுறா.. முத்ல்ல இந்த கேபில் கனெக்ஷ்னை கட்பண்ணனும்" என்று கூற"உன் பொண்டாட்டி உன்கிட்ட பேசதாதுக்கும் கேபிள் கனெக்ஷ்ன் கட்பண்றத்துக்கும் என்ன சம்பந்தம் ராஜு!?!"."பின்ன எல்லா சிரியலையும் பார்க்கபோயிதானே இந்த உருப்படாத ஐடியல்லாம் வருது|... என்று எரிச்சலாய் கூறி மனைவியை பார்க்க'அய்யோ இவன் வேற கேபிளுக்கே இந்த எகுறு எகுறுறானே ஐடியா கொடுத்ததே நான் தான்னு தெரிஞ்சா இவன் இருக்க கடுப்புக்கு என்னை கழுத்தை நெறுச்சி கொன்னாலும் கொன்னுடுவானே'என்று மைன்ட் வாய்ஸில் யோசித்த கவியின் முகம் போன போக்கை பார்த்து ஷீலாவிற்க்கு சிரப்பு வந்துவிட பார்வையால் எச்சரித்து ஷீலாவை அடக்கியவள்"ராஜு நீங்க இப்போ உங்க அம்மா பேசலன்னு கஷ்டபடுறிங்களே முதல்ல அதை சரிபண்ணுங்க.... பொண்ணாட்டி எங்கேயும் போயிட மாட்டா இந்த படிப்பு முடிஞ்சிட்டா உங்களுக்கும் வேலை கிடச்சிட்டு வெளியே போயிடுவிங்க.. உங்க அம்மாக்கூட காலம் முழுக்க இருக்கபோறது இவதானே அவங்களோட.உறவு இவளுக்கு சுமுகமா இருக்கனுமுன்னு நினைக்கிறா தப்பில்லையே வீட்டுல இருக்க பிராப்லத்தை கிளியர் பண்ணிட்டு உங்க படிப்பையும் முடிச்சிட்டு உங்க மேரேஜ் லைப்பை என்ஜாய் பண்ண வேண்டியதுதானே" என்று ராஜுவின் மூளையை சலவை செய்ய ஆரம்பித்திருந்தாள் கவி.கவியின் கூற்றில் மெய்யே இருந்தாலும் புது மனைவியை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவதிபடுவது வயிறு நிறைய பசியோடு இருப்பவனுக்கு தலை வாழை இலையில் விருந்தை வைத்துவிட்டு கையை கட்டிபோட்டதற்க்கு சமம் அல்லவா பார்த்து பார்த்து ஏங்கதானே முடியும் மனைவியை ஏக்கமாய் பார்த்தவன் பிரெண்ட்ஸ் பார்த்துட்டு வறேன் என்று அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான்."என்ன ஷீலா ராஜூ ரொம்ப ஃபீல் பண்றாரு""பச் விடு கவி வீட்டுல பிரச்சனை இல்லாம சரியான சந்தோஷம் தான்... இப்போ கஷ்ட்டமா இருந்தாலும் போக போக சரியாகிடும்...". என்று தோழிக்கு சமாதனம் கூறினாள் ஷீலா.சமாதனமாய் தலையை ஆட்டிய கவி "ஆண்டி அப்படியே தான் இருக்காங்களா ஷீலா "."பரவயில்லை கவி... பேசமாட்டறாங்க ஆனா நான் கிட்சன்ல வேலை செய்தா கூட வந்து ஹெல்ப் பண்றாங்க". என்றாள் ஷீலா"குட் முன்னதிக்கு இப்போ பெட்டர்ல" என்று கவி கேட்க "ஆமா கவி முன்னெல்லாம் நான் என் ரூமுக்கு போற வரையும் வெளியே வரமாட்டாங்க... காலேஜ் வந்த பிறகு நான் தனி ஆளா சமையலை முடிச்சிட்டு வரத்துக்கு சிரமபடுரத பாத்தவங்க இப்போ கொஞ்சம் மாறி இருக்கங்க" என்றாள் ஷீலா"நீயா போய் பேசு ஷீலா... பெரியவங்க இடத்துல ஈகோ லாம் பாக்கத அவங்க பேசலனாலும் பரவயில்ல ஆடி காத்துல அம்மியும் நகரும்ன்னு சொல்லுவாங்க... முயற்சி பண்ணு நேரம் வரும்போது நீ ஏன் இப்படி பண்ணேன்னும் சொல்லி புரிய வை". என்று அவளுக்கு ராஜூவின் தாயிடம் நெருங்க வழி கூறினாள் கவி."சரி கவி என்னால ஆனவரையும் எல்லாதையும் சரி செய்ய முயற்சி செய்யுறேன்". என்றவள் "உன் விஷயம் என்னடி ஆச்சி ??".என்றாள்"என்ன விஷயம் டி?"."தெரியாத மாதிரியே கேக்குறியே??? அதான்டி உன் கல்யாண விஷயம் எது வரையிலும் போயிருக்கு??" என்று ஆர்வமாய் கேட்க"இன்னைக்கு முகுர்த்த புடவை எடுக்குறதா இருக்குகாங்க ஷீலா"ஹே. சூப்பர்டி நல்ல கலரா உன் அவருக்கு பிடிச்சா மாதிரி செலக்ட் பண்ணு என்று அவளை கண்ணடித்தே கூறிய சமயம் கவியின் முகத்தில் உண்டான மாற்றத்தை கவனிக்காமல் "இதுலாம் எனக்கு கொடுத்து வைக்காம போயிடுச்சி..." என்று கண்களில் நீருடன் கூற "உனக்கு எல்லாம் அமைஞ்சி இருக்கு சந்தோஷமா இரு" என்றவள் "எங்கள உன் கல்யாணத்துக்கு கூப்பிடுவல?? என்று சிறு குழந்தை போல் அவளிடம் கேட்கஅவளின் மாற்றத்தை உணர்ந்தவள் "என்னடி பேசுற நீ இல்லாமயா... இது எல்லாம் உனக்கும் நடக்கும் டி...கல்யாணத்துல இல்லன்னா என்ன?? ரிசப்ஷன்ல ஜமாச்சிடுவோம்ல!!"..என்று அவளை தேற்றுவதற்க்காக பேசினாள் அந்நேரம் தியாவும் வந்துவிட மற்றகதைகளை பேசியவர்கள் அரைமணி நேரம் கழித்தே வகுப்பறைக்கு திரும்பினர்.
________________________________________"ஏங்க நாம இப்போவே கவிக்கு நகை எடுத்திடுவோமா?? நாளும் வேற இல்ல என்ன சொல்றிங்க??".. என்று மாணிக்கத்தை மஞ்சுளா கேட்க"நீ.என்னமா சொல்ற கவி அம்மா சொல்றபடியே இன்னிக்கே எடுத்திடுவோமா??"."ம் எடுத்திடலாம் பா... என்று கவியும் சம்மதம் கொடுக்க"அப்பா நீங்க எது வேனாலும் வாங்குங்க...ஆனா எனக்கு 8டிரஸ் வந்திடனும் சொல்லிட்டேன்..." என்று சிறிய மகள் கட்டளை இட்டாள்."என்ன தியா எட்டு டிரஸ்ன்னு கம்மியா சொல்ற அந்த கடையையே வாங்கிக்க வேண்டியதுதானே".. என்று கவி கிண்டலடிக்க"இப்போ வேணாம் என்னோட கல்யாணத்துக்கு அந்த கடையையே அட்டைய போட்டுறேன்" இப்போதைக்கு இந்த 8டிரஸ் போதும்". என்றாள் பெரிய மனதுடன்"பாத்திங்களா பேச்சேல்லாம் நமக்கு மிஞ்சுனதுகளா இருக்குங்க..." என்று மஞ்சுளா சலித்துக்கொள்ள"விடு மஞ்சு சின்ன குழந்தைங்க... தியாமா உனக்கு எத்தனை டிரஸ் வேனுமோ எடுத்துக்கோ... ஆனா பர்ஸ்ட் அக்காக்கு முகுர்த்த புடவை எடுத்தபிறகு மத்தத எடுத்தக்கனும் சரியா"..என்று மகளிடம் கூற சம்மதமாய் கூறினாள் பவிவாகனம்.கோயம்பத்தூரின் பெரிய ஜவுளிகடலின் முன்னே நிற்க
"தியா உன் விளையாட்டுதனத்தை கொஞ்சம் அடக்கி வைச்சிக்க கவி சமத்துப்பொண்ணா பெரியவங்க முன்னாடி நடந்துக்க..."என்று அறிவுறையுடன் அவர்கள் இறங்கினர்"உள்ள போங்க நான் கார் பார்க் பண்ணிட்டு வந்துறேன்..." என்றவர் பார்க்கிங்கில் காரை நிறுத்திவிட்டு திரும்பி நடக்க ஒரு இடத்தில் நிலை தடுமாறி விழ இருந்தவரை தாங்க நிறுத்தினான் ஒருவன்.அவரை தாங்கியதும் சற்று சுதாரித்தவர் அங்கிள் "பாத்து பாத்து" என்று கூறவும் அவன் முகத்தை பார்த்தவர் "ரொம்ப தெங்கஸ் கேஷவ்" என்றார்"என்ன அங்கிள் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு என்றவன் பாத்து வர கூடாத?". என்றான்."என்னன்னு தெரியல பா பேலன்ஸ் மிஸ்ஸாகிடுச்சி இரண்டாவது முறையா நீதான் வந்து காப்பத்தி இருக்க... நாம மீட் பண்ணும் போது எல்லாம் என்னை காப்பதரது போலவே ஆகிடுது..." என்று கூறி நகைக்கவும்"ஹா.. ஹா... "என்று நகைத்தவன் அப்படி ஒன்னுமே இல்ல அங்கிள் அப்படி உங்கள காபத்தும் வாய்ப்பு இருந்தா அது எனக்கு சந்தோஷம் தான்"... என்றான் கேஷவ்"இருவரும் பேசிக்கொண்டு ஜவுளி கடைக்குள் நுழைய என்ன அங்கிள் பர்சேஸிங்கா??"என்று கேட்கவும்"ஆமா கேஷவ்... கல்யாண பர்ச்சேஸிங்""வாவ் சூப்பர் அங்கிள் நான் என் வாழ்த்தை சொன்னேன்னு சொல்லிடுங்க..." என்று கூறி அவருடன் சேர்ந்து நடக்க"அப்போ கல்யாணத்துக்கு வரமாட்டியா கேஷவ்?"'நான் இல்லாமலா நிச்சயம் வருவேன் அங்கிள் என்றான்|நான் தடுக்கி விழற நேரம் பாத்து எப்படி எண்டர் ஆன "'அதுக்கு காரணம் நாரயணி அன்ட் ராஜராம் தான் அங்கிள்""அவங்களா".என்றார் யோசனையுடன்"ஆட ஆமா அங்கிள்... நாளைக்கு மிஸ்டர் ராஜராமனுக்கும் மிசஸ் ஆதிநாரயணிக்கும் கல்யாணநாள்... அவங்களுக்கு டிரஸ் எடுக்கந்தான் வந்தேன்".என்றான் கேஷவ்"ஹா.. ஹா... உன் கூட பேசினா பேரம் போறதே தெரியல பா..." என்று கூறியவர் அவன் உடையில் மாற்றத்தை கண்டார் என்ன கேஷவ் உன்னில் கூட பல சேன்ஜஸ் தெரியுது !?!". என்று கூறவும் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பை பற்றி கூறியதும் கேஷவின் மேல் பெரும் மதிப்பே வந்தது மாணிக்கத்திற்க்கு. நான் உங்க அப்பனுக்கு நாளைக்கு போன் பண்றேன்னு சொல்லு" என்றவர் "வாயேன் கேஷவ் எல்லாரையும் இன்ட்ரடீயூஸ் பண்ணி வைக்கிறேன்".
_
"இருக்கட்டும் அங்கிள். நான் கல்யாணத்துல பாத்துக்குறேன் பிஸியா இருக்கவங்கள தொந்தரவு பண்ண வேண்டாம் .... என்று கூறியவன் அவரிடம் விடைபெற்று பெற்றோர்களுக்கு உடை எடுக்க சென்றான். தந்தைக்கு உடையை தேர்வு செய்தவன், அன்னைக்கு தேர்வு செய்ய பட்டு புடவை இருக்கும் பகுதிக்குள் வந்தவன் பல புடவைகளை புரட்டிபோட்டு அன்னைக்கு தகுந்த கலரில் புடவையை தேர்வு செய்து கிளம்பும் நேரம் ஒரு ஜோடி இவன் கண்களில் சிக்கியதுஹே இது இது அட நம்ம ஆட்டோ பாம் லஇப்போ ஒருவேல நம்மல பார்த்தா சண்டை போடுவாளோ அன்னைகாகு கலங்கி இருந்தாளே இப்போ சரியாகி இருக்கும பிரச்சனை அட அது யாரு கூட ஒரு வேல அண்ணாண இருக்குமோ அண்ணாண இருந்தா ஏன் இப்படி நாணி கோணி பேசுறான்.அவன் அங்க விடுற.ஜொல்லு இங்க வரையும் நனையுது ஒரு வேல இந்த பொண்ணுக்கு பார்த்த மாப்பிள்ளையோ என்று அவன் மூளை. எண்ணிக்கொள்ள சே சே இருக்கவே இருக்காது என்று மனம் வாதிட்டது.யாரோ யாரையோ கல்யாணம் பண்ணிகக்கிட்டா எனக்கு என்ன அவ அவனுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்குது என்று.மனதில் எண்ணிக்கொண்டவனின் கண்கள் மீண்டும் அதே இடத்தில் தேங்கி நிற்க அந்த சூழ்நிலையில் அவளை மறுமுறை காண விரும்பமாற்றவனாய் அந்த இடத்தில் இருந்து பில்கவுண்டரை நோக்கி நடந்தான் கேஷவ்.
 

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 10
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்ன மா epi இம்மா பெரிசு😍😍😍🙄🙄🙄🙄💛💛💛💛💛
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN