ஈரவிழிகள் 21

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நாட்கள் அதன் போக்கில் நகர... ஒரு நாள் தமக்கையைத் தேடி குமரன் பின்கட்டுக்கு விரைய... அவன் தேடியவளே எதிர்ப்படவும்... அவளின் பிரகாசமான புன்னகை முகத்தைக் கண்டவன், “என்ன க்கா... இன்னைக்கு உன் சீனிகட்டி அப்படி என்னத்த உனக்கு சமைச்சுப் போட்டா... இல்லனா பட்டு செய்த சேட்டையப் பார்த்து அவ சின்ன வயசுல செய்த லூட்டிய ஏதாவது சொன்னாளா... உன் முகத்தில... இப்படி ஒரு ஒளி வட்டம் தெரியுது... சொல்லுக்கா... இன்னைக்கு உன் செல்ல செல்லம்மா... கண்ணம்மா... சீனிகட்டி... என்ன செய்தா... என்ன கதை சொன்னா...” இவன் கேலி இழையோட கேட்க

தினமும் வள்ளியும்.. அஸ்மியும் செய்யும் சேட்டைகளைத் தம்பியிடம் ஒப்புவிப்பது தான் மீனாட்சியின் வேலை. அதிலும் அஸ்மியைப் பட்டு என்று விளிப்பவள்... வள்ளியை மட்டும் ‘தங்கம்... வெல்லம்.... சீனிகட்டி..’ என்று அவளின் அப்போதைய மனநிலைக்கு பொறுத்து... விளிப்பாள். அதை நினைவில் கொண்டு இன்று தம்பி கேலி செய்யவும்... ஒரு விரிந்த புன்னைகையை பதிலாக அவனுக்கு தந்தவள் பின்...

“அவ சமத்து சீனிகட்டி மட்டும் இல்ல டா... கெட்டிக்காரியும் தான் டா... நவக்கிரகம் கணக்கா ஆளுக்கொரு திசையில் இருந்த நம்ம வீட்டு ஆளுங்களை என்ன செஞ்சிருக்கான்னு நீயே அங்க பாரு...” என்றவள் ஒரு இடத்தை சுட்டிக்காட்ட..

அந்தி சாயும் வேளையில்... வேப்ப மர நிழலின் கீழே இருந்த கயிற்று கட்டிலில்... வீட்டுப் பெண்கள் அனைவரும் அமர்ந்து... மாலை சிற்றுண்டியுடன் கலகலத்துக் கொண்டிருந்தனர். என்ன தான் வாய்பேச்சு பேசினாலும்... வள்ளி தன் மடியிலிருந்த அஸ்மிக்கு பலகாரத்தை ஊட்டி விட... அதேபோல் ஷாலினி... தன் தாய் கல்பனாவின் மடியில் அமர்ந்து அவள் கொடுப்பதை உண்டு கொண்டிருந்தாள். வாணி.. ஒய்யாரமாய் உமாவின் தோளில் சாய்ந்து கொண்டு கொறித்துக் கொண்டிருந்தாள். அந்த இடமே பேச்சும் சிரிப்பும்... கலகலப்பும் என பார்க்கவே ரம்மியமாய் இருந்தது.

“இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நெனச்சே பாக்கல டா குமரா.. பாக்கவே சந்தோஷமா.. இருக்கு டா...” தமக்கை மனம் நிறைந்து சொல்ல

‘அவ கெட்டிகாரி மட்டும் இல்லை க்கா… வசியக்காரியும் கூட… அவ அன்பால் என்னையே வசியப்படுத்திட்டாளே..’ தனக்குள் சொல்லிக் கொண்டவன்.. வெளியே.. “இதுக்கு மேல... எல்லாம் நல்லதாவே நடக்கும் க்கா..” என்று சொல்லி தமக்கையின் மனதை குளிர வைத்தான் இவன்.

கார்மேகத்தின் எச்சரிப்புக்குப் பின் கூட எல்லோரும் பழைய மாதிரி தான் இருந்தார்கள். ஆனால் வள்ளி மயங்கி விழுந்த அன்று... குமரன் போட்ட சத்தத்தில்... எல்லோரும் அடங்கி அவரவர் வேலைகளை செய்ய பழகி கொண்டனர். உமா கொஞ்சம் ஒத்துப்பட்டு வாழ நினைக்கும் ரகம். ஆனால் கல்பனா மேல் அவளுக்கிருந்த பொறாமையால் நீயா.. நானா.... என்ற போட்டியில் புத்தியை புல் மேய விட்டவளுக்கு... ஒரு நாள் வாணி...

“அம்மா.. நீ எனக்கு இப்படி சாதம் பிசைந்து கொடுத்து எவ்வளவு நாள் ஆகுது....” என்று அவளிடம் ஏக்கமாய் கேட்கவும்... யார் மேலே உள்ள வீம்பில் இன்று தன் மகளுக்கு என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தவள்... பழைய உமாவாக மாறிப்போனாள். அதன் பின் மீனாட்சி... வள்ளி... உமா... என்று மூவரும்... பேச்சும் கிண்டலுமாய் வேலைகளை செய்ய...

‘அது எப்படி என்ன விட்டுட்டு நீங்க மட்டும் ஒண்ணா கைகோர்த்து இருக்கலாம்?’ இப்படி கல்பனா மனதில் உதயமாக... அன்று முதல் வேண்டா வெறுப்பாய் இவர்களுடன்... பட்டும் படாமல் ஒன்றியவள்... ஒரு நாள் அவள் அறையில் உள்ள ஏசி பழுதாகிவிட... அதை சரி செய்ய.. கார்மேகம் ஆட்களை அனுப்புவதற்குள்... இவளே தனக்கு தெரிந்தவரை வைத்து சரி செய்து விட்டாள்.

எப்போதுமே கார்மேகத்துக்கு ஒரு பழக்கம் உண்டு. வீடு வரை நம்பகம் இல்லாத வெளியாட்கள் யாரையும் புழங்க விடமாட்டார். இதை தெரிந்தும் கல்பனா பொறுமையில்லாமல் இப்படி ஒன்றை செய்து வைத்திருக்க... இதையறிந்த அவர் கல்பனாவை அழைத்து விசாரிக்கையில்.. வள்ளி முன்வந்து தன் கணவன் பெயரை சொல்லி அவளைக் காப்பாற்ற... அன்று முதல் வள்ளியிடம் ஒட்டிக் கொண்டாள் கல்பனா. அதன் பின்னோடே மற்றவர்களிடமும் ஒன்றிவிட்டாள்.

குமரன் அன்று மருந்தை கொடுக்கும்போது மனைவியை நேருக்கு நேர் சந்தித்ததோடு சரி. அதன்பிறகு எந்த வகையிலும்... அவளை அவன் நெருங்கவில்லை. ஆனால் அவள் அறியாத போது.. அவளையே தான் இவன் விழிகள் வட்டமிடும். வீட்டு வேலைக்கு என்று இன்னும் இரண்டு ஆட்களை நியமித்து விட்டான். வள்ளியையும்... மீனாட்சியையும்... கவனித்துக் கொள்வது பூரணியின் முழுவேலை என்று உத்தரவையும் இட்டு விட்டான்.

மனைவி நேரத்துக்கு உண்ண... அவள் உண்ணாமல் முரண்டு பிடிக்க.. இப்படி எதுவாக இருந்தாலும் மீனாட்சி தம்பியிடம் உடனுக்கு உடன் சொல்லி விட வேண்டும். ஆகமொத்தம்... அவன் வீட்டில் இருந்தாலும் அவன் பார்வை தன்னவளை சுற்றியே வட்டமிடும்... இல்லையென்றாலும் அவனின் நினைப்பு எல்லாம் மனைவியை சுற்றியே தான் இருக்கும்.

அன்று தன் அக்காவின் கடமையை முடிக்கும் முன்பு தன் காதலை வெளிப்படுத்த கூடாது என்று முடிவெடுத்திருந்த குமரன் தான் இன்று.. தன் அக்காவிற்காக வள்ளியைத் தன் வாழ்விலிருந்து விலக்கி வைப்பது நியாமில்லை என்று உணர்ந்திருந்தான்.. இதோ இப்போது கூட வீட்டிற்கு வந்ததிலிருந்து அவளை காணவில்லை என்றதும்.. தன்னவள் எங்கே என்று தான் தேடிக்கொண்டிருக்கிறான்.

“இந்த சீனி... கருப்பட்டி எங்க போனா...” இவன் முணுமுணுப்புடன் தன்னவளின் அறைப்பக்கம் வரவும்.. அவள் அங்கே தான் இருந்தாள்... எதையோ தீவிரமாக தேடும் முகபாவம் அவளிடம்.

“அப்படி என்னத்த தேடுற...” திடீரென கேட்ட கணவன் குரலில்... தூக்கி வாரிப்போட நிமிர்ந்தவள்...

“வாணி போன் வாங்கினாங்க.. எங்க வச்சான்னு தெரியல.. அதான் தேடுறேன்...” அவளுக்கு இருந்த மனநிலைக்கு இயல்பாகவே வந்தது பதில்

மேற்கொண்டு எதுவும் கேட்காமல் தன் கைப்பேசியை எடுத்து இவன் மனைவியின் எண்ணுக்கு அழைப்பு விடுக்க

“கன்னி மனம் கெட்டுப் போச்சு...

சொன்ன படி கேக்குறதில்லை...
என்ன பொடி போட்டீங்களோ

மாமா..”

என்று காதலோடு… தாபத்தோடு.. குழைந்து… சிணுங்கி.. பாடி தன் இருப்பிடத்தை காட்டிக் கொடுத்தது மனைவியின் கைப்பேசி.

“ஹே... இங்க இருக்குங்க...”குதூகளித்தவள் இயல்பாய் எடுத்துக்காட்ட

அவனால் தான் இயல்பாய் இருக்க முடியவில்லை. ஏதோ மனைவியே அப்படி தன்னிடம் சிணுங்கி பாடியதாக அவனுள் பதிய, “அது என்ன மாமா.. எனக்கு மச்சான் தான் புடிச்சிருக்கு...” இவன் காட்டமாய் அறிவிக்க

முதலில் புரியாமல் விழித்தவள் பின் புரிந்ததும்… ‘கவிஞர் இப்படி எழுதினா.. அதுக்கு நாம என்ன செய்ய முடியுமாம்... இவருக்கு புடிக்கலைனு நான் போய் பஞ்சு அருணாசலம் ஐயா கிட்ட சொல்லவா முடியும்?’ தனக்குள் சொல்லிக் கொண்டவள் விலக எத்தனிக்க

“உன் கிட்ட தான் சொல்லிகிட்டு இருக்கேன்...” அழுத்தமாய் ஒலித்த கணவன் குரலில் அவன் புறம் திரும்பியவள்..

‘அதுக்கு நான் என்ன செய்ய முடியும்...’ என்பதாய் பார்த்து வைத்தாள். பின்ன... முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு ‘எனக்கு புடிக்கல... புடிக்கலன்னா...’ அவளும் தான் என்ன செய்வாள்..

இவள் ஒன்றும் புரியாமல் விழிக்க... அவனோ அவளை முறைக்க.. ‘இப்படி முறைக்கவா என்னை நிறுத்தினார்...இது வேலைக்கு ஆகாது...’ மறுபடியும் அவள் வெளிநடப்பு செய்ய எத்தனிக்க

“உன்னைய தான்...” என்று இம்முறை கர்ஜித்தது அவன் குரல்.

“இன்னைக்கு ஏதோ பெருசா திட்டு இருக்கு... ஆனா நான் தவறு எதுவும் செய்யலையே” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவள் தலைகவிழ்ந்து நிற்க

“என்னைய நிமிர்ந்து பார்..” அவனிடம் கட்டளை

“நிமிர்ந்து பார்த்தா தான் என்னை முறைக்கிறீங்களே...” இவள் சலித்துக்கொள்ள

“அப்படி நான் முறைச்சா.. யாரோ எதையோ செய்வேன்னு சொன்னாங்க. ஒருவேளை மறந்துட்டாங்களா... இல்ல அதெல்லாம் வெறும் வாய் பேச்சு தானா..” அன்று மனைவி சொன்னதை இவன் நினைவுபடுத்தவும்... என்ன அது என்று புருவம் சுருக்கி யோசித்தவளுக்கு...அது என்னவென்று பெண்ணவள் கண்டுகொள்ளவும் “ஆத்தே!” அதிர்ச்சியில் வாயை பொத்திக் கொண்டாள் இவள்.

மனைவியின் பாவனையில் இவன் வசீகரமாய் புன்னகைக்க... முதல் முறையாக தன்னைப் பார்த்து புன்னகைக்கும் கணவனை இமை கொட்டாமல் பார்த்து இவள் தன்னுள் பத்திரப்படுத்த.. அதில் தன்னவளை சீண்டிப் பார்க்க அவனுக்கு தோன்றவும் இவன் கண்ணடித்து அவளைக் கலவரப்படுத்த.. திகைப்பில் நெஞ்சில் கைவைத்து தன் சுவாசத்தை நிறுத்தியிருந்தாள் அவள்.

அதில் தன் பல் வரிசை தெரிய புன்னகைத்தவன், “ஒண்ணுமில்ல.. நீ மறந்துட்டதானே.. அதான் ஞாபகப்படுத்துனேன்...” அதே விரிந்த புன்னைகையுடன் விளக்கம் அளித்தவன் விலகியிருக்க...

“அச்சச்சோ! இங்க இப்போ என்ன நடந்துச்சு டி வள்ளி..” பேயிடம் அரை வாங்கியவள் கணக்காக தனக்கு தானே இவள் கேட்டுக் கொள்ள

“ம்கும்... தெரியலையா.. காண்டாமிருகம் சிரிச்சிட்டு போகுது...” தானே பதிலும் தந்து கொள்ள

“ஏன்... டி வள்ளி காண்டாமிருகம் சிரிக்க மட்டுமா டி செஞ்சது... என்னமோ பெரிய காதல் மன்னன் கணக்கா வசனத்தோடு கண்ணை இல்ல சிமிட்டிட்டுப் போறாரு... அதானே!” மனசாட்சி என்ற பேரில்... வாய்விட்டே அனைத்தையும் கேட்டவள்.. திரும்ப, அதிர்ந்தே போனாள் வள்ளி. பின்னே இன்னும் போகாமல் அவள் பின்புறம் நின்று அவள் கணவன் தான் அனைத்தையும் கேட்டுக் கொண்டு நிற்கிறானே... இவளுக்கு உடல் சில்லிட்டது.

கணவன் ஏதாவது திட்டுவானோ... ஆனால் இவளின் எதிர்மறை மனநிலையில் இருந்தான் அவன். மனைவியின் வார்த்தையில் அவன் மனமோ கூத்தாடியது. இதுவரை மனைவியிடம் இவன் இப்படி எல்லாம் நடந்து கொண்டதே இல்லை. எனவே அதை மறைத்தவன் வெளியில் கோபாவேசத்துடன் தன்னவளின் மேனி உரச நெருங்கியவன் அவள் கரம் பற்றி அவளின் உள்ளங்கையில் குழந்தையைப் போல் பல் பதிக்க... மிரண்டு போனாள் இவள்.

‘அய்யோ... இவர் அடிப்பார்ன்னு நினைத்தா... என்ன இது கடிக்கிறாரே...’ உள்ளுக்குள் அரண்டவள் அவனிடமிருந்து கரத்தை விடுவிக்க போராட... தானே கரங்களை விடுவித்தவன் இன்னும் அவளை நெருங்கி நின்று தன் மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் உரச.. தன்னவளின் இதழை சுண்டு விரலால் வருடியவன்...

“இப்போ உன் உள்ளங்கையில் பதிந்த பல்.. கூடிய விரைவில் இங்கயும் பதியும்... அப்போவாது நான் உனக்கு காதல் மன்னனா தெரிவேனா பார்ப்போம்...” முகத்தில் உள்ள பாவத்துக்கும் வார்த்தைக்கும் சம்பந்தமே இல்லாதது போல்... அவன் குரல் குழைந்து... கொஞ்சியது. கணவனின் தொடுகையையும்... குழைவையும் உள்வாங்கியவளுக்கு... மேனி சிலிர்த்தது.

அதில் விழிகளை மூடி நெகிழ்ந்தவள் தன்னவன் சொன்னது மட்டும் நடந்தால்... ‘ஹப்ப்பா...’ உள்ளம் தறிகெட்டு ஓட... அவள் சுவாசமே சூடானது... ‘ம்ஹும்... இந்த விஷப்பரீட்சை வேணாம்ப்பா...’ தலையை உலுக்கி இவள் தன் எண்ணத்திற்கு கடிவாளமிட... மன்னவனோ தன்னவளின் செய்கையில் புன்சிரிப்புடன் காதலோடு விலகியிருந்தான்.

அதன்பின் இருவரின் மனமும் பன்னீரில் நனைந்த ரோஜாவாய் குளிர்ந்திருந்தது. அதெல்லாம் மறுநாள் சதீஷின் பிரச்சனையைக் காணும் வரை தான்....

விடியும் விடியாத காலைவேளையில் ஒரு வேலையாக வெளியே சென்றிருந்தான் குமரன். காலை உணவுக்குப் பிறகு வேலைகள் கொஞ்சம் மந்தப்படவும்... சதீஷைத் தேடி அவன் அறைக்கு வந்தாள் வள்ளி. குமரனின் அறையும்... சதீஷின் அறையும்... எதிரெதிர் திசையில் இருந்தது. இவள் அறையினுள்ளே பிரவேசிக்க... குற்றம் செய்தவனாக தலைதாழ்த்தி.. சங்கடத்துடன் எழுந்து நின்றான் அவன்.

“என்ன தம்பி செய்து வச்சிருக்கீங்க... உங்களை நம்பி படிக்க வச்சதுக்கு... நல்ல கைமாறு செய்திருக்கீங்க. இது மட்டும் உங்க அண்ணனுக்கு தெரிந்தா என்ன ஆகும்.. அவர்கிட்ட சொல்லவா...” வள்ளி அவனை மிரட்ட

பட்டுவுக்கு பயந்து அந்நேரம் ஒரு வேலையாய் தன் அறைக்குள் சத்தமில்லாமல் நுழைய இருந்த குமரனின் செவியில்... ‘அவர்கிட்ட சொல்லவா...’ என்ற வள்ளியின் மிரட்டல் விழவும்... ‘யாரை இவ இப்படி மிரட்டறா...’ என்று அவன் யோசித்த நேரம்

“அண்ணி... ப்ளீஸ் அண்ணி... ப்ளீஸ்… அண்ணா கிட்ட சொல்லிடாதீங்க...” சதீஷ் கெஞ்ச... தம்பியின் குரலில் துணுக்குற்றவன் அவனின் அறைக்குள் செல்ல எத்தனிக்க

“என்ன ப்ளீஸ்.. செய்யறது எல்லாம் செய்துட்டு ப்ளீஸ் சொன்னா ஆச்சா? இல்ல.. உங்க அண்ணன் கிட்ட மட்டும் இல்ல.. இந்த வீட்டில் எல்லோரிடமும் நான் இதை சொல்ல தான் போறேன்..” இவள் உரிமையாய் மிரட்ட... அண்ணியின் குரலில் உறுதியைக் கண்ட சதீஷ்...

“அண்ணி ப்ளீஸ்.. உங்க காலிலே வேணாலும் விழறேன்... எதையும் சொல்லிடாதீங்க...” கெஞ்ச

“அய்யோ தம்பி!” அவனின் வார்த்தையில் இவள் பதறிய நேரம்

“யாரு காலில் யாருடா விழறது... இவ காலிலே நீ எதுக்கு டா விழணும்... என் தம்பியை மிரட்ட நீ யார் டி... உனக்கு யார் டி அந்த அதிகாரத்தை கொடுத்தது..” உள்ளே வந்த குமரன் இப்படி முழங்கியது மட்டுமில்லாமல்... அவளை அறைந்திருக்க... எந்த விசாரணையும் இல்லாமல் இதென்ன கை நீட்டுவது. விக்கித்துப் போனாள் பெண்ணவள். எதிர்பாராத இந்த நிகழ்வில் சதீஷும் அதிர்ந்துபோக

“யார மிரட்டுற... என் தம்பியவா... வாழ வந்தா உங்களுக்கு எல்லாம் கொம்பு முளைச்சிடுமா... பிச்சிடுவேன் பிச்சு... உனக்கான இடம் அறிந்து அங்கயே இருந்துக்கோ சொல்லிட்டேன்.. இல்ல...” சிவப்பேறிய விழிகளுடன் விரல் நீட்டி கணவன் உறுமியதில் பூமிக்குள்ளேயே புதையுண்டாள் பெண்ணவள்.

அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது... வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை அவள். சதீஷ் தான்... “அண்ணா என்மேலே தான் ண்ணா தப்பு... அதுக்கு நீங்க என்னவேணா திட்டுங்க அண்ணிய எதுவும் சொல்லாதிங்க...” என்க..

“எதுவேணா இருக்கட்டுமே டா... இவ யார் டா அதை கேட்க...” அண்ணி என்ற பெயரில் உமா.. கல்பனா... இருவரின் செயலையும் கண் கூடாக பார்த்தவனுக்கு... மனைவியை தான் வெளுக்கத் தோன்றியது. அதை உறுத்து விழித்த அவன் முகமே அவளுக்கு காட்டிக் கொடுத்துவிட..

“அவருக்கு நான் அண்ணி இல்லைனா அப்போ என்னை அடிக்க மட்டும்... உங்களுக்கு யார் அதிகாரத்தையும்.. உரிமையையும் தந்தது...” குரலை உயர்த்தவில்லை. மெல்லிய குரல் என்றாலும்... அழுத்திக் கேட்டாள் வள்ளி.

‘உண்மை தானே.. எந்த உரிமையில் அடித்தேன்... மனைவி என்றா.... ஆனால் என் தம்பிக்கு இவள் அண்ணி இல்லை என்றால்... எனக்கு மட்டும் இவள் எப்படி மனைவியாவாள்...’ கோபத்தில் அடித்தவனுக்கு தற்போது தான் தான் சொன்ன வார்த்தையும்... செய்த செயலும் புரிந்தது.

சதீஷ்... “அண்ணி எனக்காக நீங்க ரெண்டு பேரும்... சண்டை போட்டுக்காதீங்க...”

அவனின் வார்த்தையில், “நான் உனக்கு அண்ணி இல்லைப்பா... அந்த உரிமை இல்லாத என்னை இனி நீங்க அப்படி கூப்பிடாதீங்க...” என்று அவன் அழைப்பை மறுத்தவள் வெளியே செல்ல எத்தனிக்க...

எட்டி அவள் கரத்தைப் பற்றிய குமரன் “சாரி...” என்று மன்னிப்பை மனைவியிடம் வேண்டினான் அவன்.

இது தான் குமரன்.. கோபத்தில் தான் அறிவிழந்து செய்த செயலுக்கு.. எந்தவித தயக்கமும் இல்லாமல் உணர்ந்து மன்னிப்பு கேட்டான் அல்லவா.. இதுதான் அவன் குணம். ஆனால் வள்ளி, அவனை மன்னிக்கும் மனநிலையில் இல்லையே. அதனால் கணவனிடமிருந்து கரத்தை உருவிக்கொண்டு விலகிவிட்டாள் அவள்.

“என்ன டா செஞ்சு வச்ச...” இவன் தம்பியிடம் பாய... நடுங்கியபடி அனைத்தையும் சொன்னான் அவன். டிக்டாக்கில் ஒரு பெண்ணுடன் இவனுக்கு பழக்கம் ஏற்பட... இந்த வயதில் இது காதல் என்று பெயரிட்டுக் கொண்டார்கள் இருவரும் சதீஷும்.. அந்த பெண்ணும் சினிமா காதல் பாட்டுக்கு நடித்து… காதல் வசனம் எல்லாம் பேசி வீடியோவை வெளியிட்டிருக்க.. அதைப் பார்த்த வள்ளி சதீஷைக் கண்டிக்க... இதோ விஷயம் குமரன் வரை வந்து விட்டது.

இதை அறிந்தவன், “இந்த வயசுலே இது உனக்கு தேவையா டா” என்று கேட்டு தம்பியை பெல்ட்டால் அடி பின்னிவிட்டான் குமரன்.

மனைவியை அடித்தது அவன் மனதை பலமாய் உலுக்கியது. அதிலும் அவள் சொன்ன வார்த்தைகள்... என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்... ‘நான் என்ன உங்க மனைவியா..’ இப்படி அவள் கேட்காமல் கேட்டது... இவனையும் கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது. இதே முன்பிருந்த குமரனாக இருந்திருந்தால் “ஆமாம்.. நீ எனக்கு எந்த உறவும் இல்ல... சரிதான் போடி என்று பதிலுக்கு சவடால் விட்டிருப்பான். ஆனால் தற்போது இருப்பவனோ தன்னவளை உயிருக்குயிராய் நேசிப்பவனாச்சே...
நல்லவேளை தம்பி விஷயம் அறிவதற்கு முன்னரே மனைவியிடம் மன்னிப்பைக் கேட்டுவிட்டான். இல்லையென்றால்... குற்ற உணர்ச்சியில் இன்னும் தத்தளித்திருப்பான் அவன். ‘அவள் செய்ததை எல்லாம் மறந்துவிட்டு எப்படி.. இப்படி அவளை அடிச்சிட்டனே..’


இதே மனநிலையில் சுழன்றதாலோ என்னவோ அன்று தேன் எடுப்பவர் வராமால் போக... முக்கியமான நபருக்கு தர வேண்டும் என்பதால் இவனுக்கிருந்த குழப்பத்திற்கு... தானே மலையில் ஏறி தேன் எடுப்பது என்ற முடிவுக்கு வந்தவன்... அதை செயல்படுத்த தகுந்த பாதுகாப்பு உடையையும் உடுத்தியவன்... மலை ஏற மனசஞ்சலத்தில் கையில் கட்டவேண்டிய பாதுகாப்பு உரையை இவன் சரியாய் முடித்திடாமல் போகவும்... அதில் உரை நழுவி அவனிடமிருந்து சரிந்து விழ... விளைவு அவனின் வலது கையை தேனீக்கள் சூழ்ந்து கொள்ளவும்... போதுமே... ஆயிரம் தேனீக்கள் கொடுத்த வலியை அவனால் தாங்க முடியாமல் போகவும்... மலையிலிருந்து கீழே விழுந்தான் இளங்குமரன்.
 
Last edited:
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Achooo enna akka kumarana pottu thala mudivu panitingala paavam avana vitrunga namba vallikaga
நீ சொல்லிட இல்ல... சோ விட்டுடறன் டா😃😃💞💞🤗🤗
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Kai,kal,idupu yethu udainthathu kumaranuku.wow excellent
பார்ரா.. இருங்க சிஸ் உங்களுக்காகவே இதை எல்லாம் செய்றனுங்க😁😁🤗🤗💞💞
 

UMAMOUNI

Member
அச்சச்சோ நம்ம ஹீரோ முசுடா இருந்தாலும் ஒரு அப்பாவி குமரன் ஒன்றும் செய்துவிடாதீர்கள் 😀😀😀😀😀
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அச்சச்சோ நம்ம ஹீரோ முசுடா இருந்தாலும் ஒரு அப்பாவி குமரன் ஒன்றும் செய்துவிடாதீர்கள் 😀😀😀😀😀
அந்த முசுடை விட்டுடேன் சிஸ்😁😁😁🤗🤗💞💞🌹🌹
 
C

Chitra Purushothaman

Guest
அப்படி என்ன அவசரங்கறேன்? இதானாடா உன் லவ்வு....😠
அருமை👌👌
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN